நிஹாரி-34(final)

IMG-20211003-WA0016-62db7a4f

நிஹாரி-34(final)

இருநாட்கள் கழித்து, காலை, நிஹாரிகாவிற்கு அன்னையிடம் திவ்யமாகத் திட்டு விழுந்துகொண்டு இருந்தது. கீழே வந்தவளிடம் பாலைத் தந்தவர், “நிஹி, சொல்ல சொல்ல கேக்காம அவனை பாக்க போறேன்னு சொன்னா என்ன அர்த்தம்?” விவாஹா ஷோபாவில் அமர்ந்துகொண்டு பாலை அருத்தும் மகளைக் கடிய, அவளோ வாயைத் திறக்கவில்லை.

திறந்தால்தானே எதிர்வாதம் செய்யவேண்டும் என்று எதுவும்பேசாமல் அமைதியாக பாலை அருந்திக் கொண்டிருந்தாள்.

மகளின் செயலில் கோபம் கொண்ட விவாஹா, “நீங்களும் கூட்டிட்டு போறேன்னு சொல்றீங்களே?” மருமகனிடம் குறைபட,

“ஒண்ணும் பிரச்சனை இல்ல அத்தைகாரு.. நான் பாத்துக்கறேன்” என்று கூலாக சொன்ன மருமகனிடம் வாதாடமுடியாது என்று எண்ணியவர் கணவனை திரும்பிப் பார்க்க, மகாதேவனோ, “விடு” என்பதுபோல கண்களை மூடித்திறக்க விவாஹா, சலனத்துடன் தந்தையின் அருகே அமர்ந்தார் விவாஹா.

சக்கரவர்த்தியும் எதுவும் சொல்லவில்லை. அதற்கு காரணமும் இருந்தது. ஒன்று வீட்டில் வைத்து நவ்தீப்பால் தன் பேத்தியை எதுவும் செய்துவிட முடியாது என்ற நம்பிக்கை மற்றும் அர்ஜூன் சுரேகா அங்கு இருப்பார்கள் என்ற எண்ணம் மற்றும் ரிஷ்வந்த் உடன் செல்லும் தைரியம்.

பாலைக் குடித்துக்கொண்டு எழுந்த நிஹாரிகா, முன்னே செல்ல, சிறிது நேரம் கீழே இருந்த ரிஷ்வந்த் தானும் கிளம்ப எண்ணி படிகளில் ஏறினான்.

மேலே வந்து, அறைக்குள் நுழைந்தவனின் விழிகளில் நெற்றி வகிடில் குங்குமம் இட்டுக்கொண்டிருந்த அவனின் மனைவி பளிச்சென்று விழுந்தாள். இளம் ஆரஞ்சு வண்ணப் சாப்ட் சில்க் புடவையை வழக்கம் போல ப்ளீட்ஸ் இல்லாது அணிந்திருந்தவள், சிறிய க்ளிப் போட்டு இடை வரை வளர்ந்திருந்த கருங்கூந்தலை அலைபாய விட்டிருக்க, ஆறு மாதங்களாக கணவனுடன் சிறிய சிறிய சண்டைகளுடனும், கொஞ்சல்களுடனும் வாழ்ந்து வரும் மகிழ்ச்சியும், குஷியும் அவளின் முகத்தில் தாண்டவமாடிக் கொண்டிருக்க, அதைக் கண்ணாடி வழியே உள்வாங்கிய அவளின் மணாளன், மனைவியின் முகத்தை மனதில் எப்போதும் போல நிரப்பிக்கொண்டே அவளை பின்னிருந்து அணைத்து, அவளின் தோளில் தனது தாடையை வைத்தான்.

“என்னடா?” என்றாள் கண்ணாடி வழியே அவனைப் பார்த்து. வழக்கம்போல தன் குறும்பான சிரிப்புகளை வீசியபடி.

‘இல்லை’ என்பது போலத் தலையாட்டிவன், அவளின் நாடியை பிடித்து லேசாகத் தன் பக்கம் திருப்பி, அவளின் வளுவளு கன்னங்களில் முத்தமிட, “எத்தனை தடவைடா?” என்றாள் அவனின் மூக்கைப் பிடித்து இழுத்து. இன்று காலையில் இருந்து வழக்கத்தை விட அவனின் முத்தங்கள் அதிகமாக இருந்ததைப் போன்று இருந்தது அவளுக்கு.

அவளைத் தன் புறம் திருப்பியவன், “எனக்கு தோணும் போதெல்லாம்” என்று தன்னவளை அக்கறையாய் அணைக்கச் செல்ல, தந்தையை தடை செய்தது நிஹாரிகாவின் வயிற்றில் இருந்த, ரிஷ்வந்த்-நிஹாரிகா காதலின் அடையாளச் சின்னங்கள்.

“ப்ச்” என்று குறைபட்டவன், “என்னை இப்பவே மிரட்டற மாதிரி இருக்குடி” மனைவியின் வயிற்றை ஆசையாக வருடியபடி அவன் சொல்ல, “ம்ம் ம்ம்.. என்னை மீறி மிரட்டித்தான் பாக்கட்டுமே.. அப்புறம் இருக்கு” கணவனை விட்டுக்கொடுக்காமல் பேசியவள் அவனின் அருகில் நின்று, வயிறு இடிக்காத படி தன்னவனை அணைத்துக் கொள்ள, “நிஹி” என்றழைத்தான்.

“ம்ம்” என்றவளிடம், “ஒண்ணு கேக்கணும்டி” என்றான்.

“கேளு” என்றாள் அவனை நிமிர்ந்து பார்த்து.

“இல்ல வேணாம்.. என் கேள்வில எந்த தப்பும் இல்ல.. ஆனா நீ தப்பா புரிஞ்சுட்டா? ஸோ இன்னொரு நாள் கேக்கறேன்” என்று நகரப் பார்த்தவனின் கை பிடித்துத் தடுத்தவள், “கேளுடா..” என்றாள் அங்கிருந்த ஷோபாவில் அமர்ந்துகொண்டு.

ஒரு நொடி யோசித்தவன், “நவ்தீப் உனக்கு இவ்வளவு பண்ணியும் ஏன் அவனைப் பாக்கணும்னு நினைக்கற?” என்று கேட்க, “இதுக்கு ஏன்டா தப்பா நினைக்கப் போறேன்” என்று கேட்டபடி கணவனின் தோளில் சாய்ந்தவள்,

“ரிஷ்வந்த் உனக்குத் தெரியும்ல நான் வெளிய ரொம்ப ரூட்னு.. ஆனா அதே சமயம் எனக்கு பிடிச்சவங்ககிட்ட நான் ரொம்ப ரொம்ப சாப்ட்..” என்றவளின் முதுகை இதமாய் வருடிக் கொடுத்தவன், “தெரியும்” என்க, அவனின் உள்ளங்கையில் முத்தமிட்டவள், மேலே தொடங்கினாள்.

“நவ்தீப் என்னோட பெஸ்ட் பிரண்ட் டா.. அந்த வித்யாதரன் செத்து தொலைஞ்சு போன அப்புறம் நான்தான் எதுவுமே முழுசா தெரியாம சோகமே மயமா கிடந்தேனே..” என்றவள், “எல்லாம் புரிஞ்சும் புரியாம அது நரகம்டா.. அம்மாவும் ஒரு மாதிரியே இருந்தாங்க.. தனியாவே எங்கையோ பாத்துட்டு.. அப்ப எல்லாம் அவன்தான் என்னை பாத்துக்கிட்டான்.. தாத்தையாவும் அவ்வாவும் அம்மாவையே கவனிச்சுட்டு இருந்தாங்க.. அம்மாவோட நிலை அப்படி, ரொம்ப மோசம்.. அப்ப எல்லாம் என்னை சாப்பிட வச்சு பாத்துக்கிட்டான்.. நான் சாப்பிட்ட தட்டைக் கூட அவன் தான் வாஷ் பண்ணி வைப்பான்.. இன்னும் சொல்லப்போனா அவனும் நானும் நிறைய நாள் தனியா என்னோட ரூம்ல இருந்திருக்கோம் ரிஷ்வந்த்” என்றவள் கணவனைப் பார்க்க அவனின் முகத்தில் சிறிதும் எந்த மாற்றமும் இல்லை.

“மேலே சொல்லு” என்பதுபோல அவளை அவன் ஊக்கப்படுத்த, “அதான்டா நிறைய தடவை தனியா இருந்திருக்கோம்.. நான் தூங்கிட்டு இருக்கும் போதெல்லாம் என்னோட ஷோபால இருப்பான் தூங்காம.. அவன் நினைச்சிருந்தா என்கிட்ட அப்ப மிஸ்பிகேவ் பண்ணியிருக்கலாம்.. பட் ரொம்ப கேரா இருந்தான்.. அது லவ் மாதிரி எனக்கு அப்ப தோணவே இல்ல.. இன்பாக்ட் அவனை என்னோட பிரண்டா மட்டும் நான் எப்பவுமே பாத்தது.. அப்படி எல்லாம் பாத்துக்கிட்டவன் ஏன் இப்படி பண்ணான்னுதான் எனக்கு இப்ப வரைக்கும் புரியல” என்றவளின் குரல் கரகரத்தது ஒலித்தது.

மனைவியின் தலையை நிமிர்த்தியவன், “ஃபீல் பண்ணாதடி.. உன்மேல அவனுக்கு இருக்கிறது ஒருவிதமான பாசம்.. அது எப்போமே போகாது.. அதே சமயம் அவனுக்கு என்கிட்ட தோத்து போன மாதிரி ஃபீல் ஆகிடுச்சோனு எனக்குத் தோணுது. உன்னை இழந்த ஏமாற்றம், நான் உள்ள வந்த கோபம் எல்லாம் சேர்ந்து தான் இப்படி பண்ணியிருப்பான்” என்றவன், “ஆனா, அதுக்குன்னு அவன் பண்ணது சரின்னு சொல்ல மாட்டேன். அவனை எப்பவுமே என்னால மன்னிக்க முடியாது” என்றான் திட்டவட்டமாக. என்னதான் அவன் பக்கம் இருந்து யோசித்தாலும், ஒரு ஆண்மகனாக ஒரு பெண்ணை அவன் பலவந்தப்படுத்த முயன்றதை ரிஷ்வந்தால் மன்னிக்க இயலவில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை.

கணவனிடம் இருந்து நகர்ந்து அமர்ந்தவள், “நானும் எப்ப அவனை மன்னிக்கறேன்னு சொன்னேன்..” என்று கேட்டவள், “அவன்கிட்ட சிலது பேசணும் அன்ட் கேக்கணும்.. அதான்” என்றவள் அமர்ந்திருந்து சொன்ன விதம் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது.

அவனின் கேலி புரிய, அவனின் தலையில் நறுக்கென்று கொட்டியவள், “குளிச்சிட்டு வா.. சாப்பிட்டுக் கிளம்பலாம்” என்று சொல்ல, கணவன் சென்றவுடன், தன் பொன் வயிற்றுக்குள் குழந்தைகளுடன் பேசியபடி அமர்ந்திருந்தாள். இல்லை இல்லை வம்பிழுத்துக் கொண்டு அமர்ந்திருக்க, அவைகளோ அன்னையுடன் டிஷ்யூம் டிஷ்யூம் இட்டுக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் கீழே வந்தவர்கள் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பி, அர்ஜூனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். கணவனுடன் கை கோர்த்தபடி வந்த நிஹாரிகாவைக் கண்ட அர்ஜூன், “என்னமா இவ்வளவு தூரம்?” என்று விசாரிக்க,

“நவ்தீப்பை பாக்க வந்தோம் அங்கிள்” என்றவளை திகைத்து அவர் பார்க்க,

“வேணாம்டா..” கணவனின் பின்னால் நின்றிருந்த சுரேகா மறுத்தார். அவருக்கு தன் மகன் செய்ய இருந்த காரியத்தால், இன்னும் குற்றஉணர்வு கரையானை அரித்துக் கொண்டிருக்க, அவர் சக்கரவர்த்தி வீட்டுப்பக்கமே சென்று ஆறு மாதங்கள் ஆகியிருந்தது. மகன் செய்து வைத்த காரியத்தால் அவரால் யார் முகத்திலும் விழிக்க முடியவில்லை.

“இதுக்குத்தான் ஆன்ட்டி சொல்லாம வந்தோம். சொன்னா வர வேண்டாம்னு சொல்லுவீங்கனு” என்ற நிஹாரிகா அவரிடம் சென்று, “ஏன் ஆன்ட்டி என்னை பாக்க வரல நீங்க.. நான் ப்ரெக்னன்ட் ஆன விஷயம் கேள்விபட்டு வெறும் மெசேஜ் மட்டும் பண்ணீங்க. என் மேல ஏதாவது கோபமா?” என்று வினவ,

“இல்லடா” என்று அவசராமக மறுத்தவர், அவளின் இருகரங்களையும் பிடித்துக் கொண்டு, “என்னால இவன் பண்ண காரியத்துக்கு யார் முகத்துல முழிக்க முடியும் சொல்லு.. என்னை நினைச்சுப் பாத்திருந்தா இப்படி பண்ணியிருக்க தோணுமா இவனுக்கு” என்று குமுறியவர், “நான் உனக்காக ப்ரே பண்ணிட்டு தான் இருக்கேன் நிஹி தினமும்” என்றவர், அவளின் கன்னத்தில் கைவைத்து, “இப்ப மறுபடியும் ரொம்ப அழகு ஆகிட்ட நிஹி” என்றார் பாசத்தோடு.

“நீங்க எதையும் நினைக்காதீங்க ஆன்ட்டி..” என்றவள், அர்ஜூனிடம் சென்று நின்றுகொண்டு, “அங்கிள் தான் குட்.. எவ்ரி சண்டே எனக்கு கூப்பிட்டு பேசிடுவாரு” என்று நிஹாரிகா மிடுக்காய் சொல்ல, அவள் சொன்னவிதம் சுரேகாவிற்கு சிரிப்பை வரவழைத்தது.

“அங்கிள் இப்ப நவ்தீப்பை பாக்கலாமா?” நிஹாரிகா வினவ, “கண்டிப்பா பாக்கணுமா?” என்றார் அர்ஜூன்.

“அதுல டவுட் இல்ல அங்கிள்” நிஹாரிகா சொல்ல, அர்ஜூன் ரிஷ்வந்தைப் பார்த்தார்.

அவனோ தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்பதுபோல இருக்க, சுரேகா இருவரையும் அழைக்க, “இல்ல ஆன்ட்டி நிஹி பாத்துட்டு வரட்டும்” என்றவன் வரவேற்பறையில் அர்ஜூனுடன் அமர்ந்துகொள்ள, யாரும் அதில் சங்கடம் கொள்ளவில்லை. அவன் நிலையில் இருந்து பார்த்தால் அவன் இந்த அளவிற்கு இறங்கி வந்ததே பெரிது தானே.

சுரேகாவுடன் சென்ற நிஹாரிகா, நவ்தீப்பின் அறையைத் தட்ட, சிறிது நொடிகள் கழித்து கதவைத் திறந்தவன், வெளியே நின்றிருந்த நிஹாரிகாவைக் கண்டு முகத்தில் எந்தவொரு மாற்றத்தையும் காட்டவில்லை.

அசையாது நிஹாரிகாவையே அவன் பார்த்தபடி நின்றிருக்க, “உள்ள கூப்பிட மாட்டியாடா?” என்று வினவியவள் அவனின் பதிலை எதிர்பாராது உள்ளே நுழைய முற்பட, அவளின் கரத்தைப் பிடித்த சுரேகா, ‘வேண்டாம்’ என்பதுபோலத் தலையாட்ட, “நீங்க கீழ போங்க ஆன்ட்டி” என்றவள் அவரின் பதிலை எதிர்பாராமல் அறைக்குள் நுழைந்தாள்.

உள்ளே நுழைந்தவள் அவனின் படுக்கை அறைக்கு முன்னே இருந்த லிவ்விங் ரூமில் அமர, நவ்தீப் அங்கிருந்த கண்ணாடியினால் சுவரைப் போன்று வைக்கப்பட்டிருந்த தடுப்பின் அருகே நின்று வெளியே வானை வெறித்துக் கொண்டிருந்தான்.

அவனின் மனமோ, ‘ஓ’வென்று கதறிக் கொண்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் பழைய நினைவுகள் திரும்ப, அன்னை தந்தையைப் பார்க்கவே குன்றியவன், எவ்வளவு அடக்கிப் பார்த்தும் சுரேகாவால் முடியவில்லை.

“ஏன் நவ்தீப் இப்படி பண்ண? ஒரு பொண்ணை அதுவும் நம்ம நிஹியை அப்படி பண்ண நினைக்க உனக்கு எப்படி மனசு வந்துச்சு.. உனக்கு இந்த மாதிரி எண்ணம் இருந்திருந்தா எங்ககிட்ட முன்னாடி சொல்லி இருக்கனும்.. அதுவும் நிஹிக்கு விருப்பம் இல்லாம இருந்திருந்தா கண்டிப்பா நாங்களும் சம்மதிச்சிருக்க மாட்டோம்.. எந்த ஒரு பொண்ணா இருந்தாலும்.. பொண்ணு என்ன பையன் என்ன.. நம்மளை ஒருத்தங்க அவங்க துணையா ஏத்துக்க விருப்பம் இல்லனா நாம அவங்களை வற்புறுத்தறது ரொம்ப தப்பு.. ஆனா, நீ நிஹியை” என்றவர் அதற்கு மேல் வாய் வராமல் அழத்துவங்க, நவ்தீப் ஓவென்று அழ நினைத்த மனதை அடக்கி கல்லென அமர்ந்திருந்தான். அன்னையை சமாதானம் செய்யக்கூட அவனின் மனம் முனையவில்லை.

தான் செய்து வைத்த காரியத்திற்கு அவனின் மனம் மன்னிப்பை யாசிக்கக் கூட கூசியது. அதுவும் தான் நிஹாரிகாவிடம் நடந்து கொண்டதும், ஸ்வாதிகாவை அதற்கு அவன் உபயோகித்ததும் என்று அனைத்தும் நினைவில் வந்து வந்து அவனின் மனம் வேதனையைச் சுமந்தது.

‘வேணாம்டா நவ்தீப்.. இதை நீ பண்ணா, உன்னைவிட என்னை யாராலையும் அசிங்க படுத்தமுடியாது டா’ அன்று பேசிய நிஹாரிகாவின் வார்த்தைகள் அவன் செவியில் விழ, அவனுக்கு தன்னால் நிஹாரிகா உள்ளுக்குள் பயந்ததும், தன்னைக் காத்துக் கொள்ள போராடியதும் என்று நினைவில் வந்துபோக, அவமானத்தால் அவனுக்கு உடை இல்லாமல் ஆயிரம் பேர் முன் நிற்பதுபோன்று அசிங்கமாய் இருந்தது.

ஏன் அந்தளவு விருப்பம் இல்லாத பெண்ணை, அதுவும் இன்னொருவனின் மனைவியை பலவந்தப்படுத்த முயன்றோம் என்று நினைத்தவன் துயரத்தோடு தந்தையை நிமிர்ந்து பார்க்க, அவருக்கு மனைவியை விட மகனின் மேல் கோபம் இருந்தாலும், அவனின் வதனம் வெளிப்படுத்திய வேதனையையும், துன்பத்தையும் கண்டவர், மனைவியை அழைத்துக்கொண்டு அமைதியாக வெளியே சென்றுவிட்டார்.

மனதிற்குள் மருகிக் கொண்டு வெளியே வெறித்தபடி நின்றிருந்தவனை நிஹாரிகாவின் குரல் கலைத்தது. “எப்படி இருக்கு இப்போ?” என்று அவனின் உடல்நலத்தை அவள் முதலில் விசாரிக்க, “பரவாயில்ல” என்றான் அசையாமல்.

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவள் எழ முயல, திரும்பாமலே அதை உணர்ந்து கொண்டவன், “உக்காந்தே பேசு.. ஸ்டெரியின் பண்ணிக்காத” என்றான் அமைதியாக.

அவனின் வார்த்தையில் அவனை நிமிர்ந்து ஒரு கணம் பார்த்தவள், “இந்த அக்கறை ஏன் அப்ப காணாம போச்சு நவ்தீப்?” அடுத்த நொடியே கேட்க, அவளின் கேள்வியில் சாட்டையில் அடித்தது போன்று அவனின் மனம் சுள்ளென்று வலிக்க, அவனின் காயப்பட்ட மனமோ கீறிவிட்டது போன்று ரணமாய் இருந்தது.

அவளின் கேள்விக்கு பதில்பேசாமல் நின்றிருந்தவனின் அருகில் வந்து, சிறிது இடைவெளிவிட்டு நின்றவள் வானை வெறித்துக்கொண்டே, “நான் எப்பவாவது உன்கிட்ட அந்த மாதிரி நடந்துக்கிட்டேனாடா?” என்று வினவியவளின் வதனம் கூம்பி இருந்தது.

நிஹாரிகாவுக்கு நீண்ட நாட்களாகவே மனம் குழம்பி இருந்தது இந்த விஷயத்தில். தன்னை அறியாமல் எப்போதாவது அவனின் மனதில் ஆசையைத் தூண்டிவிட்டோமோ என்று நினைத்தவளுக்கு சிறிது குற்ற உணர்வு இருந்துகொண்டே இருந்தது. அவனிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு, இன்று அதற்கான சந்தர்ப்பம் கிடைக்க கேட்டேவிட்டாள்.

அமைதியாக நின்றிருந்தவனைத் திரும்பிப் பார்த்தவள், “சொல்லு நான் எப்பவாவது உன்கிட்ட அந்த மாதிரி நடந்துக்கிட்டேனா?” என்று கேட்டவளைத் திரும்பிப் பார்த்தவனின் முகத்தில் இருந்த சோக ரேகையைப் பார்த்தவள், அவன் பதில்பேசாமல் இருக்கவும், அங்கிருந்து நகரப்பார்க்க, அவள் கதவருகில் செல்லும் வரை அமைதி காத்தவன், “இல்ல நிஹி.. நீ எப்பவுமே என்கிட்ட அந்த மாதிரி பேசுனது இல்ல.. நான்தான்..” என்றவனின் விழிகள் கலங்கியது. தன் காதல் தனக்குக் கொடுத்த ஏமாற்றத்தை அவனால் இன்றுவயை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அதற்கு என்று நிஹாரிகாவின் மேல் முதலில் இருந்த எந்த எண்ணமும் அவனிடம் இல்லை. ஆனால், அந்த வலி இன்னும் அவனை விட்டுச் செல்லவில்லை.

அவனின் பதிலில் அவனைத் திரும்பி பார்த்தவள், “அப்புறம் ஏன்டா..” என்று நட்பின் ஏமாற்றம் தாளாமல் ஆதங்கத்துடன் கேட்டவள், “ஒரு சில விஷயம் நான் யாருக்கும் சொல்லமாட்டேன் தான் நவ்தீப். ஆனா, என்னோட முகத்தை வச்சே நீ என்னன்னு சின்ன வயசுல சொல்லுவ.. அந்த வயசுலையே எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும் தெரியுமா.. அம்மா, நானா போன அப்புறம் தாத்தையா, அவ்வா, நீ, அங்கிள், ஆன்ட்டி மட்டும் தான் என்னை நல்லா பாத்துக்கிட்டீங்க.. நீ என்கிட்ட மறைச்ச நிறைய விஷயம் கூட எனக்குத் தெரியும்.. அம்மாவை பத்தி சொல்லி ஸ்கூல்ல ஒருத்தன் என்னை கிண்டல் பண்ணான்னு நீ அவனை அடிச்சதுகூடத் தெரியும்டா. ஆனா, அதெல்லாம் நீ என்மேல வச்சிருக்க பிரண்ட்ஷிப், பாசம்னு நினைச்சேன்.. உன்னை என் மனசுல ரொம்ப பெரிய இடத்துல வச்சிருந்தேன் நவ்தீப்.. ஆனா நீ எங்க மேரேஜ் அப்புறம் கூட அனன்யா, அப்புறம் ரிஷ்வந்தை செட்ல கொல்ல ப்ளான் பண்ணி..” என்று சொன்ன நிஹாரிகாவுக்கு அதற்கு மேல் முடியவில்லை.

குரல் கரகரக்க அப்படியே ஷோபாவில் சென்று அமர்ந்தவள், வயிற்றை நீவிக்கொண்டு, “மத்த பிரண்ட்ஸ் மாதிரி நாம அதிகமா பேசிக்கிட்டது இல்ல.. ஆனா அன்டர்ஸ்டான்டிங் நிறைய இருந்துச்சு.. உனக்கும் அது தெரியும்.. ரிஷ்வந்தை நான் லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணும்போது எவ்வளவு லவ் வச்சிருந்தனோ, அதேசமயம் உன் பிரண்ட்ஷிப்பை நினைச்சும் பெருமை பட்டிருக்கேன்” என்றவள்,

“யாருக்கும் தெரியாது நவ்தீப். உனக்கு எதுவும் இல்லன்னு சொன்னதுக்கு அப்புறம்கூட, உனக்கு பழசு எல்லாம் மறந்திடுச்சுன்னு நான் ரொம்ப கில்டியா ஃபீல் பண்ணேன். ரொம்ப ஸ்ட்ரெஸ் கூட ஆனேன். எல்லாரும் உனக்கு பழசு ஞாபகம் வரக்கூடாதுன்னு நினைச்சாங்க. ஆனா, நான் உனக்கு பழசு ஞாபகம் வரணும்னு நினைச்சேன். எனக்கு நீ பழைய நவ்தீப்பா மாறி உனக்குன்னு ஒரு லைஃப் வாழணும்னு ஆசை” என்று சொன்னவளைத் திரும்பிப் பார்த்தான் நிஹாரிகாவின் தோழன். ‘இவளின் நட்புக்குத் தான் தகுதியானவனா?’ என்று தோன்ற அவனின் உடல் விறைக்கத் துவங்கியது.

“உன்னோட நம்பிக்கை மட்டும் இல்ல.. எல்லாரோட நம்பிக்கையையும் நான் புதைச்சுட்டேன்.. யார் முகத்தையும் பாக்ககூட எனக்கு முடியல.. அன்னிக்கு ஏன் அப்படி ஒரு கேவலமான மைன்ட் செட்டுக்கு போனேன்னு தெரில.. சின்ன வயசுல இருந்து நினைச்சது எல்லாம் கிடைச்சனால, ஏமாற்றத்தை தாங்கிக்க முடியலையோ என்னமோ” என்று கரகரத்த குரலோடு சொன்னவன், “ஸாரி” என்றான். அவனிற்குத் தெரியும், ‘ஸாரி’ என்ற ஒற்றை வார்த்தை, தான் செய்ததிற்கு ஈடாகாது என்று. ஆனால், கேட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.

“உன்னோட ஸாரி எனக்குத் தேவையில்ல.. நீ ஆன்ட்டி, அங்கிளை இனியொரு தடவை யார்கிட்டையும் ஸாரி கேக்க வச்சிடாதே” என்றவளை விலுக்கென்று அவன் நிமிர்ந்து பார்க்க, அவளோ சுவற்றைப் பார்த்தபடி, “நல்லா பாத்து பாத்து வளத்தவங்க நம்மகிட்டையே மன்னிப்பு கேக்கறது எவ்வளவு கஷ்டமா இருக்கும்னு அன்னிக்கு தான் உணர்ந்தேன்” என்றவள் எழ முயல, அவளால் புதைந்து போய் இருந்த ஷோபாவில், அவ்வளவு எளிதில் வயிற்றை வைத்துக்கொண்டு எழ முடியவில்லை.

எதிரில் நின்றிருந்தவனைப் பார்த்தவள், “வந்து கையை கொடுடா.. பாத்துட்டே நிக்கறான்” என்று திட்ட, அவளருகில் வந்தவன் கையை நீட்ட அவன் கரம் பிடித்து எழுந்தவள், “உப்ப்ப்ப்” என்று பெருமூச்சை விட்டாள்.

அவளின் கரத்தை விடுவித்தவன், ‘ரொம்ப கஷ்டமா இருக்கா?’ என்று அக்கறையாக கேட்க வந்த நாவை அடக்கிக்கொண்டான். ஏனோ முன்பு இருந்த உரிமையை அவனால் கொண்டாட முடியவில்லை.

அவன் ஏதோ கேட்க நினைப்பதை உணர்ந்தவள், “என்ன?” என்று வினவ,

“எத்தனை மாசம்?” என்று வினவினான்.

தனது மேடிட்ட வயிற்றை புன்னகையுடன் நீவிக்கொடுத்தவள், “ஆறு ஸ்டார்ட் ஆகப்போகுது” என்று சொல்ல, நிஹாரிகாவின் வயிற்றில் வளரும் மகவும், அவளின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியும், பூரிக்கும் தாய்மையும், ரிஷ்வந்த்-நிஹாரிகாவின் காதலை நன்கு பறைசாற்ற, “ரிஷ்வந்துக்கு கங்கிராட்ஸ் சொன்னேன்னு சொல்லிடு” என்றான்.

“ம்ம்!” என்றவளிடம், “ஆறு மாசம் மாதிரி தெரியலையே?” நவ்தீப் வினவ,

“ஆமா..” என்றாள் புன்னகையுடன்.

“ட்வின்ஸா?” முகத்தில் இருந்த இறுக்கமும், சோகமும் மறைந்து நவ்தீப் ஆர்வத்துடன் கண்கள் மின்ன வினவ,

‘இல்லை’ என்பதுபோல தலையாட்டியவள், தனது மூன்று விரல்களைத் தூக்கிக் காண்பிக்க, “ஆஆஅ!”வென வாய்பிளந்த நவ்தீப்பிடம், “நான் போயிட்டு வர்றேன்” என்றவள் புன்னகையுடனே கீழே வந்தாள்.

தற்போது ரிஷ்வந்த் நடிந்திருந்த சரித்திர படம் அடுத்த மாதம் வெளிவர இருக்க, அர்ஜூனுடன் பேசிக் கொண்டிருந்தவன், மனைவியின் பொன் கொலுசின் ஒலியில், அவளிடம் திரும்பினான். வயிற்றில் கை வைத்தபடி முன்னிருந்த கம்பீரமும், குட்டித் திமிரும் சிறிதும் குறையாமல் படி இறங்குபவளின் அழகை, தன் மகவுகளின் தந்தையாய் ரசித்தவன், அவள் அருகே வந்தவுடன், “ஓகே அங்கிள்.. பண்ணிடலாம்..” என்று எழ, “போயிட்டு வர்றோம் அங்கிள்” என்றனர் இருவரும் ஒருசேர.

“ஒரு நிமிஷம்” என்று உள்ளே சென்ற சுரேகா, வெள்ளித் தட்டில் பட்டு வேஷ்டி சட்டையும், அதன் மேல் பட்டுப் புடவையும் வைத்து, பத்து பவுன் தங்கக் காசுகளுடன், சந்தன குங்குமத்தோடு வெளியே வர, அர்ஜூனுடன் சேர்ந்து நின்றவர், இருவருக்கும் தர, “எதுக்கு ஆன்ட்டி இந்த பார்மாலிட்டிஸ் எல்லாம்” வினவினாள் நிஹாரிகா.

“எதுவும் பேசாம வாங்கிக்கணும்” என்றவரிடம் இருவரும் ஒன்றாய் ஆசி வாங்க விழ, நிஹாரிகாவை பிடித்து எழுப்பிவிட்டவர், “இதே மாதிரி எப்பவும் ஹாப்பியா இருக்கணும் இரண்டு பேரும்” என்றிட, இருவரும் புன்னகையோடு அதை வாங்கி ஏற்றுக்கொண்டனர்.

வழி முழுதும் வேறு ஏதோ பேசிக்கொண்டு வந்த கணவனிடம், “என்னடா நவ்தீப்கிட்ட என்ன பேசுனே அதெல்லாம் கேக்க மாட்டியா? நானா தான் சொல்லணுமா?” அவனின் தோளில் நிஹாரிகா அடிக்க, “அது எதுக்குடி..? எனக்கு நீ, நம்ம குழந்தைக தான் எப்பவுமே மைன்ட்ல.. மத்தது எனக்குத் தேவையில்ல” என்றவன் சாதரணமாகக் காரை ஓட்டினான்.

“எல்லாரும் இப்பவே உள்ள மூணு குட்டின்னு சொன்னா ஆச்சரியப்படறாங்க.. குழந்தை பிறந்து நியூஸ்ல வந்ததுக்கு அப்புறம் பாரு.. சோஷியல் மீடியாஸ்ல உன்னோட ஸ்டாமினா பத்தி மீம்ஸ் போடுவாங்க பசங்க” என்று சொல்லியவள் வாய்விட்டுச் சிரிக்க,

“ஆமா, மேடமுக்கு எதுவும் இல்ல பாரு.. என் ஸ்டாமினாக்கு ஈடா இருந்தல.. அப்புறம் என்னடி” என்ற கணவனின் பேச்சில் நாணம் கொண்டவள், புடவையை சரி செய்வது போல ஏதேதோ செய்து முகத்தை அவனிடம் மறைக்க முயல, அது அவனின் விழிகளில் தவறாமல் சிக்கியது.

ஒரு மாதம் கழிய, “நிஹி, யார் யாரை கூப்பிடலாம் வளைகாப்புக்கு.. யாரையும் மிஸ் பண்ணிடக்கூடாது” என்றவனிடம், ஆப்பிளைக் கடித்துக் கொண்டிருந்தவள், “நம்ம பிரண்ட்ஸ், ஆத்விக், அனன்யா இவங்களை மறந்திடாத” என்றவள் ஷோபாவில் திரும்பி, சாய்ந்து அமர்ந்து அவனின் மடியில் தனது வெண் பாதங்களை வைக்க, அவளைத் திரும்பிப் பார்த்தவன், “காப்பாத்த வந்த பாவத்துக்கு அவனுகளையும் சேத்தி அறைஞ்சு வச்சிருக்கடி நீ.. அன்னிக்கு போனவனுக தான்.. அப்புறம் கால் பண்ணும்போது எல்லாம் சொல்லி காமிக்கறானுக” என்றபடி, அவளின் பாதங்களை இதமாய் பிடித்துவிட்டவன், அவளின் கால் விரல்களில் மென்மையாய் முத்தமிட்டான்.

“அதான் நிஹியோட பவர்.. சும்மா பேரைக் கேட்டாவே அதிரணும்டா பாவா” என்றவள், உள்ளே வந்து கொண்டிருந்த தாத்தையாவை அழைத்து, “தாத்தையா, வீட்டுலையே சிம்பிளா வச்சிடலாமே.. இவனும் நீங்களும் போடற லிஸ்ட் பாத்தாவே எனக்கு மயக்கம் வர்ற மாதிரி இருக்கு.. நமக்கு க்ளோஸ் ஆனவங்களை மட்டும் கூப்பிட்டுக்கலாம்” என்றிட, அவருக்கும் பேத்தியின் நிலை புரிந்தது. அனைவரையும் அழைத்தால் பேத்தி சோர்ந்து போய்விடுவாள் என்று நினைத்தவர் ரிஷ்வந்தைப் பார்க்க, “கோட் வோர்ட் அக்சப்டெட்” என்றவன் லிஸ்டை மூடி வைத்தான்.

அடுத்த வாரத்தில் சக்கரவர்த்தியின் வீடே மங்கலகரமாய் கலகலப்புடன் காட்சி அளித்துக்கொண்டு இருந்தது. நண்பர்கள், நெருங்கிய சொந்தங்கள் அனைத்தும் வந்திருக்க, ஸ்வாதிகாவும் ஒருபுறம்.

வரவேற்பறையின் நடுவே போட்டிருந்த நாற்காலியில் பட்டுப் புடவையிலும், பட்டு வேஷ்டி சட்டையிலும் ரிஷ்வந்தும் நிஹாரிகாவும் அமர்ந்திருக்க, அவர்களுக்கு முன் நான்கைந்து தட்டுகளில் வண்ண வண்ணங்களாய் கண்ணாடி வளையல்களும், இக்காலத்து பெண்கள் போடுவது போன்ற மார்டனான வளையல்கள் தனியாகவும், ஒரு வெள்ளிக் கலசத்தில் நீரும், மாமர இலைகளும், மற்றொரு புறம் பெண்ணவளுக்கு பிடித்த கலவை சாதங்களும்,இனிப்புகளும், காரங்களும் என மற்ற அனைத்தும் வைக்கப்படிருக்க, ஆணவனுக்கோ அத்தனை கர்வமாய் இருந்தது.

தந்தை அன்னையின் மகிழ்ச்சி குழந்தைகளையும் ஒட்டிக்கொண்டதோ என்னமோ, மூவரும் ஒருசேர அன்னையை செல்லமாய் உதைக்க, ‘க்ளுக்’ என்று அசைந்தவள், “டேய்! உதைக்கறாங்கடா” என்றாள் வயிற்றில் கை வைத்தபடி.

“வலிக்குதா?” அவன் வினவ, “இல்ல இல்ல.. மூணும் உள்ள குஷியா இருக்கு போல.. உருண்டுட்டே இருக்குங்க அங்கையும் இங்கையும்..” என்று சொன்னவளின் அருகே வந்த ஒரு வயதான பெண்மணி, “அடடடா! இந்தக் காலத்து புள்ளைகளுக்கு நல்லா குஷிதான்.. பேசிகிட்டே இருக்குங்கய்யா” என்றவரை அருகில் அழைத்த நிஹாரிகா, அவர் செவியில் ஏதோ சிரிப்புடன் சொல்ல அவரோ, “ஙே” என்று அதிர்ச்சியோடு விழித்துவிட்டு ஓடியேவிட்டார்.

“என்னடி சொன்ன? அலறியடிச்சு ஓடுது” ரிஷ்வந்த் கிசுகிசுக்க, “நீ வேணா தனியா வா பாட்டி.. என் புருஷனை கட்டிப்புடிச்சுட்டு இருப்பேன்னு சொன்னேன். அதுக்கே ஆள் ஓடிடுச்சு” என்று சொல்லிச் சிரித்தவளிடம், “பாவத்த.. பாட்டி இந்நேரம் தாத்தாகிட்ட இதை சொல்லி..” என்று இழுத்தவனின் கையில் யாரும் அறியாமல் கிள்ளி வைத்தவள்,

“அடங்குடா” என்றாள் செல்ல அதட்டலோடு.

நல்ல நேரம் வர ஒவ்வொருவராய் சம்பிரதாயங்களைத் தொடங்க, இருவரின் கன்னங்களிலும் அந்த இடமே மணமணக்கும் அளவிற்கு, சந்தனங்களை பூசத் தொடங்கினர் வந்திருந்தவர்கள்.

கன்னங்கள் இரண்டிலும் இருந்த சந்தனங்கள் பெண்ணவளின் நிறத்தோடு போட்டி போட, நெற்றி நிறைய இருந்த குங்குமம் காளையவனின் மனைவியை உச்சகட்ட அழகில் தள்ள, நன்கு மேடிட்டி வயிற்றுடன் நேராக அமர முடியாதவள் சிறிது சாய்ந்து அமர்ந்திருக்க, மங்கையின் கை நிறைய வளையல்களும், வயிறு நிறைய மூன்று பிள்ளைகளும்.

தன் கணவனை ஆசையாய் திரும்பிப் பார்த்தவளுக்கு, வகுப்பு அறையில் தன்னவனின் அருகில் அமர்ந்து அவனைப் பார்த்த நொடி நினைவில் வர, உடல் முழுதும் சொல்லமுடியாத உணர்வில் குறுகுறுத்து பறந்தது. எங்கு தொடங்கி எங்கு வந்து நிற்கிறோம் என்று நினைத்தவளுக்கு கணவனின் மடிதேடியது, அவளின் உலகம் மறந்து பூரித்துப் போயிருந்த உள்ளம்.

இறுதியில் ரிஷ்வந்த் நிஹாரிகாவின் கன்னங்களில் சந்தனத்தைப் பூச, குறும்புடன் தன்னவனைப் பார்த்து அவள் கண்ணடிக்க, ஒரு நொடி மனைவியின் செயலில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதையே மறந்து தடுமாறியவன், “ஏய் என்னடி விளையாட்டு இது” என்று கடிய, “நான் என்ன பண்ணேன் பாவா?” என்றாள் அப்பாவி முகத்தை வைத்துக்கொண்டு.

“என்னதான் நீ பண்ணல” என்று அவளின் மேடிட்ட வயிற்றைப் பார்த்தபடி அவன் கேலியாகச் சொல்ல, அவளின் வதனமோ கிளி மூக்கின் நிறத்தில் செம்பிளம்பாய் நாணத்தில் சிவந்துபோனது. பின்னே அவன்விட்ட நாட்களிலும் அவள் அவனை விட்டதில்லையே. அவளின் காதலை அவள் அத்தனை அழகாய் ஒவ்வொரு நாளும் அவனுக்குக் காட்டியிருந்தாள்.

அவளின் மறைமுகமான அக்கறையும், அவனுக்காக அவள் அவ்வப்போது சமைக்கக் கற்றுக் கொண்டதும், அவன் கல்லூரியில் பிடிக்கும் என்று கூறியதால் இன்று வரை புடவை உடுத்துவதும், படுக்கை அறையில் அவனை தன்னுடன் அடக்கிக் கொள்வதும் என்று அவள் தன் காதலை ஒவ்வொரு நொடியும் காட்டிக்கொண்டே இருக்க, அவளின் காதலில் ரிஷ்வந்தே திக்குமுக்காடிப் போனான் என்றுதான் கூற வேண்டும்.

செந்தணலாய் சிவந்திருக்கும் மனைவியின் வதனத்தை அணுஅணுவாய் ரசித்துப் பார்த்தவன், அவளின் கைகளில் அவளுக்காக அவன் பார்த்துப் பார்த்து துபாயிலிருந்து, செய்து வரவழைக்கப்பட்டிருந்த அடுக்கு அடுக்கான தங்க வளையல்களை அணிவிக்க, அவள் அவனை குனிய சொல்ல, அவனோ அவள் ஏதோ சொல்ல நினைக்கிறாள் என்று நினைக்க, அவனின் நெற்றியில் முத்தமிட்டவள், “தாங்கஸ்டா” என்றாள் அனைத்திற்கும்.

மனைவியின் கன்னங்களைப் பற்றி நெற்றியில் முத்தமிட்டவன், “தாங்க்ஸ்டி” என்றான் காதலுடன். இருவரின் நன்றியும் இருவரின் காதலுக்கும் என்று இருவரும் அறிந்த ஒன்றே. இருவரும் உலகம் மறந்து தாங்களும், தங்கள் பிள்ளைகளும் என்று அன்று சஞ்சரித்துக் கொண்டிருக்க, வளைகாப்பு முடிந்தவுடன் அவர்களின் படை அவர்களை சூழ்ந்துகொண்டது. இப்போது ஆத்விக்கும், நவ்யாவும் கூட அவர்களுள் ஐக்கியமாகியிருந்தார்கள்.

“ஹே நவ்யா, அன்னிக்கு என்னை பத்தி கேக்க வந்தப்ப நீ ஆத்விக் கூட இருந்தியாமா.. உனக்கு அந்த டைம்ல அங்க என்னடி வேலை?” என்று நிஹாரிகா அவளை இழுத்து வைத்து அவளின் செவியில் வினவ, “அது அது” என்று நாணத்துடன் திக்கியவள், “சும்மா தனியா டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு” என்றாள் ஆத்விக்கை ஓரப்பார்வை பார்த்தபடி.

“அடிப்பாவி” என்ற நிஹாரிகா, “அப்புறம்?” என்று ஆர்வமாகக் கேட்க,

“அப்புறம் எல்லாம் எதுவும் இல்லை” நவ்யா சிணுங்க, “என்னடி சிணுங்கற? இரு அங்கிள்கிட்ட சொல்லி உங்க கல்யாணத்தை சீக்கிரம் நடத்த சொல்றேன்” என்றாள் உறுதியோடு.

“இப்பதான் எனக்கு சாதகமா பேசியிருக்க” என்ற ஆத்விக் அவளுக்குக் கையைக் கொடுக்க, அவனுக்குக் கை நீட்டியவள், “இது என் கடமை காதல் மன்னா” என்றாள் சிறு கிண்டலோடு.

“எம்மா உன் புருஷன் அளவுக்கு எல்லாம் யாரும் காதல் மன்னன் இல்ல” என்று அனைவரும் ஒருசேரக் கத்த, ரிஷ்வந்திற்கோ முகத்தில் நாணம் குடிகொள்ள, தலையைக் கோதி யாருமறியாமல் மறைத்தவன் மனைவியைப் பார்க்க, அவளோ அவர்களிடம் தனி ஆளாக சண்டை இட்டுக் கொண்டிருந்தாள்.

“டேய் என்னடா கலாய்க்கறீங்க..” நிஹாரிகா சிணுங்க,

“பின்ன ஒரே பிரசவத்துல மூணுல” சக்தி கையில் குழந்தையுடன் தொடங்க, அனைவரும், ‘ஆமாம்’ போட்டு கத்திக் கேலி செய்ய, நிஹாரிகாவுக்கு வெட்கம் பிடுங்கித் திங்க, நாணத்தோடு கணவனின் தோளில் சாய்ந்து முகத்தை மறைத்துக்கொண்டாள்.

அன்னையிடம் சண்டையிட்டு ஓடிவந்த ஸ்வாதிகாவோ, நிஹாரிகாவின் மடியில் தலையை வைத்துப் படுத்துக்கொள்ள, அவளைக் கொஞ்சிக் கொண்டிருந்த நிஹாரிகாவின் அருகே வந்த சுரேகா அலைபேசியை அவளிடம் நீட்ட, “யாரு ஆன்ட்டி?” என்றாள்.

“நவ்தீப்டா” என்க, அலைபேசியை வாங்கியவள், “ஹலோ என்றிட,

“நான் யூ.எஸ் கிளம்பறேன் நிஹி” என்றான்.

“எத்தனை நாளைக்கு?”

“தெரியல நிஹி..” என்றிட நிஹாரிகாவுக்கு திகைப்பாக இருந்தது.

அவள் அருகில் நின்றிருந்த சுரேகாவைப் பார்க்க, அவரோ, ‘ஆம்’ என்பது போல தலையாட்டினார்.

“என்ன நிஹி.. பதிலே இல்ல?” எதிர்முனையில் அவன் வினவ,

“என்ன சொல்றதுனு தெரியலடா.. நேர்ல வந்து ஒரு தடவை சொல்லிட்டு போயிருக்கலாம்ல” என்றாள் ஆதங்கமாக.

“எனக்கு கொஞ்சம் சேன்ஞ் வேணும் நிஹி.. நான் வர்ற எப்படியும் ஒன் இயர் ஆகிடும்.. அப்பா அம்மாவை பாத்துக்கோங்க” என்றவனிடம், “ம்ம்” என்றாள் உம்மென்ற முகத்துடன்.

“கொஞ்சம் சிரிச்சு பேசினா.. நல்லா கிளம்புவேன்” என்றவனிடம், “நீ திரும்பி வா.. என் மூணு வாண்டையும் வச்சு பிண்ணிடறேன்” என்று மிரட்டியவள், “நல்ல முடிவு தான் நவ்தீப். ஐ ஹோப் யூ வில் பி அல்ரைட்” என்றவள் சிறிதுநேரம் பேசிவிட்டு அலைபேசியை ஸ்வாதிகாவின் காதில் வைத்து, “உன்கிட்ட ஒரு அங்கிள் பேசணுமாம்” என்றிட,

“யாரு ஆன்ட்டி?” என்று வினவியது வாண்டு.

என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தவள், “தெரியலையே நீங்களே கேட்டுக்கோங்க” நிஹாரிகா சொல்ல, “ஹலோ” என்ற ஸ்வாதிகாவிடம், “ஸாரி மா” என்றான் நவ்தீப். ஏனோ அந்தப் பிஞ்சின் அலறல் அவனின் மனதை கூறுபோட்டுக் கொண்டிருக்க, தன் மிருகத் தனமான செயலில் வெட்கியவன், அதற்குண்டான மன்னிப்பை குழந்தையிடம் கேட்டான்.

“இட்ஸ் ஓகே அங்கிள்” என்ற வாண்டிற்கு யார் பேசினார்கள் என்று கூடத் தெரியவில்லை. யாரோ சகவயதுடைய ஒரு குழந்தை விளையாட அழைக்க, ஓடிவிட்டாள்.

சுரேகாவிடம் அலைபேசியைக் கொடுத்த நிஹாரிகாவின், மனம் இப்போது முழு நிம்மதியை அடைந்திருந்தது. தனக்கும் தன்னைச் சுற்றியிருக்கும் அனைவருக்கும் இனி எந்தவொரு பிரச்சனைகளும் இல்லை என்று தெரிந்து கொண்டவளுக்கு அத்தனை சுகமாய் இருக்க, அருகில் இருந்த கணவனின் கை வளைவிற்குள் கைவிட்டு அவன் தோளில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.

மாலை அனைவரும் கிளம்பிச் செல்ல, நிஹாரிகாவின் அட்டூழியத்தில் ரிஷ்வந்த் அடுப்பில் இருக்கும் தந்தூரி சிக்கன் போல வெந்து கொண்டிருந்தான்.

ஷோபாவில் கயல்விழியின் மடியில் தலை வைத்துப் படுத்திருந்தவள், விவாஹாவின் மடியில் காலை வைத்திருக்க, சந்திராமா அவளுக்கு சூப் வைத்துக் கொண்டிருக்க, சக்கரவர்த்தி பேத்தியின் அருகில் நாற்காலியைப் போட்டு அமர்ந்து பழைய கதைகள் பேசி சிரித்துக் கொண்டிருக்க, கனகராஜ் மருமகளுக்கு இடையில் ஜூஸ் கொண்டு வந்து தர, மகாதேவன் மகளின் காலை பிடித்துவிட்டுக் கொண்டிருந்தார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நம் கதாநாயகனுக்கோ, காதில் ரயில் வண்டியைப் போன்று புகை வந்து கொண்டிருந்தது.

“கஷ்டப்பட்டு உழைச்சது நான்னுஉஉஉ.. இவங்க என்ன இவளையே விழுந்து விழுந்து கவனிக்கறாங்க” என்று நினைத்தவன் கடுப்புடனே திரிந்து கொண்டிருந்தான்.

இரவு உணவை முடித்துக்கொண்டு வந்தும் அவன் முறுக்கிக்கொண்டு திரிய, “டேய் பாவா.. என்னடா ஜல்லிக்கட்டு காளையாட்ட முறுக்கிட்டு இருக்க..” என்று அவனைத் திருப்ப,

“என்னை யாருமே கண்டுக்க மாட்டிறீங்கடி” என்று அவளின் கழுத்தில் முகம் புதைந்து சொன்னவனை தன்னுடன் அணைத்துக் கொண்டவள், “நான் மட்டும் தான் உன் பக்கத்துல இருப்பேன். வேற யாராவது வந்தா அவ்வளவுதான்.. அது நம்ம குழந்தைகளா இருந்தாலும் சரி” காதலுடன் அதற்கே உண்டான வீம்புடன் பேசிய மனையாளை நிமிர்ந்து பார்த்தவன், அவளைத் தன் நெஞ்சின் மீது சாய்த்துக்கொள்ள, அவளோ அவனுடன் ஆசையாய் நெருங்கினாள்.

தலையைத் தாழ்த்தி தன்னவளைக் கண்டவன் அவளின் விழிகளில் இருந்த காதல் புரிய, “ஏய் வேணாம்டி.. டயர்டா இருப்ப நீ” என்று எச்சரிக்க, “அதெல்லாம் இல்லை” என்றவள் அவனின் முகத்தில் தன் விரலால் கோலமிட, அவளின் விரலைப் பற்றி முத்தமிட்டவன், “லவ் யூ டி” என்றான்.

“அப்ப அந்த லவ்வை கொஞ்சம் காமிக்கிறது” நிஹாரிகா விடாமல் அவனின் உணர்வுகளைத் தூண்டிவிட, “அடங்க மாட்டியாடி” என்றான் அவளின் கீழுதட்டைத் தன் விரல்களால் இழுத்துவிட்டுக் கொஞ்சியபடி.

“எனக்கு இப்ப வேணும்னு தோணுது..” என்று கிறக்கத்துடன் சிணுங்கியவளின் இதழை புன்னகையுடன் சிறை செய்தவன், தனது கரங்களை ஊர்வலமாக அவள் உடலில் அலையவிட, மென்மையான ஒவ்வொரு தொடுகையிலும் மனைவியை சிலிர்க்க வைத்தவன், தன்னவளின் கைகள் இரண்டிலும் வளையல்கள் சிணுங்க அதை ஒவ்வொன்றாய் பிடித்து அழகு பார்த்தவன், வெகுநேரம் வளையல்களை சிணுங்க வைத்துக்கொண்டே இருந்தான், மனைவியைப் போல!

***

ஆறு வருடங்கள் கழித்து… கீழே கிளம்பி வந்த நிஹாரிகா, அவசர அவசரமாக புது வேளையாளிடம், “பசங்களுக்கு டிபன் பாக்ஸ் எல்லாம் பேக் பண்ணியாச்சா?” என்றவள் அங்கு வந்த சந்திராமாவை கண்டு, “உங்களை எத்தனை தடவை வேலை செய்ய வேணாம்னு சொல்றது..” என்று கடிந்தாள்.

“பழகிடுச்சுடா” என்றவர் மூன்று பிள்ளைகளுக்கும் டிபன் பாக்ஸை நீட்ட, அதை வாங்கி அவரவர் பையில் அடுக்கியவள், திரும்ப, ரிஷ்வந்த் நிஹாரிகாவின் காதல் சின்னங்கள், ஒரே பிரசவத்தில் அன்னை தந்தையை அலறவிட்டுப் பிறந்த சஞ்சய், சஞ்சீவ், சஹானா மூவரும் பள்ளிச் சீருடையுடன் வந்து கொண்டிருந்தனர்.

சஞ்சய் – தந்தை அன்னைக்கு இல்லாத பொறுமை அவனிடம் உண்டு. சக்கரவர்த்தியின் குணங்களில் பாதி அவனிடம். கற்பூரபுத்தி உடையவன். வேகத்தைவிட விகேதவத்தை இந்த வயதிலேயே அதிகம் உபயோகிக்கும் எதிர்கால சாணக்கியன்.

சஞ்சீவ் – அன்னையின் குறும்பும், தந்தையின் சேட்டையும் மிதமிஞ்சு வழிய அனைவரையும் தன் குரங்கு சேட்டையால், ஒவ்வொரு நொடியும் பதைபதைப்பிலேயே வைத்திருப்பவன். அதிரடி! அதிரடி! அதிரடி! மட்டுமே இவனிடம்.

சஹானா – தைரியமும் துடுக்குத்தனமும் அன்னையை மிஞ்ச, தந்தையின் கோபமும் சேர்ந்து கொள்ள, சகோதரர்களையே அடித்து சில சமயம் அழ வைத்துவிடும் பெண் சிங்கம். சக்கரவர்த்தி முதல் அனைவரும் இந்த சின்ன ராணியின் பேச்சைத் தான் கேட்கின்றனர் இப்போது.

இந்தக் குணங்கள் அவ்வப்போது மூவரிடமும் தெரிந்தாலும், சில சமயங்களில் தலை தூக்கினாலும், மழலை மாறாத செல்லக் கனிகளே மூவரும்.

வெள்ளை நிற சட்டையிலும், ப்ளூ ஜீன்ஸிலும் படியில் இருந்து இறங்கி வந்த கணவனை சைட் அடித்துக்கொண்டிருந்த நிஹாரிகா, அனைவரையும் சாப்பிட அழைத்தாள். கனகராஜ், கயல்விழியை தனியே விடவே மனம் இல்லாத நிஹி, கணவனிடம் சண்டையிட்டு, நாள் முழுக்க சாப்பிடாமல் இருந்து தன் காரியத்தை சாதித்து இருந்தாள்.

அனைவரும் சாப்பிட அமர, “தாத்தையா” சக்கரவர்த்தியை அழைத்த சஹானா, சகோதரர்கள் தடுத்தும், அவர்களை பட்டு பட்டு என்று தன் பிஞ்சுக் கைகளால் அடித்தவள், மனதில் இருந்ததை கொட்டத் தொடங்கினாள்.

“தாத்தையா அம்மாவும், நானாவும் எங்க மூணு பேரையும் விட்டுட்டு.. டெய்லி எங்களை தூங்க வச்சிட்டு.. லிவ்விங் ரூம்ல விளையாடப் போறாங்க.. எங்களை கூட்டிட்டு போறேன்னு சொல்லி சீட் பண்றாங்க” என்று குற்றப் பத்திரிகை வாசிக்க, சாப்பிட்டுக் கொண்டிருந்த ரிஷ்வந்திற்கோ, அனைவரின் முன்னும் மகளின் வார்த்தைகளில் புரையேற, தலையைத் தட்டியவன் தண்ணீரை எடுத்து அவசரமாகப் பருக, நிஹாரிகாவோ மகளின் வாயை கை வைத்து அடைக்க, அனைவரும் தங்களுக்குள் சிரித்தபடி உணவை உண்டுகொண்டு எழுந்தனர்.

குழந்தைகளை மாமனாருடன் பள்ளிக்கு அனுப்பி வைத்த நிஹாரிகா அறைக்கு வந்து கணவனை நாலு சாத்து சாத்தினாள்.

“ஏன்டி அடிக்கறே?” என்ற கணவனிடம், “எத்தனை தடவை சொன்னேன். இதுக மூணும் கேடிக.. பதினொரு மணிக்கு மேல லிவ்விங் ரூம் யூஸ் பண்ணிக்கலாம்னு.. அதைவிட்டுட்டு பத்து மணிக்கே கையை சுரண்டறது.. காதை சரண்டறது.. இடுப்பை கிள்ளுறது மூணையும் நடுவுல போட்டுட்டு.. பாரு அவளை,, எல்லாரு முன்னாடியும் மானத்தை வாங்கிட்டா..” என்று கணவனை உரசிக் கொண்டு நின்றபடியே பேசியவள்,

“மூணையும் பத்தி தெரியல உனக்கு.. அன்னிக்கு ஏன் ம்மா நீங்களும் நானாவும் பக்கத்துல நைட் இல்லைன்னு கேட்டதை நான் விளையாட்டுனு சொல்லி வச்சிருந்தேன்.. இன்னிக்கு போட்டு உடைச்சாச்சு” என்றவளைப் பார்த்து அவன் சிரிக்க, அதற்கும் சிணுங்கியவளின் இடையில் கை கொடுத்து தன்னுடன் இறுக்கியவன், “அதுல தானடி கிக்கே..” என்று மனைவியின் இதழை பதம் பார்த்துவிட்டே விலகனான்.

கணவனின் காதல் சிறிதும் குறையாததில் அகமகிழ்ந்து போனவள், “சீக்கிரம் வா.. பிரகாஷ் ஸார் அனுப்பின பொண்ணு நமக்காக ஆபிஸ்ல வெயிட்டிங்” என்றிட, இருவரும் ப்ரொடக்சனிற்கு கிளம்பிச் சென்றனர்.

தற்போது ரிஷ்வந்த் அனைவரையும் தன் நடிப்பால் கதிகலங்க வைத்துவிட்டு, திரைத்துறையில் முதலிடத்தில் வசிக்கும் முன்னணி கதாநாயகன். அவனுடன் நடிக்க ஆசைப்படாதவர்கள் இல்லை. அவனை வைத்துப் படம் எடுக்க ஏங்காதவர்கள் இல்லை. நடுத்தர வர்க்கத்தில் இருந்து இன்று கடலளவு உயர்ந்து நிற்கும் அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, அவனை முன்னோடியாய் எடுத்தவர்கள் ஏராளம். அனைத்திற்கும் புன்னகையையே பதிலாகத் தருபவன், என்றும் அதில் கர்வம் கொண்டதில்லை. அவனின் கர்வம் அனைத்தும் தன் குடும்பத்தின் மேலேயே. மற்றபடி பெரிய நடிகன் என்ற பந்தா அவனிடம் இருந்ததில்லை. ஆனால், அதில் பெருமை மின்ன இருந்தவள் அவனின் மனைவி! மனைவி! மனைவி!

கணவனின் சாதனைகளில் பெருமைகொள்ளாத மனைவிமார்கள் இருக்க முடியுமா?

அவர்கள் நண்பர்கள் கூட்டம் அனைவருக்கும் திருமணம் ஆகி குழந்தை உண்டு. ஆத்விக்-நவ்யாவிற்கு நான்கு வயதில் ஒரு குழந்தையும் உண்டு. நவ்தீப்பிற்கு ஸ்ரீ என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்து இரண்டு வயதில் ஒரு குழந்தையும் உண்டு.

அனைத்திலும் நிஹாரிகாவிற்கு திருப்தியே!

ப்ரொடக்சனிற்கு வந்தவர்கள், பிரகாஷ் அனுப்பி வைத்த பெண்ணை, உள்ளே அழைத்து கதையை விவரிக்கச் சொன்னார்கள்.

அப்பெண் கதையை விவரிக்க விவரிக்க, நிஹாரிகாவும் ரிஷ்வந்தும் அப்பெண் கூறிய கதையைக் கேட்ட இருவருமே, தங்கள் செவிகளை நம்ப இயலாது, ஐம்புலன்கள் மறத்து, உடல் சில்லிட்டு அப்பெண்ணை இமைக்காமல் பார்த்திருக்க, அப்பெண்ணோ கதையை நிராகரித்து விடுவார்களோ என்று பயத்துடன் பார்த்திருந்தாள். முதல் படத்திற்கான முயற்சி அல்லவா.

நிஹாரிகாவின் உடல் ரோமங்கள் கூட சிலிர்த்துப்போய் குத்திட்டு நின்று மீண்டும் அமைதியடைய மறுத்தன. அருகில் அமர்ந்திருந்த கணவனை அவள் பார்க்க, அவனும் அதே நிலைதான்.

ஏனெனில், அவர்களின் கதையை அல்லவா அப்பெண் கூறியது. அதுவும் எங்கேயும் மாறாமல்.

“கதைக்கு என்ன பேர் வச்சிருங்கீங்க?” ரிஷ்வந்த் வினவ,

“நான் உன்னை ப்ரேமிஸ்துன்னானு” என்றாள் இயல்பாய்.

“உங்க நேம் என்ன சொன்னீங்க?” நிஹாரிகா மறந்தவளாய் வினவ,

“யாழினி மதுமிதா”

***கட்**

(முற்றும் மட்டும் இல்லை. கட் கூட போடலாம்) 

மறக்காம முடிவுரை படித்து விடவும் மக்காஸ்.