நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-21

சாரதாவின் வருகையில் அகமகிழ்ந்து போனார் அறிவு. அவருக்கு தனியாக வீடு, மருத்துவ வசதியுடன் இருக்க வேண்டும்.ஆதலால், நாளை வந்து அழைத்து போவதாக கூறியவறும் அவரிடம் விடைப்பெற்றுவிட்டு கிளம்பிவிட்டார்.

 

இங்கே, அன்றைய நாள் விடிந்த சில மணி நேரங்களாகியும் தேவ் மற்றும் ஆத்மி எழுந்துக்கொள்ளவில்லை, முதலில் கண்விழித்த ஆத்மி மெதுவாய் குளியலறைக்கு சென்று தனது தினசரி வேலைகளை முடித்துக்கொண்டும், குளித்துவிட்டும் வெளியே வர அவன் இன்னமும் உறங்குவதை கண்டவள்.

 

‘அப்பாடி, தூங்குறான் நாம கொஞ்ச நேரம் நிம்மதியாய் இருக்கலாம்’ என்று நினைத்தவள் கிட்சன் சென்று காப்பியோடு பிஸ்கட்டையும் உண்டவளுக்கு சற்றே தெம்பாகியதும். ‘எங்கயோ போகணும்னு சொன்னானே’ என்று நினைத்தவள். 

 

பின், அமைதியாய் சோபாவில் அமர்ந்துக்கொண்டாள்,சிறிது நேரத்தில் கண் விழித்த தேவ்  “மில்கி காப்பி” என்று சத்தமாய் குரல் கொடுக்க. அடித்து பிடித்து எழுந்தவள், பால் காய்ச்சி வைத்ததால் சட்டென காப்பியை கலந்து அவனுக்கு எடுத்து சென்றாள்.

 

“தாங்க் யூ ஸ்வீட்டி” என்றவன் அந்த காப்பியை இவளை பார்த்துக்கொண்டே ஒரு மிடறு குடிக்க  அவனின் பார்வை இவளுக்கு குளிரை கொடுக்க அங்கிருந்து அவள் நகர பார்க்க அவளின் கையை பிடித்து நிறுத்தியவன்.

 

“நீ ரொம்ப அழகா இருக்க” என்று கூறியவன் அவளின் கைகளை விட, அவன் தொட்ட இடமெல்லாம் பற்றி எறிந்தது ஆத்மிக்கு.

 

காப்பியை குடித்து முடித்தவன், “ஸ்வீட் ஹார்ட் பேஸ்ட், தங்கமே பிரஷ், செல்லமே டவல், மை டியர் பொண்டாட்டி சோப், ஷாம்ப்”என்று அவளின் பீபியை எகிற வைத்தான்.

 

இதெல்லாம் காதலித்து திருமணம் புரிந்த, அன்பான தம்பதிகள் பண்ணவேண்டியது தான், இவன் பண்ணியது தான் ஆத்மிக்கு எரிச்சலை உண்டாக்கியது.

 

ஒருவழியாக ஆத்மியை பாடாய் படுத்தி குளித்து, சீவி, சிங்காரித்து வெளியே வந்தவனும், “மில்கி, நீ எப்போ ரெடி ஆவ?”என்று கேட்க.

 

“எதுக்கு?” என்றாள் அவள் எரிச்சலோடு.

 

“எதுக்கா, நேத்தே சொன்னேனே வெளியே போறோம்னு”என்று யோசித்தவனும். “கிளம்பு”என்றான் அதிகாரமாக.

 

“அவள் வெளிப்படையாகவே “ம்ப்ச்”என்று சலித்துக்கொள்ள தேவிற்கு கோபம் வந்துவிட்டது.

 

“என் கூட வர்றதுக்கு உனக்கு அவ்ளோ கசக்குதோ, இங்க பாரு நான் உன் கிட்ட நல்லா நடந்துக்க தான் ஆசைப்படுறேன்,  நீதான் உன் மேல கோபம் வர வைக்குற” என்றான் கோபமாக.

 

அவள் அவனை முறைக்க, “போய் நல்ல சேரியா கட்டிட்டு வா, வெளியே போகணும்” என்றான்.

 

“இதுவே நல்லாத்தான் இருக்கு, எனக்கு பிடித்திருக்கிறது” என்றாள் அவள் பதிலுக்கு.

 

“உனக்கு பிடிப்பதை பற்றிய கவலை இங்கு யாருக்குமில்லை, இங்கு அனைத்தும் எனது விருப்பத்திற்கு தான் நடக்கும்”என்றான்.

 

“சரி தான், நீ சொல்றது உயிரற்ற பொருள்களுக்கு பொருந்தும்,நான் உயிருள்ள மனுசி” என்றாள் ஆத்திரமாக.

 

“அதுலாம் சாதரண மனுசனுக்கு, நான் அதில் அடங்கமாட்டேன்” என்றான் இவன்.

 

‘நீ மனுசன் லிஸ்ட்லையே வரமாட்ட” ஆத்மியின் மனது.

 

அவளின் மௌனத்தை பார்த்தவன், ‘இது வேலைக்காவாது’ என்று நினைத்தவன் அவளை அலேக்காக தூக்கி ரூமில் கொண்டு போய் விட்டவன் கதவை சாற்றிவிட்டு அவளுக்கென்று அவன் வாங்கிய உடைகளை ஆராய்ந்தான்.

 

அதில் இருந்து வானத்து ப்ளு கலரில் ஒரு சின்தடிக் புடவையை எடுத்தவன் அதற்கு மேட்சான கோல்டன் கலர் ஸ்லீவ்லெஸ் பிளவ்ஸையும் எடுத்தான். “இதை மாற்று” என்றான் அதிகாரமாக.

 

“என்ன நினைச்சுட்டு இருக்க நீ, புடவையெல்லாம் எனக்கு கட்ட பிடிக்காது, அதுவும் அந்த பிளவ்சை பாரு, நான் ஸ்லீவ்லெஸ்லாம் போடமாட்டேன்” என்றாள் தைரியமாக.

 

“சோ வாட், இனிமே போட்டு பழகிக்கோ, இங்க பாரு இந்த சோசைட்டில எனக்கு ஒரு பேர் இருக்கு, என் வைப் நீ பட்டிக்காடா இருக்குறது என் ஸ்டேடஸ்க்கு தான் அசிங்கம்”என்றான் அலட்சியமாக.

 

“என்ன ஸ்டேடஸ், பட்டிக்காடா? அப்போ நீ உன் ஸ்டேடஸ்லையே ஒரு பொண்ணை பார்த்து கட்டிக்க வேண்டியது தானே, எதுக்கு என் உசுரை வாங்குற?” என்றாள் கடுப்போடு.

 

“வெல், பார்த்தேன் பழகினேன், பிடிக்கலை”என்றான் அதே நிமிர்வோடு.

 

அவனின் அதிகாரத்தில் இவளுக்கு தன் கையறு நிலையை எண்ணி கழிவிரக்கம் வர கோபத்தில் அந்த புடவையை தூக்கி வீசியிருந்தாள்.

 

அதை கண்ட தேவின் கோபம் அதன் எல்லையை கடக்க,  அவளின் கன்னத்தில் ‘பளார்’ என்று அறைத்துவிட்டிருந்தான்.

 

அவள் கண்களில் பொறி பறக்க அதிர்ச்சியோடு அவனை பார்க்க, “என்னடி திமிரு உனக்கு எக்கச்சக்கமாக தான் இருக்கு, எவ்ளோ பட்டாலும் திருந்தமாட்ட அப்படி தான? எவ்ளோ திமிரு இருந்தா இப்படியெல்லாம் பண்ணுவ? உன்னை விட்டாதானே”என்றவன் அவள் உடுத்தியிருந்த  சேலையை உருவியிருந்தான்.

 

“மரியாதையா அதை கட்டிட்டு கிளம்பு, இவ்ளோ பண்ணவன் அதை பண்ணவும் எனக்கு தெரியும்!”

 

அதில் சற்று பயந்தவள்,” சரி… நா…ன் க…ட்…டிக்கி…றேன்”என்றாள் திக்கி.

 

“சரி, ஐஞ்சு நிமிஷத்துல வா”என்றவனும் அங்கேயே நிற்க.

 

அவனை இவள் பாவமாய் பார்க்க “நான் முதல் தடவை சொன்னப்போவே கட்டியிருந்தா போயிருந்திருப்பேன்…இப்போ நோ சான்ஸ்” என்று சட்டமாக நின்றுக்கொள்ள.

 

அவளும் கைகளை பிசைந்தவாறு நிற்க, “என்ன இப்போ நீ மாத்துறியா?…இல்லை…நானே” என்று அவன் முடிக்கவில்லை.

 

அவள் கண்களில் வடிந்த கண்ணீர் அவனுக்கு எதையோ நியாபகப்படுத்த, ஒன்றும் பேசாது வெளியேறிவிட்டான் அந்த அறையிலிருந்து.

 

நினைவுகள் எங்கெங்கோ சென்றது, அதை அப்படியே கிடப்பில் போட்டவன்,  அமைதியாய் சோபாவில் அமர்ந்தான்.

 

அவளும் கிளம்பி வர, அவளை அழைத்துக்கொண்டு காருக்கு சென்றவன், இருவரும் அமர்ந்ததும் கார் வேகம் எடுத்தது.(இன்று அவன் கண்கள் அவளை ரசிக்க மறந்துபோனதோ இல்லை மறைக்க வைத்ததோ)

 

 *********

 

தனிமையில் மருத்துவமனையிலிருந்த சாரதாவின் மனதில் அன்று அறிவழகனிடம் தைரியமாய் பேசிவிட்டு வந்ததும் , அதன் பின் அவர் அனுபவித்த வேதனையையும் நினைத்து பார்த்தார்.

 

அவ்வளவு தைரியமாக அவரிடம் பேசிவிட்ட வந்தவரின் நிலையும் தைரியமாகவே இருந்தது. சாரதா சற்றே மாறுப்பட்ட சிந்தனை உடையவர், பெண்ணியத்தை வாயால் மட்டும் பேசாது அதை மனதால் நினைப்பவர்.

 

அது சற்றே பழமைவாய்ந்த காலக்கட்டம் தான். ஒரு பெண்ணின் கற்பை சூறையாடியவனின் கால்களில் விழுந்து தன் பெண்ணுக்கு வாழ்கை கொடு என்று பெற்றோர் கெஞ்சும் காலக்கட்டமாகவே இருந்தது.அதை தான் சாரதாவின் தந்தையும் செய்தார்.

 

ஆனால் சாரதாவால் அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை, ஒரு காமூகன் தன் காம பசியை ஒரு அப்பாவி பெண்ணிடத்தில் தீர்த்துக் கொண்டான். அதே காமூகனுக்கு கட்டி வைத்தால் இன்னும் பல முறையில் அவன் காமப்பசியை அவளிடத்தில் தீர்த்துக்கொள்வானே அன்றி,அதில் காதல் கடுகளவேணும் இருக்குமா? பிறகு ஏன் அந்த தவறை செய்கின்றனர்?.

 

இங்கே, இவர் அறிவை காதலித்தார் தான், அந்த காதல் அன்றே செத்தும்விட்டிருந்தது. ஒரு பெண்ணை பழி வாங்க அவள் கற்பை எடுத்தால் போதும் என்று நினைக்கும் ஒரு கேவலமான பிறவியை எப்படி நான் ஏற்றுக் கொள்ள முடியும்?

 

நாளை திருமணத்திற்கு பின், அதே பழிவாங்குகிறேன் என்ற பேரில் மறுமுறை இவரின் கற்பு சூரையாடப்படுமே, ஆம், கற்பு ஒரு பெண்ணின் அனுமதியில்லாமல் பறிக்கப்படும் கற்பு இழக்கப்படவே மாட்டாது, அப்படி பார்க்கையில் அவரின் கற்பு பலமுறை பறிக்கப்படுமே, இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை சாரதாவிற்கு.

 

அங்கிருந்து வந்த சில நாட்களிலே இயற்கை எய்திவிட்டார் சாரதாவின் தந்தை. மகளின் நிலையை நினைத்து நினைத்தே மான்டுப்போனார் மனிதர். அவரின் இறுதி சடங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உதவினார் ரவி.

 

ஒரு மாதத்திற்கு பின், சாரதாவிடம் வந்தவர், “நான் உன்னை திருமணம் செய்துக்கொள்கிறேன்”என்று கூற.

 

ஏளனமாய் ஒரு சிரிப்பை உதிர்க்க.

 

ரவியும் “ஏன் சிரிக்கிறாய்”என்றார்.

 

“இல்லை ஆண் இனமே இப்படித்தானா?”என்றார் இகழ்ச்சியாக.

 

ரவியும் அவர் அறிவை குறிப்பிடுவதாக நினைத்து “அவன் கிடக்கான் அவனுக்காக உன் வாழ்க்கையையே அழிச்சிக்க போறியா? அது முட்டாள்தனம்”என்றார்.

 

“அவனா எவன் அவன், என் வாழ்வில் அவன் என்ற அத்தியாயம் முடிந்த கதை அந்த அவனில் நீங்களும் உள்ளீர்கள்”என்றார் வெடுக்கென.

 

ஒன்றும் புரியாது விழித்தவரும் “நான் என்ன செய்தேன்? என்னை வெறுக்கும் அளவிற்கு?”என்று கேள்வி எழுப்ப.

 

“ஏன் இல்லாமல் , உங்களின் ஒரு கேள்வி ‘நான் உன்னை திருமணம் செய்துக்கொள்கிறேன்”என்று இடைவெளி விட.

 

“ஆம், அதில் என்ன தவறு உள்ளது?”என்றார் ரவி.

 

“கேள்வியே தவறாய் உள்ளது, நான் உன்னை திருமணம் செய்துக்கொள்கிறேன், அதில் பல அர்த்தம் உன்டு  இனி எவனும் உன்னை கட்டிக்கிற மாட்டான், நானே கட்டிக்கிறேன்னு.” என்றவர் சற்று நிறுத்தி…

 

“ஏதோ போன போகுதுனு வாழ்க்கை கொடுக்கிற மாறி கொடுக்குறீங்க? நான் உங்க கிட்ட வந்து கேட்டேனா எனக்கு வாழ வழியில்லைனு, என்னை பொறுத்த மட்டில் நான் சுத்தமானவள், இப்போ உங்களை நான் திருமணம் செய்ய சம்மத்தித்தால் அது நான் கெட்டுப்போனவள்ன்னு நானே ஒத்துக்கிட்ட மாதிரி ஆகிடாது” என்றார் சின்ன சிரிப்புடன்.

 

ரவி “இல்…லை “என்று ஆரம்பிக்கையில் கை காட்டி நிறுத்தியவர், “எதுவும் சொல்ல வேண்டாம், என்னிடத்தில் வேறு பெண் இருந்தால் இதே கேள்வியை இப்படி கேட்டிருப்பீர்களா? என்று மட்டும் சொல்லுங்கள்?”என்று அவர் கேட்டிட.

 

தலை குனிந்துக்கொண்டார் ரவி, “அவ்ளோதான் போதும், உங்க அக்கறைக்கு நன்றி, சும்மா இல்லை நிறைய உதவி செஞ்சிருக்கீங்க அதை என்றும் மறக்க மாட்டேன், நான் இனிமே இங்க இருக்க பிரியப்படல நான் சென்னை போறேன். வரும் காலம் நம்மை சந்திக்க வைத்தால் அப்போ சந்திப்போம்” என்று முடித்துக்கொண்டவர் வீட்டை பூட்டிவிட்டு இரயில் நிலையம் நோக்கி தன் பயணத்தை துவங்கினார்.

 

சென்னை வந்தவர் ஒவ்வொன்றிற்கும் போராட வேண்டியிருந்தது, ஹாஸ்டல் தர மறுத்தனர், காலேஜில் பல தவறான கருத்துக்களை மாணவர்கள் பகிர்ந்துக்கொண்டனர். அவரின் தாலி இல்லாத கழுத்து ஒன்றே அவரின் நிலையை வார்த்தைகளால் வடிக்க முடியாதப்படி கூசும் சில பெயர்களை சாரதாவிற்கு வழங்கியது.

 

அத்தனையையும் தாங்கிக்கொண்டார் முதலில் இடத்தை மாற்றி பார்த்தவர். பின் உலகத்தின் எந்த எல்லைக்கு ஓடினாலும் இது சில கேள்விகள் தன்னை துரத்தத்தான் செய்யும் என்பது அவரை பயமுறுத்த,இதை கண்டு ஓடுவதிலும் பயனில்லை என்பது புரிய அதை எதிர்க்கொள்ள தயாரானார்.

 

இருந்தும் இளம் வயது, அவரின் இந்நிலையை கண்டு சில வக்கிரம் பிடித்த மனித மிருகங்கள் இவரை வேட்டையாட பார்க்க, சற்றே நிதானித்தவர், புதிதாய் ஒரு ஏரியாவில் ஆனாதை இல்லத்தில் தங்கியவர்,தனக்கு யாருமில்லை எனவும் கணவர் ஒரு விபத்தில் இறந்துவிட்டார் எனவும் கூறினார்.

 

அவர்களும் ஒரு நிறை மாத கர்பினையை அப்படியே விட மனமில்லாது அடைக்கலம் வழங்கினர்.அங்கேயும் அவரால் முடிந்தளவு வேலை செய்து தன் உணவை பார்த்துக்கொண்டவர் தேவ்வை பெற்றெடுத்தார்.

 

தனக்கு ஆண் மகவு என தெரிந்ததும், அவனை ஒழுக்கத்தில் சிறந்தவனாக வளர்த்து அவனின் தந்தை முன் நிறத்த வேண்டும் என இலட்சியம் கொண்டார்.அதற்காக உழைக்க வேண்டி தேவ் பிறந்த மூன்றே மாதத்தில் விட்ட படிப்பை தொடர்ந்தவர் தன் பிள்ளையிடத்தில் நேரம் செலவிட முடியாது போனது.

 

காலை செல்பவர் மாலை வரும்வரையில் அங்கிருந்த மூதாட்டியே அவனை பராமறித்தார்.

 

இரண்டு  வருடத்தை படிப்பில் செலவிட்டவர் பின் உடனடியாக வேலைக்காக சென்றுவிட்டார். 

அவரை பொறுத்தவரை அந்த இல்லமே அவருக்கு பாதுகாப்பாக பட்டதால்,அங்கேயே சிறிது காலம் தங்கினார். வேலை,டியூஷன் அதன் பின் ஆசிரமத்தில் வேலை என மிகவும் சிரமப்பட்டவரால் மகனை கவனிக்காமல் விட்டுவிட்டார்.

 

வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் தான் வாழ்வின் சோகமே அவரை ஆக்கிரமித்திருக்கும் எந்நேரமும் அமைதியாய் சோகமே உருவாய் அமர்ந்திருக்கும் தாயை காணும் தேவும் அவரை தேற்ற முயலும் போதெல்லாம் “கண்ணா, அம்மாவை தொந்தரவு செய்யாதே” என்பதோடு நிறுத்திக்கொள்வார்.

 

தேவின் உணவு, பராமரிப்பு அனைத்தும் அந்த மூதாட்டியே பார்த்துக்கொள்வதால் தன் கடமை செய்ய மறந்தார் சாரதா.

 

கண்டிப்புகள் ஏதுமின்றி வளர்ந்த தேவ்வும் சிறு பிள்ளையிலே அடங்காமல் இருந்தான்.  தனக்கு ஒன்று வேண்டுமென்றால் அதை உணவு உண்ணாமல் இருந்து வாங்கிக்கொள்ள பழகிக் கொண்டான்.

 

அந்த மூதாட்டியும் இவன் உணவு உண்ணாததை கண்டு அவனின் தாயிடம் ஏதோ சொல்லி பணத்தை வாங்கி இவன் கேட்பதை வாங்கிக்கொடுத்துவிடுவார்.

 

அந்த மூதாட்டியின் இறப்புக்கு பின், தாயிடம் தஞ்சம் புகுந்த தேவிற்க்கு ஒவ்வொன்றையும் போராடி பெற வேண்டியிருந்தது. 

 

அந்த மூதாட்டியை போல் இல்லாது சாரதா இவனை கண்டித்ததில் தேவ்வின் மனம் அடிப்பட்டு போனது.தனக்காக யாருமில்லை, தன் மேல் அன்பு செலுத்த யாருமில்லை என நினைக்க வைத்தது.அதுவே ஒரு பெரிய முடிவையும் எடுக்கவைத்தது.

***********