நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-25

அவனின் அழுத்தமான எதற்கு என்ற கேள்வியில் அவனை கண்டுக்கொண்டவர். “நீ சாரதாவின் மகன் தானே?” என்றார் துடிப்பாக

 

“ம்ப்ச், நான் கேட்டதுக்கு அது இல்ல பதில்”என்றான் இவனும்.

 

ஒரு நிமிடம் யோசித்தவர் ” நான் பண்ணிய துரோகத்திற்காக”என்றார் குரல் தாழ்த்தி.

 

இவனது சிந்தனையில் பல கேள்விகள் அவனுடைய சிறு வயதிலிருந்து அவன் தேடிய வினாக்கான விடை கிடைக்கும் தருவாயில் அதை விட்டு கொடுக்க அவன் விரும்பவில்லை. “என்ன துரோகம்?”என்று துனிந்து கேட்டுவிட்டான் தேவ்.

 

“உன்னிடம் உன் தாய் கூறவில்லையா?”என்றார் அவர்.

 

“சொல்லியிருந்தா ஏன் உங்க கிட்ட கேட்கிறேன்?”என்றான் தேவ்.

 

மனது வலித்தது அவருக்கு… என்னவென்று சொல்வார்? சாரதா இத்தனை பெரிய தண்டனையை வழங்கியிருக்க வேண்டாம், தான் செய்த தவறை தானாய் தன் மகனிடம் உரைக்கவேண்டுமாம், அது எப்படி முடியும்? சொல்ல முடியும் பாவமா அது. இருந்தும் பண்ணிய பாவத்தை மறைக்க முடியாதே. ஒரு முடிவு எடுத்தவராக அனைத்தையும் கூறி முடித்தார் அறிவு.

 

அனைத்தையும் கேட்டவனின் கண்கள் இரத்தமென சிவக்க, கை முஷ்டியை இருக்கியவன் அவரை அடிக்க போகையில் சாரதா வந்து தடுத்துவிட்டார்.

 

“நடுரோட்டில் நின்று இப்படித்தான் நடந்துக்கொள்வாயா? வீட்டுக்கு வா,” என்று தேவ்வின் கை பிடித்து அழைத்து சென்றவரின் பின்னாலேயே அறிவழகனும் வந்தார். இவர்கள் உள்ளே செல்ல வாசலிலே நின்றுக்கொண்டார் அறிவழகன்.

 

தேவ்வை உள்ளே விட்டுவிட்டு நான் பேசிக்கொள்கிறேன் நீ அமைதியாய் இரு என்று உரைத்தவர். வெளியே வந்தவராக” என்ன வேண்டும்?” என்றார்.

 

“சாரதா, நான் பண்ணின பாவத்திற்கு மன்னிப்பு எனற ஒரு வார்த்தையில் மன்னிப்பு கேட்டா அது போதாதுன்னு எனக்கு தெரியும்.அதுக்கான தண்டனையும் எனக்கு கிடைச்சிடுச்சு” என்றார்.

 

அவரை சாரதா புரியாமல் பார்க்க, இராணுவத்தில் நடந்த குண்டு வெடிப்பில் தனது செவி திறன் பாதிக்கப்பட்டதாகவும், இப்பொழுது மிஷின் உதவியுடன் ஒரு காது மட்டுமே கேட்கும் எனற உண்மையை அவர் பகிற.அதை எந்த உணர்வும் இல்லாமல் கேட்டுக்கொண்டார் சாரதா.

 

அவர் மேலும் தொடர்ந்தார், ” உனக்கு செய்த பாவத்திற்கு நான் நன்றாக அனுபவித்துவிட்டேன், நீயும் என்னை மன்னிச்சுடேன்னா…”என்ற எதிர்பார்ப்போடு அவர் முகம் கண்டார்.

 

ஒரு நிமிடம் நிதானித்த சாரதா ” அந்த தவறின் அளவை பொறுத்து தான் அதற்கான மன்னிப்பு, செய்த தவறுக்கு மனம்திருந்தி, உண்மையில் வருத்தப்படுபவர்களுக்கு தான் மன்னிப்பு, இப்போ நீங்க என்கிட்ட கேக்குறது உண்மையான மன்னிப்பில்லை, அடுத்தடுத்து உங்க வீட்டுல நடந்த இழப்பிற்கு எனக்கு நீங்க இழைத்தது தான் காரணம்னு நீங்க நினைக்குறீங்க,அது தான் உங்கள் பேச்சில் எதிரொலிக்குது.”என்றவர் சற்று நிறுத்தி.

 

“நீங்க எனக்கு பண்ணின பாவத்திற்கான சாட்சி தான் தேவ், நான் நினைத்திருந்தால் அன்றே இவன் உங்க பையன்னு நிருப்பிச்சிருப்பேன், நான் அதை செய்யலை, உங்க கிட்ட வளர்ந்தா அவனை எப்படி வளத்திருப்பீங்கனு எனக்கு தெரியாது, நானுமே அவனை சரியா வளக்கலை அது உண்மைதான். ஆனால் குறைந்தபட்சம் அவன் என்கூட வெச்சிருந்தேன், நீங்க அதை பண்ணியிருப்பீங்களா?” என்று கேள்வியோடு நிறுத்த.

 

தலை கவிழ்ந்துக் கொண்டார் அறிவழகன். உங்களை மன்னிக்க நான் கடவுள் அல்ல, உங்களை தண்டிக்கவும் நான் கடவுள் அல்ல. நமக்கு மேல ஒரு சக்தி இருக்குணு நான் நம்புறேன், அதுனால தான் இது நாள் வரை நான் கடவுளை மட்டுமே நம்பி வாழ்ந்தேன், இனியும் அப்படியே வாழ்வேன், நீங்க போகலாம்”என்றார் அழுத்தம் திறத்தமாக.

 

அவர் ஏதோ சொல்ல வர கை நீட்டி அதை தடுத்தவர்,

 

“தேவ்வை உங்க கிட்ட கொடுக்கணும்னு நான் நினைத்தேன் தான் அது கூட இத்தனை வருடத்தில் நீங்க மனம் திருந்தி,உங்கள் தவறை உணர்ந்து என் மகனை என்னிடம் கொடுனு கேட்டா மட்டும் தான், எந்த வாயால அவன் உங்க மகன் இல்லைனு சொன்னீங்களோ அதே வாயால அவனை உங்க மகன்னு சொல்லி கேட்டிருந்தா கொடுத்திருப்பேன், ஏன்னா அது தான் எனக்கான அங்கீகாரமா இருந்திருக்கும். என் மேல் விழுந்த பழி சொல்லை அது துடைத்திருக்கும் இது என்னோட சுயநலம் தான் இல்லைங்கல ஆனால் அதில் தப்பில்லையே…

 

ஊருக்கு பயந்து, உலகிற்கு பயந்து, கழுத்தில் தாலி இல்லாது வயிற்றில் கருவை சுமந்து ஒளிந்து வாழ்ந்த வாழ்வில் என்ன இன்பம் கண்டேன், வேதனை மட்டுமே கண்டேன், அந்த வேதனையை இது முழுவதுமாக போக்காது தான், குறைந்தபட்சம் அது சிறு நிம்மதியை எனக்கு வழங்கியிருக்கும், அது கூட எனக்கில்லைனு கடவுள் எழுதிட்டாரு போல…

 

“இத்தனை வருடம் அவனை வளர்த்துவிட்டேன், அவனிடம் ரொம்ப பாசம் காட்டி வளர்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை, ஏன்னா உங்களை கூட உங்க வீட்டில் பாசமாத்தானே வளர்த்தாங்க? நீங்க ஒழுங்கா இல்லையே? பாசத்தோடு கண்டிப்பும் அசைவையும் ஒவ்வொரு குழந்தைக்கும் அது எனக்கு இப்பொழுது புரிகிறது தவறு தான் காலம் கடந்த ஞானம் தான் இல்லைங்கல, கடந்தது போகட்டும், இனிமே என் புள்ளையோடு அழகான பாசமான வாழ்வு வாழ ஆசைப்படுகிறேன். அது மட்டும் போதும் எனக்கு” என்று முடித்துக்கொண்டவர் உள்நோக்கி நடந்தார்.

 

அங்கேயே சிறிது நேரம் நின்றார், அறிவழகன். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த தேவ் அங்கு அறிவழகனை கண்டு மேலும் கடுப்பாகி அவரிடம் சென்றவன் ” மரியாதையா போ, ஆனா நீ எங்க போனாலும் உன்னை நிம்மதியா விட மாட்டேன், உனக்கு இருக்கு”என்று அடிக்குரலில் சீற.

 

இதை கவனித்துவிட்ட சாரதா, ” தேவ் ஏன் இப்படி பேசுற இதுலாம் தப்பு, அவர் அவர்…”என்று தடுமாற.

 

“போதும்மா இந்த ஆளை என் அப்பான்னு மட்டும் சொல்லாதீங்க, அதை என்னால கேட்கமுடியாது, என்னை பொறுத்தவரை எனக்கு நீங்க மட்டும் தான், என்னை வேண்டாம்னு சொன்ன இந்த ஆளு எனக்கு மட்டும் எதுக்கு? நீங்க எப்படி மா என்னை அவன் கிட்ட கொடுப்பேன்னு சொல்லலாம்? கேட்டா கொடுத்திருப்பீங்களா? அப்படி என்ன உங்களுக்கு நான் கஷ்டத்தை கொடுத்திட்டேன்?”என்றான் வேதனையுடன்.

 

“ஐயோ தேவ்” என்று சாரதா பதற.

 

“இல்லை மா , நீங்க பேசுறதுல எனக்கு உடன்பாடு இல்லை, அப்போ எப்போ வேணும்னா இவனை கொடுக்கவேண்டி வருமோன்னு தான் என் கிட்ட நீங்க பாசம் காட்டலை அப்படித்தானே? இவன் கிட்ட நீங்க என்ன கொடுக்க நினைச்சதுக்கு, என்னை நீங்க ஆசிரமத்துல விட்டுருக்கலாம் அனாதையாக வளர்த்திருப்பேன்”என்றான் வேதனையின் பிடியில்.

 

“ஐயோ தேவ் தப்பு தான்பா மன்னிச்சிடு, அம்மா பண்ணுனது எல்லாம் தப்பு தான்” என்று சாரதா கதற அவரை அறிவு தேற்ற முயல.

 

“யோவ், நீ பேசாத நானும் எங்க அம்மாவும் பேசிட்டு இருக்கோம், நீ யாரு இடையில? இப்போவும் சொல்றேன் உன்னை விட மாட்டேன், சும்மா விடமாட்டேன்”என்றான் கண்களில் ரௌத்திரத்தோடு.

 

“தேவ் இல்லை அப்படி சொல்லாதா தண்டிக்க நம்ம யாரு? அதுக்கு கடவுள் இருக்காரு, நீ அவரை தண்டிக்க போன அவருக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் இருக்கும் வேண்டாம் பா, அம்மா சொன்னா கேளு” என்று சாரதா கெஞ்ச.

 

“இல்ல நான் யாரு சொல்றதையும் கேட்கமாட்டேன்,” என்று தேவ் பிடிவாதமாக இருக்க.

 

“அப்போனா சரி, அவர் இந்த வீட்டுல தான் இருப்பாரு, நீ அவரை எதாவது பண்ணனும்னா நான் செத்ததுக்கு அப்றம் பண்ணு” என்று சாரதா அழுத்தமாக கூற அதிர்ந்துவிட்டான் தேவ்.பின் கையை ஓங்கி சுவற்றில் குத்தியவன் உள்ளே சென்றுவிட.

 

சாரதா அறிவை பார்த்தவர், “தேவ் மேல் எனக்கு நம்பிக்கையில்லை உங்களை வேறு ஊரில் விட்டு உங்களுக்கு ஏதாச்சும் ஆனா நான் அதை பண்ணவேயில்லைனு சாதிச்சு உங்களை எதாவது பண்ணிடுவான், இப்போ கூட என் பையன் மேல எந்த பழியும் வரக்கூடாதுனு தான் உங்களை இங்க தங்க சொல்றேன், தேவ் கோபக்காரன் கோபத்தில் எதாச்சும் பண்ணி அவன் பேரு கெடுறதை நான் விரும்பல. இதுவும் சுயநலம் தான் ஒரு தாயின் சுயநலம்.நீங்க இங்க இருக்குறதும் இல்லாததும் உங்க விருப்பம், அதுக்காக நான் உங்களை ஏற்றுக்கொண்டேன்னு மட்டும் நினைக்க வேண்டாம்”என்று உரைத்தவர் சென்று விடவே.

 

சற்று நேரம் யோசித்த அறிவழகன், இங்கிருந்து கொஞ்சமாவது பாவமன்னிப்பு தேடுவோம் என்று தங்க ஒத்துக்கொண்டார். அதன் பின் சாரதாவால் இயல்பாக இருக்க முடியவில்லை எவ்வளவு முயன்றும் அவர் அறிவை காணும்போது வெறுப்பு உண்டானது.இதை கவனித்த தேவ் தான் “எதுக்கு நீங்க உங்களையே கஷ்டப்படுத்திகிறிங்க அந்த ஆளை வெளியே அனுப்புங்க”. அதிலிருந்து சாரதா சற்றே கவனமாய் அவன் முன் அறிவழகனிடம் ஒரிரு வார்த்தை பேச பழகிக்கொண்டார். அது தேவ்விற்கு சுத்தமாக பிடிக்கவில்லை அவன் வெளிப்படையாகவே அதிருப்தியை காட்டினான்.

 

தான் அறிவிடம் ஒழுங்காக நடந்துக்கொண்டால் தேவ்வின் கோபம் குறையும் என்று நினைத்தார் சாரதா. ஆனால் அது அதிகரித்துக்கொண்டே போனது. முதலில் படித்து முடித்து வேறு ஊருக்கு செல்ல வேண்டும் என்று படித்ததும் கொல்கத்தா பறந்துவிட்டான் தேவ்.

 

தேவ் இல்லாத பொழுதுகளில் அறிவின் திசை பக்கம் கூட எட்டி பார்க்க மாட்டார் சாரு.

 

*****************

ஆசிரமத்தில் உணவு வழங்கிவிட்டு வீடு திரும்புகையில் தேவ் அமைதியாக கார் ஓட்டிக்கொண்டு வர.ஆத்மி தான் இவனை எப்படி கோபப்படுத்த என்று சிந்தித்துக்கொண்டு வந்தாள்.இரவு வானில் கரு மேகம் தூறல் போட அவளின் மூளையில் மின்னலடிக்க.

 

“காரை நிறுத்து”என்றாள் அதிகாரமாக.

 

அவன் அவளை  பார்க்க”நிறுத்துனு சொன்னேன் காது கேக்கலையா?”என்றாள் கோபமாக.

 

அவன் காரை நிறுத்த, கதவை திறந்துக்கொண்டு இறங்கியவள், அவள் பாட்டிற்கு நடக்க அவசரமாய் டிரைவர் சீட்டிலிருந்து இறங்கியவன் அவளிடம் ஓடி.

 

“மில்கி…”என்று அவன் ஆரம்பிக்க அவனை உக்கிரமாக முறைத்தவள் “அந்த கருமத்தை சொல்லாதனு உன்கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன்”என்று கத்தியவள் முன்னேறி நடக்க.

 

“சாரி, காருல ஏறு இது என்ன விளையாட்டு,மழை வருது உடம்பு முடியாம போய்டும்”என்றான் அக்கறையாக.

 

“உடம்பு உனக்கு எப்பொழுதும் அது மேல தான் அக்கறை? இல்லையா? அசிங்கமா இல்லை உனக்கு?”என்றாள் வார்த்தையில் விஷம் தேய்த்து.

 

அவளின் வார்த்தை அவனை கோபம் கொள்ள வைக்க அதை அடக்கிக்கொண்டவன், “வந்து காரில் ஏறு” என்றான் அடக்கப்பட்ட சீற்றத்தோடு.

 

“ஓஹோ, கோபம் வருதோ, உண்மையை சொன்னா கோபம் வரத்தான் செய்யும், எனக்கு தான் தெரியுமே உன்ன பற்றி”என்றாள் ஏளனமாக.

 

“ஆத்மி, வந்து காருல ஏறு…”என்று காரில் கை வைத்தவன் அவளை பார்க்க

 

“என்ன ஆர்டர் போடுறியா? நீ யாரு டா எனக்கு ஆர்டர் போட…?”என்றாள் கண்கள் சிவக்க.

 

“நான் உனக்கு யாருமில்லை தான், ஒரு சக மனுசனா சொல்றேன், வந்து காரில் ஏறு”என்றான் பொறுமையை இழுத்துப்பிடித்து.

 

“மனுசனா? நீயா?”என்று சத்தம் போட்டு சிரித்தவள். “இன்னும் ஏன்டா என் பின்னாடியே சுத்திட்டு இருக்க வேற எவளுமே கிடைக்கலையா உனக்கு? உலகத்துல நிறைய பேரு இருக்காலுக உன் ஆசைக்கு”என்றாள் அவனை அசிங்கப்படுத்தவென.

 

கோபத்தில் காரின் கண்ணாடியில் தேவ் ஓங்கி குத்த அது சுக்கு நூறாய் உடைந்து தேவிற்கு பல காயங்களை கொடுத்தது.

 

அவனின் கோபத்தை தன்னிடம் காட்டுவான் என்று எதிர்ப்பார்த்தவள், இதை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை, அவள் அதிர்ந்து அவனை பார்க்க.

 

“ஒரு முறை தவறே பண்ணாத உன்னை காயப்படுத்திட்டேன்,கஷ்ட்டபடுத்திட்டேன்,கொடுமைப்படுத்திட்டேன் மறுமுறை அதை பண்ணமாட்டேன், என் கோபத்தை உன்னிடம் காட்ட மாட்டேன், நீ பேசும் வரை பேசு இன்னும் காரில் கண்ணாடிகள் உள்ளது, என்னை நான் காயப்படுத்திக்க தயார்”என்றான் அழுத்தமாக.

***********