நிஹாரி-6

IMG-20211003-WA0016-fde1154a

நிஹாரி-6

அன்று நிஹாரிகாவின் கை தனது கன்னத்தைப் பதம் பார்த்ததில், கோபத்தின் எல்லையைத் தொட்டிருந்தான் ரிஷ்வந்த். அவள் பேசியதிற்கு அவன் திருப்பிப்பேசியது அவனுக்குத் தவறாகத் தோன்றவில்லை.

பணத்தை முன்வைத்து அவன்பட்ட அவமானங்கள் பல. அதை முன்னிறுத்தியே அவளும் அவனை மட்டம் தட்டுவதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதுவும் அவள் பேசுவதை அவனால் சுத்தமாகக் கிரக்கித்துக்கொள்ள முடியவில்லை.

அதனால்தான் அவன் அவளின் கோபத்தைத் தூண்டும் விதமாய்ப் பேசியது. ‘அதற்கு அடிப்பாளா?’ ஆணிற்கே உரிய ஆங்காரம் மனதில் எழ நொடிப்பொழுதில் மனதில் நடந்ததை நினைத்துப் பார்த்தவன், முன்னே சென்று கொண்டிருந்த நிஹாரிகாவின் பின் விறுவிறுவென சென்றான்.

அவன் வரும் வேகத்தையும், அவன் கண்களில் தெறிந்த அனலையும் மட்டும் கண்டிருந்தால் நிஹாரிகாவே பயந்திருப்பாள்.

வரவேற்பறையில் அமர்ந்திருந்த சக்கரவர்த்தி, “வாங்க, ரிஷ்வந்த்” வரவேற்க, அப்போதுதான் திரும்பி அவனின் வருகையை கவனித்தவள், பின்பு எனக்கென்ன என்பதுபோல சென்றுவிட்டாள்.

சக்கரவர்த்தியின் குரலில் நின்ற ரிஷ்வந்திற்கு அதற்குமேல் நிஹாரிகாவிடம் செல்ல முடியவில்லை. சக்கரவர்த்தியின் மேலிருந்த மரியாதை செல்லவும் விடவில்லை. அவரிடம் சிறிதுநேரம் பேசியவன் தலையைக் கோதி கோபத்தை
கட்டுப்படுத்திவிட்டு, தான் அங்கு தங்கியிருந்த அவுட் ஹவுஸிற்கு
சென்றுவிட்டான்.

பேத்தி ரிஷ்வந்தை அறைந்ததைக் கண்ட சக்கரவர்த்தி வேண்டுமென்று தான் வரவேற்பறையில் அமர்ந்தது. அவரும் ஆண் அல்லவா. அதனால்தான் பேத்தியை ரிஷ்வந்த் கை நீட்டும்முன் அங்கேயே அமர்ந்துவிட்டார். ரிஷ்வந்திற்கு பயம் இல்லையென்றாலும் தன்மேல் மரியாதை இருக்கும் என்று அவருக்கு நம்பிக்கை இருந்தது. அது பொய்க்கவில்லை.

யோசனையுடன் அமர்ந்திருந்தவர் ஒரு முடிவை எடுத்தவராய் ரிஷ்வந்திடம் சென்றார். அப்போதுதான் இரவு உடைக்கு மாறியவன் காலிங்பெல்லின் சத்தம்கேட்டு கதவைத் திறக்க, நின்றிருந்த சக்கரவர்த்தியைக் கண்டவன், “உள்ள வாங்க ஸார்” என்றான்.

“உங்களுக்கும் பங்காரமுக்கும் என்ன பிரச்சனை?” அவர் வினவ உள்ளுக்குள் அதிர்ந்தவனோ,

“நத்திங் சீரியஸ் ஸார்” என்றவனிடம்,

“உங்க இரண்டு பேர் வயசைவிட என்னோட அனுபவம் அதிகம்” என்றவர், “எந்த நம்பிக்கைல உங்ககிட்ட இதை சொல்றேன்னு தெரியல.. ஆனா உங்ககிட்ட சொல்ல வேண்டிய கட்டாயம்னு எனக்கு எங்கையோ சொல்லிக்கிட்டே இருக்கு” என்றவர் நிஹாரிகா பிறந்ததையும், அவள் வளர்ந்த விதத்தையும், அவள் பட்ட துன்பங்களையும் சொல்லச்சொல்ல ரிஷ்வந்திற்குள் கோபமும், வன்மமும் மறைந்து குற்றஉணர்வும், வேதனையும் எழத் தொடங்கியது.

அவனது விழிகளோ சொல்லமுடியாத துயரத்தைப் பிரதிபலிக்க, சக்கரவர்த்தியின் விழிகளும் அதையேதான் சொன்னது.

“உங்ககூட சென்னைல இருந்தப்பதான் பங்காரம் பழையபடி இருந்த மாதிரி தோணுது..” அவர் மேலே சொல்லமுடியாமல் தவிக்க, இவ்வளவு பெரிய மனிதர் தன்னிடம் இப்படி நிற்பதை உணர்ந்தவன்,

அவரின் கையை எடுத்து தனது கைகளுக்குள் வைத்தவன், கண்களாலேயே செய்தியை உணர்த்த ரிஷ்வந்தின் தலையின் மீது கை வைத்தவர், “நான் வரேன்பா” என்று கிளம்பினார்.

அவர் சொன்னது அனைத்தும் அவன் மூளையில் ஓட, நிஹாரிகா பட்ட துன்பங்களை, அந்தந்த வயதில் வைத்து, அவளை கற்பனை செய்து பார்த்தவனிற்கு நெஞ்சில் உதிரம் கசிந்தது. இப்படியொரு பகுதி அவள் வாழ்வில் அவன் நினைத்துப் பார்க்காதது.

கண்களை மூடித் தன்னை நிதானப்படுத்திக் கொண்டவனிற்கு, அவள் தன்னை அடித்ததில் நியாயம் இருப்பதாகவே தோன்றியது.

சுற்றுமுன் தோன்றிய ஆத்திரமும், வன்மமும் அவனறியாமலேயே பறந்தோடியது.

“நேன்னு இக்கட கூர்ச்சுண்டேன்னா?”(நான் இங்க உக்காரட்டா) ஒருநாள் தன்னிடம் வந்து கேட்டவளின் முகத்தை நினைவில் கூர்ந்து பார்த்தான். மறக்கமுடியாத முகம். பால்நிலா என்றதன் அர்த்தத்தை அங்கு ரிஷ்வந்த்
உணர்ந்தநொடி.

தன் நினைவுகளிலிருந்து வெளியே வந்தவன், காருக்குள் தன்னுடன் இருப்பவளின் முகம் பார்த்தான்.

அவ்வப்போது அரை மயக்கத்திற்கு சென்று, மீண்டும் போதையில் வந்து சிரிப்பதை பார்த்தவனிற்கு புன்னகை அரும்பியது. இன்னும் அவனது சட்டைக் காலரை அவள் விட்டபாடில்லை.

அவன் சட்டையை பிடித்திருந்த அவளது கரத்தில் முத்தமிட்டவன், ஒரு விரலால் அவளது கன்னத்தைத் தடவி,

“ஏய் ஜிலேபி, வீட்டுக்குப் போக வேணாமா?” அவள் கன்னம்தட்ட,

“ம்கூம்” என்றவள் மயக்கத்தில் சிரித்தாள்.

“குடிகாரி” அவன் சிரிக்க அவன் வாயிலியே அடித்தவள், “நேனு குடிகாரி லேது”(நான் குடிகாரி இல்ல) என்றாள் தமிழும் தெலுங்கும் கலந்து.

ஏசி வேறு உள்ளே முழுவதுமாய் நிறைந்திருக்க, “குளுறுது” நடுங்கிய அதரத்துடன் உரைத்தவள் அவன் எதிர்பாரா சமயம் அவன் நெஞ்சில் முகம் புதைக்க அவனோ தடுமாறத் தொடங்கினான்.

அவன் நெஞ்சில் இருந்த ரோமங்கள் அவளுக்கு கதகதப்பான இதத்தை தர, அவனின் சட்டைக்குள் கரங்களை நுழைத்தவள் தன்னுடன் அவனை இறுக்க ரிஷ்வந்திற்கோ மனம் தடம்புரள ஆரம்பித்தது.

“ஜிலேபி போகலாம்டி” சிரமப்பட்டு அவன் உணர்வுகளை கட்டுப்படுத்தியபடி சொல்ல,

“ம்கூம் பாவா.” நிஹாரிகா சிணுங்க, அவனுக்கோ அவளின், ‘பாவா’ என்ற விழிப்பில் ராஜபோதை உடம்பில் ஏறுவதைப்போல் இருந்தது.

“ஏன்டி?”

“நீத்தோ உன்டடம் நாக்கு இஷ்டம் பாவா”(உன்கூட இருக்க ரொம்ப பிடிக்கும் பாவா) அவளின் குரலும், அணைப்பும் மென்மையை தத்தெடுத்திருக்க, அவனிற்கு பனித்துளியாய் உள்ளுக்குள் ஏதோ ஒன்று இறங்கியது.

அவளை தன்னிடமிருந்து பலம்கொண்டு விலக்கியவன், குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த அவள் இதழ்களை தன் பெருவிரலால் வருடிவிட்டான்.

“நான் தப்பான பொண்ணா பாவா” அவள் தழுதழுத்தக் குரலில் கேட்ட நொடி அவனின் மோகம் அறுபட்டது.

அவனின் வார்த்தைகள் அவளின் ஆழ்மனதில் அழியாமலிருக்க, இப்போது மதுவின் தாக்கத்தால் வெளிவரத் தொடங்கியிருந்தது.

“நான் தப்பான பொண்ணா?” மீண்டும் ஒருமுறை கேட்டவள், “என்னை ஏன் அப்படி சொன்ன ரிஷ்வந்த்?” குழந்தைபோல் உதட்டை பிதுக்கி கேட்டவளைக் கண்டவனுக்கு பரிதாபமாக இருந்தது.

“ஸாரி” அவன் ஆழ்மனதிலிருந்து கேட்க, அவனின் தோளில் கோபத்தில் பட்டுபட்டென்று நான்கடி அடித்திருந்தாள்.

அவளின் செய்கையில் புன்னகையை உதிர்த்தவன், அவள் நெற்றியில் முத்திரையைப் பதிக்க, அவளோ அடுத்து அவனிடம் தன் கன்னத்தைக் காண்பித்தாள். அவளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவன், தனது பற்தடத்தையும் அங்கு லேசாக பதித்தான்.

அவனுடன் நெருங்கியவள் அவனது முகம் முழுதும் தன் இதழை நிதானமாய், அதே சமயம் அழுத்தமாய் பதிக்கத் துவங்க, அவனின் வசீகரத்தை தனது முத்தத்தில் அடக்க நினைத்தவளால் முடியவில்லை.

‘விரச விளையாட்டை ஆண்தான் தொடங்க வேண்டுமா?’ என்று நினைத்தவள், நொடியும் தாமதிக்காது தனது கரத்தை, அவனது கழுத்தில் மாலையாயக் கோர்த்து அவனின் இதழோடு இதழ் பொருத்தினாள்.

ஆழ்மனதின் தவிப்புகள் யாவையும் இருவரும் ஒரே முத்தத்தில் ஈடுகட்ட முயற்சிக்க, போரில் இருவரும் ஒருபக்கமே நின்று இதழ்யுத்தம் நடத்த, நிபந்தனைகள் இல்லாது நீண்டுகொண்டே இருந்தது இருவரின் சத்தமான இதழ்யுத்தம்.

இறுதியில் அவளின் இடை சிலிர்க்க, அவனின் நெஞ்சம் திமிர, மூச்சிரைக்க விலகியவர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ரிஷ்வந்தினால் தனது உணர்வுகளை அடக்க முடியவில்லை.

அவளது காது மடலில் சிறிதுநேரம் கவிபாடியவன், அவள் கழுத்திற்கு இறங்க, அவனின் சிகைக்குள் கை நுழைத்து கழுத்தை ஒருபக்கமாகத் திருப்பி, அவனிற்கு அவள் வழிவகுக்க, இருவருக்கும் மோகத்தீ பற்றியெரிய ஆரம்பித்தது.

‘காக்கவைத்திருப்பதில் பெண்மை அழகு
காத்திருப்பதிலில் ஆண்மை அழகு’

மீளக்கூடிய ஈர்ப்பைவிட, மீளமுடியாத காதலும் காமமும் சேர்ந்து இருவரின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட, அவளின் மாராப்பை விலக்கியவன் அவள் நெஞ்சில் முகம்புதைக்க, “பாவா” என்ற நிஹாரிகாவின் சிணுங்கல் அவனிற்கு கர்வத்தையும் துணிவையும் கொடுத்தது.

அவளோ அவனைத் தடுக்கவும் இல்லை. தடுக்க முயற்சிக்கவும் இல்லை. சில வருடங்களுக்குப் பிறகு கிடைத்த தனிமை இருவரையும் வேறொரு உலகிற்கு இழுத்துக்கொண்டு சென்றது.

ஏதோ வித்தியாசத்தை உணர்ந்த ரிஷ்வந்த் அவளின் கழுத்திற்குக் கீழே பார்க்க, அதிர்ந்தவன், மறுநொடியே எழுந்தமர்ந்தான். இருகரங்களாலும் தலையைத் தாங்கியவன் வேதனையோடு அவளையும் அவளின் உடலில் இருந்ததையும் கண்டவன், “ஐம் ஸாரிடி.. நான் உன்ன சரியா புரிஞ்சுக்கல” என்று முணுமுணுத்தான்.

மோகமும் தாபமும் விலகியிருக்க, அவளின் புடவை மாராப்பை எடுத்து அவளின்மேல் போட்டவன் அவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு விலகினான். போதையில் இருப்பவளிடம் தன் உணர்வுகளை வெளிப்படுத்த நினைத்த தன்னையே திட்டிக்கொண்டான்.

‘அவள் போதையில் தன்னை மறந்து தடுக்கவில்லை என்றாலும் தான் செய்ய இருந்தது தவறு’ என்றே அவனிற்கு தோன்றியது.

முன்னிருகைக்கு வந்து காரை எடுத்தவன் வீட்டுற்கு வர, அவர்களின் நல்ல நேரமோ என்னமோ சக்கரவர்த்தி இன்னும் வீடுவந்து சேரவில்லை.

அவளைக் கைகளில் குழந்தைபோல் அள்ளியவன், அவளைத் தூக்கிச் செல்ல சமையல் கட்டிலிருந்து வெளியே வந்த சந்திராமாவிற்கு அதிசயமாய் இருந்தது. நிஹாரிகா குடித்தது அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அவள் உறங்கும்போது ரிஷ்வந்த் அவளை ஏந்திச் செல்கிறான் என்று அவர் நினைத்தார்.

மோவாயில் கை வைத்து அவர் இருவரையும் பார்த்தபடி நிற்க அவரைப் பார்த்த ரிஷ்வந்தோ, குறும்பு கூத்தாட அவரைக் கண்டு கண்ணடித்துவிட்டுச் சென்றான்.

மேலே சென்றவன், “சந்திராமா” என்றழைக்க,

“வலது பக்கம் இரண்டாவது ரூம் தம்பி” என்றார் புரிந்தவராய்.

புன்னகையை இதழில் தவழவிட்டவன், அவளின் அறையை திறந்துகொண்டு உள்ளே நுழைய, அவளின் அறையைக் கண்டவன் பிரமித்துதான் போனான். அவள் தன் கரங்களில் இருந்ததை மறந்தவன் சுற்றியும் அறையைப் பார்க்க, “ம்கூம்” அசௌகரியமாக அவள் நெளிய அவளை படுக்கையில் கிடத்தி போர்த்திவிட்டவன், “பைடி ஜிலேபி” இதழொற்றிவிட்டு வெளியே வந்தான்.

கீழே இறங்கி வந்தவன் தன்னைப் பார்த்தபடி நின்றிருந்த சந்திரமாவை, சைகையில் தன்னருகே அழைத்தான்.

அவனருகில் தயக்கத்துடனே வந்தவரின் தோளில் கை போட்டவன், “என்ன பாட்டி? என்னையே ஏன் சைட் அடிச்சிட்டு இருக்கீங்க?” அவன் வினவ வெட்கப்பட்டவர்,

“அதெல்லாம் இல்ல தம்பி. பாப்பா..” அவரிழுக்க,

“எந்த பாப்பா?” இருபுருவம் உயர்த்தி அவன் கேலியாக வினவ,

“நிஹாரிகா பாப்பா…”

அவரைத் தன்னுடன் செல்லமாக இறுக்கியவன், “அது பாப்பா இல்ல பீப்பா.. தூக்குனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது” உடலை முறுக்கி காட்டியவன், “சரி, உங்க பாப்பாக்கு என்ன?” வினவினான்.

“நீங்க.. பாப்பாவ..” கேட்க முடியாமல் அவர் திணறினார். என்னதான் நிஹாரிகா அவரிடம் பாசமாகப் பழகினாலும் அவரால் கேட்க முடியவில்லை.

அவரின் தயக்கத்தைக் கண்டு அவரின் முன் நின்று இருதோள்களிலும் கை வைத்தவன், “நான் உங்க பீப்பா.. ஸாரி பாப்பாக்கு ஏத்த மாதிரி இருக்கேனா?” அவன் வினவ,

“உங்களுக்கு என்ன தம்பி ராஜா மாதிரி இருக்கீங்க”

“தாங்க்ஸ் சந்திராமா” என்றவன் திரும்பி நடக்க அவருக்கு ஏதோ புரிவதாய் இருந்தது.

அடுத்தநாள் காலை எழுந்த நிஹாரிகாவிற்கு எதுவும் நினைவில் இல்லை. தலை கனக்க சிறிதுநேரம் அமர்ந்திருந்தவள் குளியல் அறைக்குள் புகுந்துகொண்டாள்.

கசகசவென்று இருக்க புடவையை கலைந்தவள் பாத் ரோபை அணிந்துவிட்டு குளியலறைக்குள் இருந்த கண்ணாடியின் முன் நின்றாள். ப்ரஷையும் பேஸ்டையும் எடுத்தவள் சோம்பலாக இருக்க தன்னுடைய வளைவு நெளிவான உடலை முறுக்கியவள் கண்ணாடியில் தெரிந்த தனது கழுத்தைப் பார்த்தாள்.

ஒரு நொடி அதிர்ந்தவள் கண்ணாடியின் அருகே சென்று கழுத்ததைத் திருப்பிப் பார்க்க பற்தடம் இருந்தது.

“ஏடுகுண்டாலவாடா” அதிர்ச்சியில் முணுமுணுத்தவள் மற்ற இடங்களை ஆராய வலதுகரத்தில் ஒரு தடம் இருந்தது.

“ஷிட்” நெற்றியில் கை வைத்தவளுக்கு எதுவும் நினைவில்லை.

அவசரமாக குளித்துமுடித்து வந்தவள் பற்தடத்தை மறைக்க முக்கால் கை குர்தாவும் ஜீன்ஸையும் அணிந்தாள். கழுத்தில் உள்ளதை மறைக்க ஒரு ஸ்டோலையும் எடுத்து கழுத்தில் சுற்றிக்கொண்டாள்.

தனது லிவ்விங் ரூமில் அமர்ந்தவள், வீட்டினுள் இருக்கும் அலைபேசியின் மூலம் சந்திராமாவிற்கு அழைத்து, ஒரு டீயை அனுப்ப பணித்துவிட்டு மீண்டும் யோசனையில் ஆழ்ந்தாள்.

தன்னை முழுதாய் ஆராய்ந்தவள் தவறாக எதுவும் நடக்கவில்லை என்று கண்டுகொண்டாள். ஆனால், யார் யார் என்று யோசித்தவளுக்கு நினைவில் எதுவுமே இல்லை. வீட்டிற்கு எப்படி வந்தோம் என்றும் ஞாபகமில்லை.

கதவு தட்டும் சத்தம் கேட்டவள், “கம் இன்” என்றிட, உள்ளே வந்த சந்திராமாவை கண்டவள்,

“என்ன சந்திராமா. நீங்க எதுக்கு வர்றீங்க. யாராவது கிட்ட குடுத்துவிடலாம்ல” செல்லமாய் கண்டித்தாள்.

“ஏன் பாப்பா. முகம் ஒரு மாதிரியிருக்கு” சந்திராமா வினவ,

“நைட் எப்படி சந்திராமா நான் வந்தேன். ஏதாவது உங்ககிட்ட பேசுனேனா?” போதையில் ஏதாவது செய்து வைத்தோமா என்று நினைத்து அவள் கேட்க,

“அந்த தம்பிதான் பாப்பா உன்னை தூக்கிட்டு வந்துச்சு” அவர் வெகுளியாய் சொல்ல,

“எந்த தம்பி”

“அதுதான் அந்த ஹீரோ தம்பி. பேர் கூட ரி.. ஷ..” அவர் அவன் பெயர் வாயில் நுழையாமல் தடுமாற நிஹாரிகாவிற்கோ சிரிப்பு வந்தது.

“சரி சந்திராமா.. நீங்க போங்க” என்றவளுக்கு தன்னையறியாமல் நிம்மதிப் பெருமூச்சு வெளிவந்தது.

யார் என்று யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு ரிஷ்வந்த் என்று தெரிந்ததும் எகிறிக்கொண்டிருந்த ப்ளட் பிரஷர் மட்டுப்பட்டது.

இருந்தாலும் அவனை சும்மா விட்டுவிடுபவள் அல்லவே இவள்!

தனது பால்கனிக்கு வந்தவள் அவன் தங்கியிருக்கும் அவுட் ஹவுஸைப் பார்க்க அவனின் கார் இல்லை. ஷூட்டிங்கிற்கு கிளம்பியிருப்பான் என்று நினைத்தவள் அடுத்த அரைமணி நேரத்தில் அங்கிருந்தாள்.

ஷூட்டிங்கிற்கு வந்து இறங்கியவளை அனைவரும் பார்க்க யாரையும்
சட்டைசெய்யாமல் நேரே சென்றவள், ரிஷ்வந்தின் காரவனிற்குள் ஏற, அங்கிருந்த அனைவருக்கும் அது அதிர்ச்சி என்றால், நவ்தீப்போ இருண்ட முகத்துடன் அங்கிருந்து அகன்றான்.

புயலென உள்ளே வந்தவளைக் கண்டு ரிஷ்வந்த் பார்வையாலேயே உடனிருந்தவர்களை வெளியேற்றினான்.

அவர்கள் சென்றதும், கால்மேல் காலிட்டு அமர்ந்திருந்தவன், என்ன என்பதுபோல் இருபுருவத்தையும் உயர்த்திக் கேட்டான்.

அவளின் கையை மறைத்த குர்தாவையும், கழுத்தை மறைத்த ஸ்டோலையும் கண்டவன் உள்ளுக்குள் நீரூற்றுபோல பொங்கிக் கொண்டிருந்த சிரிப்பை அடக்கியபடி அமர்ந்திருந்தான்.

“நேத்து என்ன பண்ண?” நிஹாரிகா நேராக விஷயத்திற்கு வர,

“நானா?.. நான் என்ன பண்ணேன்..” அவளின் கழுத்தையும் கரத்தையும் ஒருநொடி பார்த்தவன், “நேத்து ஒரு ஆந்திரா நாட்டுக்கோழி சிக்குச்சு.. அத..” ரிஷ்வந்த் பேச,

“இதெல்லாம் எதுக்கு பண்ற?” கைகளைக் கட்டியபடி அவள் தைரியமாக கேட்டவிதம் எப்போதும்போல் அவனை காதல் கொள்ளச் செய்தது.

அவன் அமைதியாய் நிற்க, “இதெல்லாம் எதுக்கு பண்ற சொல்லு.. நீதான் எவளோ ஒருத்தியைக் கல்யாணம் பண்ணப் போறள்ள.. அப்புறம் எதுக்கு எங்கிட்ட இப்படி பிஹேவ் பண்ற” கண்கள் இரண்டும் கோபத்தில் சிவந்து கேட்பவளைக் கண்டவன்,

“இப்ப, நான் நேத்து உன்கிட்ட பிஹேவ் பண்ணது பிரச்சனையா? இல்ல கல்யாணம் பண்ணப் போறதா சொல்லிட்டு உன்கிட்ட பிஹேவ் பண்ணது பிரச்சனையா?” பொறுமையாக அதேசமயம் அழுத்தமாகக் கேட்டவனின் கேள்வியில் நிஹாரிகா ஆடித்தான் போனாள்.

“என்னோட பிரச்சனையே நீதான்டா” என்றாள்.

“நீ இன்னும் என்னை லவ் பண்றேன்னு எனக்குத் தெரியும்டி”

“இல்ல”

“இருக்கு”

“இல்லாமையா நேத்து என்னை கார்ல தடுக்காம இருந்த?” அவன் பேச்சில் அவளது கன்னங்களோ அவளறியாமல் சிவந்தது.

சிவப்பேறிய கன்னங்களை மறைத்தவள், “நே.. நே.. நேத்து ஏதோ போதைல.. மத்தபடி.. ” அவள் முடிக்கும்முன்,

“நீ போதைல இருந்தாலும் இல்லைனாலும் நீ எவ்வளவு தெளிவுன்னு எனக்குத் தெரியும். வேற எவானதா இருந்திருந்தா உன்னோட ஜாக்குவார்ல இருந்த கன்(துப்பாக்கி) வேலை செஞ்சிருக்கும்னு எனக்குத் தெரியும்” என்றவனை அவள் உணர்வில்லாது பார்க்க அவளருகே வந்தவன்,

“நாம கல்யாணம் பண்ணிக்கலாமாடி” அவன் வினவ,

“வேணாம்”

“ஏன்டி?”

பதில் பேசாமல் அவனை முறைத்தவள், கோபமாக வெளியே செல்லத் திரும்ப, அவளின் கையைப் பிடித்து அருகே இழுத்தவன், அவளைத் தன்னருகே நிற்க வைத்தான். இருவரின் மூச்சுக்காற்றும் கோபமாக மோதிக்கொள்ள,

“என்னைப் பிடிக்கலையா?” வினவினான்.

“இல்ல” என்றவள் அவனிடமிருந்து திமிறி விலகி நின்றாள்.

“பிடிக்காமையாடி உன்னோட” என்று நிறுத்தி அவளது இடதுமார்புக்கு மேல் விரலை வைத்துச் சுட்டிக்காட்டியவன், “என்னோட பேரை இங்க டாட்டூ போட்டிருக்க” அவன் சொல்ல அதிர்ந்து நின்றது என்னமோ நிஹாரிகா தான்.

அவளருகே வந்தவன் மென்மையாய் அவளது கரத்தைப் பற்றி, “எப்டி உள்ள வந்த?” வினவ அவளோ அவனைப் புரியாமல் பார்த்தாள்.

இருபக்கமும் தலையாட்டிச் சிரித்தவன், “வெளிய அவ்வளவு பிரஸ் இருந்துச்சே.. அத பாக்காமயா ஜான்சி ராணி மாதிரி காரவன்ல ஏறுனே?” அவன் வினவ, அவனின் கேலி அவளை சீண்டியது.

அவளை அச்சப்படுத்த தானே அவன் சொன்னது.

அவனது கரத்தைத் தட்டி விட்டவள்  எப்போதும் போல் மிடுக்காகவும் திமிருடனும் 
காரவனில் இருந்து இறங்க, அவளை மீடியாக்கள் சூழ்ந்துகொண்டது.

அவள் உள்ளே சென்றதைப் பார்த்தவர்கள் ஆளுக்கொரு கேள்வியை தங்களது இஷ்டத்திற்கு தொடுக்க, வந்த கோபத்தை அடக்கியவள், “வெயிட் வெயிட்” என்றவள்,

“மேமு பெல்லி சேஸுக்கோபோத்துன்னாம்”(நாங்க கல்யாணம் பண்ணிக்க போறோம்) என்றவள் திரும்பி ஒரு புருவத்தை உயர்த்தி ரிஷ்வந்தைப் பார்க்க, அவனின் மனமோ அவளை மெச்சியது.

“மேம், விவாஹ தேதி?”(கல்யாணம் நாள்?) ஒரு பெண் வினவ,

“த்வரலோ ப்ரக்கடிஸ்டாம்”(சீக்கரம் அனௌன்ஸ் பண்ணுவோம்) என்ற நிஹாரிகா பவுன்சர்களிடம் கண்களைக் காட்ட மீடியாஸை அவர்கள் அப்புறப்படுத்தத் தொடங்கினர்.

“பரவாயில்லடி ஜிலேபி. அடுத்த கேள்வி கேக்க முடியாத மாதிரி ஒரே ஒரு பதில் சொல்லிட்ட கல்யாணம்னு” ரிஷ்வந்த் ஸ்டைலாக காரவனில் சாய்ந்து நின்றபடி பேச,

“உனக்காகவும் இல்ல எனக்காகவும் இல்ல. இது என் தாத்தையாக்காக. என் பேர் கெட்டுப்போனா மொதல்ல டேமேஜ் ஆகறது அவரு பேருதான். அவரு பேரை காப்பாத்துறதுக்கு நான் எந்த எல்லைக்கு வேணாலும் போவேன்”

“நாளைக்கு நியூஸ்ல உன்கூட நான் காரவன்ல இருந்தேன்னு வராது. நமக்கு கல்யாணம்னு தான் ஹெட் லைன்ஸே” பார்வையை மீடியாவின் மேல் அலட்சியமாக அலையவிட்டபடி கூறியவள்,

தனது பிரான்டட் மாட்சுடா கூலர்ஸை எடுத்து ஸ்டைலாக அணிந்துகொண்டு தனது ஜாக்குவாரை நோக்கிச் சென்றாள்.

காரவனிற்குள் நுழைந்த ரிஷ்வந்திற்கும் சரி, வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்த நிஹாரிகாவிற்கும் சரி கடந்தகாலம் கண் முன் நிழலாடத் தொடங்கியது.