நிஹாரி-2

IMG-20211003-WA0016-f2afd87a

நிஹாரி-2

அர்ஜூன் கொனிடெல்லாவின் அலுவலகம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த நிஹாரிகாவின் புருவங்கள் இரண்டும் யோசனையில் அருகருகே இருந்தது. சற்றுமுன் நடந்த சம்பாஷனைகளை மீண்டும் மனதிற்குள் ஓட்டிப் பார்த்தாள்.

நிஹாரிகாவிற்குப் பிடித்த அர்ஜுன் கொனிடெல்லாவின் பெயர் அலைபேசியின் திரையில் ஒளிர்ந்தது.

ஃபோனை ஏற்றவள், “அங்கிள்” என்றாள் குஷியாக

“வாழ்த்துக்கள் சின்னப் பிள்ளா(குட்டி பொண்ணு)” அவர் தெலுங்கில் நிஹாரிகாவிடம் திரைப்படம் வெற்றி பெற்றதற்கு வாழ்த்தினார்.

“தேங்க்ஸ் அங்கிள்”

அர்ஜூன் கொனிடெல்லா சக்கரவர்த்தியின் ரசிகராய் இருந்து, பின் தன் திறமையால் சக்கரவர்த்தியின் உதவியோடு திரைத்துறையில் நுழைந்தவர். அறுபதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களை நடித்து அதில் பாதிக்கு மேல் வெற்றியையே கண்டவர்.

அடுத்து சக்கரவர்த்தியின் அறிவுரையால் ஒரு வயதிற்கு மேல், அவரும்
தயாரிப்பாளராக அவதரித்து திறமையான புதுமுகங்களுக்கு வாய்ப்புக் கொடுத்து அதில் வெற்றியையும் கண்டு வருகிறார்.

சக்கரவர்த்தியின் குடும்பத்தோடும் அவர் நெருக்கம்தான். நிஹாரிகா பிறந்த அன்றே அவளை கையில் ஏந்தியவர்.

குட்டிப் பஞ்சாய் தன் கையில் சக்கரவர்த்தி குழந்தையை வைத்தபோதுகூட அவர் நினைக்கவில்லை, அவள் இந்த வயதிலேயே பல உயரங்களை திரைத்துறையில் எட்டுவாள் என்று.

என்னதான் சினிமா பின்புலம் இருந்தாலும் திரைத்துறையைப் பொறுத்தவரை சாணக்கியனே வெற்றி பெறுவான்.

“ஹலோ, அங்கிள்! லைன்ல இருக்கீங்களா?” நிஹாரிகா வினவ,

“இருக்கேன் சின்னப்பிள்ளா… அங்கிளுக்கு ஒரு ஹெல்ப்… ஆபிஸ் வரைக்கும் வர முடியுமா?” அவர் வினவ,

“ஓஹ், ஷ்யூர் அங்கிள்… ஐ வில் பி இன் டுவென்டி மினிட்ஸ்”

“சின்னப்பிள்ளா, ஸ்பீட் வேணாம்” அவளிற்கு காரின் மேலுள்ள க்ரேஸை அறிந்தவராய் அவர் சொல்ல, சிரித்தபடியே ஃபோனை வைத்தவள் நந்தினியை அழைத்துக்கொண்டு கிளம்பினாள்.

‘அங்கிள் எதுக்கு நம்மளை ஆபிஸ் கூப்பிடறாரு.. என்ன விஷயமா இருக்கும்.. ஹம்.. இந்த மாதிரி கூப்பிட மாட்டாறே.. ஒன்ணு நம்ம ஆபிஸ் வருவாரு.. இல்ல வீட்டுக்கு வருவாரு.. அப்படித்தானே பழக்கம்’ மனதினில் பலவாறு நினைத்தபடி அவள் தனது ஜாக்குவாரை செலுத்த சில நிமிடத்தில் அங்கிருந்தாள் நிஹாரிகா.

தன் பாதுகாப்பிற்கு வந்த கார்ட்ஸை வெளியிலேயே நிற்கச் சொன்னவள், நந்தினியுடன் உள்ளே நுழைந்தாள். அர்ஜூனின் ஆபிஸ் என்பதால் அங்கு அவளிற்கு பாதுகாப்புத் தேவையில்லை என்றும், அவரே அதற்குத் தகுந்த முன்னேற்பாடுகள் செய்திருப்பார் என்றும் அவளிற்குத் தெரியும்.

உள்ளே நுழைந்தவளின் அசரடிக்கும் தோற்றத்தில் அங்கிருந்த அனைவரும் அசந்தனர். நிலவை எடுத்து செதுக்கியது போலிருந்தவள் அனைவரின் பார்வையை உணர்ந்தாலும், துளியும் சட்டைசெய்யாது லிப்ட்டை நோக்கி நடந்தாள்.

அவள் செல்வதற்கு முன் லிப்ட்டின் கதவு மூடுவதற்கு ஆயத்தமாக நகர, நந்தினி விரைந்து சென்று கதவின் குறுக்கே கையை வைக்க கதவுகள் மீண்டும் திறந்துகொண்டது.

நிஹாரிகாவிற்கு வழிவிட்டு நந்தினி நகர்ந்து நிற்க, உள்ளே நுழைய நினைத்த நிஹாரிகாவின் கால்கள் நகர மறுத்தன.

பயம் என்று இல்லை.

அதிர்ச்சி என்னும் உணர்வு அவளை ஆக்கிரமித்தது.

யாரைப் பார்க்கவே கூடாது என்று நினைக்கிறாளோ அவனையல்லவா கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருக்கிறாள். அதுவும் அன்று இருந்தவனிற்கும் இன்று எதிரில் நிற்பவனிற்கும் ஆறு இல்லை ஆறாயிரம் வித்தியாசங்கள்.

லிப்ட்டின் உள்ளே தனது கார்ட்ஸுடன் நின்றிருந்த ரிஷ்வந்தோ லிப்ட்டின் கடைசியில் தலை சாய்த்து லேசாகத் தாடையைத் தூக்கி இருகைகளையும் கட்டிக்கொண்டு அவளையே தான் பார்த்திருந்தான். அவனின் பார்வை அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தது.

அப்படியொரு பார்வை!

இம்மாதிரிப் பார்வையை அவனிடம் நிஹாரிகா சந்தித்ததே இல்லை.

ரிஷ்வந்த் – தற்போது தமிழ்நாட்டில் உள்ள முன்னணி நடிகர்களுள் ஒருவன். ‘மக்களின் நாயகன்’ என்ற பட்டத்தோடு தமிழ் ரசிகர்களின் செல்லப் பிள்ளையாகிப் போனவன். சிறுசில் தொடங்கி, இளசில் தொடர்ந்து, பல்லுப் போனவர்கள் வரை கவர்ந்து வைத்திருந்தான்.

நடிக்க வந்த இரண்டரை வருடத்தில் நான்கு படங்களே வெளிவந்திருக்க நான்கு படங்களும் கோடிகளை அள்ளித் தந்து ப்ளாக் பஸ்டர் அடித்திருந்தது. தயாரிப்பாளர்களுள், ‘இவன் ராசிக்காரன்… இவனை வச்சு படம் எடுத்தா போட்ட காச விட நாலு மடங்கு அள்ளிடலாம்’ என்ற பேச்சுக்களும் உண்டு.

அதுவும் ரிஷ்வந்தின் நடிப்பும், கதைத் தேர்வும் திரைத்துறையில் பரம்பரை பரம்பரையாக ஊறியவனிற்குக் கூட வராது. அதுவும் தமிழ் ஆண்மகனிற்கே உடைய வசீகரமும், கம்பீரமும், ஆண்மையும் நிறைந்திருந்தவனை பிடிக்காமல் போனால்தான் ஆச்சரியமே.

கதாநாயகிகள் சிலர்கூட அவனை வட்டமிட்டுக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்த செய்தி.

“ம்கூம்” ரிஷ்வந்த் செறுமியதில் அவனையே பார்த்துக் கொண்டிருந்த நிஹாரிகா தன்னுணர்வு பெற்று சடுதியில் தன் முகம் வெளிப்படுத்திய உணர்வை மறைத்தாள்.

லிப்ட்டின் உள் நுழைந்தவள் அந்த மூன்று பீம்பாய்ஸ் பாதுகாவலர்களின் மீது இடிக்காதிருக்க நகர்ந்தவள் அந்த லிப்ட்டின் கடைசியில் சொல்லி வைத்தாற்போல ரிஷ்வந்தின் அருகில் வந்து நின்றாள்.

அவனருகே நிற்பதை உணர்ந்தவள் சிறிது இடைவெளிவிட்டுத் தள்ளி நிற்க, நந்தினியிடம் எந்த தளம் போகவேண்டும் என்று கேட்டு ஒரு பாதுகாவலன் அவர்கள் செல்லும் அதே ஐந்தாவது தளம் என்பதால் புஷ் பட்டனை மட்டும் அழுத்த அது நேராகச் சென்று ஐந்தாவது தளத்தில் நின்றது.

லிப்ட்டில் வரும்பொழுது ரிஷ்வந்த் சாதாரணமாக இருக்க, நிஹாரிகா அதைவிட சாதாரணமாக நின்றிருந்தாள். வைட் சர்ட்டிலும், ப்ளூ ஜீன்ஸிலும் ட்ரிம் செய்திருந்த தாடியிலும் மொத்த வசீகரத்தையும் தன்னுள் தேக்கி வைத்து நிற்பவனை நிஹாரிகா அவனறியாமல் கவனிக்க, அவனோ சாதாரணமாக நின்று எதையோ மொபைலில் டைப் செய்து கொண்டிருந்தான்.

இருவரும் வெளியே வர இருவரையும் ஒருசேர அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார் அர்ஜூனின் உதவியாளர்.

“ஸார் ஒரு ஃபோன் பேசிட்டு இருக்காரு… வந்திடுவாரு” அவர் தெலுங்கில் சொல்லிவிட்டு நகர நிஹாரிகாவிற்கு, ‘இவன் கூட வேற உட்காரணுமா’ என்றிருந்தது.

தற்போது ரிஷ்வந்த் தன்னைப் பார்ப்பதை அவளால் நன்கு உணர முடிந்தது. அதுவும் அங்குலம் அங்குலமாக அவளை அவன் பார்க்க, தன்னால் அவளின் கைகள் எழுந்து, இடையிலிருந்து இறங்கியிருந்த சேலையை வெற்றிடையை மறைத்தபடி ஏற்றிவிட்டது. தைரியலட்சுமியாய் அவள் அமர்ந்திருந்தாலும் ஏதோ மனதின் ஓரத்தில் ஓர் உணர்வு எழுவதை நிஹாரிகாவால் உணர முடிந்தது.

“தெளிவிதக்குவா(stupid)” அவளின் அதரங்கள் முணுமுணுத்தது. அவளின் முணுமுணுப்பு காதில் விழுந்தாலும் கேட்காதது போல் தன் பார்வையை மாற்றாது அவளை துளைத்துக் கொண்டிருந்தான் ரிஷ்வந்த்.

நீண்ட நேரம் நிஹாரிகாவை தவிக்க வைக்காமல் வந்து சேர்ந்தார் அர்ஜுன் கொனிடெல்லா.

“சிசுவுலக்கு ஸ்வாகதம்(welcome babies)” வரவேற்றபடி வந்தவர் இருவரையும் பழச்சாறோடு முதலில் உபசரித்து கதைகள் பேச ஆரம்பித்தார்.

நிஹாரிகாவின் மனதில் எதுவுமே பதியவில்லலை. அவளின் யோசனை எல்லாம், ‘இவன் எதுக்கு இங்க வந்திருக்கான்… அதுவும் இவன் வரும்போது எதுக்கு அங்கிள் கூப்பிட்டிருக்காரு” நினைத்தவள் அமைதியாய் பழச்சாறை பருகினாள்.

இருவரும் பழச்சாறை குடித்து முடித்தபின் நிஹாரிகாவின் தலையில் ஹிரோஷிமா நாகசாகி குண்டை விட பெரியதாக அர்ஜூன் ஒன்றை வீசினார்.

ஒரு பெரிய பட்ஜெட் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா என்று நான்கு மொழிகளில் ரிஷ்வந்தை கதாநாயகனாக வைத்து தயாரிக்க இருப்பதாகவும், அதைத் தான் ஒருவனே செய்ய இயலாது என்பதால் நிஹாரிகாவின் புரொடக்ஷன்ஸோடு சேர்ந்து செய்யத்தான் நிஹாரிகாவை அழைத்ததாக விஷயத்தை தெளிவாகப் போட்டு உடைக்க நிஹாரிகவோ உறைந்துவிட்டாள்.

“அங்கிள் யாரு டைரக்டர்?” நிஹாரிகா வினவ,

“அருண் தான்” என்றார் அர்ஜுன். ‘சுத்தம்’ என்று மனதிற்குள் நினைத்தவள் ரிஸ்வந்தை ஒரு நொடி பார்க்க அவனோ முகத்தில் எதையும் பிரதிபலிக்கவில்லை.

மனதில் தோன்றிய உணர்வுகளை மறைத்தவள், “அங்கிள்! தாத்தாகிட்ட கேட்டிங்களா?” வினவ,

“தாத்தகிட்ட பேசுனேன்… அவரு உன்கிட்ட பேசிக்க சொன்னாரு… சின்ன பிள்ளா இவ்வளவு வளந்துடுச்சுன்னு இப்பதான் தோணுது” அவர் அவளின் திறமையையும் இந்த வயதிலேயே நிர்வாகிக்கும் திறனையும் கண்டவராக பூரித்தபடிச் சொல்ல நிஹாரிகா புன்னகையை உதிர்த்தாள்.

அவரிடம், ‘இல்லை’ என்று நிஹாரிகாவால் சொல்ல முடியவில்லை.

வயதில் பெரியவர் தன்னிடம் கேட்கும்போது மறுக்க முடியாமலும், சிறிய வயதில் இருந்து தன்னிடம் அன்பை மட்டும் காட்டுபவரிடம் தவிர்க்க முடியாது என்று மனதால் நினைத்தவள் ஒரு முடிவை எடுத்தாள்.

“ஓகே அங்கிள்… வீ கேன் ப்ரோஸீட்” என்ற நிஹாரிகா ரிஷ்வந்தைப் பார்க்க அவனோ கண்களைச் சுருக்கி அதே பார்வையோடு அவளை சளைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் பார்வையை உணர்ந்தவள், ‘அங்கிள் முன்னாடி எப்படி பார்க்கிறான் பாரு…’ மனதில் கடுகடுத்தாள்.

சில நொடிகள் அவளைப் பார்த்தவன் அர்ஜூனிடம் திரும்ப, “ஓகே ரிஷ்வந்த், நீங்க சைன் பண்ணிடுங்க… நான் அல்ரெடி எல்லாம் ரெடி பண்ணிட்டேன்” அவர் சொல்ல,

“அங்கிள், பேமென்ட் பேசியாச்சா?” நிஹாரிகா வினவ, புருவத்தை உயர்த்தி மெச்சிய ரிஷ்வந்த் ஒரு சிறிய புன்னகையை தவழவிட்டபடியே அர்ஜூன் கொடுத்த பேப்பர்ஸில் படித்துப் பார்த்தபடி கையெழுத்துகளை இட்டான்.

“ஸார், என்னோட பேமென்ட் எனக்கு மூவி ரிலீஸ் ஆன பர்ஸ்ட் டேவே செட்டில் ஆகிடணும்” கறார்க் குரலில் ரிஷ்வந்த் சொல்ல அவனிடம் தலையை ஆட்டிய அர்ஜூன், “பேமென்ட் பேசியாச்சு சின்னப்பிள்ளா” என்றவர் அனைத்து விவரங்களையும் அவளிடம் காண்பிக்க பார்த்து முடித்தவள்,

“அங்கிள், நேனு சின்ன அம்மாயினி காது(நான் குட்டிப்பொண்ணு இல்ல)” என்றாள். ஏனோ அவரின் அழைப்பை எப்போதும் பிடித்து ஏற்றுக் கொள்பவளுக்கு இன்று ரிஷ்வந்தின் முன்னால் அதை ஏற்க முடியவில்லை.

அதை அர்ஜூனும் உணர்ந்தாலும், தான் இத்தனை நாள் வைத்த உரிமையை அவர் விட்டுத் தருவாரா? (முன்பின் அறியாத ரிஷ்வந்தின் முன்னால் அழைப்பது அவளிற்கு சங்கோஜம் என்றே அவர் நினைத்தது)

“மிறு எல்லப்புடு நா சின்ன அம்மாயி(நீ எப்போமே என்னோட குட்டிப்பொண்ணு தான்)” என்றவரிடம் அவளால் முகம் சிணுங்க மட்டுமே முடிந்தது.

அடுத்து யார் இசையமைப்பாளர், மற்ற கதாபாத்திரங்கள், கதையின் நகர்வு என்று அனைத்தும் பேசி முடித்து மூவரும் வெளியே வரும்போது மணி ஒன்றரை ஆகியிருந்தது.

“நான் ஈவ்னிங் வந்து தாத்தாவைப் பார்க்கிறேன்டா… ஒரு அர்ஜென்ட் வொர்க்” என்றவர் ரிஸ்வந்திடம் கையைக் கொடுத்துவிட்டு நகர, இளையவர்கள் இருவரும் தனித்து விடப்பட்டனர்.

நிஹாரிகா முன்னே செல்ல அவள் பின்னோடேயே வந்த ரிஷ்வந்தின் பார்வை, அவளின் அழகிய உடலை சுற்றியிருந்த புடவையில் தெரிந்த பின்னழகை, உச்சி முதல் பாதம் வரை கண்களால் ரசித்துக் கொண்டு வர முன்னே சென்று கொண்டிருந்த நிஹாரிகாவிற்கு உறுத்தியது.

ஏனோ இத்தனை நாள் வரை, சாதரணமாக அவள் ப்ளவுஸின் பின் வைக்கும் ஹாவ் பாக்லெஸ் வித் ஸ்டிரிங்க் டிசைனில்(half backless with string design) தெரியும் அவளின் பளீர் முதுகு இன்று அவளிற்கு இம்சையாய்த் தோன்றியது.

முதுகில் இருந்த ரிஷ்வந்தின் பார்வை கீழிறிங்கி அவளின் இடையை தழுவுவதை அவளால் உணர முடிந்தது.

இடையிலிருந்து கீழிறிங்கியிருந்த புடவையை மீண்டும் மேலிழுத்து விட்டவளுக்கு, அவன் பார்வை அடுத்து செல்லும் இடத்தை உணர்ந்து திக்கென்று இருந்தது.

இரண்டு கைகளையும் பின்னால் கொண்டு சென்று கட்டியவள் மின்னல் வேகத்தில் திரும்பி, அவனை முறைக்க அவனோ கேலிப் புன்னகையோடும் குறும்புப் பார்வையோடும் நின்றிருந்தான்.

“முன்னாடி போ” என்றாள் முறைப்பாக.

அவளைக் கடந்து செல்லும்போது அவளை மேலிருந்து கீழ் பார்வையால் அளந்தவன் புருவத்தை உயர்த்தி மெச்சிவிட்டுப் போக, ‘எதற்கு இது?’ என்று யோசித்தவளுக்கு அதனின் அர்த்தம் உணர்ந்து கடுங்கோபம் வந்தது.

அவனைத் திட்ட வேக எட்டுக்களை எடுத்து வைத்து நடந்தவள் லிப்டிற்குள் நுழைய லிப்டின் கதவுகள் மூடியது.

“இக்கட சூடண்டி… (இங்க பாரு)” விரலை நீட்டி அவள் எச்சரிக்கத் தொடங்க, லிப்ட் பாதியில் மின்சாரம் தடைபட்டு நிற்க, தடுமாறியவள் அவன் மேலேயே சாய்ந்தாள்.

தன் மேல் மோதி நின்றவளின் இடையைத் தாங்கிப் பிடித்தவன் அவளைக் குனிந்து நோக்க அவளோ அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவன் அவள் இடையில் அழுத்தத்தைக் கூட்ட, நிஹாரிகா அவனைவிட்டு விலக நினைத்தாள். அவனின் கரமோ அவளை இறுக்கமாய் பற்றியிருக்க அவனிடம் இருந்து விடுபடுவது கடினம் என்று நினைத்தவள் அவனது சட்டைப் பட்டனைப் பார்த்தபடி பல்லைக் கடித்துக்கெண்டு நின்றாள். அவனிடம் பேச அவளிற்கு பிடிக்கவில்லை. அவனின் கரங்கள் சொன்ன மொழி அவளிற்கு புரியாமல் இல்லை. ஆனால், ஏற்கத்தான் முடியவில்லை.

அவளின் மனவோட்டத்தை அறிந்தவன் வேண்டுமென்றே அவள் காதருகே குனிந்து, “34-28-36” ஹஸ்கிக் குரலில் அவளின் அளவுகளை, மீசை ரோமங்கள் அவள் காது மடலில் உராய்ந்தபடி சொல்ல நிஹாரிகாவோ உறைந்தாள்.

அவனை நிமிர்ந்து அனல் கக்கும் விழியோடு தன் கோபத்தை அவள் பறைசாற்றி, அவனை அறைய தன் கரங்களை ஓங்கும் முன்னே எளிதில் அவளின் கையை அடக்கி மீண்டும் கீழே கொண்டு சென்றவன், “இப்ப நான் அதே பணமில்லாதவன் இல்ல நிஹாரிகா” கடுமையாக வந்தது அவனிடம் வார்த்தைகள்.

நிஹாரிகா அவன் இன்னும் எதையும் மறக்காமல் இருக்கிறான் என்பதை அவன் வாய்மொழியால் உணர்ந்து வாய்பிளந்து நிற்க, “என்ன நிஹாரிகா… இப்ப மறுபடியும் அவனை விட்டுட்டு என்கூட வந்திடலாம்னு இருக்கா?” ரிஷ்வந்த் அடிபட்ட வேங்கையாய் வார்த்தைகளை வீச,

“ரிஷ்வந்த்” அதட்டினாள் நிஹாரிகா.

“ஷ்” அவளின் இதழின் மீது கை வைத்து பார்வையாலேயே சத்தம் போடக்கூடாது என்று அடக்கினான்.

ஆனால், அதற்கு அடங்குபவளா அவள்?

“நீ எவ்வளவு சம்பாதிச்சாலும் அதே பொறுக்கிதான்டா… இப்ப நீ பண்ணிட்டு இருக்க வேலையும் அதான்” நிஹாரிகா அவன் தன்னை பிடித்திருந்த நிலையை பார்வையால் சுட்டிக்காட்டி வார்த்தையைவிட, அவளின் இடையில் இருந்த ரிஸ்வந்தின் கரங்கள் கட்டுக்கடங்காமல் எழுந்த கோபத்தில் தன்னால் அழுத்தத்தைக் கூட்டியது.

அவள் இடை கன்றிவிடும் அளவிற்கு அவன் அழுத்தியதில் வலியில் முகம் கசங்கியவள், “லீவ் மீ ரிஷ்வந்த்” என்றாள் அழுத்தமாக.

“அப்ப நீ இன்னும் அவன்கூட சுத்திட்டுதான் இருக்க?”

“அதுக்கு நான் உனக்கு ஆன்சர் பண்ணனும்னு அவசியம் இல்ல ரிஷ்வந்த்” வெடுக்கென்று வந்தது பதில்.

“வெல், அது உனக்கு எப்பவுமே இருந்தது இல்லியே” குத்தலாக அவன் பேச,

“தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிசினஸ்” என்றவள் அவனிடம் இருந்து திமிறினாள்.

“நீ அமைதியா நின்னாக்கூட பரவாயில்லை… இப்படி ஆடிட்டே இருந்தா…” இழுத்தவனின் பார்வையை கீழிறிங்க, நிஹாரிகாவோ அவனின் பேச்சில் சில்லிட்டு நின்றாள்.

“ச்சீ! நீ இன்னும் மாறவே இல்லடா பொறுக்கி” அவள் திட்ட, அவளின் வார்த்தையில் அவனின் கோபம் பன்மடங்கு அதிகரித்தது.

அந்த வார்த்தையால் அவனின் கோபம் எகிறிக் கொண்டிருந்ததை அவள் அறியவில்லை.

அவளை இன்னும் அருகில் நெருக்கமாக இழுத்து, லிப்ட்டின் மூலையில் சாய்த்து, அவள் இருகைகளையும் மேலே தூக்கியவன், அவளின் இருகரங்களையும் தன் ஒற்றைக் கரத்தால் எளிதில் அடக்கினான். மற்றொரு கரத்தின் விரலால் அவளின் அதரத்தைப் பிடிக்க நிஹாரிகாவிற்கோ அசராமல் நின்றிருந்தாள்.

அவளின் தைரியத்தைக் கண்டவன், அவளின் உடலோடு உரசியபடி நின்று, “நீ சொல்ற வார்த்தைக்கான மீனிங் என்னன்னு சொல்லட்டுமாடி?” அவன் கேட்க, நிஹாரிகாவிற்கோ திக்கென்று இருந்தது.

பழைய நினைவுகளும், சில்மிஷங்களும் நினைவில் வர பெண்ணவளிற்கோ மனம் ஓர் இடத்தில் நிற்காமல் நினைவுகளில் அலைந்தது.

“என்னடி ஜிலேபி பதிலையே காணோம்?” ரிஷ்வந்த் கேட்ட நொடி, லிப்ட் இயங்கியது.

அவளை விட்டவன், “ரொம்ப சீக்கிரமா ஆன் பண்ணிட்டாங்க என்னோட
பவுன்சர்ஸ்…” சாதாரணமாக அவன் சொல்ல, அவளிற்குப் புரிந்தது லிப்ட் நின்றதிற்குக் காரணம் யாரென்று.

கீழ் தளத்திற்கு வந்த லிப்ட் நின்று கதவு திறக்கப்பட, “ஹேட் யூ கம்ப்ளீட்லி” என்றவள் தனது கோபத்தை வேக எட்டுக்களாக வைத்துச் செல்ல, நந்தினியோ தன்னைத் தடுத்து வைத்திருந்த ரிஷ்வந்தின் பவுன்சர்ஸ் அவளை விடுவித்தவுடன் நிஹாரிகாவைத் தேடி ஓடி வந்தாள்.

நிஹாரிகா கோபமாக வருவதைக் கண்டவள் அவளுடன் அமைதியாக பின்னே நடக்க, மனதில் உறுத்திய உணர்த்தலில் திரும்பினாள். ரிஷ்வந்த் தான் நிஹாரிகாவை விழியெடுக்காமல் பார்வையால் படம் பிடித்துக் கொண்டிருந்தான்.

நிஹாரிகாவின் முகத்தையும் லிப்ட்டினுள் இருந்து வெளியே வந்த ரிஷ்வந்தின் முகத்தையும் கண்ட நந்தினிக்கு ஏதோ புரிந்தும் புரியாமலும் இருந்தது.

அலுவலகத்தில் இருந்து நிஹாரிகா வெளியே வர, நவ்தீப் கொனிடெல்லா வந்து சேர்ந்தான். அர்ஜூன் கொனிடெல்லாவின் ஒரே மகன்.

“ஹாய், நிஹாரிகா” என்றபடி வந்தவன் அவளை கேசுவல் ஹக் செய்து விடுவிக்க நிஹாரிகாவின் மனதிலும், வயிற்றிலும் எப்போதும் இல்லாத ஒன்று சூழ, தன்னையும் மீறி திரும்பி அலுவலகத்தின் வாயிலைப் பார்த்தாள்.

ரிஷ்வந்த் இருவரையும் தீப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

‘உன் மனசு சுத்தமா இருக்கும் போது உனக்கு எதுக்கு பயம்?’ நிஹாரிகாவின் மனம் சத்தம்போட எந்த தடுமாற்றமும் இல்லாமல் நவ்தீப்பிடம் பேசினாள்.

“உனக்காக நான் ஏன்டா பேசாம இருக்கணும்?” நினைத்தவள் நவ்தீப்புடன் சிரித்துப் பேசினாள்.

கடலின் அலைபோல ஆக்ரோஷமாக எழுந்த கோபத்தை அடக்கிய ரிஷ்வந்த் தனது மெர்சிடிஸ் பென்ஸ் ஜீஎல்எஸில் பறக்க, அவனின் நடையும் வேகமுமே நிஹாரிகாவிற்கு அவனின் கோபத்தை பறைசாற்றியது.

“நிஹாரிகா, அது ரிஷ்வந்த் தானே?” நவ்தீப் வினவ,

“ம்ம், எஸ்”, “ஓகே நவ்தீப், ஸீ யூ லேட்டர்” என்றவள் தனது ஜாக்குவாரை
எடுத்துக்கொண்டு பறக்க, நவ்தீப்பிற்கு ஏதோ புரிவது போலிருந்தது. நிஹாரிகாவை மணக்க நினைத்துக் கொண்டிருப்பவனிற்கு ரிஷ்வந்தின் வருகை மனதை ஊசலாட வைத்தது.

இன்றைய சம்பவத்தில் நிஹாரிகாவிற்கு தலைவலி வந்துவிட நந்தினியை அலுவலகத்தில் இறக்கிவிட்டவள், வீட்டிற்குக் கிளம்பினாள்.

நிஹாரிகாவை அடைந்தே தீருவேன் என்ற வெறியில் ஒருவன், அவள் எனக்குத் தான் என்ற மதர்ப்பில் மற்றொருவன்.

பெண்ணின் மனதையறியாமல் இருவர் ஆசையை வளர்த்து வைத்திருக்க, ஜாம்பவானின் ராஜதந்திரத்தின் சூழ்ச்சியில் பெண்ணவள் தடுமாறி, நரியின் தந்திரங்கள் ஜாம்பவானை சரிய வைத்து வலிமை பெற போரில் வாகை சூடப்போவது யாரோ?