நிரல் மொழி 14.2

இதே நேரத்தில் நல் கேர் இடத்தில்… 

அந்த அறையின் ஒரு ஓரத்தில்…

ஜெர்ரியை அணைத்துக் கொண்டு… மிலா, கண்மூடிச் சுவரில் சாய்ந்திருந்தாள்.

‘எங்கிருக்கிறோம்?’ எனத் தெரியாததால்… பயந்து போய்… ஜெர்ரியை அணைத்தவாறு… தன் உடலைச் சுருக்கி அமர்ந்திருந்தாள்.  

அறையின் மற்றொரு ஓரத்தில்… 

காலையிலிருந்து ஒரே இடத்தில், அமர்ந்து நல் கேர் யோசித்துக் கொண்டிருந்தான்.

எதைப்பற்றி? 

அவனின் பிரச்சனைப் பற்றி!! 

பிரச்சனை என்ன? 

அது, ஷில்பா வேலை செய்த நிறுவனம் கொடுத்திருக்கும் ‘சைபர் கிரைம் கம்பளைண்ட்’!

செய்திகளைப் பார்த்துத் தெரிந்து கொண்டான். 

விசாரணை ஆரம்பித்தால், தன்னைக் கண்டுபிடித்து விடுவார்களோ? என்ற பயம் வந்திருந்தது. 

விசாரித்தால்… அனல் மின் நிலைய ‘மால்வேர் அட்டாக்’ மட்டும் தெரிய வருமா? 

இல்லை, மற்ற மாநிலங்களில் நடத்தப்பட்ட ‘மால்வேர் அட்டாக்’ பற்றியும் தெரிந்து விடுமா?? என்று குழம்பினான். 

நான்கு வருடங்கள், 

தெளிவான திட்டமிடல்… 

சரியாகச் செயல்படுத்துதல்… _என்று சென்று கொண்டிருந்த, தன் வாழ்க்கையை… நான்கே நாட்களில் நாசம் செய்து வைத்திருக்கிறான். – என்று நிகில் மீது கோபம் வந்தது. 

எனினும், ‘அவனுக்கு ஒரு வலியைக் கொடுத்து விட்டேன்’ என்ற திருப்தி இருந்தது!

அறையின் மறுபுறத்தில் இருந்த இருவரையும் பார்த்தான். 

‘அவனுக்கு இன்னும் வலியைக் கொடுக்க வேண்டும்’ என்ற திட்டம் இருக்கிறது என்பது போன்ற பார்வை, அது!! 

இருந்த போதிலும்… இன்று… இப்படிப் பயந்து, குழம்பி யோசிக்கக் காரணம்… நிகில்! 

நிகில் மட்டுமே!! 

யாரிவன்?

அவன் மனைவி மற்றும் பையனைக் காணவில்லை. அதற்கு காரணம் தான்தான் என்று தெரியும்! 

இருந்தும்… நிகில், ஏன் தன்னைப் பற்றிக் காவல் துறையினரிடம் ஏதும் சொல்லவில்லை?

ஏன்? ஏன்? புரியவில்லை! காரணம் தெரியவில்லை!! 

அடுத்து!? 

எதற்கு இவ்வளவு யோசிக்கிறான்? யாருக்காக யோசிக்கிறான்?

ஒரு சாதாரண மனிதன், எதற்காக இவ்வளவு யோசிக்க வேண்டும்?

இவ்வளவு யோசிப்பவன்… தன் மனைவி, மகனைக் காப்பாற்றவும் யோசிப்பான் அல்லவா? 

கண்டிப்பாக நிகில் யோசிப்பான்!

அப்படி யோசித்ததால்தான், காவல் துறையிடம் சொல்லவில்லையோ??! 

நல் கேருக்கு புரியவில்லை! 

யோசித்தான்! 

காவல்துறையிடம்… நிகில் ஏன் சொல்லவில்லை?! என்று நல் கேர் யோசித்தான். 

மீண்டும் மீண்டும் யோசித்தான்! 

ஒன்று! தன் மேல் இருக்கும் பயம். 

அந்தப் பெண்ணிற்கு நடந்தது போல், இவர்களுக்கும் நடந்து விடுமோ?? என்று பயப்படுகிறான்.

மற்றொன்று! ‘இவனை நெருங்கிவிடலாம்’ என்ற நம்பிக்கை! 

யாரின் உதவியுமில்லாமல், தானே கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை!!

ஒரு சாதாரண காலமிஸ்ட்-க்கு, எப்படி இப்படி ஒரு நம்பிக்கை வரும்? வர முடியும்? 

முதலில் அவன் காலமிஸ்ட்-தானா?? என்ற சந்தேகம் வந்தது! 

யோசித்து யோசித்துப் பார்க்கையில், அந்தச் சந்தேகம் வலுத்தது!! 

நிகில் வேறு வேலை பார்க்கிறானா?! என்று நல் கேர் யோசித்தான்! 

அவன் செயல்பாடுகளைப் பார்த்தால், வேறு வேலை பார்ப்பது போல்தான் தெரிகிறது.

அவன் செயல்பாடுகள் இருக்கட்டும்! தான், அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்று யோசித்தான். 

இதற்கு மேல், இங்கே இருக்கக் கூடாது. அது தனக்கு நல்லதல்ல! 

உடனே, வேறு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தான்! 

Out of the story 

Digital bread crums/ Digital foot prints

இது, நம்மைப் பற்றி தனித்தனியாக இருக்கின்ற தகவல்கள். (இணையத்தில், கைப்பேசியில்) 

ஆனால், அதையெல்லாம் சேர்த்து, முறைப்படுத்தி… ஆராய்ந்து பார்த்தால்… நம்மைப்பற்றி முமுழுமையான தகவல்கள் கிடைக்கும். எங்கு வசிக்கிறோம் என்பது வரை! 

Example

  1. Cookies, search history… இதை collect பண்ணி, நம்ம லோகேஷன் என்னென்னு கண்டுபிடிக்கலாம்!
  2. Social media ல share பண்றது எல்லாமே digital bread crums-தான். 

Flipkart Amazon ல பார்க்கிற items பத்தின விளம்பரம், Facebook ல வரும். அது, இந்த concept தான். 

  • என்ன பொருள் பார்க்கிறோம். (so, அதுக்கு relevant items, நம்ம screen ல… வரும்) 
  • என்ன comment பண்றோம் (+ve , -ve feedback! If – ve feedback னா, நம்மளை convince பண்ற மாதிரி offers வரும்) 
  • எவ்வளவு நேரம் அந்த தளத்தில் செலவிடுறோம்… [suppose நேரம் குறைந்தால், நம்மை attract பண்ற மாதிரி offers display ஆகும்] 

Anti Radar Stickers 

இது, kids use பண்ற number stickers மாதிரிதான் இருக்கும். But, இதை car number plate ல ஒட்டிட்டா… யாருக்கும் வித்தியாசம் தெரியாது/சந்தேகம் வராது. 

Even, phone (or any camera) வழியாகப் பார்த்தாலும், number plate ல difference இருக்காது. 

ஆனா, camera capture பண்றப்ப பண்றப்ப… அதுலருந்து வர்ற வெளிச்சத்தை, இந்த number plate reflect பண்ணும்! 

So, numbers எதுவும் store ஆகாது.  

Demo videos are available in youtube. 

Note, 

Next update post பண்ண delay ஆகும். Correct எழுதிட்டு, அதுக்கப்புறம் post பண்றேன்.