நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-15

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-15

 

அவளை நெருங்கி அவன் முன்னேற, பயத்தில் பின்னே நகர்ந்தவளும் கண்களில் பயத்தை மறைக்க போராடி அவனைப் பார்க்க,

“என்ன பயப்படுறியா? அதுவும் நீயா? இவ்ளோ நேரம் என்னென்னவோ பேசுனியே, இப்போ பேசிப் பாரு டி தெரியும்”என்று கர்ஜிக்க.

அவனின் சீண்டலில் கோபம் கொண்டவள், “யாருக்கு பயம், தப்பு பண்ணின நீயே பயம் இல்லாம இருக்கும்போது நான் ஏன் பயப்படனும்?”என்றாள் நிமிர்வாக.

“ஓஹோ, சோ நீ பயப்படலை, உன்னைப் பயப்பட  வைக்கிறேன் பாக்குறியா?”என்றான் ஏளனமாக.

அவளின் முகம் இகழ்ச்சியாய் திரும்பிக்கொள்ள கடுப்பானவன், அவளின் இரு கன்னத்தையும் பற்றி வலிக்கும்படி தன்னை பார்க்கும்படி அவன் திருப்ப.

“என்னைப் பார்த்து மூஞ்சியை திருப்புற எவ்ளோ, தைரியம் “என்றவன், அவளின் கீழுதட்டை சுண்டி விட இரத்தம் கன்றி சிவந்துபோனது.

அவளின் கண்களில் பயம் இல்லை மாறாக வலி மட்டுமே இருந்தது. அதைக் கண்டு கடுப்பானவன், இம்முறை அவள் இதழ்களை வன்மையாய் கைது செய்ய, வலியில் துடித்தாள் மாது, இருப்பினும் போராடவில்லை தெம்பும் இல்லை, கொஞ்சமாய் அவளின் உதட்டின் இரத்தம் இவனையும் வந்தடைய அவளை விட்டவன்.

அவளின் துப்பட்டாவை தூக்கி தூர எறிய, இப்பொழுது சிறிது பயம் எட்டிப்பார்த்தது அவள் கண்களில், அதைக் கண்டு திருப்தி உற்றவன், அடுத்ததாக அவனின் மேற்சட்டைகளை கழற்றிவிட்டு வெற்று மார்புடன் அவள் முன் வந்து நிற்க.

எத்தனை  தைரியத்தோடு பேசினாலும் கற்பு என்று வரும்போது மன்றாடல், போராட்டம் தானாகவே வந்துவிடும், தற்பொழுது பெண்கள் எத்தனையோ தற்காப்பு கலைகளைப் பயின்று வருகின்றனர் அது வரவேற்கத்தக்கது.ஆனால் ஆத்மியோ தற்காப்பு கலை எதுவும் கற்றுக் கொள்ளாததை எண்ணி தற்போது வருந்தினாள்.

அவளின் கண்கள் அப்பட்டமாய் பயத்தை தாங்கி நிற்க, இகழ்ச்சியாய் சிரித்தவன், அவளின் டாப்ஸை கழட்ட போகையில்,”ப்ளீஸ், வேண்டாம்” என்று அவனின் கால்களில் தஞ்சம் புகுந்துக்கொண்டாள். கெஞ்சுதல் அது ஒன்றே தற்போது அவளால் முடிந்தது.

“ஹா, ஹா நீ தான் பயப்பட மாட்டியே, அப்றம் என்ன வா “என்றான் கொடூரமாக.

“இ…ல்…லை எ…னக்…கு ப…ய…மா  இரு…க்கு”என்றாள் திக்கி திணறி

“சரி, பயந்துட்ட அதுக்கு என்ன இப்போ?, வேணுனா நீ பண்ணின தப்புக்கு தண்டனைனு நினைச்சுக்கோ”என்றான்.

“இல்லை, நான் எந்தத் தப்பும் பண்ணலை  என்னை விட்டிடு”என்றாள்.

“தப்பு பண்ணலையா?என்னைய பார்த்தா உனக்கும் உங்க அப்பனுக்கும் எப்படி டி தெரியுது, நீ பண்ணினதும் சரி உங்க அப்பன் பண்ணினதும் சரி பெரிய பெரிய தப்பு, உங்க ரெண்டு பேரையும் சும்மா விடமாட்டேன்”என்று கத்த.

“என்ன தப்பு பண்ணினோம்னாவது சொல்லு, என் அப்பா எந்தத் தப்பும் பண்ணமாட்டார் அவர் எது பண்ணினாலும் அதுக்கு காரணம் இருக்கும்”என்றாள்.

“ஓ, என்ன பண்ணுனிங்கனு தெரியாதோ, நடிக்காத டி, நீயே என்னைப் பத்தி தப்பா சொல்லுவ, உங்கப்பனும் அதையே சொல்லி என்னை அசிங்கப்படுத்துவான்”என்று வார்த்தைகளைக் கடித்து துப்ப.

இவன் என்ன சொல்கிறான் என்று புரியாது விழித்த ஆத்மி,”நீ என்ன சொல்ற எனக்கு ஒன்னும் புரியலை”என்று கூற.

“நடிக்காத, எவ்ளோ தைரியம் இருந்தா என்கிட்டவே எதிர்த்துப் பேசுவ இனிமே பேசவே நீ யோசிக்கனும் அந்த மாறி நான் பண்ணுறேன் பாரு”என்றான் ஆத்திரத்தோடு.

“ப்ளீஸ், இனிமே நீ சொல்றது எல்லாம் கேக்குறேன், உன்னை எதிர்த்துப் பேசமாட்டேன், இது…இது மட்டும் வேண்டாம் ப்ளீஸ்”என்று அவள்  மன்றாட.

“இங்க பாரு உன்னைய இப்படி சும்மா பாத்திட்டு இருக்குறதுக்கு ஒன்னும் நான் கல்யாணம் பண்ணலை, நீ வீம்பு பிடிக்காம இருக்கிறது உனக்குத் தான் நல்லது”என்றான் அவன்.

“இல்லை, வேண்டாம், இது பாவம், இதை நீ பண்ணாத”என்று அவள் கெஞ்ச.

“பாவமா?மில்கி, இதுக்காகத் தானே உன்னை நான் கல்யாணமே பண்ணேன், நீ வெளியே யாருக்கிட்ட வேணும்னாலும் கேட்டுப் பாரு இது பாவமானு”என்றான் ஏளனமாக.

‘கல்யாணம் எவ்ளோ புனிதமான பந்தம் தெரியுமா? இவ்ளோ கேவலமாகவும்  ஒருவன் நினைக்க முடியுமா?தாம்பத்யம் அதனைக் காட்டிலும் புனிதம் என்பதை புரியாது இப்படி நினைப்பவனிடத்தில் என்ன சொல்ல?’ என்று  கழிவிரக்கத்தோடு நினைத்துக் கொண்டாள்.

அவளின் அமைதியை கண்டவன்”லுக், ஆயிரம் காலத்து பயிரு, அந்த மாறி டிப்பிக்கல் டயலாக்குலாம் நீ பேசினாலும், அதையெல்லாம்  கேட்டிட்டு இருக்க ஐ டோன்ட் ஹாவ் டைம், டோன்ட் வேஸ்ட் மை டைம்” என்றவன் அவளை வன்மையாக அணைக்க, கண்களில் கண்ணீர் கட்டுக்கடங்காமல் வந்தது ஆத்மிக்கு, முன்னர் பாதியில் விட்டதை இப்பொழுது தொடர்ந்தான் அந்த அகங்கார ஆண் அவன்.

அவளின் நெற்றியில் ஆரம்பித்த இதழ் முத்தம் இங்கு மட்டும் தான் முத்தமிட வேண்டும் என்று எந்த எல்லையும் இல்லாது அவளின் உடலில் ஊர்வலம்போக அவனின் கைகளை அவளிடத்தில் தன் அதிகாரத்தைக் காட்ட, அவனின் வேகத்தில் துவண்டவள்.

அவனிடத்தில் போராட தன் நகங்களை அவள் உபயோகிக்க, அந்தப் போரட்டத்தில் அவனின் உடல்களில் சில கீறல்கள் உண்டாக அதில் கடுப்பானவன் அவளை இன்னும் வன்மையாய் ஆக்கிரமிக்க, தன் போராட்டம் தனக்கே ஆபத்தாய் மாறுவதை  உணர்ந்தவள், அவனைக் கைகளால் தடுக்கும் முயற்சியில் மட்டும் இறங்க, அந்தோ பரிதாபம், அவளின் போராட்டம், அவளின் பெண்மை, அவள் என்று அனைத்தையும் கருணையே இல்லாது தோற்கடித்தும், பறித்துக்கொண்டும், வலுக்கட்டாயமாகவும் எடுத்துவிட்டிருந்தான் தேவ்.

முதல்முறை அவளை வன்மையாய் கையாண்டவன், மறுமுறை மென்மையான பூவைக் கையாளுவது போல் அவளைக் கையாள ஒரே நிமிடத்தில் இரு பரிமாணத்தை ஆத்மிக்கு காட்டியிருந்தான் தேவ்.அந்தக் கூடலும் ஒரு முடிவிற்கு வரத் தன்னை சீர்ப்படுத்திக்கொண்டு அந்த வீட்டில் பூட்டியிருந்த இன்னொரு அறைக்குச் சென்று விட்டான் தேவ்.

அவளை மென்மையாகவே கையாள நினைத்தான் தேவ், ஆக்ரோஷமாய் முதலில் ஆரம்பித்தவன் அவளின் மென்மையில் புதையவே நினைத்தான் அதற்குள் ஆத்மி இவனைத் தாக்கிட இவனும் மென்மையை சுத்தமாய் மறந்து போயிருந்தான்.

இந்தக் கூடலை இருவரும் இருவேறு மனநிலையில் எடுத்துக்கொண்டனர், தேவ்வை பொறுத்தவரை இது காதலால் நடந்த கூடல், அவளைக் காயப்படுத்தவென்று சில வார்த்தைகளை அவன் உபயோகப்படுத்தியிருந்தாலும், அவளின் மேல் அவன் வைத்திருக்கும் காதலை உணர்த்த சமயம் பார்த்துக்கொண்டிருந்தபொழுது தானாகவே ஒரு வாய்ப்பு கிட்டவும் அதைப் பயன்படுத்திக்கொண்டான்.

இன்னொன்று எங்கே அவள் தன்னை விட்டுச் சென்று விடுவாளோ என்கிற பயம் அவனுக்குள் இருந்ததால், அவளிடம் தன் உரிமையை நிலைநாட்டிவிட்டால் அவள் எங்கும் செல்லமாட்டாள் என்று நினைத்தே அவன் இத்தனையையும்  செய்தான்.

அவனிடம் யார் சென்று சொல்வது, சில பெண்கள் எந்த வரையறைக்குள்ளும் அடங்கமாட்டார்கள், அதில் ஆத்மியும் ஒருவள் என்று. ‘அவன் என்னோடு சங்கமித்து விட்டான்’என்பதற்காக அவனோடு காலம் தள்ள தன்மானம் உள்ள பெண்கள் நிச்சயம் அடங்கி வாழமாட்டார்கள், அதிலும் இங்கு ஆத்மியின் பெண்மை அவளிடமிருந்து பிடுங்கப்பட்டுள்ளது என்பதே சத்தியமான உண்மை. 

விதி இவனைப் பார்த்தது,’அவள் திருப்பி அடிக்கும் காலம் சீக்கிரத்தில் வரப்போகிறது, மகனே, நீ தாங்கமாட்டாய்’ என்று அவனைப் பார்த்து ஏளனமாய் சிரித்தது.

*************

சிறிது நேரம் கழித்தே எழ முடிந்தது ஆத்மியால், அழுதழுது வீங்கிப் போன கண்கள், உதட்டில் இர்த்தம் கசிந்து உறைந்து போயிருக்க, தலை முடிகள் கலைந்துபோய், உடலில் அங்கங்கே இரத்தம் கன்றிபோய் சிவந்து கிடக்க, எழமுடியாமல் எழுந்தவள்.

பெட்ஷீட்டால் தன்னை போர்த்திக்கொண்டு நடக்கவே முடியாது மெல்ல மெல்ல நடந்து பாத்ரூம் சென்று ஷவரை திறந்து அதன் அடியில் நிற்க உடலின் ஒவ்வொரு செல்லும் உயிர் வலியைக் கொடுத்தது ஆத்மிக்கு.

உடல் வலி பெரியதா  மனவலி பெரியதா என்று அவளால் பிரித்தெடுக்க முடியாதபடி இரண்டுமே உயிர்வலியை கொடுக்க அப்படியே மடங்கி அமர்ந்து ஓ வென்று கதிறி துடித்தாள் ஆத்மி. 

*********

அறைக்கு வந்த தேவின் நினைவுகள் மூன்றாவது முறையாக ஆத்மியை சந்தித்த நிகழ்விற்கு சென்றது.

சென்னையில் பிரபல பொறியியல் கல்லூரி.

முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் நாள்,

முதல் முதலாய்  சிறகடித்து பறக்க வந்த வண்ணத்து பூச்சிகளாய் மாணவர்கள். முதல் நாள் கல்லூரி என்பது ஒரு படபடப்பை, பயத்தை தருவதை காட்டிலும் மகிழ்ச்சியையும், ஆர்வத்தையும், தன்னம்பிக்கையையும் நிறைய கொடுக்கும், அது முகத்தில் பல தேஜஸையும் கொடுக்கவல்லது.

அங்கே தன் எம்பி ஏ படிப்பை முடித்துவிட்டு டீசியை பெறவென்று வந்திருந்தான் தேவ் அநபாயன்.டீசியை பெற்றுக் கொண்டவன் வெளியே போக வேண்டி வாசலை நோக்கி நடையிட அவனை மின்னலென ஒருத்தி கடந்து சென்றாள், அத்தனை வேகம் அவளுள் அவனை இடிப்பது போலவே வந்தவள் இடிக்காது சென்று விட.

“ஹலோ,”என்றான் தேவ் கடுப்பாக.

ஒரு நிமிடம் நின்று அவனைத் திரும்பிப் பார்த்தவள்,”ஹலோ, நைஸ் டூ மீட் யூ, ஐ எம் ஆத்மி”என்றாள்.

அவளைப் பார்த்த மாத்திரத்தில் கண்டுக்கொண்டான், பொதுவாகப் பத்து வயதில் பார்த்த பெண்ணை ஒருவன் அவளது பதினெட்டாவது வயதில் கண்டுக்கொண்டே உடனே அவனால் அவளை அறிந்துக்கொள்ள முடிகிறது என்றாள் அவள் அவனுள் எத்தனை ஆழமாய் பதிந்திருக்கிறாள் என்பது கவனிக்கதக்கது.அவனின் கடுமை சூரியனை கண்ட பனி போல் விலகிட.

“ஏன் இடிக்கிற மாறி வர்றீங்க?”என்றான்.

“அதான் இடிக்கலைல, இடிச்சாதான் கேக்கணும், இல்லாட்டி கேக்க கூடாது நான் எப்படி வேணுனா நடப்பேன் அதனால் சேதாரம் வந்தால் மட்டும் சொல்லுங்க, சரியா?”என்று சொல்லிவிட்டு, “க்ளாஸ்க்கு டைம் ஆச்சு, பாய் பாய் மிஸ்டர் ஹலோ”என்று நகர்ந்துவிட்டாள்.

மெல்லிதாய் சிரித்தான் தேவ், அவன் கணக்குப் படி இப்பொழுது இங்கு அவள் முதலாம் ஆண்டு படிக்க வந்திருக்க வேண்டும் ஆனால் அவனது துரதிஷ்டம் அவன் காலேஜ் படிப்பை முடித்து விட்டு வெளியேறும்போது  அவள் படிக்க வந்திருக்கிறாள். நல்ல மதிப்பெண் பெற்றவன். ஆகையால் கொல்கத்தாவில் இவனுக்கு வேலையும் கிட்டியிருந்தது, இரவே செல்ல வேண்டும்.சரி இங்குத் தானே இருப்பாள் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்.

************** 

 

நினைவுகளிலிருந்து வெளியே வந்தவனாக, பெருமூச்சொன்றை விட்டுவிட்டு உறங்கவிட்டான்.

இங்கே பாத்ரூமிலிருந்து வெளியே வந்த ஆத்மிக்கு தலையைச் சுற்றியது தலையைப் பிடித்துக்கொண்டு அப்படியே கட்டிலில் அமர்ந்தவளின் கண்களில் கண்ணீர் வந்துக்கொண்டே இருக்க, அழுது அழுது ஒரு வழியாய் தூங்கினாள்.

காலை விடிந்தது முதலில் எழுந்த தேவ், வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

திரும்ப வருகையில் கைகளில் சில பைகள் சகிதம் வந்தவன், அவள் இருக்கும் அறைக்குச் சென்று, “பொண்டாட்டி”என்று அவளது காது மடல்களை உரசியவண்ணம் கூறி எழுப்பப் பயந்துப்போனவள் திரு திருவென முழிக்க.

“என்ன இன்னும் தூங்குற நியாயமா இந்நேரம் நீ தலைக்குக் குளிச்சு, புடவையைக் கட்டி, கை நிறைய வளையல் போட்டு, வீடே மணக்குற மாதிரி காப்பி போட்டுட்டு வந்து. அத்தான் காப்பினு கொடுத்திருக்கணும்” என்றான்.

அவள் அவனைப் புரியாத பார்வை பார்க்க,”என்ன டி பாக்குற, நீ தானே சொன்ன நான் ஒன்னும் டிப்பிக்கல் பொண்டாட்டி இல்லனு, இனிமே நீ டிப்பிக்கல் பொண்டாட்டி மாதிரி நான் சொன்னதெல்லாம் பண்ணிட்டு வந்து என்னை எழுப்பணும், இன்னைக்கு பர்ஸ்ட் டே, சோ விட்டுறேன், நீயும் உங்க அப்பனும் பண்ணுனதுக்கு என்கிட்டே நீ அனுபவிப்ப, நான் யாருனு காட்டுறேன் உங்களுக்கு” என்றவனின் கடுமையில் இவளுக்குக் கிலி பிடித்தது.

அவள் அவனைப் பாவமாய் பார்க்க அவளின் பார்வையை ஒதுக்கியவன்,”போய் நான் சொன்ன மாறி ரெடி ஆகிட்டு வா, பத்து நிமிசத்துல. உனக்குத் தேவையான பொருள் எல்லாம் அங்க இருக்கு, ரெடி ஆகிட்டு வா ஒரு முக்கியமான இடத்துக்குப் போகணும்”என்றான் கட்டளையாக.

_தொடரும்_

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!