நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-5

அவனின் தொலைப்பேசி உரையாடல் ஒரு முடிவுக்கு வர, அவனைப் பற்றி அவள் அறிந்ததையெல்லாம் மனக்கண்ணில் யோசித்து முடித்தவளும்,அவனை அதே நேரம் நிமிர்ந்து பார்த்தாள். 

 

இவன் என்ன என்று இடது புருவத்தை ஏற்றி கேட்க அவளோ அவனின் செய்கையில் முகத்தை திருப்பிக் கொண்டாள். அதில் கடுப்பானவன் ‘இனிமே தான் உனக்கு இருக்கு’ என்று மனதிற்குள் சூளுறைத்துக் கொண்டான்.

 

பாவம் அது அவளுக்கு கேட்கவில்லை!

 

அந்த கப்பல் தன் பயணத்தை இருபது நிமிடங்களில் முடித்துக்கொள்ள,அந்த பிரம்மாண்ட வீட்டின் முன் நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்று தன் யாத்திரையை முடித்துக் கொண்டது.

 

காரில் இருந்து இறங்கியவன் “ஹனி,உனக்கு ஆரத்தி எடுக்கலாம் யாரும் வரமாட்டாங்க. சோ,இறங்கு!” என்றான் கட்டளையாக.

 

அவனை முடிந்த மட்டும் முறைத்து விட்டு இறங்கியவள், அந்த வீட்டின் பிரம்மாண்டத்தில் மிரண்டுப் போய்விட்டாள். தன் இல்லத்தை விட ஐந்து மடங்கு விசாலமானதாக இருந்தது அந்த கட்டிடம். அந்த கட்டிடத்தின் வெளிப்புறத்தைப் பார்த்தே இதை புரிந்துக்கொண்டிருந்தாள் பெண்.

 

அவள் ஒரு மனுசி, அங்கே இருக்கிறாள் என்பதை சட்டை செய்யாது நேராக உள்ளே சென்று விட்டான் தேவ். இவளுக்கு தான் ஒன்றும் புரியவில்லை ‘என்ன எதுவும் சொல்லாம போய்ட்டான்? இப்போ எங்க போகனும்? என்ன செய்யனும் என்று பல்வேறு கேள்விகள் ரெடியாய் தொக்கி நிற்க! பதிலோ நீ யார்?என்று கேட்டு அவளை விட்டு வெகு தூரம் சென்றிருந்தது.

 

காலம் முழுக்க அவளுடைய கேள்விகளுக்கு விடை கிடைக்காமலே போய்விடுமோ? முடிவு விதியின் வசத்தில்.

 

*********

தேவ் அழைப்பேசியில் உரையாடியதை வைத்தே ஒரு அளவுக்கு நடந்ததை ஊகித்திருந்தாள் அபர்ணா. பின் அவள் மடமடவென யோசனை செய்து முடித்திருந்தாள். அவன் சொல்லியது போலவே,சிறிது நேரத்தில் குழந்தையும் அவளின் கைகளுக்கு வந்துவிட அப்பொழுது தான் நிதானமாக மூச்சே விடமுடிந்தது அவளால்.

 

பணம் அவர்களுக்கு அவ்வளவு பெரிய பிரச்சனை இல்லை,தன் தந்தையின் பி.எப் பணமும் சரி,தங்கை ஆத்மியின் பெயரில் இருந்த சேமிப்பும் கணிசமாகவே இருந்தது. 

 

தாய் ஆத்மி எங்கே என்று விடாது கேட்டுக் கொண்டே இருக்க எதைஎதையோ சொல்லி சமாளித்தாள்.

 

சந்தோஷ் வேறு விடாது அழைத்துக்கொண்டிருக்க அழைப்பை ஏற்று அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் என்பதை மற்றுமே கூறியிருந்தாள். அவனும் உடனே வருவதாக கூறியிருந்தான்.

 

தந்தையின் ரிப்போர்ட்களை ஒருவாறு திரட்டி தனி ஆளாக மிகவும் சிரமப்பட்டாள் அபர்ணா. இதற்க்கிடையில் டோனரும் கிடைத்துவிட, சற்றே ஆசுவாசமாக உணர்ந்தாள்.

 

தந்தையிடமும் தாயிடமும் எப்படி கூற என விழி பிதுங்கி நின்றவளோ, சந்தோஷ் வந்ததும் முடிவெடுப்போம் என்று சற்றே தன்னை தேற்றிக்கொண்டாள்.

 

அங்கே, தயாளனுக்கு ஆப்ரேசன் செய்ய ஏற்பாடாகிற்று!

 

**********

 

பேந்த பேந்த முழித்துக்கொண்டிருந்தவள்,  சுற்றும் முற்றும் பார்க்க, அந்த வீட்டின் நேர்த்தியும்,அழகும்,செழுமையும் அவர்களின் சொத்து மதீப்பீட்டை எடுத்துக்கூற திகைத்துதான் போனால் பெண்.

 

சிறிது நேரம் அப்படியே கழிய,தந்தை எப்படி இருக்கிறாரோ என்று பயந்தவள்,தான் கையோடு எடுத்து வந்திருந்த தனது செல்போனில் அபர்ணாவிற்க்கு அழைக்கலானாள்.

 

ரிங் போக,அபர்ணா எடுத்து “ஆத்மி” என்க.

 

“அக்கா” என்று அவள் அழைத்த நொடி, அவளின் காதில் இருந்த தொலைப்பேசியை பிடுங்கி,சுக்கு நூறாய் உடைத்திருந்தான் அவன்.

 

அதை கண்டு திடுக்கிட்டவள்,”ஏய்!” என்று குரலை உயர்த்த,

 

இந்த சத்ததில் வெளியே வந்திருந்தார் தேவின் தந்தை.

 

“என்ன ஏய்? அது இதுங்கிற நான் என்ன ஆடா மாடா?” என்று கத்தியவன் “எவ்ளோ தைரியம் உனக்கு?” என்க.

 

“இப்போ நான் என்ன பண்ணிடேன்னு இப்படி கத்துற?என்று கேட்டிட.

“என்ன பண்ணுனியா?இப்போ யாரு கூட பேசிட்டு இருந்த?”என்றான்.

 

“நான் யாரு கூட வேணும்னாலும் பேசுவேன் உனக்கு என்ன?” என்றாள்.

 

“அப்படியெல்லாம் இனிமே, இங்க பேசமுடியாது?டூ யூ கெட் தட்!” என்றான் கட்டளையாக.

 

“இங்க பாரு நீ கூப்பிட்டதும் வந்துட்டேன், நீ சொல்றதுலாம் கேட்பேன்னு மட்டும் நினைக்காத?’என்றாள்.

 

“ஓ,என்ன சௌண்ட் ஜாஸ்தி வருது! ஓ,பேபிய விட்டுடேன்னு தைரியமா பேசுறியா”என்றவன் அவளை ஏளனமாக ஒரு பார்வை பார்க்க.

 

‘எதுக்கு இப்போ இவன் இப்படி ரியாக்ட் பண்றான்?’ என்று மனதில் நினைத்தவள்’சரி என்ன தான் சொல்றான் பார்ப்போம்’ என்று நின்றிருந்தாள்.

 

அவளின் பயந்த விழிகளை எதிர் பார்த்திருந்தவனுக்கோ,அது கிடைக்காமல் போக,அவளை கலங்கடிக்கவென்றே வைத்திருந்த அந்த விடயத்தை கூறினான்.

 

அதை கேட்டவளுக்கோ, உலகம் தட்டாமல் சுற்றியது! பயந்து போனாள் பெண் திக்கி தடுமாறி, “எ…ன்…ன…சொ…ன்…ன?”என்று கேட்டாள்.

 

“ஏன்?புரியலையா?இல்லை மறுபடியும் கேக்க அவ்ளோ ஆசையா ?சரி சொல்றேன்”என்றவன் அதை மறுபடியும் கூற!

 

நிற்க திராணி இல்லாது மடித்து அமர்ந்துவிட்டாள் பெண். இப்படியும் ஒரு மனிதன் இருப்பானா? இவன்லாம் என்ன ஜென்மம்?என் இத்தனை வருட கனவை தகர்க்க பார்க்கிறான்? இந்த மிருகத்தை  மட்டும் மனுச உருவத்துல படைச்சுட்டார் கடவுள்’என்று நினைத்துக் கொண்டவளின் கண்களில் இருந்து கண்ணீர் வற்றாத நதியை போல் வந்துக்கொண்டிந்தது. 

 

அதை கண்டு திருப்தி உற்றவனாக,”சரி மில்கி, இனிமே இங்க இருந்து போகனும்னு கனவுல கூட நினைக்க மாட்டன்னு எனக்கு தெரியும்,சோ நீ சமத்தா இருப்பியாம்’ என்று கண்ணடித்துக் கூறியவன் “ஹேவ் எ நைஸ் டே” என்று வேறு கூறிவிட்டு போக,மனதிற்க்குள் அவனை ‘பல வெறி நாய்களை கொண்டு கடிக்க விடுவதுபோல் கற்பனை செய்துக்கொண்டவள். பின் ‘இவன் தான் அதுங்களை கொல்லுவான், பாவம்,வாயில்லா ஜீவன்’ என்று நினைத்துக் கொண்டாள்.

 

‘எப்படி தெரிந்தது அவனுக்கு? தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அவனுக்கு எப்படி தெரிந்தது?’ என்று கேள்விகள் அவளை குடைய வழக்கம் போல் விடை கிடைக்கவில்லை. 

 

“என்ன மில்கி! இது எப்படி இவனுக்கு தெரியும்,எப்படி கண்டுப்பிடிச்சான் அதானே யோசிச்சுட்டு இருக்க?”என்று அவளின் மன ஓட்டத்தை சரியாகவே கணித்தவன்.”இதுலாம் எனக்கு ஒரு விஷயமே இல்ல,ஒருத்தரை பத்தி தெரிஞ்சுகனும்னா எந்த எல்லைக்கும் போய் கண்டுபிடிப்பேன்” என்றான் .

 

அவனை மறுபடியும் ஒரு முறை கொலை செய்தவள்(எத்தனை தடவை தான்டா சாவ-என் மனசாட்சி) மனதிற்குள் மட்டும்!

 

‘அனைத்து கதவுகளும் அடைப்பட்டது. இனி தப்பிக்கும் மார்க்கமும் இல்லை, வாழ்வின் எல்லை வரை இங்கேயே தான் கழியுமோ? இனிமேல் என்ன செய்ய?வாழ்க்கை இன்னும் எனக்கு எத்தனை சோதனைகள் வைத்திருக்கிறது’ என எண்ணி  துவண்டு போனால் பெண். 

 

இனி என்ன? என்பது மட்டுமே இப்போதைக்கு மிக முக்கிய கேள்வியாகப் பட்டது.ஒரு நாளின் இத்தனை அதிர்ச்சிகள் தாங்க முடியவில்லை அவளால். மயங்கி சரிந்திருந்தாள் பெண், தாங்கி கொண்டான் ஆண்.

 

அதை கண்ட அவனின் தந்தையென பட்டவர் பதறி ஓடி வர “அங்கேயே நில்லுங்க?உங்களை  யாரும் இங்க கூப்பிடல?ஸ்டே இன் யுவர் லிமிட்ஸ்!” எனக் கூறியவன் அவளை தன் கைகளில் தூக்கி கொண்டான்.

 

“இல்லை அந்த பொண்ணு…” என்று ஆரம்பித்தவரை முறைத்தவன் வெடுவெடுவென வெளியே அவளை தூக்கிச்சென்றான்.

 

அந்த அளவான அழகான சிறிய வீட்டில் உள்ளே சென்றவன் அவளை பெட்டில் கிடத்தினான்.அவளை நேராக படுக்க வைத்தவன்,அவளின் முகத்தை பார்க்க மாசு மருவற்ற அந்த அழகான முகம் அவனை அன்று போல் இன்றும் ஈர்த்தது. முதன் முதலில் அவளை சந்தித்த நிகழ்விற்கும் அழைத்து சென்றது.

 

************

இருபத்து இரண்டு வருடங்களுக்கு முன்,

 

ஊட்டி…

 

அந்த குளிர் பிரதேசத்தின் குளிரை அனுபவித்தப்படி நடந்து வந்துக்கொண்டிருந்தான் எட்டு வயது தேவ். சுற்றும் முற்றும் பார்த்தபடி வந்தவன் அவளின் அழுகையில் அங்கே பார்த்தான். 

 

“எனக்கு பால் வேண்டும்.” என்று அழுதுக்கொண்டிருந்தது மூன்று வயது பிஞ்சு ஒன்று. 

 

சில நேரங்களில் வேண்டும் என்றே அடம்பிடிப்பார்கள் சில சேட்டைக்கார பிஞ்சுகள். பல நேரங்களில் சமத்தாய் இருந்தாளும்,எங்காவது தெரியாத இடம் ,நிறைய புது நபர்கள், ஏதோ ஒன்று அக்குழந்தைக்கு வித்தியாசமாய் தெரிந்தால் இப்படி தான். 

 

அந்த ஊரை சுத்தி பார்க்கவென வந்தவர்கள் குழந்தையின் அழுகையை எப்படி நிறுத்த என விழி பிதுங்கி நிற்க, குழந்தை இன்னும் அழுதது, எனக்கு பால் வேண்டும் என்று. பக்கத்தில் கடை எதுவும் தென்ப்படாததால் மிகவும் தவித்தனர்.

 

அந்த குழந்தையின் பால் முகத்தை கண்டு ஈர்க்கப்பட்டவன் அக்குழந்தையிடம் சென்று “ஹாய்…”  என்று சொல்லியவனுக்கு அவளின் பெயர் தெரியாதே என்று அப்போது தான் புரிந்தது. 

 

அவளின் பால்முகம் கண்டு “மில்கி,ஏன் அழறீங்க?” என்றான்.

 

அவனை சட்டை செய்யாதவள் முறைத்துவிட்டு மறுபடியும் அழுதாள்.சிறிது நேரம் யோசித்தவன்.

 

“மில்கி,நீ டோரா பாப்பியா?” என்றான்.

 

டோரா என்று சொன்னதும் சற்று உற்சாகமானவள் “ஆஹ் பாப்பேன் என்றாள்”கண்கள் மின்ன

 

“டோரா எங்காச்சும் வெளியே போனா என்ன என்ன எடுத்திட்டு போவா?”என்று கேட்டவனிடம்.

 

“பேக்பேக்,மேப்,வாட்ச்…..ம் அப்றம்” என்று யோசித்தவளை கண்டு சிரித்தவன்.

 

“பேக்பேக்ல என்ன இருக்கும்?”

 

“ஆஹ்,எல்லாமே இருக்கும்”என்றது அந்த இளம் கன்று!

 

“யெஸ்,நீங்க சின்ன பாப்பாவா?” எனக் கேட்டான். 

 

“இல்லையே,நான் பெதிய பாப்பா”என்றது அந்த வளராத குழந்தை.

 

“குட்,அப்போ இனிமே உங்களுக்கு என்ன என்ன வேணுமோ அதை நீங்க தானே பேக்பாக்ல எடுத்திட்டு வந்திருக்கணும்”என்க யோசித்தது குழந்தை. 

 

அதன் பின் அவள் அழவில்லை. அவளின் பெற்றோர்கள் நன்றி உரைக்க அத்தோடு “பாய் மில்கி”என்று சென்று விட்டான்.

 

அவளை அவன் மறக்கவில்லை அவள் மறந்துவிட்டாளே, எனினும் அன்று முதல் அவள் எங்கே சென்றாலும் தனக்கு வேண்டியதை எடுத்து வைத்துவிடுவாள். அவன் சொன்னதை நியாபகம் வைத்து இன்று வரை பின்பற்றுபவளோ,அவனை நியாபகத்தில் வைக்கவில்லை!

இதனால் பாதிக்கப்பட போவது யாரு?

 

**********

கடந்த காலத்தை விட்டு வெளியே வந்தவனின் நினைவுகள் அவளின் தவறை பற்றி நினைக்க கண்கள் சிவந்தது.

 

அவளின் முகத்தில் ஒரு பக்கெட் தண்ணீரை ஊற்றினான்.

 

பதறி எழுந்தவள் ,ஒன்றும் புரியாது விழிக்க, அதை சட்டை செய்யாதவன் “நீ மயக்கம் போட்டது தப்பில்லை! ஆனா அதுக் கூட நான் உனக்கு கொடுக்கும் தண்டனையா மட்டும் தான் இருக்கனும்!”என்றவன்.

 

அவளின் முகத்தில் அந்த மயக்க மருந்து ஸ்ப்ரேவை அடித்தான். மலங்க மலங்க விழித்தவள் மறுபடியும் மயங்கி சரிந்திருந்தாள்.

 

அதை கண்டவன் “மில்கி,தூங்கிக்கோ இன்னைக்கு ஒரு நாள் நல்லாவே தூங்கிகோ!”என்று கத்தி சொன்னவன் அங்கிருந்து சென்றிருந்தான்.

 

வெளியே வந்தவனின் அலைப்பேசி அழைக்க எடுத்தவனோ, அந்த பக்கம் கூறிய செய்தியை கேட்டு அதிர்ந்து விட்டான்

 

தனது ராயல் என்பீல்டை எடுத்தவனோ, அதை அவசரமாக உயிர்ப்பித்துவிட்டு சென்று விட்டான். 

 

ஆத்மியின் மேல் இப்படி உயிரையே வைத்திருந்தும் ஆவளை இப்படி கொடுமை செய்வதன் நோக்கம் என்ன?இப்பொழுது யாரை பார்க்க போகிறான்?

(ஒன்னுமே புரியல டியர்ஸ் உங்களுக்கு தெரிஞ்சா எனக்கு சொல்லுங்க)