நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-12

அவளின் சாரதா மிஸ் என்ற அழைப்பில் அவளை கண்டுக்கொண்டவர்,”ஆத்மி மா” என்று அன்போடு அழைக்க.

ஓடி சென்று அவரின் கைகளை பற்றிக்கொண்டாள்.அவரை கண்டவளின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிய.

“ஏன்டா மா அழுகுற,எனக்கு ஒன்னுமில்லை டா” என்றார்.

“இல்லை, மிஸ் சாரி சாரதாம்மா,நீங்க உங்களுக்கு என்னாச்சு? ஏன் இப்ப…டி” என்று வார்த்தைகள் அவளின் தொண்டைக்குள் சிக்கிக்கொண்டது.

“எல்லாம் நான் பெத்து வெச்சிருக்கேன்ல அவனால தான்,அதை விடு நீ எப்படிடா மா இருக்க?” என்று பாசத்தோடு கேட்க.

“எனக்கு என்ன நான் நல்லாவே இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க?”என்று கண்ணீரோடு கேட்க.

“இருக்கேன் மா,ஏதோ வாழ்க்கை ஓடுது,”என்று விரக்த்தியாய் புன்னகைத்தார்.

“ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க,எங்களுக்கு தன்னம்பிக்கை, தைரியம், வாழ்வின் நெழிவு சுழிவெல்லாம் கத்துக்கொடுத்த நீங்களே இப்படி பேசலாமா?” என்று அவள் ஆதங்கத்தோடு கேட்க.

மெல்லியதாக சிரித்தவர்,தேவின் வார்த்தைகள் சட்டென நினைவடுக்குகளில் வர “தங்கம்,அப்போ,உன்னைத்தான் தேவ் கல்யாணம் பண்ணியிருக்கானா?” என்று அவர் கேள்வியைத் தொடுக்க.

அந்த நேரம் சரியாக தேவும் உள்ளே வந்திருந்தான் அவனை கண்டுக்கொள்ளாதவர், “சொல்லு டா அப்பா வந்திருக்காரா? திருமணத்திற்க்கு சம்மதம் சொல்லிட்டாரா?அவரை யார் சம்மதிக்க வெச்சா?” என்று கேட்டுக்கொண்டே போக,இப்பொழுது முழிப்பது இவளது முறை ஆகியது.

தேவ் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது நிற்க, அவனையும் அவனது தாயையும் மாறி மாறி பார்த்தவள்,”என்ன சொல்றீங்க நீங்க?அப்பாவை பார்த்தீங்களா?” என்று வினவிட.

“ஆமாம் மா,உன்னை பெண் கேட்டேன்,அவர் மறுத்திட்டார். அவரால் தான் சிலரோட இன்னொரு பக்கத்தையும் தெரிஞ்சுக்கிட்டேன். அதை விடு அவர் பக்கம் இருந்து பார்த்தா அது சரிதானே! அதை விடும்மா, இப்போ அப்பா எங்க?அவரோட சம்மதத்தோட தானே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?” என்று ஒரு குண்டை தூக்கி போட.

ஒன்றும் புரியாது விழித்தவள்,அவள் டீச்சரின் இந்நிலையை கண்டு பொறுக்க மாட்டாதவளாக,”ஆமாம்”என்றிருந்தாள் தீர்க்கமாக.அவளை ஒரு நிமிடம் பார்த்த தேவ் உம் கண்டுக்கொள்ளாது மறுநொடி திரும்பிக்கொண்டான்.’அவள் தன்னை கண்டிப்பா போட்டு கொடுத்திடுவா’ என்று நம்பியிருந்த தேவிற்க்கு அது ஒரு அடி.

“சந்தோஷம் டா,உனக்கும் இதுல விருப்பம் தானே?”என்று கேட்க.

“ஆமாம்” என்றிருந்தாள் மறுபடியும்.’உடலால்  காயப்பட்டவரை மனதாலும் வதைக்க அவள் விரும்பவில்லை’.

“ரொம்ப சந்தோஷம் டா” என மகிழ்ந்து உரைத்தார் அந்த தாய்.

“அப்பா,அம்மா எல்லாம் வரலியா?” என்று அவர் கேட்க.

“இல்லை… அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு முடியல” என்று இவள் கூற.

“அச்சோ,என்னாச்சு மா?”என்று அவர் பதறிட.

“ஒன்னுமில்லை,இப்போ அவர் நல்லா இருக்காரு, சீக்கிரம் வந்து உங்களை பார்ப்பாங்க.நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க”என்றாள்.

அங்கே,அறிவழகனும் ஆஜர் ஆக.”நீங்களும் என் கிட்ட எதுவும் சொல்லலை இல்லை என்று கோபித்துக்கொண்டார் சாரதாம்மா.

“இல்லை சாரு,நம்ம பையன் காலையில தான் என்கிட்டயே சொன்னான்,அதான் உனக்கு சொல்ல முடியல”என்றார்.

“ம்கும்,என்னமோ போங்க,ஆனா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, சோ,உங்களைலாம் விடுறேன்” என்றிருந்தார்.

ஆத்மியின் மனதிற்க்குள் பல பூகம்பங்கள் 

‘சாரதா மிஸ் அப்பா கிட்ட பொண்ணு கேட்டாங்களா? அப்பா என்ன சொல்லியிருப்பாரு? இதை ஏன் அப்பாவும் என்கிட்ட சொல்லலை? இதுலாம் எப்போ நடந்தது?’ அவளின் நெற்றி சுருக்கத்தையும் கவனித்தவர் “என்ன மா?”என்று சாரதம்மா கேட்டிட.

“ஒன்னுமில்லை, கொஞ்சம் தலை வலிக்குது, நான் போகட்டுமா?”என்று கேட்க.

“சரி மா,உன் புருசனை கூட்டிட்டு கிளம்பு, என்றவர்.பின்,நிறுத்தி “என் மருமகளுக்கு எல்லா வசதியும் செஞ்சு கொடுக்க சொல்லுங்க.அவளுக்கு ஏதாச்சும் தொந்தரவு கொடுத்தா நான் மனுசியாவே இருக்க மாட்டேன்”என்று பொதுப்படையாக உரைத்தார்.

தேவ் ஒன்றும் கூறாது நடக்க, அவனை பின் தொடர்ந்து சென்றாள் மில்கி.அமைதியாக சென்று காரில் அமர்ந்தவன். மில்கியும் காரில் அமர்ந்தவுடன்,காரை கிளப்பியிருந்தான்.

இருவரின் மனநிலையும் வெவ்வேறாகவே இருந்தது. ஆனால் அதில் இருவருமே சம்பந்தப்பட்டிருந்தனர். இவர்களின் வாழ்வில் அடுத்து என்ன.…..?

தேவின் நினைவுகள் நேற்றைய சம்பவத்திற்க்கு சென்றது…

வாட்ச் மேனிடமிருந்து கால் வந்ததுமே கோபத்தின் உச்சிக்கு சென்றவன் “ஹவ் டேர் ஹி இஸ்,உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா “இந்த சிங்கதோட குகைக்குள்ள வந்திருப்ப?வந்ததும் இல்லாம என் மில்கியோட வேற பேசுவியோ,உன்னை விடமாட்டேன் டா”என்று பற்களை நறநறத்தவன்.

அடுத்தடுத்து செய்ய வேண்டியதை திட்டமிட்டவன்,அதை செயல்ப்படுத்தவும் உத்தரவிட்டான்,அவனின் உத்தரவுகள், அனைத்தும் அவனின் கைக்கூலிகளால் உடனே நிறைவேற்றப்பட்டு இவனுக்கு “வர்க் டன்”என்று மெசேஜ் வரவும்.

பெரிதாய் நகைத்தவன் “மில்கி,மச்சான் கம்மிங் டா”என்றான் உல்லாசமாக.

அடுத்ததாக கார்த்திக்கின் அம்மாவிற்கு அழைத்திருந்தான் தேவ் அநபாயன். அழைப்பு எடுக்கப்பட்டதுமே.

“உங்க சின்ன  பையன் உங்களுக்கு உயிரோட வேணும்னு நினைச்சீங்கனா,நினைச்சீங்கனா மட்டும்,நான் சொல்ற மாதிரி பண்ணுங்க!”என்று அழுத்தமாக உரைக்க.

“ஐயோ என்று பதறியவர் ,யாரு நீங்க?எதுக்கு என் பையன கடத்துவச்சிருக்கீங்க?”என்று பதற்றத்துடன் கேட்க.

“அதுலாம் உங்களுக்கு தேவையில்லாதது,சொல்றதை மட்டும் பண்ணுங்க”என்று  சில கட்டளைகளை இட்டவன்,அழைப்பை துண்டித்திருந்தான்.

அவரும் மகன் கடத்தப்பட்டிருக்கிறான் என்று அறிந்ததுமே,உடனே கிளம்பியிருந்தார்.

கொல்கத்தாவை  வந்தடைந்தவர், வார்த்தைகளால் அனைவரையும் வதைத்திருந்தார்.

அபர்ணாவும் சந்தோஷும் இதை செய்ய தயங்க,”உன் தங்கச்சி கண்டவனை லவ் பண்ணுவா, தண்டனை என் பையனுக்கா? என் பையனுக்கு எதாச்சும் ஆச்சு அவ்ளோ தான் சொல்லிட்டேன்”

“இருங்க அத்தை,தேவை இல்லாம வார்த்தையை விடாதீங்க, அவ ரொம்ப நல்லா பொண்ணு” என்று வாதிட.

“என்னாது நல்ல பொண்ணா? ஏன் சொல்ல மாட்ட, எவ்ளோ பெரிய இடம்மா பார்த்து பிடிச்சிருக்கா உன் தொங்கச்சி, அவ இடம் கொடுக்காமதான் ஒருத்தன் வீடு வரை உரிமையோடு வர்றானோ?” என்றார் ஏளனமாக.

“அத்தை,போதும். அவளுக்கு இது பத்தியெல்லாம் எதுவும் தெரியாது.” என்றாள்.

“ஆமா ஆமா உன் தங்கச்சிக்கு இருக்கிற வாயிக்கு எவன் கிட்ட எந்த வம்பு வளர்த்தாளோ? ஸ்டைல்னு அவ போட்ட ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா?”என்று வார்த்தைகளில் நஞ்சினை வைக்க.

கதறிவிட்டால் அபர்ணா “போதும் நிறுத்துங்க,ஒரு பொண்ணு அதிகம் வாய் பேசுனா, கெட்டவள் ஆகிடுவாளா? ஸ்டைல்ல இருந்த கெட்டவளா? நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா? எவனோ,ஒரு பொறுக்கி அவன் தப்பு பண்ணினா அப்பவும் அவன் நல்லவனாவே தெரியுறான், ஒரு பொண்ணு எந்த தப்பும் பண்ணாம ஈசியா அவளை கெட்டவள் ஆக்கிடுறீங்க. நீங்களும் ஒரு பெண் தானே” என்றாள் அழுகையின் ஊடே.

“போதும் நிறுத்து,எனக்கு இந்த கதையெல்லாம் சொல்லாத. உன் தொங்கச்சி மாதிரி எத்தனை பேரை பாத்திருப்பேன். அவ எப்படி போனாலும் எனக்கு கவலை இல்லை. எனக்கு என் புள்ளை நல்லபடியா வந்திருக்கணும், வரணும் அவ்ளோதான்”என்று முடித்திட.

“அம்மா,ஏன் மா இவ்ளோ சுயநலமா இருக்க?உனக்கு ஒரு பொண்ணு இருந்திருந்தா இப்படிதான் பேசுவியா?”என்று சந்தோஷ் கேட்க.

“உன்னையும் மயக்கிட்டாளா?சரியானவ தான் அவ”என்று விஷத்தை இறக்க.

“ச்செய்”என்றிருந்தது இருவருக்கும். இந்த சமூகம் இப்படித்தான் கொடூரனாய் இருந்தாலும் அவன் ஆண்.நல்லவளாய் இருந்தாலும் அவள் பெண்.

“என்ன பண்ணுவீங்களோ,எனக்கு தெரியாது. என் பிள்ளை எனக்கு வேணும். அவன் சொன்ன மாதிரி நாளைக்கு போய் சொல்லிட்டு ஊருக்கு வந்து சேருங்க. இல்லாட்டி, இனிமே நீ இங்கேயோ இருந்துக்கோ”என்று அபர்ணாவிடம் கூறியவர்.

தியாவை தூக்கிக்கொண்டு “என் பேத்தியை நான் தூக்கிட்டு போறேன். நாளைக்கு ஊருக்கு வந்து சேருங்க. என் பிள்ளையை பத்தி உனக்கு அக்கறையில்லை. உன் பிள்ளை மேலே அக்கறை இருக்கும்னு நினைக்கிறேன். என் புள்ளையோட வந்து சேருங்க”என்று சென்றுவிட்டார்.

அவள் பெண் என்கிற ஒன்றினால் மட்டுமே இங்கு பெண்களை குற்றம் இழைத்தவள் என்று முடிவு செய்துவிடும் சமூகம் இது! 

இது அனைவருக்கும் பொருந்தாது.ஒருசிலர் இப்படித்தான். 

இன்று வரை சில ஆண்களால் பெண்களுக்கு கெட்டப்பெயர் ஈசியாக வாங்கிக்கொடுக்க முடிகிறது. 

பெற்றோர்கள் தன் மகளை ஒவ்வொரு நாளும் பொத்தி பொத்தி வளர்க்க இதுவும் காரணமே,ஊராரிடமும் மற்றும் சுற்றம், நட்பும் என்று அனைவரிடமும் தன் பிள்ளைகளை நல்ல பிள்ளை என்று பெயர் வாங்க வைக்க வேண்டும் அவர்களுக்கு. 

எத்தனைதான் நல்ல பெயர் வாங்கினாலும் இதுபோல் ஒரு சம்பவம் நடந்தால் அவளின் குணநலன்களை காற்றில் விட்டுவிட்டு  யோசியாது அவள் கெட்டவள் என்று கோர்ட்,கேஸ் எதுவும் இன்றி தீர்ப்பு வழங்கிவிடுவர்,இந்த நீதிபதிகள்.

*************

அவளை அவனின் இல்லத்தின் முன் இறக்கிவிட்டவன்,காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான். இவளும் ஒன்றும் கூறாது உள்ளே சென்று விட்டாள்.

உள்ளே வந்தவள் நேராக அவள் முன்பிருந்த அறைக்கு சென்றவள்,கீழே அமர்ந்து விட்டாள். 

அடுத்து என்ன என்ற கேள்வி அவளை நடுக்கம் கொள்ள வைத்தது. எத்தனை தைரியம் அவளுள் இருந்தாலும்,அவன் பலவந்தப்படுத்தினாள் இவளால் தாக்கு பிடிக்க முடியாது என்பது திண்ணம்.

‘என்னை பெண் கேட்டாங்கனா அப்போ, இவனுக்கு நான் தான் பொண்ணுனு தெரியுமா? அப்போ இவனுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா? என்னச் சுற்றி, எனக்கு இத்தனை நடந்திருக்கிறது எனக்கே தெரியாமல்’ என்று நினைத்தவள்.

‘அப்பா பிடிக்கலனு சொல்லியிருக்கார்னா அதுக்கு கண்டிப்பா எதாச்சும் காரணம் இருக்கணும். ஆனா அதை ஏன் என்கிட்ட இருந்து மறைச்சாரு,ஒரு வேலை இதை அப்பா மறைக்காம இருந்திருந்தா இவ்ளோ பிரச்சனை வந்திருக்காதோ. நானும் கொஞ்சம் கவனமாய் இருந்திருப்பேன். ஒருவேலை எனக்கு டென்ஷன் கொடுக்க வேணாம்னு நினச்சிருக்கலாம்’ என்று நினைத்துக்கொண்டாள்.

அதே நேரம் அங்கே,

மருத்துவமனையில் என்ன நடந்தது என்று சாரதா,தன் கணவர் அறிவழகனிடம் கேட்க,தேவிற்க்கு பயந்து,”ஒன்னும் இல்லை சாரதா,நீ ஏன் இத்தனை சந்தேகப்படுற”என்றார்.

“இல்லைங்க,ஏதோ தப்பாவே படுது எனக்கு, அதான் திரும்ப திரும்ப கேக்குறேன்.அது சரி,அவன் உங்க கூட பேசினானா என்ன?” என்றார் ஆர்வத்தோடு.

“ஆமாம்,காலையில வந்து எனக்கு கல்யாணம்,அன்னைக்கு எல்லார் முன்னாடியும் இது என் பிள்ளை இல்லைனு நீங்கதான் சொன்னீங்க. இன்னைக்கு அந்த தப்புக்கு பிராய்சித்தமா இவன் என் பையன்னு சொல்லனும்னு ஆசை இருந்தா நீங்க வாரலாம்னு” சொன்னான்.

“அவன் எதையும் மறக்கல போல,என் தப்பு தான் அவனுக்கு நமக்குள்ள நடந்த எதையும் நான் தெரியவிட்டிருக்கக்கூடாது. அதுவே அவனுக்கு உங்க மேல கோபத்தை கொடுத்திடுச்சு”என்றார் வருத்தமாக.

“விடு டா, எல்லாம் நன்மைக்கே, அவனுக்கு தெரிஞ்சதப்பத்தி எனக்கு எந்த கவலையும் இல்லை,அவன் நல்லா இருந்தா எனக்கு அதுவே போதும்” என்றார்.

“நல்லா இருப்பான்,அதான் ஆத்மி வந்துட்டாளே,அவளை முதல் நாள் பார்த்தப்பவே,இவ தான் என் பையனுக்குனு முடிவு பண்ணியிருந்தேன்,அது நடந்திடுச்சு” என்றார் மகிழ்வோடு.

“அது சரி,எத்தனையோ முறையிலே பொண்ணு பார்த்து வைப்பாங்க,நீ உன் ஸ்டுடெண்ட்டயில பாத்து வெச்சிருக்க”என்று சிரிக்க அதில் அவரும் கலந்துக்கொண்டார்.

இவர்கள் ஆசைப்படி அவர்கள் சந்தோஷமாக வாழ்வார்களா? இல்லை இல்லை வாழ்வார்களா முதலில்…?

**************

வீட்டிற்கு வந்த தேவ், ஆத்மியிடம் வந்தவன்,”கிளம்பு வெளியே போகனும்?“என்க.

ஒன்றும் எதிர்வினை காட்டாது வெளியே  வந்தவளை புருவம் உயர்த்தி பார்த்தவன் தோள்களை குலுக்கிக்கொண்டு காரை எடுத்தான்.

நேராக,ஒரு உயர்த்தர  ஐந்து நட்சத்திர ஹோட்டலில் காரை நிறுத்தியவன், இறங்கி உள்ளே செல்ல,இவளும் பின்த்தொடர ரிஷப்சனில் கீயை வாங்கிக்கொண்டவன்,அறைக்கு செல்ல, இவளும் பின் தொடர்ந்தாள்.

ஐந்தாவது மாடியில் ரூம்,லிப்டில் சென்றார்கள்.

அந்த அறையை அவன் திறக்க, அந்த ரூமை கண்ட ஆத்மிக்கு அதிர்ச்சி ஆகியது.

ஹனிமூன் சூட் புக் செய்திருந்தான் தேவ், இவளும் அடுத்து நடக்கவிருப்பதை எதிர்க்கொள்ள தயாரானாள்.

தேவின் மில்கி.

***********

(என்ன நடக்கப்போகுது,எனக்கு தெரியாது டாலிஸ்,உங்களுக்கு தெரிஞ்சா செப்புங்கோ…🙈😇😜)

************