நிரல் மொழி 3.1

அடுத்த நாள்… 

நேற்றே சொன்னது போல், தன் அண்ணிகள் இருவரையும்… அந்தப் பகுதியில் இருந்த ஒரு மாலிற்க்கு அழைத்து வந்திருந்தான்.

இரண்டாவது தளத்தில் இருந்த துணிக்கடைக்கு மூவரும் வந்திருந்தனர். 

கண்கவர் வண்ண விளக்குகளுக்கு இடையே, 

காக்ரா சோளிகள்… டிசைனர் புடவைகள்… கற்கள் பதித்த சுடிதார்கள்… என்று ஒருபுறம்! 

ஜீன்ஸ்… கிராப் டாப்ஸ்… லாங் ஸ்கர்ட்… ஷார்ட்ஸ்… ஆஃப் ஷோல்டர் டாப்ஸ் என்று மறுபுறம். 

சற்று நேரம், ஆஷாவும் மீராவும் தேடித் தேடி ஆசைப்பட்டதை வாங்கினார்கள். 

அதன் பின், அவர்கள் வாங்கினதை ‘பில்’ போடுவதற்காக, நிகில் வரிசையில் காத்துக் கொண்டிருந்தான். 

அன்று அந்தக் கடையில் தள்ளுபடி போல! கூட்டம் நிரம்பவே இருந்தது. 

பணம் செலுத்தும் இடத்திலும், நீண்ட வரிசை இருந்தது. 

காத்திருக்கும் நேரத்தில், ஷில்பாவிடம் பேசலாம் என்று நினைத்து… அவளைக் கைப்பேசியில் அழைத்தான். 

நான்கைந்து ரிங் போன பிறகே, “சொல்லு நிகில்” என்று அழைப்பை ஏற்றாள். 

“பிசியா ஷில்பா? இப் ஸோ, ஐ வில் கால் யு லைட்டர்” என்றான். 

“ம்ம்ம், கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் பிஸி, இப்போ பிரீ!”

“ஓ! ஓகே”

“நேத்து சரியா பேசலை நிகில். இப்போ பேசலாம்” என்று பேசியவளின் குரலில் களைப்பு தெரிந்தது. 

“வாய்ஸ் டல்லா இருக்கே ஷில்பா? ஏன்?” என்று அவளின் களைப்பைக் கண்டறிந்து கேட்டான்.

“அது… நேத்து நைட் கொஞ்சம் நேரம் முழிச்சிருந்து ஒர்க் பண்ணேன். அதனால இருக்கலாம்”

“ஓ!” 

“கொஞ்சம் ப்ராஜெக்ட் ஸ்டேரட்ஜிஸ்… ரோட் மேப்ஸ்.. எக்ஸ்ட்ரா… எக்ஸ்ட்ரா” 

“ஹார்டு ஒர்க்”

“யெஸ்! சப்போஸ் டென்டர் கிடைச்சா, பிரிவியஸ் டைம்-விட… இப்போ மென், மஷின், மணி எல்லாமே டபுள். ஸோ, ஒர்க்லோடு இன்கிரிஸ் ஆகும். எல்லாம் மேனேஜ் பண்ணனும் இல்லையா?”

“ம்ம், புரியுது”

“நீ எங்க இருக்க? லைன்-ல நாய்ஸ் நிறைய இருக்கு”

“மால்-ல! அண்ணிங்களோட ஷாப்பிங் வந்தேன்” என்றான்.

“ஹே, என்னை விட்டுட்டு நீங்க மட்டும் போயிருக்கீங்க. அன்பேர் நிகில் இது” என்று சண்டைக்கு வந்தாள். 

“நெக்ஸ்ட் டைம் பார்த்துக்கலாம். இல்லைன்னா, சென்னைக்கு வந்தப்புறம் நாம போகலாம்” என்று சொல்லி, சமாதானம் செய்தான். 

“ஓகே ஓகே! சரி… நீ எப்போ வர்ற?”

“ஒரு பைவ் சிக்ஸ் டேய்ஸ்-ல வந்துடுவேன். மே பி, இன்னைக்கு நைட் டிக்கெட் புக் பண்ணிடுவேன்”

“குட்! நவ், ஐ அம் ஹேப்பி” என்றவள் குரலில் மகிழ்ச்சி தெரிந்தது.

அவனும் புன்னகைத்து, “சரி, இங்கிருந்து உனக்கு ஏதும் வேணுமா?” என்று கேட்கும் போதே, திடீரென்று நிகிலின் முன் மிலா வந்து நின்றாள்.

‘இவள் எங்கே இங்கே?’ என்று புருவத்தைச் சுருக்கியவன், ‘என்ன?’ என்றான் கண்களால். 

அவளோ, ‘ஒரு நிமிஷம்’ என்று கைகளால் கேட்டாள்.

“அம்மாகிட்ட சொல்லிருக்கேன் நிகில். வேறேதும் வேணும்-னா, ஐ வில் டெக்ஸ்ட் யு அன்ட்…” என்று ஷில்பா சொல்லிக்கொண்டே இருக்கும் போது…

“ஷில்பா, நான் அப்புறமா பேசவா?” என்று கேட்டான்.

“ம்ம்ம், ஓகே பை நிகில்” என்று அழைப்பைத் துண்டித்தாள்.

நிகிலும் அழைப்பைத் துண்டித்துவிட்டு, மிலாவைப் பார்த்தான். 

“என்ன?” என்று இப்பொழுது வாய் திறந்து கேட்டான்.

“ஒரு ஹெல்ப் வேணும்-பா” என்றாள் முகத்தை 

“சொல்லு என்ன?” என்றான். 

“இந்த டிரஸ்-க்கும் சேர்த்து பில் பண்ணித் தர முடியுமா?” என்று தான் தேர்ந்தெடுத்த ஆடைகளைக் காட்டிக் கேட்டாள். 

“ஏன்? எதுக்கு? நீ பில் பண்ண வேண்டியதான?” என்றான், வரிசையில் முன்னேறிச் சென்று கொண்டே!

“பெரிய க்யூ-வா இருக்கு” என்றாள், நீண்ட வரிசையைக் காட்டி! 

“எல்லாரும் நிக்கிறாங்க? நீயும் நிற்க வேண்டியதான?”

“அட! என்னப்பா நீ? நான் நிக்கிறதுக்கு முடியாம கேட்கலை”

“அப்புறம்”

பணம் செலுத்துமிடத்திற்கு மேலே தொங்கிக் கொண்டிருக்கும் பலகையைக் காண்பித்தாள்.

அவன் அதைப் பார்க்காமல், “மிலா என்னன்னு நீயே சொல்லு” என்றான்.

“ஆஃபர் டைம்… இன்னும் பிஃப்டீன் மினிட்ஸ்-ல முடிஞ்சிடும். நான் க்யூ-ல நின்னா, எனக்கு ஆஃபர் கிடைக்காது”

அவன் யோசித்தான்.

“ப்ளீஸ். அம்மா பந்த்ராசௌ-தான் கொடுத்தாங்க. ஆஃபர் இருந்தாதான் இதெல்லாம் வாங்க முடியும்” என்று மீண்டும் தன் கைகளில் இருந்த ஆடைகளைக் காட்டினாள்.

“பந்த்ரா…” என்று புரியாமல் கேட்டான்.

“ஹாங் தவுசண்ட் பைவ் ஹண்ட்ரட்” என்றவள், “உனக்கு ஹிந்தி-ல நம்பர்ஸ் தெரியாதா?” என்று கேட்டாள். 

அதற்குள்… இவர்கள் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து, ‘இவனுக்கு இங்கே யாரையும் தெரியாதே! யாரிவள்?’ என நினைத்து… ஆஷா அங்கே வந்தாள்.

“யாரு-டா இது?” என்று நிகிலிடம் கேட்டாள்.

“அது… அது அண்ணி” என்று தயங்கும் போதே, “நான் மிலா” என்று மிலா பதில் சொன்னாள்.

“ஹே! நீ தமிழ் பொண்ணா?” என்று ஆஷா ஆச்சிரியமாகக் கேட்டாள்.

“ஹாங் ஜி” என்று தலையை ஆட்டினாள்.

“ஆனா, பார்த்தா அப்படித் தெரியலை” என்று மிலாவை ஆச்சரியமாகப் பார்த்தாள். 

“என் அப்பா… இந்த ஊர்க்காரர்”

“ஓ!” என்றவள், “ஆமா, உனக்கு எப்படி இவனைத் தெரியும்?” என்று கேட்டாள்.

“அது நேத்து சாட் சாப்பிடறப்போ..” என்று மிலா ஆரம்பிக்கும் போதே…

ஆஷா, நிகிலை ஒரு மாதிரி பார்த்து நின்றாள். 

“ஐயோ அண்ணி நீங்க வேற” என்றவன்… மிலாவைப் பார்த்து, “நேத்து சாட் சாப்பிடவா வந்த? தெளிவா சொல்லு” என்றான்.

“சாரி… சாரி. அது.. நேத்து என்னைய பார்க்க வந்த மாப்பிள்ளை பையன்… இவன்னு தப்பா நினைச்சி… மேரேஜ் வேண்டாம்னு… அப்புறம்… ” என்று பாதியிலேயே நிறுத்தி, 

‘இப்ப ஓகேவா?’ என்பது போல் மிலா நிகிலைப் பார்த்தாள்.

‘இதுக்கு அதுவே பெட்டர்’ என்ற நிலையில் இருந்தவன், ஆஷாவைப் பார்த்தான்.

“நாங்க சொல்ற பொண்ணெல்லாம் பார்க்க மாட்ட!! மேரேஜ் வேண்டாம்-னு சொல்ல வந்த பொண்ண…” என்று முணுமுணுத்துச் சிரித்தாள்.

“ஐயோ அண்ணி! அவ அந்தப் பையன்கிட்டதான் மேரேஜ் வேண்டாம்னு சொல்ல வந்தா” என்று சிரித்துக் கொண்டே விளக்கம் தந்தான். 

“ஆனா, உன்கிட்டதான சொன்னா?” என்றாள் ஆஷா! 

“அண்ணி!!” என்றவன், “மிலா, அதைக் கொடு நானே பில் பண்ணித் தர்றேன்” என்றான்.

ஒவ்வொவரு ஆடையாக எடுத்து, “இது 25%… இந்து 30%…இது …” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது,

“நான் என்ன கௌன்டர்லயா நிக்கிறேன். இதெல்லாம் தெரிஞ்சிக்க! பே பண்ணத்தான போறேன். அப்படியே கொடு” என்று சொன்னதும், மொத்தத்தையும் அவனிடம் கொடுத்தாள்.

நிகில் ஆஷாவைப் பார்த்து, “ஜஸ்ட் எ ஹெல்ப் அண்ணி” என்றான். 

சிரித்துவிட்டு, “நீ பில் பண்ணிட்டு வா” என்று நிகிலிடம் சொல்லி, “நீ வா நாம பேசலாம்” என்று மிலாவை அழைத்துச் சென்றாள். 

பணம் செலுத்தும் இடத்திலிருந்து தள்ளி வந்து, ஒரு காக்ரா சோளி அணிந்த துணிக்கடை பொம்மையின் அருகே ஆஷாவும்… மிலாவும் நின்றுகொண்டனர். 

இந்த நொடியில், “யாரு-க்கா இந்தப் பொண்ணு?” என்று கேட்டுக் கொண்டே மீரா வந்தாள்.

“நிகிலுக்கு தெரிஞ்ச பொண்ணு”

“ஓ! இந்த ஊரு பொண்ணா?” 

“இல்லை மீரா. தமிழ் பொண்ணுதான்” 

“ஓ! உன் பேரு என்ன?” என்று மீரா, மிலாவிடம் கேட்டாள். 

“மிலா”

“என்ன படிச்சிருக்க?” – மீரா.

“பி.ஏ”

“எங்க வேலை பார்க்கிற?” – ஆஷா. 

“வேலை பார்க்கலை” என்றாள் சோகமாக! 

அதற்கு மேல் என்ன பேச என்று மூவருக்கும் தெரியவில்லை. மாற்றி மாற்றி ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதும்… எப்போது நிகில் வருவான்? என்று பார்ப்பதுமாக… நின்று கொண்டிருந்தனர். 

சட்டென, “உங்க வீட்ல உனக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்களா?” என்று ஆஷா கேட்டாள்.

“ஹாங் ஜி” என்று மட்டும் சொல்லி, மிலா நகத்தைக் கடித்துக் கொண்டு நின்றாள். 

“எங்க வீட்ல நிகிலுக்கும் நாங்க பொண்ணு பார்க்கிறோம்” என்று சொல்லி, மீரா தொடர்ந்தாள்.

நகம் கடிப்பதை நிறுத்திவிட்டு, “நிகில் யாரு?” என்று ஒரு கேள்வி கேட்டாள், மிலா.

ஆஷாவும், மீராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். 

“அவன் பேரு என்ன-னே உனக்குத் தெரியாதா?” என்று ஆஷா கேட்டதும்,

“ம்கூம்” என்று மிலா தலையசைத்தாள்.

“அவன் பேரு நிகில். கம்யூட்டர் பத்தி படிச்சிட்டு சென்னை-ல வேலை பார்க்கிறான். ஒரு மேகசின்ல காலமிஸ்ட்” என்று மீரா, நிகிலைப் பற்றிச் சொன்னாள். 

“ஓ!” என்றாள், ‘இந்த விவரம் தனக்கெதற்கு?’ என்பது போல் நின்று கொண்டு! 

‘வேறு என்ன பேச?’ என்று நினைத்த ஆஷா, “நிகில், ரொம்ப நல்ல பையன். தெரியுமா?” என்றாள்.

“ஹாங்!” என்றாள், ‘இதை ஏன் தன்னிடம் சொல்ல வேண்டும்?’ என்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு! 

“எங்களையெல்லாம் ரொம்ப நல்லா பார்த்துப்பான்” என்றாள் மீரா!

இப்பொழுது மிலா எதுவும் சொல்லவில்லை. அமைதியாக இருந்தாள். 

நிகில் வருகிறானா? என்று திரும்பிப் பார்க்க ஆரம்பித்தாள்.

மிலா எதுவும் பேசாததால்… ஆஷா, மீரா இரண்டு பேருக்கும்… அதற்கு மேல் பேச்சை வளர்க்கத் தயக்கம் வந்தது.

ஆதலால், அவர்கள் இருவரும் கூட அமைதியாக நின்றனர். 

மிலா நகத்தைக் கடித்துக் கொண்டு நின்றாள். 

பணம் செலுத்திவிட்டு வந்தவன், அவர்கள் மூவரும் நிற்பதை ‘ஏன் இப்படி நிற்கிறார்கள்?’ என்று வித்தியாசமாகப் பார்த்தான்.

“பில் பண்ணியாச்சா?” என்று ஆஷா கேட்டதும், 

“ம்ம்ம்” என்று அவர்களுக்கான பைகளைக் கொடுத்தான்.

அதை வாங்கி கொண்டு, “நாங்க வெளியே வெயிட் பண்றோம் ” என்று சொல்லி, அண்ணிகள் இருவரும் வெளியே சென்றுவிட்டனர். 

மிலாவின் துணிப் பையை அவளிடம் நீட்டினான். 

அவள் வாங்கி கொண்டு, “பில் கொடு” என்று கேட்டாள்.

அவனும் கொடுத்தான்.

ரசீதைப் பார்த்தவள், பணத்தை எடுக்க ஆரம்பித்தாள்.

“ஏன் ஒரு மாதிரி இருக்க?”

“ஒண்ணுமில்லை” என்று பணத்தை எண்ண ஆரம்பித்தாள்.

“நேத்து, உங்க அம்மா திட்டினாங்களா?” 

“ஹாங்” 

“அதான் இப்படி இருக்கியா?” 

‘இல்லை’ எனத் தலையசைத்து, “நீ சென்னை-ல வேலை பார்க்கிறீயா?” என்று கேட்டாள். 

“ம்ம்ம்”

“உன் பேரு நிகில்-ஆ?” 

“ம்ம்ம்” என்றவன், “சாரி, நேத்தே சொல்லிருக்கணும் இல்லை?” என்று கேட்டான். 

அவள் வாய் திறக்கவில்லை. 

“அண்ணி சொன்னாங்களா?” என்று கேட்டான். 

“ஹாங்” என்றவள், அவர்கள் சொன்னதைச் சொல்லி, “ஏன் அப்படியெல்லாம் சொன்னாங்க?” என்று கேட்டாள்.

“ரெண்டு பேர் வீட்லயும் அலைன்ஸ் பார்க்கிறாங்க. ஸோ, உங்க வீட்ல எனக்காக பொண்ணு கேட்கலாம்னு நினைச்சிருப்பாங்க” என்று சாதாரணமாகச் சொன்னான். 

எனினும், அவள் என்ன சொல்லப் போகிறாள் என்று கேட்க, கொஞ்சம் ஆர்வமாக நின்றான். 

மிலாவோ எதுவும் சொல்லவில்லை. பணத்தை எண்ணி, அவன் கைகளில் கொடுத்துவிட்டுத் திரும்பி நடந்தாள். 

‘ஏன் பதில் சொல்லவில்லை?’ என்று நினைத்தபடியே, நிகில் வெளியே நடந்து வந்த கொண்டிருந்தான். 

அக்கணம், ஓடி வந்து அவன் முன்னே மிலா நின்றாள். 

“என்னாச்சு மிலா?” 

ஒருகணம் யோசித்து… பின்னர், “நானெல்லாம் யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன். நான், என் அம்மாவை விட்டு எங்கேயும் வர மாட்டேன்” என்று படபடவெனச் சொல்லி, விறுவிறுவெனச் சென்றுவிட்டாள்.

அவளது செய்கையை… பதில் சொன்ன விதத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே வெளியே வந்தான். 

அவன் சிரித்துக் கொண்டு வருவதைப் பார்த்து, ஆஷாவும் மீராவும் அவன் முன்னே வந்து நின்றனர். 

“என்னடா சொன்னா? சிரிச்சிக்கிட்டே வர்ற?” என்று ஆஷா சந்தோஷமாகக் கேட்டாள். 

“அவ யாரையும் கல்யாணம் பண்ண மாட்டாளாம். அதைத்தான் சொன்னா” என்றான். 

“அதுக்கெதுக்கு நீ சிரிக்கிற?” – மீரா. 

“அது.. அது.. ” என்று யோசித்தான். 

அண்ணிகள் இருவரும் சிரித்தனர். 

“இப்போ எதுக்கு காரணமே இல்லாம சிரிக்கிறீங்க?” என்று நிகில் அவர்கள் இருவரையும் கேள்வி கேட்டான். 

“காரணம் இல்லாம சிரிச்சது நீ! நாங்க சிரிக்க காரணம் இருக்கு” என்றாள் ஆஷா! 

மீண்டும் சிரித்தான். 

அவன் சிரிப்பைப் பார்த்து, “யார்கிட்டயவாது சொல்லணுமே! யார்கிட்ட சொல்ல?” என்று ஆஷா ஆர்ப்பாட்டமாகக் கேட்டாள். 

“ஷில்பாகிட்ட சொல்லலாம்” என்று மீரா சொன்னதும், 

“அய்யோ அண்ணி! அவகிட்ட சொன்னா… யாரு? என்ன? உடனே பார்க்கணும்… பேசணும்-னு சொல்லுவா” என்றான் நிகில். 

“நிகில்!” என்று இருவரும் ஆச்சரியத்துடன் அவன் பெயரைச் சொன்னார்கள். 

“ப்ளீஸ் அண்ணி! சரியா சொல்லத் தெரியலை!! ஸோ, கொஞ்சம் டைம் கொடுங்க” என்று கேட்டான். 

“ஓகே… ஓகே” என்றனர் இருவரும்! 

நேற்று அவளைப் பார்த்ததிலிருந்து அவள் நடந்து கொள்ளும் விதத்தை எண்ணிப் பார்த்தவன், “பட், கொயட் இன்ட்ரெஸ்ட்டிங் கேரக்டர் அண்ணி” என்றான். 

“ஓ!” என்று இருவரும் ராகம் பாடினர். 

ஆட்டோவில் வருகையில்… நேற்று நடந்ததை அண்ணிகள் இருவரிடமும் சொல்லிக் கொண்டே, திரும்ப வீடு வந்து சேர்ந்தான். 

இங்கே,

‘இன்ட்ரெஸ்ட்டிங் கேரக்டர்’ என்று சொல்லி, தன் எதிர்பார்ப்பின் கொஞ்சம் ‘இன்ட்ரெஸ்ட்டிங்’ என்பதை தானே ‘✔️’ செய்தான்.