நிஹாரி-22

IMG-20211003-WA0016-6d675c5b

நிஹாரி-22

கடந்த காலத்தில் இருந்து வெளியே வந்த நிஹாரிகாவின் மனதில் அத்தனை வலிகள். பிரிவின் வலியையும், ஊடலின் மொழியையும் முழுதாய் அறிந்த பாவை அவள். இன்று நினைக்கும்போதும் அந்த நிகழ்வின் தாக்கம் சிறிதும் குறையாமல் அவளை அடித்தது. அன்று போல ஏற்க முடியாமல் அதே அதிர்வும், அதிர்ச்சியும் மனதுக்குள்.

அவன் நல்லவன் தான். பண்பானவன் தான். ஆனால், நிஹாரிகாவின் மேலிருந்த அதீத காதலும், அவனுக்கு பணத்தால் நேர்ந்த சில கொடுமையான இக்கட்டுகளும், நவ்தீப்பின் சீண்டலால் விழைந்த கோபமும், நிஹாரிகா தன்னிடம் பொய் உரைக்கிறாள் என்ற ஆங்காரமும், அவனை அவனாய் இருக்கவிடாமல் அன்று மிருகமாய் மாற்றியிருந்தது.

சுவரை வெறித்தபடி அமர்ந்திருந்தவளின் அருகில் வந்தமர்ந்தான் ரிஷ்வந்த். இருவரின் மனதிலும் விவரிக்க முடியாத பாரங்கள் அழுத்திக் கொண்டிருந்தது. திருமணம் என்ற ஒன்றை இருவரும் மனதார ஏற்றுக் கொண்ட போதிலும், சடங்குகள், சம்பிரதாயங்கள் அனைத்திலும் ஊடலை ஒதுக்கி, லயித்து, மெய்மறந்து இருந்த போதிலும், இப்போது தனிமையில் இருவருக்கும், ‘ப்ச்’ என்ற சலிக்கும் மனநிலையே.

அன்று இருவரின் உண்மையான காதலுக்கு கிடைத்த பரிசு, ‘பிரிவு’. ஆனால், அன்பைக் கொட்டித் தீர்த்து பரிமாறிய காதலிலும், நட்பிலும் பொக்கிஷமாய் இருவரின் நினைவுகள் மட்டும் நீங்காமல் இருந்தது.

அந்த ஒரு நாள் மட்டும் வராமல் இருந்திருந்தால்?

அல்லது அந்த நாளையே இருவரின் நினைவில் இருந்து அழிக்க முடிந்தால்?

ரிஷ்வந்த் தன் அருகில் அமர்ந்திருந்த நிஹாரிகாவை திரும்பிப் பார்த்தான். அவளோ, இருந்த நிலை மாறாமல் சிந்தனையில் உழன்று கொண்டிருக்க, அவளின் கரத்தைப் பற்றியவன், அதில் சிறிது அழுத்தத்தைக் கொடுக்க, அதில் நிகழ்காலத்தை அடைந்தாள் ரிஷ்வந்தின் காதல் மனைவி.

முதல் இரவில் தன் கரத்தைப் பற்றிய கணவனின் கரத்தைப் பார்த்து அவளுக்கு நாணமோ, பூரிப்போ வரவில்லை. மாறாக, ‘எந்த உரிமையில் கையை பற்றுகிறான்’ என்ற ஆத்திரம் தான் எழுந்தது. அன்று அவனின் பேச்சும், செயலும் ஞாபகத்தில் வர, வெடுக்கென்று அவனின் கரத்தை உதறித் தள்ளினாள் நிஹாரிகா.

ரிஷ்வந்த் எதிர்பார்த்தது தான். அவன் அணைப்பதற்கோ இல்லை, அவளை அடிமை படுத்துவதற்கோ அவளின் கரத்தைப் பற்றவில்லை. ஆறுதலாகத் தான் அவளின் கரத்தைப் பற்றினான். அவள்தான் ஏற்க தயாராக இல்லை. ‘அவனின் மீது அவளுக்கு இல்லாத கோபங்களா?’. எல்லாம் அவனாகத் தேடிக் கொண்டது.

அவனின் கரத்தை உதறியவள் எழுந்து நகரப் பார்க்க, அவளின் கரத்தை இறுகப் பற்றினான் அவளின் கணவன். அத்தனை அழுத்தம் அதில். ஆனால், அத்தனை அழுத்தமாய் அவன் அவளைப் பிடித்திருந்தும் சிறிதும் அது அவளுக்கு வலியைக் கொடுக்கவில்லை.

ஏனோ அவனின் கரம் பட்டதும் அவளுக்கு காலையில் இருந்து நடந்த திருமணச் சடங்குகளும், அதில் இருவரும் சுற்றோரை மறந்து இருந்ததும், மாங்கல்யத்தை அவன் அணிவிக்கும் போது தான் சிந்திய கண்ணீரும், அவன் இதழ் கொண்டு கொடுத்த நெற்றி முத்திரையும் என அனைத்தும் ஞாபகத்தில் வர, இன்னும் அவளின் கோபம் அதிகம் ஆகியது. இவன் சண்டையிடாமல் இருந்திருந்தால், இன்று இன்னும் எவ்வாறு இருந்திருக்கும் என்று நினைத்த கோபம் அது.
இன்று தன்னவனை ஒரு வழி செய்துவிடும் முடிவில் இருந்தாள் அவள்.

கடுகடுப்போடு நிஹாரிகா திரும்பி அவனின் முகம் பார்க்க, “ஸாரி டி” என்று அவள் சொன்னது தான் தாமதம், அவனை பளாரென அறைந்திருந்தாள் நிஹாரிகா.

அவள் அறைந்த அறையில் அவனின் ஈகோவும், ஆண் என்கிற ஆங்காரமும் இயல்பாய் எழத்தான் செய்தது. அது நம் ஆண்களுக்கே உண்டான மேனுபேக்சர் டிபக்ட் அல்லவா. எதுவும் செய்ய இயலாது. அதே சமயம் சக்கரவர்த்தி அன்று சொன்ன உண்மைகளும், நிஹாரிகாவிடம் தான் நடந்து கொண்ட நிகழ்வும் அவன் ஞாபகத்தில் வர, கண்களை கடினத்துடன் மூடி ரிஷ்வந்த் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர,

“ஏதாவது பேசு.. அதான் நல்லா பேசுவியே.. உனக்கு அதுக்கு சொல்லியா தரணும்” நிஹாரிகா நிதானமாக அதேசமயம் அழுத்தமாக வினவ, அவளது இடது கையை இன்னும் அவன் விடவே இல்லை. ஒருமுறை அவளது கரத்தை விட்டுவிட்டு பட்ட துயரமே போதும் என்றிருந்தது அவனுக்கு. இன்னொரு முறை விளையாட்டுக்குக் கூட, அவன் அதை முயற்சி செய்து பார்க்கும் நிலையில் இல்லை.

அவளுமே அவனிடம் இருந்து தன் கையை உருவிக்கொள்ள முயற்சி செய்யவில்லை.

அமைதியாக தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வையை சளைக்காமல் தாங்கி நின்றிருந்தவள், ஏதோ தோன்ற அவனை ஊடுருவி கவனித்தாள். எதையோ அவன் அதரங்கள் சொல்லத் துடிக்க, அவனின் முகமோ இறுக்கமாகவும், அதை சொல்ல முடியாத காரணத்தால் தவிப்போடும் இருந்தது.

தன்னவளின் பார்வை தன்னை துளைப்பதை உணர்ந்த ரிஷ்வந்த், அனைத்தையும் சிறந்த நடிகனாய் கட்டுக்குள் கொண்டு வந்து, பற்றியிருந்த அவளின் கரத்தை தன்னை நோக்கி இழுத்தவன், ஆசையாய் அவளின் உள்ளங்கையில் மென்மையாய் தன் இதழைப் பதிக்க, இத்தனை நேரம் கொதி நிலையில் இருந்த பெண்ணவளுக்கோ தன்னவனின் திடீர்ச் செயலில், உடலில் உள்ள அனைத்து பாகங்களிலும் சிலிர்ப்பு ஏற்பட்டு அதிரச் செய்தது.

உள்ளங்காலில் இருந்து ஏதோ உணர்வு எழுந்து உடல் முழுதும் பரவ, ஒரு விநாடி விழிகளை மூடியவள், கண்களைத் திறக்க ரிஷ்வந்த் தன்னவளை பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தான். இத்தனை நாள் சினிமாத் துறையில் இருந்தும் அவன் எந்தப் பெண்ணையும் தன்னிடம் நெருங்க விட்டதில்லை. ஏன் அந்த டிபார்மெண்ட் பக்கம் கூட செல்ல மாட்டான் அவன்.

சினிமாவில் நடிக்கப் போகிறேன் என்று ரிஷ்வந்த் சொன்னபோது, ‘நடத்தையில் எந்தத் தவறும் வந்து விடக்கூடாது’ என்று கயல்விழி மகனிடம் சத்தியம் வாங்கியிருந்தார். மகனின் மேல் அளவு கடந்த நம்பிக்கை அவர் வைத்து இருந்தாலும், கணவர் வாயிலாக நிறைய நிறைய விஷயங்களை அதில் கேள்விப்பட்டவருக்கு, மகன் அந்த துறைக்குள் நுழைவது பயமாகத்தான் இருந்தது.

அன்னையிடம் அன்று மனதுக்குள் சிரித்துக்கொண்டே தான் சத்தியத்தை செய்தான். அவனுக்குத் தெரியும் எவள் வந்தாலும் தான் மயங்கப் போவதில்லை என்று. அதற்கு காரணம் நிஹாரிகா மட்டுமே. ‘ஏன் எங்களுக்கு எல்லாம் கற்பு இல்லியா?’ என்று நினைத்துக் கொண்டு தான் அன்று அன்னையிடம் சத்தியத்தை செய்து கொடுத்தான்.

அதன்பிறகு அவன் சந்தித்த பெண்கள் ஏராளம். குணங்கள் பல விதம். ஏன் அவனை படுக்கைக்கு நேரடியாக அழைப்பு விடுத்த நடிகைகளும் இருக்கின்றனர். ஆனால், அனைவரிடமும், “ஸாரி, ஐம் எங்கேஜ்ட்” என்று நகர்ந்துவிடுவான். கல்லூரியில் பார்த்த பிறகு தன்னவளை டிவியிலும், புகைப்படத்திலும் ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது எல்லாம் அவனது காதலும், கோபமும் சரி சமமாக எகிறிக் கொண்டுதான் இருந்தது.

என்றோ ஒரு நாள் ஒன்று சேர்ந்துவிடுவோம் என்ற குருட்டு நம்பிக்கையோடு, அவன் இத்தனை வருடங்கள் தன்னிடம் யாரையும் நெருங்கவிடாது இருக்க, இன்று தான் அணிவித்த மாங்கல்யம் புடவைக்கு வெளியே பளபளப்புடன், அதுவும் அவளின் கச்சிதமான அழகுக்கு மேல் இருக்க, அவனின் பார்வை ஒரு நிமிடம் மாறியது என்னமோ உண்மை தான்.

அவனின் பார்வை தடுமாற்றத்துடன், அவள் விழிகளுக்கும் அவள் அங்கத்திற்கும் என்று அலைபாய, ரிஷ்வந்தோ எங்கே கண்டுகொள்வாளோ என்று பார்வையை மேலேயும் கீழேயும் மாற்றிக்கொண்டே இருக்க, கணவனின் பார்வை செல்லும் இடத்தை உணர்ந்த நிஹாரிகாவுக்கு மூச்சடைத்தது.

அவனின் கையை உறுவியவள், “பொறுக்கி” என்றுவிட்டு அந்த பெரிய அறையை ஒட்டியுள்ள லிவ்விங் அறைக்குள் நுழைய முற்பட,

“ஏய், நில்லுடி” சிறிது அதட்டலோடு எழுந்த ரிஷ்வந்த், அவளின் தோளைத் தொடச் செல்ல, அதை நிஹாரிகாவின் உள்ளுணர்வு புரிந்து கொண்டதோ என்னமோ, சடாரென திரும்பி சுவற்றோடு ஒன்றியபடி நின்றாள். பழைய நினைவுகள் அவளுள். 

கண்களில் சிறிது அச்சத்தையும், அதரத்தில் அழுத்தத்தையும், முகத்தில் கோபத்தையும் என்று புரியாத புதிராக மனைவி தன்னை நோக்கி நின்றிருந்த விதத்தில் குழம்பிய ரிஷ்வந்த், ‘எதுக்கு இப்படி நிக்கறா?’ என்று யோசிக்க, அன்றைய நிகழ்வு அவனுக்கும் நினைவில் வந்தது. அவன் ஆத்திரத்தில் சென்று அவளை பிடிக்க நினைத்து, அவளுடைய ப்ளவுஸ் பின்புறம் முழுதாகக் கிழந்தது.

முகம் சொல்லெண வேதனையைத் தத்தெடுக்க, “நிஹி, அன்னைக்கு நான் வேணும்னு பண்ணலடி. ஏதோ கோபத்துல கை தவறி..” அவன் சொல்லி முடிக்கும் முன், ‘பேச வேண்டாம்’ என்பது போல் கை உயர்த்தித் தடுத்தவள்,

“நீ எதுக்கும் காரணம் சொல்ல வேணாம். அதுவும் இத்தனை வருஷத்துக்கு அப்புறம்” என்றவள் மீண்டும் உள்ளே நகரப் பார்க்க, அவளின் கையை விடாப்பிடியாக பிடித்தான் ரிஷ்வந்த். இன்று பேசியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் அவன்.

அவளின் கரத்தைப் பற்றியவன், அவளை இழுத்து வந்து படுக்கையில் அமர வைத்து, அவளின் கரத்தை சுற்றிப் பிடித்துக்கொண்டு, அவள் எழ முடியாதபடி அமர்ந்து கொண்டான்.

“இப்ப எதுக்கு ட்ரை பண்ற நீ?” நிஹாரிகா அவன் நெருங்கி அமர்ந்ததில், கடுமையுடன் சினம் துளிர்க்கக் கேட்க, முதலில் புரியாமல் பார்த்தவனோ பின்பு புரிந்துகொண்டான்.

“ச்சீ. டர்ட்டி பெல்லோ. உனக்கு எப்பவுமே அதே நினைப்பு தான்டி. ஆனா, நான் அப்படி இல்ல” என்று இலகுவாக சிரித்துக்கொண்டே பேசியவனைக் கண்டு அவள் முறைக்க மட்டுமே முடிந்தது. மேலும் அவளுக்கு எரிச்சலாக இருந்தது.

“சரி முறைக்காத.. இங்க பாருடி” என்று பேசியபடியே அவளைப் பார்த்தபடி ஒரு காலை மடித்து பெட்டில் வைத்துக்கொண்டு இயல்பாக அவன் பேசத் தொடங்கினான். “நான் அன்னிக்கு பேசுனது ரொம்ப ரொம்ப தப்பு தான் நிஹி. உன்கிட்ட யூஸ் பண்ண வோர்ட்ஸ் தப்பு. உன்னை ஹர்ட் பண்ணது தப்பு. நீ என்ன சொல்ல வர்ற அப்படின்னு கேக்காம போனது தப்பு. அதுக்கும் மேல கோபத்துல உன்னோ..” என்று நிறுத்தியவன் அவளைப் பார்க்க, அவளோ அவனை வெட்டவா குத்தவா என்ற நிலையில் முறைத்துக் கொண்டிருந்தாள்.

“ஸாரிடி, ஜிலேபி” ரிஷ்வந்த் அவளின் பூக்கரங்களை தன் கரங்களுக்குள் புதைத்தபடி மன்னிப்பை வேண்ட, அவளோ இறங்கி வர சிறிதும் தயாராக இல்லை.

“தயவு செஞ்சு அந்த வார்த்தையை சொல்லாத ரிஷ்வந்த். எனக்கு எரிச்சலா இருக்கு. இனி சொன்ன கெட்ட வார்த்தைல திட்டிடுவேன்” அவள் கோபத்தோடு முகத்தைத் திருப்பிக் கொள்ள, அவனுக்கு என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று தெரியவில்லை.

“சரி. அட்லீஸ்ட் ஸாரி கேக்கறேன்” என்றிட அவனை எரித்துவிடுவது போல பார்த்தவள், “அதைத்தான் சொல்லாதேன்னு சொன்னேன்” என்று கத்தியவள், “எல்லாம் பண்ணி சாகடிச்சுட்டு.. ஈசியா சாரின்னு முடிச்சிடுவானுக” என்று முணுமுணுத்தாள்.

அவளின் பதிலில் பொங்கி வந்த சிரிப்பை அடக்கியவன், தொண்டையோடே அதற்கு டாடா என்று உள்ளுக்குள் அனுப்பியிருந்தான். அவள், ‘ஜிலேபி’ என்று சொல்ல வேண்டாம் என்று எரிச்சல் படுகிறாள் என்று நினைத்தவனுக்கு, அவளின் பதில் மனதில் பன்னீரை சாரலாய் தெளித்தது போல ஆகியது.

“சரி சொல்லலை. அட்லீஸ்ட் நான் சொல்றதைக் கேளுடி. எல்லாம் உங்கிட்ட சொல்லணும் போல இருக்கு. உனக்கு பிடிக்கலைனாலும் கேளு” என்றவன் அவளை மேலும் அருகில் இழுத்து, கதை சொல்வது போல அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஒப்பிக்கத் தொடங்கினான்.

அதாவது அன்று அவள் சென்றபின் தொடங்கி அவளை மீண்டும் அர்ஜூனின் அலுவலகத்தில் சந்திக்கும் முன் வரை அனைத்தையும் மறைக்காது கூறியிருந்தான் அவளவன். அனைத்தையும் கூறி முடித்தவன் தன்னவளின் முகம் பார்க்க அவளோ செந்தணலை முகத்தில் வைத்தது போல இருந்தாள். அத்தனை கோபம்.

அவனை நேர்ப் பார்வை பார்த்தவள், “உனக்கு பெத்தவங்க கிட்ட கூட எப்படி பேசணும், எப்படி நடந்துக்குணும்னு தெரியாதா?” என்று திட்டியவள், “ச்ச” என்று தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக அமர்ந்திருந்தாள்.

“உன்னை வளர்த்த எவ்வளவு கஷ்ட பட்டிருப்பாங்க.. அதுவும் நீ எவ்வளவு செலவு பண்ணுவேன்னு எனக்குத் தெரியும். எப்பாவது உனக்கு உன் அப்பா பணமோ இல்ல நீ கேட்டது வாங்கி தராம இருந்திருக்காரா. அவங்க கஷ்டத்தை உங்கிட்ட காட்டாம, உன்னை சந்தோஷமா தான் வளத்திருங்காங்க. எந்த ஒரு குறையும் வைக்காம. அதுக்கு நீ அவங்களுக்கு நல்லா பண்ணியிருக்க” நிஹாரிகா ஒவ்வொரு வார்த்தையையும் தெளிவாக சொல்லித் தன்னவனின் தவறைக் குத்தினாள்.

“நான் வேணும்னு..” ரிஷ்வந்த் தொடங்க,

“இந்த கதையெல்லாம் வேற யாராதுகிட்ட சொல்லுடா. உன்னைப் பத்தி தெரியாது பாரு. எங்கிட்ட பேசிட்டு போய், அந்த மாடுலேஷன் மாறாம பேசியிருப்ப அங்க” நக்கலாக உரைத்தவள், “ஹம்! அவங்க இரண்டு பேரும் ரொம்ப நல்லவங்க. அட்லீஸ்ட் அதுக்கு அப்புறமாவது உன் அப்பா அம்மாவை புரிஞ்சுக்கிட்டியே ரிஷ்வந்த்” என்றாள். அவளின் மனமோ இதற்குத் தானும் ஒரு காரணமோ என்று சிறிதாக உறுத்தத் துவங்கியது.

மேலும், அவளை சிந்திக்க விடாமல் தடுத்தது, ரிஷ்வந்த் அடுத்து கேட்ட கேள்வி, “சரி நான் இப்ப புரிஞ்சுகிட்டேன். நீ எப்ப புரிஞ்சுக்க போற?” ரிஷ்வந்த் சத்தமில்லாமல் அவளின் தலையில் கேள்வியை இடி போல இறக்க, அவளோ அவனை திருப்பி மற்றொரு கேள்வி கேட்டாள்.

“ஓஹ்! அன்னிக்கு என்னோட சேர்த்து என் அம்மாவையும் திட்டீட்டு உன்னால எப்படி இப்படி கேக்க முடியுது?” நிஹாரிகா கேட்க அவனின் பொறுமையோ சற்று காற்றில் பறக்க ஆரம்பித்தது.

“ஏய், ஏட்டிக்கு போட்டி பேசாம.. நான் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லு” ரிஷ்வந்த் அதட்ட,

“என்ன? நான் எதுக்கு சொல்லணும்?” அடிக்குரலில் சீறியவள், “அதுவும் உனக்கு சொல்ல முடியாது..” என்று பிடிவாதம் செய்ய, ரிஷ்வந்திற்கு திருமணம் செய்து ஒரு இரவே முடியாமல் முழி பிதுங்கியது.

“நிஹாரிகா உனக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியாது..” அவன் எடுத்துச் சொல்ல, அவளோ அந்த விஷயத்தில் யாரையும் உள்ளே நுழைக்க விரும்பவில்லை. ஒருவேளை எந்த ஊடலும் இல்லாமல் நடந்திருந்த திருமணம் என்றால், ரிஷ்வந்த் சொல்வதுக்கு செவி சாய்த்திருப்பாளோ என்னமோ. இப்போது அவன் மேல் இருக்கும் கோபத்தில், அவள், அவன் சொல்வது எதையும் கேட்கத் தயாராக இல்லை.

“உனக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியுமா. நடந்ததை என் கண்ணால பாத்தவ நான்” என்று சொல்லி முடித்தவளுக்கு தொண்டை அடைத்து வலி எடுத்தது. பதினான்கு வயதில் அல்லவா அதை நேரில் கண்டாள். இப்போது நினைத்தாலும் அவளுக்கு வியர்க்கத் துவங்கி, நா உலர்ந்து, உள்ளுக்குள் படபடத்தது.

அறியாத வயதும் என்று சொல்ல முடியாது, எல்லாம் தெரிந்த வயது என்றும் சொல்ல முடியாது. எல்லாம் தெரிந்தும் புரியாத வயது அப்போது அவளுக்கு. நடந்ததைக் கண்டு அலறி ஓடியது அவளுக்குத் தானே தெரியும்.

ஏனோ சொல்ல முடியாத வலி மனதுக்குள் பரவ, அந்நிகழ்வு கோரமாய் மனதுக்குள் மீண்டும் ஓட, அவள் மறக்க நினைத்த அனைத்தும், கண் முன் ஒளிபரப்பு ஆகியது. ரிஷ்வந்தின் கரத்திற்குள் இருந்த அவளின் மென் கரங்கள் நடுங்கத் துவங்க, அவளுக்கு சிறிது வியர்க்கவும் ஆரம்பித்தது.

அவளின் நடுக்கத்தையும், நெற்றியில் அரும்பிய வியர்வையையும் கண்டவன், “நிஹி, என்னாச்சு? இங்க பாரு” என்று அவள் கன்னம் தட்ட உடலில் ஓடிய சிறிது நடுக்கத்துடன் கண்களை மூடிக் கொண்டவள், ரிஷ்வந்தின் கரத்தை இறுகப் பற்றிக் கொண்டாள்.

“நிஹி, இங்க பாரு. நான் உன் பக்கத்துல தான் இருக்கேன். நிஹி!” அவன் அவளைப் பிடித்து உலுக்க, மூச்சு வாங்க தன்னிலைக்கு வந்தவள், நான்கு வயது சிறுமியைப் போல விழிக்க, அருகில் இருந்த எம்பாஸ்ட் அன்டிக் ஜக்கை எடுத்தவன் தண்ணீரை நிரப்பி அவளுக்குத் தர, குடித்துவிட்டு நிமிர்ந்தவள், இப்போது முழுதாய் நிகழ்காலத்துக்கு திரும்பி இருந்தாள்.

ரிஷ்வந்தை முறைத்தவள், “இனிமேல் அது பத்தி என்கிட்ட பேசாத” என்று கோபப்பட, ரிஷ்வந்தோ அவளை வேறு திசைக்குத் திருப்ப எண்ணி, அவளை சீண்ட ஆரம்பித்தான்.

அவளை மேலிருந்து கீழே அளந்தவன், “அத பத்தி பேசல. அப்ப வேற எத பத்தி பேசறது?” ரிஷ்வந்த் கட்டிலில் அமர்ந்திருந்தவளின் முன் நின்றபடி குறும்பும், தாபமும் வழியக் கேட்க, அவனின் குரலில் சடாரென நிமிர்ந்தவள் அவனை முறைத்துத் தள்ளினாள்.

அவளை நோக்கி அவன் குனிய, அவள் பின்னே நகர, அவளின் இரு தோள்களையும் இறுகப்பற்றி சாயாமல் பிடித்துக்கொண்டவன், அவள் செவியின் அருகில் தன் மீசை ரோமம் உராய மெல்ல மெல்லச் சென்றான்.

“ப்ச்” அவன் மீசை ரோமம் அவள் செவி மடல்களில் சூடாக உராய்ந்து எழுப்பிய இன்ப அவஸ்தையில் நெளிந்தவள், நகரப் பார்க்க, அவனோ அவளை சிறிதும் நகரவிடவில்லை.

திறந்திருந்த ஜன்னல் கதவுகள் அதுவாகவே காற்றில் அடைத்துக் கொள்ள, நிஹாரிகா தன்னவனிடம் இருந்து விலகப் போராடியதில், அவள் கை பட்டு மெத்தையில் இருந்த ஏசி ரிமோட், அதுவாகவே தன் இயக்கத்தை ஆரம்பித்துவிட்டது.

ஜன்னல் கதவு அடைத்ததில் அறை முழுதும் மீண்டும் நண்பர்கள் வைத்துவிட்டுப் போன வாசனை திரவியம், அந்த சகல வசதிகளும் நிறைந்திருந்திருந்த அந்த மாஸ்டர் பெட்ரூமில் பரவ, ஃபேரி ட்ரீ லைட் (FAIRY TREE LIGHT) மட்டும் அந்த அறையில் நான்கு மூலைகளிலும் வைக்கப்பட்டிருக்க, அதிலிருந்து தெறித்துக் கொண்டிருந்த அடர் மஞ்சள் நிற ஒலி நிஹாரிகாவின் பொன் நிற மேனியில் படர்ந்து ரிஷ்வந்தை பித்தம் கொள்ள வைத்தது.

அதுவும் அவள் அணிந்திருந்த சிகப்பு நிற சேலையும், வெள்ளி நிற ஸ்லீவ்லெஸ் ப்ளவுஸும், சூடியிருந்த மல்லிகையும் அவனை எங்கெங்கோ இழுத்துச் செல்ல, “ஹே! தந்தூரி சிக்கன் மாதிரி செம ஹாட் அன்ட் செக்ஸியா  இருக்கடி” என்று அவள் செவியில் மோகம் வழிய, ஹஸ்கி குரலில் தாபத்தோடு கிசுகிசுக்க, நிஹாரிகாவுக்கோ அவனின் குரல் அத்தனை போதையைத் தந்தது.

அவளின் வெண் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன், அவளின் நறுமணத்தை நுகர்ந்து, சின்னச் சின்ன முத்தங்களை அங்கு பதிக்க, அவனைத் தள்ளிவிட்டு எழுந்தவள் அங்கிருந்த லிவ்விங் அறைக்குள் ஓடப் பார்க்க, ஒரே எட்டில் அவளைப் பிடித்தவன், மீண்டும் சுவற்றோடு சாய்த்து அவளை அணைத்தான். இம்முறை சற்று முரட்டுத்தனமாக. 

“போக விடுடா” என்றாள் குரலில் எரிச்சலைக் காட்டி.

“ஹே ஜிலேபி.. இன்னிக்கு ஹைதராபாத் பிரியாணி தருவேன்னு நினைச்சேன்டி. நீ குஸ்கா கூட தராம ஓடிருவ போலியே” அவள் சேலையில் இருந்து வெளியே தெரிந்த அவள் இடையில், விரல்களை வைத்து வீணை வாசித்தபடி அவன் கேட்க, அவளுக்கு அவன் செய்யும் செயல்களில் மோகம் கிளர்ந்து எழுந்தாலும், அவளின் மனம் இப்போது கொஞ்சம் கூட அவனிடம் கூடத் தயாராக இல்லை.

‘இது சரிப்பட்டு வராது’ என்று நினைத்தவள் அவனைத் தன்னிடம் இருந்து விருட்டெனத் தள்ளிவிட, அதேநேரம் அவள் மாராப்பில் அவன் கை வைத்திருக்க, அவள் தள்ளிய வேகத்தில் அவன் பின்னே நான்கடி நகர, அவன் கையோடேயே வந்திருந்தது புடவை முந்தானை மற்றும் மாராப்பும்.

“ஹே, என்னடி தள்ளிவிடற?” சிரித்தபடியே கேட்டவன், தன்னை நிலைப்படுத்திக் கொண்டு நிமிர, தன்னவள் நின்றிருந்த காட்சியில் பனியில் விழுந்த நீர்த்துளியாய் உறைந்துவிட்டான் நிஹாரிகாவின் கணவன். பெண்ணின் மேனியில் இந்தனை விந்தையா என்றிருந்தது அவனுக்கு.

அவள் மேலங்கத்தை மறைக்கும் புடவை அவன் கையில் இருக்க, ரிஷ்வந்தின் விழிகள் நிஹாரிகாவின் செழுமையை மேய, காதலனாகவே இருந்தாலும், இப்போது கணவனே ஆனாலும், பெண்ணுக்கே உரிய படபடப்பு எட்டிப் பார்க்க, ஒரு கரத்தால் மார்பை மூடியவள் மற்றொரு கரத்தால் சேலையைப் பிடித்து, “கொடு” என்றாள்.

அவளின் நாணத்தையும் தவிப்பையும் தன் இரு விழிகொண்டு அணுஅணுவாய் ரசித்தவன், அவளைப் பார்த்தபடியே கையில் இருந்த புடவையை தன் கரத்தில் அப்படியே சுற்ற, நிஹாரிகாவோ அவனை முறைத்தாள். அவன் இப்படியே சுற்றிக்கொண்டு போனால் ஒன்று முழுப்புடவையும் அவன் கையில் போய் சேரும், அல்லது அவள் அவனிடம் செல்ல நேரிடும்.

அவளால் மேலே யோசிக்கக் கூட முடியவில்லை. அவனின் விழிகள் வேறு அவளை கொய்து கொண்டிருக்க, அவனின் அருகில் அவன் புடவையை கரத்தில் சுற்ற சுற்ற எதுவும் பேசாமல் சென்றாள். அவன் அவள் இடையை வளைத்து கழுத்தில் மீண்டும் முகம் புதைக்க தன்னிலை மறந்தாள். அதுவும் ஓரிரு நிமிடம் தான்.

அவள் அவனை விட்டுப் பிரிய எண்ணும் முன் மீண்டும் அவளின் இதழை ராட்சசனாய் பற்றியிருந்தான் ரிஷ்வந்த். எத்தனை நாள் கனவு இது அவனுக்கு. அவனும் அவளும் மட்டும். அவர்களது அறையில். மூச்சு முட்டும் அளவு அவளின் இதழின் சுவையைக் கண்டவன், அவளை ஆசுவாசப்படுத்த இடைவெளி கொடுத்து மீண்டும் அவளின் இதழ் அருகே குனிய, அத்தனை நேரம் இல்லாத மொத்த பலமும் சேர்ந்து ரிஷ்வந்தை தள்ளிவிட்ட நிஹாரிகா, லிவ்விங் அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டாள்.

மனைவியின் செயலிலும், அவள் மாராப்பை இழுத்துப் போர்த்தியபடி ஓடிய நிலையிலும் அவனுக்கு சிரிப்பே வந்தது. ‘இதுக்கேவா டி?” என்று மனதுக்குள் நினைத்தவன், கட்டிலில் சென்று உல்லாசமாய்ப் படுத்தான். சிறிதுநேரம் நிஹாரிகாவை அவள் அன்னையிடம் பேச வைக்க சில திட்டங்களை வகுத்தவன் அதே யோசனையுடன் உறங்கியும் போனான்.

ஆனால், நிஹாரிகாவுக்குத் தான் தூக்கம் பறிபோனது. அவனின் காதலையும், நெருக்கத்தையும் ரசிக்கவும் முடியாமல், விலக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். சற்றுமுன் நடந்த நிகழ்வு அவளுக்குள் ஆயிரம் எரிமலைகளை வெடிக்கச் செய்திருந்தது. உதடு வேறு அவன் பல் பட்டு எரிந்தது.

ஆழ்ந்த மூச்செடுத்தவள், ‘நிஹி, கன்ட்ரோல் கன்ட்ரோல். அவன் ஒரு செங்கல் சைகோ. எப்ப எப்படி மாறுவான்னு தெரியாது. இப்ப ஏத்துக்க முடியாது தான். ஆனால், அவனை சும்மாவும் விடாத’ என்று தனக்குத் தானே பேசிக் கொண்டவள் லிவ்விங் ரூமில் இருந்த ஷோபாவில் உறங்கியும் போனாள்.

அடுத்த நாள் காலை எழுந்தவள், கதவைத் திறந்து எட்டிப் பார்க்க ரிஷ்வந்தோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். ‘தூங்கறியா.. இரு உன்னை என்ன பண்றேன்னு பாரு’ என்று மனதுக்குள் கருவிக்கொண்டவள், படுக்கை அறைக்குள் புகுந்து அங்கிருந்த அனைத்தையும் உருட்ட, அவள் எழுப்பிய சத்தத்தில் எழுந்தவன் கண்களை மட்டும் திறந்து பார்க்க, இடுப்பில் கை வைத்து நின்றிருந்தவளை பார்த்தவனின் கண்கள் இடுங்கியது.