நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-8

தேவ் இவளை உடனே திருமணம் செய்ய முடிவு எடுத்ததற்கான காரணம் அவனின் தாயே ஆவார். 

தாயின் சந்தோஷத்திற்க்காக, இல்லையென்றாலம் ஆத்மியை திருமணம் செய்திருப்பான் தான்! 

ஆனால் அதற்கு இன்னும் சில நாட்கள் ஆகியிருக்கும். தாய் தன்மேல் வைத்திருக்கும் கோபத்தில் பாதியையாவது அது குறைக்கும் என்று நம்பியிருந்தான். இந்த முடிவையும் நேற்றே எடுத்து விட்டிருந்தான்.

அவனின் “கல்யாணம்” என்ற சொல்லில் கோபத்தின் உச்சிக்கே சென்றவள். “இப்போ என்ன உனக்கு? இப்போ மட்டும் நீ என்ன எப்படி நடத்துற? புதுசா கல்யாணம்னு சொல்ற?”

“லுக்,உன்கிட்ட நான் எதுவுமே கேக்கல,அந்த ப்ளா ப்ளா லாம் கேக்க எனக்கு டைம் இல்லை”என்றான்.

“கேட்கக்கூடாதா? உன்னை பொறுத்த வரை கல்யாணம் ஒரு விளையாட்டா இருக்கலாம். எனக்கு கல்யாணம்னா அது ஒரு தடவை மட்டும் தான் இருக்கணும்!” என்றாள்.

“ஓஹோ! ஒரு தடவை அந்த ஒரு தடவை நான் பண்ணுனதா இருந்துட்டு போகட்டும்!” என்றான்.

“உன்ன கல்யாணம் பண்ணுவேன்னு எப்படி  நீ நினைக்கலாம்?” என்றாள்.

“என்ன வார்த்தைலாம் தெம்பா வருது! இவ்ளோ நேரம் எப்படி இருந்தனு அடையாளமே தெரியலை” என்றான்.

“வாழ்க்கைன்னு வரும்போது குறிப்பா பேசியே ஆகனும் இல்லாட்டி சாகனும்னா பேசித்தானே ஆகனும்” என்றாள்.

“ஓ! ஐ சி. இங்கே பாரு மில்கி, நான் உன்கிட்டே என்னை கல்யாணம் பண்ண உனக்கு சம்மதமானு கேட்கவேயில்லை” என்றான்.

“நீ கேக்கமாட்டன்னு எனக்கு தெரியும்! அதான் நானே என்னை காப்பாத்திக்கிறேன்” 

“புரியல”

“உன்னை பொறுத்த வரைக்கும் நான் பத்தோட ஒண்ணு பதினொன்னு,அவ்ளோ தான். பட், எனக்கு வாழ்க்கைல எனக்குனு ஒருத்தன் இருக்கணும்! அது நீயா மட்டும் இருக்கக்கூடாது” என்றவளின் வாக்கியம் அவனை கொதிநிலைக்கு எடுத்து சென்றது. 

“ஆமா டி, எனக்கு நீ பத்தோட ஒண்ணு பதினொன்னு இல்ல, நூறு இல்ல ஏன் ஆயிரம் அதுல ஒருத்தி தான். உன்னை விட பேரழகிகளையும் பார்த்தவன் தான்” என்றான் கோபமாக.

“அது தான் நானும் சொல்றேன்,எனக்குனு ஒருத்தன் இருக்கணும்! உன்னை மாதிரி இவ போனா அவன்னு இருக்கிறவன்லாம் எனக்கு தேவையில்லை” என்றாள்.

அதில் இன்னமும் கடுப்பானவன் அவளை நெருங்கி போக,அவள் பயந்துபின்னாடி நகர, அவன் அவளை நெருங்க நெருங்க இவள் பின்னே செல்ல,சுவற்றில் மோதி நின்றாள். 

அவனும் அவளை உரசியபடியே நிற்க, அவன் மூச்சுக் காற்று அவளை தீண்ட, இரண்டு பக்கமும் கைகளை ஊன்றியவன் “இப்போ பேசு,தைரியம் இருந்த பேசு” என்க.

“என்ன வழக்கம்போல் மிரட்ட போறியா? இனியும் எதை சொல்லி மிரட்ட போற? வேற என்ன இருக்கு மிரட்ட?”

“நோ வே,மில்கி! எனக்கு சந்தேகமா இருக்கு? ஒரு வேலை எவனையும் லவ் பண்றியோ!” என்றவனின் கேள்வியில் கோபம் ஏற.

“ஆமாம்,அப்படித் தான் வச்சுக்கோ! இப்போ என்ன அதுக்கு?ஒரு வேலை நான் இன்னொருத்தன் பொண்டாட்டியா இருந்தா என்ன பண்ணிருப்ப? அப்பவும் கல்யாணம் பண்ணியிருப்பியா” என்க.

“ஆமா! ஆனா அப்படியேயில்ல, உன் புருஷனை கொன்னுட்டு உன்னை கல்யாணம் பண்ணியிருப்பேன்!” என்று கர்ஜித்தவன்.

“போதும் நிறுத்து உன் உளறலை நிறையவே கேட்டுட்டேன். நாளைக்கே நமக்கு கல்யாணம்!”என்றிருந்தான்.

“நான் ஒத்துக்காட்டி”

“இதுவரை நீ ஒத்திகிட்டுதான், இங்கே எல்லாம் நடந்துச்சா?அப்படியே இதுவும் நடக்கும்! அப்றம் அந்த பத்தோட ஒண்ணு பதினொன்னு. சில பீஸ் ஒரே நைட்ல போர் அடிச்சிடும். ஒரு சில பீஸ்தான் காலத்துக்கும் இருந்தா நல்லா இருக்கும்னு தோணும். அதான் நீ, பயப்படாத எப்போ எனக்கு நீ போர் அடிக்கிறாயோ,அப்போவே உனக்கு டிவோர்ஸ் கொடுத்திடுறேன்” என்றவனை கண்டவளுக்கு  ஆத்திரம் வர.

“பொம்பளை பொறுக்கி”என்றிருந்தாள் ஆத்மி.

அந்த வார்த்தைகளை கேட்டவனுக்கு சினம் தலைக்கேற அவளின் கழுத்தை நெறித்தவன், “யூ ,உனக்கு எவ்ளோ திமிரு இருந்த என் முன்னாடி இப்படி பேசுவ. உன்கிட்டே எத்தனை தடவை சொல்லிருக்கேன், என்கிட்ட பாத்து பேசுனு. உனக்கு அது புரியவே மாட்டேங்குதுல இன்னைக்கு புரிய வைக்குறேன்”என்று கத்தியவன்.

அவள் குரல்வளையை நெருக்க,வலியில் அவள் துடிதுடிக்க, அவளின் கண்களில் என்ன கண்டானோ? அவளை சட்டென விட அவள் பிடிமானம் இன்றி கீழே விழுந்திருந்தாள். 

அதில் வலது கால் பிரண்டுவிட்டது.அந்த வலியும் சேர்ந்துக்கொள்ள “அம்மா” என்று கத்தியிருந்தாள்.

அதில் அவளை மறுபடியும் பார்த்தவன், “இனிமே உன் வாழ்க்கை இந்த பொம்பள பொறுக்கியோட தான்! டூ யூ கெட் தட். அப்புறம் இன்னொரு விசயம் நான் எப்படிப்பட்ட பொறுக்கினு நாளைக்கு நைட்டு காட்டுறேன் உனக்கு” என்றவனோ விறுவிறுவென சென்றுவிட்டான்.

அழுகை- பொதுவா சொல்லுவாங்க,பெண்  பிள்ளைகள் அழக்கூடாதுனு?

அப்போ என்ன வெங்காயத்துக்கு கடவுள் அப்படி ஒரு உணர்வை கொடுத்திருக்கிறார்? 

பெண்ணோ? ஆணோ?அழுகை வந்தால் அழ வேண்டியதுதானே,அழுகையை அசிங்கமாக நினைத்தால் அது அசிங்கம். அதையும் ஒரு உணர்வாய் பார்த்தால் அது ஒரு உணர்வு.  அதை ஒரு வைத்தியமாக பார்த்தால் அது ஒரு வைத்தியம். 

அது பார்ப்பவர்களை சார்ந்தது!

அதனால் நான் என்ன சொல்ல வரேன்னா நல்லா அழுங்க, ஒரு சிலருக்கு அழுதால் தான் அந்த கவலை மறையும்! அழுவதால் பயன் என்ன என்று சிலர் கேட்பர். அதே சிலரும் அவர்கள் வாழ்வில் என்றேனும் ஒருநாள் அழுதேயிருப்பார்கள். அழுகை ஒரு வரம் அதை மதிப்பவர்களுக்கு. அழுகை ஒரு சாபம் அதை மதிக்கத் தெரியாதவர்களுக்கு!

(மக்களே இது என் சொந்த கடுப்பு.)

அடுத்தடுத்து இப்படி சோதனைகள் வந்துக்கொண்டே இருந்தால் அவளும் தான் என்ன செய்வாள் துவண்டு போனவள் கண்களை அழுந்த துடைத்துக்கொண்டாள் எனில் முடிவெடுத்து விட்டாளோ?

(என்ன முடிவுனு கெஸ் பண்ணுங்க டாலிஸ்)

***********

வெளியே சென்றவன் அவனின் அழைபேசி அழைக்க,அதை எடுத்தவன்.

“ஹலோ!” என்றான்.

“…………”

“இப்போ என்னால முடியாது”

“………..”

“இப்போ எதுக்கு தேவையில்லாம பேசுறீங்க,போட்டோ அனுப்புங்க முடிச்சுறேன்” என்றான்.

“…………”

“இது தான் லாஸ்ட்டா இருக்கணும் இனிமே என்னை இதுக்கெல்லாம் கூப்பிடாதீங்க”என்றவன் சட்டென போனை வைத்திருந்தான்.

“இவனுக வேற உயிரை எடுக்குறானுக! பெரிய ****  நினைப்பு இவனுகளுக்கு.இவனுகனால ஒன்னும் **** முடியாதுனு தானே என்கிட்ட வரானுக” என்றவனின் அலைப்பேசிக்கு மெசேஜ் வந்ததின் அறிகுறியாக சௌண்ட் வர, அதை எடுத்து பார்த்தவன் அந்த புகைப்படத்தை டவுன்லோட் செய்து பார்த்து அதை ஹரிக்கு அனுப்பிவிட்டு போன் செய்து கட்டளைகளை இட்டான்.

***********

அதே இடத்தில் அமர்ந்தவளின் முன் சில பைகளை கொண்டு வந்து வைத்தான் தேவ். அவள் எதிர்வினை காட்டாமல் இருக்க, ஒரு கத்தியை எடுத்து அவன் கைகளில் வைத்திருந்த அந்த பூனையின் உடலில்  கீறல் போட்டான். 

அதிலிருந்து இரத்தம் வடிந்து அவள் கைகளில் விழ,பயந்து போய் பார்த்தவள்,அவன் கைகளில் இருந்த அவளது செல்ல பிராணியான கிட்டியை பார்த்து கதறிவிட்டாள்.

“கிட்டி, டேய் என்னடா பண்ணினா என் கிட்டிய? பரதேசி நாயே”என்று அழுகையின் ஊடே சொல்ல.

“கொன்னுட்டேன்” என்றான் கூலாக.

“ஏன் டா? எதுக்கு? நீயெல்லாம் என்ன ஜென்மம்?” என்று கதறி துடிக்க.

“வெல், உனக்கு இந்த பூனைனா உயிராமே,கேள்விப்பட்டேன். இதுக்கும் நீனா உயிரு போல அதான் நீயெல்லாம எப்படி இருக்கும். நீயில்லாம இது சாப்பிடலையாம்,தூங்கலையாம் ஒரே கவலையாம் அதான், கொன்னுட்டேன். ஏன்னா,மனுசன் உன்னை நேசிச்சாலேகொன்னுடுவேன்”  என்றவன் 

“இதை விடுவேனா? என்னை தவிர உன்னை யாரும்,எதுவும் நேசிக்கக்கூடாது அப்படி நேசிச்சா இப்படித்தான் பண்ணுவேன்” என்றான்.

கிட்டியின் உடலை பார்த்து கதறி அழுதவளை சட்டை செய்யாதவன் உனக்கு டிரஸஸ் வெச்சிருக்கேன். அன்னைக்கு என்ன சொன்ன? உனக்கு மட்டும் நீ போடுற ட்ரெஸ் பிடிச்சப்போதும்னு தானே. 

இன்னைக்கு இனிமே நான் கொடுக்கிற ட்ரெஸ்ஸை தான் நீ போட்டுக்கணும்” என்றுவிட்டு சென்றிருந்தான்.

கிட்டியை குழந்தையைப் போல் வளர்த்தாள் ஆத்மி,அவள் வீட்டின் பக்கத்தில் கிட்டியை ஈன்றெடுத்து தன் உயிரை விட்டிருந்தது அதன் தாய். 

அக்கம் பக்கத்தினர்,அதை ப்ளூ கிராஸ்ல கொடுக்கலாம் என்க. 

“வேண்டாம்,நான் பாத்துக்கிறேன்” என்றவள் ஒரு குழந்தையை போல் வளர்த்து வந்தாள். 

சென்னையிலும் சரி இங்கே வரும்போது கூட பல போரட்டங்களுக்கு பின் தான் அதை தன்னுடன் இருத்திக் கொண்டாள். அங்கேயே விட்டுவர சொல்லி பெற்றோர் எவ்வளவோ சொல்லியும் கேட்காது தன்னோடு வைத்துக்கொண்டாள்.

‘ஒரு வேலை அங்கையே விட்டுட்டு வந்திருக்கணுமோ?’ அவள் மனம் ஊமையாய் கதறியது. 

“என்னால் தான் எல்லாம். நான் தான் உன்னை  கொன்னுட்டேன் கிட்டி” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். அவள் அழுகை அங்கே எதிரொலித்தது.

***********

இருட்டான அறை 

தேவின் போனுக்கு நிழல் படமாக வந்திருந்தவன். இங்கே,நிஜத்தில் அமர்ந்திருந்தான்,அவனின் இரு கைகளும் கட்டப்படவில்லை மாறாக இரண்டிலும் ஊசி ஏறிக்கொண்டிருந்தது.

அவனைச் சுற்றி நால்வர்.அங்கே,தன் காலடிகள் மண்ணில் பதித்து வந்துக்கொண்டிருந்தான் தேவ்.

வந்தவன் அங்கிருந்த அவனின் கார்ட்ஸிடம் கண்ஜாடை செய்ய, அவர்கள் அவன் மேல் தண்ணீரை ஊற்ற,எழுந்துக்கொண்டவன் அவர்களை புரியாது நோக்க,

அவனுக்கே எதிரே இருந்த காலி நார்காலியில் அமர்ந்துக்கொண்டே”என்ன மிஸ்டர்.ஜீவா,எப்படி இருக்கீங்க? என்றான்.

“டேய் யாருடா நீங்க? என்னைய என்ன டா பண்ணி வெச்சிருக்கீங்க?உங்களுக்கு என்னடா வேணும்” என்றான் ஜீவா எனப்பட்டவன்.

“வெல், எங்களுக்கு என்ன வேணுமோ அதை நாங்களே எடுத்துப்போம், கேட்டுட்டுலாம் இருக்க மாட்டோம். உனக்கு ரெண்டு சைடும் ஊசில மெதுவா மயக்க மருந்து ஏறுது. இன்னும் கொஞ்ச நேரத்துல அகைன் மயங்கிடுவ. இன்னொரு முக்கியமான விசயம் நீ ஆடுனா உன் கையில ஊசி கிழிச்சு இரத்தம் வந்திடும்,அப்றம் உன் இஷ்டம்”.

அதில் சற்றே பயந்தவன்,”எதுக்கு இப்டி பண்றீங்க,ப்ளீஸ் என்ன விட்டிடுங்க.” என்று அவன் கெஞ்ச.

“நீ விட்டிருந்தா,இவ்ளோ தூரம் வந்திருக்காதே,உனக்கு நிறைய வார்னிங் கொடுத்திருக்கோம். நீ கண்டுக்கலை.சோ,போடலாம்னு டிசைட் பண்ணிட்டோம்” என்றான்.

“இல்ல சார்,அது வந்து…”

“போதும் வாய மூடு, நீ எதுவும் சொல்ல வேணாம். உனக்கு தண்டனை கொடுத்தா அது நீ பண்ணினதாலேனு ஆகிடும்.சோ,எப்போவும் தப்பு பண்ணினவனுக்கு தண்டனை கொடுக்குறத விட தப்பு பண்ணினவனோட மனசுக்கு பிடிச்சவங்களுக்கு தண்டனை கொடுத்தா அதானே சிறப்பு”.

“…………”

“ஹரி”

“யெஸ் சார்” என்றவன், ஒரு மங்கையை வாயையும்,கைகளையும் பின்னே கட்டியவாறு  இழுத்துக் கொண்டுவர அவளை கண்ட ஜீவாவிற்கு சர்வமும் ஆடியது.

“வேணாம் அவளை விட்டிடுங்க. அவளுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை”.

“கரெக்ட் தான்,ஆனால் அவளுக்கும் உனக்கும் சம்பந்தம் இருக்கே? ஒன்னு பண்ணு வேணும்னா உன் பேமிலில உன் தங்கை இருக்காளே அவளை தூக்கிட்டு வர்றோம் இவளை விட்டிடுறோம் ஓகேவா? இல்லாட்டி நீ வந்து இவளை சண்டைப் போட்டு காப்பாத்து,எழுந்து வா”என்க.

அவன் வராது போகவே,”சோ,எழுந்து வர மாட்ட? கை தானே போனா போகட்டும் வா. இப்போ, நீ இங்க வரணும்,இல்லாட்டி இவ கையை வெட்டி எடுத்திடுவேன்” என்றான்.

“…….”

அவன் யோசிக்க,”என்ன யோசனையெல்லாம் பலமா இருக்கு? அவ கையை வெட்டி எடுத்ததுக்கு அப்புறம் தான் வருவ போலையே? இவன் சரிப்பட்டு வரமாட்டான்,ஹரி,அந்த அரிவாளை குடு நானே இவ கையை வெட்டுறேன்”என்றான்.

இப்பொழுதும் அவன் ஒன்றும் செய்தான் இல்லை.அவனை ஒரு நிமிடம் ஆழ பார்த்தவன்,அரிவாளை ஓங்கி படார் என வெட்டியிருந்தான்.

(டாலிஸ்,ஐ எம் ஜோ ஜாரி,இந்த பதிவை படித்துவிட்டு நீங்க என்னைய வெட்ட தேடுவீங்கனு தெரியும் என்ன பண்றது?ஆன்ட்டி ஹீரோனா இந்த மாதிரி எல்லாம் பண்ணனுமாம் வெளியே பேசிக்கிட்டாங்க,அப்றம் இவனை காமெடி காமெடினு சொல்லி என் பிஞ்சு மனம் தாங்கல சோ,இந்த பதிவு,இதை படிச்சுட்டு நல்லதா ஒரு நாலு வார்த்தை சொன்னீங்கனா,என் மனச மயில் இறகால் வருடிய உணர்வு கிடைக்கும் ப்ளீஸ்🙏)