நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-22

அவனின் அந்த பெரிய முடிவு என்பது “என்னை ஹாஸ்டலில் விடுங்கள்”என்பதே.

 

வருடத்திற்கு ஒருமுறையே இவனை சுற்றுலாவிற்கு அனுப்பி வைப்பார் சாரதா.பெரும்பாலும் அது இரண்டிலிருந்து மூன்று நாட்கள் இருக்கும்.அப்படி ஒருமுறை ஊட்டி சென்ற போது தான் மூன்று வயது சிறுமியாக ஆத்மியை இவன் பார்த்தது.

 

அதற்கே மகனை தேடி விடுவார் சாரதா.மகனை அவர் கவனிக்காத போதிலும், அவனை இவர் விலக்கி வைக்க நினைக்கவேயில்லை. தன் கண் பார்வையிலே மகன் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்.

 

அதை கேட்டு கடுப்பின் உச்சத்திற்கு சென்ற சாரதாவும் மகனை அடி வெளுத்துவிட்டார், அந்த அடிகளை பெற்றுக்கொண்டவனும் அசையாது நிற்க, அதிசயித்து தான் போனார் சாரதா.

 

‘தான் அவனை கவனிக்கவில்லை’ என்று மனது காலம் கடந்து உரைக்க, முதல் முறை மகனுக்கு தான் வழிக்காட்ட தவறியது புரிந்தது.சிறு பிள்ளை இவன்.

 

இவனுக்கு இப்பொழுது என்ன தேவை? உண்ண உணவு இருக்க வீடு அவ்ளோதனே என்று தான் விட்டுவிட்டார்.ஆனால் சிறு வயதில் தான் ஒரு பிள்ளைக்கு திருக்குறள்,ஆத்திச்சூடி  போன்ற இலக்கியங்கள் அவர்களை நேர்வழிப் படுத்த போதிக்கப்படுகிறதே என்று ஒரு ஆசிரியர் மறந்தது தான் விந்தையோ?

 

சாரதாவின் அடிகளை பெற்றுக்கொண்டவன் அமைதியாய் சென்று அறையில் அமர்ந்துக்கொண்டான்.

 

இவரும் சரி, விட்டுப்பிடிப்போம் என்று விட்டுவிட, அவனும் பிடிவாதத்தின் உச்சத்தில் இருந்தான், உணவு என்பதை முழுவதுமாக தவிர்த்தான், அவனது தாயும் ‘பசி வந்தால் சாப்பிடுவான்’ என்று விட்டுவிட.பாவம் அவருக்கு யார் சென்று சொல்வது இவன் பிடிவாதத்தின் மறு உருவம் என்று.

 

முதல் நாள் தண்ணீரை மட்டும் எடுத்துக்கொண்டவன், உணவை முழுவதும் துறந்திருந்தான், மறுநாளும் இந்நிலை தொடர, தண்ணீரையும் மறுத்து விட்டிருந்தான்.சாரதாவிற்கு மனது கிடந்து அடித்துக்கொண்டது.

 

அன்றைய மாலையே மயங்கியிருந்தான் தேவ்,  அடித்துப்பிடித்து அவனுக்கு முகத்தில் தண்ணீரை அடிக்க, சிரமப்பட்டு கண் விழித்து பார்த்தவனும் தண்ணீரை குடிக்க மறுக்க, ஆத்திரம் வந்தது சாரதாவிற்கு. இருப்பினும்  ஏற்கனவே உடல்நிலை குன்றிய மகனை ஒன்றும் செய்யாது விட்டவர்

 

சில பல யோசனைகளுக்கு பிறகு அவனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.அதன்படி மிகவும் கடுமையான சட்டத்திட்டங்களை பின்பற்றும் ஒரு விடுதியை தேர்ந்தெடுத்தவர் அவனை அதில் சேர்க்க, முதலில் சந்தோஷமாய் போனவன், சாரதாவின் நினைவுகள் வாட்டும்போது சாரதாவிடம் தொலைப்பேசி உரையாடல் வைத்துக்கொள்வான் அதில் அவனது தேடலை உணர்த்துவான் தேவ், ஆனால் சாரதா கடமைக்கே என்று பதில் உரைப்பார். (அப்படித்தான் ஒரு நாள் சாரதாவிடம்  பேசும்போது அவர் வழக்கத்திற்கு மாறான உற்ச்சாகத்தில் இருந்தது)

 

நாட்கள் ஆக ஆக அங்கிருந்த சட்டத்திட்டத்தை பார்ந்து பயந்தது உண்மை, இருந்தும் அதை ஏற்றுக்கொண்டு பின்பற்றினால் அவன் தேவ் அல்லவே.

 

இதன் விளைவே, சாரதாவிற்கு தன் மேல் துளியும் பாசம் என்பது இல்லை என்று ஆணித்தரமாக நம்ப வைத்து, அங்கிருந்த மற்ற பிள்ளைகள் அவர்கள் தந்தையை பற்றி கூறியபோது தனக்கும் ஒரு தந்தை இருப்பார் என்றும் அவரை காண வேண்டும் என்றும் ஏக்கம் கொண்டான்.

 

அந்த வருடம் காலாண்டு விடுமுறைக்கு வீட்டிற்கு வா என்று அவனை சாரதா அழைக்காததில் கடுப்பில் இருந்தவன், விடுமுறை அறிவித்த அன்று ஹாஸ்டலில் இருந்து கிளம்பிவிட்டான் இனி திரும்ப வரமாட்டேன் என்று.

 

**************

அவன் சென்று இறங்கிய இடம் சாரதாவின் சொந்த ஊர்.

 

அவனின் தேடல் அவனின் தந்தை. சாரதாவின் அன்றைய பேச்சிற்கு பின் ரவி அவரிடம் அப்படி கேட்டது தவறு என்று புரிந்து அவரை பல நாள் தேடியதின் பயன் அவர் சென்னையிலிருப்பது தெரிந்து, ஒரு முறை கடிதம் எழுதியிருந்தார் அதை பெற்றவன் தேவ் அதிலிருந்த முகவரி அவன் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்ததால் அவரை தேடி வந்துவிட்டான்

ஏனென்றால் அவனுக்கே அவன் தாயை பற்றி சரியாக தெரியாத பொழுது அவரின் உறவுகளை எப்படி அறிவான்.தன் தாயிற்கென யாருமில்லை என அவனிடம் சொல்லி வளர்க்கப்பட்டதால் முதன் முறை வந்த கடிதத்தால் சற்றே சந்தோஷம் அடைந்தான் தேவ். அந்த கடிதத்தை சாரதா பிடிங்கிய விதமே இவனுக்கு ஏதோ பிடிப்பட்டது.

 

அந்த ஊரை அடைந்தவன் விலாசத்தை விசாரித்து ரவியையும் கண்டுக்கொண்டான் அவனின் மனதில் இவர் தான் தன் தந்தையோ? என்று ஒரு சிறு விதை விழுந்திருந்தது.அவரை சந்தித்தவன் தன்னை சாரதாவின் மகன் என்று அறிமுகப்படுத்த அகமகிழ்ந்து போனார் ரவி.

 

 நல விசாரிப்புகள் ஆரம்பிக்க,  பின்,”உன் அம்மா எப்படி இருக்கிறார்” என்று ரவி கேட்க.

 

“ம், அவங்களுக்கு என்ன சந்தோஷமா இருப்பாங்க ” என்றான் இவனும் சலிப்பாக.

 

அவனின் பதிலில் இவரது சிந்தனை ரேகைகள் பல விதமாக செல்ல பின் நிதானித்து “என்ன விஷயமா வந்திருக்க?” என்று அவர் கேட்டிட.

 

“என் தந்தையை தேடி” என்றான் அவனும் அவனின் நோக்கத்தை உணர்த்த.

 

“அது எதற்கு உனக்கு? புதைந்ததை தேடி எடுக்க முயற்சிக்காதே” என்றார் காட்டமாக.

 

“ஏன் கேட்கக்கூடாது, அவர் என் தந்தை, அவரை பற்றி அறியும் உரிமை எனக்கு உள்ளது”என்றான் இவன் பிடிவாதத்துடன்.

 

பதினாறு வயதே ஆன தேவ்வின் இப்புத்திக்கூர்மை, ரவியை மலைக்க வைத்தது. இருப்பினும்  சாரதா இவனிடம் கூறாத ஒரு விஷயத்தை தான் கூறவும் அவர் பிரியப்படவில்லை.சற்றே நிதானித்தவர் பின்.

 

“தம்பி, உன் தந்தையை பற்றி எனக்கு தெரியாது பா, இரண்டு நாள் இங்க இருந்திட்டு ஊருக்கு போகிற வழியை பார்” என்றிட.

 

அவன் எவ்வளவோ கெஞ்சியும் அவர் எதையும் உரைக்காது விடவே, மனம் தளர்ந்தவன் சற்று யோசித்து, “சரி, என் தாயின் வீட்டை காட்டுங்கள் நான் அங்கு இருந்துக்கொள்கிறேன்” என்றான்.

 

நன்றாக யோசித்தவர் அவனை அங்கு விட்டார். அவர் போனதும் சற்றே சிந்தித்து அக்கம் பக்கத்தில் அவன் விசாரித்ததில் அவர் பெயர் அறிவழகன் என்பது பிடிப்பட ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையை கூற, எது உண்மை எது பொய் என தெரியாது அவன் விழி பிதுங்கி சற்றே யோசித்து தன் தந்தை தவறானவன்  என்கிற முடிவை எடுத்திருந்தான்.

 

இப்பொழுது அவரை அவன் தேடி அவரது இல்லத்து முகவரியை அடைய, அங்கே ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் இவன் விசாரிக்க அவரோ அறிவழகனின் பெயரை கேட்டது முதல் அழுகத்துவங்கினார்.

 

சற்று நேரம் அழுது முடித்தவர் அவர்களது வாழ்வை புரட்டிய சம்பவத்தை கூறினார்.

 

அறிவழகனின் தமக்கைக்கு திருமண ஏற்பாடு நடந்தது.திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் உனக்கு நகை வாங்கி தருகிறேன் என்று  வெளியே அவரது தமக்கையை அழைத்து சென்ற அறிவழகன் மற்றும் அவரது தமக்கைக்கு கோர விபத்து நடக்கவே, அந்த விபத்தில் அறிவழகனின் பாதி முகம் சிதைந்துவிட அவரது தமக்கைக்கு இடது கால் பறிப்போயிருந்தது. மிகவும் போராடி அவர்கள் இருவரையும் பிழைக்க செய்தனர் மருத்துவர்கள் .இத்திருமணம் வேண்டாம் என்று மாப்பிள்ளை மறுக்க துடித்துவிட்டனர் மகளை பெற்றவர்கள்.

 

அடுத்தடுத்து மாப்பிள்ளை வீட்டாரும் பெண்ணை மறுத்துவிட்டு செல்ல அந்த குற்ற உணர்ச்சி வேறு அறிவழகனை வாட்ட.ஒரு கட்டத்திற்கு மேல் இனி எனக்கு வரன் பார்க்காதீர்கள் என்று அவரது தமக்கையும் திட்டவட்டமாக மறுத்துவிடவே. மொத்தமாய் உடைந்துப்போனார். ஆப்பரேஷன் மூலமாக ஒர் அளவுக்கு அவரது முகத்தை சரி செய்தனர் ஆனால் முழுவதுமாக முடியவில்லை அவரது முகத்தை அவருக்கே பார்க்க பிடிக்கவில்லை.

 

நாளாக, நாளாக விரக்தியின் உச்சதிற்கு சென்றவரால் சரியாக உண்ண முடியவில்லை, உறங்க முடியவில்லை, பெண் பாவம் பொல்லாதது என்பது அவருக்கு சற்றே காலத்தாமதமாக புரிய அங்கிருப்பது முள்ளின் மேல் இருப்பது போல் இருக்க மிலிட்டரிக்கு ஆள் எடுப்பது தெரியவந்ததும் சென்று விட்டார்.அன்று சென்றவர் வரவேயில்லை என்னும் செய்தியை உரைத்தார் அவரது சகோதரி.

 

அதன் பின் ஒன்றும் பேச விரும்பாது மறுபடியும் தன் தாயிடம் திரும்பியிருந்தான் தேவ், தனக்கு யாரும் வேண்டாம் என்றும் எனக்கு நானே என்றும்!

 

ஊருக்கு வந்தவன் இனி தான் எங்கும் செல்லமாட்டேன் என்று அடாவடியாக உரைத்தவன் அதன்பின் நன்றாக படித்தான், தாயிடம் பேசிக்கொண்டது கிடையாது  ஆனால் வளர வளர தனி ஒரு பெண்ணாக தன் தாய் எவ்ளோ கஷ்டப்பட்டார் என்பது புரிய அவரின் மேல் மரியாதை வந்தது ஆனால் பேசிக்கொண்டது கிடையாது.

 

*************

அவன் கொடுத்த சேரியை அணிந்தக்கொண்டு அவள் தயாராகி வரவே, அவளின் அழகை மெச்சிக்கொண்டவனும் அவளுக்கு இணையாக தயாராகி வந்து காரில் ஏறினான்.

 

கார் மெதுவாக ஊர்ந்துச்செல்லவே, எப் எம் ஐ ஆன் செய்ய ராவணண் படத்திலிருந்து உசுரே உசுரே போகுது உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே என்கிற பாடல் ஒளிப்பரப்பாக.

 

ஒடம்பும் மனசும் தூரம் தூரம்

ஒட்ட நினைக்கேன் ஆகல

மனசு சொல்லும் நல்ல சொல்ல

மாய ஒடம்பு கேக்கல

தவியா (ஹோ ஹோ..)

தவிச்சு (ஹோ ஹோ..)

உசிர் தடம் கெட்டு திரியுதடி (ஹோ ஹோ..)

தையிலாங் குருவி (ஹோ ஹோ..)

என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி (ஹோ ஹோ..)

 

இந்த மம்முத கிறுக்கு தீருமா

அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா

என் மயக்கத்த தீத்து வெச்சு மனிச்சிருமா

 

அந்த பாட்டை அவனும் சேர்ந்து முணுமுணுக்க அவள் அவனை உக்கிரமாய் முறைக்க.

 

“எனக்குனே எழுதியிருப்பாங்க போல” என்றான் அவளை பார்த்தபடி பின் சற்று இடைவெளி விட்டு “கடத்துறது ஒரு கிக்குதான் இல்ல…” என்க.

 

அதற்கும் அவள் ஒன்றும் கூறாது இருக்கவே, அவளை இன்னும் கடுப்பாக்க எண்ணி “உன்னை நான் பேசாம கடத்தியிருக்கலாம்” என்றான் அவளை பார்த்து.

 

அவளது மனது மற்றும் ‘இப்போ மட்டும் என்ன டா நீ பண்ணிருக்க?’ ஊமையாய் பிதற்றியது.

 

“இப்போ நம்ம எங்க போறோம் தெரியுமா?” என்றான் பீடிகையுடன்.

 

அவள் அவனை புரியாது பார்க்க “உன்னை மாதிரியே இன்னொரு பெண்ணை கடத்தியிருக்கேன் அவளை பார்க்கத்தான் உன்னை கூட்டிட்டு போறேன்”என்றானே பார்க்கணும்.

 

கண்கள் கலங்கியது ஆத்மிக்கு ‘தன்னை போல் இன்னொருத்தியா, தன் நிலைமையே அவளுக்குமா, தான் பட்டது பத்தாதா ?’ என்று பலவாறு கேள்வி கேட்டது.

 

அவளது கலங்கிய முகத்தை பார்த்து சிரித்தவன் “இப்போதான் நீ அழகா இருக்க”என்றான் அந்த கயவன்.

 

அந்த ஆடம்பர ஹோட்டலிற்கு முன் அந்த கார் கீரிச்சு என்ற சத்தத்துடன் நிற்க, அதில் இருந்து முதலில் இறங்கிய தேவ் மறுப்பக்கம் வந்து ஆத்மிக்கு கதவை திறந்து அவளது விரல்களை பற்றியவன்.’ வெளியே வாங்க ஹனி” என்றான் மென்மையாக.

 

அவள் பேந்த பேந்த விழிக்க, ஒரு காலை தரையில் அந்த ரெட் கார்பெட்டில் வைக்க அவள் முழுவதுமாய் வெளியே வந்ததும் அவளது வெற்றிடையை தன் கரங்களால் தழுவிக்கொண்டவன். அவளோடு மெல்ல நடையிட்டு வாசலில் கால் வைக்க பூக்கள் அவர்களின் மேல் தூவப்பட்டது.

 

ஆத்மியின் முகம் பயத்தில் வெளிற, “மூஞ்சிய கொஞ்சம் நல்லா வெச்சுக்கோ” என்று அவன் அடிக்குரளில் சீற, சிரிக்க முயற்சி செய்தும் அவளால் முடியவில்லை.அவளின் இடையில் அவன் அழுத்தத்தை அதிகரிக்க அதில் அவனது கோபம் புரிந்து மெல்லியதாய் புன்னைக்கத்தாள்.

 

உள்ளிருந்து சில வெள்ளை வேட்டி ஆட்கள் பொக்கேவோடு வந்து இவர்களை வரவேற்க. அதை அனைத்தையும் புன்னைகையோடு பெற்று அவனது பாதுகாவலனிடம் கொடுத்தவன். பின், மறுபடியும் அவளை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல.

 

அங்கே இவனின் அரசியல் வட்டாரத்தாரால் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,மது, மாது போன்ற அனைத்து கேளிக்கைகளும் அங்கு இருக்க, அதில் ஆச்சரியம் என்னவென்றால் அங்கே அத்துனை வெள்ளை வேட்டிகளின் மனைவியும் இருந்தனர். அவர்களும் எதையும் கண்டு கொள்ளாது பார்ட்டியை என்ஜாய் செய்தனர். .அந்த இடம், மதுவின் வாடையில் நிரம்பி இருக்க குமட்டிக்கொண்டு வந்தது ஆத்மிக்கு.

 

அனைவரின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டவன்,பின் மரியாதைக்காக ஒரு பீரை கையில் எடுத்துக்கொண்டு அதை அருந்தாமல் அவர்களோடு சென்று கதைக்க ஆரம்பித்துவிட்டான்.

 

இவளுக்கு தான் தனியே வெளியே ஓடி விடலாம் போல் இருந்தது. அதில் அங்கிருந்த ஒரு சிலரின் பார்வை வேறு அவளை கிலி பிடிக்க செய்வதாய் இருக்க, மனதில் தேவ் என்கிறவனை வதம் செய்தவள் அமைதியாய் அவர்களை பார்வையால் முறைத்துக்கொண்டும் இருந்தாள்.

 

திடீரென ஒரு கரம் அவளது தோளில் படிய அந்த கரத்தை தட்டிவிட்டவள் கோபமாய் திரும்பி அவனை அறைந்திருந்தாள்.

 

அங்கு அவளைவிட கோபமாய் தேவ் நிற்க அவனது அந்த அரசியல் வட்டாரமோ அவனை கண்டு சிரிக்க அவமானத்தில் கண்கள் அவனுக்கு இரத்தமென சிவக்க .

 

“என்னப்பா உன் பொண்டாட்டி நீ கையை வச்சதுக்கே இப்படி அடிக்குது” என்றார் ஒருவர்.

 

“அப்போ நீ பண்ணுறது எதுவும் சரியில்லை போலயே” என்றார் இன்னொருவர்.

 

“அந்த பிள்ளைக்கு உன்னை பிடிக்கலையோ”என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் நகைக்க ஆத்திரத்தில் வெடித்தவன் அவளது கைகளை வன்மையாய் பற்றி டேன்ஸ் ஆடும் இடத்திற்கு அழைத்து சென்றவன்.

 

“காய்ஸ், ஒன் செக், இந்த பார்ட்டீல இப்போ டான்ஸ் டைம், இந்த டான்ஸ்ல என்னோட மற்றும் என் மனைவியோட கெமிஸ்ட்ரி எப்படி இருக்குணு நீங்க சொல்லுங்க” என்றவன் பின் “மியூஸிக்” என்றான் கர்ஜனையாக.

 

*********