நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-2

  • அவன் பேசி முடிக்கவும்,சரியாக குழந்தை அழுதது,

“ஹரி,கெட் இட்!” என்றான்.

“சா..ர்,அது குழந்தை….”

“சோ வாட்,போய் தூக்கிட்டு வா என்றவனோ, திமிராக அவளின் தந்தைக்கு எதிராக இருந்த சோபாவில் அமர்ந்தான். இருந்தும் ஆத்மியின் கைகளை விடுவதாய்  இல்லை! 

அவன் அழுத்தம் கொடுக்க கொடுக்க, எங்கே கை தனியாக வந்துவிடுமோ என்று பயந்தாள் ஆத்மி.  எனினும், அதை சற்றும் தன் முகத்தில் காட்டாது, அவனை முடிந்த மட்டும் முறைக்கலானாள்.

குழந்தையை கொண்டு வந்தவனோ,அதை கைகளில் ஏந்தி நிற்க, “சார்,எடுத்திட்டு வந்துட்டேன்” என்றான். 

குழந்தை வீறிட்டு அழுதது. அதன் அழுகையில் இன்னும் கடுப்பானவன், “ஷட் அப், இல்லை உன்னையும் கட்டிப் போடுவேன்”என்று மிரட்ட குழந்தையின் அழுகை கூடியது. 

“முதலில் அதன் வாயை மூடு” என்று கட்டளையிட்டவனை ஹரி கெஞ்சும் முகத்தோடு பார்த்தான். 

“சார், பச்சிளம் குழந்தை சார், வேண்டாம் சார்” என்று தயங்கியவனை கண்டு இன்னும் கடுப்பானவன்,

“நான் சொல்றது கேக்குறதுக்கு மட்டும் தான் உனக்கு சம்பளம் தர்றேன், தேவையில்லாத வேலைப் பார்த்தால்,நீ வேற வேலை பாத்துக்கோ”என்றிட,

சிறிது நேரம் தயங்கியவன் வேறு வழி இல்லாது குழந்தையின் வாயைக் கட்ட போனான்.

அபர்ணா வேண்டாம் என துடிக்க, ஆத்மியும்” நீயெல்லாம் ஒரு மனுசனா? பச்ச குழந்தை! அதுக்கிட்ட இப்படி நடந்துக்கற.. உனக்கு ஈவு இரக்கமே கிடையாதா?என்றாள் கோபம் மின்ன. 

“ஷட் அப்” என்று கர்ஜித்தவன்.”ஈவு, இரக்கம் எனக்கு இருக்குனு உன் கிட்டே நான் சொன்னேனா? நீயே முடிவு பண்ணிக்கிட்டா நான் ஒன்னும் பண்ண முடியாது, அண்ட் கருனை காட்டுற அளவுக்கு ஒன்னும் உன் ஃபேமிலி எனக்கு இம்பார்டன்ட் இல்லை…..”என்றான் அவனும் கோபமாக. 

ஆத்மி, தான் அடுப்பில் வைத்த பால் போல் பொங்கி கொண்டிருந்தாள்.

இதில் தன் வேலையை செய்யாது நின்றிந்த ஹரியை பார்த்தவன், “இப்போ கட்டப்போறியா இல்லையா?” என்ற உறுமல் அவனிடம். 

“ஐயோ, என் குழந்தை அதை கொடுத்திடுங்க சார், ப்ளீஸ்!” என்று அபர்ணா கெஞ்சிட”

“சார்… வேண்டாம் சார் என்று கடைசி முயற்சியாக ஹரியும் கேட்டுப் பார்த்தான். 

குழந்தை வேறு இடையில் விடாது அழுதுக்கொண்டே இருக்கே, “என்ன பாத்துட்டு இருக்க அது வாயை எதையாவது வச்சு மூடு,இரிடேடிங்!” என்க.

அபர்ணாதான் கதறி துடித்தாள். 

“இரக்கம் என்பது சிறிதும் இன்றி, இறுக்கதோடு நின்றிருந்தான்” 

“இறுதியா கேக்குறேன், உனக்கு என்ன வேணும்? உன் நோக்கம் என்ன? எதுக்காக இங்க வந்திருக்க?”என்று கேட்ட ஆத்மி, அவனின் பதிலிற்காக காத்திருந்தாள். 

அதை சட்டை செய்யாதவனோ, “இங்கே பாரு, இங்க நான் மட்டும் தான் கேள்வி கேட்பேன், வேறு யாரு கேட்டாளும் அது எனக்கு பிடிக்காது. நான் இங்க வந்த நோக்கமே வேற, நான் வந்த கோபத்துல உங்க எல்லாரையும் இந்நேரம் போட்டு தள்ளியிருப்பேன், இதுவே பாவம் பார்த்து தான் விட்டிருக்கேன்”என்றிட 

“சரி கேள்வி கேட்கல,குழந்தையை கொடுத்திடு!” என்றாள் அவள் தீர்க்கமாக. 

“முடியவே முடியாது, ஒரு தடவை ஒரு விஷயத்தை நான் முடிவு பண்ணிட்டேனா அது முடிவு பண்ணினது தான்”என்றான்.

அழுது அழுது குழந்தை மயங்கிவிட, அதை கண்ட ஹரி மனம் கேட்காது, “சார்,குழந்தை மயங்கிடுச்சு,தண்ணீர் கொடுக்கலாமா? என்றான் இரக்க குரலில். 

“மச் பெட்டர்! இப்போ தான் நல்லா இருக்கு,எதுக்கு எழுப்பி மறுபடியும் அது அழுகவா?’ என்றான் சிறிதும் பாவம் பார்க்காமல் 

துடிதுடித்து விட்டாள் அபர்ணா! 

பெற்ற தாய் அல்லாவா, குழந்தையை கண் முன்பு வைத்துக் கொண்டு அதன் பசியை கூட ஆற்ற முடியாத கழிவிரக்கம் பொங்கியது. தன் கண் முன்னே குழந்தைப் படும் கஷ்டத்தை  கண்டு சகிக்காதவள் அவனின் காலில் விழப் போனாள். 

அதைக் கண்டு பதறி தடுத்த ஆத்மி, “அக்கா,என்ன பண்ற? இவன் காலுலலாம் ஏன் விழுகிற,இவன் ஒரு ……(பொறுக்கி என்று சொல்ல வந்தவள், ஏற்கனவே ஏற்பட்ட முன் அனுபவத்தால்) அதை அப்படியே நிறுத்தி விட்டாள். 

“என்ன? தைரியம் இருந்தா சொல்லி தான் பாரேன்”என்று ஆத்மியிடம் கூறியவன் 

“உன் குழந்தைக்கு ஏதாச்சும் ஒன்னு ஆனா, அதுக்கு இவ மட்டும் தான் காரணமா இருப்பா!”என்று அபர்ணாவிடம் கூறினான்.

“சார்,சார் மன்னிச்சுடுங்க,ப்ளீஸ் என் குழந்தையை கொடுத்திடுங்க சார்” என்று மன்றாடியவளிடம்  கண்ணீர்,கதறல்,தவிப்பு. 

ஆனால் இது  எதையும் கருத்தில் கொள்ளாது, ஆத்மிகாவை அவன்  கூர்மையாய்ப் பார்த்தான். 

அவளோ,அவனையே வெறித்து கொண்டிருந்தாள், ஆனால்,அந்த கண்களில் என்ன இருந்தது! அவனுக்கும் தெரியவில்லை.

“ஹரி,நோ மோர் டிராமாஸ். ஐ ஹாவ் டூ கோ,”என்று கூறியவன், எழுந்து,கடகடவென வாயில் வரை சென்றவனோ ஒரு நிமிடம் நின்று, “ஹேய்,மில்கி.குழந்தை வேணும்னா நீ என் கூட வா குழந்தையை விட்டிடுறேன்” என்றான் இறுதியான முடிவாக. 

என்ன செய்வது என்று ஒன்றும் புரியாது விழித்தவள் தன் தாய்,தந்தை,தமக்கை என்று அனைவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு விழிப்பிதுங்கி நின்றாள். 

“உனக்கு ஒன் ஹவர் டைம் தரேன்! முடிவு எடுத்திட்டு சொல்லு? உனக்கு நான் கால் பண்ணுவேன் எங்க வரனும்னு, புரிஞ்சதா? சரியா ஒன் ஹவர்! அது வரை குழந்தை எங்க கிட்ட பத்திரமாவே இருக்கும் சரியா ஒரு மணி நேரத்திற்கு மட்டும் தான். நீ லேட் பண்ணினா என்ன ஆகும்னு உனக்கே தெரியும்!”என்று சொல்லி முடிக்க அவளிடமோ பெரும் மௌனம். 

“……”

“நீ, புத்திசாலித்தனமா யோசிச்சா அது உன் திறமை. பட் பேபி என்கிட்ட இருக்குங்கிறதை கீப் இட் இன் யுவர் மைன்ட்” என்று கூறிவிட்டு  வெளியேறிவிட ,ஹரியை தவிர்த்து மற்றவர்கள் குழந்தையோடு வெளியேறி இருந்தனர். 

ஹரியும் வீட்டு வாயில் முன் நின்றுக் கொண்டான்.

வெளியே வந்தவன் அவனின் பாதுகாவலர்களிள் ஒருவனை அழைத்து,”குழந்தைக்கு தண்ணி கொடுங்க,பால் கொடுங்க,நல்ல குழந்தை மருத்துவர் கிட்ட அழைச்சுட்டு போங்க,ஐ டோன்ட் வான்ட் டூ டேக் எனி ரிஸ்க் இன் பேபிஸ் ஹெல்த்,டேக் கேர் ஆப் ஹர்!இல்லைனா உன்னைய தான் போட்டு தள்ளுவேன்”என்றவன் விறுவிறுவென தன் கப்பல் போல் இருந்த காரில் பறந்துவிட்டான்!.

ஓய்ந்துப் போய் கீழே அமர்ந்து விட்டாள் பெண். 

‘யார் இவன்? எதற்கு வந்தான்? இவனுக்கு என்ன வேண்டும்? ஏன், என்னை இப்படி வதைக்கின்றான்?’ என்று அவளுக்கு கேட்க கோடி கேள்விகள் இருந்தது. ஆனால்,அதை அவள் மனதிற்குள் தான் கேட்க முடிந்தது.

அபர்ணா விடாது கதறி கொண்டிருக்க, அவளின் தாய் தன் கணவனின் கட்டுகளை அவிழ்க்க, அவர்கள் இருவரும் எந்த மகளை தேற்றுவது என விழி பிதுங்கி நின்று பின் ஆளுக்கு ஒரு மகளிடம் சென்றனர்.

சிறிது நேரம் கழித்து.

அனைவரின் மனமும் பல்வேறு சிந்தனைகளில் சுழன்று கொண்டிருக்க, ஆளுக்கு ஒரு மூலையாக அமர்ந்திருந்தார்கள். 

புயலுக்குப் பின் அமைதியாக இருந்த அந்த வீட்டில் உள்ளே யாரும் இல்லையோ? என்று என்னும் அளவு பேரமைதியை கொண்டிருந்தது.

அழுது அழுது மயக்க நிலைக்கு சென்ற அபர்ணா ஒரு கட்டத்தில் மயங்கி சரிய, தாய் அவளின் மயக்கத்தை போக்க, வீறிட்டு எழுந்தவள் ஓடிப் போய் தன் தங்கையை தூக்கி நிறுத்தி பளார் என்று அறைந்திருந்தாள்.

“என்ன டி பண்ணி வச்சுட்டு வந்த? எங்கே போய் யாருக்கிட்ட வம்பிழுத்த? யார் அவன்? உன்னை இவ்ளோ உரிமையாய் பேசிட்டு போறான்?  உனக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்?”என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுக் கொண்டே போக ஒன்றும் புரியாது விழித்தாள் ஆத்மி.

அவளுக்குமே ஒன்றும் புரியவில்லையே எதை கூறுவாள்? என்னவென்று கூறுவாள்? அவன் கொடுத்த எரிச்சலோடு அவள் அக்கா கேட்ட கேள்வியும் சேர்ந்து அவளை கோபப்படுத்த அவளும் தன் நிதானத்தை இழந்து தான் விட்டாள்.

“ஹான்,என் லவ்வர். அவன் கூட ஓடி போக கூப்பிட்டான். நான் போகல அதான் இப்படி பண்ணிட்டு போறான்” என்று பதிலுக்கு கத்தினாள் இவள். 

அவளின் தாய் தான் “என்னடி உளறீட்டு இருக்க,பைத்தியம் எதுவும் பிடிச்சுடுச்சா?” என்று அதட்டினார். 

அபர்ணாவோ, “நீ என்னம்மா, இப்படி பேசிக்கிட்டு இருக்க? அவ உண்மையை தான் சொல்றா, இவள் எதுவும் பண்ணாமயா அவன் இங்க வருவான். நம்ம இங்கே வந்தே நாலு நாள் தான் ஆகுது. அதுக்குள்ள என்ன என்னமோ நடக்குது. எல்லாம் இவளால! இவதான் காரணம். என் குழந்தைக்கு மட்டும் எதாவது ஒன்னு ஆச்சு நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்” என்று வெளிப்படையாகவே, குற்றம் சுமத்தி எச்சரிக்கை விடுக்க,கலங்கித்தான் போனாள் ஆத்மி. 

இத்தனையிலும் அவள் தந்தை ஒன்றும் கூறாது சுவற்றையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, மிகவும் வேதனைக் கொண்டதெனவோ ஆத்மி தான்.

பொதுவாக இந்த மாதிரியான நேரத்தில் நமக்கு மிகவும் பிடித்தவர்கள், நம்மிடம் கோபத்தை காட்டி இரண்டு அடி அடித்துவிட்டாள் கூட மனது ஆறிவிடும். 

இப்படி ஒன்றும் கூறாது இருந்தால் அதுவே வேதனையை உண்டாக்கும். 

தந்தை தன்னை நம்பவில்லையோ,

அவர் தன்னை என்னவென்று நினைக்கிறாரோ என பலவாறு தன்னை தானே நொடிந்துக் கொண்டிருந்தாள். 

அவள் மனதும் மூளையும்,ஒன்று போல் செயல்படாது முரண் பிடித்தது. ஆத்மியின் நிலைமையும் அதுவே.

அவளின் தந்தையின் காலடியில் அமர்ந்து,” ஏதாவது பேசுங்கப்பா,ப்ளீஸ்” என்று கெஞ்சி பார்த்தாள். 

“………”

அவர் ஒன்றும் கூறாது இருக்க இவளுக்கு என்ன கூறுவது என்றே புரியவில்லை. 

அந்த பெயர் தெரியா ஒருவனை சுட்டு கொல்லும் அளவிற்கு கடுப்பானவள் இப்போதைக்கு அந்த எண்ணத்தை விடுத்து தன் அப்பாவை தேம்பியபடி பார்த்தாள். 

“எனக்கு அவன் யாருனே தெரியாது அப்பா. அவனை இப்போ தான் முதல் முறை பாக்குறேன். அவன் பேருக் கூட எனக்கு தெரியாது. எதுக்கு வந்தானும் தெரியாது.  நம்புங்க அப்பா, ப்ளீஸ்!”என்று மன்றாடியவளின் வார்த்தை அவரை அசைக்கவில்லை. 

அப்பொழுதும்  ஒன்றும் கூறாது இருந்தவரின் முகத்தையே சிறிது நேரம் அவரது  பார்த்துக்கொண்டிருந்தவள் எழுந்து போய் விட்டாள்.

நேராக தனது அறைக்கு சென்றவள்,என்ன செய்யலாம்? குழந்தையை எவ்வாறு மீட்பது என்று யோசித்துக் கொண்டிருக்க!

அக்கம் பக்கத்தினர் வேறு இல்லாதது பொல்லாதது என்று ஆள் ஆளுக்கு ஒன்றாக கதை கட்டிவிட, துவண்டு தான் போனது அந்த குடும்பம்.

இவர்கள் புதியவர்கள் என்பதால், அவனின் வருகைக்கு பின் ,ஹவ்ஸ் ஓனர் வேறு வந்து பிரச்சனை செய்ய,உடனே வீடு காலி பண்ணுங்க என்றிருந்தார்.

காலையில் எவ்வளவு அழகாக ஆரம்பித்த நாள் சில மணித்துளிகளில் இவ்வாறு ஆனதை எண்ணி வேதனைக் கொண்டிருந்தாள். 

இதற்கிடையில் சந்தோஷ் வேறு விடாது அழைத்துக் கொண்டிருந்தான். எங்கே,போனை எடுத்து அவனிடம் அனைத்தையும் கூறி விடுவோமோ என்று பயந்து அபர்ணா அவனின் அழைப்பை தவிர்க்க, அடுத்ததாக ஆத்மிக்கு அழைக்கலானான். 

இவள் என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் போதே, கீழே இருந்து வந்த “அப்பா” என்கிற அபர்ணாவின் அலறலில் கதி கலங்கிப் போய் நின்றுவிட்டாள் ஆத்மி. 

ஆத்மியின் அப்பாவிற்க்கு என்ன நேர்ந்தது?

தொடரும்…..