நிஹாரி-4

IMG-20211003-WA0016-d1e52acd

நிஹாரி-4

தான் தங்கியிருந்த செவன் ஸ்டார் ஹோட்டலிற்குள் நுழைந்த ரிஷ்வந்த் வீட்டிற்கு அழைத்தான்.

“அம்மா, என்ன பண்றீங்க?”

“அப்பாக்கூட பேசிட்டு இருந்தேன்பா… சாப்பிட்டியா?” கயல்விழி வினவ,

“ம்ம்” என்றவன், “அம்மா உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றவன் திருமணத்தைப் பற்றி அன்னையிடம் தெரிவிக்க அவருக்கு அதில் மகிழ்வதா அல்லது அழுவதா என்று தெரியாத நிலை.

“ரிஸ்வந்த், நி…” கயல்விழி தயங்கி நிறுத்த,

“அவளுக்கும் இன்விட்டேஷன் போகும்” என்றவன் ஃபோனை வைத்துவிட்டான்.

தன்னைக் கேள்வியாய்ப் பார்த்த கணவர் கனகராஜிடம் விஷயத்தை கயல்விழி தெரிவிக்க, அவருக்கும் மகனின் போக்கில் அவ்வளவு திருப்தியில்லை.

“பொண்ணாவது உன் மகன் யாருன்னு சொன்னானா? இல்ல அதுவும் அவனே முடிவு பண்ணிட்டானா?” அவர் வினவ, கயல்விழிக்கு கோபம் வந்தது.

“அதெல்லாம் அவன் நல்ல பொண்ணா தான் பார்ப்பான்” கயல்விழி ரோஷமாக.

“நிஹாரிகாவைவிட நல்லபொண்ணு உன் மகனுக்குக் கிடைப்பாளா?” கனகராஜ் வினவ, அவருக்கும் அதே சிந்தனைதான் மனதிற்குள்.

இருந்தாலும் மகனை எந்த அன்னையால் விட்டுத்தர முடியும்.

“நம்ம பையன் எவ்வளவு பெரிய ஆளு… நீங்க என்னடானா அவனை இப்படித் திட்டறீங்க” மகனிற்காக கயல்விழி வாதாட,

“இங்கபாரு கயலு. அவன் எவ்வளவு பெரிய ஆளானாலும் நமக்கு மகன்தான். இந்த வயசுல அவன் தொட்ட உயரம் அதிகம்தான். இல்லைன்னு சொல்றதுக்கு இல்ல. ஆனா, அதேசமயம் அவன் தப்பான முடிவை எடுக்கற மாதிரியிருந்தா நம்மதான் அவனை மாத்தப்பார்க்கணும்” என்றார்.

“நாம சொன்னா கேக்கணுமேங்க” கயல்விழி முணுமுணுத்தார்.

இயல்பிலேயே தனக்கு பிடித்ததை மட்டுமே நடத்தி முடிப்பவனை மாற்ற முடியுமா?

“நாம இல்ல… நான் சொன்னா வேணும்னே காதுகூட குடுக்கமாட்டான்… ஆனா, நீ சொன்னாக் கேப்பான்… கழுதை கழுத்துலகூட தாலி கட்டுவான்” என்றவரை முறைத்த கயல்விழி,

“என் மகன் அழகுக்கு கழுதை கழுத்துல தாலி கட்ட சொல்லுவனா நான்?” அவர் கேட்க,

“அந்த அழகு எங்க இருந்து வந்துச்சுமா?” அவர் இடது கன்னத்தில் கைகளை வைத்தபடிக் கேட்க, அவரின் சாயலாய் இருந்த மகனை நினைத்தவர், “போங்க…” அந்த வயதிலும் சிறிது சிணுங்கியபடியே எழுந்து சென்றுவிட்டார்.

•••

நாட்கள் அதன் வேகத்தில் நகர, மூன்று மாதங்களுக்குப் பிறகு படத்தின் பூஜை தேதியைக் குறித்து சக்கரவர்த்தியிடம் இருந்து வாங்கினார் அர்ஜூன் கொனிடெல்லா.

படத்தின் கதாநாயகிகளாக முன்னணி நடிகைகளான அனன்யா நாயர் மற்றும் நவ்யா கௌடாவை தேர்வு செய்திருந்தான் இயக்குனர் அருண்.

அருண் முப்பதுவயதை இன்னும் சில மாதங்களில் எட்ட இருக்கும் இயக்குனர். பல வருடங்களாக உதவி இயக்குனராக பணிபுரிந்து பல தடைகளுக்குப் பிறகு மூன்று வெற்றிப் படங்களை இயக்கியவன். தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட படம் வசூலை அள்ளியிருந்தது

தற்போது சரித்திரக் கதையை எழுதியிருந்த அருண் கதாநாயகனைத் தேடிக் கொண்டிருக்க அவன் கண்களில்பட்டது ரிஷ்வந்த். இரண்டுமாதங்களுக்கு முன் நடந்த அவார்டு பங்க்ஷனில் ரிஷ்வந்தைக் கண்டிருந்தான்.

பெஸ்ட் என்ட்டடெயினருக்கான விருதை வாங்க ரிஷ்வந்த் மேடையேற அவனின் கம்பீரமான நடையையும், ஆட்டியூட்டையும் கண்டவன் அவன்தான் கதாநாயகன் என்று முடிவே செய்திருந்தான்.

படத்தின் கதாநாயகியாகளாக மலையாளத்தில் இருந்து அனன்யா நாயர், கன்னடத்தில் இருந்து நவ்யா கௌடாவை முடிவு செய்தான்.

மொத்தத்தில் நான்கு மாநிலங்களில் இருந்தும் படத்தின் க்ரூஸ் அன்ட் கேஸ்டை பிடித்திருந்தனர்.

படத்தின் பூஜை அன்று இரண்டு கதாநாயகிகளும் வந்திறங்க அவர்களை கண்டு அங்கிருந்த பலரும் வாயில் ஈ போய் வெளியே வரும் அளவிற்கு வாயைப்பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

எல்லா பூஜைகளையும் அர்ஜூன் நிஹாரிவை முன் நிறுத்தி நடத்தினார். ஸ்டோன் க்ரே பனாரசி ஹேன்ட்வோவன் அனார்கலியில் வாட்டர் ஃபால் ஹேர் ஸ்டைல் இட்டு அழகாகவும் அதே சமயம் கம்பீரத்துடனும் இருந்தவளைக் கண்டு அழகு என்ற சொல்லே, தன்னை மறந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தது.

நிஹாரிகாவின் அழகும், ஆளுமைத் தோற்றமும் அனன்யாவிற்கு உறுத்தியது என்னமோ உண்மைதான்.

நவ்யாவோ சாதாரணமாக நின்றிருந்தாள். நிஹாரிகாவின் சிறுவயது தோழி அல்லவா அவள்!

பூஜைகள் எல்லாம் அவர்கள் முறைப்படி முடிய, நிஹாரிகாவோ இன்றே படப்பிடிப்பை தொடங்கிவிடலாம் என்று அர்ஜூனிடம் சொல்ல, காஸ்ட் அனைத்தும் அவரவர் காரவனிற்குள் புகுந்தனர்.

இந்த மூன்று மாதங்களில் ரிஷ்வந்த் உடல் எடையை ராஜா கதாபாத்திரத்திற்காக ஏற்றி மேலும் முறுக்கேறிய உடலை வைத்திருந்தான். கூடவே புரொடக்ஷனில் இருந்து சண்டைக் காட்சிகளுக்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டு ஏற்கனவே
வசீகரமாகவும் கம்பீரமாகவும் இருந்தவன் தற்போது ராஜகம்பீரத்துடன்
இருந்தான்.

ஆண், பெண் இருவரும் தன்னை மறந்து அவனைத் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு தன் புறத்தோற்றத்தை வைத்திருந்தான்.

அவனை படங்களில் கண்டிருந்த அனன்யா நாயரும், நவ்யா கௌடாவும் இன்று அவனை நேரில் கண்டு, அவனுடைய வசீகரத்திலும் தேஜஸிலும் மயங்கித்தான் போயினர்.

அதுவும் அனன்யா அவனிடம் பூஜையின் போது பேச ஓரிரண்டு வரியில் ஆட்டியூட்டுடன் பதிலளித்தவனை அவள் பார்வையால் விழுங்காத குறைதான்.

அதைக் கண்ட நிஹாரிகாவோ எள்ளலாக மனதிற்குள், “ஸில்லி கேர்ள். இவன்கிட்ட போய் இப்படி வழியறியே” நகைத்தாள்.

முதல் ஷாட்டிற்காகத் தயாராகி வந்தவர்களை பார்த்த நிஹாரிகாவின் விழிகள் தன்னால் ரிஷ்வந்தைத் தேடியது. அதற்கான காரணம் அவளிற்கே தெரியவில்லை.

உலகில் நீ வெறுக்கும் ஆள் யாரென்று கேட்டால் முதலில் ரிஷ்வந்தைத்தான் கை காட்டுவாள். பிறகு தான் அன்னை, தந்தை.

அப்படி மனதில் வெறுப்பை தேக்கி வைத்திருப்பவளுக்குத் தெரியவில்லை ஏன் கண்கள் அவனைத் தேடுகிறது என்று.

அவனது கேரவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகில் வந்த நவ்தீப், “ஹே நிஹாரிகா” என்றழைக்க, “ம்ம் சொல்லு நவ்தீப்” என்றவளின் வாய்தான் அவனிடம் பேசியதே தவிர விழிகள் கேரவனிடமே இருந்தது.

“என்ன அங்கையே பார்த்திட்டு இருக்க?” நவ்தீப் ஒருமாதிரிக் குரலில் வினவ,

“ஏமிலேது(ஒன்றுமில்லை)” என்றவள் நவ்தீப்பிடம் திரும்பினாள்.

படத்தைப் பற்றி அவனிடம் அலசிக்கொண்டிருந்தாள். நவ்தீப்பும் அல்லவா தந்தை அர்ஜூடன் சேர்ந்து ப்ரொடக்சனில் இருக்கிறான்.

“ரிஷ்வந்த் உங்கிட்ட பேசுனானா?” நவ்தீப் சந்தடிசாக்கில் நிஹாரிகாவிடம் வினவ, அவளிடம் பதிலில்லை.

“சிலது எல்லாம் நடக்காம இருக்கறதே நல்லது நவ்தீப்… அன்ட் இதைப்பத்தி என்கிட்ட பேசாத” என்றவளின் முகத்திலும் குரலிலும் இருந்த வெறுப்பை உணர்ந்தவனின் முகத்தில் நிம்மதியின் சாயல்.

அவனிற்கு நிஹாரிகா ரொம்பவும் முக்கியம். சிறுவயதில் தொடங்கிய ஆசை இப்போது வரை வளர்ந்து அசைக்க முடியாத மரமாய் அவன் மனதில் வீற்றிருக்கிறது.

சிலர் பரபரப்பாக நிஹாரிகா நிமிரிந்தாள். ராஜா கதாபாத்திரத்திற்கு ஏற்ப ராஜ உடையில் ராஜகம்பீரத்துடன் காரவனில் இருந்து இறங்கி ரிஷ்வந்த வந்து கொண்டிருந்தான்.

‘துகில்’ எனப்படும் அரசர் காலத்தில் அணியப்படும் ஆடை வகையை அதேபோல் இந்தியாவின் பிரபலமான ஆடை வடிவமைப்பாளரை வைத்துத் தைத்திருக்க, முறுக்கேறிய தசைகளுடனும், நிமிரிந்த நெஞ்சுடனும், அகன்ற தோளுடனும் ராஜநடை போட்டு வந்தவனை அங்கிருந்த அனைவரும் வாய்பிளந்து பார்த்தனர். நவ்தீப் உட்பட.

நிஹாரிகாவோ அவனின் புற அழகில் மனதிற்குள் அசந்தாலும் சலித்துக்கொண்டு வெளியில் துளியும் காட்டாது இருந்தாள்.

வந்தவனின் இருபுறத் தோளிலும் கைவைத்த அருண், “உண்மையாவே ராஜா மாதிரி இருக்க” என்றவனிடம், “நாக்கு தெலுசு” என்றவனை ஆச்சரியமாகப் பார்த்தான் அருண். இருவருக்கும் இடையில் இருந்த மாதங்களில் நல்ல நட்பு உருவாகியிருந்தது.

“தெலுங்கு தெரியுமா ரிஷ்வந்த்?” அருண் வினவ,

“கத்துக் குடுத்திருக்காங்க” என்றவனின் விழிகள் ஒரு நொடியில் நிஹாரிகாவைப் பார்த்து மீண்டது.

அதைக் கண்ட நிஹாரிகாவின் உதடுகள் அதை முணுமுணுக்க அவளின் அருகில் இருந்த நவ்தீப் அதிர்ந்தான். அவள் முணுமுணுத்தது கெட்ட வார்த்தை அல்லவா!

“ஹேய், நிஹாரிகா இப்ப நீ சொன்னது தமிழ் கெட்ட வார்த்தைடி” நவ்தீப் சொல்ல,

“எனக்குத் தெரியும்” என்றவளை அவன் கேள்வியாய்ப் பார்க்க, “தோ நிக்கறானே அவன்தான் கத்துக்குடுத்தான்” என்றாள் பல்லைக் கடித்தபடி.

நியாயத்திற்கு ரிஷ்வந்திற்கு கோபம் வந்திருக்க வேண்டும் அவள் உச்சரித்த வார்த்தைக்கு. ஆனால், அவனிற்கோ சிரிப்புதான் வந்தது. யாரும் அறியாதபடி அடக்க மிகவும் சிரமப்பட்டான்.

“ஓகே, ரிஷ்வந்த் ஷாட் ரெடி…” என்ற அருண் ரிஷ்வந்த் நடிக்க வேண்டிய காட்சியை அவனிற்கு விவரித்தான்.

அவன் கூறும் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்து உள்வாங்கிய ரிஷ்வந்த் அவனிடம் சில சந்தேகங்களைக் கேட்டுவிட்டு தயாரானான்.

அந்தநேரம் அங்கு வந்த சக்கரவர்த்தியை அருண் முதல் ஷாட்டை தொடங்கி வைக்கச் சொல்ல, அவரோ ரிஷ்வந்தையும், அருணையும் ஆசிர்வதித்துவிட்டு முதல் ஷாட்டைத் துவங்கித் தந்நார்.

அருண் சொன்னது போலவே ரிஷ்வந்த் ஒரே டேக்கில் அதை முடித்துத் தர அனைவரும் அவனைக் கண்டு வியந்தனர்.

ஷாட்டை முடித்தவன் வந்து நிஹாரிகாவின் அருகில் அமர அவளோ நிமிரிந்து பார்க்காமல் கையிலிருந்த புத்தகத்தில் மூழ்கியிருந்தாள்.

ரிஷ்வந்த் அருகில் வந்தமர்ந்த அருண் அடுத்த ஷாட்டை விவரிக்க ரிஷ்வந்தின் மூளை குறும்பாய் வேலை செய்தது.

“என்ன அருண் இன்னும் கொஞ்சம் சீனை ஹாட்டா வைக்கலாம்ல. ஹிந்தில எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு பாத்தீல” கால்மேல் கால் போட்டபடி ரிஷ்வந்த் குறைபட,

“படத்துக்கு, ‘ஏ’ சர்டிபிகேட் வாங்கித்தர பார்க்கிறியே ரிஷ்வந்த். இதி நியாயமா?” அருண் கேலி செய்ய,

“பின்ன கேரளா புட்டையும், கன்னடா லட்டையும் பக்கத்துல வச்சிட்டு சும்மா இருக்க முடியுமா அருண்…” என்று அனன்யாவையும் நவ்யாவையும் பார்வையாலே சுட்டிக்காட்டி பேசியவன், “நான் என்ன கேக்கிறேன்… இரண்டு பேரோடையும் ஒரே டைம்ல ஆடுனா நல்லா வைரல் ஆகி படம் ப்ரமோட் ஆகும்ல” ரிஷ்வந்த் சிரிப்பை அடக்கியபடிக் கேட்க,

“இல்ல இல்ல நான் டைரக்டர்… நீ இந்த வேலை எல்லாம் சொல்லி என்னோட போஸ்ட்டை மாத்த பாக்கிறே… ஆள விடுறா சாமி” என்றவன் சிரித்துக்கொண்டே கழன்று கொண்டான்.

அருண் சென்ற பின், “ஆம்பிள புத்தி” நிஹாரிகா புத்தகத்தில் இருந்து தலைநிமிராமல் வார்த்தைகளைக் கடித்துத் துப்ப,

“இதுதான் பொம்பள புத்தி” என்றவன் எழுந்து அடுத்த ஷாட்டிற்கு தயாராகச் சென்றுவிட்டான்.

முதலில் நிஹாரிகாவிற்கு ரிஷ்வந்த் சொன்னது சுத்தமாகப் புரியவில்லை. மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்த்தவளிற்குப் புரிந்தது. ஆண்கள் விளையாட்டிற்குப் பேசுவதைக் கூட பெண்கள் சீரியஸாக்கி தவறாக கருதுவர் என்று. அவளிடம், “இதுதான் பொம்பளைக புத்தி” என்று அவன் ஒரு காலத்தில் சொன்னது நினைவு வர முகமோ கறுத்தது.

அடுத்த ஷாட்டிற்கு அவன் தயாராகி வர, அனன்யா, நவ்யாவைக் கண்ட நிஹாரிகாவிற்கு பகீரென்று இருந்தது.

கையில்லாத அதுவும் ஸ்ட்ராப் வைத்த மேலாடை. அதுவும் கழுத்திற்கு கீழ் நடுவே பள்ளத்தாக்கு போல இறங்கியிருந்தது. இடைப் பகுதியில் மேலாடையில் இருந்து தங்க நிறத்தில் தொங்கிய ஒற்றை சங்கிலி பெண்களின் நாபியைத் தொட்டிருந்தது. வளைவாய் இருந்த இடையை தாராளமாகக் காட்டிக்கொண்டிருந்தது.

கீழாடை பாதம் வரை இருக்க முட்டிக்கால் வரை முழுவதுமாக மறைத்த துணியும், அதற்குக் கீழ் ட்ரான்ஸ்பரன்ட்டாக இருக்க பெண்கள் கவர்ச்சியில் இல்லை. கவர்ச்சியில் தான் பெண்களே இருந்தனர்.

காரவனில் தயாராகி வந்த ரிஷ்வந்த் நிஹாரிகாவை நக்கலாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு கண்ணடித்துவிட்டுச் செல்ல அவளிற்குப் புரிந்தது அவன் வேண்டுமென்றே வெறுப்பேற்றுகிறான் என்று.

அவன் வெறுப்பேற்றுவதற்கு உட்கார்ந்து கண்ணீர் விடுவதற்கு அவள் என்ன கோழையா?

அவன் ஒருபடி சென்றால் அவள் ஒரேடியாய் எட்டுப் படிகளை அல்லவா தாவுவாள்.

இரண்டிற்கும் இரண்டும் சலித்தது இல்லை.

“நவ்தீப், இங்க ஒரே ஸ்வெட்டிங்கா இருக்கு… நம்ம போய் ரூமுல இருக்கலாம் வா” என்றவள் எழுந்து நவ்தீப்புடன் சிரித்துப் பேசியபடிச் செல்ல அதை சிறிது தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ரிஷ்வந்திற்கோ அவளைக் கொல்லும் வெறியே வந்துவிட்டது.

அதுவும் நவ்தீப்பை விட்டால் என்ன செய்வான் என்று அவனிற்கே தெரியாது.

அங்கிருக்கும் ஆபிஸ் அறைக்குள் இருவரும் நுழைய முதல் ஷாட்டை ஒரே டேக்கில் முடித்தவனால் இப்போது சரியாக செய்ய இயலவில்லை.

முயன்று மனதைக் கட்டுப்படுத்தியவன் இருபெண்களுடனும் கிடைத்த வாய்ப்பை விடாமல் ஆடி முடித்தான். ஆடி முடித்தவன் மீண்டும் அவர்கள் சென்ற அறையைப் பார்த்தான்.

அவளின் மேல் சந்தேகம் என்றில்லை. அவனிற்கு நவ்தீப்பைக் கண்டால் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

அவனின் பார்வை அறையின் வாயிலிலேயே சுற்றுவதை உள்ளிருந்து பார்த்துக்கொண்டிருந்த நிஹாரிகாவுக்கு உள்ளுக்குள் குளிர்ந்தது. “மவனே எங்கிட்டையேவா” என்று நினைத்தவள் நவ்தீப்புடன் தங்களது துறையைப் பற்றி சிலதை பேசிக் கொண்டிருந்தாள்.

ஷூட்டிங் ஒருவழியாய் முடிய நிஹாரிகா நந்தினியை அழைத்துக்கொண்டு கிளம்ப எத்தனிக்க, அவளது ஜாக்குவார் வேலையைக் காட்டியது. முயன்று பார்த்தவள் ஷோ ரூமிற்கு அழைக்க வந்து பார்த்தவர்கள் இரண்டு மணி நேரம் ஆகும் என்று சொல்ல மணியைப் பார்க்க ஏழாகியிருந்தது.

தாத்தாவிற்கு அழைத்தவள் விஷயத்தைச் சொல்ல, “கார் அனுப்பட்டா பங்காரம்” அவர் வினவ,

“இல்ல தாத்தையா.. நன்னு ட்ராப் செய்யமணி நவ்தீப்பனி அடுகுதான்னு (நான் என்னை நவ்தீப்பை ட்ராப் பண்ண சொல்றேன்)” என்றவள் அலைபேசியை வைக்க அப்போது தான் அவளிற்கு நினைவு வந்தது நவ்தீப் தனக்கு முன்பே சென்றுவிட்டான் என்று.

வெளியே வந்த ரிஷ்வந்த் அவள் நின்றுகொண்டிருப்பதைக் கண்டு என்னவென்று விசாரிக்க தன் பிஏவை அனுப்ப நிஹாரிகாவோ என்றும் இல்லாத திமிருடன் நின்றிருந்தாள். பின்பு நந்தினிதான் சொல்ல வேண்டியது ஆயிற்று

தனது பிஏ சொன்னவுடன், ‘நின்னும் உனக்கெல்லாம் திமிரு அடங்குதாடி’ நினைத்தவன் காரில் ஏறிக்கொண்டு கிளம்பினான்.

‘தங்கி இருக்கிறது எங்க வீட்டில… அட்லீஸ்ட் என்கூட வர்றீயான்னு கேக்கறானா பாரு’ அவள் மனம் கத்த, ‘அவன் கூப்பிட்டா மட்டும் நான் உன்னை போக விட்ருவேனா’ என்றது அவளது ஈகோ பிடித்த மூளை.

பிறகு அருண் வர அவனிடம் பேசத் தொடங்கியவளிற்கு நேரம் போனதே தெரியவில்லை. நந்தினிக்கு பணம் கொடுத்து கேபில் அனுப்பியவள் தாத்தாவிற்கு அழைக்க எண்ணி அலைபேசியை எடுக்க அவர்களுடைய ஆடி ஏ6 உள்ளே நுழைந்தது.

“உப்ப்ப்! தாத்தாவே ட்ரைவரை அனுப்பிட்டார்” நிம்மதிப் பெருமூச்சுடன் காரில் பின்பக்கமாக ஏறி அமர்ந்தவள், கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து நன்றாகக் கண்களை மூடினாள்.

ஏனோ காலையிலிருந்து நடந்தது அனைத்தும் மனதில் படமாக ஓடிக்கொண்டிருந்தது.

தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் பாடல் வேறு காரில் ஓடிக்கொண்டிருக்க அதைக் கேட்கும் மனநிலையில் அவள் இருந்தால் தானே. “ச்சு… ட்ரைவர் பாட்டை நிறுத்துங்க” எரிச்சலடைந்த குரலில் அவள் கூற பாட்டோ நிறுத்தப்பட்டது.

‘நாட்டு சரக்கு
நச்சுன்னு தான் இருக்கு..
கிட்ட வந்து முட்ட வந்தா
கின்னுனுதான் இருக்கு..
தங்கக் குடமே
தஞ்சாவூரு கடமே..
மந்திரிச்சு விட்டுப்புட்ட
மலையாளப் படமே..
என்ன சைசு இது மாமே
என்ன வயசு இது..’ சிறிது நேரத்தில் மீண்டும் காரில் இந்தப் பாடல் ஒலிக்க,

“ட்ரைவர்” சத்தம்போட்ட நிஹாரிகா கண்களைத் திறக்க ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த ரிஷ்வந்தைக் கண்டு அதிர்ந்தாள்.

இதுபோன்ற பாடல்கள் தங்களது கார்களில் இல்லை என்பது அவளிற்குத் தெரியும். ட்ரைவர் வேண்டுமென்றே செய்கிறான் என்று நினைத்த நிஹாரிகா கண்களைத் திறக்க, ரிஷ்வந்த் அமைதியாய் தன் விரல்களால் ஸ்டியரிங்கில் பாடலுக்கேற்ப தாளம் தட்டியபடி வருவதைக் கண்ட நிஹாரிகா அதிர்ந்தாள்.

“ஏய், நுவ்வு எந்தக்கு வச்சாரு(நீ எதுக்கு வந்த?)” அவள் சத்தம் போட, அவனோ, “என்ன சைசு இது மாமே… என்ன வயசு இது” பாட ஆரம்பிக்க தாத்தாவிற்கு அழைத்தாள் நிஹாரிகா.

“தாத்தையா இவனை எதுக்கு அனுப்புனீங்க” அவள் தாத்தாவிடம் பாய,

“தப்பு பங்காரம். நம்ம வீட்டுக்கு வந்த கெஸ்ட்டை இப்படியெல்லாம் அவன் இவன்னு சொல்லக்கூடாது” அவர் அவள் நிலைமை புரியாமல் அறிவுரை வழங்க, அலைபேசியை அணைத்துவிட்டாள்.

நெற்றியில் கை வைத்து அமர்ந்தவள் ரிஷ்வந்த் இன்னும் அதே பாடலை முணுமுணுத்துக் கொண்டு வருவதைக் கண்டு, “நோர்முய்(சட் அப்)” என்றாள் பல்லைக் கடித்தபடி.

“நான் என்ன உன் ட்ரைவரா… நீ வாய மூட்டிடு வாடி” என்றான் ரிஸ்வந்த்.

அவனின் பதிலில் கோபம் கொண்டவள் கார் கதவைத் திறக்கப் பார்க்க அவனோ அதன் கன்ட்ரோலை தன்னிடம் வைத்திருந்தான்.

“தாத்தா சொன்னதுக்காகத் தான் வந்திருக்கேன்” என்றான்.

“அவ்வளவு நல்லவனா இருந்திருந்தா, ஒரு கர்டஸி இருந்திருந்தா உன்கூட கூட்டிட்டு போயிருப்ப” அவளையும் அறியாமல் வார்த்தைகள் வந்து கொண்டிருந்தது.

“உனக்கு இருக்க ஈகோவுக்கு நான் கூப்பிட்டா என் கார்ல ஏறிடுவியா?” அவன் அவளை அறிந்தவனாய் சரியாக கேள்வியைக் கேட்க ஒருநிமிடம் பதில் தெரியாது தடுமாறித்தான் போனாள்.

அவனைக் காயப்படுத்தியே ஆக வேண்டும் என்ற வெறி அவளுக்குள் எழுந்தது.

“அதுதான் எங்க காரை எடுத்திட்டு வந்திருக்கியா. நான்கூட வேற என்னமோ நினைச்சேன். ஒருவேளை பெட்ரோலுக்கு காசில்லையோனு. அதுசரி நடிச்சது நாலு படம்தானே. அதுக்குத்தான் தன்னோட தகுதிக்கு ஏத்த மாதிரி தீப்பெட்டி சைசுக்கு கார் வாங்கனும். மைலேஜும் கிடைக்கும் பாரு. பிகாஸ் நீ பரம்பரை பணக்காரன் ஒண்ணும் இல்லியே எப்போமே கைல காசு இருக்கும்னு சொல்றதுக்கு” அவனை குத்திக்குதற நினைத்தவள் ஒருசேர அவனின் தன்மானத்தையும், ஈகோவையும் ஒருசேரத் தூண்டிவிட்டாள்.

அதுவும் காலையில் இருந்து அவளின் செயல்களாலும் பேச்சாலும் ஆத்திரத்தில் இருந்தவனிற்கு இது இன்னும் எண்ணெயை ஊற்றியது போல ஆகியது.

முகத்தில் எதையும் காட்டது மிரரை அட்ஜஸ்ட் செய்து அவளைப் பார்த்தவன், “யூ ஆர் ராங் நிஹாரிகா. என்கூட உன்னை கூட்டிட்டு போயிருக்கலாம். அதை எவனாவது பார்த்து பத்திரிகைல கிசுகிசு வந்து… அப்புறம் உன்னையும் என்னையும் சேர்த்தி வச்சு மீம்ஸ், சாங்கஸ் எல்லாம் வரும்”

“எனக்கு கல்யாணம் ஆகப்போற டைம்ல இதெல்லாம் தேவையில்லாதது பாரு. திடீர்னு எவனாச்சும் இதை பிரஸ் மீட்ல கேட்டா என்னன்னு சொல்றது சொல்லு. என்ன சொல்ல முடியும். நீ என் வைப்பாட்டின்னா சொல்ல முடியும். சொல்லலாம்…” இடைவெளியிட்டுச் சிரித்தவன், “ஆனா எனக்கு கீப்பா வர்றவளுக்குக் கூட நான் சில தகுதி எதிர்பார்ப்பேன். அதுவும் உங்கிட்ட இல்லாதபோது என்னன்னு சொல்ல” என்று முடித்தான்.

அக்கறை உள்ளவன் போல முப்பது மாடிகள் தூக்கிச் சென்று, அவன் அவளை கீழே எறிய, அது சரியாக பெண்ணவளின் உள்ளத்தை குறிபார்த்து அடித்தது.

வீடு வந்ததும் தனது அலைபேசியில் இருந்து ப்ளூடூத்தை டிஸ்கனெக்ட் செய்தவன் காரைவிட்டு இறங்கியவனின் முன் நிஹாரிகா அவன் வந்து நின்றாள். அத்தனை ஒரு ஆக்ரோஷம் அவளது முகத்தில். முகம் எல்லாம் சிவந்து ஜிவுஜிவென எரிந்து கொண்டிருந்தது.

அவன் அவளின் பார்வையை தாங்கி நிற்க, எதிர்பாரா சமயம் அவனின் கன்னத்தில் பளார் என்று அறைந்தவள் திரும்பியும் பார்க்காது வீட்டிற்குள் நடந்தாள்.