நிஹாரி-33(prefinal)

IMG-20211003-WA0016-d37970c7

நிஹாரி-33(pre-final)

“நல்லா பயந்து அலற வச்சுட்டீங்க தாத்தையா?” என்றாள் நிஹாரிகா அவரின் கரத்தை தன் கரங்களுக்குள் வைத்தபடி.

“உன்னை விடவா பங்காரம்” என்றவர் பேத்தியைப் பார்த்து, “என் உயிரே போயிருக்கும் பங்காரம் உனக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தா” என்றவரின் குரல் இறங்கிப் போய் ஒலிக்க, “தாத்தையா!” என்று அவரைக் கண்டித்தவள், “இப்படி எல்லாம் பேசாதீங்க” என்றாள் சிறிது மிரட்டலுடன்.

“சரி சரி பேசல” என்று வாயை இறுகிக்கொண்டவரைக் கண்டு புன்னகைத்தவள், “அவ்வா(பாட்டி) எப்படித்தான் சமாளிச்சாங்களோ உங்களை” என்று செல்லமாக அவரை திட்டினாள்.

உள்ளே வந்த செவிலியர் சக்கரவர்த்தியை பரிசோதித்துவிட்டுச் செல்ல, “என்னடா நடந்துச்சு?” என்று மெதுவாக பேத்தியிடம் வினவினார்.

“தாத்தையா.. நீங்க வீட்டுக்கு வந்ததுக்..” என்று நிஹாரிகா அவரின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு சொல்ல, அவரோ பிடிவாதமாய், “எனக்கு உன்னை பாத்தது போதும் பங்காரம்.. என்னை வேற எதுவும் பாதிக்காது” என்று அவர் விடாமல் கேட்க, நடந்ததை ஒன்றுவிடாமல் அவரிடம் கூறியவள் அவரை ஏறிட்டுப் பார்த்தாள்.

சக்கரவர்த்தியோ முகத்தில் எதையும் காட்டாமல் அமர்ந்திருக்க நிஹாரிகாவுக்கு அவரின் முகத்தை வைத்து எதையும் கணிக்க முடியவில்லை. சில நொடிகள் அவரைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தவள், “என்னால முடியல தாத்தையா.. அவன்கிட்ட சொல்லி என்னால புரிய வைக்க முடியல.. அதான் அவனை..” என்றவள், “அர்ஜூன் அங்கிள்காகவும், சுரேகா ஆன்ட்டிகாகவுமே அவனுக்கு எதுவும் ஆகக்கூடாதுனு இருக்கு தாத்தையா” என்றாள் அவர்களை நினைத்து வேதனையுடன்.

“எது நடந்தாலும் நீ எப்பவும் போல உன் தைரியத்தை விட்றாத பங்காரம்.. அதுதான் நான் உனக்கு தர அட்வைஸ்” என்றவர், “நீயும் ரிஷ்வந்தும் நல்லா இருந்தா தான் எனக்கு நிம்மதியே” நாசுக்காக சொன்னவருக்கு மருந்தின் காரணத்தால் கண்கள் தூக்கத்தை வருட,

“கண்டிப்பா தாத்தையா. நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க தாத்தையா.. நான் வெளிய இருக்கேன்” என்று அவரின் உள்ளங்கையில் அன்போடு முத்தமிட்டவள் அவரை சரியாகப் படுக்க வைத்துவிட்டு வெளியே வந்தாள்.

வெளியே வந்தவள் அங்கிருந்த இருக்கையில் அமரும் போதுதான், தன் உடல் சோர்வை உணர்ந்தாள். நன்றாக சாய்ந்து அமர்ந்தவள், நேற்று நடந்ததில் இருந்து இப்போதுவரை நினைத்துப் பார்த்தாள். ஓட்டமாக இருந்த நாளை எண்ணிப் பார்த்தவளின் உடலும் மனமும் தூக்கத்திற்கு ஏங்கியது.

ஒரு பெருமூச்சை விட்டவள் விழிகளைத் திறந்து, தன் அருகில் அமர்ந்திருந்த அன்னையையும், தனக்கு எதிரில் அமர்ந்திருந்த தந்தையையும் கணவனையும் பார்த்து, “தாத்தையா ரொம்பவே டயர்டா தெரியாரு” என்று வருத்தப்பட, “நீ அதைவிட டயர்டா தெரியறடா.. வீட்டுக்கு போயிட்டு தூங்கி எந்திரிச்சு ப்ரெஷ் ஆகி வாங்க” என்று மகாதேவன் சொல்ல, இருவரும் வீட்டிற்குக் கிளம்ப எழுந்தனர்.

இருவரும் கீழ் தளத்திற்கு வர, நிஹாரிகாவின் ஜாக்வாரும், ரிஷ்வந்தின் பென்ஸும் கம்பீரமாக போட்டி போட்டுக் கொண்டு நிறுத்தப்பட்டிருந்தது. அவர்களது பாதுகாவலர்கள் இருவரையும் அறிந்தவர்களாய் அவ்வாறு எடுத்து வந்திருந்தனர்.

இருவரும் தங்களது கார்களை பார்த்தவண்ணம் நிற்க, நிஹாரிகாவைப் பார்த்த ரிஷ்வந்த், ‘இவ எப்படியும் அவ கார்ல தான் வருவா’ என்று பெருமூச்சை விட்டபடி, தனது காரில் ஏறி அமர, தனது காரின் அருகே சென்றாள் நிஹாரிகா.

தனது பாதுகாவலர்களிடம் ஏதோ சொல்லியவள், ரிஷ்வந்தின் பென்சை நோக்கி வந்து, அவனின் அருகிலிருந்த இருக்கையில், அவனின் மனைவியாக, உடல் அடித்துப் போட்ட அயர்வில் இருந்த போதிலும் கம்பீரமாக ஏறி அமர்ந்தவள், கணவனைத் தனக்கே உண்டான திமிர் சிரிப்புடன் பார்த்து வைக்க, அவனின் இதழோரங்களும் அவளின் செய்கையில், குறும்(பு)புன்னகையை உதிர்த்தது.

“உன் காரை நீ யாரையும் தொட விடமாட்டியே?” ரிஷ்வந்த் புன்னகையுடன் வினவ, “நானாவும் அம்மாவும் வரும்போது எடுத்திட்டு வந்திடுவாங்க” என்று அலட்டிக் கொள்ளாமல் சொன்னவளை பார்வையால் மெச்சியவன், அதரங்கள் விரிய புன்னகையுடன் பென்ஸை உறுமவிட்டான்.

கணவனின் வதனத்தில் தெரிந்த புன்னகையில், அவனின் மகிழ்ச்சி அவளையும் தொற்ற, புன்னகையை உதட்டில் படரவிட்டவள், வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். மனைவியின் செயலில் அவனின் மனம் துள்ள, பென்ஸை புயல் வேகத்தில் பறக்கவிட்டான்.

வெளியே பார்த்தபடி வந்த நிஹாரிகாவின் கண்கள் நித்ராதேவியின் மகிமையால் சுழலத் துவங்க, ரிஷ்வந்தின் தோளில் சாய்ந்தவள் கண்களை மூடித் தூங்க ஆரம்பிக்க, மனைவியைத் தன் கை வளைவிற்குள் கொண்டு வந்தவன், தனது காரின் வேகத்தைச் சற்று குறைத்தான்.

திருமணத்தின் அன்று இருந்த மனநிறைவை விட இன்றைய மனநிறைவு அதிகபட்சமாக இருப்பதை உணர்ந்தவன் மனைவியைப் பார்த்தான். அத்தனை இடர்களை ஒற்றை ஆளாகச் சமாளித்து தன்னைக் காத்துக்கொண்ட மனைவியை பெருமை பொங்க பார்த்தவன், அவளின் உச்சந்தலையில் மென்மையாய் முத்தமிட்டான். கடுகளவும் அதில் காமம் இல்லை. உடல் இரண்டும் இணையாத போதிலும், அவனின் மனம் இருவரும் ஆயிரம் வருடங்கள் வாழ்ந்த திருப்தியைக் கொடுத்தது.

ஒவ்வொரு அசம்பாவிதத்திற்கு பிறகும் இருவரின் காதலும், அன்பும் கூடிக் கொண்டேதான் செல்கிறது. ஒவ்வொரு பிரிவும் அவர்களை பிரிக்கவே இயலாத அளவிற்கு இணைத்து வைக்கத்தான் செய்கிறது.

இதைத்தான் ஆண்டவன் போட்ட முடிச்சு என்று பலர் கூறுவதோ?

வீடு வந்து சேர்ந்த போதும் நிஹாரிகா எழவில்லை. கணவனின் தோள் வளைவிற்குள் நன்றாக சாய்ந்து சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். காரை நிறுத்தியவன், “நிஹி” என்று அவள் காதருகே மெதுவே அழைக்க, “ஹம்” என்றாள் தூக்கத்திலேயே.

சிரிப்பை சிரமப்பட்டு அடக்கினான் அவன். மறுபடியும் அறை வாங்க அவன் தயாராக இல்லை. “நிஹி, வீடு வந்திருச்சு எந்திரி” என்று அவளின் கன்னங்களைத் தட்டி அவன் எழுப்ப, கண்களை சிரமப்பட்டு திறந்தவள் கணவனிடம் இருந்து இயல்பாய் விலகினாள்.

காரிலிருந்து இறங்கிய இருவரும் உள்ளே செல்லும் முன், “நில்லுங்க” என்றபடி வந்த சந்திராமா, “இதெல்லாம் அன்னிக்கே பண்ணியிருக்கனும்.. கல்யாணக் குஷியுல ஆரத்தி சுத்துனதோட மறந்தாச்சு” என்றவர் பெரிய பூசணிக்காயை அருகில் நின்றிருந்த சக பெண்மணியிடம் வாங்கி சுற்றி திருஷ்டியைக் கழித்து, “என் கண்ணே அதிகம் பட்ருச்சு போல பாப்பா” என்று நிஹாரிகாவின் கன்னத்தை வழித்து நெட்டி முறித்தார்.

உள்ளே நுழைந்த இருவரிடமும் சந்திராமா, “குளிச்சிட்டு வந்து கையோட சாப்பிட்டிருங்க” என்றிட, “கையோட தான் சந்திராமா சாப்பிட முடியும்” என்று நிஹாரிகா பத்து வருடங்களுக்கு முன்னால் செத்துப்போன மொக்கை ஜோக்கை அறுக்க, அவளின் தலையில் செல்லமாகக் கொட்டினான் அவள் கணவன்.

“அவள் இப்படித் தான் சந்திராமா அப்பப்ப” என்றவன் மனைவியை அலேக்காகக் கையில் தூக்க, அவனின் செய்கையில் அங்கிருந்த சில வேலையாட்கள் வெட்கப்பட்டு ஓடிவிட, நிஹாரிகாவோ கணவனை ஒற்றைப் புருவத்தை உயர்த்தி பார்த்து, பல்வரிசை தெரிய அழகாய் சிரித்தவள், அவனின் கழுத்தைச் சுற்றி கை போட்டுக் கொண்டாள்.

“ஏய், இந்த சீன் எல்லாம் நடந்தா சாதாரணமா பொண்ணுங்க எல்லாம் வெக்கப்படுவாங்க இல்ல சிரிப்பாங்க..” அவன் பொய்யான அதட்டலோடு சொல்ல,

“அது சாதாரணமான பொண்ணுங்க.. நிஹாரிகா இல்ல” என்று ஒற்றை விரலை உயர்த்தி இடமும் வலமும் கெத்தாக, ‘இல்லை’ என்பதுபோல ஆட்டியவள், “சீக்கிரம் மேல தூக்கிட்டுப் போ. எனக்கு டயர்டா இருக்கு” என்று அவனின் தோளில் தலை சாய்த்துக்கொள்ள, அவனோ வதனத்தின் சிரிப்பு மாறாமல் அவளை இறகைப்போல ஏந்திக்கொண்டு தங்கள் அறைக்குள் நுழைந்தான்.

அறைக்குள் நுழைந்தவள் படுக்கையில் விழ, கப்போர்டில் இருந்த அவளது உடைகளை எடுத்து வைத்தவன், “போய் குளிச்சிட்டு வா” என்றிட, “டயர்டா இருக்கு.. அப்புறம் குளிக்கறேன்” என்று திரும்பிப் படுத்தவளின் அருகே அவளைப்போலவே படுத்தவன், அவளின் இடையைச் சுற்றி கைபோட்டு அருகில் இழுத்தவன், தனது மீசை ரோமங்கள் அவளின் செவி மடல்களில் உரச, “நான் வேணா குளிக்க வைக்கட்டுமா பெண் சிங்கமே” என்று கேட்க, கணவனின் தாபம் வழிந்த குரலில் வெடுக்கென்று நிமிர்ந்து அமர்ந்தவள் அவனை பொய்யாய் முறைத்தாள்.

“இப்ப நீ குளிக்கல நான் சொன்னதை செஞ்சிடுவேன்” என்றவனின் வாயில் சுண்டியவள், ‘பத்திரம்’ என்று எச்சரித்துவிட்டு குளியல் அறைக்குள் புகுந்துகொண்டாள்.

தனது பாத்டப்பில் வெதுவெதுப்பான நீரில் பதினைந்து நிமிடம் உறங்கியவள், ரிஷ்வந்தின் அலைபேசி வெளியே அடித்த சத்தத்தில் விழித்துக் கொண்டாள்.

“சொல்லுங்க அங்கிள்.. எப்படி இருக்கு?” என்ற கணவனின் குரலிலேயே நிஹாரிகா அழைத்தது அர்ஜூன் என்று புரிந்துகொண்டு, ஐந்து நிமிடத்தில் அவசரமாக வெளியே வந்தாள்.

தன்னுடைய பாத்ரோபுடன் வெளியே வந்தவள் தலையில் ஈரம் சொட்ட, “என்னாச்சு?” என்று சிறிது பதட்டத்துடன் கேட்க, ரிஷ்வந்ந் எதுவும் பேசாமல் அலைபேசியை நிஹாரிகாவிடன் தந்தான்.

“ஹலோ அங்கிள்” நிஹாரிகா குற்ற உணர்வுடன் அழைக்க, “நிஹி” என்று கரகரப்புடன் வந்த சுரேகாவின் குரலில் நிஹாரிகா உள்ளுக்குள் மறுகினாள்.

“ஆன்ட்டி” என்றவளின் குரலில் அவளுக்கே கேட்கவில்லை. தன்னால் அவருக்கு என்ன ஆறுதல் சொல்லமுடியும் என்று அவள் உள்ளுக்குள் நினைத்து வேதனை அடைந்தாள்.

“நிஹி, ஸாரிடா.. இவன் இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கலடா” என்றவரின் அழுகுரலே அவளுக்குக் கேட்டது.

“ஆன்ட்டி நவ்தீப்?” நிஹாரிகா கேட்க, “அவனுக்கு உயிருக்கு ஆபத்து இல்லடா.. ஆனா, அவன் கண் முழிச்ச அப்புறம் தான் எதுவா இருந்தாலும் தெளிவா சொல்ல முடியும்னு சொல்லிட்டாங்க” என்றிட, அப்போது தான் நிஹாரிகாவுக்கு மூச்சு வந்தது.

“ஸாரி ஆன்ட்டி” என்றாள். அது நவ்தீப்பின் பெற்றோருக்கு மட்டுமே. அவனுக்கு அவள் அதைக் கேட்க மாட்டாள். அவளைப் பொறுத்தவரை இந்த நொடிவரை அவள் செய்தது சரியே. பாவம் பார்த்துவிட்டு பிறகு வாழ்க்கை முழுதும் அழுது தீர்க்கும் பெண் அவளில்லை.

“எதுக்குடா ஸாரி.. நீ இதைப் பண்ணலனாதான் நான் வருத்தப்பட்டிருப்பேன்.. எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை.. எல்லா வருத்தமும் நான் சரியா இவனை வளர்த்தலையோன்னு நினைச்சு தான்..” என்றவர், “சரியா டாக்டர் வர்றாங்க.. நான் பேசிட்டு கூப்பிடறேன்” என்று வைத்துவிட்டார்.

அலைபேசியை கணவனிடம் தந்த நிஹாரிகா, ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் கணவன் அருகில் அமர்ந்தாள். அவளின் கரத்தோடு தன் கரத்தைக் கோர்த்துக் கொண்டவன், “நீ எதுக்கும் ஃபீல் பண்ணாதடி” என்றிட,

“ஒருவேளை என்னை அவன் ஏதாவது பண்ணியிருந்தா என்ன பண்ணியிருப்ப ரிஷ்வந்த்” நிஹாரிகா அவனை நேராய்ப் பார்த்தபடி வினவினாள். அப்படி நடக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை. தன் மேல் ஒருவன் கை வைப்பதற்கு முன் அவன் உயிர் அவனிடம் இருக்காது என்று நிஹாரிகாவுக்கு உறுதியாகத் தெரிந்தாலும்.. ஒருவளை நடந்திந்தால் என்று நினைத்தது அவள் மனம்.

அதுவும் அதைக் கணவன் எப்படி எடுத்துக்கொள்வான் என்று அவள் மனம் அவளிடம் கேள்வி கேட்டது.

மனைவியின் முகத்தைக் கையில் ஏந்தியவன், “நீ அதுக்கு மொதல்ல விட்டிருவியாடி” என்று இருபுருவங்களை உயர்த்தி புன்சிரிப்புடன் அவன் கேட்க, “சப்போஸ் நடந்திருந்தா?” என்று கேட்டாள் நிஹாரிகா விடாது.

“நடந்திருந்தா என்ன பண்ணியிருப்பேன்” என்று யோசித்தவன், “உன்னை அந்த நிலைக்கு ஆளாக்குனவன் ஒவ்வொருத்தனுக்கும் நரகம்னா என்னன்னு வாழும் போதே காமிச்சிருப்பேன். அந்தக் காலத்துல காஃபின்ஸ் டார்ச்சர்னு ஒண்ணு இருக்கு.. அதாவது மனுஷனோட உருவுல இருக்க மெட்டல் பாக்ஸ்ல அவனுகள குத்தியிரா அடைச்சு உள்ளே எலியை விட்டா.. அது அவனுகளோட சதையை கொஞ்சம் கொஞ்சமா கடிச்சு கடிச்சு திண்ணு எடுத்திரும்.. அப்படித் துடிக்கவிட்டு சாகடிச்சிருப்பேன் ஒவ்வொருத்தனையும்” என்று சொல்லும் போதே ரிஷ்வந்தின் முகம்போன போக்கில் நிஹாரிகா திகைத்தாள். விகாரமாய் மாறி இருந்தது அவன் முகம் என்று கூட சொல்லலாம். அத்தனை ரௌத்திரம் அவன் முகத்தில்.

தன்னை திகைப்புடன் பார்த்த மனைவியை பார்த்து மென்மையாய் புன்னகைத்தவன், “இந்த மாதிரி பொண்ணுங்களை வன்கொடுமை செய்ய நினைச்சாலே நம்ம நாட்டுல இந்த மாதிரி தண்டனை கொடுக்கணும்டி.. ஆனா சிலரு கொடி தூக்கிட்டு வந்திடுவானுக.. ஒரே ஒரு தடவை ஒருத்தனுக்கு இந்த மாதிரி தண்டனை கொடுத்தா.. அடுத்து ஒரு பொண்ணு மேல கை வைக்கறதுக்கு முன்னாடி யோசிப்பானுக” என்றான் ரிஷ்வந்த்.

நிஹாரிகா கேட்கத் துடிப்பதை உணர்ந்தவன், “எனக்கு நீ மட்டும் தான்டி முக்கியம். சப்போஸ் ஏதாவது நடந்திருந்தா நான் உன்னை விட்டுட்டு போயிருவனா.. அந்த அளவுக்கு நான் நேரோ மைன்ட் இருக்க முட்டாள் இல்ல.. கலாச்சாரவாதியும் இல்ல.. பச்சையா சொல்றேன்னு வச்சுக்க.. ஒரு பொண்ணாட கற்பு அவ காலுக்கு நடுவுல இல்லனு நினைக்கறவன் நான்..” என்றவன் அவளின் நெற்றியில் முத்தமிட, அவளின் கண்கள் சிறிது பனித்தது.

“ரிஷ்வந்த்!” என்று கணவனின் நெஞ்சில் சாய்ந்தவள் அவனை இறுக அணைத்தாள். கண்ணீர் வரப் பார்க்க, ‘இதுக்கு எதுக்குடி அழுகற?’ என்று அவளின் மனம் அவளை செல்லமாய்க் கடிய கணவனுடன் தன்னை இறுக்கிக் கொண்டாள்.

அவனின் நெஞ்சில் முத்தமிட்டு நிமிர்ந்தவள், “வேர்வை ஸ்மெல் அடிக்குது பாவா.. என்னை மாதிரி நீட்டா குளிக்கணும்.. நீ டர்ட்டி பாய்” என்று அவனை வம்பிழுத்தாள் அவனவள். நேற்றில் இருந்து அவன் அலைந்த அலைச்சல் அப்படியே. வியர்வையில் குளித்தான் என்றுதான் சொல்லவேண்டும்.

“நான் நினைச்சா இப்ப உன்னையும் டர்ட்டி ஆக்க முடியும்டி” என்று இரண்டை அர்த்தம் அல்லாது நேரான அர்த்தத்திலேயே சொன்ன கணவனின் சொல்லில் சிறிது வெட்கப்பட்டவள், எழுந்து நின்று, “ஐம் வெயிட்டிங்” என்று சொல்லிவிட்டு பாத்ரோபில் இருந்தவள் உடை மாற்றும் அறைக்குள் செல்ல எத்தனிக்க,

“வெயிட்டிங்னு அங்க போய் ட்ரெஸ் மாத்துனா என்னடி அர்த்தம்..” என்று கட்டிலில் சாய்ந்து கொண்டு வம்பிழுத்தக் கணவனைத் திரும்பிப் பார்த்தவள், “பாவா குளிச்சிட்டு வரணும்னு அர்த்தம்” என்று நாக்கைத் துருத்திக்கொண்டு சென்றவளைப் பார்த்திருந்தவன் குளியல் அறைக்குள் புகுந்தான்.

குளித்து முடித்து வெளியே வந்தவன் நிஹாரிகாவைத் தேட அவளோ கீழே சந்திராமாவுடன் இருந்தாள். கீழே வந்தவன் சாப்பிட அமர நிஹாரிகாவும் உடன் அமர்ந்தாள். காட்டுப் பசி என்றால் என்ன என்பதை அப்போது தான் இருவரும் உணர்ந்தனர். கிட்டத்தட்ட சந்திராமா தோசை சுட்டுச்சுட்டு ஒரு டப்பா மாவே காலியாகிப் போனது.

சாப்பிட்டு முடித்து எழுந்த இருவரும் அறைக்கு வந்து, தூங்க ஆயத்தமாக, நிஹாரிகா கணவனின் அருகில் வந்தாள். அவளை தன் நெஞ்சின் மீது போட்டுக் கொண்டவன், “தூங்குடி” என்க, தலையை நிமிர்த்தி அவனை முறைத்தவள், “ம்கூம்” என்று முறுக்கிக்கொண்டு திரும்பிப் படுத்தாள்.

தன்னவளின் செயலில் சிரிப்பு எட்டிப் பார்க்க அவளைப் பின்னிருந்து அணைத்தவன், “ஏன்டி?” என்று வினவ, “போய்த் தூங்கு” என்றாள் கோபமாக.

“நீ ரொம்ப டயர்டா இருக்கடி.. கண்ணு எல்லாம் ஆந்து போயிருக்கு.. அதுனால தான் சொல்றேன் தூங்கு” என்றவன் அவளின் செவியில் முத்தமிட, அவன் புறம் புரண்டவள், “ஆந்து போயிருக்க.. அப்படின்னா என்ன?” என்று சந்தேகம் கேட்டவளின் விழிகள் இரண்டின் மேலும் மென்மையாய் முத்தமிட்டவன், அர்த்தத்தைச் சொல்ல, கணவனின் நெஞ்சின் மேல் படுத்தவள், அவனுடன் பேசியபடியே உறங்கிப் போனாள்..
இருவரும் எழுவதற்குள் மணி மூன்றாகி இருந்தது. எழுந்தவர்கள் கீழே வந்து உண்டுவிட்டு கிளம்பி மருத்துவமனைக்குச் சென்றனர். இரவு வரை இருந்த நிஹாரிகா அன்னை தந்தையின் அயர்வைக் கண்டாள். கணவனிடம் வந்தவள், “இன்னிக்கு நைட் தாத்தையா கூட இருக்கட்டா? ப்ளீஸ்” என்று வினவ அவளை முறைத்தவன், “இங்க பாரு நிஹி.. இன்னொரு தடவை இப்படி வந்து கேக்காத.. திஸ் இஸ் பர்ஸ்ட் அன்ட் லாஸ்ட்.. உனக்கு இருக்கணும்னா இருந்துட்டு வா.. இதுக்கெல்லாம் வந்து ப்ளீஸ்னு கேப்பியா?” என்று காட்டமாகப் பேசியவன், “நமக்கு நம்ம லைஃப் ஸ்டார்ட் பண்ண டைம் இருக்கு.. இரண்டு பேரும் கிழவன் கிழவி இல்ல” என்றவனின கன்னத்தில் எதிர்பாராத நேரத்தில முத்தமிட்டவள், “பை பாவா” என்று உள்ளே சென்றுவிட்டாள்.

மனைவியின் செயலில் பேசிக் கொண்டிருந்ததை மறந்து போனவன், சிரித்தபடியே திரும்ப, விவாஹா நின்றிருந்தார். அவர் வரும்போதே மகள் செய்த காரியத்தைப் பார்த்துவிட்டார். மாமியார் பார்த்துவிட்டதை உணர்ந்த ரிஷ்வந்துக்கு வெட்கம் வந்து தொலைக்க, சிறுவன் போலத் தடுமாறியவன், “வர்றேன் அத்தைகாரு” என்று சென்றுவிட்டான்.

மருமகனின் முகத்தில் வழிந்த நாணச் சாயலையும், அதில் தெரிந்த காதலின் செழுமையையும் கண்ட விவாஹாவுக்கு அத்தனை நிம்மதியாய் இருந்தது. நேராக கணவரிடம் சென்றவர் கண்ணால் கண்ட விஷயத்தைச் சொல்லி, மருமகன் அதன் பிறகு வெட்கப்பட்டதைச் சொல்லி சிரிக்க, மனைவியின் கன்னங்களில் அழுந்த முத்தமிட்ட மகாதேவன், “என்னை விடவா?” என்று கேட்க,

அவரின் தோளில் செல்லமாய் அடித்தவர், “பேரப்பிள்ளையே கொஞ்ச நாள்ல வந்துடும்.. என்ன இது?” என்று சிணுங்கிய மனைவியின் வெட்கத்தை அந்த வயதிலும் ரசித்த மகாதேவன், சக்கரவர்த்தி இருந்த அறைக்குள் மனைவியோடு நுழைந்தார்.

“நானா நீங்க அம்மாவை கூட்டிட்டு போங்க.. நான் தாத்தையா கூட இன்னிக்கு இருக்கேன்” என்று நிஹாரிகா உரிமையாய் பேச, அவருக்கு அவளின், “நானா” என்ற அழைப்பில் உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் பூரித்துப் போனது.

மகளின் தலையை வருடிக் கொடுத்தவர், “நீ கிளம்புடா” என்று சொல்ல, “மூச்” வாயில் மேல் விரலை வைத்து மிரட்டியவள் இருவரையும் அனுப்பி வைக்க, சக்கரவர்த்திக்கு இரவு வேண்டியதைப் பார்த்துக் கொண்டவள், நாற்காலியில் அமர்ந்தபடியே உறங்கியும் போனாள்.

அடுத்த நாள் காலை சக்கரவர்த்தியைப் பார்க்க வந்த மூவரும் சக்கரவர்த்தி புத்தகம் படித்துக் கொண்டிருப்பதையும், நிஹாரிகா உதடுகள் சிறிது பிரிந்து தூங்கிக் கொண்டிருப்பதையும் கண்டு சத்தமாகச் சிரித்துவிட, அவர்களின் சத்தத்தில் எழுந்தவள், முதலில் எதற்கு சிரிக்கிறார்கள் என்று புரியாமல் விழிக்க, தாத்தையாவைப் பார்த்தவளுக்கு புரிந்து போனது அவர்களது சிரிப்பிற்கான காரணம்.

“தாத்தையா” என்று சிணுங்கியவள் அவரின் தோள் மேல் லேசாக சாய்ந்து கொள்ள, மூவரையும் பார்த்து சக்கரவர்த்தி, “மூச்” என்று அதட்டியதில் மூவரும் கப்சிப் என்று ஆகிவிட மூவரையும் பழித்துக் காட்டிய நிஹாரிகா, எழுந்து சென்று காலைக்கடன்களை முடித்துக் கொண்டு வந்தாள்.

சிறிது நேரம் இருந்த ரிஷ்வந்த் அருண் அழைத்தான் என்று கிளம்ப, நிஹாரிகா அன்று மாலை வரை அங்கிருந்து கிளம்பவில்லை.

“மாப்பிள்ளை ஃபோன் பண்ணாரு.. எட்டு மணிக்கு மாதிரி தான் வேலை முடியுமாம்.. எட்டு மணிக்கு மேல விசிட்டிங்கும் இல்லை.. நாளைக்கு காலைல வந்து பாக்கிறேன்னு சொல்லிட்டாரு” என்று மனைவியிடம் பூடகமாகச் சொன்னவர், சக்கரவர்த்தியுடன் அமர்ந்திருந்த மகளை கண்களால் மனைவிக்கு காட்ட, விவாஹா புரிந்து கொண்டார்.

மகளிடம் வந்தவர், “நிஹிம்மா.. நீ கிளம்பு.. எவ்வளவு நேரம் இருப்ப?” விவாஹா சொல்ல, “நான் அப்புறம் போறேன் ம்மா..” என்றாள்.

“இல்லடா மாப்பிள்ளை இங்க வரமுடியாதாம்.. நீ கிளம்பு” என்று அன்னை தோளை அழுத்தியதில், அன்னை உணர்த்திய செய்தியை புரிந்து கொண்டவள், நாணத்துடன் எழ, மூவரும் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டனர்.

“வர்றேன்” என்று பொதுவாகச் சொன்னவள் கீழே வர, அவளுடயை ஜாக்குவார் அவளை வரவேற்றது. காரில் ஏறி வீட்டிற்குப் பறந்தவள், தனது அறைக்கு வந்து படுக்கையில் படுத்தும் உறக்கம் வர மறுத்தது.

இனம் புரியாத உணர்வுகள் எழுந்து அவளை இம்சிக்கத் துவங்கியது. அடி வயிற்றில் ஏதேதோ செய்ய, ‘அய்யோ என்ன இது?’ என்று தனக்குள் சிணுங்கியவள், தனது லேப்டாப்பை உயிர்ப்பித்து, மறைத்து வைத்திருந்த போல்டரைத் திறந்து, இருவரும் பள்ளியிலும் கல்லூரியிலும் எடுத்த புகைப்படங்களைக் கண்டாள்.

அனைத்தும் இருரின் நட்பில் தொடங்கி காதல் வரை ஞாபகப்படுத்த, கடந்து வந்த இத்தனை வருடங்களை நினைக்க நினைக்கத் திகட்டவில்லை நிஹாரிகாவுக்கு. பொக்கிஷமாய் பூட்டி வைத்திருந்த பொன்காதல் மீண்டும் உயிர்த்தெழுந்தது.

பழைய நினைவுகளில் சுகமாய் மூழ்கி இருந்தவள் மணியைப் பார்க்க ஆறாகி இருந்தது. சில திட்டங்களை வகுத்தவள் நேரே சென்றது சந்திராமாவை தேடி.

“சந்திராமா” என்று மெல்லிய குரலில் அழைத்த தங்கள் வீட்டு இளவரசியை திரும்பிப் பார்த்தவரின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது. நிஹாரிகா நாணத்துடன் வெட்கத்தோடு அல்லவா நின்றிருந்தாள்.

“என்ன பாப்பா?” அவர் வினவ,

“எனக்கு ஒரு ஹெல்ப்” என்றாள் நெளிந்துகொண்டு.

“சொல்லுடா” என்றவரிடம் சுற்றியும் முற்றியும் பார்த்துவிட்டு யாரும் இல்லை என்று உறுதி செய்துகொண்டவள், தனது திட்டங்களைச் சொல்ல, சந்திராமா பார்த்த பார்வையில், கீழுதட்டைக் கடித்தவள், “இப்ப என்ன சொன்னேன்னு இப்படிப் பாக்கறீங்க?” என்று சிணுங்க, அவரோ, ‘இந்தக் காலத்து புள்ளைகளுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு.. நமக்கு தான் கண்ணைக் கட்டி காட்டுல விட்டாப்புல ஆகிடுக்கு’ என்று நினைத்தவர் அதை வாய்விட்டே நிஹாரிகாவிடம் சொல்லிவிட்டார்.
“அஹான்.. அதெல்லாம் தெரியாம தான் உங்க பொண்ணு இப்ப துபாய்ல இருக்கா?” என்று குறும்புடன் கேட்க, வெட்கப்பட்டவரிடம் மீண்டும் ஒரு முறை திட்டத்தைக் கூறியவள் ஏற்பாடுகளை செய்து கொடுத்துவிட்டு தனது அறைக்குச் சென்றாள்.

***
அருணிடம் படத்தின் சில விஷயங்களை பேசி முடித்துவிட்டு வரும் வழியில் மாமனாருக்கு அழைத்த ரிஷ்வந்த், சக்கரவர்த்தியிடம் பேசிவிட்டு வைக்கப்போக, நிஹாரிகா வீட்டில் இருப்பதை மகாதேவன் மருமகனிடம் கூறிவிட்டே வைத்தார்.

வீட்டிற்குள் நுழைந்தவனை தடுத்த சந்திராமா, சாப்பிட அழைக்க, “உங்க பாப்பா எங்க?” கேலியாக கேட்க, அவரோ எதுவும் பேசவில்லை.

“நீங்க சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் பாப்பா சொல்ல சொல்லுச்சு?” என்றிட யோசனையாய் அவரைப் பார்த்தவன், “சாப்பிட்டா போச்சு” என்று டைனிங் டேபிளை நோக்கி வந்தவன், “நிஹி சாப்பிட்டாளா?” என்று வினவ அவரும் தலையாட்டியபடி அவனுக்கு பரிமாறினார்.

சாப்பிட்டு முடித்தவன், “நிஹி எங்க?” என்று கேட்க சிரித்தவர், “குளியல் மண்டபத்துல” என்றார்.

மந்தகாசப் புன்னகையுடன் எழுந்தவன் வீட்டிற்கு பின்னே வந்து படிகளில் இறங்க, அவனின் நாசியை மஞ்சளின் மணமும், சந்தனத்தின் மனமும் தீண்டியதில் அவனின் உடல் சிலிர்த்து அடங்க, வந்தவன் ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனான்.

கருங்கற்கலுக்கு மத்தியில், பொன் நிற அலங்கார விளக்கிற்கு கீழ், கொட்டும் சந்தனத்தின் வாசமும், மஞ்சளின் வாசமும் அடிக்க, புறாக்கள் இளவரசிக்கு காவலிருக்க, அன்றைய பௌர்ணமி நிலவின் ஒளி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறு சிறு வழிகள் நடுவே உள்ளே விழ, நதியின் வளைவுகளையும் மிஞ்சிய வளைவுகளுடன் பாவையவள் புடவையுடன் மேலே பார்த்தபடி ஒயிலாக நீந்திக் கொண்டிருக்க, தன்னவளின் அழகில் சொக்கிப் போனவன், தன்னவளை வர்ணிக்க வார்த்தைகள் அற்ற கவிஞனாய் நின்றிருந்தான்.

ஆயிரம் முறை பார்த்திருக்கிறான் அவளை. ஆனாலும், இன்று அவனுக்கு அவனின் மணவாட்டி புதிதாய்த் தெரிந்தாள்.

தங்களின் இளவரசியை அவளின் இளவரசன் ரசிக்க, பெண் புறாக்கள் இனி தங்களுக்கு வேலை இல்லை என்று பறந்தடித்து ஓடியதில், சிறகுகள் படபடவென்று அடித்துக்கொண்ட சத்தத்தில் நிஹாரிகா கணவனின் வருகை உணர்ந்து கொண்டாள்.

நீந்திக் கொண்டிருந்தவள் அதை நிறுத்திவிட்டு, தண்ணீருக்குள் நின்ற நிலையில் மிதந்தபடியே கணவனைப் பார்க்க, அவனோ அசையாது அவளை விழி கொண்டு பருகிக் கொண்டிருந்தான்.

மற்றவர்களிடம் வெட்கப்பட்டவளுக்கு ஏனோ தன்னவனிடம் அது சிறிதாகத் தான் எட்டிப் பார்த்தது. ஏனெனில், அவளுக்கு எல்லாம் அவனல்லவா.

கணவனை சீண்ட நினைத்தவள், ஒன்றைப் புருவத்தை உயர்த்தி அவனை பார்த்துவிட்டு மீண்டும் நீந்தத் துவங்க, மனைவியின் எண்ணம் புரிந்தவன் தலையை ஆட்டி சிரித்தபடி, குளத்தின் அருகே வந்தவன் தனது சட்டை பட்டன்கள் ஒவ்வொன்றையும் மனைவியை பார்வையால் கொய்தபடியே கழற்ற ஆரம்பித்தான்.

தன் மங்கையின் பேரழகில் மயங்காத மன்னவன் உண்டோ!

மேலாடையைக் கழற்றியவன், கத்தி போன்று கைகளை வைத்துக் கொண்டு தண்ணீருக்குள் பாய்ந்தான். தன்னவன் தண்ணீருக்குள் என்று அறிந்த நிஹாரிகா திரும்புவதற்குள், அவன் நீருக்குள் மாயமானான்.

கணவன் எங்கே இருக்கிறான் என்று அவள் தண்ணீரின் மேல் ஊன்றிப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் ஐந்தடிக்கும் கீழ் அல்லவா சென்றிருந்தான். அவன் சுவடையே அவளால் அறியமுடியவில்லை. வதனத்தில் நீர் மணிகள் சொட்ட தன்னவனை அவள் தேடிக் கொண்டிருக்க, நீருக்கு அடியில் வந்து கொண்டிருந்தவன், மனைவியின் இடையைப் பிடித்து உள்ளே இழுத்தான்.

இழுத்த வேகத்தில் உள்ளே சென்றவளை தன்னுடன் இறுக அணைத்தவன், அவளின் இதழுடன் இதழ் பொருத்தி, தேனைப் பருகத் துவங்க, குளித்தின் உள்ளே இருந்த குட்டி குட்டி மீன் குஞ்சுகள் அவர்களின் செயலில் பயந்து போய் அன்னை தந்தையிடம் ஓடி ஒளிந்து கொண்டனர்.

அவளின் இதழை ராட்சசனாய் மாறி பருகியவன் சில நிமிடங்களிலேயே அவளுடன் மேலே வர, மூச்சு வாங்க கணவனைப் பார்த்தவள், திரும்ப எத்தனிக்க, தன்னை நோக்கி தன்னவளை இழுத்தவன் அவளை படிகளுடன் ஒட்டியிருந்த சுவற்றில் சாய்த்து, மீண்டும் இதழில் முத்தமிடப் போக, அவனைத் தடுத்தவள்,

“ஒண்ணு கிஸ் பண்ற, இல்ல நெக் கிஸ் பண்ற, இல்ல சேலையை பிடிச்சு இழுக்கற.. இதைத் தவிர வேற எதுவும் தெரியாதா பாவா?” கேலியாக நிஹாரிகா அவனின் இருதோளிலும் கை வைத்தபடிக் கேட்க, “உன் பாவாக்கு என்ன தெரியும்னு இன்னிக்கு காட்டுறேன்டி ஜிலேபி” என்றவனின் கையில் அடுத்த நொடி அவள் புடவை முழுதாக இருந்தது.

புடவையை தண்ணீரில் எதிர் பக்கம் எறிந்தவன், அவளை மேலிருந்து கீழ் தாபமாய் மோகத்துடன் பார்க்க, கணவனின் பார்வையில் பெண்ணுக்கே உரிய கூச்சம் உண்டாக, சுவற்றைப் பார்த்து திரும்பியவளை பின்னே இருந்து, அவள் வெண்ணிற வயிற்றில் கை கொடுத்து அணைத்தவன் அவள் செவி மடல்களை உதடுகளால் தீண்டி, கழுத்திற்கு இறங்க, நிஹாரிகாவின் உதடுகளோ பிரிந்து பெருமூச்சை வெளியிட்டது. அவனின் ஒவ்வொரு தொடுகையிலும் உருகத் துவக்கினாள் அவள்.

மனைவியைத் தன்னை நோக்கித் திருப்பியவன், அவள் ரவிக்கையை ஒட்டியிருந்த டாட்டூ போட்ட தன் பெயரை விரல் கொண்டு வருட, நிஹாரிகாவோ நாணத்தில் அவன் கை பிடித்துத் தடுத்தாள்.

“ஏன்டி?” அவன் விஷமத்துடன் தன்னவளிடம் கேட்க, “ஹம்..” என்று ஏதோ சொல்ல வந்தளுக்கு காற்று தான் வந்தது.

முன்னேற முனைந்த கணவனைத் தடுத்தவள், “போதும்.. குட்டி மீன் எல்லாம் உள்ள இருக்கு.. பயந்திரும்” என்று கூற, அவளின் செவியின் அருகே குனிந்தவன் மனைவியிடன் கொச்சையாய் ஏதோ சொல்ல,

“ச்சி.. எப்படி எல்லாம் பேசற.. அறிவே இல்லடா உனக்கு” என்றவளின் முகம் கணவன் பச்சையாகச் சொன்னதில் குங்குமாய் சிவந்ததிருந்தது.

“உண்மை தானே?” கண்ணடித்துக் கேட்டவனிடம், “ம்ம் ம்ம்” என்று தலையாட்டியவள் அவனைத் தள்ளிவிட்டு படிகளில் ஏற, மனைவியின் பின்னழகை உச்சி முதல் பாதம் வரை கண்களால் மேய்ந்தவன் தண்ணீருக்குள் இருந்தபடி நிஹாரிகாவைப் பார்க்க, அடுத்து அவள் செய்த செய்கையில் அவனின் நாடி நரம்புகளில் வெறி ஏறியது.

நீர் சொட்டச் சொட்ட ஏறியவள், திரும்பித் தன்னவனைப் பார்த்து, ‘அறைக்கு வா’ என்பதுபோல தன் காந்தக் கண்ணால், தலையாட்டி மோக மந்திரத்தோடு கணவனை அழைக்க, மனைவியின் இச்செயலில் விழாத ஆண்மகன் உண்டோ!

ஒரே கண்ணசைவில் அவனை அடக்கியவள், நடந்து செல்ல, புடவையின்றி தன் முன் தன்னைப் பார்த்தபடி நடந்து செல்லும் மனைவியின் அழகில் மந்திரித்து விட்டதைப் போலானவன், தன்னவளின் பின்னேயே செல்ல, கணவனின் செயலில் வெட்கச் சிரிப்புடன் முன்னே நடந்தவள் அவனுக்கு முன் சென்று, தன் அறைக்குச் செல்லும் கதவை அடைத்துக் கொண்டாள்.

“ஏய்” என்றவனின் குரல் கோபமும் தாபமும் கலந்து ஒலிக்க, “வீட்டுக்கு முன்னாடி போய் வா. அதான் உனக்கு பனிஷ்மென்ட்” என்றவள் குடுகுடுவென்று தன் குளியல் அறைக்குள் ஓடினாள்.

சட்டையைக் கூட மாற்றத் தோன்றாது சென்றவன், எதிரில் கண்ட சந்திராமாவை கண்டு கண்ணடித்து விட்டுச் செல்ல, அவரோ வெட்கப்பட்டுக்கொண்டே உறங்கச் சென்றுவிட்டார்.

அறைக்குள் நுழைந்தவன் அப்படியே திகைத்துப் போனான். அறையின் தரை முழுதும் தரையே தெரியா வண்ணம் ரோஜா இதழ்கள் கிடக்க, கட்டிலிலும் ஆங்காங்கே. மெல்லிய மஞ்சள் நிற ஒலி மட்டும் கசிந்து கொண்டிருக்க, உள்ளே சந்தனக்கட்டையை ஆங்காங்கே சந்திராமா வைத்துவிட்டுச் சென்றதில் அவனின் மோகம், தாபம் அனைத்தும் கொளுந்துவிட்டு எரியத் துவங்கியது.

குளியல் அறைக்குள் சத்தம் வர அங்கு சென்றவன், பாத் டப்பில் நுறைக்குள் அமர்ந்திருக்கும் தன் மனைவியைக் கண்டு கர்வச் சிரிப்புடன் நின்றிருந்தான். கணவனை எதிர்பார்த்தவள் அவனைப் பார்த்தவுடன், ஒற்றை விரலை நீட்டி அழைக்க, அவளின் அருகே சென்றவன் அந்த பெரிய பாத் டாப்பில் தானும் உடன் இறங்க கணவனுக்காக நகர்ந்து அமர்ந்தவள், அவனின் கன்னங்களைப் பிடித்து அருகே இழுத்து இதழ் யுத்தம் தொடங்கினாள்.

அரை மணி நேரம் கழித்து பாத் ரோபுடன் வெளியே ஓடி வந்த நிஹாரிகாவின் உடலும், வதனமும் கணவனின் குறும்பிலும், சேட்டையிலும், விடாக் கண்டனாய் அவன் செய்த சில விஷயங்களிலும் மிளகாய் நிறத்தில் வெட்கத்தில் சிவந்து படபடத்துக் கொண்டிருந்தது.

அவள் பின்னோடேயே இடையில் டவலை சுற்றிக்கொண்டு வந்தவன், “எதுக்குடி ஓடி வந்த.. பாதியே முடியல இதுக்கே இப்படியா?” என்று வினவ, அவனின் முகத்தைக் காண முடியாமல் அவனின் கழுத்தில் முகம் புதைந்துகொண்டாள்.

அவளைக் கட்டலில் அவன் கிடத்த, கண்களை மூடிக் கொண்டவளின் அருகே குனிந்தவன், “கண்ணைத் திறடி” என்றான் அவளின் கன்னத்தை வருடியபடி.

“ம்கூம்” என்றவளின் பாத்ரோபை தன்னுடைய பகைவனாய் எண்ணியவன் அதில் கை வைக்க, “டேய் ப்ளீஸ்டா.. எனக்கு ஷையா இருக்கு” என்று வெட்கத்தில் கரகரத்த குரலோடு கெஞ்ச, “அதை இத்தனை ஏற்பாடு செய்யறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்டி” என்றவன் தன் வேலையில் குறியாய் இருந்தான்.

அவளோ அவனை விட்டு நகர, “கிட்ட வாடி.. ப்ளீஸ்” கிறக்கமாய் அழைத்தவனின் குரலில் மொத்தமாய்த் தொலைந்தவள், அதற்கு மேல் தங்கு தடையின்றி கணவனை தன்னுடன் அணைத்துக் கொள்ள, அன்று பள்ளி அறையில் சந்தித்த தன்னவளை இன்று தங்களது பள்ளியறையில் வைத்து அவன் பாடங்களை எடுக்க, அவனின் ஆசைகள் அவளைக் கெஞ்ச, அவளின் குறும்பு மனம் சிறிது மிஞ்ச, இறுதியில் அவள் அவனவளாய், அவன் அவளவனாய் இணைய, “ரிஷ்வந்த்!!!!!” என்று அவனின் மார்பில் புதைந்தபடி நிஹாரிகா தன் நகங்களை அவன் தோளில் பதிக்க, தன்னவளின் கழுத்தில் சிறிது நேரம் இளைப்பாறியவன், நிமிர்ந்து தன்னவளைப் பார்க்க, அவளின் வலது கண்ணில் இருந்து ஒரு சொட்டு நீர் வழிந்தது.

இரு புருவங்களை உயர்த்தி அவள் அவனை ஏதோ சொல்ல, அதில் வெட்கம் கொண்டவன், அவளின் நெற்றியில் முத்தமிட்டு, அருகே விலகிப் படுத்தான்.

“நிஹி” அவன் அழைக்க, அவன் கை வளைவிற்குள் படுத்தவள், “ம்ம்” என்றாள் அவன் தோளில் விரலை வைத்து விளையாடியபடியே.

“லவ் யூ டி” என்று சொல்ல அவனை நிமிர்ந்து பார்த்தவள், புன்னகைத்தபடி, அவனின் நெஞ்சோடு ஒன்றிக் கொண்டு கண்களை மூட, அவளைத் தன்னிடம் இருந்து விலக்கியவன், “இன்னிக்கு நைட் தூங்கணும்னு கனவுல கூட நினைச்சுடாதே” என்றவன் மீண்டும் தன்னவளின் கழுத்தில் முகம் புதைக்க, கணவனை தன்னுடன் இதமாய் அணைத்து அடக்கிக்கொண்டவள், அவனின் ஆசைகளுக்கு விருப்பம் கொண்டு அடங்க, இறுதியில் இருவரின் கை விரல்களும் பின்னிப் பிணைந்தது.

அடுத்த நாள் காலை கண் விழித்த நிஹாரிகா தன் அறையில் மாட்டியிருந்த கண்ணாடியில், மணியைப் பார்க்க அதுவோ பண்ணிரெண்டைத் தாண்டி இருந்தது. அவளுக்கு மீண்டும் உறங்க வேண்டும் என்று அவள் விழிகள் கெஞ்சியது. பின், அவன் அவளை உறங்கிவிட்டதே காலை எட்டு மணிக்குத் தானே.

‘இந்த படத்துல தான் பர்ஸ்ட் நைட் முடிஞ்சு எல்லாரும் ப்ரெஷா எந்திரிக்கறாங்க.. இங்க என்னனா கையவே தூக்க முடியல’ என்று யோசித்தவளுக்கு வயிற்றில் ஏதோ அழுத்துவது போல இருந்தது.

மார்பு வரை மூடியிருந்த போர்வையை சிறிது தூக்கி அவள் உள்ளே பார்க்க, அவளின் கணவன் அவளின் பொன் வயிற்றின் மேல் தலை வைத்து படுத்திருந்தான். அவளது மனம் குறும்பாய் வேலை செய்ய, போர்வைக்குள் நுழைந்தவள் கணவனின் தூக்கத்தைக் கலைத்து அவனைத் தூண்டிவிட, “இனி சேதாரத்துக்கு நான் பொறுப்பில்ல” என்றவன் அவளை நாடிவிட்டே நகர்ந்தான்.

அதன்பிறகு நிஹாரிகா எழுந்து குளிக்கச் செல்ல, அவளின் கை பிடித்து இழுத்தவன், “ஷல் வீ?” என்று கேட்க, கணவனின் கேள்வியில் முதலில் நாணத்துடன் மறுத்தவளை அவன் விட்டால் தானே. தனது ஆசையை ‘ப்ளீஸ்’, ‘ப்ளீஸ்’ என்று கெஞ்சி, ‘கண்ணே’, ‘மணியே’ என்று கொஞ்சி நிறைவேற்றிக் கொண்டான்.

இரண்டரை மணி போல இறங்கி வந்த இருவருக்கும் சந்திராமா பார்த்து பார்த்து சமைத்து வைத்திருக்க, இருவரின் முகத்தைப் பார்த்து தனக்குள் அவர் சிரித்தபடி பரிமாறினார்.

ரிஷ்வந்த் கை கழுவிவிட்டு சென்று டிவியில் மூழ்க, கை கழுவ வந்த நிஹாரிகாவை சந்திராமா சந்தோஷமும் கேலியுமாகப் பார்க்க, “சந்திராமா” என்ற சிணுங்கலுடன் அவரை அணைத்தவளின் வதனம் செர்ரி பழம் கணக்காகச் சிவந்தது.

“ரொம்ப சந்தோஷம்டா” என்றவரின் காலில் அவள் ஆசிர்வாதம் வாங்க விழ, அவளை ஆசிர்வதித்தவர், நெற்றியில் முத்தமிட்டார்.

மாலை போல கயல்விழி, கனகராஜ், பிரகாஷ் குடும்பம் அனைவரும் சக்கரவர்த்தியைப் பார்க்க வருகை தந்திருக்க, கணவனுடன் வந்த மகளின் முகத்தில் இருந்த பூரிப்பையும், மருமகனின் முகத்தில் இருந்த பளிச்சையும் கண்ட விவாஹாவுக்கும், மகாதேவனுக்கும் நிம்மதியாக இருந்தது.

அடுத்த இரு நாட்களில் சக்கரவர்த்தியை டிஸ்சார்ஜ் செய்துவிட, வீட்டிற்கு வந்த நிஹாரிகா, “ரிஷ்வந்த் எனக்காக ஒண்ணு பண்ணுவியா?” என்று கேட்டாள்.

அவளை இழுத்து மடியில் போட்டவன், “என்ன?” என்று வினவ,

“என்னால தாத்தையாவை பிரிஞ்சு இருக்க முடியாதுடா. அதே மாதிரி அம்மா, நானா.. இப்பதான் அவங்களோட இருக்க ஸ்டார்ட் பண்ணி இருக்கேன்.. நாம இங்கேயே இருக்கலாமா.. அங்கிள் ஆன்ட்டியையும் இங்கையே வர சொல்லிடலாம்” என்றவளின் விழிகள் கணவன் என்ன சொல்வான் என்று பதட்டத்துடன் பார்த்திருந்தது.

அவளின் நெற்றியில் முட்டியவன், “எனக்கு பிரச்சினை இல்லடி.. ஆனா அப்பா அம்மாக்கு இங்க செட் ஆகாது.. அதாவது இத்தனை வருசத்துக்கு அப்புறம் அவங்கனால புது ஊரு.. புது இடம்னு அட்ஜஸ்ட் ஆகறது கஷ்டம்.. ஸோ அவங்க சென்னைல நம்ம வீட்டுல இருக்கட்டும்.. நாம வீக் என்ட்ஸ் அங்க போயிக்கலாம்” என்றிட, அவளுக்கோ அரை மனதாக இருந்தது.

ஏதோ அவனின் பெற்றோரிடம் இருந்து அவனைப் பிரிப்பது போலத் தோன்றியது அவளுக்கு.

மனைவியின் மனவோட்டம் புரிந்தவன், அடுத்த நாள் தன் பெற்றோரிடம் இதைப் பற்றி பேச கயல்விழியோ, “நாங்க எதுக்கு நிஹி தப்பா நினைக்க போறோம்.. நீங்கதான் வாரக் கடைசியில வருவீங்கள்ள..” என்றவர், “ஆனா, எல்லா விஷேசம், திருவிழாக்கு அங்க எல்லாரும் வந்திடணும்” கயல்விழி அன்பாய் கட்டளையிட்டு இருக்க, நிஹாரிகாவோ பெருந்தன்மையாய் மாமனார் மாமியாரைப் பார்த்திருந்தாள்.

யாருமே தனக்கு இல்லை என்று மறுகியவளுக்கு, கணவன், தாத்தையா, அன்னை, தந்தை, மாமியார், மாமனார், சந்திராமா, பிரகாஷ், ராஜி, ஸ்வாதிகா என்று பல பலங்கள் இருப்பது போலத் தோன்றியது.

ஆறு மாதங்கள் கடந்திருக்க..

“ரிஷ்வந்த், நவ்தீப்புக்கு பழசு எல்லாம் திரும்பிடுச்சு” என்று நிஹாரிகா கணவனின் நெஞ்சில் சாய்ந்திருந்தபடிக் கூற, அவளுக்குத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவன், “ம்ம்” என்றான்.
அன்று கண் விழித்த பிறகு நவ்தீப்பிற்கு எதுவும் ஞாபகத்தில் இல்லை. ஆறு மாதங்களுக்குப் பிறகு இன்று தான் அவனுக்கு நினைவு திரும்பி இருக்கிறது.

“நாம இரண்டு நாள் கழிச்சு அவனைப் பாக்க போகலாமா?” நிஹாரிகா சிறிது தயக்கத்துடன் கேட்க, தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவனின் கை நின்றது.

சில நொடிகள் அமைதி காத்த நிஹாரிகா கணவனை நிமிர்ந்து பார்த்து, “போகலாம்டா” என்று கண்களைச் சுருக்கிக் கேட்க, “சரி, உனக்காக” என்றவனின் நெஞ்சில் முத்தமிட்டவள் கணவனை அணைத்துக் கொண்டு படுத்தாள்.