நிரல் மொழி 14.1

நிரல் மொழி 14.1

அடுத்த நாள் காலை 

நிகில் விழித்திருந்தான். 

மருந்துகளின் வேகத்தின் உதவியுடன், கொஞ்ச நேரம் உறங்க முடிந்தது. அதன் பின் உறக்கம் இல்லை.  

கண்களை மூடி, மிலா… ஜெர்ரி… நினைவுகளில் படுத்திருந்தான். 

மீண்டும் ஒரு உறக்கமில்லா இரவு! 

காலை 7:00 மணி

மருத்துவரும், செவிலியரும் வந்தனர். 

அவர்கள் வந்ததும், நிகில் எழுந்து அமர்ந்தான்.

மருத்துவர், நிகிலைப் பரிசோதித்து…  இதற்கு மேல், ‘ட்ரிப்ஸ்’ வேண்டாம் என்ற சொல்லிச் சென்றார்.

காலை உணவு, அதன் பின் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய மருந்துகள் கொடுத்து விட்டு… செவிலியரும் சென்றுவிட்டார்.

கொஞ்சம் உணவு உட்கொண்டு, மருந்துகளும் எடுத்துக் கொண்டான். 

உடல் காயங்களின் எரிச்சலும், வலியும்… கொஞ்சம் குறைந்திருந்தன.  

முட்டியை அசைத்துப் பார்த்தான். நேற்றைய நிலைக்கு, இன்று பரவாயில்லை என்றே தோன்றியது.

அதன்பின்பு படுக்கவில்லை. 

யோசித்துக் கொண்டிருந்தான்! 

அவனது யோசனை முழுவதும் மிலா, ஜெர்ரி பற்றியே இருந்தது. 

தான் அருகில் இல்லாமல்… என்ன செய்வார்கள்? எப்படி இருப்பார்கள்? என்று நினைத்து, நிம்மதியின்றி தவித்தான். 

அவர்கள் இருவருக்கும் எதுவும் ஆகிவிடுமோ? என்று பயந்தான். 

ஷில்பாவைக் கொலை செய்தது… மிலா, ஜெர்ரியைக் கடத்தியது… நல் கேரின் திட்டமிட்ட செயலா?? இல்லை, அவனை மீறி நடந்த செயலா? என்று குழம்பினான். 

தன் விசாரணைகளில்… இப்படி நிகழ்ந்ததே இல்லை! இதுதான் முதல்முறை!! 

அதற்கு காரணம் நல் கேர்! 

நல் கேர் மட்டுமே!! 

ஆதலால், அவன் மீது கோபம் வந்தது! 

காலை, நேரம் 8:15

மருத்துவமனை… நிகில் அறை…

அறைக் கதவைத் திறந்து கொண்டு, முரளி வந்தார்.

“வாங்க முரளி” என்றான்.

“இப்போ எப்படி இருக்கு, நிகில்?” என்று கேட்டுக் கொண்டே வந்து, அவன் அருகில் அமர்ந்தார்.

“பரவால்ல முரளி. இப்போ, கால் கொஞ்சம் அசைக்க முடியுது” என்றான்.

“உங்க வீட்ல…  அம்மா எப்படி இருக்காங்க?”

“காலையில ஃபோன் பண்ணேன். இப்போ ஓகே! இன்னைக்கு ஈவினிங் டிஸ்சார்ஜ் ஆவாங்க” என்றான். 

“ஓ! அப்போ நைட் சென்னை வர்றாங்களா?”

“இல்லை” 

‘ஏன்?’ என்பது போல் பார்த்தார். 

” ‘எப்போ டிக்கெட் புக் பண்ற-ன்னு?’  கேட்டாங்க. ‘நாளைக்குன்னு’ சொன்னேன். ‘ஏன்னு?’ கேட்டாங்க. 

அன்னைக்கு நைட், எனக்கு நடந்ததை கொஞ்சம் சொன்னேன்”

“ஏன் சொன்னீங்க? இங்க வந்தப்புறம் சொல்லியிருக்கலாமே?”

“சொல்லாம சமாளிக்க முடியலை. இங்க வரணும்-னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. அதான் முரளி!”

“பயந்திருப்பாங்கள?” என்று மெல்லக் கேட்டார். 

‘ஆம்’ என்று தலையசைத்தவன், “பயந்தாங்க… பயந்து அழுதாங்க…” என்றான் கவலையாக!

இரண்டு நாட்களில், அவன் வாழ்வில் நடந்தவைகளுக்காக, முரளியும் கவலைப்பட்டார்!  

“இங்க சேப்டி இஸ்யூ இருக்கு, ஸோ, நாளைக்கு டிக்கெட் புக் பண்றேன்னு சொல்லயிருக்கேன். 

அன்ட், அம்மாவும் ஈவினிங்தான் டிஸ்சார்ஜ் ஆகிறாங்க.

அதனால, சமாளிக்க முடிஞ்சது” என்று விளக்கினான். 

முரளி, அவனைப் பரிதாபமாகப் பார்த்தார். 

அவரின் பார்வையைக் கண்டவன், “அதை நான் பார்த்துகிறேன் முரளி! இன்வெஸ்டிகேஷன் என்னாச்சு?” என்று பேச்சை மாற்றினான். 

“இந்தாங்க?” என்று ஒரு கைப்பேசி எண்ணின், விவரங்கள் அடங்கிய காகிதங்களைத் தந்தார். 

கைப்பேசி எண்? 

ஆம்! அது, ‘நல் கேர்’ பயன்படுத்திய கைப்பேசி எண்-தான்! 

நிகில், காகிதத்தின் ஒவ்வொரு வரிகளையும் கூர்ந்து பார்க்கத் தொடங்கினான். 

“சர்வீஸ் ப்ரொவைடர்-கிட்ட கேட்டு… டிரைவர் ஃபோன் நம்பரோட கால் ஹிஸ்டரிலருந்து, நல் கேர் நம்பர் எடுத்தோம்!” என்று காகிதத்தைக் காட்டி, முரளி சொன்னார். 

“அதை வச்சி லொகேஷன் கண்டுபிடிக்க முடியலையா?” என்று நிகில் கேட்டான்.

‘இல்லை! முடியவில்லை’ என்பது போல் தலையசைத்தார்.

“ஏன்? ஜிபிஎஸ் டிராக் பண்ண முடியலையா??”

மீண்டும் முரளியிடம் ‘முடியவில்லை’ எனத் தலையசைப்பு! 

“மே பி ஜிபிஎஸ் டிசேபிள் பண்ணி வச்சிருப்பான். இல்லைன்னா, ஜிபிஎஸ் சிப் ரிமூவ் பண்ணியிருப்பான்! ஸோ,.. ” என்று சொல்லும் போதே, 

‘இரண்டில் எதுவுமே இல்லை’ என்பது போல் தலை அசைத்து, “ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்” என்றார்.

“ஓ!” என்றான், கொஞ்சமும் அதிர்ச்சி இல்லாமல்!! 

“ஃபோன் ஆன்ல இருந்தாலாவது… டிஜிட்டல் ப்ரட் கிரம்ஸ் வச்சு… நியர் பை லோகேஷன் கண்டுபிடிக்கலாம்னு நினைச்சோம்! பட், அதுவும் முடியலை” என்றார் கவலையுடன். 

இன்னும் காகிதத்தையே பார்த்துக் கொண்டிருந்தான், நிகில். 

“அவ்வளவு ஈஸியா அவன் இடத்தைக் கண்டுபிடிக்க முடியாதுன்னு, நேத்து சொன்னீங்க. அதே மாதிரி ஆகிடுச்சு” என்றார். 

“லீவ் இட் முரளி!” என்றவன், “கால் ஹிஸ்டரில இருக்கிற கால்ஸ் யாருக்கு பண்ணியிருக்கான்?” என்று கேட்டான்.

“அவன் ஃபோன் ஹிஸ்டரியில இருக்கிற, எல்லா கால்-ஸும் கேப் சர்வீஸ்-க்குத்தான்”

“ஓகே” என்றவன், “அவன் பண்ண கால்-ஸ் லொகேஷன்?” என்றான். 

“ஆப்ரேட்டர் வீடு இருக்கிற ஏரியா! அங்கே இருக்கிற சிசிடிவி புட்டேஜ் செக் பண்ணச் சொல்லியிருக்கேன்” என, அடுத்த கட்ட நடவடிக்கையைச் சொன்னார். 

முரளி பேசி முடித்ததும், நிகில் யோசிக்க ஆரம்பித்தான்.  

அதைப் பார்த்தவர், “என்ன யோசிக்கிறீங்க?” என்று கேட்டார்.

“ம்ம்ம்! ஆப்ரேட்டர் இருக்கிற ஏரியா-ல அவன் அலைஞ்சது, கிட்டத்தட்ட ரெண்டு மாசத்துக்கு முன்னாடி. ஸோ, சிசிடிவி புட்டேஜ்… இவ்ளோ நாள் இருக்குமா? ஜெனரலா தர்ட்டி டேய்ஸ் தான?” என்று சந்தேகமாக் கேட்டான். 

“சில ஏரியா-ல 30-90 டேய்ஸ் நிகில். அதான் செக் பண்ணறாங்க” 

“ஓகே பைன் முரளி” என்றவன், சற்று நேரம் யோசித்தான். 

பின், “ஸோ, எனக்கு கால் பண்ணது வேற நம்பர்-லருந்து போல?!” என்று சொல்லிக் கொண்டான்.

முரளி எதுவும் பேசாமல் இருந்தார். 

அவருக்கு ‘நல் கேர்’ மீது கடுங்கோபம் மற்றும் ‘இப்படியெல்லாம் பணம் சம்பாதிக்க வேண்டுமா?’ என்ற எரிச்சல். 

யோசித்துக் கொண்டிருந்த நிகில், “அப்போ இந்த நம்பர், ஒன்லி கேப் பர்போஸ்-கா இருக்கும்” என்றான். 

மேலும், “அப்படின்னா… ” என யோசித்தவன், “சிம் இங்க வந்துதான் வாங்கியிருப்பான்?.!” என்று மீண்டும் முரளியைக் கேள்வியாகப் பார்த்தான்.

அவன் பார்வையைப் புரிந்து கொண்டு, “அந்த சிம் கார்டு இஸ்யூ பண்ண ஷாப்ல செக் பண்ணியாச்சு நிகில்!! அங்கே கொடுத்திருக்கிற அட்ரஸ் அன்ட் நேம் பேக்” என்று பதிலளித்தார். 

“அந்த… ” என்று நிகில் தொடங்கும் போதே, 

“எதுக்கும் இருக்கட்டும்னு… அந்த அட்ரஸ்ல இருக்கிற பேமிலிய பாலோவ் பண்றாங்க” என்று முடித்தார். 

நிகில்… அவர் கொடுத்தக் காகிதங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்து, யோசிக்க ஆரம்பித்தான்

“அப்புறம் நிகில்…” என்று முரளி பேச ஆரம்பித்தார். 

‘என்ன?’ என்பது போல் பார்த்தான்.

“போலீஸ், உங்க வொய்ஃப்…  உங்க ஃபிரண்ட் மர்டர்… அப்புறம் உங்களை அட்டாக் பண்ணது…  மூனு இன்சிடென்ட்-ட கனெக்ட் பண்றாங்க” என்றார். 

“ஓ!” 

“நீங்க கம்ப்ளைன்ட் கொடுத்தாச்சா?”

“ம்ம்ம், நேத்து ஈவினிங் கான்ஸ்டபிள் வந்து வாங்கிட்டுப் போனாரு. அந்த அடியாட்களோட அடையாளமும் கேட்டாங்க. சொல்லிருக்கேன். பார்க்கலாம்” என்றான் காகிதத்தைப் பார்த்துக்கொண்டே!

“எப்படியும்… நீங்க அடிச்ச ஆளுங்க ஹாஸ்ப்பிட்டல் போயிருப்பாங்க. ஸோ, எல்லா ஹாஸ்பிட்டலுயும் சர்ச் பண்ணறாங்க.

சிசிடிவி புட்டேஜ் செக் பண்ணிக்கிட்டு இருக்காங்க. 

அன்ட், உங்க பிரண்ட் அட்டாப்ஸி ரிப்போர்ட் வந்திடுச்சு” என்று முரளி சொன்னதும்… நிகில், நிமிர்ந்து பார்த்தான். 

அவன் பார்வையே கேட்டது, ‘எப்படி ஷில்பா கொலை செய்யப்பட்டாள்?’ என்று! 

முரளி தயக்கத்துடன் தொடங்கினார். 

“நிகில்… அது, கழுத்துல… மூனு இடத்தில ஷார்ப் ஆப்ஜெக்டால குத்தியிருக்காங்க. அன்ட் இரும்புக் கம்பியால….” என்ற சொல்லிக் கொண்டிருந்தவரை, 

“போதும்… போதும் முரளி” என்றவன், கழுத்தின் நரம்புகள் அனைத்தும் தெரியும் படி… வருத்தத்தை தன் தொண்டைக்குள் அடக்கி வைத்தான். 

நிகில், தன்னைச் சமன் படுத்திக் கொள்ள… முரளி, கொஞ்சம் நேரம் கொடுத்தார். 

பின், “அப்புறம் நிகில்… இன்னொன்னு…” என்று ‘மேலே சொல்லவா?’ என்பது போல் முரளி பார்த்தார். 

தொண்டயைச் செருமிக் கொண்டு, “சொல்லுங்க முரளி” என்றான். 

“மர்டர் நடந்த இடத்தில… கார் ஆக்சிடென்ட் ஆகியிருந்தது…” என்று தொடங்கிய போதே… 

“வாட்? கார் ஆக்சிடென்ட்டா?” என்று பதறினான்.

‘ஆம்’ என்று தலையசைத்தார். 

‘விபத்து என்றால்… மிலா, ஜெர்ரி நிலைமை?’ என்ற பதற்றம் நிகிலிற்கு வந்தது. 

உடனே, “அந்த இடத்தில வேற எதாவது, பிளட் சேம்பிள்ஸ் கலெக்ட் பண்ணாங்களா?” என்று கேட்டான். 

கேட்டவன் இதயம் தடதடவென்று தவித்தது. 

“ரெண்டு பிளட் சாம்பிள்ஸ். ஒன்னு உங்க ஃபிரண்ட்-டோடது. அன்ட் இன்னொன்னு எ நெகடிவ்” என்றார். 

‘எ நெகடிவ்… அப்படியென்றால் மிலாவிற்கு அடிபட்டிருக்கா? பெரிய அடியாக இருக்குமோ? ஜெர்ரிக்கும் அடிபட்டிருக்குமோ?’ எனக் கேள்விகள் கேட்டு, நிகில் கவலைப்பட்டான். 

நிகில் அமைதியாக இருப்பதை பார்த்து, “அது, உங்க வொய்ஃப் பிளட் குரூப்பா?” என்று கேட்டார். 

“ம்ம்ம்” என்று சொல்லி, சற்று நேரம் அமைதியாக இருந்தான்.

பின், தலையை உலுக்கிக் கொண்டு, கவலையிலிருந்து மீண்டு வந்தான். 

திரும்பக் காகிதங்களைப் பார்க்க ஆரம்பித்தான். 

பார்த்துக் கொண்டே, “முரளி, பிரிட்ஜ் ரோட் சிசிடிவி-ல வெஹிக்கிள் வந்து போன புட்டேஜ் ஏதும் இருக்கா?” என்று கேட்டான் 

“இருக்கு. உங்களை அடிச்ச இடத்தில,  உங்க பிரண்ட் மர்டர் நடந்த இடத்தில… கார் அன்ட் பைக்ஸ் வந்திட்டுப் போன புட்டேஜ் இருக்கு. பட், வெஹிக்கிள் நம்பர்ஸ் இல்லை”

நிகில், புரியாமல் பார்த்தான்.

“நேம் ப்ளேட் கிளீயரா புட்டேஜ்-ல தெரியுது. பட் நம்பர் மிஸ்ஸிங் நிகில்” என்றார் முரளி. 

“அப்படின்னா…. ” என்று யோசித்தவன், “ஆன்டி ரேடியேஷன் ஸ்டிக்கர்ஸ்(ஆன்டி radiation stickers) யூஸ் பண்ணயிருப்பாங்க” என்றான். 

“யெஸ்! அதான் கேமரா-ல ரெஜிஸ்டர் ஆகல”

“ஸோ, எல்லாமே வெல் பிளான்டு!” என்றான்.

“யெஸ்” என்றவர், ‘இந்த நல் கேர் ஏன் இப்படி இருக்கிறான்?’ என்று கோபப்பட்டார். 

அது, அவர் முகத்தில் நன்றாகவே தெரிந்தது.

அதைக் கண்ட நிகில், “முரளி” என்று ‘மற்ற விவரங்களைச் சொல்லுங்க’ என்ற பொருளில் அழைத்தான்.

“வெஹிக்கிள், எங்க சிசிடிவி-லருந்து மறைஞ்சதோ… அதுக்கு அடுத்து இருக்கிற எல்லா ஏரியாவும் செக் பண்ணப் போறாங்க. 

மே பி நாளைக்கு ஸ்டார்ட் பண்ணுவாங்க. இன்னைக்கே ஹாஸ்ப்பிட்டல்-ஸ் மட்டும்” என்று காவல் துறையினரின் விசாரணை பற்றிச் சொன்னார். 

நிகில் யோசித்தான்! 

“உங்களை அடிச்சவன்ல யாராவது ஒருத்தன் மாட்டனும்” என்றார் முரளி ஆத்திரத்துடன். 

“மாட்டலைன்னா?” என்றான் அமர்த்தலான குரலில்! 

“போலீஸ் தேடிகிட்டு இருக்காங்க நிகில்! தப்பிக்கவே முடியாது” என்றார் ஆணித்தரமாக! 

“போலீஸ் கண்டுபிடிக்க முடியாதுன்னு சொல்லலை! ஆனா, எப்போ??

அதுக்குள்ள, அந்த நல் கேர் எஸ்கேப் ஆகிட்டா?? 

போலீஸ் சென்னையில தேடுறாங்க. தட்ஸ் ஓகே! பட், அவனுங்க வேற எங்கயாவது போயிருந்தா? தலை மறைவாயிருந்தா?” என அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்டான். 

முரளி யோசித்தார்! 

“சரி, அப்படியே மாட்டினாலும்… அந்த அடியாட்கள்-கிட்ட பேசறதுக்கும்,  என்கிட்ட பேசின மாதிரி… ஃபோன் நம்பர் ஹைட் பண்ணி, நல் கேர் பேசியிருந்தா?”

‘இதற்கு வாய்ப்பிருக்கு’ என்று முரளி நினைத்தார். ஏனென்றால், இந்த மூன்று நாட்களில் நல் கேர் பற்றி நன்கு அறிந்திருந்தார்!! 

“அப்படி இருந்தா… இவ்வளவு தேடி, அந்த அடியாட்களைக் கண்டுபிடிச்சும் நோ யூஸ். கரெக்டா?” என்று நிகில் கேட்டான். 

“அப்போ… இந்த ஃபோன் நம்பர் கிடைச்சும் வேஸ்ட். அந்த அடியாட்களைப் பிடிச்சாலும் ஒன்னும் பண்ண முடியாது. அப்படித்தானா??” என்று எரிச்சலாகச் கேட்டார். 

மேலும், “அவன் சொன்னது கரெக்ட் நிகில்! அவனைக் கண்டுபிடிக்கவே முடியாது” என்று இயலாமையுடன் கூறினார்.

“எதுக்காக கண்டுபிடிக்கணும் முரளி?” என நிகில் வெகு இயல்பாகக் கேட்டான். 

கோபத்தில் இருந்தவர் குழப்பத்துடன் நிகிலைப் பார்த்தார்.

“முரளி! இதுக்கு முன்னாடி ஒரு தடவை எனக்கு கால் பண்ணானே? எதுக்காக?” என்று கேள்வி கேட்டான்.

இன்னும், அவன் சொல்ல வரும் விடயம் புரியவில்லை. அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். 

“முரளி! இப்படி ஒரு தப்பு நடக்குன்னு எனக்குத் தெரிஞ்சது. ஆனா, யார் பண்றான்-னு எனக்குத் தெரியாது. அவனாதான் கால் பண்ணி… நான்தான் அதைப் பண்ணேன்னு சொன்னான். ஏன்?”

“ஏன்?” என்று கேட்டு, தெளிவில்லாதப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தார். 

“ஏன்னா? நான், அவன் பண்றதைக் கண்டுபிடிச்சேன்னு” என்று தெளிவு படுத்தினான். 

“ஆமா!” என்றார்.

“இப்பவும்… அதே மாதிரி, அவனை எனக்கு ஃபோன் பண்ண வைக்கணும்”

‘அதெப்படி முடியும்?’ என்பது போல் பார்த்தார். 

“முரளி, அவன் இதெல்லாம் எதுக்காக செய்றான்?”

“பணத்துக்காக”

“அப்போ மணி ட்ரான்ஸ்பர் நடக்குது. மால்வேர் அட்டாக் நடந்த ஸ்டேட்ல எல்லாம் மணி டிரான்ஸ்பர் நடந்திருக்கும். கரெக்ட்டா?”

“ம்ம்ம்” என்றார், அவன் சொல்ல வருவது கொஞ்சம் புரிந்தது போல.

“அதைக் கண்டுபிடிச்சா… எந்த காம்பட்டிட்டேடர் பணம் கொடுக்கிறாங்க? இவன் எப்படி வாங்கிறான்? இதுக்கு இடையில யார் இருக்கா? இப்படி எல்லாம் தெரிய வரும்”

“புரியுது நிகில். மணி ட்ரான்ஸ்பர்… பேங்க் வழியா நடக்கும். பேங்க்-ல ஐடென்டி இல்லாம ஒன்னும் பண்ண முடியாது. ஸோ, அதை வச்சி கண்டுபிடிக்கலாம். அதானா நீங்க சொல்றீங்க?” என்றார்.

‘இல்லை’ என்பது போல் தலை அசைத்துவிட்டு, அவர் கொடுத்த காகிதத்தில் இருந்த குறுஞ்செய்தியைக் காட்டினான்.

அதைக் கூர்ந்து பார்த்தவர், “இதுவா? இதுலயா மணி ட்ரான்ஸபர் நடந்திருக்கு!” என்று அதிர்ந்தார்.

மேலும், “இதுல எப்படிக் கண்டுபிடிக்க முடியும் நிகில்?” என்று கேட்டார். 

“முடியும்! கண்டுபிடிக்கலாம்” என்றான் நிகில் அமைதியாக!

“அதெப்படி நிகில்? சான்ஸேயில்லை” என்று அழுத்திச் சொன்னார். 

“ஸ்டேட் கோ-ஆர்டினேட்டருக்கு இன்ஃபார்ம் பண்ணியாச்சா?” என்று கேட்டான். 

“அதெல்லாம் பண்ணியாச்சு! ஆனா,…” என்று தயங்கியவரிடம், 

“அப்போ, அவர்கிட்ட சொல்லி… மத்த ஸ்டேட் சைபர் செல் யூனிட்-ட அலெர்ட்-டா இருக்கச் சொல்லுங்க” என்று நம்பிக்கையாகச் சொன்னான். 

நம்பிக்கையே இல்லாமல், முரளி அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார். 

மேலும் யோசித்த நிகில், “போலீஸ் கமிஷனர்-கிட்டயும் சொல்லிடுங்க” என்றான். 

‘நேற்று போலீஸிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்றான். இன்று எப்படி இப்படி?’ எனக் குழப்பமாகப் பார்த்தார். 

அவரின் தெளிவில்லாத முகத்தைப் பார்த்தவன், “முரளி, சீரியஸா சொல்றேன். இமிடியேட்டா இன்பாஃர்ம் பண்ணுங்க” என்று நிகில் சொல்லியும், 

முரளிக்கு நம்பிக்கையே இல்லை! 

அவரின் நம்பிக்கையின்மையைப் பார்த்தவன், “நீங்க சொல்றீங்களா? இல்லை, நான் எங்க டேரைக்டர்-கிட்ட பேசவா?” என்று கேட்டான். 

“இல்லை! நானே சொல்றேன்” என்று ஸ்டேட் கோ-ஆர்டினேட்டருக்கு, முரளி அழைப்பை ஏற்படுத்தினார். 

நிகில்… அந்தக் குறுஞ்செய்தியைப் பார்த்தவாறே, ‘அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும்?’ என்று யோசிக்க ஆரம்பித்தான்.

ஆம்! நிகில் மீண்டும் யோசிக்க ஆரம்பித்துவிட்டான்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!