நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-9

அரிவாளால் அங்கிருந்த ஒரு நாற்காலியின் சாய்வு பகுதியை வெட்டியிருந்தான் தேவ்.

 

“நீ இவளை உண்மையா லவ் பண்ணல அப்படி இருக்கும்போது இவளை வெட்டுறதுனாலே நோ யூஸ். சோ,இவளை விட்டுடலாம். ஹரி,அந்த பொண்ணை விடு” என்க.

 

அவளின் கைகளையும் வாய் கட்டையும் அவிழ்த்து விட்டான் ஹரி. அவளும் ஜீவா எனப்பட்டவனை கோபமாக முறைக்க.

 

“லவ் பண்றது தப்பில்லை, யாரை லவ் பண்றோம்கிறது தான் முக்கியம்!உனக்குப் புரிஞ்சிருக்கும், நீ இப்போ போகலாம்”என்க, அவளும் சென்று விட்டாள்.

 

“சரி, இப்போ என்ன பண்ணலாம்,உன் தங்கச்சி அவள் மேலேயாவது உண்மையான அன்பு வச்சிருக்கியா?அவளைத் தூக்குறேன்” என்றான்.

 

“வேண்டாம், என் தங்கச்சியா இதுல இன்வால்வ் பண்ணாத”என்றான்.

 

“அது, ஏன்?”

 

“அவ சின்னப் பெண்.”

 

“ஏன் நீ கடத்தின பொண்ணுங்களாம் மட்டும் பெரிய பொண்ணுங்களோ, இன்னும் சொல்லனும்னா உன் தங்கச்சிக்கு இருபது வயசு ஆனா கடத்தின பொண்ணுங்களுக்கு பதினெட்டு” என்று அவனது வார்த்தைகள் கூர்மையாய் வந்து அவனைக் கிழிக்க.

 

“இல்ல அது வந்து அவளுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை”என்றான் திக்கி திணறி.

“ஓஹோ, அப்போ நீ கடத்தின பொண்ணுங்களுக்கும் நீ கடத்தின காரணத்திற்க்கு மட்டும் என்ன சம்பந்தம்?”

 

“……….”

“அவர்கள் உறவுகள் என்பது மட்டும் தானே? ஒருவனுக்கு மகளாகவும், ஒருவனுக்கு தங்கையாகவும், ஒருவனுக்கு அக்காவாகவும், ஒருவனுக்கு நெருங்கிய தோழியாகவும், ஒருவனுக்கு மனைவியாகவும் இருக்கவும் தானே அவங்களை கடத்தின?”என்றான்.

 

“…….……”

 

“இப்போ பேசு, அதே போல் இப்பவும் உன் தங்கையை உன் உறவு என்பதால் கடத்தலாம் தானே”.

 

“ஆனா அப்படி பண்ணினா, உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசம். அதான், இப்போ என்ன பண்ணப்போறோம்னா” என்று சிறிது இடைவெளி விட்டவன் நகர

 

அங்கே ஜீவாவின் அம்மா மற்றும் தங்கை நிற்க, ஒரு நிமிடம் ஸ்தம்பித்து விட்டான் அவன். 

 

அவர்கள் அவனிடம் வந்து”தூ நீயெல்லாம் என்ன டா ஜென்மம், உன்னைப் பெத்ததையே அசிங்கமா நினைக்குறேன், எதுக்கு டா உனக்குப் புத்தி அப்படி போச்சு? அப்படியா உன்னை வளர்த்தேன்? காசுக்காக என்ன வேணுனா பண்ணுவியா டா” என்று அவனின் கன்னத்தில் பளார் என்று அறைந்திருந்தார்.

 

அவளின் தங்கை எதுவும் பேசவில்லை மாறாக அவனை ஒரு அருவெறுப்பு பார்வையோடு பார்த்தாள். 

 

“இனிமே எங்க மூஞ்சிலையே முழிக்காத, என் பையன் செத்துட்டான்” என்று திரும்பியும் பாராது அவரின் மகளோடு வெளியேறியிருந்தார்.

 

“ஜீவா உன்னை உன் உறவுகளிடமிருந்து பிரிச்சுட்டேன் அடுத்து…”என்று இடைவெளி விட்டவன்.அவனின் அலைபேசியில் வந்த மெசேஜை ஒலிக்க விட அதில்,

 

“ஜீவா, எங்களையே ஏமாத்திட்டில இதுக்கு அனுபவிப்ப நாங்க யாருனு தெரியாம எங்கக்கூட மோதிட்ட, மரியாதையா எங்க கிட்ட வாங்குன பணம் ஒரு கோடியை ஒரு மணி நேரத்துல அனுப்பனும் இல்ல ஒரு மணி நேரம் முடிஞ்ச மறு நொடி நீ உயிரோட இருக்க மாட்ட” என்ற மிரட்டல்.

 

“அவங்க உனக்குக் கொடுத்த ஒரு மணி நேரம் முடிய இன்னும் இருபது நிமிடம் இருக்கு. உன் மொபைல்ல நான் ஆல்ரெடி லொக்கேஷன் ஆன் பண்ணிட்டேன், சோ அவங்களே வந்து உன்னைப் போட்டுவாங்க.இது தான் இரண்டாவது, அடுத்து”

 

“என்னடா நம்ம தான் அந்தப் பொண்ணுங்கள அனுப்பிடோமே அப்புறம் எப்படினு யோசிப்பியே, அந்தப் பொண்ணுங்கள நான் ரெஸ்க்கியூ பண்ணிட்டேன். அப்றம், நான் தான் அவங்களுக்கு. போடா **** உங்களுக்குலாம் அனுப்ப முடியாது, முடிஞ்சத பாத்துக்கோன்னு மெசேஜ் பண்ணிட்டேன்.”என்றான் தேவ்.

 

அவன் அவனைக் குரோதமாகப் பார்க்க,”என்னடா ஏதோ உத்தமன் மாதிரி பாக்குறே? நல்ல பணக்கார வீட்டு பொண்ணுங்களா பார்த்துக் கடத்த வேண்டியது, பணம் கேட்டு மிரட்டவேண்டியது. அவங்க பணம் கொடுக்கிற முன்னாடியே இந்தப் பொண்ணுங்களை ஏதாச்சும் வெளி நாட்டுக்கு வித்துட்டு பணம் கைக்குக் கிடச்சதும்,உன் பொண்ணு இல்ல பொண்டாட்டி, இல்ல தங்கச்சி, இந்த நாட்ல இருக்கா போய்க் காப்பாத்திக்கோன்னு சொல்ல வேண்டியது? அசிங்கமா இல்லையா உனக்கு? ச்சேய், உன்னைப் பாத்தாலே தலை தனியா முண்டம் தனியா வெட்டிப் போடனும் போல இருக்கு”என்றவன்.

 

“உன்னை அவங்களே கொன்னுடுவாங்க பட் நானும் எதாச்சும் பண்ணனும்ல சோ…”அரிவாளால் அவனது வலது கையையும், இடது காலையும் வெட்டிவிட்டான். அவனின் “அம்மா”என்ற அலறலில் அவனை ஏளனமாகப் பார்த்தவன்.

 

“சாகப்போகும்போது கூட ஒரு பெண்ணைத் தான்டா கூப்பிடுற அப்றம் அந்தப் பெண் இனத்தை எப்படி மதிக்கணும்? ஆனா நீ? வாழவே தகுதி இல்லாதவன். உன் உயிர் போகப் போறது உறுதி இதுவரை நீ நூறு பேரை கடத்தியிருக்க அந்த நூறு பேரையும் நாங்க எப்படியோ காப்பாத்திட்டோம், இதையும் கேட்டுட்டே செத்துப்போ.அப்றம் நாளைக்கு உன் மரண செய்தியை ஊரே பார்க்கும் காரணத்தோட. இனிமே, எவனுக்கும் பெண்ணைக் கடத்துற எண்ணம் வரவேக் கூடாது ஒவ்வொருத்தனும் பயப்படனும்”.என்றவன்.

 

அவனின் வலியை ஒரு மகிழ்வோடு பார்த்தவன் ஹரியிடம், கண் ஜாடைக்காட்ட அவனும் விரைவாகச் செயல்பட்டான்.

 

அவன் கதற கதற அவனின் மீதிருந்த ஒரு கையையும் காலையும் சீலிங்கில் இருந்த இரும்பு  மரத்தில் (பிடிமானத்திற்க்காக ஓட்டு மற்றும் சிமென்ட்சீட் வீடுகளில் போடப்பட்டிருக்கும்) கட்டிவிட, பாதி உடம்பு அந்தப் பக்கம் பார்த்தபடியும் மீதி உடம்பு இந்தப் பக்கம் பார்த்தபடியும் இருந்தது. கீழிருந்து பார்க்க அவன் தொங்கிக்கொண்டிருப்பான் நேர் கோடு போல்.உடல் மட்டும் வளைந்த நிலையில்.

 

அவனின் அந்நிலை கண்டு திருப்தி உற்றவன் “நீ கெடு கொடுப்ப இல்ல? உனக்கு நானும் கெடு தர்றேன், இப்போ லாஜிக் படி பார்த்தா நீ எந்தத் தப்பும் பண்ணலை. நான் காப்பாத்திட்டேன்.ஆனா தப்பு பண்ண நினைச்சியே அதான் இந்தத் தண்டனை,என்னைக்கு ஒருத்தன் தப்பு பண்ணனும் நினைக்கும்போதே அவனுக்கு இந்தத் தண்டனை நியாபகம் வரணும்.அவனுக சொன்ன டைம் முடிய இன்னும் ஃபைவ் மினிட்ஸ் இருக்கு. முடிஞ்சா தப்பிச்சுக்கோ, யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்” என்று அவனின் படைகளோடு வெளியேறியிருந்தான்.

 

அவன் தப்பிக்க மார்கம் உண்டா என்ன?

 

ஆன்ட்டி ஹீரோ நல்லதுக்காக கையை காலை வெட்டினா, கொலை பண்ணினா ஏத்துக்க மாட்டீங்களா என்ன? இவன் அப்படித்தான், பல நற்செயல்களை இவனின் ஆள்பலத்தால் செய்து தரக்கூடியவன். ஆனால் வெளியில் உள்ளவர்களுக்கு இவன் ரௌடி, பொறுக்கியாகத் தெரிவது இவனது மிரட்டல்களை கொண்டு மட்டுமே! இதுவரையில் இவன் செய்து வரும் இந்தச் செயலுக்கான காரணத்தை யாருமே ஆராய்ந்ததில்லை, அவர்களைப் பொறுத்தவரை இவன் கொடூரன் அவ்வளவே, அதற்குப் பின் இருக்கும் காரணம் யாரும் அறியாதது, இவனின் இச்செயலே இவனின் தாயின் கோபத்திற்கும் காரணம்.எப்படி என்பது தான் நம்கதை)

 

************

அவன் அந்த வீட்டை அடையும்போது இருட்டிவிட்டிருந்தது. உள்ளே சென்று பார்க்க,

 

டைனிங் டேபிளில் உணவு சாப்பிட்ட அடையாளங்கள் இருக்க, ‘இவளுக்கு யாரு உணவு கொடுத்தது?’என்று மனதோடு நினைத்தவன். உள்ளே சென்று பார்க்க, கழுத்து வரை போர்த்தி சுகமான நித்திரையில் அவள் ஆழ்ந்திருப்பதை கண்டவனுக்கு, செம்ம கடுப்பாக இருந்தது.

 

பெட்ஷீட்டை அவளின் மேலிருந்து வெடுக்கெனப் பிடுங்க, அதில் கண்களை திறந்து பார்த்தவள் இவனைக் கண்டுவிட்டு மறுபடியும் புரண்டு படுக்க.

 

இவனுக்குத் தான் ஒன்றும் புரியாது போயிற்று,’என்ன நடக்குது இங்க?’என்று குழம்பியவன்.

 

அவளை அலேக்காகக் கைகளில் தூக்கியவன், அவன் தூக்கியதில் முழித்துக்கொண்டவள், அவனைப் பார்க்க அவளைப் பார்த்துக்கொண்டே சட்டெனத் தரையில் அவளை விட்டிருந்தான். 

 

இவன் இப்படிதான் எதாச்சும் செய்வான், என்று நம்பியவளும்.அதற்குத் தயாராகவே இருந்ததால் தன்னை காத்தும் கொண்டாள்.

 

இவன் அவளை யோசனையாகப் பார்க்க, ஒன்றுமே நடவாதது போல எழுந்து தலையணையையும், பெட்ஷீட்டையும் எடுத்தவள் தரையில் அதை விரித்துப் படுத்தும் கொண்டாள். 

 

இவனுக்குத்தான் தலையே வெடித்தது ‘ஏன், இவ இப்படி நடந்துக்கிறானு?’

 

“ஏய்!என்னடி கொழுப்பா? எந்திரி டி” என்க.

 

“ஆமா, இங்க வந்த ரெண்டாவது நாளுல கொழுப்பு கூடிப்போச்சு. நானே பாதியாகிட்டேன்னு பீல் பண்றேன், போவியா”என்றாள் அவள் கூலாக.

 

“ஏய்!என்னடி புதுசா எதேதோ பண்ற? என்னாச்சு உனக்கு?”என்றவனை கண்டவள் மெல்ல புன்னகைத்தாள்.

 

அவனின் கேள்வியைக் கேட்டுப் புன்னகைத்தவள், எழுந்துவந்து அவனை நெருங்கி நின்று இன்னமும் நெருங்கிப் போய், அவனின் மூச்சுக்காற்று தன்மேல் படும்படி நின்றுக்கொண்டு அவனை நோக்க.

 

அவளின் கண்ணும் கண்ணும் நோக்கியாவில் எதையும் கண்டுப்பிடிக்க முடியாமல் இவன் விழி பிதுங்க.

 

“எதுக்காக இப்போ நீ இவ்ளோ யோசிக்கிற நான் என்ன பண்ணனும்னு முடிவு பண்ணிட்டேன், அதான் இப்படி” என்றவள்.அவனின் கன்னத்தில் பஜக்கென்று ஒரு முத்தாவை கொடுக்க.

 

ஙே, என முழிப்பது முழுக்க முழுக்க இவனது முறை ஆகிற்று, “உன்னை மாதிரி எனக்கு  வாயைஅடைக்க தெரியாது! எனக்கு இது தான் தெரியும். இனிமே கத்துக்கிறேன் சரியா?”என்று அவன் கன்னத்தில் செல்லமாகத் தட்டியவள்.

 

“குட் நைட் “என்றவாறு அவளின் பழைய இடத்திற்கு சென்று படுத்தும் கொண்டாள்.

 

இவனுக்குத் தான் ஏதோ சரியில்லை என்று மட்டும் பட்டது. ஒரு அரை மணி நேரம் யோசித்தவனுக்கு அவளின் திடீர் குழைவிற்கான காரணமும் பிடிப்பட ‘மில்கி, நீ என்னனு நினைச்ச?என்னைய ஏமாத்திறலாம்னா நெவர், உன்னை என்ன பண்றேன்னு பாரு’ என்றவன்.

 

நேராகச் சென்று மெயினை அணைத்து விட்டு வந்தவன், கைகளில் ஒரு விளக்கையும் எடுத்து வந்திருந்தான்.

 

கரெண்ட் போனதில் பயந்தவள் இவனைத் தேட இவன் அங்கு இல்லாததால் இன்னமும் பயப்பட, டார்ச் ஒளியை கையில் பிடித்தவாறு இவன் வருவதை கண்டவள் சற்றே நிம்மதி அடைய.”என்னாச்சு”என்று கேட்க.

 

ஒன்றும் கூறாது அந்த விளக்கைப் பற்ற வைத்தவன், “இந்த விளக்கு அணையாம பாத்துக்கோ” என்றவன். பேட்ரி பேனை ஆன் செய்து தனக்கு வைத்துக்கொண்டு படுக்கப் போகையில் “விளக்கு அணையக் கூடாது நியாபகம் வெச்சுக்கோ, நைட் ஃபுல்லா, அண்ட் நேத்து மாதிரி தூங்கின நடக்குறதே வேற, நாளைக்கு என்ன நாள்னு நியாபகம் இருக்குல நாளைல இருந்து யூ வில் பீ அப்பீசியலி மைன்!” என்று கண்ணடித்து சொன்னவன் படுத்துக் கொண்டான்.

 

இப்பொழுது முழிப்பது இவளது முறை ஆயிற்று, ‘பர்பாமென்ஸ் பத்தலையோ? என்ன இவனை நம்ம குழப்பலாம்னு பார்த்தா இவன் நம்மளை குழப்புறான். சரியான கேடியா இருக்கானே, என்ன பண்ணலாம்? மாட்டேன் இந்த முறை உன்னை ஜெயிக்கவிடமாட்டேன். நான் இழந்தவரைப் போதும் நாளைக்கு உன்னை நான் அசிங்கப்படுத்தல. அப்புறம் தெரியும் நான் யாருனு’என்று சூளுரைத்துக் கொண்டவள்.புதிதாக ஒரு சப்போர்ட் கிடைத்த மகிழ்ச்சியில் இதை அனைத்தையும் பண்ண நினைத்தாள் பாவம் அவளுக்கு ஆப்பு ரெடி ஆகிட்டு இருக்குனு அவளுக்குத் தெரியலை.விதி வலியது.

 

‘விளக்கப் பாக்கனுமா? வரும்போது குஷி படம் பாத்திட்டு வந்திருக்கும் போலப் பக்கி. புதுசா பனிஷ் பண்றேன்னு காமெடி பண்ணிட்டு இருக்கு’என்று இலகுவாகவே நினைத்தாள்.

 

ஆத்மியின் இலகுவான மனநிலைக்கான காரணம் என்ன? யார் அவளுக்குச் சாப்பாடு போட்டது? புதிதாகக் கிடைத்திருக்கும் சப்போர்ட் யாரு? இவளின் திடீர் மாற்றத்திற்க்கான காரணம் யார்? இல்லை எதுவும் பெருசா ப்ளான் போடுறாளோ?என்னவா இருக்கும்.

 

(என்னைய நானே கலாய்ச்சுகிறேன்.அப்றம் மக்களே நேற்றைய பதிவில் ஆன்ட்டி ஹீரோனா என்னனு தெரியுமானு கேட்டீங்க அதாவது நானும் பல ஆன்ட்டி ஹீரோ படித்தவள்தான், ரசித்தவள்தான், முதலிலிருந்து சொல்வது போல் இவன் ஒரு வித்தியாசமான முயற்சி, இவன் ஹீரோ ஆன்ட்டி ஆக ட்ரை பண்றான், அவள்மேல் இவன் வைத்திருக்கும் கோபம் இவனது காதலை வெல்ல முடியாமல் தவிக்குது, இறுதியில் காதலே ஜெய்க்குது, அவ்ளோதான் டாலிஸ், இலகுவான கதையாதான் இருக்கும்.டோன்ட் வொர்ரி.ரசிக்க மட்டுமே.)