நுட்பப் பிழையவள்(5)

5

 

    நெருக்கத்தின் வெறுமை

 

பகலில்கூட ஒரு அறை இத்தனை இருட்டாய் இருக்க முடியுமா என்று சந்தேகம்கொள்ளும் அளவிற்கு அவ்வறை முழுதும் இதமான இருள் மிதந்துக்கொண்டிருந்தது.

 

இந்த காப்பியவாது குடி பாப்பா!!”  என்று பொன்னம்மா அன்றைய நாளில் நாற்பதாவது முறையாய் கையில் கடுங்காப்பியுடன் இறுக மூடியிருந்த அவ்வறை கதவின் முன் நின்று கெஞ்சிக்கொண்டிருக்க, அக்காட்சியில்ஏதோ ஒரு கோணத்தில் அவ்வறை அவள் அகமாய் தோன்றாமலில்லை

 

எத்தனை முறை சொல்லியும் கொஞ்ச நேரத்திற்கு ஒரு முறை பொன்னம்மா இப்படி வருவதும் கதவருகில் நின்று கேட்பதுமாய் இருப்பது வேறு அவளை இன்னும் போட்டு அலட்டப்ச்!!” என்று சிறு சலிப்புடன் கூந்தலை கோதியவள்

 

எனக்கு எதுவும் வேணாம் பொன்னம்மா! நான் இப்போ தூங்கப்போறேன்!!” என்றுவிட்டு பழையபடி தலையை சாய்ந்திருந்த சுவற்றில் சாய்த்துக்கொண்டாள். அவளது பார்வை அவ்வறையையே ஒரு கணம் சுற்றி வந்தது. அவளொருத்திக்கு அது அதிகமே! பெரிய அறை! பெரிய படுக்கை! என எல்லாமே அளவில் மிகப் பெரியதே! ஒரு வேளை இவ்வறை குட்டியாய், ரொம்ப குட்டியாய்இருந்திருந்தால்இந்த சுவரெல்லாம் இன்னும் அவளருகில் இருந்திருந்தால்இத்தனை வெறுமையாய் தெரியாதோ?   

ஏதேனும் பொருட்களை வாங்கி குவிக்கலாம்குவித்து இடத்தை குறைக்கலாம்ஆனால் அப்பொருட்களால் இடத்தை அடைக்க முடியுமே தவிர வெறுமையை போக்க முடியுமா என்ன!?

 

ஹ்ம்ம்ப்ச்!! என்ன பண்ற இமையா நீ!?’ என்ற கேள்வி அழுத்தியது. அவளருகில், சில இஞ்ச் தூரத்தில்  தரையில் கிடந்த தனது ஃபோனை எடுத்தவள் மறுபடியும் வாட்சாப்பில் அபியின் ஸ்டேட்டஸை பார்த்தாள். அபி அந்த ஸ்டேட்டஸை வைத்த இந்த இருபத்தி மூன்று மணி நேரத்தில் அதை பல முறை பார்த்துவிட்டாள் இவள். மறுபடியும் அவள் பார்வை அத்திரையில் பதிந்தது.

 

அதில் அபியும் ஜீவனும் முந்தினம் வெளியில் சென்றப்பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அழகானகேப்ஷன்களுடன் ஒளிர்ந்துக்கொண்டிருந்தன.

 

ஜீவன் அபியை பெண்பார்க்க வந்தவன். ஏற்கனவே ஓரளவு முடிவு செய்திருக்க இளையவர்களுக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப்போகஇதோ அவர்களது திருமணம் இன்னும் மூன்றே மாதங்களில்!!

 

இந்த இரண்டு வாரத்தில் ஜீவனும் இமையாவும் பேசியதேயில்லை என்றுவிட முடியாது! அவள் ஜீவனிடம் பேசியிருக்கிறாள்தான் ஆனால் அது அவன் அபியை பெண்பார்க்க வந்த அன்றோடு சரி! அதற்கு பின் எல்லாம் அதன் வேகத்தில் நடக்க ஜீவனும் அபியும் ஒருவரைப் பற்றி மற்றவர் தெரிந்துக்கொள்வதில் ஆர்வமாகிடவென அந்த இரண்டு வாரமும் ஜெட் வேகத்தில் போனது!! இமையாவைத் தவிர!! இமையாவிற்கு இரண்டு வாரமும் இரண்டு வருடங்களாகினஎத்தனையோ முறை அபி இவளை வற்புறுத்தி அழைத்தும் இவள் ஏதேனும் ஒன்றை சொல்லி வரவில்லை என்றுவிடுவதுமாய் இருந்தது.

 

இமையாவிற்கு ஜீவனை பிடிக்காமலெல்லாம் இல்லை

 

உண்மையில் ஜீவனின் அதீதங்களற்ற இயல்பு அவளுக்கு பிடித்துப்போனது.

 

சராசரி மனிதனாய் இருந்தான் அவன். பொன்னம்மா சொன்ன கல்யாணக் கலை அவன் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. அவன் அபியை பார்க்கும் பார்வையில் ஆர்வத்துடன் அன்புமிருந்தது கூடுதல் பிடித்தம் இவளுக்கு.

 

முதல் பார்வையிலேயே அவன் கண்களில் ஒன்னும் காதலெல்லாம் தவழவில்லைதான். மாறாய், சாதாரண ஈர்ப்புக்கும் காதலுக்கும் நடுவிலான கட்டம் அதுஅவன் கண்களில் இருந்தது. ஏனோ அது ஒருவித ஆறுதலளித்தது இமையாவிற்கு

 

முதலில் இவளுக்கும் இந்த கல்யாண விஷயத்தில் அத்தனை மகிழ்ச்சி!! அபியின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணமல்லவா? மற்றவர்களைப்போல இவளுக்கும் அபிக்கான மகிழ்ச்சியும் எல்லாம் நன்றாக நடக்கவேண்டும் என்ற எண்ணமும்தான். அதுவும் அபியிடம் தெரிந்த அந்த புதுவித மாற்றம், அவளது உற்சாகம், ஏற்கனவே துருதுருவென இருப்பவளிடம் கூடுதலாய் தெரிந்த அந்த குதூகலம் என்று அபியிடம் தோன்றிய சிற்சிறு மாற்றத்தையும் ரசித்தாள் இவள்.

 

எனக்கு அந்த பையன பிடிக்கும் மீ…’ என்று பள்ளியில் அவர்களது  பக்கத்து வகுப்பு மாணவனிடம் தோன்றிய ஈர்ப்பை முதன்முதலாய் சொல்லும்பொழுது இருந்த உணர்வைவிட இது பன்மடங்கு அதிகமாய் இருந்தது. எதனால்? ஒருவேளை இம்முறை அவளுக்கு பிடித்தவனுக்கும் அவளை பிடித்ததினாலா? இல்லை ஈர்ப்பையும் தாண்டி புரிதல் எனும் ஒன்று புதுசாய்   முளைத்துவிட்டதாலா? எதுவாகினும் இம்முறை இது நிஜமென்று இவளுக்கு உரைத்தது.

 

அபியும் ஜீவனும் அடிக்கடி வெளியில் சென்று வந்தனர். அதிகம் பேசினர். முதல் இரண்டு தரத்தை தவிர்த்து அபி ஒவ்வொரு முறையும் இமையாவையும் அழைத்தாள். ஒவ்வொரு முறையும் அவள் அழைப்பதும் இவள் மறுப்பதுமாய் இருந்தது.

 

 

அபிஇந்த ஒரு தடவைதானே?” என்பதும் அதற்கு இவள்,

 

இன்னொரு தடவை…” என்பதுமாய் அவர்களது குறுஞ்செய்திகள் முற்றுப்பெறும்.

 

போகக்கூடாது என்றெல்லாம் இல்லை ஆனால் ஏனோ இவளுக்கு போக தோன்றவில்லை. ஏதோ ஒரு தயக்கம்? பயம்? என்ன பேசுவதென்ற தயக்கமா? இல்லை அவனுக்கு தன்னை பிடிக்காவிட்டால் என்ற பயமா? ஆனா இதுக்கெல்லாம் வருத்தப்படும் ஆளா இவள்? பின் ஏன் போகவில்லை? இவளறியாள்! ஆனால் ஏதோ ஒரு மெல்லிய கண்ணாடித்திரை இவளுக்கும் அவர்களுக்கும் இடையே இருப்பதாய் ஓர் உணர்வு!! 

 

பல வருடங்களுக்கு முன் இப்படி ஒரு உணர்வு எழுந்ததுண்டு. அதான், ‘இன்னும் கொஞ்ச காலம்தான இதுவும்? கொஞ்சம் வருஷம்கழிச்சு அபிக்கு கல்யாணம் ஆகும் அப்புறம் அவளுக்குனு ஒரு குடும்பம் வரும்அவ அவ பாப்பா, வீடுனு அதை சமாளிக்கவே நேரம் போகும் அப்போ அவ வாழ்க்கைல இமையாங்கறது ஒரு சின்ன பார்ட்டா இருக்குமே தவிர நிச்சயம் இப்போ இருக்கற மாதிரி எதுவுமே இருக்காதுஎல்லாம் மாறிடும்…’ என்று பல வருடங்களுக்கு முன்பிலிருந்தே பல முறை இப்பிரிவிற்கு ஒரு ஒத்திகையை மனசில் பார்த்து வந்தவள்தான். வாழ்க்கை ஒன்றும் அப்படியே நின்றுவிடப்போவதில்லை அது யாருடன் யார் இருந்தாலும் இல்லாட்டியும் அதன் வேகத்தில் பயணிக்கத்தான் போகிறது என்பதை நன்கறிந்தவளே! எவருடனும் அதிக காலம் இருந்திருக்காதாலோ என்னவோ எப்பொழுதும் ஒரு பிரிவிற்கு அவள் மனம் தயார் நிலையிலேயே இருந்துவிடுகிறதோஎதுவுமே நிரந்திரமில்லை என்று அவள் ஆழ் மனதில் அவசியமற்று பதிந்துப்போனதோ? அவளுக்கு இம்மாதிரியான oscillationகள் பிடிப்பதேயில்லை!! ஓர் உறவு சற்று தடுமாறினாலும்உடனே உடைத்துவிடுவாள்! இல்லை மனதளவில் அவ்வுடைசலுக்கு தயாராகிடுவாள்.. அவ்விதத்தில் அந்த உறவு உடையும்பொழுது ஒருவித நிம்மதி எழும், ஏதோ அத்தனை நாள் எதிர்ப்பார்த்திருந்த ஒரு தடங்கலை தாண்டிவிட்டதுபோல

 

ஆனால் இம்முறை அவளால் அது முடியவில்லை! ‘என்னவானாலும் பரவால்ல அபியை கடைசிவரை விட்டுடவே கூடாது!’ என்றது மனம். அவளால் அபியை என்றுமே விட முடியாது! அவளது வாழ்க்கையிலேயேஅவளுடன்அதிக காலம் பயணித்தது அபிதான். அவளது அத்தனை கிறுக்குத்தனங்களிலும் உடனிருந்தது அபிதான். அவளது சரி தவறென அத்தனையையும் ஓரளவு அறிந்த பின்னரும் அவளை அதைவிட அதிகமாய் நேசித்து அவளை அவளாய்

ஏற்றுக்கொண்ட ஒரே ஜீவன் அபி!! இமையாவை பொருத்தமட்டில் அபி ஒரு தேவதை!! அவளது அத்தனை வருட தனிமையை பார்த்துவிட்டு கடவுள் அனுப்பிவைத்த தேவதை!! அந்த தேவதையை பாதுக்காப்பதும் பார்த்துக்கொள்வதும் இவளது கடமை!! அவளைவிட அதிகம் அவளை நேசிப்பது என

 

ஏனோ திடீரென அவளிடமிருந்து வெகுதூரம் சென்றுவிட்ட உணர்வு!! தனக்கு பிடித்தவளை தன்னைப்போலவே இன்னொருவனுக்கும் பிடித்து அவன் அதை வெளிப்படுத்துகிறான் எனும்பொழுது ஒரு பக்கம் அகமகிழ்ந்தாலும் இன்னொரு பக்கம் அப்படியே அவள் மனம் சரசரவென சரிந்தது. எதையோ தொலைத்துவிடும் அச்சம்இல்லை தொலைந்துவிடும் அச்சம்? திடீரென ஒரு வெறுமை!! அவள் முதன்முதலாய் உணரும் உரிமையுணர்வென எல்லாம் கலந்து கண்ணீரில் கரைந்தது. மனம் எத்தனை முறை அந்த ஸ்டேட்டசை பார்க்காதே என்றாலும் கை தானாகவே எடுத்துப் பார்த்துவிட்டு அடுத்தக்கட்ட மனப்போராட்டத்திற்கு தயாராகிவிடுகிறது

 

சில நாட்களாகவே சரியாய் உறங்காததாலோ என்னவோ பொன்னம்மாவிடம் சொன்னதுபோல் உண்மையாகவே அப்படியே தரையிலேயே உறங்கிப்போனாள்.

 

கை கடிகாரத்தில் கவனம் பதித்தவாரே வங்கியில் இருந்து வெளியேறிய அபியின் மனதினுள் நில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது இமையாவின் நினைவே!!  ஏனோ திடீரென அவள் வெகுதூரம் இவளிடமிருந்து சென்றுவிட்ட உணர்வு வேறு ஆழிப்பேரலையாய் எழுந்து அவள் நிச்சலன மனதை மிதக்க வைத்தது. நிச்சயம்  ஏதோ சரியில்லை என்பது இவளுக்கு நன்றாகவே தெரியத்தான் செய்தது. பின்னே அவளுடன் இத்தனை வருடங்களை சேமித்திருக்கிறாளே!? ஆனால் இம்முறை என்னவெனதான் புலப்படவில்லை இவளுக்கு. நிச்சயம் அவள் எதையோ மனதில் போட்டு உளப்பிக்கொண்டிருக்கிறாளென்று தெரியும்ஆனால் அது என்னவெனதான் புரியவில்லை…  

கேட்டாலும் சொல்லமாட்டா!! ராட்சஸி!!’ என்று கடிந்துக்கொண்டவளுக்கும் சில விடயங்கள் ஓரளவு புரியத்தான் செய்தது. ஆனால் எதைக்கேட்டாலும்  ஒன்னுமில்லைஎன்பவளிடம் ஃபோனில் பேசி பிரயோசனம் இல்லை என்பதை இவளும் நன்கறிவாள். அதனாலையே பாதி நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு இமையா வீட்டிற்கே வந்துவிட்டாள்

 

வந்தவள் ஒரு நொடிக்கூட நில்லாது பொன்னம்மா மா அவ எங்க!?” என கேட்கவும் அவர் கவலையான பார்வையுடன் மாடியை கை காட்டி வெளிலையே வரல அபிமாஎனவும் தோள் பையை அங்கிருந்த இருக்கையில் போட்டவள் இதோ வரேன்என்றுவிட்டு விறுவிறுவென படியேறினாள்.

 

அபி பொன்னம்மாவைப்போல கதவை திறயேன்என அனுமதி கேட்பவளில்லைசற்றும் தயங்காமல் அவளே திறந்துவிடுபவள். பொன்னம்மாவிடம் இருக்கும் தயக்கம் அபியிடம் இருக்கவில்லை. இத்தனைக்கும் அபியை விட பொன்னம்மாதான் அவ்வீட்டில் அதிக காலம் இருப்பவள். இருந்தும் ஒரு முறைக்கூட இமையாவின் அறையினுள் அவள் சென்றதேயில்லை

 

அவள் அப்பா இருந்தப்பொழுது அவருக்கு அப்படியொரு அறை இருப்பதே தெரியாததுபோல் இருந்ததுஅவர் என்றுமே மகளின் அறைக்கதவை திறக்கவோஏன் அதன் பக்கத்தில் வரவோக்கூட முயற்சி செய்ததில்லையாருமே தட்டியிராததாலோஇல்லை யாருமே உள்ளே வந்திராததாலோ என்னவோ அதற்கே பழக்கப்பட்டவளுக்கு அவளறையினுள் யார் நுழைவதையும் அவள் அனுமதிப்பதில்லை

 

யாருமே வந்திராததாலோ என்னவோஎவரேனும் வந்து எதையேனும் களைத்தோ உடைத்தோ விடுவரோ என்று அஞ்சினாளோ என்னவோகதவை இறுக மூடிவிட்டாள்.

 

மூடிய கதவுக்கு இந்தப்பக்கம் இருந்த பொன்னம்மாவால் ஓரளவு கெஞ்ச மட்டுமே முடிந்ததுஅதற்குமேல் அதட்டியோ அழுத்தியோ கேட்க அவருக்கும் தயக்கம்…  

 

ஆனால் அபியிடம் அப்படிப்பட்ட தயக்கங்கள்  இருந்ததில்லைப்போலும்முதலில் திறஎன்றவள் இப்பொழுது பெயருக்காகக்கூட கேட்பதில்லைஅப்படிதான் இன்றும் பொன்னம்மாவால் திறக்க இயலாத கதவை அபி சிறு குமிழி திறுக்கலுடன் திறந்து உள்ளே நுழைந்துவிட்டாள்.

அத்தனை நேரம் இமையா ஏதோ கோவத்துலயோ குழப்பத்துலயோ இருக்கா போல என்று நினைத்திருந்தவளுக்கு, வெறும் தரையில் உடலை குறுக்கி படுத்து உறங்கிக்கொண்டிருந்தவளை பார்த்தப் பிறகுதான் உரைத்ததுஇவளை இப்படியே விடக்கூடாதென

 

அருகில் சென்று மண்டியிட்டமர்ந்தவள் இமையாவின் முகத்தையை பார்த்திருந்தாள்தடயங்களென எதுவுமில்லை எனினும் ஏனோ இவள் நிச்சயம் அழுதிருக்கிறாள்!!’ என தோன்றியதுமெத்தையில் கிடந்த போர்வையை எடுத்து மெல்ல போர்த்தியவள் சத்தமெழாதவாறு வெளியேறினாள்

 

எதுவுமே சாப்பிடலையா?” – அபி

 

வெளிலையே வரல அபிமாஎப்பவும் குடிக்கற காபியக்கூட தொடலை…” – பொன்னம்மா, அவர் குரலில் அத்தனை வருத்தம். அவர் பார்க்க வளர்ந்தவளாயிற்றே!

 

ஒஹ்…” என்று கேட்டுக்கொண்டவள் மூன்று காபி கலக்கத் தொடங்கினாள்

 

அவள் மூன்றாய் கலப்பதை கவனித்த பொன்னம்மாவோ, “ எனக்கு வேணாம் அபிமாஎன அவளோ கலக்கி ஒரு கோப்பையை அவர் கையில் திணித்து நீங்களும்  சரியா சாப்பிட்டிருக்கமாட்டிங்க…” என்றுவிட்டு மீதி இரண்டு கோப்பையையும் தூக்கிக்கொண்டு படியேற அவரோ,

 

பாப்பா சாப்பிடாம நான் மட்டும் எப்படி அபிமா நிம்மதியா சாப்பாட்டுல கைய வைக்க முடியும்?” என்க முதல் படியில் காலை வைக்கப் போனவள் ஒரு கணம் நின்று அவர்புறம் தலையை மட்டும் திருப்பி,

 

அவளுக்கு கொழுப்பு அதிகமாகிட்டு பொன்னம்மா மாநீங்க உங்க வயசையும் ஹெல்த்தையும் பாக்கனும் முதல்ல!!” என்று உரிமையாய் வருந்திவிட்டு போகும் அபிக்கும் இமையாவிற்கும் பெரிய வித்தியாசம் இருக்கவில்லைஅபி இப்படி சொன்னதையே இமையா உங்க பசிக்கு நீங்கதான் சாப்பிடனும் …  நாளைக்கு உடம்பு சுகமில்லாம போச்சுனா  எனக்காக சாப்பிடலைனு உங்க வலிய என்னால வாங்க முடியுமா?” என்பவளை மேலோட்டமாய் பார்த்தால் முசுடுதான்ஆனால் அபி சொல்ல வந்த அதையேதான் அவளும் சொல்லியிருப்பாள்என்ன அது சற்று அவள் பாணியில் இருக்கும்.

 

அறையினுள் நுழைந்தவள் கீழே படுத்திருந்தவளின் அருகில் மண்டியிட்டமர்ந்தாள். சில கணங்கள் அபியின் பார்வை முழுதும் இமையாவிடமே நிறைந்து நின்றது. பிறகு மெல்ல அவள் தோளை தட்டியவாறு மீமீஎழுந்துரு மீஇங்கப்பாரு காபி ஆறப்போவுதுமீ…” என்று எழுப்பினாள்.

 

வெளிச்சத்திற்கு கண்களை சுருக்கி, சூழ்நிலையை கிரஹித்துக்கொள்ள முயன்றவாரே எழுந்தமர்ந்தவளிடம் ஒரு காப்பி கோப்பையை அபி நீட்ட மறுக்காமல் அதை வாங்கி பருகலானாள் இவள். சிறிதளவு காப்பி உள்ளே சென்றதில் சற்று தெளிந்திருப்பாள்போல

 

எப்போ வந்த?” – இமையா

 

இமையாவையே கவனமாய் பார்த்திருந்த அபியோ, “என்னாச்சு?” என்றாள்

 

ஒன்னுமில்லையே ஏன்?” – இமையா

 

நம்பிட்டேன்” – அபி

 

நல்லது!!” – இமையா

 

அதற்குமேல் அபியிடம் பொறுமையில்லை.

 

என்னதாண்டி பிரச்சனை உனக்கு!? ஏன் இப்படி இருக்க?” – அபி

 

என்ன பிரச்சனை எனக்கு? ஒன்னுமில்லைநான் எப்பவும்போலதானே இருக்கேன்…” – இமையா

 

கிழிச்சஎன்ன பேச வைக்காத மீ!! எத்தனை வாட்டி கால் பண்ணேன்?? எத்தனை மெஸேஜ் போட்டேன்?” – அபி

 

ரிப்ளை போட்டேனே!?” – இமையா

 

நீ எப்படி ரிப்ளை பண்ணுவேனு கூடவா எனக்கு தெரியாது!?” – அபி

 

இமையாவிடம் மௌனமே மொழி

மௌனமாய் அமர்ந்திருப்பவளையே பார்த்த அபியோ சட்டென கோபத்தை கைவிட்டவளாய் மென்குரலில்,

என்னாச்சு மீ!? என்மேல எதாவது கோவமா?” – என்கவும் சட்டென அவளிடம் திரும்பியவள்,

 

ச்சே ச்சே!! உன்மேல நான் ஏன் கோவப்படப்போறேன்!? அதெல்லாம் ஒன்னுமில்ல அபிநான் கோவமாலாம் இல்லை…” – இமையா

 

பொய் சொல்லாத மீ!! நானும் கொஞ்ச நாளாவே பாக்கறேன் நீ என்னத்தையோ போட்டு குழப்பிட்டிருக்க…”  – அபி

 

அதெல்லாம் ஒன்னுமில்ல அபிஎப்பவும்போலதான்கொஞ்சம் என்னவோபோல இருந்ததுஅவ்ளோதான்!!” – இமையா

 

மீ…” – அபி

 

இமையாவிடம் மறுபடியும் மௌனம்

 

நீ சொன்னாதான் உன்ன சுத்தி இருக்கவங்களுக்கு நீ எப்படி ஃபீல் பண்றனு புரியும் மீ… – அபி

 

சில விஷயங்கள சொன்னாக்கூட யாருக்கும் புரியாது அபி… -இமையா

 

அதுக்குனு சொல்லாமையே இருந்துடறது அறிவாளித்தனமா மீ? ஒருவேளை புரிஞ்சிதுனா? – அபி

 

ஒருவேளை புரியலைன்னா?– இமையா

 

புரிஞ்சிக்க முயற்சி செய்வேன்… -அபி

 

அபி… – இமையா

 

எல்லாத்தையும் எல்லாரலயும் புரிஞ்சிக்க முடியாதுதான் மீ… உன்கூட எவ்ளோ க்ளோஸா இருந்தாலும் சில விஷயங்கள என்னால முழுசா புரிஞ்சிக்க முடியாம போகலாம்… ஏன்னா நீயும் நானும் சேர்ந்தே இருந்தாலும் வேற வேற வாழ்க்கைய வாழறோம்… லைக்  உயிர் ஒன்னுதான் ஆனா வாழ்க்கை வேற வேற… நீ கடந்து வந்தது வேற நான் கடந்து வந்த பாதை வேற… ஒரே சம்பவமா இருந்தாகூட நீ வேற மாதிரி உணர்ந்திருப்ப நான்  அதை வேற மாதிரி உணர்ந்திருப்பேன்…. முழுசா புரிஞ்சிக்கறதவிட… புரிஞ்சிக்க முயற்சி பண்றதுன்றது பெட்டர்தானே!? நீ சொல்றது எல்லாத்தையும் என்னால உணர முடியாம போலாம்… ஆனா என் பக்கத்துல உக்காந்து சொல்ற உன்ன என்னால உணர முடியும்தானே!? ஆறுதல் சொல்ல முடியாட்டியும் அணைச்சுக்கவாவது செய்வேனே…  என்று முடித்தவளின் குரலில் கலக்கம்!! அது சட்டென அப்படியே இமையாவின் முகத்திலும் பிரதிபலித்தது.

அபி…” – இமையா

 

சட்டென கண்கள் லேசாய் கலங்கி அமைதியாகிவிட்டவளையே என்ன செய்யவென்று புரியாது சற்று தடுமாறினாள் இமையா. கடைசியில் ச்சே!’ என்றாகிப்போனது இவளுக்கு. அபியை காயப்படுத்திவிடக்கூடாது என்று நினைத்துக்கொண்டே கடைசியில் காயப்படுத்திவிட்டாள்!!

 

ஏன் நான் இப்படி இருக்கேன்!? ப்ச்!!’ என்று தன்னை நினைத்தே சலிப்புற்றவள்

 

அபி…” என்று அழைக்க லேசாய் கலங்கியவள் நிதானித்து நிமிர்ந்தாள்

 

எனக்குத் தெரியல மீநீ இப்படி பண்ணும்போது என்ன செய்யனு தெரியலஎனக்கு நிறைய விஷயம்  தெரியாம இருக்கலாம்ஆனா அதை நீ சொல்லும்போது கேட்டுக்கறளவு பொறுமை நிச்சயமா இருக்கு…” – அபி

 

சட்டென மெல்லிய திரையொன்று கண்களில் படர பேசிக்கொண்டிருந்த அபியையே பார்த்திருந்த இமையா அதை உள்ளிழுத்தவாரே ஆழ மூச்சிழுத்துவிட்டு,

 

அபி என்னை ஒருவாட்டி அணைச்சுக்கறீயா? இறுக்கமா?…” என்றிவள் சொல்லி முடிப்பதற்குள் இறுக அணைத்து முதுகை நீவிக்கொடுத்தாள் அபி

 

இறுக்கமா?… நீ லேசா விட்டாலும் எங்கயோ தொலைஞ்சிடுவேனோனு இருக்கு…” என்று முடித்தவளின் பின்னந்தலையையும் முதுகையும் தட்டிக்கொடுத்த அபியின் கன்னங்களில் கண்ணீர் கோடுகள். அதை காட்டிக்கொள்ளாத குரலில்,

 

என்னாச்சு மீ!?” என்றாள் மறுபடியும்.

 

தெரியல அபிஎன்னவோ ஒரு மாதிரிரொம்ப empty- இருக்குஎனக்கு எப்படி சொல்லனு தெரியலைஅதான் சொல்லலை…”  என்றவளின் குரல் குறைந்து ஒலிக்க அவளை அணைப்பில் இன்னுமாய் இறுக்கியவள் பின் ஒரு முடிவோடு அவள் முதுகில் தட்டியவாறு,

 

சரி எழுந்துரு!! கிளம்பலாம்என்று எழுந்துக்கொண்டாள்

 

எங்க!?”  – இமையா

 

வெளில போறோம்…” – அபி

 

இப்போ வேணாம்…” – இமையா

 

மூடிட்டு கிளம்பு!! நான் பொன்னம்மா மாட்ட சொல்லிட்டு வரேன்”  என்று வெளியேற இங்கு இவள், “அபி…” என்றதெல்லாம் அவள் காதிலே விழவில்லை.

 

இமையாவை ஒன்னும் யாரும் அப்படி வற்புறுத்தி எதையும் செய்ய வைத்திட முடியாது. அவளுக்காய் தோன்றாதவரை அவள் ஒன்றை செய்வதில்லை. இன்றும் அப்படியே அவள் நினைத்திருந்தாள்  ‘நான் வரலன்னா வரல!!’ என்று முடித்திருக்கலாம். ஆனால் அவள் அதை செய்திருக்கவில்லை. அபி அழைத்தப்பொழுதிலெல்லாம் மழுப்பினாளே தவிர நான் வரவில்லை என்று மறுத்திருக்கவில்லை. அதனால்தானோ என்னவோ அபியே நேரில் வந்து வாஎன்று அழுத்திச் சொல்லவும் இதோ கிளம்பி இப்பொழுது இங்கு இந்த ரெஸ்டாரெண்டில்