நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-1

அந்த குடும்பம் இந்த ஊருக்கு வந்து சரியாக நான்கு நாட்கள் தான் ஆகிறது. 

தாய், தந்தை, இரண்டு பெண் பிள்ளைகள் என அழகான குடும்பம் அவர்களுடையது. 

மூத்தப்பெண் அபர்ணாவிற்கு திருமணமாகி எட்டு மாத குழந்தை உள்ளது. இவளின் கணவன், சந்தோஷ் சென்னையில் பிரபல ஐடி நிறுவனத்தில் பணிப்புரிந்து வருகிறான். 

குழந்தை பேறுக்கென சென்னையில் அப்பொழுது இருந்த தன் தாய் வீட்டிற்கு வந்தவள்,அவர்கள் கொல்கத்தாவிற்க்கு குடிப்பெயர, கொல்கத்தாவை தானும் சுத்தி பார்க்க வருவதாகச் சொல்லி கூடவே வந்துவிட்டாள்.

இரண்டாவது மகளும் அதே பிரபல ஐடி நிறுவனத்தில் பணிப்புரிந்து தற்போது கொல்கத்தாவிற்கு மாற்றலாகி வந்திருக்கிறாள். 

தந்தை ரிட்டையர்டு தமிழ் ஆசிரியர்,தாய் இல்லத்தரசி என அளவான குடும்பமும் கூட.

காலையில் எழுந்தவுடன் நம் கதாநாயகி செய்யும் முதல் வேலை தன் அக்கா அபர்ணாவின் எட்டு மாத பெண் குழந்தை தியாவை கொஞ்சுவது தான். 

பின் தாய்,தந்தையோடு அவள் கொஞ்சம் செல்லம் கொஞ்சி முடித்துவிட்டு வேலைக்கு செல்ல தயாராவாள். இதுவே அவளின் தினசரி வழக்கம்.

நம் கதாநாயகியைப் பற்றி கூற வேண்டும் என்றால்,

கோதுமை நிறம்,கயல் விழிகள்,வில்லென வளைந்த புருவம்,மாதுளை இதழ்கள் இப்படியெல்லாம் பில்டப் கொடுக்க முடியாது. சினிமா நடிகை மாதிரி இல்லாமலிருந்தாலும் ஓ.கே,சீரியல் நடிகை மாதிரி இருப்பார்களே அந்த ரகம் அவள்!

இவளின் விசிறிகள் என்று பலர் எப்பொழுதுமே இவளுக்கு உண்டு தான்! அது கல்லூரியில் இருந்து அவள் பணி செய்யும் ஒவ்வொரு இடம் வரையிலும் நீளும்.

அன்றைய அலப்பறைகளை முடித்தவள், தன் அறைக்கு சென்று,கிளம்ப தயாரானாள். 

அதே சமயம் அங்கே,

வரிசையாக  ஐந்து கார்கள் அந்த வீட்டின் முன்  வந்து நிற்க, மூன்றாவது காரில் இருந்து  இறங்கியவனோ ஆறடி உயரத்தில், கோட்சூட்டில், திராவிட நிறத்தில், அலை அலையான சுருண்ட கேசத்தோடு,அக்னி பார்வையோடு அந்த வீட்டிற்குள் உரிமையோடு நுழைந்தான்.

அவனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஐயோ இவனா என்று பதறி தம் வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்துக் கொண்டனர். 

கீழே ஒரு வரவேற்பு அறை, சமையல் அறை மற்றும் பெட்ரூம் என்று இருந்த அந்த அளவான வீட்டின் வரவேற்பறையின் சோபாவில் அன்றைய நாளிதழை படித்துக் கொண்டிருந்த தயாளன் ஆள் அரவம் கேட்டு நிமிர்ந்துப் பார்க்க அவன் வந்துக்கொண்டிருந்தான். நேராக வந்தவன் சோபாவில் தாமே சென்று அமர்ந்தும் கொண்டான்.

“யாரு சார் நீங்க?” என்றார் தயாளன்.

“உன் பொண்ண கூப்பிடு யா” என்றான் அவன்.

அரவம் கேட்டு வெளியே வந்த அவரின் மனைவி அகிலாவும், மூத்த மகள் அபர்ணாவும் ஒன்றும் புரியாது விழித்து நிற்க,

“தம்பி யாரு நீங்க, என் பொண்ண எதுக்கு கேக்குறீங்க?” என்றார்.

“இங்க பாரு, இங்க நான் மட்டும் தான் கேள்வி கேட்பேன், நீ பதில் மட்டும்  தான் சொல்லனும் புரியுதா?”

“உன் பொண்ணு எங்க?”

“…………”

“சோ, சொல்ல மாட்ட?”

“ஹரி” என்று கத்தினான்.

அடுத்த நொடி, ஹரி எனக் கூறபட்டவன் அவன் முன்பு பத்து பேரோடு வந்தான்.

“சேர்ச் ஃபார் ஹெர்”என்றான்.

அவர்களும் அனைத்து அறையையும் சோதனை செய்ய செல்ல, தயாளன் தான் கத்திக்கொண்டு இருந்தார்.

“என்ன அராஜகம் இது, பட்ட பகல்ல இப்படி கொடுமை பண்றீங்களே, எதுக்காக இங்கே வந்திருக்கீங்க?” என்று விடாது கேள்வி எழுப்பி கொண்டிருந்தார்.

“அதில் கடுப்பானவனோ”, ஹரி என்றான் மறுபடியும்.

“சொல்லுங்க சார்”

“அந்த ஆளு வாயைக் கட்டி, சோபாவோடு சேர்த்து கட்டு!” என்று கர்ஜித்தான்.

தடுக்க வந்த அகிலா மற்றும் அபர்ணாவையும் முறைக்க,

“தம்பி ஏன்ப்பா இப்படி பண்றே?அவரு வயசுக்காச்சு மரியாதை குடு!” என்று அகிலா கூற.

அதை சட்டை செய்யாது நிற்க,இதை செய்தே ஆகவேண்டுமா? என்று ஹரி தயங்கி நிற்பதைக் கண்டு, அவனை முறைத்தவனின் பார்வையே சொல்லியது அடுத்து அவன் செய்ய போவதை.இதை அவன் செய்யவில்லை என்றால் அவனை கட்டிவைத்து அடிப்பான் என்பதை நன்கு அறிந்தவன்.

அவன் கூறியது போலவே அவரை கட்டினான். அனைத்து அறைகளிலும் சோதனை செய்தவர்களும் வந்துவிட “இங்கே யாரும் இல்ல சார், அறையில் குழந்தை மட்டும் இருக்கு. மேலே ரூம் இருக்கு சார்”என்றனர்.

“ஓகே,எல்லாரும் இங்கேயே இருங்க. நான் மேலே போய் பார்த்துக்கிறேன்” என்றவனோ, இரண்டு படிகளாக தாண்டி தாண்டி மேலே சென்றான்.

அறையின் உள்ளே நுழைந்தவனுக்கோ, பாத்ரூமில் சத்தம் கேட்க அந்த அறையின் கதவுகளை ஓங்கி தட்டினான். 

“வரேன்ம்மா,ஏன் இப்படி தட்டுறீங்க,டூ மினிட்ஸ்” என்றாள்.

குளித்துவிட்டு ஏதோ அவசரம் போல என்று டவலால் தன்னை மூடிக்கொண்டு வெளியே வந்தவளை வரவேற்றவனோ,”ஹாய்” என்றான் 

கூலாக.

தனது அறையில் முன் பின் தெரியாத ஒரு ஆடவன் திமிராக சோபாவில் அமர்ந்து இருப்பதை பார்த்தவள்,

“யாருங்க நீங்க? இங்க என்ன பண்றீங்க? மேனர்ஸ் இல்லாம இப்படி உள்ள வந்து உக்காந்திருக்கீங்க? உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அடுக்கிக் கொண்டே போக.

அவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தவனோ,ஒன்றும் கூறாது இருந்தான்.

“ஹலோ மிஸ்டர்,யாரு நீங்க? இங்க என்ன பண்றீங்க?”என்று சற்று குரல் உயர்த்தி கேட்க

“உன்னை பொண்ணு பார்க்க வந்திருக்கேன்” என்றான் அவன்.

“வாட் நான்சென்ஸ்” என்று கத்தினாள் அவள்”.

“யெஸ் மிஸ்…ஹே,உன் பேரு என்ன?”

“ஆஹ்,பேரு தெரியாம தான் பொண்ணு பாக்க வந்தியா?”

“ஹே,யூ! என்னை மரியாதை இல்லாம பேசுற வேலையெல்லாம் வச்சுக்காத… அது உனக்கு நல்லதே இல்லை,டூ யூ கெட் தட்?’

“வாட் த ஹெல், என் வீட்டுக்கு வந்து, என் ரூம்முக்கும் வந்து, என்னையே மிரட்டிட்டு இருக்க,உனக்கு அறிவுனு ஏதாச்சும் இருக்கா?அறிவு கெட்டவனே.”என்று அவள் திட்ட ஆரம்பித்தாள். 

சட்டென எழுந்தவனோ, அவளை நெருங்கி போக,தனிச்சை செயலாக அவளும் பின்னாடி நகர,இவனும் முன்னாடி நகர,ஒரு கட்டத்தில் சுவற்றில் மோதிக் கொண்டாள்.

அவளை நெருங்கி வலது மற்றும் இடது கைகளை இருப்பக்கமும் ஊன்றி நின்றவனோ, “இங்க பாரு மில்கி,இப்போ எப்படி உன்னை எந்த பக்கமும் செல்ல முடியாம  சிறை செய்திருக்கிறேனோ, அதே போல் இனிமே அடைத்து தான் வைப்பேன் ,ஓடவும் முடியாது,ஒளியவும் முடியாது,ஐ வில் பீ வாட்சிங்”என்று கடைசி வரியை ஹஸ்கி வாய்சுல கூறிட.

“………” என்று ஏதோ அவள் வாயுக்குள் முணுமுணுக்க, அது அவனுக்கும் புரிந்து விட்டது. 

“ரைட்! நீ சொன்னத நிஜம் ஆக்கிடுறேன்.”என்றவனோ.

அவளின் இதழ்களை சிறை செய்திருந்தான், கண்கள் இரண்டையும் சாசர் போல விரித்தவள்,பேந்த பேந்த முழிக்க!அவளின் தொல்லை பேசி (ஆம்,இந்த இடத்தில் அது தொல்லைப்பேசி தானே)அடிக்க,சுதாரித்தவனோ,

“இதை கூட நானா செய்யல,நீ தான் செய்ய வச்ச,நீ என்னை பற்றி என்ன நினைக்குறியோ!அதுவாகவே நான் இருப்பேன்,சோ நீ பேசுறதுக்கு முன்ன என்ன நினைக்குறதுக்கு முன்னக்கூட யோசிச்சு தான் பேசனும்,நினைக்கனும்” என்றான்.

இங்கே, என்ன நடந்தது என்று ஒரு நிமிடம் ஒன்றுமே புரியாது விழித்தவளோ இறுதியாக அவன் கூறிய வாக்கியத்தில் கடுப்பாகி யோசியாது பளார் என்று அவனை அறைய முற்பட,

அந்தோ!பரிதாபம்,அவள் கைகளை இறுக பற்றியவிட்டான் அவன். 

இவ்வளவு நேரம் அவளை ரசித்த கண்கள்,இப்பொழுது ரசிக்கவில்லை மாறாக, இரத்தம் என சிவந்து போக,அவன் கைகளின் அழுத்தம்,அவனின் கோபத்தை காட்டிட.

“இங்க பாரு,உன்னைப் பார்த்ததும் பளார்ன்னு அறையனும்னு தான் நானும் வந்தேன்,பட் நான் என் முடிவை மாத்திக்கிட்டேன்”என்று சிறிது இடைவெளி விட.

அத்தனை வலியிலும் அவனை முறைத்து பார்த்து கொண்டிருந்தவள், இப்போ என்ன சொல்ல போறான்னு பார்த்து கொண்டிருந்தவள் அடுத்து அவன் சொன்ன செய்தியில் கதி கலங்கி தான் போனாள்.

அவள் ஆத்மிகா,ஆத்மிகா தயாளன்! இருபத்தைந்து வயது நிரம்பிய பெண்.

“உன்னை சிறையெடுக்க வரவில்லை பெண்ணே, ஆனால் சிறையெடுத்தால் அதற்கும் நீ வந்து தான் ஆகணும்”

இன்னும் கடுப்பானவள், “உனக்கு என்ன தான் வேண்டும் என்றிட?”

“இப்போதைக்கு நீ தான் வேணும் என்றிட”

“லூசா நீ? ஏன் இப்படி உளறிட்டு இருக்க?” என்று கேட்க 

அந்த நேரம் பார்த்து அவனுக்கு ஒர் அழைப்பும் வர உதட்டில் கை வைத்து “உஸ்” என்று சமிக்ஜை செய்தவனோ அதை எடுத்துக்கொண்டு வெளியே சென்று பேசிவிட்டு வந்தவனின் முகம் கடினத்தை தத்தெடுத்திருந்தது.

“உனக்கு ஃபைவ் மினிட்ஸ் டைம் தர்றேன்,உடனே இந்த வேஷத்தை மாத்திட்டு உடனே கிளம்பி வர,”என்று வெளியே சென்றுவிட.

‘இவன் சொல்லி நான் செய்யனுமா என்று வீம்புடன் நினைத்தவள்,இருந்தும் இந்த கோலத்தை முதலில் மாற்றுவோம், பிறகு யோசிப்போம்’ என்று நினைத்து அவள் தேர்ந்தெடுத்து வைத்த ஆடையை அணிந்துக் கொண்டாள். 

சரியாக, ஐந்து நிமிடத்திற்க்கு பின் வந்தவனோ,அவளின் வேஷத்தை பார்த்து, “இதுக்கு அதுவே நல்லா இருந்தது” எனக் கூற

“எனக்கு பிடிச்ச மாறி தான் டிரெஸ் பண்ணிக்க முடியும்”என்றாள் கழுத்தைத் திருப்பி கொண்டு. 

“நீ பேசுறா ஒவ்வொரு வார்த்தைக்கும் பின்னாடி நீ அனுபவிப்ப, நான் ஏற்கனவே சொன்ன மாறி யோசிச்சு பேசு,அவ்ளோதான் சொல்வேன்”என்று கூறியவன்.

அடுத்து அவளது வலது கையை இறுக பற்றியவனோ, தரதரவென அவளை இழுத்துக்கொண்டு கீழே சென்றான்.

அவள் தந்தை இருந்த கோலம் கண்டு திடுக்கிட்டவள், “வாட் த ஹெல்? ஹூ டிட் திஸ்?” என்று கேட்க.

“நான் தான் மில்கி” என்றான் அவன்.

அவனை முறைத்துவிட்டு தந்தையின் கட்டை அவிழ்க்க முயன்றவளை இவன் விட்டால்தானே, இரும்பு பிடி பிடித்திருந்தான்.

“கையை எடு!”

“முடியாது,ஏன்னா இங்க நான் சொல்றது மட்டும் தான் நடக்கும்,நான் மனசு வச்சா மட்டும் தான் நடக்கும்,அத முதல புரிஞ்சுக்கோ” என்றிட.

“நீ, என்ன பெரிய இவனா?ரொம்ப ஓவரா போய்ட்டு இருக்க?”

“மே பீ,இன்னும் நீ என் கேரெக்டர்ல பாதி கூட பாக்கல மில்கி,வெய்ட் அண்ட் வாட்ச்”.

“என்ன வெய்ட் அண்ட் வாட்ச்,உன்ன சும்மா விடமாட்டேன் டா” என்று அவள் கூற

“ஹரி” என்று கர்ஜித்தான் மறுபடியும். 

“யெஸ் சார்”

“கிவ் மீ,மை பிஸ்டல்”

“ஓகே சார்,இதோ.”

தூப்பாக்கியை அவள் தந்தையின் நெற்றி பொட்டில் வைத்தவன், “நீ பேசி என்னை கோபப்படுத்தினால் சேதாரம்,உன் வீட்டு ஆளுங்களுக்கு தான். உன்னை ஒன்னும் பண்ணமாட்டேன். ஏன்னா, நீ எனக்கு வேணும்.பட் இவங்கலாம் எனக்கு உபயோகமும் இல்லை, தேவையும் இல்லை. தெரிஞ்சோ, தெரியாமையோ ஒரு தப்பு பண்ணிட்ட இனிமே அந்த தப்பு உன் வாழ்நாள் முழுவதும் உன்னை துரத்தும், கெட் ரெடி மை கேர்ள்”

அதை பார்த்த அனைவருக்கும் ஒரு நிமிடம் சர்வமும் ஆடியது. 

“இங்க என் சவுண்ட் மட்டும் தான் கேக்கனும்,வேற சவுண்ட் வந்தா எனக்கு பிடிக்காது. அந்த சவுண்ட கொடுக்கிற ஆளையே இல்லாம பண்ணிடுவேன் அது தான் என் ஸ்டைல்.இன்னொரு முக்கியமான விஷயம். வாடா,போடானு சொல்லிட்டு இருந்த அப்றம் என்ன பண்ணணும்னு எனக்கும் தெரியும் உனக்கும் புரியும்” 

தொடரும்….

 


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!