நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-14

IMG-20211123-WA0053-661710ca

அவளின் விளக்கத்தை ரசித்தவரும் சிறுபிள்ளையென அவளின் செய்கையை  ரசித்து ,அவளது தவறை சுட்டிக்காட்ட வேண்டி.

“பாப்பா இங்க வாங்க” என்று அழைக்க.

கோபம் வந்துவிட்டிருந்தது ஆத்மிக்கு அவரை முன்னே பின்னே பார்த்தது இல்லை, ஆதலால் அவள் இவரை யாரோட பெற்றோரோ என்று நினைத்து “என் பேரு பாப்பா இல்லை ஆத்மிகா “என்றாள் சிறு கடுப்போடு.

“சரி, ஆத்மிகாவாவே இருக்கட்டும், இங்க வாங்க”என்றார்.

“நீங்க வில்லன்னா கெத்துனு சொல்றீங்க, அப்போ ஹீரோ”என்று கேட்க.

“ஹீரோவைவிட வில்லன் தான் கெத்து”

“சரி, அப்போ உன்னைச் சுத்தி எல்லாரும் வில்லன் மட்டும் தான் இருக்காங்க கரெக்டா?”

இப்பொழுது ஆத்மி முழிக்க,

“நீ சப்போர்ட் பண்ணுறது பார்த்தா நான் ஒரு பத்து இருபது பேர் இருப்பாங்கணுல நினைச்சேன்.உன் அப்பா, தம்பி, அண்ணண் இப்படி எல்லாரும் வில்லன் தானோ?”என்று அவர் கேட்க.

“இல்லை இல்லை, என் டாடி வில்லன் இல்லை, சூப்பர் ஹீரோ”என்றாள் பெருமையோடு.

“அச்சசோ, அப்போ உன் டாடி கெத்து இல்லை, நீதானே அப்படி சொன்ன?”என்றார்.

அவள் யோசிக்க ஆரம்பித்தாள்,”சரி கிளாஸ்க்கு போங்க”என்று அனுப்பிவைத்தார் சாரதா.

ஆறாம் வகுப்பை வந்தடைந்தவர், அங்கே ஆத்மியும் இருப்பதைக் கண்டு மெல்ல புன்னகைத்தவர், அவர்களின் வாழ்த்தை ஏற்றுக்கொண்டு.”நான் உங்க புது க்ளாஸ் டீச்சர் என்றார்” ஆத்மி என்ன மனநிலையில் இருந்தாள் என்பதே புரியவில்லை, எல்லாரும் அவங்க அவங்கள இன்ட்ரோடியூஸ் பண்ணுங்க”என்று கேட்டவர் அனைவரின் பெயர், விருப்பங்களைக் கேட்டறிந்துக்கொண்டார்.

“சரி, இன்னைக்கு முதல் க்ளாஸ், இன்னைக்கு நம்ம சூப்பர் ஹீரோஸ் பத்திபார்க்க போறோம்”என்று இடைவெளி விட்டவர்.

“இப்போ நம்ம பிரண்ட் ஆத்மிகா சூப்பர் ஹீரோஸ் பத்தி சொல்லுவாங்க”என்று கூறியவர் அவளைப் பார்க்க, அமைதியாய் எழுந்து வந்து நின்றவள் ஒன்றும் பேசாது இருக்க.

“நீ என்ன நினைக்குறியோ அதைப் பேசு, யாரும் எதுவும் நினைக்கமாட்டாங்க, உனக்குத் தோன்றது சொல்லு” என்று தைரியம் கொடுக்க.

சற்று அசுவாசமானவள் “சூப்பர் ஹீரோஸ்னா நமக்காக வாழுறவங்க, நமக்கு என்ன வேணுமோ அதைப் பார்த்துப் பார்த்துப் பண்றவங்க”என்றாள்.

“கரெக்ட், அதே போல் வில்லன்னு ஒருதர் இல்லாமையே அவங்க சூப்பர் ஹீரோஸ் தான், ஒருத்தர் ஹீரோவா இருக்குறதுக்கு எந்த வில்லனோடவும் சண்டை போட வேண்டாம், நம்மள பாதுகாக்குறவங்க, படிக்கவைக்குறவங்க, நமக்காக உழைக்குறவங்க,நமக்காக வாழுற எல்லாரும் சூப்பர் ஹீரோஸ்” சரியா மாணவசெல்வங்களா?”என்றார்.

“சரி, மிஸ்”என்று பல குரல்கள் ஒன்றாய் கேட்க.இவர் ஆத்மியை காண இவரைப் பார்த்தவள்.

“சாரி மிஸ்”என்றாள்.

“எதுக்கு சாரி டா ,இது உன்னோட புரிதல், உன் வயசுக்கு இது இப்படி புரிஞ்சிருக்கு அவ்ளோதான் டா, ஆனா நீ புதுவிதமா யோசிக்கிற, அந்த யோசனையை யாருகிட்டாவாச்சும் பகிர்ந்து அப்றம் முடிவு எடுக்கணும், சரியா? என்றார்.

சம்மத்தாகத் தலை அசைத்தவள்,”ஆனாலும், எனக்கு வில்லன் பிடிக்கும்” என்றாள் அவள். 

“அஹான், வில்லன் என்னலாம் பண்ணுவாங்கனு நீ பாத்திருக்க?”என்று அவர் கேட்க.

“நல்லா சண்டை போடுவாங்க, துப்பாக்கி வச்சிருப்பாங்க, அப்றம் கெத்தா இருப்பாங்க “என்றாள் கண்கள் மின்ன.

அவளின் புரிதல் அது, துப்பாக்கி போன்ற பொருட்களால் அவள் ஈர்க்கப்பட்டிருக்கிறாள் என்பதை புரிந்துக்கொண்டவர், வளர வளரப் புரிந்துக்கொள்வாள், என்று நினைத்துக்கொண்டார்.

அன்றைய வகுப்புகள் அனைத்தையும் முடித்தவர் வீட்டிற்க்கு வந்தவுடன். தன் மகனிடமிருந்து அழைப்பு வரவே அதை எடுத்தவர்.

“கண்ணா, என்ன பண்ற?”

தன் தாயின் கண்ணா என்ற அழைப்பில் மகிழ்ச்சியுற்றான் பதினாறு வயதே ஆனா தேவ்.அவரின் தாய் இதுவரை அவனிடம் இத்தனை உற்சாகமாக பேசியது இல்லை ஆதலால் இந்த மகிழ்ச்சி.தேவ் அதிகாமாக அவனின் தாயிடம் அன்பாய் பேசியதில்லை, அப்படி பேசித் தன்னை அவரும் அவரைத் தானும் மிஸ் செய்யும்படி செய்து, கவலைக்கொள்ள விரும்பமாட்டான்.

“நாளைக்கு பரிட்சை மா, சீக்கிரம் சாப்பிட்டு தூங்கிடுவேன், அதான் உங்களுக்கு இப்போவே கூப்பிட்டேன்”என்றான்.

“சரி கண்ணா, படி… தம்பி உனக்கு ஹீரோ பிடிக்குமா? வில்லன் பிடிக்குமா?”என்று கேட்க.

“வில்லன்”என்றான் யோசியாது.

“ஏன்?”என்றார்.

“என்னையை யாருக்கும் பிடிக்கக் கூடாது, நான் வில்லனா இருந்தா தானா எல்லாரும் என்னை வெறுப்பாங்க”என்றான் அவன்.

அவனின் பதில் இதுவென்று அவருக்குத் தெரியும், ஒவ்வொரு முறையும் இதை அவர் கேட்க, அவன் இதே பதிலை உரைக்கவென்று தான் போகும் இது.ஒவ்வொரு முறையும் அவர் அவனைத் திருத்துவார் ஆனால் அவன் மாற விரும்பவில்லை, ஒன்றை முடிவெடுத்தால், அதைத் தான் சரி இவனுக்கு, அழுத்தக்காரன் இவன்.

‘உன்னை நேசிக்கவும் ஒருத்தி இருக்கிறாள் என்று மனதில் நினைத்துக்கொண்டவர், சரி கண்ணா நல்லா சாப்பிட்டு தூங்கு, மார்னிங் சீக்கிரம் எழுந்து படி”என்று அறிவுரை வழங்கினார் ஹாஸ்டலில் தங்கி கல்வி  பயிலும் தன் மகனிற்கு.

தாயின் இந்த உற்சாகத்திற்கான காரணத்தைப் பின் நாட்களிலும், விடுமுறை நாட்களில் வீட்டிற்க்கு வரும்போதும் தெரிந்துக்கொண்டான், அவளின் அன்றாட சேட்டைகளையும் பட்டியல் இடுவார் சாரதாம்மா.

எப்பொழுதும் எதையோ பறிக்கொடுத்தவர் போலவும், அமைதியாகவும், தன்னிடம் கண்டிப்புடனும் நடக்கும் தாயின் இந்த மாற்றம் மிகவும் பிடித்தது தேவிற்கு, இதற்கு காரணமான பெண்ணையும் தான்.ஆனால் அதில் காதல் இல்லை ஏனென்றால் அவனின் காதல் மில்கியின் மீது மட்டுமே, அந்தப் பால் முகத்தை மறக்கமுடியவில்லை அவனால்.

இருவரும் ஒருவரேயெனத் தெரியும் நாளும் வந்தது.

*************

நினைவுகளிலிருந்து வெளியே வந்தவனும், ஏதோ முடிவு எடுத்தவனாக, கிளம்பி தயாரானான்.

வலியில் துவண்டவளால் இதற்கு மேல் முடியாது என்பது புரிய, எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று உறங்கவிட்டிருந்தாள்.

அவன் மறுபடியும் இங்கே வந்து இவளைத் தேட, சுகமான உறக்கத்தில் இருந்தாள் தேவின் மில்கி.என்ன நினைத்தானே ஒரு பேப்பரில் சில கட்டளைகளை எழுதியவனும், அதனை டேபிள் மீது வைத்துவிட்டு சென்றிருந்தான்.

சில மணி நேரம் தூங்கி எழுந்த ஆத்மிக்கு. இப்போது கொஞ்சம் வலி குறைந்து இருக்க, பசியால் தலை சுற்றியது, ஒருவாறு சமாளித்துக்கொண்டு எழுந்தவள், மணியைப் பார்க்க அதிர்ந்து விட்டாள்.சரியாக நான்கு மணி நேரம் தூங்கியிருக்கிறாள்.இடைவிடாது நடந்த துக்கத்தால் சரிவரத் தூங்காதது, இன்று தூங்கிவிட்டிருந்தாள்.

‘இவ்ளோ நேரம் இப்படி தூங்கியிருக்கோம், ஏன் அவன் நம்மளை எழுப்பாம போய்ட்டான்’என்று நினைத்தவள், சுற்றும் முற்றும் பார்க்க.அங்கே, ஒரு பேப்பர் இருக்க அதை எடுத்துப் பார்த்தவள் கோபத்தின் உச்சிக்கே சென்றிருந்தாள்.

விருந்து உணவு சமைக்குமாறு இருந்த அந்தக் கடிததத்தில், என்ன என்ன செய்ய வேண்டும் என்பதும் இருக்க, அதைப் படித்தவளுங்கு இன்னும் பீபி எகிறியது.மொத்தமும் நான் வெஜ் டிஷ்களாக இருக்க.சிக்கன் குருமா, சிக்கன் ரோஸ்ட், சிக்கன் சுக்கா, சிக்கன் -65,சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல், மட்டன்… அந்த லிஸ்டை படிக்கவே தெம்பில்லாது இருந்தவள் பசியில் இருந்தவளுங்கும் தலையே சுற்றியது.

“ஐயோ, என்ன இவன் ஹோட்டல் எதுவும் வைக்கப் போறானா? இந்தப் பைத்தியத்தை எந்த லிஸ்டில் சேர்ப்பேன், நான் வெஜ் எதுவும் இல்லாம எப்படி இதைச் சமைக்குறது?ஐயோ இவனை…என்று பற்களை நறநறத்தவள்.

“இதைச் செய்யாட்டி கோக்கு மாக்கு பிடிச்சவன் பனிஷ்மெண்டுனு கடுப்பை கிளப்புவானே”என்று வாய்விட்டு புலம்பியவள்.

‘மவனே, நீ எனக்குப் பண்ணுறதுக்கு எல்லாம் பின்னாடி எதாச்சும் நல்ல காரணம் மட்டும் இல்லாம இருக்கட்டும், நீ கைமா தான்டா’என்று சூளுரைத்துக் கொண்டாள்.

முதலில் உப்புமாவை கிண்டி தன்னை பாதுக்காத்துக்கொண்டவள், வெளியில் சென்று பார்ப்போம் என்று நினைத்துக் கதவைத் திறக்க நினைக்கையில் அது பூட்டப்பட்டிருந்தது.

“என்ன பூட்டி இருக்கு? ஹையோ, ச்சைய், என்ன வாழ்க்கைடா இது’ என்றிருந்தது அவளுக்கு.

அப்படியே அந்த அறைக்குள் சென்று அமர்ந்துக்கொண்டாள் ஆத்மி, சிறிது நேரம் மனதிற்குள் பல யோசனைகள் வர, அவளுக்குள் பல கேள்விகள், விடை தெரியாமல் குழம்பியவள் இறுதியில் இங்கு எதாவது க்ளு கிடைக்குமா என்று தேடுவோம் என்று நினைத்து.அந்த வீட்டை ஆராய முற்பட.

‘ஆனால், வந்தன்னைக்கே பார்த்துட்டோமே, எதுவும் இல்லை…அந்த ரூம் அதுக்குள்ள என்ன இருக்கும்?என்று யோசித்தவள் ஆனால் அது பூட்டி இருப்பதால், ஒன்றும் செய்ய இயலாத நிலையில் அமைதியாக அமர்ந்துக்கொண்டாள்.

********

பொழுது சாய்ந்ததும் வீட்டை அடைந்தவன், முதலில் பெரிய வீட்டிற்க்கு சென்று ரெப்ரஷ் ஆனான்.

பின், இந்த வீட்டை அடைந்தவன், கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே வந்தவனை கண்டவள், அமைதியாக இருக்க, வரும்போதே சில பார்சல்களோடு வந்தவனும் இவளைக் கண்டுக்கொள்ளாது நேராக டைனிங் ஹாலில் சென்றமர்ந்துக்கொண்டான்.

இவள் ஒன்றும் புரியாது விழிக்க, அந்தப் பார்சல்களை திறந்தான், அதில் அவன் எழுதியிருந்த அத்தனை உணவு பதார்த்தங்களும் இருக்க, இவளை சட்டை செய்யாதவன், மொத்தத்தையும் சாப்பிட ஆரம்பித்தான்.

இவள் அந்த உணவு வகைகளையும் அவனையும் மாறி மாறி பார்த்தாள், இவளைச் சட்டை செய்யாதவன் ரசித்து ருசித்து உணவுகளை உண்டவன், சிறிதும் மிச்சம் வைக்காது உண்டவன்.

“க்ளீன் பண்ணிடு”என்று கூறிவிட்டு கை கழுவ செல்ல.

“என்னைய பார்த்தா உனக்கு எப்படி தெரியுது”என்றாள்.

“இன்னும் உன்னை நான் பார்க்கல, இப்போவே பார்த்திட்டு சொல்லடுமா?”என்றான்.

அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது புரியாமல் விழித்தவள், அவன் கூறியதை புரிந்துக்கொண்டதும்,”ச்சீய், நான் ஒரு ஐடி எம்ப்ளாய், என்ன போய் நீ சாப்பிட்டதை க்ளீன் பண்ண சொல்ற?நான் என்ன டேபிள் க்ளீனரா?”என்று பற்களை நறநறக்க.

“இப்போ, நீ என் மனைவி,சாரி சாரி அடிமை, ரெண்டும்  ஒன்னு தான் என்னைப் பொறுத்தவரை”என்றான்.

“ஓஹோ, மனைவின்னா உனக்கு அடிமைனு எந்தக் கேனை பையன் சொன்னான் முதலில், இன்னொன்னு பொண்டாட்டி கிண்டாட்டினு சொல்லுக்கிட்டு திரிஞ்ச நான் மனுசியாவே இருக்க மாட்டேன்.”என்றாள்.

“வெல், எனக்கு அப்படித்தான், அடுத்தவன் சொல்றது கேக்கறதுக்கு நான் ஒன்னும் முட்டாள் அல்ல, அப்றம் நீ என் பொண்டாட்டி இதை எவன் வந்தாலும் மாத்த முடியாது, முக்கியமா உன்னால முடியாது, என்றான்.

“உன்னைப் பொறுத்தவரை பொண்டாட்டினா அடிமை?”அப்படித்தானே.

“அடுத்தவங்கள பத்தி ஐ டோன்ட் கேர், எனக்கு நீ அடிமை தான், நான் சொல்றது எல்லாம் கேக்கணும், புரியுதா?”என்றான்.

“இந்த மாதிரி நினைக்குற கேவலமான ஒருத்தனுக்கு எவளும் பொண்டாட்டியா இருக்க மாட்டா”என்றாள்.

“எவளைப் பத்தியும் எனக்குக் கவலை இல்லை, எனக்கு நீ அப்படித்தான் இருக்கணும், ஒருவேலை இன்டிமேட் ரிலேஷன்ஷிப்ல இருக்கிறது மட்டும் தான் மனைவினா,அதற்க்கும் உன்னை நான் அடிமை படுத்தனும்னாலும் நான் அதைத் தயங்காம பண்ணுவேன்”என்றான் தீர்க்கமாக.

“இன்டிமேட் ரிலேஷன்சிப்பா?என்ன நினைச்ச ஒரு பொண்ண அவ விருப்பம் இல்லாம தொடுறது அவ பொண்டாட்டியாவே இருந்தாலும் அது ரேப் தான், நீ அதுக்கு இன்டிமேட்னு பேரு கொடுக்குறது தான் கேவலமா இருக்கு” என்றாள்.

ஏளனமாகப் புருவத்தைச் சுளித்தவன்,”நீ சொல்றதுலாம் என் லைப்ல குறிப்பா எனக்கு  கிடையாது, நான் வைக்குறது மட்டும் தான் இங்க சட்டம், கல்யாணம்னு ஒன்னு உன்னை நான் பண்ணியிருக்கேன், புரியுதா?என்றான்.

“என்ன சட்டம், ஆணாதிக்க சட்டம், அகங்கார சட்டம், சைக்கோ சட்டம், உன்னை மாதிரி பிசிக்கல் ரிலேஷன்ஷிப்ல இருக்கணும்னு நினைக்குறவனுக எதுக்கு டா கல்யாணம் பண்றீங்க”என்று வார்த்தைகளை கடித்து துப்ப.

“ஷட் அப், ஏன்னா கல்யாணம் பண்ணீட்டு உன்னை எதாச்சும் பண்ணினா, கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருசன்னு சொல்வாங்களே அந்த மாதிரி நீ இருந்து தானே ஆகனும்”என்றான் ஏளனமாக.

அந்த மாதிரி நீ என்ன பண்ணினாலும் சும்மா இருக்கிற டிப்பிக்கல் பொண்டாட்டி, பொண்ணு நான் கிடையாது.”என்றாள்.

“என்னடி திமிரா,”இப்போ, உன்னை நான் நீ சொன்ன ரேப் பண்ணப்போறேன், உன்னால என்ன பண்ணுமுடியுமோ பண்ணிக்கோ, அது முடிஞ்சதும் எங்க போய்க் கேஸ் போடுவியோ போட்டுக்கோ, முடிஞ்ச போட்டுக்கோ, இதுவரை நீ சொல்லி இங்க எதுவும் நடக்கலை, இனியும், உன் பர்மிஷன் எனக்குத் தேவையில்லை,” என்று அவளை நெருங்கினான்.

பயத்தில் பின்னே நகர்ந்தாள் மில்கி…

தொடரும்.

*******