நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான் -27

அங்கே ஒரு அசாத்திய அமைதி நிலவ, அதை கலைக்க விரும்பாதவர்கள் அவரவர்கள் அறைக்கு சென்று விட்டனர்.ஆனால் அன்றைய நாளை மனது அசை போடுவதை யாராலும் தடுக்க முடியவில்லை.

 

அன்று,

 

மோகம் என்னும் கடலில் முத்துக்குளித்த தேவ் ஒரு ஏகாந்த உலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தான், ஆத்மியின் நிலையோ என்றும் அல்லாது அவன் தன்னை இத்தனை முறை நாடியதில் துவண்டிருந்தாள்.

 

சிறிது நேரம் கழித்தே தனது மொபைலை அவன் தேட, அது கைக்கு கிடைக்காமல் போக, சரி இப்போதைக்கு தனக்கு அவசரம் ஒன்றுமில்லை என உறங்கிவிட்டது, தான் தவறாகிப் போனதோ!

 

தூங்கி எழுந்தவன், ஆத்மி கிளம்ப இடம் அளித்தவனாக வெளியே பார்ட்டி நடந்து முடிந்த இடத்திற்கு சென்றிருந்தான், அங்கிருந்த அவனது வலது கை ஹரி அவனை கண்டதும் விரைந்து அவனிடம் வந்தவன்.

 

“சார், எங்க சார் போயிருந்தீங்க?”என்றவனின் பதட்டம் இவனுக்கு புரிய.

 

“என்னாச்சு ஹரி?”என்றான் இவன் கூலாக.

 

“அது வந்து சார்…”என்று அவன் இழுக்க.

 

“லுக் ஹரி, என்ன வந்து போயின்னு… இப்படி இழுக்குறது எனக்கு பிடிக்காதுனு உனக்கு தெரியாதா?”என்றான் தேவ் கோபமாக.

 

“சார்… உங்களை பற்றி மறுபடியும் பிரேகிங் நியூஸ்” என்றான் ஹரி.

 

தன் புருவத்தை சுருக்கிய தேவ் “என்ன நியூஸ்”என்றான் அழுத்தமாக.

 

“அது…”என்று இழுக்க போனவன் தேவ்வின் உஷ்ண பார்வையில் அதை கைவிட்டவனாக, “நீங்க பொண்ணுங்களை கடத்தி விக்கிற பிஸ்னஸ் பண்றதா…”என்றான் பயந்தபடி.

 

“வாட்ட்…ரப்பிஷ், என்ன உளறல் இது? எப்படி எந்த எவிடென்ஸூம் இல்லாம இப்படி போடுவாங்க?”என்றான் அவன் கனலோடு.

 

“சார்… அது ஆதாரம் இருக்கு!”என்றான் பயந்து போய்.

 

“வாட் தி ஹெல், வாட் இஸ் தட் ப்ளடி ஆதாரம்”என்று அவன் கர்ஜிக்க.

 

“ஒரு பொண்ணே பேட்டி கொடுத்திருக்கு”என்றான் எச்சிலை விழுங்கி.

 

அவனை உக்கிரமாக பார்த்தவன் “யாரு…அவ?” என்றான்.

 

“ஒரு நிமிஷம் சார்”என்றவன் அவனது போனில் நியூஸ் லைவ்வை ஆன் செய்ய அதில் அவள் பேசிக்கொண்டிருந்தாள் அதை அவன் தேவ்விடம் நீட்ட பெற்றுக்கொண்டவன் அதில் தெரிந்தவளை கண்டு புருவம் உயர்த்தி “ஆத்விகா” என்றான் கர்ஜனையாக.

 

கோபத்தில் அந்த தொலைப்பேசியை தூர எறிந்தவன் “ஹவ் டேர் ஷி இஸ்…இட்ஸ் டைம் டூ ஷோ ஹர் ஹூ ஐ எம்”என்றான் ரௌத்திரமாக.

 

“சார்…”ஹரி மறுபடியும் தயங்க.

 

“ம்ப்ச், என்ன ?” என்றான் அதே ரௌத்திரத்தோடு.

 

“உங்களுக்கு அரெஸ்ட் வாரண்ட் குடுத்திருக்காங்க” என்றான்.

 

“வாட் தி **** “என்று கத்தியவன். சற்றே நிதானித்தவனாக. “லாயர்க்கு சொல்லிட்டியா? “என்றான்.

 

“அப்போவே சொல்லிட்டேன் சார்…, பட் பெயில் கஷ்டம்னு சொல்றாரு”என்றான்.

 

“அட் எனி காஸ்ட், எப்படியாவது வாங்க சொல்லு… நெக்ஸ்ட் அவளை நான் பார்க்கணும் ஏற்பாடு பண்ணு, அடுத்த ஐந்தாவது நிமிஷத்துல எல்லா நியூஸ் சேனலிலும் இந்த நியூஸ் வந்த சுவடே இருக்கக்கூடாது”என்று அடுத்தடுத்து ஆர்டர்களை போட்டவன். அவனுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்த எண்ணி முக்கிய பிரமுகருக்கு அழைக்க அவர் எடுக்கவே இல்லை…” அதில் மேலும் கடுப்பானவன் அவரையும் சில பல வார்த்தைகளில் அர்ச்சித்துவிட்டு , பின் அவரை நேரில் காண புறப்பட்டுவிட்டான்.

 

நேரில் அந்த பிரமூகரை இவன் சந்தித்து விவாதிக்க, அவரோ “என்னை என்ன பண்ண சொல்ற? ஒரு பொண்ணு நேரடியாய் பேசிட்டு இருக்கு… இந்த நிலையிலே என்னால என்ன செய்ய முடியும்னு எதிர்பாக்குற?”என்று கையை விரிக்க அதில் கோபத்தின் உச்சிக்கு சென்றவன்.

 

“ஓஹோ, ஒன்னும் பண்ண முடியாது, அப்படித்தானே? உங்களுக்காக நான் ஒன்னொன்னும் பண்ணும்போது நல்லா இருந்துச்சு இப்போ கசக்குதோ” என்றவன் வார்த்தைகளை கடித்து துப்ப.

 

“இங்கே பாரு தேவையில்லாததை பேசாதே”என்றதும் அதில் அவன் கொதித்துப் போனான்.

 

“ஓ தேவைஇல்லாததா? சரி தேவையானதை சொல்லட்டுமா? நீங்க சொல்லித்தான் அப்படி பண்ணிணேன்னு போய் மீடியா கிட்ட சொல்லட்டுமா?”என்று தேவ் ஒரு போடு போட சற்றே நிதானித்தவர்.

 

“இங்க பாருப்பா, என்கிட்ட கோபப்பட்டு ஒன்னும் ஆக போறதில்ல, அந்த பொண்ணே நான் சொன்னது தவறான குற்றச்சாட்டுன்னு சொன்னாதான் நீ தப்பிப்ப”என்று அவர் கூற.

 

“அதை நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்க முதலில் இந்த நியூஸ் வேற எதுலையும் வராம பாத்துக்கோங்க, அப்றம் இரண்டு நாளைக்கு யாரும் என்னை கைது பண்ண வராம பாத்துக்கோங்க, எனக்கு அது போதும்”என்றான் கடுப்பாக.

 

சற்று யோசித்தவர் “சரி, பண்றேன் ” என்றவர் சொன்னது போல் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அந்த நியூஸ் வந்த சுவடே தெரியாமல் மறைந்து போக செய்திருந்தவர், காவல் துறையையும் பொறுக்கும்படி சொன்னார்.

 

ஹரியிடமிருந்து கால் வர அதை எடுத்தவன் “என்ன” என்றான் எடுத்த உடனே.

 

“அது சார்… அந்த பொண்ணு ஒத்துக்கலை” என்றான்.

 

“அறிவிருக்கா? அவ ஒத்துக்க மாட்டான்னு எனக்குமே தெரியும், நான் அவளிடம் உன்னை கெஞ்ச சொல்லலை அவளை கடத்த சொன்னேன், புரியுதா?” என்றான் அழுத்தமாக.

 

“யெஸ் சார்”என்றவன் அதன் பின் வேலையை கச்சிதமாக முடித்திருந்தான்.அவனது சக்சஸ் என்ற மெசேஜை பார்த்தவன் அவளை நோக்கி சென்றான்.

 

அவளை அடைத்துவைத்திருக்கும் இடத்தை அடைந்திருந்தவன், நேராக உள்ளே சென்றான்.அங்கு சேரில் கைகள் கட்டிய நிலையிலிருந்தவளை கண்டு இவன் “ஆத்விகா”என்று கர்ஜிக்க.

 

அதற்கு ஒரு ஏளன புன்னகையை பதிலாக அவள் கொடுக்க மேலும் கடுப்பானவன். “உனக்கு எவ்ளோ திமிரு இருந்தா இப்படிலாம் செய்வ?”என்றான் ரௌத்திரமாக.

 

சிரித்தவள், “செய்வேன்டா இன்னும் செய்வேன், ரொம்ப கஷ்டப்பட்டு நியூஸ் சேனலுக்கு போட்டோலாம் கலெக்ட் பண்ணி இன்பர்மேஷன் கொடுத்தேன், அதெல்லாம் ஒன்னுமில்லாம பண்ணிட்டல அதுக்கு அடுத்தும் ஏதெதோ ட்ரை பண்ணினேன் யாரும் பப்லிஷ் பண்ண மாட்டேன் சொல்லிட்டாங்க.அதான் நானே இறங்கிட்டேன்”என்றாள் அவள் கோபமாக.

 

“என்ன… அப்போ முதல் முறை நியூஸ் சேனலுக்கு எல்லாம் கொடுத்தது நீயா? அப்போ aathudaya[email protected].com உன்னோட ஐடி யா? “என்றான் அதிர்ச்சியாக.

 

“ஆமாம் நான் தான்” என்றாள் அவள்.

 

“அப்போ தயாளன்” யாரு பேரு.

 

“என் அப்பா தயாளமூர்த்தி”என்றாள்.

 

“ஷிட், ஆனால் லோக்கேஷன் கொல்கத்தா ல ஆத்மியோட வீட்டை தானே காட்டுச்சு?”என்றான் அவன் புரியாது.

 

“நான் உன் ஆத்மி இப்போ இருக்கிற வீட்டுல தான் அந்த மெயில் அனுப்பும்போது இருந்தேன்” என்றாள் அவள் ஒரு குண்டை தூக்கி போட.

 

“அப்போ அதையெல்லாம் பண்ணினது ஆத்மி இல்லையா? நீயா?” என்றான் கோபமாக.

 

“ஆமாம், ஆமாம் ஆத்மிக்கு உன்னை பழி வாங்க என்ன இருக்கும்னு நீதான் யோசிச்சிருக்கணும்”என்றாள் அவள் ஏளனமாக.

 

“வாயை மூடு, தேவையில்லாம உன்னால என் ஆத்மிக்கு தண்டனை கொடுத்துட்டேன், ச்செய்”என்றான் கோபமாக.

 

“ஹா…ஹா…”என்று அவள் பெருங்குரலெடுத்து நகைக்க, கடுப்பானவன். “ஷட் அப்”என்று கத்தினான்.

 

“ஏன் கத்துற? சும்மா கத்தாத, நான் ரெண்டு மாங்காய் அடிச்சுட்டேன், உன்னை பழி வாங்கிட்டேன், நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்”என்று அவள் நகைக்க.

 

“ம்ப்ச், அது இருக்கட்டும் எதுக்காக இப்படி பண்ணின அதை சொல்லு முதலில்”என்றான் கடுப்புடன்.

 

“நீ பண்ணின துரோகத்துக்கு தண்டனை”என்றாள் கண்களில் வெறியோடு.

 

“துரோகமா? யாரு உனக்கு பண்ணினேனா?”என்றான் இவனும் அதே கடுப்போடு.

“ஓஹோ, உனக்கு தெரியாதோ, நடிக்காத என் அக்கா வாழ்க்கையையே நாசமாக்கிட்டியே”என்றாள் வெறுப்போடு.

 

“லூசா நீ, இதை உன் அக்கா சொன்னாலும் ஒரு நியாயம் இருக்கு, ஒன்னுமே புரியாம இப்படித்தான் கிறுக்கி மாதிரி பண்ணுவியா”என்று இவன் கத்த.

 

ஒரு நிமிடம் ஸ்தம்பித்தவள், பின் “என்ன தெரியாம நான் உளறுறேன், தேவை இல்லாம பேசாத சொல்லிட்டேன்”என்றாள்.

 

“ஏய் லூசு, நான் சொல்றதை முதல்ல கேளு பைத்தியக்காரியே”என்று கத்தியவன் அந்த நிகழ்வை கூறினான்.

 

“உங்க  அக்காவும் என் நண்பனும் லவ் பண்ணுனாங்க, படிச்சு முடிச்சுட்டு பெங்களூரில் அவனுக்கு வேலை கிடைக்க, கொஞ்ச நாளில் வந்து சம்பந்தம் பேசுறேன்னு சொல்லிட்டுபோனவன், காலும் பண்ணலை, எந்த தகவலும் இல்லை, அதுனால உங்க அக்கா பீல் பண்ணினா, உங்க வீட்டுல மாப்பிள்ளை பார்க்கவும் பயந்தவள் என் கிட்ட உதவி கேட்டா, நான் போய் பாக்குறேன்னு சொன்னேன்”எனறு அவன் நிறுத்த.

 

இதெல்லாம் அவளுக்கு தெரிந்த கதை ஆதலால் அவள் இவனை கூர்மையாக பார்க்க, பின், தொடர்ந்தவன் “நானும் அவனை தேடி போனேன், பட் அங்க வேலைக்கு சேர்ந்த ரெண்டாவது நாளே அவனுக்கு ஆக்சிடென்ட் ஆகி அவன் போய் சேர்ந்துட்டான்”சற்றே குரல் கரகரத்தது தேவ்விற்கு நண்பனின் நினைவு.

 

இது அவளுக்கு புது செய்தி அவள் அதிர்ச்சியோடு பார்க்க,குரலை சரி செய்துக்கொண்டவன், “உங்க அக்கா கிட்ட அதை சொல்ல மனசு வரலை, அதான் நீ கவலை படாதே அவனை கூட்டிட்டு வரேன் சொன்னேன், உங்க அக்காக்கு பார்த்த மாப்பிள்ளையை சந்தித்து எல்லாம் சொன்னேன், வருத்தப்பட்டவர் உன் அக்காவை நல்லா பார்த்துக்கிறேன், அவங்களோட பாஸ்ட் பத்தி கவலைஇல்லைன்னு சொன்னாரு நானும் அவரை பத்தி நல்லா விசாரிச்சு உங்க அக்காவை அவர் நல்லா பாத்துப்பாருன்னு கண்டிப்பா தெரிஞ்சதும் தான் ஒத்துக்கிட்டேன்”

 

அவள் தலை குனிய “நான் பண்ணின ஒரு தவறு திருமணத்தன்று காலை கூட அவனோடு வரேன்னு உன் அக்காவை நம்ப வைத்தது தான் அவனுக்கு நேர்ந்தது பற்றி தெரிந்தால் அவள் நிச்சயம் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டான்னு அப்படி பண்ணினேன்”என்று அவன் முடிக்க.

 

இப்பொழுது அவள் “கல்யாணம் முடிஞ்சு அவ சோகமா இருந்தாலே”என்றுரைக்க.

 

“உன் அக்காவை கட்டிக்கிட்டவன் அவ கிட்ட எல்லா உண்மையையும் சொல்லிட்டான், அதற்கு அழுதிருப்பா, அவனும் அவளுக்கு நிறைய டைம் கொடுத்து இப்போ அவ நல்லா ஹாப்பியாதானே இருக்கா?”என்று அவன் முடிக்க.

 

அவள் இவன் முகம் பார்க்க தைரியமற்று குனிய “எதுவுமே தெரியாம, உங்க அக்காகிட்டையும் கலந்து பேசாம நீயே அரைகுறையா எதையோ கேட்டுட்டு கேனை தனம்மா நீயே ஏதேதோ கற்பனை பண்ணிட்டு ஏன் இப்படி பண்ணி தொலைக்கிற”என்று கடிந்துக்கொண்டான்.

 

“எப்படி பார்த்தாலும் நீ உங்க அக்காகிட்ட கேட்டிருந்தால் அவளே சொல்லியிருப்பா, நீ பண்ணின இந்த காரியத்தால எத்தனை பிரச்சனை தெரியுமா உனக்கு?”என்று அவன் கூற.

 

பதில் மொழி இல்லாது தலை தாழ்த்தியவளின் கண்கள் கலங்க, அதை கண்டு மேலும் கடுப்பானவன், “இதுல பேட்டி வேற எத்தனை நியூஸ் சேனல்ல, வாழ வேண்டிய பொண்ணு, அறிவு வேண்டாம், இன்னும் கல்யாணம் கூட ஆகலை, இதை வெச்சு எவனும் மிஸ் யூஸ் பண்ணினா என்ன பண்ணுவா?”என்று மேலும் கடிந்துக்கொள்ள.

 

“சின்ன பொண்ணுங்கிறது சரியா இருக்கு, ஒன்னை செய்யறதுக்கு முன்ன பின்ன எல்லா பக்கமும் யோசிக்கணும், யூ இடியட்,” என்று அவன் மொழிய ஒரு வார்த்தை கூட பேசாது பேசா மடந்தையாக இருந்தவள் “சாரி” என்றாள் மெல்லியதாக.

 

“சாரி நீ ஈசியா சொல்லிட்ட, இதையே போய் நான் அங்க சொன்னால் அவள் ஏத்துப்பாளா?” பெருமூச்சுவிட்டவன் “சரி விடு, பிரஸ்க்கு ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பேட்டி கொடுத்திடுவோம், அதை கொடுத்திட்டு கொஞ்ச நாள் வெளியூருல இரு, செலவெல்லாம் நான் பாத்துக்கிறேன், ஒன்னும் கவலை படாதா நீ என் தங்கச்சி மாதிரி”என்றான் ஒரு பொறுப்பானவனாக.

 

“சரி” என்று ஒத்துக்கொண்டவள்,அவனது தங்கை என்ற அழைப்பில் நெகிழ்ந்தவளாக, “நான் வேணும்னா ஆத்மி , அவங்க கிட்ட சொல்லட்டுமா?”என்றாள்.

 

“ஐயோ, நீ பண்ணின வரைக்கும் போதும்மா, இதோட நிப்பாட்டு”என்று கும்பிடு போட்டவன், “அவளை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றுவிட்டான்.

 

அதன் பின், அவசரமாக பிரஸ் மீட் அரேன்ஜ் செய்து, பல குதர்க்கமான மற்றும் கெடுபிடிகளுக்கு நிதானமாக சிரித்த முகமாக பதிலளித்து அந்த பிரச்சனையை முடிக்கவே படாதப்பாடாகி போனது. எப்படியோ அனைத்தையும் முடித்தவன் தன்னவளின் கோபத்தை எதிர்க்கொள்ள தயாரானான்.

 

பலத்த யோசனையோடு அவன் வீடு வர அங்கு பூட்டிய வீடே அவனை வரவேற்க்க, ஒன்றும் புரியாது அவன் விழிக்க வாட்ச் மேனிடம் “மேடம் எங்கேவென்று கேட்க?”

அறிவழகனோடு சென்றால் என்னும் தகவல் கிடைக்கவே கடுப்பானவன் ‘எதுக்கு அவ அந்த ஆளு கூட போனா?’என்று கடுப்போடு நினைத்தவன், ஆத்மியின் வருகைக்காக காத்திருக்க துவங்கினான். உண்மையில் அவனுக்கு அவளை எதிர்க்கொள்ள சற்று நேரம் தேவைப்பட்டது அதை எடுத்துக்கொண்டான்.

 

செங்கதிர் வானத்தை அலங்கரிக்கும் பொன்மாலை பொழுதில் வீட்டிற்கு வந்த ஆத்மி , இவனை கண்டுக்கொள்ளாது உள்ளே செல்ல…

 

“ஒரு நிமிஷம்” என்று இவன் தடுத்தான்.

 

புயலுக்கு முன் அமைதி, சுனாமியாய் மாற போகிறாள் தேவின் மில்கி…தாங்கிக்கொள்வானா ஆத்மியின் தேவன்.

 

தொடரும்…