நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-16

முக்கியமான இடம் என்று அவன் எதைக் கூறிப்பிடுகிறான் என்பது புரியாது விழித்தவள், எதிர்வினை புரியாது சென்றுவிட்டாள்.

குளித்து முடித்து அடர் அரக்கு  நிறத்தில் ஒரு புடவையை உடுத்திக்கொண்டும், அவன் சொன்னது போலவே வந்து நின்றவளின் மேனியில் அங்கங்கு சிவந்து போயும், உதட்டின் உறைந்த இரத்த காயமும் நேற்றைய கொடூகொடதை நினைவுப்படுத்த, அவளை மேலிருந்து கீழாகப் பார்த்தான்.

அவனின் பார்வை பாவைக்கு பயத்தை கொடுக்க, அவளின் பயத்தை பார்த்தவன் ஏளனமாக அவளைப் பார்த்தபின்,

“பர்பெக்ட், வா கிளம்பலாம்”என்று கூறியவன் முன்னே சென்றுவிட்டான்

‘எங்க கூப்பிடுறான்?’என்று மனதோடு நினைத்தவள் அதை அவனிடம் கேட்கத் தைரியம் இல்லாது,அமைதியாய் அவனோடு சென்றாள், அவன் காரில் டிரைவர் சீட்டில் அமர்ந்துக்கொண்டான், இவளும் முன்னே  ஏறியதும் கார் புறப்பட்டது. 

அமைதியாய் அந்தக் கார் அந்த வீதியில் தன் சுவடுகளைப் பதித்து செல்ல.

“நாம ஒரு முக்கியமான இடத்துக்குப் போறோம்னு சொன்னேன்ல அது என்னனு தெரியுமா?”என்று அவன் முதலில் மொளனத்தை கலைக்க..

“தெரியாது”என்றாள் ஆத்மி.

“எல்லாம் உனக்கு வேண்டப்பட்டவங்கதான்”என்றான் புதிராக.

‘யாரை சொல்றான், எனக்கு வேண்டப்பட்டவங்கன்னா?’என்று விழித்தவள் அவனைப் பார்க்க 

“போறோம்ல பார்த்துத் தெரிஞ்சுக்கோ, என்று முடித்துக்கொண்டான்.

அவள் வழி நெடுக யாரோ என்று யோசித்துக்கொண்டே வர, அந்தப் பிரபல மருத்துவமனை முன் கார் வந்து நின்றது, அந்த மருத்துவமனையைக் கண்டவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.

தன் தந்தையை அட்மிட் செய்திருக்கும் அதே மருத்துவமனை,’இதுவரை செய்தது எதுவும் பத்தலையோ, இப்போ எதற்கு இங்கே கூட்டி வந்திருக்கிறான், அப்பா இவனால் தான் இன்று இங்கே இருக்கிறார்’ என்று பலவாறு எண்ணியவளின் சிந்தனை மட்டும் ஏதோ தவறாகப் பட நெஞ்சம் பக் பக்கென்று அடித்துக்கொண்டது. அவனை அவள் கிலியோடு பார்க்க 

“என்ன பாக்குற, இறங்கு” என்று கூறியவன், பின்னாலிருந்து ஒரு பையை எடுத்துக்கொண்டவனும் அவளை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல, நேராகத் தயாளன் இருக்கும் அறையை வந்தடைந்தவன் கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே செல்ல.

அங்கு ஆத்மியின் தந்தை தாயளன் பெட்டில் முழித்தே படுத்திருக்க, தாய் அகிலா நாற்காலியில் அமர்ந்திருந்தார்.காலடி ஓசையில் இருவருமே நிமிர்ந்து பார்க்க, முதலில் உள்ளே வந்த தேவ்வை பார்த்து இருவரும் அதிர்ச்சியாகி பின், பின்னால் வந்த ஆத்மியை கண்ட அவளது தாய் அகிலா, 

“ஆத்மி கண்ணா”என்று அவளை நோக்கி வர, தன் கைகளால் அவரை தடுத்தவன்.

“தள்ளிப் போங்க”என்றான் நறுக்குத்தெரித்தார் போல்.

ஆத்மியின் உடல் காயங்களைக் கண்ட தாய் தன் மகளுக்கு எப்பேர்ப்பட்ட கொடுமை நடந்திருக்கும் என்பதை கணித்தவரால் அழுகையை அடக்க முடியவில்லை.முந்தானையால் வாயை பொத்திக்கொண்டு அழுதார் அந்த தாய்.தயாளனுக்கோ அதிர்ச்சி காரணம் ஆத்மியின் திருமணம்பற்றிய தகவல்கள் எதுவும் அவரைச் சென்றடையவில்லை அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு.

இருப்பினும் கண் விழித்தது முதல் ‘பெரிய பெண் எங்கே? ஆத்மி எங்கே? என்று அவர் விடாது கேட்டுக்கொண்டே இருக்க அழுகையை மட்டுமே பதிலாய் தந்திருந்தார் அகிலா, மனைவியின் அழுகை ‘ஏதோ தவறாக நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது’ தயாளனுக்கு. ஆனால், என்னவென்று தெரியவில்லை.

தயாளன் அருகே சென்றவன், “ஹலோ தயாளன், நான் தேவ், தேவ் அநபாயன்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டவன்.சிறிது இடைவெளி விட்டு.

“இவள் என் வைப், ஆத்மிகா அநபாயன்” என்று ஆத்மியை அறிமுகப்படுத்தி வைக்க அதிர்ந்தார் மனிதர், மறுபடியும் நெஞ்சு வலி எடுக்க ஆரம்பித்தது, அவரைக் கண்ட அகிலாவும், ஆத்மியும்  அவரிடம் விரைத்தனர்.

“என்னங்க, என்ன பண்ணுது”என்று பயந்தவராக அகிலா டாக்டரை அழைக்கப் போக.

“யாரும் வரமாட்டாங்க, நான் சொல்லாம” என்றான் தேவ் அழுத்தமாக.

தாயும்,சேயும் கண்களாலே அவனிடம் கெஞ்ச, அவர்களை ஒதுக்கித் தள்ளியவன், 

“நீங்க தான் சொன்னீங்களாமே, உங்க பையன் பொறுக்கி, ம்ப்ச், சாரி பொம்பள பொறுக்கி என் மகளைத் தரமாட்டேன்னு, அன்னைக்கு எங்க அம்மாகிட்டு ஏதேதோ பேசினியாமே, இப்போ பேசு பார்க்கலாம், ஏற்கனவே நீ பேசியதற்கு தான் உன் பெண் அனுபவித்து கொண்டிருக்கிறாள் “என்று தயாளனிடம் உறைத்தவன்.

அவரின் வேதனையைக் கண்டுவிட்டு “தரமாட்டேன்னு சொன்னா பிடுங்கறது தானே முறை, அத்தோடு அதான் தேவ் ஸ்டைல்” என்றான் ஏளனமாக.

தயாளனுக்கு உடல்நிலை இன்னும் மோசமாக, கொஞ்சம் கொஞ்சமாகச் சுயநினைவு பின்னுக்கு செல்ல, ஆத்மியும், அகிலாவும் கண்களில் கண்ணீரோடு இதைக் காண, அகிலா வாய்விட்டே புலம்ப அதை எதுவும் கருத்தில்  கொள்ளாது,”கவலை படாத உன் மகளை நல்லாவே வெச்சுக்கிறேன் “என்று அந்த வெச்சுக்கிறேனில் அவன் அழுத்தம் கொடுக்க.அவர் மயங்கியிருந்தார்.

அகிலாவிடம் சென்றவன் “அத்தை, மாமாக்கு ஹார்லிக்ஸ், பழங்களெல்லாம் இதுல இருக்கு”கொடுங்க என்று அந்தப் பையைக் கையில் திணித்தவன்.

“மாமாவைப் பாத்துக்கோங்க, வரேன் அத்தை”என்று கூறியவன், ஆத்மியின் கைகளைப் பிடித்துத் தரதரவென்று இழுத்து சென்றான்.

காரிற்கு சென்று அவளை உள்ளே தள்ளியவன், எதிர்புறம் சென்று தானும் அமர்ந்துக்கொண்டவன் காரை அவன் கிளப்ப, வலி நெடுக இவள் அழுதுக்கொண்டே வர, கடுப்பானவன், “ஜஸ்ட், ஷட் அப்”என்று கத்தினான்.

“உன் அப்பன் இன்னும் சாகலை, சும்மா அழுகாத” என்று அவன் கூற ஆத்திரம், கோபம் எல்லாம் சேர்ந்து வந்தது ஆத்மிக்கு, “சாகலையா, உயிரோடு இருந்தா அதுக்கு பேரு வாழுறதுனு, உனக்கு எவன் சொன்னான், சாகுறது ரொம்ப ஈசி, நீ உயிரோட அவரைக் கொன்னுட்ட, அவர் உடம்பில் இன்னும் உயிர் இருக்கு ஆனால் அதில் உயிர்ப்பு இல்லை, மனதால் அவர் என்றோ இறந்துவிட்டார்” என்றாள் கண்ணீரினூடே.

“ஏன் உன் அப்பனுக்குனா வலிக்குதோ, எனக்கு அப்படித்தானே இருக்கும், என் வீட்டில் தெய்வமாய் இருந்த என் அம்மாவின் இந்த நிலைக்கு உன் அப்பன் தான் காரணம்”என்று பற்களை நறநறத்நவன், அவனின் மொத்த கோபத்தையும் ஸ்டியரிங்கில் காட்ட, அந்தக் கார் மின்னலெனப் பாய்ந்தது.

இந்தத் தகவல் ஆத்மிக்கு புதிது,’தன் தந்தையால் தான் சாரதாம்மாக்கு இந்த நிலைமையா?அதற்கு முன் நன்றாக இருந்தாரா’என்று நினைத்தவள், பின், “இல்லை தன் தந்தை யார் மனதும் துன்பப்படும்படி பேசியிருக்க மாட்டார்’ என்று திடமாக நம்பினாள்.

“என் அப்பா, நல்ல மனிதர், அவர் யாருக்கும் மனதால் கூடத் தீங்கு நினைக்காதவர், உன் தாயின் இந்நிலைக்கு வேறு காரணம் இருக்கலாம்”என்றாள் அவனிடம் தீர்க்கமாக.

“வாயை மூடு, உன் வீட்டிற்குள் நுழையும்போது நன்றாக நடந்து போனவர், திரும்ப வந்து காரில் ஏறி நேராக அவரை நான் மருத்துவமனையில் தான் பார்த்தேன்”என்றான் கோபமாக.

“விசாரிச்சியா?தீர விசாரிச்சியா? ஒருத்தர் மேல பழி போடுறது ரொம்ப ஈசி”என்றாள் வேதனையாக.

“விசாரிக்கனுமா, எதுக்கு, உனக்கு இன்னுமா புரியலை, உன் அப்பா மேல தப்பில்லாட்டி அவர் உன்கிட்ட நடந்ததை சொல்லியிருப்பார், அவர் தான் சொல்லலையே அதுலையே உனக்குத் தெரியலை” என்றான் கோபமாக.

ஒரு நிமிடம் ஸ்தம்பித்தவள் ‘இருக்குமோ’என்று நினைத்தவள், பின் தன்னையே திட்டிக்கொண்டு.”நான் நம்ப மாட்டேன்” என்றாள் அழுத்தமாக.

“அது உன் பிரச்சனை”என்று அவனும் முடித்துக்கொள்ள.

அடுத்த கேள்வி ஆத்மிக்குள் “அப்போ, உன் நோக்கம் என் அப்பாவைப் பழி வாங்குறது அதானே”என்றாள் ஆத்மி.

“இல்லையே… உன்னையும் சேர்த்து வாங்குவது”என்றான் அவளை ஒரு நொடி பார்த்து.

“நான் எங்கிருந்து வந்தேன் இதில்”என்றாள் கேள்வியாக. 

“இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளியே நீ தான்” என்றான் அவன்.

“புரியலை”என்றாள் அவள்.

“அதுவும் என் பிரச்சனை இல்லை” என்று முடித்துக்கொண்டான்.

தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போல் இருந்தது ஆத்மிக்கு, ‘ஒன்றும் புரியவில்லை ஆரம்பப் புள்ளி என்று இவன் எதைக் கூறுகிறான்’ என்று யோசித்தவளுக்கு விடை மட்டும் கிடைக்கவேயில்லை, ‘புரிகின்ற மாதிரியே பேசமாட்டான் பரதேசி’, என்று மனதோடு நினைத்தவள், அமைதியாய் வர.

நேராக வீட்டின் ஷெட்டில் காரைப் பார்க்கச் செய்தவன் இறங்க, இவளும் இறங்கியவுடன் இருவருமாக அந்தச் சிறிய வீட்டிற்கு செல்லப் போகையில், அறிவழகன் அவர்களைத் தடுத்தவர்களாக, “தம்பி, ஏன் அங்க அந்தப் பொண்ணு இருக்கணும், மாளிகைபோல் வீடு இருக்கையில்”என்றார் மெதுவாக.

“ம்ப்ச், மாளிகையில் வாழுற தகுதியெல்லாம் இவளுக்கு இல்லை, நீங்கப் போகலாம்”என்றான் அசால்ட்டாக.

ஆத்மிக்கு இவனின் பேச்சில் கோபம் கனன்றது, தகுதியாமே தகுதி பணத்தின் மதிப்பு ஒன்றை  மட்டும் கொண்டு ஒருவன் தன் தகுதியை நிர்ணயிப்பது பிடிக்கவில்லை, அத்தோடு, ஒரு பெண்ணைப் பலவந்த படுத்திய இவன் முன் தன் தகுதி ஒன்றும் குறைந்து விடவில்லை என்று நினைத்துக்கொன்டாள் ஆத்மி…

“அதுக்கில்லை தம்பி, அவள் இந்த வீட்டின் மருமகள், அங்கே இருப்பது தான் முறை”என்று அவர் இழுக்க.

“இவ உங்க மருமகள்னு நான் எப்போ சொன்னேன், போய் உங்க வேலையை மட்டும் பாருங்க”என்றான் கோபமாக.

“என்ன சொல்ற, மருமகள் இல்லைனா?இந்தப் பெண்ணைக் கைவிடப்போகிறாயா?என்றார் அதிர்ச்சியாக.

மெல்லிதாய் சிரித்தவன், “உலகத்தில் இருக்கிற எல்லா ஆம்பளைகளும் உங்கள மாதிரியே இருப்பாங்கனு நினைச்சீங்களா? நான் உங்கள மாறிக் கிடையாது நம்பிய பெண்ணைக் கைவிட”என்றான் இகழ்ச்சியாக.பின்,

” இங்க நடக்குறதை அங்க போய்ப் போட்டுக்கொடுக்கலாம்னு நினைக்காதீங்க, உங்களைப் போன போகுதுனு தான் விட்டுவெச்சிருக்கேன், நியாபகம் இருக்கட்டும்”என்று அழுத்தமாகக் கூறியவன், ஆத்மியின் கைகளைப் பிடித்து இழுத்து சென்றான்.

ஒரு முறை ஒரே முறை செய்த தவறு, இல்லை இல்லை பாவம் அதற்கு ஒவ்வொரு முறையும் தன் மகனின் வார்த்தைகளால் அடி வாங்கி கொண்டிருக்கிறார்.

ஒரு தவறோ, பல தவறோ, அது அந்தத் தவறின் அளவைக் கொண்டே நிர்ணயிக்கப்படும் ‘காதலித்த பெண்ணைக் கைவிடல் பெரும் பாவம் அன்றோ? ஆசை வார்த்தை கூறிய அதே வாயால் அசிங்கப்படுத்துதல் தான் முறையோ? காலைப் பிடித்துக் கெஞ்சியவளை அதே காலால் எட்டி உதைத்தது தான் கொடுமையோ? வேதனை கொண்டவர் உள்ளே சென்று விட்டார்.

************

வீட்டிற்குள் நுழைந்ததும் அவளின் கைகளை விட்டவன், “போய், தோசை சுட்டு கொண்டு வா “எற்று கூறியவன் சோபாவில் சென்று அமர்ந்துக்கொண்டான்.

“நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம்?”என்று அவள் கேட்க.

“வெல், இப்போ நான் கொஞ்சம் ஹாப்பியா இருக்கேன், இந்த முறை உனக்கு நோ தண்டனை, இனிமே இப்படி கேள்வி கேட்ட, அப்றம் தெரியும் நான் யாருனு?”என்று புருவத்தைத் தூக்கி எச்சரித்தவன்,”எதைக் கேக்குற”என்றான்.

“இப்போ சொன்னீயோ வெளியிலே, உன் அப்பாகிட்ட”என்று அவள் முடிக்கவில்லை பக்கத்தில் வந்து அவள் கழுத்தை நெறித்தவன் “அவரை என் அப்பானு சொன்ன கொன்னுடுவேன்”என்று கர்ஜித்தவன்.

சட்டென அவளைவிட நிலை தடுமாறியவள், தன்னை நிலைநிறுத்திக்கொண்டவள்.தொண்டையை சரிசெய்துக்கொண்டு.

“அது என்னவோ, அவர் கிட்ட எதுக்கு என்னைக் கைவிட மாட்டேன்னு சொன்ன?”என்றாள்.

“உன்னைக் கைவிடும் ஐடியா இப்போதைக்கு இல்லை, அதான் அப்படி சொன்னேன்”என்றான் அலட்சியமாக.

“என்ன…உன் பழிவாங்கும் படலம் முடிந்ததும், என்னை அனுப்பிடவேண்டியது தானே, என்னால் உனக்கு மனைவியிலாம் வாழ முடியாது”என்றாள் கோபமாக.

ஹா.ஹா.என்று சிரித்தவன் “நீ எனக்கு மனைவினு நான் எப்போ சொன்னேன், சும்மா அது வெளி உலகத்திற்கு மட்டும், மித்தபடி இந்தக் கல்யாணம் எதுக்குனு நேத்து நைட் தானே உனக்குப் புரிய வெச்சேன், பகலில் வேலைக்காரியாவும், இருட்டில் வீட்டுக்காரியாகவும் இரு”என்றான் அவன்.

அதில் கோபத்தின் உச்சிக்குச் சென்றவள்,’இவனெல்லாம் என்ன ஜென்மம் என்று நினைத்தவள், “நான் ஏன் அப்படி இருக்கணும்?நான் உன் அடிமையில்லை”என்றாள் கோபமாக.

“அடிமையா, ஹா.ஹா அதுக்கும் கீழ பொண்டாட்டி, மில்கி”என்றான்.

“காட்டுமிராண்டியா இருக்க இப்படி, இன்னும் நீ ஆதிகாலத்துலையே இருக்க, அங்க தான் இப்படியெல்லாம் பேசுவாங்க, நடந்துப்பாங்கனு” படிச்சிருக்கேன்.இப்போ எத்தனை சட்டம், தண்டனை இருக்கு தெரியுமா”என்றாள்.

“வெல் அப்டியே இருக்கட்டும் சோ, வாட், நான் மாடர்ன் டிப்பிக்கல் ஹஸ்பென்டா இருந்திட்டு போறேன், சட்டம், தண்டனை சரி நீ போ உன்னையே நான் கூட்டிட்டு போறேன் போய்க் கம்ப்ளெயின்ட் கொடு”என்றான் ஏளனமாக.

“ச்செய், அதைத் தான் காசு கொடுத்து வாங்கிட்டியே, நீ பண்ணுறதுக்கெல்லாம் கண்டிப்பா அனுபவிப்ப, கடவுள் கிட்ட இருந்து யாருமே தப்ப முடியாது. சாரதாம்மாக்கு இப்படியொரு பையன்னா என்னால நம்ப முடியலை”என்றாள்.

“எங்க அம்மா ரொம்ப நல்லவங்களா இருக்காங்கலாம் அதான் என்னை இப்படி படைத்திருக்கிறார் நீ சொன்ன கடவுள், இப்போ டவுட்டு கிளியரா?” என்றவன் “அப்றம், தாங்க்ஸ் பார் தி சாபம்”என்றான்.

ஆத்தரமாக வந்தது ஆத்மிக்கு அடுத்த முறை இவன் தாயை காணும் நிலை வந்தாள் அனைத்தையும் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தாள், போன முறை அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் செய்த மடத்தனத்தை எண்ணி நொந்தவளாகத் தீர்மானம் எடுத்துக்கொண்டாள்.

“இப்படி நின்னுட்டே இருந்தா ஆச்சா, போய் மொறு மொறுனு நெய் தோசை எடுத்திட்டு வா”என்றான் கட்டளையாக.

_தொடரும்_…