நிஹாரி-15(1)

IMG-20211003-WA0016-78a871da

நிஹாரி-15(1)

ஆத்திரத்தின் சிகரத்திலும், குரோதத்தின் கொப்பளிப்பிலும், வன்மத்தின் ஆக்கிரமிப்பிலும் டிவியைப் வெறித்தபடி அமர்ந்திருந்தான் ஆத்விக். நேற்றில் இருந்து குடித்துக் குடித்து அவனின் கண்கள் கோபத்திலும், ஆங்காரத்திலும் செக்கச் சிவந்து செவ்வானமாய் இருந்தது.

தொலைக்காட்சியில் பிரபல சேனலில், ரிஷ்வந்த்-நிஹாரிகா ஒற்றுமையாய் பத்திரிகையாளர்கள் முன் நின்று, தங்களின் திருமணத் தேதியை அறிவித்துக் கொண்டிருந்தனர்.

ரிஷ்வந்தின் முகத்தில் சுழன்று கொண்டிருந்த தேஜஸையும், நிஹாரிகாவின் வதனத்தில், மேலும் இரண்டு மடங்கு கூடி இருந்த பளிச்சையும் கண்டவனுக்கு, அவள் தனக்கு கிடைக்கவில்லையே என்று அவமானம் எல்லையைக் கடந்தது.

தன் முன் மது பாட்டில்கள் இருந்த மேசையை, அவன் ஆவேசமும் ஆங்காரமுமாக எட்டி உதைக்க, கண்ணாடிக் குடுவைகள் அனைத்தும் உடைந்து சிதறி, உள்ளே இருந்த மது அனைத்தும் கொட்டி, அவனின் அறையே மதுவின் மணத்தில் மிதந்தது. அவர்கள் இருவரையும் இணைத்துப் பார்க்க முடியாதவன், சேனலை மாற்றினான். அதில், ‘எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல’ அவனைப் பற்றிய செய்தி ஓடிக்கொண்டிருக்க அவனின் கண்கள் இடுங்கியது.

நடிகர் சங்கத்தில் இருந்து அவனுக்கு, ‘ரெட் கார்ட்’ அளிக்கப்பட்டிருந்தது. (ரெட் கார்டு என்பது நடிக்க விதிக்கப்படும் தடை). விஷயம் அறிந்து அதிர்ச்சியின் உச்சிக்கு சென்றவன், இரண்டு மணி நேரமாக முயன்று தன் போதையை முடிந்தளவு இறக்கிவிட்டு, புயல் வேகத்தில் அங்கு சென்று விளக்கத்தைக் கேட்க, அவனுக்குச் சரியான பதில் கிடைக்கவில்லை.

அங்கிருந்த நடிகர் சங்கத் தலைவரிடம் காட்டுக் கத்தல் கத்தியவன், “எங்க அப்பாக்கிட்ட ஒரு காலத்துல வந்து நடிக்க சான்ஸ் கேட்டு நின்னது ஞாபகம் இருக்குல்ல? உங்கள எங்க பார்க்கணுமோ அங்க பாத்துக்கரேன்” என்று ஆத்விக் கத்த அவருக்கோ உள்ளுக்குள் அதிரத் தான் செய்தது.

அதற்கென்று நிஹாரிகாவை அவரால் பகைத்துக்கொள்ள முடியாதே!

அவரை நேற்று காலை, தன் அலுவலகத்திற்கு வர வைத்தவள், வாழைப் பழத்தில் ஊசியை ஏற்றுவது போல மெதுவாக தன் வார்த்தைகளால் பயத்தைக் கவ்வ வைத்திருந்தாள்.

“சார், ஆத்விக்கு ரெட் கார்ட் தரணும்” இரண்டு கைகளையும் மேசையின் மேல் வைத்தபடி அவள் சொல்ல,

“அது எப்படி மேடம் முடியும்?” என்று அவர் கேட்டார். திடீரென அவரை அழைத்து நிஹாரிகா சொன்னதில் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அதுவும் நிஹாரிகா தன்னை நேரில் இதற்காக அழைத்திருக்கிறாள் என்றால் நிச்சயம் இருவருக்கும் எங்கோ இடித்துக் கொண்டது. அதனால் தான் இந்தப் பெண் நேரிடையாக களத்தில் குதித்து இருக்கிறாள் என்று அவர் அறிந்துகொண்டார்.

‘ஆனால், என்ன பிரச்சனையாக இருக்கும்?’ என்று அவர் யோசித்தார். அதைத் தெரிந்துகொள்ள அத்தனை ஆவலாக இருந்தது போல அவருக்கு.

“என்ன பிரச்சினைனு தெரியாமா.. எப்படி மேடம் ரெட் கார்ட் தர முடியும்?” அவர் மறைமுகமாக கேட்ட கேள்வி புரியாமல் இருக்க நம் நிஹாரிகா ஒன்றும் அத்தனை வெகுளி அல்லவே!

தன் இருக்கையில் சிறிது சாய்ந்து, கம்பீரம் குறையாமல் கால் மேல் காலிட்டு அமர்ந்தவள், மெலிதாக சிறு கோடாய், தன் அதரங்களில் மென்னகையை நெளியவிட்டு, அவரை நிதானமாய் தன் பார்வையில் ஊடுருவி ஆராய, அவளின் பார்வையில் இருந்த அர்த்தத்தை உணர்ந்து கொண்டவருக்கு நா உலர்ந்து வறண்டு போனது.

ஏனெனில், அவளைப் பற்றி அறிந்தவர் ஆயிற்றே அவரும். ஒரு வருடத்திற்கு முன் ஒரு பிரபல பத்திரிகையில், சக்கரவர்த்தியைப் பற்றி எழுதி, அதில் அவரின் சொத்துக்கள் அத்தனை இத்தனை என்று எழுதி, மக்களுக்கு எதுவும் அவர் செய்யவில்லை, படத்தில் நடித்து நிறைய சேர்த்து சரியாக வரி கட்டவில்லை, என்று பல வகையில் எழுதியிருக்க, அந்தப் பத்திரிகையின் உரிமையாளருக்கு பதிலை, நிஹாரிகா பல வகையில் தந்திருந்தாள்.

அடுத்த நாள் தங்களது இல்லத்திற்கும், அந்தப் பத்திரிகை உரிமையாளரின் இல்லத்திற்கும், தனது சூழ்ச்சியால் ரெய்ட் வர வைத்தவள், தங்களது ஆவணங்களை, தன் திமிரையும் ஒரு இடத்திலும் சிறிதும் குறையாமல் காட்ட, அங்கு அந்த பத்திரிகை உரிமையாளரோ சரியாக மாட்டி முழித்துக் கொண்டிருந்தார்.

அன்று மாலை செய்தியில் வருமான வரித்துறை பரிசோதனை பற்றிய செயதி வந்தது. சக்கரவர்த்தியின் இல்லத்தில் சோதித்ததில் ஒரு கருப்புப் புள்ளியும் இல்லை என்று.

அதுவும் அவர் மக்களுக்காக எதுவும் செய்யாமலா இருந்தார்?

எத்தனை ஆசிரமங்கள், எத்தனை அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள், அவரின் உதவியால் இன்னும் இடிக்கப்படாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதை எல்லாம் நிஹாரிகா ஊடகங்களின் மூலம் மக்களிடம் சென்று அடையச் செய்தாள்.

அதன் பிறகு அந்தப் பத்திரிகைக்கு அவர் ஏற்படுத்திய நஷ்டங்கள் பல. எழ முடியாத அளவுக்கு பெண் வேங்கையாய் பாய்ந்திருந்தாள்.

ஆந்திர மாநிலத்திலேயே முதன்மை பத்திரிகையையே அவள் ஆட்டம் காண வைத்த விதத்தில், அதிலிருந்து யாரும் அவளிடம் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

அவளைப் பற்றி எழுதி இருந்தால் கூட, அவள் அதை தூசாய்த் தட்டி விட்டுச் சென்றிருப்பாள். ஆனால், அவளின் உயிருக்கு மேலான தாத்தையாவைப் பற்றி எழுதினால் அவள் விடுவாளா?

அதை நினைத்துப் பார்த்த நடிகர் சங்கத் தலைவர் எச்சிலை மென்று விழுங்க, அவரின் கழுத்தில் உள்ள ஆடாம்ஸ் ஆப்பிள் (கழுத்துச் சங்கு) ஏறி இறங்குவதைப் பார்த்தவள், புருவங்களை இகழ்ச்சியாய்த் தூக்கி, “இரண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு நடிகருக்கு ரெட் கார்டு குடுத்தீங்களே. அது எப்படி?” என்று வினவினாள்.

நன்றாக வளர்ந்து வரும் ஒருவனை முளையிலேயே கிள்ளி எறிய சில நடிகர்களின் வாரிசுகள் செய்த சதி அது. பின்புலம் இல்லாமல் ஒருவன் திறமையுடன் மேலே ஏறினால், தாங்கிக் கொள்ள முடியாத ஒரு இயலாமை. அனைத்தும் நிஹாரிகா அறிந்ததே.

இதற்கு மேல் அவளுடன் வாதாட முடியாது என்று உணர்ந்தார் அவர். அவள் முடிவு செய்துவிட்டுத் தான் தன்னை அழைத்திருக்கிறாள் என்பதையும் அவர் புரிந்துகொண்டார். இனி முடியாது என்று சொன்னால் அது அவருக்கு ஆபத்தாக முடியுமே!

“கண்டிப்பா ஆத்விக்கு ரெட் கார்ட் தந்திடறோம் மேடம்” என்று அவர் சொல்ல,

“அன்ட் இரண்டு மாசத்துக்கு முன்னாடி ரெட் கார்ட் குடுத்த ஹீரோக்கு விலக்கு குடுங்க. அவரு அடுத்த படம், எங்க ப்ரொடக்சனில் தான் நடிக்கப் போறாரு” நிஹாரிகா அதிகாரமாய்த் தெரிவிக்க,

‘இதுக்கு எதுக்கு நான் தலைவர் பதவில இருக்கனும். இந்த பொண்ணே இருந்துக்கலாமே’ அவர் மானசீகமாக மனதுக்குள் புலம்பியது நிஹாரிகாவுக்கு அவரின் முகத்தை வைத்தே புரிய, அவரைப் பார்த்து கிண்டலாய் ஒரு இளநகை புரிந்தவள்,

“கண்டிப்பா நெக்ஸ்ட் டைம், நான் உங்களுக்கு ரெஸ்ட் தந்திடறேன்” என்று நாசூக்காக நிஹாரிகா சொல்ல, அவர் அதற்கு மேல் முடியாமல் வந்துவிட்டார்.

நடந்ததை எல்லாம் அவரால் ஆத்விக்கிடம் சொல்லிவிட முடியுமா என்ன?

அவர் ஏதோ தயங்குவதை உணர்ந்த ஆத்விக், “யாரு.. என்ன கம்ப்ளைன்ட் சொன்னா?” சிறிது குரலை தணித்து அவரின் நிலையை உணர்ந்தவனாய் வினவ, அவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

அந்த நேரம் நிஹாரிகா கதவைத் திறந்துகொண்டு, தனது டிடா ஐ வியர் சன் க்ளாஸை கழற்றியபடி உள்ளே நுழைந்தாள்.

வழக்கம்போல் புடவையில் இல்லாமல், தோளில் சிங்கிள் ஸ்ட்ராப் கொண்ட எத்னிக் ஜார்கெட்(உயர்ந்த பட்டால் நெய்த உடை) சல்வாரில் இருந்தாள். (SINGLE STRAP ETHNIC GEORGETTE SALWAR).

இடை வரை இறுகியிருந்த வெண்மை நிற சல்வார் இடையிலிருந்து லூசாய் வெண் முகிலாய்த் தவழ்ந்து, கிட்டத்தட்ட அவள் பாதத்தைத் தொட்டிருந்தது. இடையில் இருந்து தவழும் இடங்களில், ஆங்காங்கே மினுமினுக்கும் ஜார்கெட்டில், சிறிய சிறிய தங்க ஜமிக்கி வைத்த வேலைப்பாடுகள் அற்புதக் கலையாய், உடையை அவளுக்காகவே என்று நெய்யப்பட்டிருப்பது போலிருக்க,

கீழே அதே வெண்மை நிறத்தில் ஜார்கெட்டில் பாண்ட். தோளில் இரு பக்கமும் சாந்தேரி இன்டிகோ நிற துப்பட்டாவில்(INDIGO BLUE CHANDERI DUPPATA), சல்வாரில் இருந்த அதே சிறிய சிறிய தங்க ஜமிக்கிகள் வைத்திருக்க, அவள் துப்பட்டாவை ஒற்றை பட்டையாய் முன் பக்கம் விரித்திருந்தாள்.

கழுத்திலும், காதிலும் தங்கமும் வெண்மையும் கலந்த சௌத் சீ முத்துகள்(SOUTH SEA PEARL), அவளை பாந்தமாய் தழுவியிக்க, இரண்டு பக்கமும் சிறிதளவு அவள் முடியை எடுத்து, நடுவில் க்ளிப் குத்தியிருந்த விதம் நமக்கு தேவதை கணக்காய் காட்சி அளித்திருந்தது.

ஆனால், எதுவும் தெரியாது போல வந்து நின்றவளைக் கண்ட நடிகர் சங்கத் தலைவருக்கு, அவளின் தலையில் சிவப்பு நிறத்தில் கொம்புகள் முளைத்து அவள் தலையை சிறிது சரித்து சிரித்து, ‘டெவில்’ போலவே காட்சி அளித்தது.

அவரிடம் படம் விஷயமாகப் பேசிவிட்டுத் திரும்பியவள், அப்போது தான் ஆத்விக் இருப்பதையே கவனிப்பது போல, “ஹாய், ஆத்விக். ஹவ் ஆர் யூ?” என்றாள்.

அவள் வந்த விதமும், சங்கத் தலைவர் நின்ற விதமும், முழித்த விதமுமே சொல்லியது அவனுக்கு தனக்கு நடிக்கத் தடை விதித்தது யாரால் என்று!

அதை உணர்த்துவதற்காகத் தானே அவள் வந்தது.

பதில் பேசாமல் அவன் நிற்க, நிஹாரிகா திரும்பிப் பார்த்த பார்வையில் நடிகர் சங்கத் தலைவர் வெளியேறினார்.

“நிஹாரிகா, வொய் ஆர் யூ ட்ரபிள்ளிங் மீ?”(Why are you troubling me?”) அவன் கத்த,

“நிறைய கேர்ள்ஸ் சான்ஸ் கேட்டு வந்தப்ப, அவங்க வாழ்க்கைல விளையாடும் போது தெரியலையா ஆத்விக்.. அன்ட் நீ என்கிட்ட உன்னோட வேலையைக் காட்டி இருக்கக் கூடாது” என்றாள், அவார்ட் பங்ஷனில் அவளின் பழைய புகைப்படமும், அவளை அவன் வெறித்துப் பார்த்ததையும் வைத்து.

“நிஹாரிகா” என்று குரலை உயர்த்தியவன், அவளின் கண்கள் கத்தி முனை போல இடுங்குவதை உணர்ந்து, குரலை தணித்து பேசத் தொடங்கினான்.

“என்னோட பர்சனல் லைஃப்ல தலையிட உனக்கு எந்த ரைட்ஸும் இல்ல நிஹாரிகா. நம்ம சினில இந்த அட்ஜஸ்ட்மென்ட் இதெல்லாம் சகஜம். நடிக்க வரும்போதே இதுக்கெல்லாம் ரெடியா தான் வருவாளுங்க. வந்து ப****க்கு அப்புறம் பத்தினி வேஷம் போடுவாளுங்க” என்று ஆத்விக் பெண்களை மிகவும் கீழ்த்தரமாகப் பேச நிஹாரிகா அக்னி மலையாக வெடித்தாள்.

“ஷட் அப் ஆத்விக்! ச்சி, மைன்ட் யுவர் டன்ங்(mind your tongue). நடிக்க வரும்போதே ரெடியா வர்றாங்கன்னா, உன்னை மாதிரி சில ஆம்பிளைக, நம்ம சினில அப்படித்தான்னு மனசுல பதிய வச்சிருக்கீங்க. பொண்ணுங்க தெரியாதவன் கூட பெட் ஷேர் பண்ற அளவுக்கு, நம்ம சினி இன்டஸ்ட்ரீஸ் பத்தி எல்லாரு மனசுலையும் கேவலமான எண்ணம் வர வச்சுருக்கீங்க”

“அந்தக் காலத்துல கலையா பார்த்த பீல்ட் இப்போ சுமக்கற வார்த்தை, ‘கூத்தாடி’ங்கற நேம்(Name). சினிக்கு வந்துட்டாவே நம்ம கலாச்சாரம் வேற, அப்படிங்கற மாதிரி நடந்துக்கறீங்க. அப்ப எல்லாம் குழந்தை பிறந்த அப்புறம் கூட ஹீரோயினா நடிச்சாங்க. அப்ப எல்லாம் அவங்க திறமையை மதிப்பிட்டு தான் எல்லாமே இருந்துச்சு”

“ஆனா, இப்ப கல்யாணம் ஆனாவே பீல்ட் அவுட்னு முடிவு ஆகிடுது. மோர் ஓவர் கல்யாணம் ஆனாலும் டிவோர்ஸ்ல முடியுது. நம்ம முன்னேற முன்னறே முன் உதாரணமாக இருக்கணுமே தவிர, தப்பான விசயத்துக்கு விதை போட்டிட்டு இருக்கக் கூடாது” என்றவள்,

“யெஸ், நான்தான் உனக்கு ரெட் கார்ட் குடுக்க சொன்னேன். வாட் எவர், ஒன்ஸ் அப்பான் எ டைம் யூ ஆர் மை பிரண்ட்(Whatever, once upon a time you’re my friend). எனக்கு தெரிஞ்சு நீ எங்க எப்படி மாறுனேன்னு தெரியல. அட் தி சேம் டைம் அதைக் கேக்கவும் நான் விரும்பல. ஒழுங்கா இருந்துக்க ஆத்விக். நான் எல்ல டைமும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன்” என்று எச்சரித்தவள், அவனின் பதிலை எதிர்பார்க்காமல் வெளியே வர, அவளுக்காக அவளின் தலைவலி காத்திருந்தது.

வாழ்க்கை முழுதும் அவளுடன் பயணிக்கப் போகும் தலைவலி!

ரிஷ்வந்த் அவளிற்காகக் காத்திருந்தான். இருவரும் பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்துவிட்டு நேரே இங்கே வந்து இருந்தனர்.

அருகில் வந்தவளிடம், “போகலாமா?” ரிஷ்வந்த் வினவ,

“ம்ம்” என்றவள் அவனுடன் செல்ல, இருவரும் அவனுடைய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸில் வீட்டை நோக்கி பறந்தனர்.

வீடு செல்லும் வழி நெடுகிலும் இருவருக்கும் இடையில் கனத்த மௌனமே நிலவியது. நிஹாரிகா சாலையில் பார்வையை வைத்தபடி வர, ரிஷ்வந்தும் பல்வேறு சிந்தனையில் சுழன்றபடி வந்தான்.

நிஹாரிகாவிடம் இருக்கும் விறுவிறு அடாவடி அவனிடம் இல்லை. நிதானமாக அதேசமயம் சாணக்கியனாய், சிந்தனைகளில் அமைதியாக அவன் வர நிஹாரிகா அவனைக் கவனித்ததைக் கூட அவன் அறியவில்லை.

‘இவன் எதை இப்படி யோசிச்சிட்டு வர்றான்’ மனதுக்குள் நினைத்தவள், மீண்டும் தன் யோசனையை ஆத்விக்கின் பக்கம் திருப்பினாள்.

பன்னிரெண்டு வயது வரை சில சமயங்களில் தாத்தாவுடன் ப்ரொடக்சனிற்கு சென்றால், அவனுடன் விளையாடியது அவளுக்கு நினைவு இருந்தது. அப்போது எல்லாம் இப்படி இல்லையே அவன். எப்படி மாறிப்போனான் என்று யோசித்தாள்.

‘எப்படியோ.. திருந்துனா சரி’ என்று நினைத்துக்கொன்டாள்.