நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-4
நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-4
ஆத்மியின் நிலை வார்த்தையில் விவரிக்க இயலாதது.
,’திடிரென ஒருவன் வந்திருக்கிறான், யார் என்று தெரியவில்லை! பெயர் தெரியவில்லை? ஊர் தெரியவில்லை? எங்கிருந்து வந்தான் என்றும் தெரியவில்லை. இப்போது எங்கே கூப்பிடுகிறான்,தெரியவில்லை?
மொத்தத்தில் புரியாத புதிர் அவன்!
கேள்வியே புரியாது விடை நல்க வேண்டிய சூழ்நிலை,மிகவும் கொடூரமானதன்றோ!
யாரின் மேல் பழி போடுவாள்? கடவுளின் மேலா? தன் மேலா? விதி மேலா? அப்படி பழி போடவேண்டும் என்றாலும் முதலில் கேள்வி தெரிந்திருக்க வேண்டும் அல்லவா.
இவளின் பதிலுக்காக அவன் காத்திருக்கிறான் என்பது அவளுக்குப் புரிய, என்ன செய்வது என்று கைகளைப் பிசைந்தவாறு நின்றிருந்தாள்,
அவள் பதில் கூறாததைக் கண்டு தன் பொறுமையை இழந்தவன், “இட்ஸ் கெட்டிங் லேட் மில்கி, கமான் டெல் மீ வாட் யூ ஆர் கோயிங் டூ டிசைட்?”
“ப்ளீஸ், எனக்கு ரெண்டுமே முக்கியம் புரிஞ்சுக்கோ,”என்றாள் மன்றாடல் குரலில்.
“பட், நான் உன்னை ரெண்டில் ஒன்றை தான் தேர்வு செய்யச் சொன்னதா நியாபகம்”என்றான் யோசனையாக.
“ப்ச், உனக்கு எப்படி சொன்னா புரியும்?”
“எனக்கு எதுக்கு புரியனும்? இங்க பாரு உனக்காகத் தான் ஆப்ஷனே தந்தேன், நீ லேட் பண்ண பண்ண அதுவும் இல்லாம போய்டும், என்னால பொறுமையா வெய்ட் பண்ண முடியாது.”
‘இப்போதான் கொஞ்சம் மலை இறங்கி வந்திருக்கான், நானே அவனை மறுபடியும் ஏத்திடுவேன் போலயே, ஆனா இப்போ நான் என்ன பண்ணுவேன். என் தந்தைக்கு என் நிலைமை புரியும்?அவர் என்னைப் புரிந்துக்கொள்வார் எனத் திடமாக நம்பியவள் ‘, ஓகே, நான் உன்கூட வந்துறேன் பேபிய விட்டுடு”என்றாள்.
அவளின் இந்த முடிவிற்கு பின் பெரிய காரணமும் இருந்தது, குழந்தை தற்சமயம், இவர்கள் வீட்டு வாரிசு அல்ல குழந்தைக்கு இப்படி நேர்ந்தது என்று தன் அக்காவின் மாமியார் வீட்டிற்கு மட்டும் தெரிந்தால், அது பல சண்டைகளுக்கும், மனக்கசப்புகளுக்கும் வழிவகுக்கும்.
இன்னும் சொல்லப்போனால் அது தன் அக்காவின் பிறந்த வீட்டு உறவையும் அறுத்தெறிய வாய்ப்புள்ளது.
இப்பொழுதே,தன் அக்கா கணவனுக்கு நிச்சயம் சந்தேகம் எழுந்திருக்கும் என ஊகித்தவள் அவர் எப்பொழுது வேண்டுமானாலும் இங்கே வரலாம் என்பதை அறிந்து தான் இருந்தாள்,
சந்தோஷ் வரும் முன் குழந்தையை மீட்க எண்ணினாள்.
மற்றொன்று தந்தை விடயம்.
தான் போகவில்லை என்றாலும் தந்தைக்கு இரத்தம் ஏற்பாடு பண்ணிவிடுவார்கள் தான், ரிப்போர்ட் பொறுத்தவரையில் முன்பு மருத்துவம் பார்த்த மருத்துவமனைக்குத் தொடர்பு கொண்டால் அவர்களே கொடுத்து விடுவார்கள்.
தன் தமக்கை இந்நேரம் அனைத்தையும் ஊகித்து இருப்பாள். இவனின் வருகையையும் அவள் அறிந்ததால் இனி தன் தமக்கை அனைத்தையும் பார்த்துக்கொள்வாள் என்று மிகவும் மனவேதனையுடனே இந்த முடிவை எடுத்திருந்தாள்.
“ம், குட் லெட்ஸ் கோ ஹனி”. என்றான்.
“குழந்தை?”
“நீ இங்க இருந்து கிளம்பின மறுநொடி உன் அக்கா கைக்கு பேபி போய்டும்.”
“சரி.நான் உன்னை நம்புறேன்.”
“ஆஹான், சரி கிளம்பு!”என்று அவளின் கைகளைப் பிடித்துக்கொண்டான்.
“ஒரு நிமிசம்” என்றாள் அவள்.
“என்ன?” என்றான் கடுப்போடு.
“உங்கூட, நான் என்னவா வரணும்?”
“புரியல?”
“என்ன புரியலையா? நைஸ் ஜோக்! டோன்ட் ஆக்ட். உனக்குப் பொண்டாட்டியா வரணுமா? ஃப்ரெண்டா வரணுமா? லவ்வரா வரணுமா? வேலைக்காரியா வரணுமா? அடிமையா வரணுமா? இல்லை, ஆசை நாயகியா வரணுமா? அப்படி வரணும்னா எத்தனை நாள் கான்ட்ராக்ட்? என்ன விலை?”என்று அடுக்கிக்கொண்டே போக
“பளார்” என்று அவளை அறைந்திருந்தவனோ, “ஷட் அப்”என்று கர்ஜித்தான்.
அவன் அடித்ததில் பயந்து மிரண்டு போனவள், சுதாரித்து எழுந்தாள்.
நேராக அவன் சட்டை காலரை ஆக்ரோஷமாகப் பற்றியவள், “ஏன்? எதுக்கு இப்போ என்ன அடிச்ச? உன்னைப் பற்றி தான் எனக்கு ஒன்னும் தெரியாது? நான் கேட்கவும் கூடாது? இப்போ என்னைப் பற்றியும் நான் கேட்கக் கூடாதா? நான் உனக்கு என்னவா இருக்கனும்னும்னு கேட்கக்கூடாதா? எதுவுமே கேட்காம உன் பின்னாடியே வரணுமா? அப்படியே வரணும்னாலும் நான் உனக்கு என்ன செய்யனும்னு நீ சொல்லித்தானே ஆகனும்! என் வேலை எதுனு தெளிவா சொல்லிட்டா அத முடிச்சுட்டு நான் கிளம்புவேன்ல” என்றாள்.
அவள் கைகளைத் தன் சட்டை காலரிலிருந்து எடுத்து விட்டவன், தன் சட்டையைச் சரி செய்துக்கொண்டே அவளை அழுத்தமாகப் பார்த்து இன்னும் நக்கலாகவே, “ஓஹோ! டவுட்டு, கேள்வி கேக்குற? சரி பதில் சொல்றேன்”என்றவன்
“எல்லாமுமாவும் இருக்கனும், முக்கியமா கடைசியா ஒன்னு சொன்னேல அதுக்கு கண்டிப்பா இருக்கனும்!”என்றான் கட்டளையாக.
அவன் கூறியதை கேட்டவளுக்கு சர்வமும் ஆடியது. ஏதோ ஒரு வேகத்தில் அவனிடம் இதைக் கேட்டுவைக்க, கேட்டப் பின் தான் ஓவராய் பேசியது நினைவில் வந்தது “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு”என்பதும், “காலம் கடந்த ஞானோதயம்” என்பதும் அவளுக்கு இப்போது புரிந்தது.
எனினும் அவனை அப்படியே விட மனமில்லாது “எத்தனை நாள்? என்ன விலை?” என்றாள் மறுபடியும்.
அவளின் தைரியம் கண்டு மெச்சுதலாய் ஒரு பார்வை பார்த்தவன் அவளைக் கலங்கடிக்கவே,”ஒரு பொருளை முழுவதும் பார்த்தபிறகு தானே, விலையை நிர்ணயிக்க முடியும்?” என்று சொல்லி அவளை அழுத்தமாய் மேல் இருந்து கீழாக ஒரு பார்வை பார்க்க,
பூமியோடு புதைந்து விட மாட்டோமா?என்றிருந்தது அவளுக்கு.
அவனின் பார்வையில் அவளுக்கு என்ன உணர்வு வந்தது? ஒரு அறுவெறுப்பு.
உடல் கூசிப்போனது. அவன் கூறிய வார்த்தையை அவளால் ஜீரணிக்கவும் முடியவில்லை! அவளின் அமைதியை கண்டு புருவம் உயர்த்தியவனோ,
“ஓ, எத்தனை நாளுன்னு கேட்டியோ? அதுக்கான பதில், என் கையில இல்லை மில்கி, இரண்டே வழிதான் இருக்கு” என்று இடைவெளி விட்டவன்
“ஒன்னு நீ சாகுற வரைக்கும்னு சொல்லலாம்! இல்லாட்டி நான் சாகுற வரைக்கும்னும் சொல்லலாம்?” என்றான் திமிராக.
“ஏ…ன்…?இ…ப்…ப…டி ப…ண்…ற?”என்றாள் திக்கி திணறி.
“பிகாஸ், உன் தப்பு அவ்வளவு பெருசு, நீ பண்ணுன தப்புக்கு இந்தக் கோர்ட்ல அதாவது என்னோட கோர்ட்ல தண்டனை ஆயுள் கைதி, என்னது?ஆயுள் கைதி”
அந்த ஆயுள் கைதியை அழுத்தி சொன்னவனோ” திஸ் இஸ் தி பைனல் ஜட்ஜ்மெண்ட்”என்றிருந்தான்.
“என்ன தப்பு பண்ணினேன்? அதையாவது சொல்லேன்?”
“நோ, நோ, மில்கி, எல்லாருக்கும் தண்டனை கொடுத்துட்டேன். குழந்தையைப் பிரிந்து உன் தமக்கையும், கணவனின் இந்நிலையை கண்ட உன் அம்மாவும் தண்டனை அனுபவிச்சாச்சு, இப்போ, உன் தண்டனை! எனக்கு உன்னைப் பிடிக்கும்கிறதுனாலலாம் உனக்கு பனிஷ்மென்ட் தராம இருக்க மாட்டேன் மில்கி.”
“……….”
“உனக்கான தண்டனையே, நீ என்ன தப்பு பண்ணியிருப்பன்னு நீ யோசிக்குறது தான்”என்றான்.
“இப்படியே விட்டா, கொஞ்ச நாளுல யோசிச்சு யோசிச்சு நான் மெண்டல் ஆகிடுவேன், ப்ளீஸ் சொல்லேன்?”
“வைத்தியம் பார்க்க நான் இருக்கிறேன் ஸ்வீட் ஹார்ட்”என்றான் அவன் ஹஸ்கியில்.
அவளைப் பொறுத்த வரையில் அவனுக்குச் சமாதியே கட்டிவிட்டாள் மனதிற்குள் மட்டும். நிஜத்தில் அவனது நிழலைக் கூட ஒன்றும் பண்ண முடியாது என்கிறது அவளுக்குப் புரிந்தே இருந்தது.
இனி என்ன செய்ய, வாழ்வோ சாவோ அவனோடுதான் என்றாகிவிட்டது. இனி யோசித்து என்ன பயன். கிளம்ப வேண்டியதுதானென என முடிவெடுத்தவள்,”சரி,போகலாம்”என்றாள் திடகாத்திரமாக.
அதனைக் கண்டவனுக்கு அவளை இன்னமும் பிடித்துதான் போனது.
முதலிலே அவனுக்கு அவளைப் பிடிக்கும் தான். அவளை பற்றி ஒன்றுமே அறியாதப் பொழுதே அவளை அவனுக்குப் பிடித்தது.
இந்த இடத்தில் வேறு பெண் இருந்திருந்தால் கண்டிப்பாக ஒரு கண்ணீர் நதியே ஓட விட்டிருப்பாள்.
இல்லையேல் போலீஸ்க்கு போறேன் அது இதுனு கத்தியிருப்பாள்? என்பது திண்ணம்.
ஆனால் ஆத்மி அப்படி அல்லவே?
ஒரிரு முறை கெஞ்சினால், மன்றாடினால் அவ்வளவே.
அழுது ஆர்பாட்டம் செய்யவில்லை. எந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று ஒவ்வொன்றையும் அவள் நேர்த்தியாகவும் செய்கிறாள்.
அவளைப் பற்றிய சிந்தனைகளைப் படர விட்டவனுக்கு. அவளின் மேல் காதல் பெருகவே செய்தது. ஆனால் காதலோடு நடக்கவேண்டிய நிகழ்வு இப்பொழுது பழி தீர்க்க நடக்கப்போகிறதே! விதியின் சித்தம்.
இருவருமாக வெளியே வந்தவர்கள் அவனின் கப்பலில் (காரில்) ஏறிக்கொண்டனர்.
அமைதியாகவே அமர்ந்திருந்தாள் ஆத்மி,எனினும் அவளுக்குள் பல சிந்தனை சுழல்.
‘திக்கு தெரியாத ஒரு இடத்திற்கு செல்லப் போகிறோம்! அங்கே என்ன இருக்கும்? எத்தனை மிருகம் இருக்கோ? அதுல எத்தனை இவனை மாறி இருக்கோ என்று பல்வேறு சிந்தனைகள்’
அவளின் கற்பனை திறன் இது.
அவனின் வீட்டைக் காடாகவும்,அவனின் உறவுகளை மிருகம் என்றும்,அவள் எண்ணிக்கொண்டிருந்தாள் வேதனை என்பதும் சரி அளவில் இருந்தது?
இனி யாரையுமே பார்க்க முடியாதோ, தியா, அக்கா, அம்மா, அப்பா சொல்லிப்பார்க்க அழுகை வரவா வேண்டாமா என்று ரெடியாய் இருந்தது.
உள்ளே அமர்ந்தவள்,காலை முதல் நடந்த அனைத்து சம்பவங்களையும் அசை போட்டாள்.
இவன் வந்து சென்ற சில மணித்துளிகளில் நடந்தேறிய அனைத்து நிகழ்வுகளையும் வைத்துப் பார்க்கும்போது இவன் பெரிய ஆள் என்பது மட்டுமே அவளுக்குப் புரிந்திருந்தது.
அதனால் தான் அவள் போலீசிற்குப் போகும் முடிவையும் கைவிட்டிருந்தாள்.
அவனின் அதிகார தோரணையே சொல்லியது அவன் யாருக்கும் அஞ்ச மாட்டான் என்று.
தான் செய்த தவறு என்னவென்று திரும்ப திரும்ப யோசித்தவளுக்கோ, விடை மட்டும் தெரியவே இல்லை.
ஜந்து வருடங்களுக்கு முன் வரை சென்று பார்த்துவிட்டு வந்துவிட்டாள் ஆனால் தவறு எங்கே? எப்போது நடந்தது என்பதுப் புரியவேயில்லை.
ஒரு வேலை அவள் தவறே செய்யவில்லையோ? இது வேறு யாரோ செய்த வினையா? இல்லை இவளைச் சிக்கவைத்திருக்கிறார்களோ?
இல்லை அவனே கதைக் கட்டிவிட்டிருக்கிறானோ! பொறுத்திருந்து பார்ப்போம்.
காரின் அசாத்திய அமைதியைக் கண்டவன் அவளை பார்க்க, அவளின் நெற்றியில் சிந்தனை முடிச்சுகள்.
“பாத்து,ரொம்ப யோசிச்சு மூளை கலங்கிட போகுது? உன்னால கண்டுபிடிக்க முடியாது மில்கி டோன்ட் ட்ரை”என்றான்.
“ம்ப்ச்,என்ன பிரச்சனை உனக்கு? நான் யோசிக்குறதுக்கு கூட உன்கிட்ட பர்மிஷன் வாங்கனுமா?”என்றாள் கடுப்பாக.
“யெஸ் மில்கி,இனிமே எல்லாத்துக்கும் நீ பர்மிஷன் வாங்கித் தான் ஆகனும்”அந்த எல்லாத்திற்கும் என்பதை அழுத்தி கூறினான்.
“ச்சேய், மொதல்ல அந்த மில்கினு கூப்பிடுறதா நிப்பாட்டு, கடுப்பா இருக்கு!”
“வெல்,எனக்குப் பிடிச்சுருக்கு,அண்ட் உனக்குப் பிடிச்சிருக்கானு நான்க் கேட்கவே இல்லை”என்றான்.
“கடவுளே”,என்று பற்களை நறநறத்தாள்.
“அவரோட கூட நீ என்கிட்டே சொல்லிட்டு தான் பேசணும்”.
“கடவுளை நினைக்குறதுக்கெல்லாம் யாரோட பர்மிஷனும் தேவை இல்லை.மனசில நினைச்சுக்கிட்டா போதும்”என்று பதிலடிக் கொடுத்தாள்.
அவனின் தொலைப்பேசி அழைக்க, “ஹலோ!தேவ் அநபாயன் ஸ்பீக்கிங்” என்றான் அவன்.
“என்னாது, தேவ் அநபாயனா? என்று அவள் வாயைப் பிளக்க!
ஆம், தேவ் அநபாயன், அவள் இந்த சிட்டிக்கு வந்த நாலு நாட்களில் அதிகமாக கேட்டப் பெயர் இந்த அநபாயன்.
பத்திரிக்கைகளிலும்,சக தோழமைகளிடமும், தொலைக்காட்சிகளிலும் என்று அவர்கள் வந்த முதல் நாள் அன்றே எங்குப் பார்த்தாலும் அநபாயன் மயம்.
சற்றுக் கடுப்பாகவே இருந்தது இவளுக்கு இவன் என்ன பெரிய இவனா என்று?அவளிடம் யார் போய் சொல்வது உண்மையில் அவன் பெரிய இவன்தான் என்று!
இன்று கொல்கத்தாவின் மிக முக்கிய பிரமுகர்களில் இவனும் ஒருவன், தொழிலிலும் சரி இவனே முதலாமவன்.
சிறு வயதில் இவ்வளவு பெரிய இடத்தை இவன் பெற்றதின் விளைவே இந்த நிலைமை! இவனைப் பற்றி கூற வேண்டும் என்றால் வெறி!
சிறு வயது முதலே உதாசீனங்களை சுமந்து வளர்ந்தவனின் நினைவில் அவனின் தாய் சிந்திய கண்ணீருக்கும், வேதனைக்கும் அவர்களை இந்த நிலைமைக்கு தள்ளிய ஓவ்வொரு வரையும் மரணப் படுக்கைக்கு தள்ளி கொண்டிருக்கிறான். இன்னமும் தள்ளுவான்.
என்ன தான் காசு பணம் எவ்வளவு இருந்தாலும் இவன் முடிக்க நினைக்கும் விஷயங்களுக்கு ஒரு பவர் வேண்டும் அல்லவா அந்த பவரே அரசியல்.
“ஆம்,அரசியலில் இவன் முகம் தெரியா முக்கியப் புள்ளி”
அது ஒரு கொடுக்கல் வாங்கல்,அவர்களுக்குத் தேவையானவற்றை இவன் செய்து தருவான். அதற்கு பதில் இவன் செய்யும் அட்டூழியங்கள் எதுவும் கண்டுக்கப்பட மாட்டாது.
தாயின் பாசத்திற்கு முன் மட்டுமே கட்டுப்படுபவன்!மற்றவரை இவனுக்கு கட்டுப்பட வைத்துதான் இவனுக்கு பழக்கம் அது இன்று நடந்த ஆத்மி சம்பவம் வரை!.
இப்படிப்பட்டவனின் வாழ்வில் நுழைகிறாள் ஆத்மி, யார் யாருக்காக மாறப் போகிறார்கள்?ஆத்மியின் அந்த ஒரு தப்பு என்ன?அவளை எங்கு அழைத்து செல்கிறான் பார்ப்போம் வாங்க.
(டியர்ஸ் ப்ளீஜ் கண்டிப்பா கமெண்ட் போடுங்க, கதை எப்படி இருக்குங்கிறதே புரிய மாட்டிக்கு, இது என் முதல் முயற்சி, பொதுவாக முதல் முயற்சிக்கு ஊக்கம் என்பது எவ்ளோ முக்கியம்னு உங்களுக்கே தெரியும் குறைந்தது ஒரு வார்த்தையிலாவது சொல்லிட்டு போங்க டியர்ஸ், ப்ளீஸ்)