நெருப்பின் நிழல் அவன்! இறுதி அத்தியாயம்

அத்தியாயம்: 23

சாந்தவி சுயநினைவு வந்ததும் ஈஸ்வரனை பார்க்க ஆவலாக இருந்தாள். ஆனால் அவனை தவிர்த்து மற்ற‌ அனைவரும் உள்ளே வரவும் அவர்களை கேள்வியாக பார்த்த சாந்தவி “சக்தி எங்க..?” என்று கேட்க

“அவன் வீட்டுக்கு போய்ருக்கான்..” என்று உமையாள் கூறவும் சாந்தவி சோர்வாக கண் மூடி கொண்டாள். அதன் பிறகு வந்த நாட்களும் ஈஸ்வரன் வரவில்லை என்றதும் மிதுனிடம் கேட்டு நடந்ததை தெரிந்து கொண்டவள் அதன் பிறகு அவனை தேடவில்லை.

காலில் பிராக்சர் ஆகி இருந்ததால் பதினைந்து நாட்களுக்கு பிறகே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள்.

டிஸ்சார்ச் முடிந்து வீட்டிற்கு வந்த சாந்தவி வீல் சேரில் வாசலிலேயே நின்று கொண்டவள் “மாமா உங்க பிரெண்ட.. நான் சொன்னேனு சொல்லி கூட்டிட்டு வாங்க…” என்றாள் மிதுனிடம்.

“ஏன்..?, அவன் வராம நீ வர மாட்டியா..? அவனே பாவம் உடஞ்சி போய் இருக்கான். பேசாமா வா…” என்று சாந்தவியை அதட்டிய‌ மிதுன், அவள் பார்த்த பார்வையில் மறு பேச்சி இல்லாமல் ஈஸ்வரனை அழைக்க சென்றான்.

சற்று நேரத்தில் ஈஸ்வரன் கீழே இறங்கி வர.., அவனை அன்று மெடிக்கல் ஷாப்பில் இருந்து வெளிவரும் போது இருந்த அதே சந்தோசத்துடனும் முகத்தில் வெட்கத்துடனும் சாந்தவி பார்க்க

ஆனால் ஈஸ்வரன் அவள் அருகில் வராமல் மாடி படியிலேயே நின்று விடவும்.., முகம் சுருக்கி ஏக்கமாக அவனை பார்த்த சாந்தவி தன் அடி படாத கையை நீட்டி “தூக்கு..” என்பது போல் செய்கை செய்தாள்.

சற்று நேரம் அசையாமல் நின்று கண் எடுக்காமல் சாந்தவியை பார்த்த ஈஸ்வரன் பிறகு என்ன நினைத்தானோ அவளிடம் வந்தவன் அவளை வீல் சேரில் இருந்து தூக்கி கையில் ஏந்தி கொண்டான்.

சாந்தவியை நேராக அவர்கள் அறைக்கு அழைத்து சென்ற ஈஸ்வரன் அவளை கட்டிலில் படுக்க வைத்து விட்டு நகர போக, அவன் கை பிடித்து போக விடாமல் தடுத்த சாந்தவி “என் மேல என்ன கோபமாம் என் சக்திக்கு..!, சொன்னா தானே தெரியும்..!” என்றாள்.

ஆனால் ஈஸ்வரன் பதில் பேசாமல் நிற்கவும் “இப்போ… பதில் சொல்லலைனா அப்படியே கோபத்துல துடிக்குற அந்த மீசையை கடிச்சி வச்சிருவேன்..” என்று சாந்தவி மிரட்டலாக கூற

அவளிடம் இருந்து கையை பிரித்து விட்டு சென்று.. கதவை அடைத்து விட்டு வந்த ஈஸ்வரன், அவளை அணைத்து கொண்டு படுத்து விட்டான்.‌

அவன் கோபமாக இருக்கிறான் என்று நினைத்த சாந்தவி அவன் அணைக்கவும் சிரிப்புடன் அவன் முடியை இழுத்து விட, அவள் கழுத்தில் முகம் புதைந்திருந்த ஈஸ்வரனின் கண்ணீர் சாந்தவியின் கழுத்தோரம் வழிந்தோடியது.

அவன் கண்ணீரில் அதிர்ந்த சாந்தவி “சக்தி…” என்று அழைத்து அவன் முகத்தை நிமிர்த்த, அவளுள் இன்னும் ஆழ‌ புதைந்து கொண்ட ஈஸ்வரன் “ஏன்‌டி அப்படி சொன்ன?” என்றான் கோபமும் ஆதங்கமுமாக,

அவன் என்ன கேட்கிறான்..!, எதை பற்றி கேட்கிறான்..!, என்று புரியாத சாந்தவி “என்ன சொன்னேன்” என்று கேட்க,

“குமரன் பண்ண தப்புக்கு.. உனக்கு தண்டனைனு…” என்று கூறும் போதே ஈஸ்வரன் குரல் கோபத்தை காட்ட

“ஹோ… அதுவா..!, அந்த நேரம் எனக்கு அப்படி தான் தோனுச்சி. நாள் தள்ளி போய் இருக்குறத உங்க கிட்ட சொல்லனும் னு யோசிச்சிட்டே வந்து கார்ல அடி படும் போது.., பேபி பத்தி உங்ககிட்ட சொல்லாமையே எனக்கு எதுவும் ஆகிடுமோன்னு நினைக்கும் போதே… எனக்கு மலர் அம்மா நியாபகம் தான் வந்துச்சி”.

“அதோட… நீங்க சொன்ன‌ ‘அப்பா செஞ்ச பாவம் பிள்ளைக்குனு..’ சொன்னதும் நியாபகம் வர.., அடுத்த நிமிசம் நீங்க ஓடி வந்து மடி தாங்கவும் அப்படி ஒரு நிம்மதி. அதான் பேபி பற்றி சொல்லிட்டு அந்த நேரத்து என் எண்ணத்தை அப்படியே சொல்லிட்டேன்…” என்றாள் அவன் தலை வருடி

“ஆனா…! நீ சொன்னதை கேட்டு நான் செத்துட்டேன் டி. நீ வேணும் னா குமரன வச்சி சொல்லி இருக்கலாம். பட் எனக்கு நான் பண்ண தப்புக்கு தான் கடவுள் உன்னையும்… நம்ப பிள்ளையையும் தண்டிச்சிட்டாரோன் னு நினைச்சி செத்துட்டேன்” என்றான் குரல் உடைய

“நான் பண்ண தப்புக்கு எந்த தப்பும் பண்ணாத என் பிள்ளை கருவுலயே..” என்று ஈஸ்வரன் கூறி முடிக்கும் முன் அவன் வாயை மூடிய சாந்தவி “ப்ளீஸ் அப்படி சொல்லாதிங்க.., நினைக்கவே பயமா இருக்கு..” என்று உடல் உதர கூறியவள் இப்படி ஒரு கோணத்தில் நினைத்து பார்க்கவே இல்லை.

“நான் பண்ண தப்புக்கு என்ன தண்டனை வேணும் என்றாலும் கடவுள் எனக்கே குடுக்கட்டும் னு வேண்டிக்குறேன். உங்களுக்கு ஆபத்து இல்லைனு டாக்டர் சொல்ற‌வரைக்கும் நான் பட்ட வலி எனக்கு தான் தெரியும்…” என்றவன் இனிமேல் பேச்சில் கூட யாரையும் காயப்படுத்தி விட கூடாது என்று உறுதி கொண்டான்.

ஆனால் கோபம் என்பது இயல்பு அது நாம் நினைத்த உடனே நின்று விடாது என்று ஈஸ்வரன் அறிவில்லை. ஆனாலும் அவன் அளவில் சரியாக இருக்க நினைத்தான். அதுக்கு‌ பதில் காலம் தான் சொல்ல‌ வேண்டும். (நல்ல பதிலே சொல்லும் என்று நாம் நம்புவோம்😍)

அந்த நேரத்து ஈஸ்வரனின் வலியை உணர்ந்து சற்று நேரம் அமைதியாக இருந்த சாந்தாவி “சக்தி… நான் ஒன்னு கேட்டா உண்மைய சொல்லுவிங்களா…” என்று கேட்டாள் பேச்சை மாற்றும் விதமாக

“ம்… கேளு…” என்று ஈஸ்வரன் கூற

“மதுமிதா சொன்னாங்க… என்னை கல்யாணம் பண்றதுக்காக நீங்க அவங்களை கடத்துனதா.., நீங்க நிஜமாவே என்னை லவ் பண்ணிங்களா…? என்னால இன்னும் நம்ப முடியலை..!” என்று சொல்ல

“ஏன்டி… நான் லவ் பண்ணறதை நம்புறது ல உனக்கு என்ன பிரச்சனை..?” என்ற ஈஸ்வரன் சற்று இயல்புக்கு மீண்டிருந்தான்.

“என்னை பார்த்தாலே வெறுப்பா இருக்குனு எரிஞ்சி விழுவிங்க, அதுவும் பஸ்ட் டைம் நடந்தது எல்லாம் நம்ப விட மாட்டேங்குது…, நீங்க பஸ்ட் டைம் என்னை எப்போ பார்த்திங்க..?!” என்று சாந்தவி கேட்க

அவளை முதல் முறை பார்த்த நிகழ்வை கூறிய ஈஸ்வரன் நமட்டு சிரிப்பு சிரிக்க “ஹீ.. ஹீ.. அது சும்மா தொப்பி நிற்கலை அதான் சரியா வச்சேன்…” என்று சாந்தவி அசடு வழிய

“ஆமா.. ஆமா.. பார்த்தேன். அதுலையும் காட்டு வழியா போகும் போது பாடுனியே ஒரு பாட்டு! ப்பா… சாமி… நான் முதல் முறை சிரிப்பை அடக்க முடியாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்..” என்ற ஈஸ்வரன் அன்றைய நினைவில் இப்போது சிரிக்க

அவனை முறைத்த சாந்தவி “நீங்க.. ஒன்னும் சொல்ல வேண்டாம். போங்க.. என்னை கீழ அத்தை ரூம்ல கொண்டு விடுங்க… நான் அவங்க கூட இருந்துக்குறேன்” என்று முறுக்கி கொள்ள

அடுத்த நிமிடம், ஈஸ்வரன் அவள் கன்னத்தில் பல் தடம் பதிய கடித்து வைத்து இருந்தான்.

ஈஸ்வரன் செய்கையில் சாந்தவி அவனை அதிர்ந்து பார்க்க “நீ கடிச்சதுக்கு பதில் கடி. எங்க… இப்போ போறேன் னு சொல்லு பார்க்கலாம்..” என்று ஈஸ்வரன் சொல்ல

“ஏன் இப்படி பண்ணிங்க..?, எனக்கு குளிக்க டிரஸ் பண்ண எல்லாம் அத்தை தான் ஹெல்ப் பண்ணனும். அவங்க பார்த்த என்ன நினைப்பாங்க…!” என்று சாந்தவி வெட்கத்தில் சினுங்க

அவள் மறு கன்னத்துலும் கடித்து வைத்தவன் “அம்மா எதுக்கு..!, உனக்கு எல்லாம் நான் பண்றேன். நீ என்னை விட்டு எங்கயும் போக கூடாது. நான் விடவும் மாட்டேன்…” என்ற ஈஸ்வரன்

மீண்டும் சாந்தவி முகம் நோக்கி குனிந்து கடித்த கன்னத்திற்கு முத்தம் வைத்து மருந்திட்டவன் “பஸ்ட் டைம் உன்னை பார்க்கும் போதே என்னவோ..! உன்னை பிடிச்சது. ஒரு குட் பீலோட உன்னை பார்த்தேன். அப்பறம் நீ குமரன் பொண்ணு னு தெரியவும் உன் மேல அவ்வளவு கோபம். உன்னை இனி பார்க்கவே கூடாதுன்னு நினைச்சேன். ஆனா உன் நினைப்பு வரதை தடுக்க முடியலை. அடிக்கடி உன் செயல் கண்ணு முன்னாடி வந்து இம்சை பண்ணும்…”

“ஒரு கட்டத்துக்கு மேல என்னால நீ இல்லாம இருக்க முடியாதுன்னு ஒரு எண்ணம் தோன்றி அது வழுக்க ஆரம்பித்தது. அந்த நேரம் அம்மா கல்யாணத்துக்கு என்கிட்ட கேட்காமலேயே ஏற்பாடு பண்ணிட அதை எப்படி நிறுத்துறதுன்னு ஒரு எண்ணம் ஓட.., அதை தொடர்ந்து உன்னை பார்க்கவும் ஆசை வந்தது. மிதுனுக்கு பத்திரிகை வச்சிட்டு அப்படியே சாருவுக்கும் பத்திரிக்கை வைக்கனும் னு சொல்லி.. அதை சாக்கா வச்சி உன்னை பார்த்துட்டு வரலாம்னு… தான் ஊட்டி கிளம்பி வந்தேன்”.

“ஆனா நானே எதிர் பார்க்காதது நீ நைட் டைம் தனியா வந்தது. அதுலயும் நீ அந்த கடைக்காரர் கிட்ட பேசுனது எல்லாம் எனக்கு உச்சந்தலையில ஆணி அடிச்ச உணர்வு தான். அந்த நேரம் எனக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை…” என்று ஈஸ்வரன் கூற

“அது நான் விளையாட்டா பேசுனது..” என்ற சாந்தவி அன்று நடந்ததையும் அவளுக்கு ஈஸ்வரன் மேல் பிடித்தம் வந்த காரணத்தையும் கூற

“நினைச்சேன்! இது தான் காரணமா இருக்கனும் னு..” என்றான் ஈஸ்வரன் சாந்தவி நெற்றியில் இதழ் பதித்து

“என்ன நினைச்சிங்க..?” என்று சாந்தவி கேட்க, “நம்ம கல்யாணத்து அன்றைக்கு நைட் ‘உங்களை பிடிச்சி தான் கல்யாணம் பண்ண சம்மதிச்சேன்னு..’ சொன்ன இல்லை? அப்போ நினைச்சேன். நம்ம சந்திப்பு ஒன்னும் அவ்வளவு நல்லதா இல்லையே அப்பறம்‌ எப்படி என்னை பிடிச்சி இருக்கும் னு யோசிக்கும் போது இந்த விசயம் தான் நியாபகம் வந்துச்சி.. அதை தவிர என்னை பற்றி நீ தெரிஞ்சி இருக்க வாய்ப்பு இல்லையே…” என்றான் ஈஸ்வரன்

“ஆமா ரொம்ப நல்லவருன்னு நினைச்சி ஏமாந்துட்டேன்…” என்றவள் “சரி நீங்க மீதி கதைய சொல்லுங்க..!” என்று சாந்தவி கூற

“நீ விளாயாட்டா பேசுனது புரிஞ்சாலும் அந்த நேரம் அதை மனசு ஏத்துக்கலை. குமரன் பொண்ணா தான் தெரிஞ்ச.., ஒரு டைம் பட்ட அடி மறுபடியும் பட கூடாதுன்னு தோனிச்சி. ஆனாலும் உன்னை கொடுமை படுத்த நினைச்சி கடத்தலை ஜஸ்ட் மிரட்டி அனுப்ப தான் நினைச்சி பண்ணேன்..”

“உன்னை ஊட்டியை விட்டு கொண்டு போறதுக்கு முன்னாடி மிதுன் சரியா என்மேல சந்தேகப்பட்டு எனக்கு கால் பண்ணிட்டான்…, திருடனுக்கு தேள் கொட்டிய நிலமை. அவனை நம்ப வைக்க வேற வழி இல்லாம உன்னை ஹரிய வர வச்சி அவனோட அனுப்பிட்டு மிதுனோட சேர்ந்து தேடுறேன்னு இரண்டு நாள் அங்க சுத்திட்டு. வேலை இருக்குனு இங்க கிளம்பி வந்துட்டேன்”.

அடுத்து வந்துது அதை விட பெரிய சோதனை என்றான் ஈஸ்வரன் அவள் கன்னம் வருடி

சாந்தவி சுவாரஸ்யமாக “என்ன சோதனை..?” என்று கேட்க,

“மனசுக்கு பிடிச்ச பொண்ணு! பஸ்ட் டைம் தனியா பார்க்க போறோம்.. மிரட்ட மனசு வராம என்ன செய்யனு யோசிச்சிட்டு இருக்க.., ஹரி சரக்கு போட்டா சண்டை போட வரும் அப்படியே காதலையும் சொல்லிடலாம்னு ஏத்தி விட்டு முதல் முறை அந்த கருமத்தை குடிச்சா…! கடைசியில உள்ள இருந்த கோபம் மட்டும் ஓட்டு‌ மொத்தமா வெளிய வந்துட்டு”.

“சரக்கு போட்டாவது ரொமன்டிக்கு லுக் விடலாம்னு வந்து பண்ணது எல்லாம் வில்லதனம். இதுல இரண்டு பேரும் சவால் எல்லாம் விட்டு அது நானே எதிர் பார்க்காதது. போதையில என்ன என்னவோ பேசிட்டேன். ஆனா அப்பவும் உன் முகம் வாடினாலே எனக்கு தாங்கலை. உன்னை ஊட்டிக்கு அனுப்பிட்டு தான் மிதுனுக்கு கால் பண்ணி உன்னை கடத்துனதையும் நீ ஊட்டி வரதையும் சொன்னேன்”.

“அதுவும் நீ சாரதாவ கூட்டிட்டு ஊரை விட்டு பொய்டுவியோனு நினைச்சி தான் சொன்னேன் பட் அடுத்து நீ பண்ணதும் நான் எதிர் பார்க்காதது தான். மிதுனும் என் மேல இருந்த கோபத்துல நீ கிளம்பி போனதையும்.., அவன் கல்யாண விசயம்.. எதையும் சொல்லலை. நீ வெடி வச்ச அப்பறமா தான் சொல்றான். அப்போ செம கோபம் இதுல நீ வெடி வச்ச கோபமும் சேர அவனை திட்டி தீர்த்துட்டு உடனே கிளம்பி ஊட்டி வந்தேன்”

“அங்க வந்து உன்னை சேலையில பார்த்து டோட்டல் அவுட். ஆனாலும் அப்போ இருந்த கோபத்துக்கு உன்னை ஏதாவது பண்ண தோனிச்சி அதான் வீட்டுக்கு வெடி வச்சாதா.. அந்த பையனை விட்டு சொல்ல சொன்னது. உன் மேல சகதி அடிச்சது எல்லாம்…”

“ஆமா.. ஜயாவுக்கு பார்வை வேற பக்கம் போகுதுன்னு.. என் சேலையவே நாசம் பண்ணிட்டிங்க..” என்று சாந்தவி முறைக்க

“விடு.. விடு.. அதான் அதுக்கு உனக்கு சேலை எடுத்து தந்தேன் இல்ல..!” என்று ஈஸ்வரன் கூற

“இது எப்போ..!” என்று சாந்தவி கேட்க

“அந்த எல்லோ சேலை. அது அன்றைக்கு தான் எடுத்தேன். நீயும், சாருவும் மிதுனோட டிரஸ் எடுக்க போகவும்… வேலை இருக்குறதா சொல்லிட்டு உனக்கு சேலை வாங்க தான் போனேன். அப்படியே மதுமிதாவை கடத்தவும் ஹரி கிட்ட சொல்லிட்டு‌ வந்தேன்..”

“அடுத்து கல்யாணமும் அப்படி நடக்கும் னு நான் எதிர் பார்க்கலை. என்னோட பிளான்.. அம்மா முன்னாடி நான் மிதுன் கிட்ட உன்னை மேரேஜ் பண்ணி தர சொல்லி கேட்டு எல்லார் முன்னாடியும் செமயா.. கல்யாணம் பண்றது தான். பட் அப்பவும் நீயே தான் வந்து சிக்குன…, அம்மாவும் அப்பவே கல்யாணம் பண்ண சொல்லவும் அதுக்கு தானே எல்லாம் பண்ணேன் சோ ஒரு பெரிய ஓகே சொல்லிட்டேன்…”

“கேடி..” என்று சாந்தவி சினுங்க

“நீயா வந்து சிக்கிட்டு. என்னை சொல்லாத டி….” என்ற ஈஸ்வரன் “அடுத்து கல்யாணம் ஆனதும் என்னோட வராம நீ பாட்டுக்கு சாரு பின்னாடி போய்ட்ட, எப்படி தனியா தள்ளிட்டு போகலாம்னு பிளான் பண்ணி.., மிதுனை சாரதாவை சமாதானம் பண்ணு னு சொல்லி உங்க ரூம்புகு அனுப்பி விட்டுட்டு உனக்கு வெளிய வெயிட் பண்ணா நீ கண்டுக்காம போற…”

“அந்த கோபத்துல தான் அன்னைக்கு நடந்த சண்டை. இப்படி தான் எல்லாம் நடந்தது. நான் ஒன்னும் நினைச்சி செய்ய அது சில நேரம் சாதகமாகவும் பாதகமாகவும் அமஞ்சி போச்சி…, ஆனா.. இந்த அம்மாஞ்சியை மட்டும் ஏன் பிடிச்சிதுன்னு தெரியாமையே பிடிச்சி போச்சி…” என்ற ஈஸ்வரன் “இப்போ நம்புறியா..?” என்று கேட்க

“ம்…..” என்று தலையசைத்த சாந்தவி தன் முகம் பார்த்து குனித்து இருந்த ஈஸ்வரன் கழுத்தில் கை போட்டு தன்னை நோக்கி இழுத்தவள் அவன் இதழை சிறை செய்திருந்தாள் தன் காதலை அவனுக்கு உணர்த்தும் எண்ணத்தில்.

சாந்தவி செயலில் திகைத்து கண்கள் விரிய அவளை பார்த்த ஈஸ்வரன் சாந்தவி அவனை பார்த்து கண் சிமிட்டிய அடுத்த நொடி சாந்தவியின் செயலை அவன் தன் வசமாக்கி கொண்டான்.

தன் மன கவலை அனைத்தையும் சாந்தவியின் இதழில் கறைத்து விட்டு நிமிர்ந்து அவள் முகம் பார்த்த ஈஸ்வரனின் பார்வை மாறி இருந்தது

“இதே அன்போட என் சக்தி எனக்கு எப்பவும் வேணும். இருப்பிங்களா…?” என்று சாந்தவி கேட்க,

“இப்படியேன்னா..!, இப்படியேவா…? ” என்று ஈஸ்வரன் கண் சிமிட்டி விளையாட்டாக கேட்க

“இல்லை. சண்டை போட்டு கிட்டே” என்று சாந்தவி கூறவும்

“என்னடி சொல்ற..?, சண்டைப் போட்டுடேவா..” என்று ஈஸ்வரன் வியப்பாக கேட்க

“ஆமா மிஸ்டர் விரும்பாண்டி. சண்டை இல்லாத லைஃப். சக்கரை இல்லாத காஃபி மாதிரி. கசந்து போய்டும். குட்டி குட்டி சண்டை போட்டுப்போம். அப்பறம் சமாதானம் செய்வோம். அப்போ தான் ஜாலியா இருக்கும்..” என்று கூறி சாந்தவி கண் சிமிட்ட

அவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்த ஈஸ்வரன் அவள் முகத்துடன் முகம் இழைத்து “உன்னை அப்படியே மொத்தமா வன்மையாக எடுத்துக்க தோனுது டி..” என்று கூறவும்

“அந்த சேலையை கசக்கனும். அதானே.. உங்க பிளான்?” என்று சாந்தவி முகம் சிவக்க கேட்க

“ஆமா..” என்று கூறி சாந்தவி நெற்றியில் இதழ் பதித்த ஈஸ்வரன் அவளை அணைத்து கொண்டான்.

சற்று நேரம் அமைதியாக இருந்த சாந்தவி “சக்தி..” என்று அழைத்தாள். அவள் குரலில் ஒரு வகை மென்மை இருக்க அதை உணர்ந்த ஈஸ்வரன் “என்னடி முயல் குட்டி..?” என்றான்.

“அவன் கையை எடுத்து தன் வயிற்றில் வைத்தவள். வயிறு கொஞ்சமா பெருசா ஆகிட்டு இல்ல..?!” என்று கேட்க,

சாந்தியின் கேள்வியில் அவள் எண்ணம் புரிந்து சிரித்த ஈஸ்வரன் “இல்லையே அப்படியே தான் இருக்கு..” என்ற ஈஸ்வரன் அவள் இடை வருட

“இல்லை உங்களுக்கு தெரியலை. கொஞ்சம் பெருசாகிட்டு..” என்று சாந்தவி கூற

“உன்னை விட எனக்கு தான் நல்லா தெரியும். அதை எப்பவும் செக் பண்றதே நான் தான். சோ அப்படியே தான் இருக்கு. அப்பறம்… மூன்று மாசத்துக்கு அப்பறமா தான் டி வயிறு தெரிய ஆரம்பிக்குமாம்…” என்று ஈஸ்வரன் கூற

பட்டென்று அவன் கையில் அடித்த சாந்தவி… “இல்லை பெருசாகிட்டு எனக்கு தெரியும்..” என்று வீம்பாக கூற

“சரி இரு.. நான் இப்ப ஒரு டைம் செக் பண்ணி சரியான ரிசல்ட் சொல்றேன்” என்று கூறி அவள் இடை மறைத்த உடை விலக்கி அவன் மகவை சுமக்கும் மணி வயிற்றில் பிள்ளை முத்தம் பதித்தவன். சாந்தவி காதில் “ஆமா கொஞ்சமாக பெருசாகிட்டு… ஆனா அது நீ பேட் ல படுத்தே இருந்து சாப்பிட்டதுனால..” என்று ஈஸ்வரன் கள்ள‌ சிரிப்புடன் கூறவும்

“உங்களை..” என்று அவனை அடித்த சாந்தவி முகத்தில் வெட்கமும் கூச்சமும் போட்டி போட ஈஸ்வரன் மார்பில் முகம் புதைத்து கொள்ள, ஈஸ்வரனும் பன்னகையுடனே அவளை அணைத்து கொண்டான்.

முற்றும் ❤️