நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-3

தன் தமக்கையின் அலறலில் கீழே வந்து பார்த்தவளுக்கு பேரதிர்ச்சி.நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்திருந்தார் தயாளன்.என்ன செய்வது என்று புரியாது ஸதம்பித்த தமக்கையையும்,தாயின் கதறலையும் கேட்டவள்,விரைந்து ஆம்புலன்ஸிற்க்கு அழைத்தாள்.

 

விரைந்து ஓடி வந்த ஹரியும்,என்ன நடக்கிறது என்று பார்த்துவிட்டு,விலகி நின்றுக் கொண்டான்.

 

‘கொஞ்சமாவது உதவுறானா பாரு?அது சரி,அவனோட அடி ஆள் அவன மாறி தானே இருப்பான்.’என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

 

ஆம்புலன்ஸ் வந்து தன் தந்தையை தூக்க கூட அக்கம்,பக்கம் யாரும் வராததை எண்ணி வருத்தம் கொண்டவள் ‘என்ன மனுசங்களோ? இப்படி பட்ட நேரத்தில் கூட உதவ மாட்டாங்களா’ என்று மனதோடு நினைத்தவள் அவளும் அபர்ணாவும் சேர்ந்து  அவரை தூக்கி ஆம்புலன்ஸில் ஏற்றினர். 

 

காற்றை கிழித்துக் கொண்டு சென்ற அந்த வண்டி சரியாக பத்து நிமிட பயணத்தில் அந்த பிரபல மருத்துவமனை முன் நின்றது.

 

அவசரமாக அவளின் தந்தையை உள்ளே அழைத்துச் சென்றார்கள். ஐ.சி.யூ வில் அட்மிட் பண்ணிவிட்டு வெளியே காத்திருந்தனர். தலைமை மருத்துவர் சோதித்துவிட்டு,”மாரடைப்பு” என்க,பதறியே விட்டனர். 

ஏனெனில் இது அவருக்கு இரண்டாவது அட்டாக்.

 

“ரொம்ப வீக்கா இருக்காரு, இதுக்கு முன்ன என்ன ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டாரா? ரிப்போர்ட் வேணும்” என்று கேட்க,

 

“வீட்டுல இருக்கு டாக்டர்,அவசரத்துல மறந்துட்டேன்,நான் போய் எடுத்திட்டு வந்துறேன்” என்றாள் ஆத்மி.

 

“சீக்கிரம் மா, இப்போதைக்கு முதல் உதவி பண்ணியிருக்கோம்,நீங்க ரிப்போர்ட் கொடுத்தா தான் அடுத்து என்னனு பாக்க முடியும்.அத்தோட பை பாஸ் சர்ஜரி பண்ணனும்! ஏன் நீங்க முதல்லையே பண்ணல?” என்று கேட்டார்.

 

“அது அப்பா அதுலாம் வேண்டாம்னு சொல்லிட்டார் டாக்டர்” என்றாள் அபர்ணா.

 

“ஏன்மா?இதுலாம் ஒரு காரணம்மா,படிச்ச பொண்ணு தானே,நீ சொல்லி புரிய வெச்சிருக்கனும்,இப்போ அதுனாலே எவ்வளோ ப்ராப்ளம் தெரியுமா? எதுவுமே சின்னதா இருந்தா பிரச்சனை ஈசியா குணப்படுத்திடலாம்,இப்போ பெருசாகிடுச்சு.”

 

“……….”

 

“ஆப்பரேஷன்க்கு எல்லாம் சேர்த்து இரண்டு லட்சம் ஆகும். அதையும் ஏற்பாடு பண்ணுங்க!”என்றவர் 

“எவ்வளோ சீக்கிரம் முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் பண்ணுங்க”என்றார்.

 

“சாரி டாக்டர்,நான் போய் ரிப்போர்ட்ஸ் எடுத்திட்டு வந்துறேன்”என்று கூறியவள் தாயிடமும்,தமக்கையிடமும் கூறிவிட்டு,வெளியே வந்தவள் ஒரு ஆட்டோவை பிடித்து வீட்டை நோக்கி பயணித்தாள். 

 

திரும்ப வரமுடியாது என்று தெரிந்திருந்தால்,அவள் சென்றிருக்க மாட்டாளோ?விதி யாரை விட்டது? 

 

***********

 

அங்கே தன் வீட்டை அடைந்தவன்,நேராக ஹாலை கடந்து மாடியில் உள்ள தனது அறைக்கு செல்ல வேண்டி படிகளில் ஏற அப்பொழுது, “நீ பண்றது எல்லாம் உனக்கே நியாயமா படுதா?” என்று அவர் கேட்டிட.

 

…………….(ஒன்றும் கூறாது அவன் அடுத்த படியில் கால் வைக்க)

 

“உன்னை தான் கேட்டுட்டு இருக்கேன்? பதில் சொல்லு” என்று கத்தினார் அவர்.

 

“இங்கே பாருங்க, யாருக்கும் பதில் சொல்லனும்னு எனக்கு அவசியம் இல்ல,என் இஷ்டப்படி தான் நான் இருப்பேன்,எனக்கு என்ன தோனுதோ நான் செய்வேன், தேவை இல்லாம இந்த கேள்வி கேட்கிற வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்க, அந்த உரிமையை நான் யாருக்கும் வழங்கல,வழங்கவும் மாட்டேன்.இது உங்களுக்கும் சேர்த்து தான் சொல்றேன்”.

 

“ஏன் பா நான் கேட்க கூடாது,கேட்கிற உரிமை எனக்கு இருக்கு!”

 

“ஓஹோ! யாரு நீங்க? உங்களையே போனா போகுதுனு தான் இந்த வீட்டுல வெச்சிருக்கேன், உரிமையாம் உரிமை, அது என் தாயிற்க்கு தவிர வேற யாருக்கும் நான் கொடுக்கல. உங்களாலே நான் பட்ட அசிங்கம் கொஞ்சமா, நஞ்சமா? இப்போ வந்து உரிமை அது இதுனு சொல்லிட்டு இருக்கீங்க? எனக்கே ரொம்ப வேடிக்கையா இருக்கு, உங்களோட இடம் என்னனு புரிஞ்சு, தெரிஞ்சு, அறிஞ்சு பேசுங்க?புரியுதா”

 

“நான் உன் அப்பா? அத மறந்திடாதே, அது என்னைக்கும் மாறவே மாறாது?”

 

“என்னது?அப்பாவா குட் ஜோக்!,அது யாரு? எங்க அப்பா நான் பொறக்குறதுக்கு முன்னாடியே செத்துட்டார். நீங்க என் அம்மாவோட புருசன். அவ்ளோதான் அத தாண்டி வேற ஒன்னும் கிடையாது. என் அம்மா முகத்துக்காக மட்டும் தான் உங்களை இங்க விட்டு வச்சிருக்கேன். இல்லனா இந்நேரம் ப்ளாட் பாரத்துல தான் இருந்திருப்பீங்க.இனிமே என்னை கேள்வி கேக்கிற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க”.என்று கூறியவன் அவனது அறைக்கு சென்று விட்டான்.

 

‘தான் பேசிய வார்த்தைகள் தன்னை இப்படி துரத்தி வரும் என்று அவர் என்ன கனவா கண்டார்?தெரிந்திருந்தால் அன்றைக்கே அதை கூறாமல் விட்டிருப்பாரோ,விதி வலியது’என்று தனது அறைக்கு சென்று விட்டார்.

 

தனது அறைக்கு வந்தவன்,கோபத்தில் அங்கிருந்த கண்ணாடி குவளையை தூக்கி போட்டு உடைத்தான். 

 

“என்ன நினச்சுட்டு இருக்காரு? யாருக்கு யார் அப்பா?தேவைப்படும் போது கூட இல்லாதவர்,வழி காட்டும்போது கூட இல்லாதவர்,தடுக்கி விழுந்தபோது தூக்கி விட இல்லாதவர், இப்போ வந்து அப்பானு உரிமை கொண்டாடினா? அப்பானு போவேன்னு நினைச்சாரோ?”என்று வாய்விட்டே கத்தியவன்.

 

அவனுக்கு வந்த அழைப்பில் யார் என்று பார்க்க,ஹரியிடம் இருந்து வந்த அழைப்பு. 

 

அதை ஏற்று காதில் வைத்தவன்”சொல்லு ஹரி” என்றிட, அங்கு நடந்த அனைத்தையும் இவனுக்கு கூறி இருந்தான்.

 

“ஓஹ்,தட்ஸ் இன்ட்ரஸ்டிங். நீ அங்கேயே இரு, நான் வர்றேன்”என்று கூறயவன் ஒரு உல்லாச புன்னகையோடு, “மில்கி,ஐ யம் கம்மிங் ஆகைன்”என்றான்.

 

இப்போ என்ன பண்ண காத்திருக்கானோ……?

**************

 

ஆட்டோவிற்க்கு பணம் கொடுத்து விட்டு வந்தவள்,வாயிலை பார்க்க ஹரி அங்கே இல்லை, ‘விட்டு தொலைஞ்சது சனி’ என்று பெருமூச்சு விட்டவள் கதவை திறக்க செல்ல அது ஏற்கனவே திறந்திருந்தது.

 

‘நாம பூட்டிட்டு தானே போனோம் என்று யோசித்தவள்’ உள்ளே சென்று பார்க்க அவள் வீட்டின் சோபாவில் கால் மேல் கால் போட்டு ஒய்யாரமாக அமர்ந்திருந்தான் அவன், அத்தோடு “ஹாய் மில்கி”என்றான்.

 

அவனை கண்டு திடுக்கிட்டவள், ‘இப்போ எதுக்கு வந்திருக்கானோ தெரியலையே’ என்று சோர்வாக நினைத்தவள் ஒன்றும் கூறாது ரூம்மிற்க்கு சென்று ரிப்போர்டை எடுத்து வந்தவள் அவனை சட்டை செய்யாது,அவனை தாண்டி செல்ல முற்பட்டாள். 

 

அவளை செல்லவிடாது கைகள் இரண்டையும் பிடித்து இழுத்து அவளை தன் மேல் சரித்து கொண்டவன்.

 

“நான் உனக்கு ஹாய் சொன்னேன்” என்றிட அதற்கும் ஒன்றும் பேசாது இருந்தவள்.

 

“இங்கே பாரு, நீ இப்போ பண்றதுக்கெல்லாம் பின்னாடி அனுபவிப்பேன்னு சொல்லிட்டே தான் இருக்கேன்,ஆனா நீ அதை கேக்குற மாறியே தெரியல,இயல்புலையே எனக்கு பொறுமைனா என்னனு தெரியாது. நான் ஒன்னு கேட்டா கேக்குற கேள்விக்கு பதில் வரனும்,புரியுதா?” என்க.

 

அவனை முடிந்த மட்டும் முறைத்தவள் அவனிடம் இருந்து விடப்பட போராடவில்லை. 

 

அது வேஸ்ட் என்று முடிவு தெரிந்ததால் இருக்குமோ! அதை புரிந்துக் கொண்டவனும் அவளை மெச்சுதலாக பார்க்க, ஒரு நிமிடத்தில் அந்த பார்வையை மாற்றிவிட்டு கடினத்தை தத்தெடுத்து கொண்டான்.

 

“உங்க அப்பன் இன்னுமா உயிரோட இருக்கான்?” என்று அவன் கேட்டிட வெகுண்டு எழுந்துவிட்டாள். 

 

“போதும்,நிறுத்து. இன்னொரு வார்த்தை என் அப்பாவை பத்தி பேசுன நான் மனுசியாவே இருக்க மாட்டேன்,என்ன நினைச்சுட்டு இருக்க? உனக்கு என் கூட தானே பிரச்சனை. என்னைய மட்டும் பேசு,அத விட்டுட்டு என் குடும்பத்தை பேசுற வேலையோ,கஷ்ட்டப்படுத்துற வேலையோ வச்சுக்காத” என்று ஆள் காட்டி விரலை காட்டி எச்சரித்தவளின் விரலை மடக்கி அவளின் கையை முதுகுக்கு பின்னாடி சுற்றி அவளை லாக் செய்தவனோ,

 

“எவ்ளோ தைரியம் இருந்தா?என் முன்னாடி விரலை நீட்டுவ. விரலை உடைச்சு கையில கொடுத்திடுவேன், இதுவே வேற ஆளாய் இருந்திருந்தால் கையையே வெட்டி எடுத்திருப்பேன். என்கிட்ட பேசும்போது பார்த்து பேசுனு சொல்லி இருக்கேன்ல” என்று கர்ஜித்தவன் அவளின் கையை இன்னும் முறுக்கினான்.

 

வலியில் துடிதுடித்துப் போனாள் மங்கை அவள். மனக்காயத்தோடு உடல் காயமும் ஏற்பட அவளின் கண்களில் கண்ணீர் அவள் அனுமதி இல்லாமலே வடிந்தது. 

 

அவளின் அழுகையை அவனுக்கு காட்டக் கூடாது என்று நினைத்து திரும்பியவளை, தன்னை பார்க்க சகிக்காது திரும்புகிறாள் என்று தவறாக நினைத்துக் கொண்டவன்,அவளை உதிறி தள்ளினான்.

 

விட்ட வேகத்தில் பிடிமானம் இன்றி சுவற்றில் மோதி, நெற்றியில்  பலத்த காயமும் கண்டு,இரத்தமும் வடிந்தது. அவள் விழுந்த வேகத்தில் அவள் கையில் வைத்திருந்த ரிப்போட் அவன் காலடியில் விழுக அதை எடுத்தவனோ சுக்கு நூறாக அதை கிழித்தெறிந்தான்.

 

“வேண்டாம்” என்று இவள் கதறும் முன்னே இது நடந்து விட்டிருந்தது. இயலாமை தன் மேலே தனக்கு உண்டான வெறுப்பு என்று தன்னை நினைத்து தனக்கே கோபம் வர, தலையில் அடித்துக் கொண்டு அழுதாள். 

 

சுக்கு நூறாய் கிழிந்த காகிதத்தை கண்டு அழுதவளளை தேற்றுபவர் யாரும் இல்லை அங்கே! 

 

“நீயெல்லாம் ஒரு மனுசனா? ராட்சசன்,கொடூரன்,ஈவு இரக்கம் அற்றவன், கொடுங்கோலன், நீயெல்லாம்…”

 

“ஷட் அப்! வாயை மூடு” என்று கர்ஜித்தவன்,அவளை நேருக்கு நேர் பார்த்து, 

 

“உன் உளறல் எல்லாத்தையும் கேட்டுட்டு இருக்க எனக்கு டைம் இல்ல. நீ இப்போவே என்கூட வரணும்!” கிளம்பு என்றான் கட்டளையாக.

 

“முடியாதுனா என்ன பண்ணுவ?” என்று கண்கள் சிவக்க கேட்டவள்”.

 

“பேபி என்கிட்டதான் இருக்கு. அத மறந்துட்டியா?” என்று அவன் கேட்ட பிறகே குழந்தையின் நியாபகம் வர, அவளும் பாவம் தானே, ஒரே நேரத்தில் எத்தனை அதிர்ச்சிகளை தாங்குவாள். 

 

அவள் உடல் மட்டும் வேலைகளை செய்து கொண்டிருந்தது, மனமோ,எங்கொங்கோ சென்று வந்தது. 

அதில் முக்கிய பங்கும் அவனே வகித்தான், இவன் யாராய் இருக்கும் என்பதே அவளின் முதல் கேள்வி?

 

“சரி,நான் உன்கூட வந்துடுறேன், குழந்தையை விட்டுடு,என் அப்பாவை பாத்திட்டு வந்து உன் கூட வரேன்” என்க.

 

“உன் அப்பன் எப்படி போனா எனக்கு என்ன? எனக்கு அதை பத்தியெல்லாம் கவலை இல்லை, நான் சொன்னா சொன்னது தான் அந்த கடவுளே வந்தாலும் அதை நான் மாத்திக்க மாட்டேன்!” என்றான்.

 

‘என்ன மாதிரியான மனிதன் இவன்?’ என்று மனதில் நினைத்தவள் முதல் முறையாக அவனிடம், “ப்ளீஸ்,ஒரு முறை பார்த்துட்டு வந்துடுறேன்.  

உன் அப்பாவா இருந்தா நீயும் இதானே பண்ணியிருப்ப என்று பணிவாகவே கேட்டாள்.(சரியாக, தப்பான டயலாக்கை பேசி விட.)

 

“என் அப்பனா அந்த ஆள நான் பாத்திருந்தா இந்நேரம் நானே கொன்னுருப்பேன்” என்றான்.

 

‘இவன் என்ன சொல்கிறான்’ என்று புரியாது விழித்தவள் அவனைப் பார்க்க, “உனக்கு டூ மினிட்ஸ் டைம் தர்றேன். கிளம்பி வா!” என்க.

 

அவளின் போன் அடிக்க எடுத்து பார்த்தாள், அபர்ணா அழைத்திருந்தாள். அவளின் கையில் இருந்த தொலைப்பேசியை வாங்கியவன் ஸ்பீக்கரில் போட்டான்.

 

“ஏய் எங்கடி இருக்க. சீக்கிரம் வா, அப்பாக்கு பிளட் தேவைப்படுது, உன்னோடது சேம் குரூப் தானே”.என்க,

 

இவள் அவனை பார்க்க அவனோ,”அவள் எங்கும் வரமாட்டாள், அந்தாளுக்கு என்ன ஆனாலும் எங்களுக்கு அது பத்தி கவலை இல்லை என்று சொல்லி!” போனை வைத்துவிட்டான்.

 

“ஏன் இப்படி பண்ற? ரிப்போர்ட்டையும் கிழிச்சு போட்டுடே,பிளட்டும் கொடுக்க விட மாட்ற? உனக்கு எவ்ளோ வேணும்னாலும் என்னைய கஷ்டப்படுத்திக்கோ, அவங்க எல்லாரையும் விட்டுடு ப்ளீஸ்!” என்று கெஞ்சினாள்.

 

“அதை கண்டுக்கொள்ளாதவன், உன்னோட ஹேர் ரொம்ப நல்லா இருக்கு,லைக் இட்!” என்க.

 

‘உலகத்தில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளையும் திரட்டி அவனை திட்டி தீர்த்தாள்’ மனதிற்குள் மட்டும். இல்லையென்றால் ஒரு நூதன தண்டனை அல்லவா கொடுக்கிறான்.

 

“வெல்,ஷால் வீ மூவ்?”என்று கேட்டவனிடம்.

 

இறுதி முயற்சியாக “அப்பாக்கு பிளட் கொடுத்திட்டு வரேன் ப்ளீஸ்!” என்று கெஞ்ச.

 

“சரி, உனக்காக ஒன்னு பண்றேன் மில்கி,ஒன்னு-பேபியை ரீப்ளேஸ் பண்ணி நீ வந்திடு,இல்ல உங்க அப்பாவ பாரு? தி பால் இஸ் இன் யுவர் கோர்ட்”என்று முடித்து விட்டான்”.

 

என்ன முடிவு எடுப்பாள்?

 

(டார்லிங்க்ஸ்,அடுத்த யூடில இந்த பயபுள்ள யாருனு சொல்லிடுறேன்,கீப் சப்போடிங் செல்லங்களா…)

 

தொடரும்..


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!