நிஹாரி-27

IMG-20211003-WA0016-20ec542b

நிஹாரி-27

“நீ என்ன சொல்ற.. விளையாடாத?” நிஹாரிகா ரிஷ்வந்த் சொன்னதை நம்ப இயலாமல் சிறிது அதிர்ச்சியோடும் சிறிது அச்சத்தோடும் வினவ, அவனோ கூலாக தனது ஏர் பாட்ஸை எடுத்து, ஒன்றை தன் செவியில் மாட்டிக்கொண்டு, மற்றொன்றை நிஹாரிகாவின் செவியில் மாட்டினான்.

“நான் என்ன கேக்கறேன்.. நீ என்ன பண்ற?” நிஹாரிகா பொறுமையற்று அவன் கூறியதை நம்ப இயலாமல் மீண்டும் வினவினாள். இவன் சொல்வது உண்மையென்றாலும் அது சாத்தியமா என்றிருந்தது நிஹாரிகாவுக்கு.

“எதுக்குடி இவ்வளவு பதட்டம்? வா ஜாலியா போயிட்டு வருவோம்” என்றவன் அவள் கைகளைப் பிடிக்க, “ஒரு நிமிஷம்” என்றவள் வாஷிங் மெஷினில் இருந்த தன் உடைகளை எடுத்து, பால்கனியில் உள்ள கயிற்றில் காயப்போட்டு விட்டு குளியலறைக்குள் புகுந்தாள்.

இரு நிமிடத்தில் வெளியே வந்தவள், தனது அலைபேசியை சார்ஜரில் இருந்து எடுக்க, ரிஷ்வந்தோ பொறுமையிழந்து போனான். “நிஹி சீக்கிரம் வா.. டைமாச்சு” அவன் வரவேற்பறையில் இருந்து கத்த, ‘இப்ப என்னவாம் இந்த பரக்காவட்டிக்கு’ என்று நினைத்தவள் ஓடிக் கொண்டிருந்த மின் விசிறியையும், அறைக்குள் மிதமாக கசிந்து கொண்டிருந்த இரவு விளக்கையும் அணைக்க மறந்து, கணவன் கூப்பிட்ட குரலுக்கு அவனைத் திட்டியபடியே ஓடினாள்.

வெளியே வந்தவளை மேலிருந்து கீழ் பார்த்தவன், “ம்ம், போலாம்” என்றுவிட்டு முன்னே செல்ல, நிஹாரிகாவுக்குத் தான் பதட்டமாக இருந்தது. ‘எவ்வளவு தைரியம் இவனுக்கு..’ என்று மனதுக்குள் ரிஷ்வந்தைத் திட்டியவள், அவனின் தைரியத்தைக் கண்டு வியக்கவும் தவறவில்லை.

ரிஷ்வந்தோ, ‘நான் ஏதோ போருக்கு கூப்பிட்ட மாதிரி ரொம்பத் தான் பிகு பண்றா’ என்று நினைத்தவன், கடகடவென்று படிகளில் உற்சாகமாக இறங்கினான்.

எத்தனை நாள் ஆயிற்று அவன் வெளியில் சுதந்திரமாக, தன் முன் கேமிரா இல்லாமல் சுற்றி. தன்னை உயர்த்திய நடிப்பின் மேல் ரிஷ்வந்துக்கு ஆர்வமும், காதலும் இருந்தாலும், படிப்பிடிப்பைத் தவிர எங்கு சென்றாலும் ஊடகங்களின் கேமிரா அவனை சுற்றுவது அவனுக்கு மிகுந்த எரிச்சலைக் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு விஷயம்.

பின்னே, ஒருவன் சாப்பிடுவதைக் கூட, ‘இந்த நடிகர் என்ன சாப்பிட்டார் தெரியுமா?’ என்று போட்டால் யாருக்குத் தான் சலிப்புத் தட்டாது. மேலும், யாருடனும் மனம்விட்டு பேச முடியாத அளவுக்கு அவனுக்கு வேலைகள் இருந்துகொண்டே இருந்தது. அதுவும் பெண் தோழிகளிடம் சுத்தம். முக்கியமாக சக்தி, பிருந்தா, அபர்ணா ஆகியோரிடமே அவனுக்கு பொதுவில் பேச இயலாத நிலை. எவனாவது சும்மா இருக்காமல், வதந்தி அது இது என்று எழுதிவிட்டால் என்று தோழிகளின் மேல் அக்கறை கொண்டவன், அவர்களை சந்திப்பதே ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என்ற நிலையில் இருந்தது.

அதுவும் கவின், அன்பு, தமிழ் மூவரும் எங்காவது டீ குடித்துவிட்டு வாட்ஸ் ஆப்பில் ஸ்டேடஸ் போட்டால் கூட முடிந்தது. ரிஷ்வந்திற்கு தான் பற்றிக் கொண்டு வரும். என்னதான் தற்போது ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் சுத்தம் சுகாதாரத்துடன், ஹைபையாக உண்டாலும், ரிஷ்வந்திற்கு அது வயிற்றை நிரப்பினாலும் மனம் நிரம்பியதில்லை. அதுவும் தன்னவள் உடன் இல்லாத போது அவனுக்கு எதையும் ரசிக்கும் மனம் இல்லையே.

ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் மெல்லிய இசைகளுக்கு மத்தியில், அமைதியாக அமர்ந்து உண்பவர்களுக்கு இடையே, அவன் மனம் நண்பர்களுடன் கையேந்தி பவனில், சுடச்சுட வாகனங்களின் இரைச்சல்களுக்கு மத்தியில், சத்தமாக பேசிச் சிரித்துக் கொண்டு உண்டதை நினைத்து, மனம் ஓடுவதை அவனால் தடுக்க முடியவில்லை.

அப்படியிருக்க இன்று கிடைத்த வாய்ப்பை அதுவும் தன்னவளுடன் கிட்டிய தனிமையை அவன் வீணாக்குவானா என்ன?

“நீ முன்னாடி போய் நில்லு.. நான் வந்திடறேன்” என்று அவன் சொல்லிவிட்டுச் செல்ல, நிஹாரிகாவுக்கு, ‘ஏடுகுண்டாலவாடா யார் கண்ணுலையும் படாம வீட்டுக்கு வந்திடணும்’ என்று ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டாள்.

யோசனையோடு நின்றிருந்தவளின் பின் வந்து நின்ற ரிஷ்வந்த், ‘ட்ரிங், ட்ரிங்’ என்ற ஒலியை எழுப்ப, திரும்பியவள், சைக்கிளில் அமர்ந்தபடி இரு கைகளையும் ஹேண்டில் பாரில் வைத்து தன்னையே பார்த்திருக்கும் கணவனைக் கண்டு, “இதுலதானே ரிஷ்வந்த் நீ ஸ்கூலுக்கு வருவே.. நீ இன்னும் இத பத்திரமா வச்சிருக்கியா?” அது வரை இருந்த யோசனைகள் மறந்து, விழிகள் விரிய சைக்கிளைப் பார்த்தபடி நிஹாரிகா கேட்க,

“நான் எப்பவும் எதையும் மறக்கமாட்டேன் நிஹி” இரு கைகளையும் கட்டிக்கொண்டு அவன் அவளைப் பார்த்து இரு அர்த்தத்தில் சொல்ல, சைக்கிளை பார்த்துக் கொண்டிருந்தவள் அவள் சொன்னதின் அர்த்தம் புரிந்து, விழிகளை மட்டும் உயர்த்தி அவனைப் பார்க்க, அவனும் அவளை சளைக்காது மென் புன்னகையுடன் பார்த்திருந்தான். மாஸ்க் வேறு அணிந்திருந்தால் அவன் கண்கள் சிரிப்பைக் கொட்டியது மட்டும் அவளுக்கு நன்கு விளங்கியது.

மாஸ்க்குக்குள் உதட்டை சுழித்தவள் அவன் பின்னே ஏறச் செல்ல, “டேய், எங்கடா பின் சீட்டு?” நிஹாரிகா பின்னால் இருக்கும் இருக்கை இல்லாதிருப்பதைக் கண்டு வினவ, அவளின் முன் இருந்தவனோ மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.
“கேக்கறேன் இல்ல?” நிஹாரிகா கேட்க,

“அதெல்லாம் எப்பவோ போயிடுச்சு.. நீ வந்து முன்னால ஏறு” என்று சொல்ல, அவனை சந்தேகத்துடன் நிஹாரிகா நிமிர்ந்து நோக்கினாள். அவனின் சேஷ்டைகள் புரியாதவளா அவள்.

ரிஷ்வந்தோ, “இப்படியே பார்த்துட்டு நிக்கப்போறியா?” என்று தனது கை கடிகாரத்தைப் பார்த்தபடி வினவ, நிஹாரிகா அமைதியாய் வந்து முன்னே இருந்த கம்பியில் ஏறி அமர, ‘நீ பின்னாடி உக்காறவாடி நான் சைக்கிளை எடுத்துட்டு வந்தேன்’ என்று தனக்கு முன்னால் அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்து குறும்புடன் நினைத்தவன், “வலிக்குதா?” என்று குனிந்து அவள் காதின் அருகே வினவ, ‘கருமம், கருமம்’ என்று நினைத்தவள் அவனைத் திரும்பித் தீப்பார்வை பார்த்தாள்.

“ஏன்டி, அக்கறையா கேட்டா எதுக்கு முறைக்கிற?” ரிஷ்வந்த் எதுவும் தெரியாதவன் போல முகத்தை வைத்து பாவமாக வினவ, அவனின் பதினெட்டு கூட்டல்(18+) பேச்சுக்களை அறியாதவளா அவள்?

தனது கூரான விழிகளால் அவனை ஆழ்ந்து பார்த்தவள், “உன் அக்கறை சக்கரை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்.. இந்த மாதிரி கேள்வி கேட்டு நம்ம கதைக்கு, ‘ஏ’ சர்டிபிகேட் தந்திடாதே” என்றவள் தலையை வெடுக்கென்று திருப்ப, அவளின் கூந்தல் அவனின் முகத்தில் அறைந்தது.

“ம்கூம்” என்று குரலை செருமியவன், “போலாம்” என்க, “ம்ம்” என்றவள் முன்னால் ஹேண்டில் பாரின் நடுவே கையை வைத்தபடி அமர்ந்தாள்.

நள்ளிரவு நேரத்தில், சாலையின் இரு பக்கங்களிலும் மின் விளக்குகள் மட்டும் கசிய, அந்த நள்ளிரவு நேரத்திலும், மேகங்கள் பௌர்ணமி நிலவை காதலோடு உரசிக்கொண்டு கவிபாடியபடிச் செல்ல, காற்று அவ்வப்போது தங்களைத் தீண்டும் நேரம் பறவைகள், ‘கீச்’ ‘கீச்’ ஒலிகளை எழுப்பிக் கொண்டிருத்தது.

தன்னவனுடன் தனிமையில் அதுவும் நடுசாலையில் யாரின் தொந்திரவுகளும் இன்றி, அமைதியாக, மௌனத்துடன் செல்வதை மனம் நிரம்ப அனுபவித்த நிஹாரிகாவின் மனம், இப்படி ஒரு நாள் மீண்டும் கிடைப்பது கடினம் என்றது.

தன்னவனைத் திரும்பி அவன் முகத்தை அவள் பார்க்க, அவனோ அவள் பார்வை புரிந்து, விழிகளை மட்டும் தாழ்த்தி, ‘என்ன?’ என்று இரு புருவங்களை உயர்த்தி சைகையாலேயே கேட்டான்.

‘ஒன்றுமில்லை’ என்பது போல தலையாட்டியவள், மீண்டும் திரும்பி, சிறு தயக்கத்துடன் தன் இரு கைகளையும் சைக்கிளின் ஹேண்டில் பார் மேலிருந்த ரிஷ்வந்தின் கரத்தில் மென்மையாய் வைத்து, சிறிது வன்மையாய் இறுக்கத்துடன் தன்னவனைப் பிடித்துக்கொண்டாள்.

அவளின் கரம் உணர்த்திய மொழியை உணர்ந்தவன், அவளை சீண்டும் பொருட்டு வேண்டுமென்றே அவளை இடித்துக் கொண்டே சைக்கிளை மிதிக்க, முதலில் தன்னவனின் சேட்டையை கவனிக்காதவள் அடுத்து அவனின் சேஷ்டையை உணர்ந்தாள்.

அடக்கப்பட்ட கோபத்துடன் திரும்பியவளுக்கு, அவனின் விழிகளில் வழிந்த குறும்பைக் கண்டு லேசாக புன்னகை வந்தது. முயன்று அதைக் கட்டுப்படுத்தியவள், “என் கையை வச்சு இப்ப இடிச்சன்னா எங்க இடிப்பன்னு தெரியாது.. அப்புறம் எதுவுமே..” என்றவளின் வாயை ஒரு கரத்தால் அழுத்தியவன், “புரிஞ்சுது” என்றான்.

தலையை வெட்டித் திருப்பியவளுக்கு அவனின் பதில் சிரிப்பைத்தர தலையைக் குனிந்து அதை சமன் செய்தவள், “எப்ப வரும்?” என்று வினவ, “டூ மினிட்ஸ்” என்றான்.

***

“ஹே!” என்று கூவிய நிஹாரிகா ஓடிச் சென்று தோழிகளைக் கட்டிக்கொள்ள ரிஷ்வந்தும் நண்பர்களைக் கட்டிக்கொண்டான். அனைவரும் தங்கள் துணைகளுடன் வருகை தந்திருந்தனர். நிஹாரிகா பெண்களுடன் பேசிக் கொண்டிருக்க, திடீரென, ‘ஹூ’ என்று கத்தினர் ஆண்பிள்ளைகள்.

ரிஷ்வந்தோ கவினின் கழுத்தைச் சுற்றிப்பிடிக்க, அவனின் காலை அன்பு பிடித்துத் தூக்க, அனைவரும் அவனை ஒருவழி செய்து கொண்டிருக்க, “டேய் விடுங்கடா.. விடுங்கடா..” என்று வெட்கத்தோடு கத்தினான் அவன்.

நிஹாரிகாவோ சக்தியைப் பார்க்க அவளோ வெட்கத்துடன் தலை குனிந்து கொண்டாள். பின்னே, கவினும் சக்தியும் அல்லவா கணவன் மனைவி. கல்லூரி முடித்த பின் பொறுமையாக தன் மனதில் பூத்திருந்த காதலை கவின் சக்தியிடம் சொல்லியிருக்க, அவளும் சிறிது சீனைப் போட்டுவிட்டு அவனை ஏற்றிருந்தாள்.
நிஹாரிகா, “என்னடி வெக்கப்படறே?” என்று சக்தியின் தோளை இடிக்க, “நௌ ஐம் டூ மன்த்ஸ் டி(NOW I’M TWO MONTHS)” சக்தி நாணத்தோடு நண்பர்கள் முகத்தை காண சக்தியின்றி சிறிது தலை சாய்த்துச் சொல்ல, “வாவ்!” என்று வாய்விட்டே கூவிய நிஹாரிகா சக்தியின் வயிற்றில் கை வைத்துப் பார்த்தாள்.

தோழியின் வயிற்றில் தனது தோழமைகளின் மகவு உருவாகியிருக்க, சக்தியின் பொன் வயிற்றில் கை வைத்துப் பார்த்த நிஹிக்கு கைகள் மெலிதாய் சிலிர்த்தது. இன்னும் அவளின் உடலில் எந்த மாற்றமும் வரவில்லை தான். இருந்தும் அவளின் வயிற்றில் இருந்த சிசு நிஹாரிகாவை ஏதோ இனம் புரியாத துடிப்பில் ஆழ்த்த, மனைவியின் ஒவ்வொரு நகர்வையும், முக மாற்றங்களையும் உள் வாங்கிக் கொண்டிருந்தான் நிஹாரிகாவின் கணவன்.

“க்யூட் மொம்ன்ட்ல உனக்கு?” நிஹாரிகா சக்தியின் தோளில் கை வைத்தபடி கிசுகிசுக்க, “ஆமா நிஹி.. என்னால இப்பவும் எல்லாத்தையும் நினைச்சா ட்ரீம் மாதிரி இருக்கு.. இவன் கூட சின்ன வயசுல இருந்து பிரண்டா இருக்கும்போது தெரியலடி.. இவன் கூட தான் கடைசி வரைக்கும் இருப்பேன்னு.. இவன் லவ்வை சொன்னப்ப கூட செம ஷாக்.. எனக்கு அப்பவே புடிச்சுது.. கொஞ்சம் வேணும்னே சீன் போட்டு அலையவிட்டேன்.. பாவம் எப்டி அலைஞ்சான் தெரியுமா.. இப்ப நினைச்சா கஷ்டமா இருக்குடி.. எங்க மேரேஜ் முடிஞ்சு அப்புறம் சின்ன சின்ன சண்டை வந்திருக்கு.. ஒவ்வொரு டைமும் அவன்தான் அட்ஜஸ்ட் பண்ணி போயிருக்கான்.. நான் எல்லாம் அந்த விஷயத்துல ஜீரோ.. ஆனா, இப்ப அவன்கூட சண்டையே போடக்கூடாதுன்னு தோணுதுடி.. சும்மாவே தாங்குவான் என்னை.. நேத்துல இருந்து நகரக்கூட விடாம இம்சை பண்றான்..” என்று நீளமாய் நிஹாரிகாவிடம் கிசுகிசுத்த சக்திக்கு கண்கள் ஆனந்தத்தால் கரித்தது.

சக்தி ஆசை ஆசையாய் பேசுவதைக் கண்ட நிஹாரிகா, “இப்ப எதுக்கு அழுகை.. உன் பாப்பாவை பாக்க நான் வெயிட்டிங்..” என்று தோழியின் கன்னத்தில் மாஸ்க்கை இறக்கி பாசமாய் முத்தமிட்டவள், “எங்க அவன்?” என்று கவினிடம் திரும்பினாள்.

அவள் இடுப்பில் கை வைத்து திரும்பிய தோரணையிலேயே, “ஆள விடுமா சாமி” என்று கையெத்துக் கும்பிட்ட கவினைக் கண்டு அனைவரும் சிரித்தனர்.

அனைவரும் கடற்கரை மணலில் கால்கள் புதைய சுகமாய் நடக்கத் தொடங்க, கவின் சக்தியின் விரலோடு விரல்கள் கோர்த்தபடி, அவளை மெதுவாக அழைத்து வர, அவர்களை அவ்வப்போது திரும்பிப் பார்த்தபடி வந்து கொண்டிருந்தாள் நிஹாரிகா. கவின் சக்தியை தாங்குவதை அவர்களைப் பார்க்கும் போதே அனைவருக்கும் புரிந்தது. அவர்களது காதலும் புரிந்தது. இருவரும் நடந்து வருவதைப் பார்த்தவளுக்கு, அத்தனை மகிழ்ச்சியாய் இருந்தது. அதே நேரத்தில் ஏக்கமாகவும் இருந்தது.

கண நேரத்தில் தோன்றிய ஏக்கத்தில் அவளின் முகம் கூம்பிவிட, முகத்தை மறைக்க அரும்பாடு பட்டவள் தலையைத் தாழ்த்தி நிலத்தைப் பார்த்தபடி நடந்தாள். யாருமே அவ்விடத்தில் இல்லாததால் இருவருமே மாஸ்க்கை அவிழ்த்திருந்தனர்.

திடீரென நிஹாரிகாவின் தோளைச் சுற்றி ஒரு கை விழ, நிமிராமலேயே அது கணவன் என்று உணர்ந்தவள், அப்போதும் தலை நிமிராமல் சாதாரணமாக நடக்க, “ஏன்டி ஒரு மாதிரி இருக்க?” ரிஷ்வந்த் வினவ, அவளோ பதில் அளிக்கவில்லை.

“நிஹி, ப்ளீஸ் இப்படி வராத.. கஷ்டமா இருக்குடி” ரிஷ்வந்த் தணிந்து அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்ல அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் அத்தனை ஏக்கமும் கோபமும் போட்டி போட்டது.

அவள் சக்தியையும் கவினையும் பார்க்க, அவளின் பார்வையைத் தொடர்ந்த ரிஷ்வந்த் நிஹாரிகாவைப் பார்க்க, “நமக்குள்ள எந்த சண்டையும் வராம இருந்திருந்தா அப்படி இருந்திருப்போம் ரிஷ்வந்த்.. அவங்களை பாத்த எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு.. நம்மளும் அப்படி இருக்கணும்னு.. ஆனா, என்னால முடியல.. உன் மேல இருக்க கோபம் விடமாட்டிது” என்றவள் முன்னே செல்லப் பார்க்க, அவளின் கரத்தைப் பற்றிய ரிஷ்வந்த், அவளைத் தன்னை நோக்கி இழுக்க, அவனின் மேல் வந்து வெண் முகிலாய் மோதினாள் அவனின் மனைவி. இருவரும் இருவரின் முகத்தை உரசியபடி உணர்வற்ற பார்வை பார்த்துக் கொண்டு நிற்க, மெதுவே நடந்து வந்த கவினும், சக்தியும் கூட அவர்களின் அருகே வந்துவிட்டனர்.

“என்ன பண்றீங்க? வரலையா?” சக்தி இருவரையும் பார்த்து வினவ,

“அவங்க இரண்டு பேரும், ‘அடிச்சிட்டுஉ’ வருவாங்க சக்தி.. வா நாம அதெல்லாம் பாக்க வேணாம் போயிடலாம்” என்று, ‘அடிச்சிட்டு’ என்ற வார்த்தைக்கு கவின் அழுத்தம் கொடுத்து, இருவரையும் கேலியாகப் பார்க்க, ‘அய்யோ இவன் வேற நேரம் காலம் தெரியாம மானத்தை வாங்கறானே’ என்று தன்னை மீறித் தோன்றிய நாணத்தில் கன்னங்கள் இரண்டும் செம்மை படர தலை குனிந்து அதை சரி செய்தாள் நிஹாரிகா.

அவர்கள் சென்றபின் நிஹாரிகா நிமிர, ரிஷ்வந்த், “நிஹி.. எல்லாம் நல்ல போயிருந்தா நம்ம இரண்டு பேர் தவிர இந்த உலகத்துல யாரும் லக்கியா இருந்திருக்க மாட்டாங்க.. பட்… உப்ப்.. அதையே திருப்பி திருப்பி பேச வேணாம்னு நினைக்கறேன்டி.. நான் வெயிட் பண்ண ரெடி.. நீ பர்ஸ்ட் எல்லாத்தையும் யோசிக்கறத விடு.. எல்லாம் தன்னால சரியாகும்” என்றவன் அவளின் தோள் மீது கை போட்டுத் தன்னோடு அழைத்துச் சென்றான்.

நண்பர்கள் எல்லாம் ஒன்று கூடி அரட்டை அடிக்க வெளியில் இருந்து அவர்களுடன் வந்த துணைகளும் அவர்களுடன் சேர, கடலின் இரைச்சலை விட, இவர்களின் பேச்சும் அட்டூழியங்களும் வானம் நோக்கி பாய்ந்து கொண்டிருந்தது.

நேரம் இரண்டரை ஆகியிருக்க அனைவரும் எழ, நிஹாரிகாவுக்கு அசதியாக இருந்தது. அவளது மாதாந்திர தொந்திரவு அடுத்த வாரம் என்ற நிலையில் இருக்க, அவளுக்கு இப்போதே அதன் அறிகுறிகள் அயர்வாகக் காட்டத் தொடங்கியிருந்தது. நடக்கவே முடியாமல் நடந்தவளுக்கு மணலில் நடக்கவே சிரமமாக இருக்க, “அஹ்ஹ்” என்று முட்டியை பிடித்தபடி சாயந்து நின்றவள் மீண்டும் எழ, ரிஷ்வந்தின் கரங்கள் மனைவியை பஞ்சு மூட்டையைப் போல அள்ளிக்கொண்டது.

ஒரு நிமிடம் பதறியவள், அவனைப் பார்க்க, “எதுக்கு இப்படி பாக்கறே.. நான் தானே” என்க, “ம்கூம்” என்று அவள் வெளிப்படையாகத் தலையைத் திருப்ப, “திமிரு புடிச்சவ” என்று ரிஷ்வந்த் பற்களுக்கு இடையில் முணுமுணுக்க, அது அவளின் காதில் தவறாமல் விழ, அவனைப் பார்த்துத் திரும்பியவள், கோபத்துடன் அவனின் மீசையைப் பிடித்து இழுக்க, “ஆஆஆஆஅஅஅ.. வலிக்குதுடி” என்று ரிஷ்வந்த் அலற, அவனின் மீசையை விட்டவள், “ஒழுங்கு மரியாதையா தூக்கிட்டுப் போ.. கால் வலிக்குது” என்று கட்டளையிட, “தொலைக்கறேன்” என்றவன் கைகளில் இறகுபோல இருப்பவளை எளிதாக தூக்கிக் கொண்டு நடக்க, அவனின் நெற்றியில் வியர்வை பொட்டுக்கள் அரும்பத் தொடங்கின.

அவன் பாக்கெட்டில் இருந்த டிஷ்யூவை எடுத்தவள் அவனின் நெற்றியில் துடைத்துவிட, ‘இதுக்கு ஒண்ணும் குறைச்சல இல்ல’ என்று நினைத்தவனுக்கு அதைச் சொல்லும் தைரியம் சுத்தமாக இல்லை. மீண்டும் அவளிடம் இடி வாங்க அவன் தயாராக இல்லை. நண்பர்கள் கூட்டமோ புதிதாக திருமணமானவர்கள் என்று அவர்களுக்கு தனிமை அளித்து முன்னே சென்றனர்.

கடற்கரைக்கு முன்னால் இருந்த நடைபாதைக்கு வந்தவன் தன் மனையாளை இறக்கிவிட, “தாங்க்ஸ்” என்றவளை அழைத்த, பிருந்தா, “நிஹி, குல்பி வேணுமா?” என்று வினவ, கைகளைத் தூக்கி இரண்டு விரலைக் காட்டி, தனக்கு இரண்டு என்பதுபோல கணவனைப் போல ஸ்டைலாக சைகை செய்தாள் நிஹாரிகா.

“ப்ச்.. சளி புடிக்க போகுதுடி” ரிஷ்வந்த் அதட்ட, “அதை அப்புறம் பாத்துக்கலாம்” என்று துடுக்காகப் பேசியவள், பிருந்தாவை நோக்கி ஓடி தன் கைகளில் இரண்டையும் வாங்கினாள்.

கவின் ஒன்றை ரிஷ்வந்திடம் நீட்ட வாங்கியவன், சாப்பிடத் தொடங்க, அனைவரும் பள்ளி முடித்த பின் முதன் முதலாக குல்பி சாப்பிடச் சென்றதை பேசத் தொடங்கி சிரித்தபடி குல்பியை கபளீகரம் செய்து முடித்தனர். சாப்பிட்டு முடித்து அனைவரும் விடைபெற அனைவரின் மனமும் கனத்துப் போனது என்னமே உண்மைதான். சிறிய வயதில் இருந்து ஒட்டிக்கொண்டே திரிந்தவர்கள் இப்போது சந்திப்பதே அரிதாகி இருக்க, சந்திக்கும் நாளும் ஏவுகணை வேகத்தில் ஓடிவிடுகிறது.

இருந்தும் அடுத்த சந்திபுக்கு திட்டமிட்டுப் பிரிந்தவர்கள், அவரவர் வீட்டிற்கு புன்னகையுடன் கிளம்பினர்.

“ரொம்ப கஷ்டமா இருந்துச்சுல ரிஷ்வந்த் வரும்போது” நிஹாரிகா முன்னே அமர்ந்துகொண்டு சைக்கிளை அழுத்திக் கொண்டிருந்தவன் கரத்தின் மேல் கைகளை வைத்தபடி வினவ, “ம்ம்” என்றான்.

சிறிதுநொடி கழித்து, “நிஹி, நம்ம மேரேஜுக்கு அவங்களுக்கு தனியா எந்த பார்ட்டியும் தரல. இந்த படம் முடிஞ்ச அப்புறம் இன்வைட் பண்ணி எங்காவது தரணும்.. அதுவும் ஒரு டூ டேஸ் எல்லாரும் தங்கற மாதிரி ஏற்பாடு பண்ணனும்” என்க, “நானும் சொல்லணும்னு நினைச்சேன்.. கல்யாண பிசில அவங்ககிட்ட சரிய் பேசக்கூட முடியல” என்று நிஹாரிகா சொல்ல, அவர்களின் ஒற்றுமையான சிந்தனையை நினைத்து அவனுக்கு மென்னகை படர்ந்தது முகத்தில்.

அதே இதமான மனநிலையோடு ஏர் பாட்ஸை இயக்கியவன் தனது ப்ளே லிஸ்டை ஓடவிட, இருவரையும் இணைக்கும் விதமாக பாடல் ஒலிக்கத் துவங்க, வானிலிருந்து பேரிடி ஒன்று பூமிக்குள் கோடாக விழுந்து, சீரிய காற்றுகள் மண்ணில் வீச, விண்ணைப் பிளந்து கொண்டு ஒய்யாரமாக மண்ணில் விழுந்தது மழைத்துளிகள்.

அதே சமயம்…

‘மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம் உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும் காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்’ என்று பாடல் வரிகள் மெல்லிசையோடு துவங்க, நிஹாரிகாவின் இதயம் நிசப்தம் கண்டு, பற்றியிருந்த தன்னவனின் கரத்தை மேலும் இறுக்கமாய் தன்னையறியாமல் பற்றிக்கொள்ள, ரிஷ்வந்திற்கும் இப்பாடல் தங்கள் வாழ்வில் மறக்க முடியாதபடி, ஒரு நாள் கல்லூரியில் குறுக்கிட்டது நினைவில் வந்தது.

‘பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம் தீயாய் மாறும் தேகம் தேகம். உன் கைகள் என்னை தொட்டு போடும் கோலம் வாழ்வின் எல்லை தேடும் தேடும் மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம். உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்’ என்று வரிகள் அடுத்து ஒலிக்க, இருவருக்கும் ஒன்று மட்டும் விளங்கியது.

‘இசைக்கு நினைவுகளைத் தூண்டும் சக்தியுண்டு.. அதுவும் சில சமயம் அந்த நிகழ்வுக்கு மீண்டும் சென்று அதில் சஞ்சரிக்கும் அளவுக்கு’ என்பதை உணர்ந்தனர்.

இருவருக்கும் சடுதியில் இப்பாடல் தங்களுக்கு ஏற்படுத்திய தினம் நினைவில் பேரலையாக எழுந்தது. அன்றைய தினம் அவர்கள் இரண்டாம் ஆண்டின் இறுதியில் இருந்தனர். அவர்களின் கல்லூரியில் கலை விழா வேறு கலைகட்டிக் கொண்டிருந்தது. பாடல் நிகழ்ச்சிகள் தொடங்கியிருக்க, தங்களது வகுப்பறையில் இருந்த ரிஷ்வந்தும் நிஹாரிகாவும் அவசர அவசரமாக ஆடிட்டோரியத்திற்கு ஓடி வந்து கொண்டிருக்க, முதல் தளத்தில் இருந்த க்ரில் கேட்டை அடைத்துச் சாத்தி இருந்தார் காவலாளி. மற்றொரு வழியை அவர்கள் நாடிச் செல்ல அதுவும் அடைக்கப்பட்டிருக்க, அவர்கள் திரும்பி வரும் முன், இரண்டாம் தளத்திலும் க்ரில் கேட் பூட்டப்பட்டிருக்க, “இப்ப என்னடா பண்றது” என்று விழித்தபடி வினவினாள்.

அனைவருக்கும் அலைபேசியில் அழைத்துப் பார்த்த ரிஷ்வந்த், “வாட்ச் மேன் யாரும் இல்லன்னு நினைச்சு பூட்டியிருப்பாருடி.. இரு யாராவது வருவாங்க.. வெயிட் பண்ணுவோம்” என்க, இருவரும் அங்கேயே பேசியபடி நிற்கத் துவங்கினர்.

அன்றும் இதேபோல இருவரையும் சோதிக்க மழை தீவிரமாக மண்ணில் தடதடவென்று இறங்க, காற்றின் வேகத்தில் கல்லூரியின் தாழ்வாரத்தில் (corridor) நின்ற இருவரையும் மழை நனைக்க, அவர்களால் அங்கிருந்த வகுப்பறைக்குள்ளேயும் நுழைய முடியவில்லை. அனைத்தும் க்ளாஸ் ரெப்புகளால் பூட்டிப்பட்டிருந்தது. இவர்களது வகுப்பறைக்கும் இருவரும் செல்ல முடியாதபடி அந்தத் தளம் மூடப்பட்டிருந்தது.

நிஹாரிகா அணிந்திருந்த பிங்க் நிற சிங்கள் ஸ்ட்ராப் வைத்த சல்வார் நனையத் துவங்க, அவளோ காதலனே ஆனாலும் தன்னவன் முன் நிற்க, கூச்சம் கொண்டு தனது துப்பட்டாவை எடுத்து மேலே போர்த்தியபடி நிற்க, அந்தோ பரிதாபம் அவளின் துப்பாட்டா மெல்லிசிலும் மெல்லிசாக இருந்து அவளை சோதித்தது. நிஹாரிகாவோ தன்னைக் குறுக்கிக் கொண்டு நிற்க, தன்னவளின் அருகாமையும், மழையினால் தூண்டப்பட்ட உணர்வுகளும் கட்டுக்கடங்காமல் எழ, ரிஷ்வந்த் தன்னவளின் மனம் கருதி தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு நின்றிருந்தான்.

அந்த சமயம் அவர்களுக்கு வெகு அருகில் இருந்த ஆடிட்டோரியத்தில் இருந்து..
‘மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம் உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும் காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்’
‘பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம் தீயாய் மாறும் தேகம் தேகம். உன் கைகள் என்னை தொட்டு போடும் கோலம் வாழ்வின் எல்லை தேடும் தேடும் மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம். உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்’ என்ற பாடல் வரிகள் ரிஷ்வந்தை இம்சிக்க, பெண்ணவளின் உணர்ச்சிகளும் தன்னை மீறித் தடுமாறத் தொடங்கியிருந்தது.

தென்றல் தீண்ட தேகம் எங்கும் மோகம் கிளர்ந்து எழ, மழையில் நனைந்த பெண்ணவளின் மின்னும் தேகம், அவளை சிலையாய் காட்டி ஆணை மலைக்க வைக்க, தாபத்தீ காளையவனின் மேனியில் கொஞ்சம் கொஞ்சமாய் சுடர்விட்டு எரியத் தொடங்கியது.

தன்னவனின் பார்வை தன் மேனியில் படர, நாணம் வந்தாலும், பெண்ணுக்கே உரிய விழிப்புணர்வு அவளை படபடக்க வைத்தது. அதை அவனும் உணர்ந்தே இருந்தான். அதுவும் அவள் குறுகிக் கொண்டே செல்வதைக் கண்டவன் தன் விழிகளால் அவளின் அசௌகரியம் உணர்ந்து, “நிஹி! நான் திரும்பி நிக்கறேன்.. நீ கம்பர்டபிளா நில்லு” என்றவன் வேறு திசையைப் பார்த்து நிற்க, அன்று அவனின் செயலில் அவளின் காதல் பெய்து கொண்டிருக்கும் மழையைத் தாண்டி வான் நோக்கிச் சென்றிருந்தது.

அப்படியே அவனை நோக்கி ஓடிச்சென்று அணைக்க நினைத்த மனதை கடிவாளமிட்டு அவள் கட்ட, அவர்களை சோதிக்கப் பார்த்த மழையும், ‘இதுக தேராது’ என்ற ரீதியில் சிறிது சிறிதாய் விட ஆரம்பித்தது.

அன்றே காதலர்களாய் இருக்கும்போதே உணர்வுகள் தறிகெட்டு இருவருக்கும் ஓடியிருக்க, இன்று கணவன் மனைவியாக முழு உரிமை உள்ளவர்களைப் பற்றி சொல்லவா வேண்டும். அதுவும் அதே பாடல், அதே மழை, அதே நள்ளிரவு, அதே தனிமை, உடல்கள் உரசிக்கொள்ளும் அளவுக்கு இருக்கும் அருகாமை அனைத்தும் இருவரையும் பிணைக்கப் படாத பாடு பட்டுக்கொண்டிருக்க, இவருரின் நெஞ்சுக் குழியிலும் ஏதோ குளிர்ச்சியாய் பரவி சிறிது சிறிதாக இறங்கத் தொடங்கியிருந்தது. ஊசியாய் விழுந்து கொண்டிருந்த மழைத்துளி இருவர் மீதும் பட்டுத் தெறிக்க, முழுதாய் நனைந்த இருவருமே எதுவுமே பேசிக்கொள்ளவில்லை

மறவோன் அனைத்து உணர்ச்சிகளையும் கைப்பிடிக்குள் வைத்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க, ஆடவள் தான் தன்னைக் கட்டுப்படுத்த முடியாது உணர்வுகளில் சிக்கித் தவிக்கத் தொடங்கினாள். அவன் கரத்தின் மேலிருந்த தன் கரத்தின் அழுத்தத்தை ஒவ்வொரு நொடியும் கூட்டிக்கொண்டே சென்றவளுக்கு, சிந்தனைகள் எங்கெங்கோ தறிகெட்டு ஓட, ‘நிஹி, என்னடி பண்ற?’ என்று எச்சரிக்கை மணி அடித்தது.

அவளின் மனமோ, ‘ஐ வான்ட் ரிஷ்வந்த்’ என்று கூவ, ‘வேணாம்டி உன் கெத்தை விட்டு இறங்காத..’ என்று அவளுக்கு அறிவுரை வழங்க, ‘ம்ம் ம்ம்’ என்றது அவளின் மனம் அரை மனதுடன்.

‘என்னது ம்ம் ம்ம் ஆ? அடியேய் உன் கெத்தே உன் ஈகோ தான்.. அதை இறக்கி வைக்கப் போறீயா?’ என்று அவளின் மூளை சரியாய் அவளை சலவை செய்ய, தன் சிந்தனைகள் செல்லும் திசை உணர்ந்து அதிர்ந்து, ‘நோ நோ..’ என்றவள் கண்களை அழுத்தமாக மூடித் திறந்து அனைத்தையும் கண நேரத்தில் கட்டுக்குள் கொண்டு வந்தாள் ஆயிரம் பேரை ஆளும் ராணியாய்.

இருவரும் ஒரு வழியாய் வீடு வந்து சேர, நிஹாரிகாவை இறங்கச் சொன்னவன் அவளிடம் சாவியைத் தர, “நீயும் வா” என்றவளை முறைத்தவன், அவளுக்காக அவசர அவசரமாக சைக்கிளை நிறுத்திவிட்டு அவளை இழுத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

வீட்டிற்குள் நுழைந்ததும் கதவை அடைத்தவன் அதற்கு மேல் முடியாமல், நிஹாரிகாவின் கரத்தைப் பற்றி, சித்திரவதை செய்து கொண்டிருந்த தன் உணர்வுகளுக்கு மதிப்பளித்தவன், அவளை சுவற்றில் சாய்த்து, தாபம் வழியும் குரலோடு கரகரப்புடன், “நிஹி! ஐ ஃபீல் லைக் கிஸ்ஸிங் யூ டி.. ப்ளீஸ்” என்று அவள் இதழுடன் இதழ் உரசிய படி அவன் கேட்க, ஏற்கனவே அவனின் அருகாமைக்கு ஏங்கி இருந்த அவளின் மனமும் உடலும் அவனின் குரலில் கிறங்கிக் குழைந்தது.

தன்னவனின் மூச்சுக்காற்றிலும், அருகாமையிலும் நிஹாரிகாவின் தயக்கம் பறந்து, வெட்கம் மறந்து, ஆசை பிறக்க, விழிகளை மூடி கணவனுக்கு சம்மதம் தெரிவித்தாள் ரிஷ்வந்தின் பேரெழில் உடைய அவனின் வதுகை.

ஈரம் சொட்டச் சொட்ட நின்றிருந்தவர்கள், மூச்சப்படும் நெருக்கத்தில் நிற்க, நிஹாரிகாவின் உடல் குளிரில் நடுங்க, அவளின் இருபக்கமும் கையூன்றி நின்றவன், தனது தாகம் தணிக்க தன்னவளின் இதழ் நோக்கினான். நீர்த்துளிகள் சிறிது சிறிதாக அவனவளின் அதரங்களில் சிதறியிருக்க, குளிரில் சிறுநடுக்கத்துடன் துடித்துக்கொண்டிருந்தது பெண்ணவளின் செதுக்கி வைத்த சிப்பி இதழ்கள்.

நிஹாரிகாவோ இமை மூடி உலகம் மறந்திட அவனின் அருகாமையை ரசித்தபடி நின்றிருந்தாள்.

தன்னவளின் வதனத்தை தனக்குள் சேமித்தபடியே அவளின் கன்னத்தை ஆசையாகப் பற்றியவன், பிடித்த இடத்தில் அழுத்தத்தைக் கூட்ட, பெண்ணவளோ அவனின் ஈரமான கரங்கள் கொடுத்த குளிர்ச்சியில், சிலிர்த்து, உதடுகள் பிரிந்து நிற்க, தன்னவள் நிற்கும் அழகு அவனுக்கு ராஜபோதையை ஏற்ற, அவளை நோக்கிக் குனிந்தவன், அவளின் இதழோரத்தில் ஒரு முத்தத்தை முதலில் வைத்தான்.

“நிஹி” அவனழைக்க, “ஹம்” என்றாள் உணர்ச்சிளின் பிடியில் சிக்கி கரகரத்த குரலோடு.

“நிஹி, டூ யு லவ் மீ?” ரிஷ்வந்த் மீண்டும் மற்றொரு பக்கம் மீசை குத்த அவளின் இதழோரத்தில் முத்தமிட்டபடி கேட்க, “ஹம்” என்றாள் மோகத்தில் பெருமூச்சை வெளியிட்டபடி.

“அப்ப என் மேல கோபம் போயிடுச்சா?” ரிஷ்வந்த் தன்னவளின் இதழ்களை இதழால் வருடியபடிக் கேட்க, அவளிடமோ பதிலில்லை. அவளின் இதழ்கள் இரும்பாய் இறுகி இருந்தது. இந்த நேரத்திலும் தன் கோபத்தை அவள் விட்டுக் கொடுக்காமல் இருப்பது அவனுக்குக் சிரிப்பை வரவழைக்க, இதழ் விரித்து சிரித்தவன், அவள் இதழில் தன் இதழைப் பதிக்க, அதிலும் நடந்தது என்னமோ சண்டைதான்.

இதிலும் இருவருக்கும் நீயா நானா என்ற போட்டி வர, நிஹாரிகா அவனின் கழுத்தைச் சுற்றி கை போட்டு தன்னுடன் இறுக்க, ரிஷ்வந்த் அவளின் இடையை அணைத்து தன்னோடு வன்மையாக இறுக்கிக் கொண்டான். அவனின் கரம் கொடுத்த அழுத்தம் அவளுக்கு வலியைக் கொடுத்தபோதும், அவள் அவனை விட்டு துளியும் விலகவில்லை.

இருவரின் முகங்களும் இருவரும் தீயாய் பரிமாறிக் கொண்ட அனல் பறக்கும் இதழ் முத்தங்களில் சிவந்துவிட, மேலும் மேலும் இதழ் யுத்தம் அதிகரித்ததே தவிர, குறைந்தபாடில்லை. இறுதியில் இருவரின் முத்தங்கள் தாளாமல் அவர்களின் சுவாசம் சிரமப்பட, மூச்சிற்குத் தவித்த இருவரும் நூலளவு இடைவெளியில் மனம் இல்லாமல் பிரிந்தனர்.

நிஹாரிகாவோ நிற்க முடியாமல் நிற்க இருவருமே தலை நிமிரவில்லை. முதலில் அந்த அமைதியைக் கலைத்தது ரிஷ்வந்த் தான். “போய் ட்ரெஸ் மாத்திக்க.. கரண்ட் வேற இல்ல.. நான் மெழுகுவர்த்தி இருக்கான்னு பாத்து எடுத்திட்டு வரேன்” என்றவன் இதற்கு மேல் அங்கிருந்தால் இருவரின் கற்புக்கும் உத்திரவாதம் இல்லை என்று நகர்ந்தான்.

அவனின் மனமோ தன்னவளுக்காகவே, அவளின் மனம் சுணங்காமல் இருக்க பாடுபட்டது. ரிஷ்வந்தின் உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும், மனதில் சொட்டிக் கொண்டிருக்கும் காதலும் அவளுக்குள் புதைய ஏங்கித் தவித்தாலும், அவனுக்கு அவளின் உணர்வுகளே பெரிதாகத் தோன்றியது. சமையலறைக்குள் நுழைந்தவன், வாட்டர் பாட்டிலில் இருந்த முழுத் தண்ணீரையும் வாயில் ஊற்றி தன்னை சமன் செய்ய முயன்றான். எங்கு முயன்றான் மட்டுமே தான். காதலிக்கும் தருணங்களிலேயே அவளிடம் தலை குப்புற விழுந்து கிடந்தவனை இப்போது சொல்லவா வேண்டும்.

மனைவியின் அருகாமையைக் கேட்டு அவனின் ஒவ்வொரு அணுவும் அவனை துடிக்கத் துடிக்க சித்திரவதை செய்ய, சமையல் மேடையில் ஏறி அமர்ந்தவன், ‘ரிஷ்வந்த் கன்ட்ரோல் டா.. அவ பாவம்.. இப்போ வேணாம்’ என்று தனக்குத் தானே ஜபம் போல சொல்லிக்கொண்டே இருந்தான்.

அவன் விலகிச் சென்றவுடன் சுயநினைவிற்கு வந்த நிஹாரிகாவோ, ‘ச்சை.. இப்படித் தான் கிஸ் பண்ணனும்னு அவன் சொன்னா வாயை திறந்துட்டு நிப்பியா நிஹி.. அதுவும் கன்ட்ரோலே இல்ல உன்கிட்ட.. அவனை விட மோசமா இருக்க.. வர வர ரொம்ப கெட்டுப் போயிட்ட’ என்று அவளின் மூளை அவளை சரமாரியாக வசைபாட, ‘ப்ச்’ என்று சலித்தவள், தன் இதழ்களை சுவை பார்த்தபடியே பால்கனிக்கு சென்று காய வைத்த துணிகளைப் பார்க்க, அதுவோ அவளைப் பார்த்து கை கொட்டி சிரித்தது.

அவள் எடுத்து வந்த இரவு உடைகள் இரண்டும் கயிற்றில் மழையில் நனைந்தபடி ஊஞ்சலாடிக் கொண்டிருக்க, ‘ச்ச இது வேற இன்னொரு பக்கம்’ என்று நினைத்தவள், அறைக்குள் சென்று டவலை எடுத்து முதலில் தலையை பரபரவென்று துடைக்க ஆரம்பித்தாள்.

சிகையில் இருந்த ஈரத்தை பூந்துவாலையால் நன்கு ஒற்றி எடுத்தவள் முகத்தைத் துடைத்துவிட்டு, தனது பையை அலைபேசியின் ப்ளாஷ் லைட்டின் மூலம் ஆராய, அதில் அவள் அடுத்த நாளுக்கு உடுத்த எடுத்து வந்திருந்த புடவை மட்டுமே இருந்தது. இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தவளுக்கு ஈரமான உடை வேறு குளிரைக் கொடுக்க, திடீரென வந்த யோசனையில் ரிஷ்வந்தின் பேக்கைத் திறந்தாள்.

அதிலிருந்த அவனின் வெள்ளை நிற சட்டையை எடுத்தவள், அலைபேசியை வைத்துவிட்டு புடவையைக் கலைய ஆரம்பித்தாள். அவசரத்தில் அறையைத் தாழிடவும் மறந்து போனாள் ரிஷ்வந்தின் மனைவி.

தன் மேலிருந்த உடை முழுவதையும் கலைந்தவள் அவனின் சட்டையை எடுத்து இயல்பாய் தயக்கமின்றி அணிய அது அவளின் தொடை வரை இருந்தது. ‘அப்பாடா இப்போதைக்கு இது போதும்’ என்று நினைத்தவள் அதிலிருந்து வந்த அவனின் வாசைனையை உணர்ந்து, மங்கையவள் மயங்கினாள்.

தனக்கே தனக்கேயான உணர்வோடும், உரிமையோடும் கீழிருந்து ஒவ்வொரு பட்டனாக அவள் அணிந்துகொண்டு மேலே வர, “நிஹி, கேன்டில்” என்றபடி மெழுகுவர்த்தியுடன் உள்ளே நுழைந்த ரிஷ்வந்த், மெழுகின் ஒளியில், அது தந்த பிரகாசத்திற்கு மத்தியில், பிரம்மன் படைத்த மெழுகு சிற்பமாய் நிற்கும் தன் மனைவியைக் உணர்ந்து, அவள் நின்றிந்த கோலம் கண்டு, அவன் இதயம் கோடி மத்தளம் அடிக்க, வானிலிருந்து லட்சம் பேரிடிகள் ஒன்றாய் பூமிக்கு வர, மழையோ மேலும் கொட்டித் தீர்க்க, ரிஷ்வந்த் தன்னைத் தொலைத்து நின்றான்.

திடீரென தன்னவன் உள்ளே நுழைவான் என்பதை எதிர்பார்க்காதவள், மேலே இன்னும் இரண்டு பட்டன்களை போடாமல் இருக்க, அவன் வந்த மாத்திரத்தில் இரண்டு பட்டன்களையும் இறுக்கிப் பிடித்த படி அதிர்ந்து நிற்க, அவளின் இதயம் அதிர்ந்து அதிர்ந்து துடித்தது.

என்னதான் கண்ணியமாக காதல் புரிய நினைத்தாலும் இங்கு காமம் கலக்காமல் இருப்பதில்லை. காமம் சொட்டாத காதல் சாத்தியமும் இல்லை.

ரிஷ்வந்தின் பார்வை மொத்தமாய் கணவனின் பார்வையாக மாறி, நிஹாரிகாவின் மேடு பள்ளங்கள், ஏற்ற இறங்கங்கள், வளைவு நெளிவுகள் அனைத்திலும் ஊசி போன்ற கூர் விழிகளால் தாபத்துடன் மேய, மனைவியின் அழகை மேலும் மெழுகுவர்த்தியின் ஒளி அவளின் மின்மினி மேனியில் பட்டுத் தெறித்து, அவனின் கலாபத்தைத் தூண்டிவிட்டது.

நிஹாரிகாவோ எங்கு, எதை, எப்படி மறைப்பது என்று தெரியாமல் திருதிருவென முதலில் விழித்தவள், கணவனின் அவஸ்தை தரும் ஆளை விழுங்கும் பார்வையை தாங்க இயலாது இறுதியில் எந்த வழியும் இல்லாமல், விழிகளை மூடி நிற்க, திடீரென வந்தது மின்சாரம். அவன் இரவு வெளியே அழைத்தபோது அவசரமாக லைட்டையும், ஃபேனையும் அணைக்காமல் அவள் வந்திருக்க, இப்போது மின்சாரம் வந்தவுடன், ஒரு நொடியில் பெண்ணவளின் பொன் மேனியை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டு மீண்டும் தடைபட, ஆடவனுக்கோ பார்த்தும் பார்க்கமால் போனது மிதமிஞ்சிய ஏமாற்றத்தில் ஆழ்த்த, காற்றாடியின் சுழற்சியில் மெழுகுவர்த்தியும் அணைந்தது.

தட்டி வைத்த மோகமும், தாபமும் மீண்டும் ரிஷ்வந்தின் மனதில் எரிமலையாய் வெடித்துச் சிதற, மெழுகைப் பிடித்திருந்த கையை அவன் தளர்த்த அது கீழே விழுந்து உருண்டு ஓட, நிஹாரிகாவின் மனதும் படபடப்பில் உருண்டு கொண்டிருந்தது.

அவள் நின்றிருந்த இடத்தைக் கணக்கிட்டு ரிஷ்வந்த் தன் கரத்தை நீட்ட அது சரியாய் பெண்ணவளின் இடையில் பதிந்தது. வந்ததில் இருந்து அவனின் விழிகளின் கூர்மையை உணர்ந்தவள், அவனின் கரங்கள் இடையில் பதிந்தவுடன் பெண்ணுக்கே உரிய சிலிர்ப்புடன் நகர முற்பட, அவனின் இரும்புக் கரங்கள் அவளை சலாரென இழுத்து அணைத்தது.

இழுத்து அணைத்தவனின் கரங்கள் அகப்பட்ட அங்கங்களை பரிசோதிக்க, பெண்ணவளோ கணவனின் ஆராய்ச்சியில், அவன் கரங்கள் முதன் முதலாக செல்லும் இடங்களை உணர்ந்து வெட்கத்திலும், பதட்டத்திலும் நாணிக் கோணினாள். அதனால் அவளின் உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல் எகிற, அவள் தனது சிறு எதிர்ப்பார்ப்பினை தெரிவித்து அவனைத் தடுக்கப் பார்க்க, அவளின் வெட்கம் உணர்ந்து, தன்னவளை அடக்கி விஷயங்களை சோதிப்பதற்குள் அவனுக்கு போதும் போதுமென்று ஆகிவிட்டது.

ஈரமாய் இருந்த அவளின் சிகைக்குள் கை நுழைத்து, தன்னை நோக்கி அவளை தேகத்தோடு தேகம் உரச இழுத்தவன், “நிஹி, ஐ கான்ட் வெயிட் டு மேக் யூ மைன்(I CAN’T WAIT TO MAKE YOU MINE)..” அவளின் நெஞ்சுக்கூடு வரை ஊடுருவிச் சென்று, சில்லிடும் குரலில், அவன் காதலை சேமித்துத் தாபத்தை வழியவிட்டுக் கூறியவன், அவள் அணிந்திருந்த சட்டை பட்டனில் கை வைக்க, நிஹாரிகாவோ, “பாவா! ப்ளீஸ்” என்று நாணத்தில் துடிதுடிக்க அவனைத் தடுக்கப் பார்த்தாள். அவளுக்கோ சென்ற மின்சாரம் மீண்டும் வந்தால் என்று தன் நிலையை யோசிக்கையிலேயே உள்ளம் உடல் இரண்டும் நாணத்தில் சிவந்து படபடத்தது.

ஆனால், அது எல்லாம் காதலைச் சுமந்து, உணர்வுகளை இத்தனை வருடங்கள் கட்டுக்குள் வைத்திருந்த ரிஷ்வந்தின் செவிகளில் விழவில்லையே.

அவளின், ‘பாவா’ என்ற அழைப்பு வேறு அவனை மேலும் மோகத்தில் தத்தளிக்க வைக்க, அவளின் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்தவன், “கொல்லாத டி என்னை” என்று அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் அங்கு தனது இதழ்களைப் பதித்தபடியே மேலே வந்து அவளின் முகத்தை அடைந்தபடி, பட்டனில் தன் வேலையைத் தொடர, வெள்ளை சட்டை தளர்ந்து தரையில் பூவாய் விழுந்தது.

நிஹாரிகா அதற்கு மேல் முடியாமல் அவனை இறுக அணைத்துக் கொள்ள, தன்னவளுடன் கட்டிலில் சரிந்தவன் மேலும் மேலும் அவளுள் மூழ்க, நிஹாரிகா தன்னவனுடன் அவனின் ஆசைகளுக்கு ஒத்துழைக்க, ரிஷிவந்தின் கரம் அவள் இடை கன்றிப் போகும் அளவுக்கு அவளைச் சுற்றிப் பிடித்தது.

‘உன் அம்மா மாதிரி உனக்கும் ஒருத்தன் பத்தாது’ ரிஷ்வந்த் அன்று சொன்னது நிஹாரிகாவின் செவியில் பாய, மலரத் தொடங்கியிருந்த தாம்பத்தியத்தில் இடி விழுந்தது.
“ரிஷ்வந்த்!” என்று அலறித் துடித்தவள், அவனைத் தள்ளிவிட்டு மரண வலியுடன் படுக்கையில் எழுந்து அமர, தான் இருந்த நிலையை உணர்ந்தவள், கைகளால் துழாவி அங்கிருந்த பெட்ஷீட்டை எடுத்து அவசர அவசரமாகத் தன்னைச் சுற்றிக் கொள்ள மின்சாரமும் வந்தது. ரிஷ்வந்தோ அவள் தள்ளிவிட்டதில் அவளின் அருகிலேயே நிலை தடுமாறியபடி கட்டிலில் விழுந்திருந்தான்.

இரவு விளக்கின் ஒளிக்குக் கீழ், படுக்கையில் போர்வையை மார்போடு சேர்த்து பிடித்தபடி குறுகி அமர்ந்திருந்த மனைவியைக் கண்ட ரிஷ்வந்த், “நிஹி, என்னாச்சு?” நிஹாரிகாவின் தோளில் கை வைத்து வினவ, சற்று முன் அவனின் தீண்டலிலும் பிடியிலும் அணுஅணுவாய் பாகாய் உருகியவள், இப்போது வெறுப்புடன் நெளிந்தாள்.

அவனுக்கோ மோகம் அறுபட்ட கோபம் ஒரு புறம் இருந்தாலும், தன்னைக் குறுக்கிக் கொண்டு அவள் தலை குனிந்து அமர்ந்திருந்த விதம் அவனுக்கு இதயத்தை யாரோ வெட்டிப் போட்டதைப் போன்ற வலியைக் கொடுத்தது. இப்போது அவளின் உதாசீனமும் அவனுக்கு எரிச்சலைக் கிளப்பியது.

“ஏன்டி நான் தொட்டா பிடிக்கலையா?” ரிஷ்வந்த் சற்று சினம் பொதிந்த குரலுடன் கேட்க, நிஹாரிகாவிடம் பதிலில்லை.

“ஏய்! பேசிட்டு இருக்கேன்லடி.. பதில் சொல்லு” என்று அவளின் தோள்களைப் பிடித்துத் தன்னை நோக்கித் திருப்ப, அவன் இழுத்த இழுப்பில் அவன் புறம் திரும்பிய நிஹாரிகாவின் விழிகள் ஈரமாய் இருந்தது.

அவளின் விழிகளில் இருந்த நீரைக் கண்டு பதறியவன், “நிஹி, நான் ஏதாவது உன்னை கஷ்டப்..” அவன் முடிக்கவில்லை. நிஹாரிகா அவனின் வெற்று மார்பில் முகம் புதைத்து, அவன் முதுகைச் சுற்றி கைகளைப் போட்டு தன்னவனை இறுக அணைத்திருந்தாள்.

வலி தந்தவனிடமே மருந்தை நாடினாள் பேதையவள்.

மனைவியின் செயல்கள் முரண்பாடாக இருக்க, அவளின் முதுகை தட்டிக் கொடுத்த ரிஷ்வந்த், எதுவும் கேட்கவில்லை. அவனுக்குப் புரிந்தது. தான் என்ன சொன்னாலும் நிஹாரிகா அவளாக மாறினால் தான் உண்டு என்று.

கடந்த காலத்தில் விட்ட வார்த்தையை நினைத்து இப்போது மருகியவனுக்கு, தன்னவள் படும் துன்பத்தைக் கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அவளின் வலி, அவனைப் படுத்தியெடுத்து அதை விட இரண்டு மடங்கு அதிக வலியை தந்து கொண்டிருந்தது.

ரிஷ்வந்த் நிஹாரிகாவின் தலையைத் தட்டிக் கொடுக்க, அவனின் மார்பில் நாடியை வைத்து நிமிர்ந்து பார்த்தவளின் கண்கள் ஈரமாய் இருந்தது. அவள் கண்களைத் துடைத்து விட்டவனின் புஜத்தை இறுகப் பற்றியவள் அவனை அடிபட்ட பார்வை பார்த்து, “என்னால முடியல ரிஷ்வந்த்.. எனக்கு எல்லாத்துக்கும் ஆசையா இருக்கு.. ஆனா ஏத்துக்க முடியல.. ஏதோ ஒண்ணு தடுக்குது.. நீ சொன்ன அந்த வார்த்தை தான் காதுல விழுகுது.. என்னோட பாடி உனக்கு ரெஸ்பான்ட் பண்ணாலும் என்னோட மனசுல ஏனோ ஒண்ணு விட மாட்டிது.. எனக்கு அதை சொல்லத் தெரியல..” என்றவள் அவன் மார்பில் புதைந்து அழுகையைக் கட்டுப்படுத்தியபடி பேசினாலும், அவளின் விழிகள் வலியில் ஈரமாகி அவனின் நெஞ்சில் பட்டது.

“ஸாரி ரிஷ்வந்த்.. எனக்கு என்னமோ நான் உன்னை ஆசை காட்டி ஏமாத்திற மாதிரி இருக்கு.. உண்மையாவே வேற பொண்ணை கல்யாணம் பண்ணியிருந்தா சந்தோஷமா இருந்திருப்பியோ நீ” என்றாள். இறுதி வாக்கியத்தை சொல்லும் போதே அவளின் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.

“தப்பு பண்ணிட்டேன் ரிஷ்வந்த்.. பேசாம உன்னை உன் வழில விட்டிருக்கனும்.. தேவையில்லாம உன்னையும் இழுத்துவிட்டு..” என்றவள் அதற்கு மேல் முடியாமல் அவன் நெஞ்சில் ஆழப் புதைய, “நிஹி” என்று அழைத்தான் ரிஷ்வந்த்.

“ம்ம்” என்றவள் அவன் நெஞ்சில் சாய்ந்திருக்க, “நம்ம இரண்டு பேரும் தனியா இருக்க சந்தர்ப்பம் எத்தனை தடவை வந்திருக்குன்னு ஞாபகம் இருக்கா உனக்கு.. கல்யாணத்துக்கு அப்புறம் விடு.. கல்யாணத்துக்கு முன்னாடி நான் கேக்கறேன்” என்க, அவனின் கேள்வி புரிந்து நிமிர்ந்தவளின் நெற்றியில் நெற்றியால் முட்டியவன், ஏமாற்றத்தையும் ஆதங்கத்தையும் தன் புன்னகைக்குப் பின் மறைத்தான். அவளுக்காக. தன்னால் ஏற்பட்ட அவளின் ரணம் ஆறுவதற்காக.

“அப்ப நம்ம நினைச்சிருந்தா என்ன வேணாலும் தப்பு பண்ணியிருக்கலாம்.. நம்ம அப்ப ஒரு செல்ப் கன்ட்ரோல்ல இருந்தோம்.. அதாவது நீ என்னை தூண்டி விட்டதும் இல்ல.. நான் உன் பீலிங்ஸ் புரிஞ்சுக்காம எல்லை மீறினதும் இல்ல..” என்றவன் முன் விழுந்திருந்த அவளின் கற்றை முடிகளை ஒதுக்கிவிட்டு, “ஸோ, அப்ப இரண்டு பேரும் நம்ம மனசுக்கு முக்கியத்துவம் குடுத்திருக்கோம் ரைட்.. அதாவது அடுத்தவங்க எதிர்காலத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் தந்திருக்கோம். பயத்துல தப்பு பண்ணலனும் சொல்ல முடியாது. ஏன்னா நம்ம இரண்டு பேருமே எதுக்கும் அவ்வளவு பயப்படறவங்க கிடையாது. அதுவும் இந்தக் காலத்தில்.. இப்ப இருக்க அட்வான்ஸுக்கு” என்றவன், “இப்ப கல்யாணம் ஆனதுனால நம்ம கொஞ்சம் அந்த விஷயத்துல தடுமாற்றோம்டி.. அது தப்பும் இல்ல.. அது மனுஷங்களுக்கு இருக்க நேச்சர் சரியா.. இதுக்கு போய் ஏன்டி ஏதேதோ பேசிட்டு இருக்க” ரிஷ்வந்த் இரு புருவங்களையும் உயர்த்தி வினவ, நிஹாரிகா அவனை விட்டு விலகி, அவனின் முகத்தைப் பார்த்து, “அப்ப உனக்கு வருத்தம் இல்லியா?” என்று கேட்டாள், போர்வையை இன்னும் இறுகப் பற்றியபடியே.

மனையாளின் கேள்வியில் இரு கைகளையும் பின்னே கொண்டு சென்று தலைக்குக் கொடுத்து கட்டிலில் சாய்ந்தவன், “இல்லன்னு பொய் சொல்லமாட்டேன்.. ஆனா, லைட்டா ஃபீலிங் தான்.. எத்தனை நாள்டி கன்னிப் பையனா இருக்கிறது” என்க, அவனின் குரலில் வழிந்த நக்கலை உணர்ந்தவள், அவனை முறைக்க, “பட் யூ ஆர் செம ஹாட்டி.. நல்ல காரசாரமான ஆந்திராக் கோழிதான் நீ” என்று மேலும் அவன் அவளை வர்ணித்து சீண்ட, அருகிலிருந்த தலையணையை எடுத்து அவனை அடிக்கத் தொடங்கியவளைத் தடுத்தவன், “அடங்குடி.. அப்புறம் போர்வை கழண்டு விழுந்திடப்போகுது” என்றான் அவளின் மேல் பார்வையை ஓடவிட்டபடியே.

அவனின் பார்வையில் கூசியவள், போர்வையை சரிசெய்து கொண்டே அவனை முறைக்க, எழுந்தவன், கீழே கிடந்த தனது டி சர்ட்டை எடுத்து அணிந்துகொண்டு, “நீ இங்க படு.. நான் வெளிய படுத்திக்கறேன்.. பட் இன்னும் ஒன் ஹார் தான் தூங்க முடியும்.. ஐஞ்சு மணிக்கு கார் வரும்.. நம்ம வீட்டுக்கு போயிட்டு.. அங்க இருந்து பிரகாஷ் சார் வீட்டுக்குப் போறோம்” என்றவன் வெளியேற, சற்று முன் அவனின் நெஞ்சில் புதைந்திருந்தவளுக்குத் தெரியும் தன்னால அவன் என்ன பாடு படுகிறான் என்று.

படுக்கையில் அப்படியே சரிந்தவள், தொண்டையடைக்க அழுகையைக் கட்டுப்படுத்த, ரிஷ்வந்தும் வெளியே வரவேற்பறையில் கையை மடக்கி தலைக்குக் கொடுத்து, யோசனையில் படுத்திருந்தான்.