நெருப்பின் நிழல் அவன்! எபிலாக்

ei056XJ5069-9b7d1579

இறுதி அத்தியாயம்:

காலை சூரியன் கிழக்கில் உதயமாகி கொண்யிருக்க வானமங்கை முகம் முழுதும் மன்னவன் முகம் பார்த்து வெட்கம் கொண்டு சிவந்து ரம்யமாக காட்சி தர, மரங்களும் தங்கள் குளிர்ச்சியை பூயில் இறக்கி கொண்டிருந்த நேரம்

ஈஸ்வரனின் வீடே பரபரப்பாக இருந்தது. “அப்பா பூ கடைசியா எடுத்து வைக்கலாம். பழம்.. பூஜை சாமான். மத்த பொருட்களை முதல்ல எடுத்து வைக்கலாம்..” என்றவன் ரத்தினம் பிரித்து வைக்க வைக்க ஒவ்வொன்றாக எடுத்து பணியாளரிடம் கொடுத்து காரில் வைக்க சொன்னான்.

பொருட்கள் அனைத்தையும் காரில் ஏற்றியதும் ரத்தினம் “சரி இனிமேல் நீ பாரு.. நான் ரெடி ஆகுறேன்” என்று ரத்தினம் அவர் அறைக்கு செல்ல பொருட்கள் எல்லாம் கீழே விழாத அளவு இருக்கிறதா என்று ஒரு முறை செக் செய்தவன் டோரை லாக் செய்து விட்டு உள்ளே வந்தான்.

அவன் உள்ளே வரவும் உமையாளும் சமையலை முடித்து வந்தவர் “சக்தி இதையும் காரில் வச்சிட்டு டா..” என்று ஒரு பையை அவனிடம் கொடுக்க

“என்னமா முன்னாடியே தர மாட்டிங்களா!!” என்று ஈஸ்வரன் சற்றே கோபமாக கேட்க

“சமையல் முடிஞ்சா தானடா தர முடியும். உன்னை யாரு அவசரமா எடுத்து வைக்க சொன்னது…!!” என்று திட்டு விட்டு அவரும் கிளம்ப சென்று விட

“இவங்க கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா!! ஷப்பா…” என்று தலையை இட வலமாக ஆட்டி கொண்டவனை “மாமா..” என்று வாசலில் கேட்ட மழலை குரல் கலைக்க

முகத்தில் மின்னல் என சந்தோசம் பொங்க பட்டென்று வாயில் பக்கம் திரும்பியவன் “பட்டுமா!! வாங்க.. வாங்க…” என்று வேக எட்டுக்களுடன் வாயிலை அடைத்தவன் மிதுன் கையில் குட்டி டெடி போல் இருந்த சாரதாவின் மகள் தன்விகாவை தூக்கி அவள் கண்ணத்தில் அழுத்த முத்தம் வைத்து அணைத்து கொண்டவன் “என் தங்கம் மாமா வா பார்க்க வர நேரமாடா இது..” என்று கொஞ்ச

“உன் தங்கச்சி கிளம்பாம நாங்க எப்படி சீக்கிரமா வரது என்று கேளுடா பட்டு..” என்று முதுன் கூற

அவன் மகளோ அவள் மாமன் கழுத்தை கட்டி கொண்டு தொங்கி செல்லம் கொஞ்சி கொண்டிருந்தாள்.

அவள் பாசத்தில் கரைந்த ஈஸ்வரன் “உன் அப்பாக்கு வேற வேலை இல்லை டா பட்டு” என்று விட்டு “அம்மா எங்காடா..” என்று கேட்கவும் சாரதாவும் வந்து விட

மற்றோரு கையால் அவளை தோளோடு அணைத்து கொண்டவன் “ஏன் டல்லா இருக்க..” என்றான் அக்கறையாக

“காலையிலேயே எழுந்து கிளம்பி வந்ததோம் இல்லை அதான்…” என்று சாரதா சொல்ல… “சரிடா வா..” என்று அவளை அழைத்து சென்று சோஃபாவில் அமர வைத்தவன்.

“அம்மா சாரு வந்துட்டா..” என்று உமையாள் அறை நோக்கி குரல் கொடுத்தவன் “இரு நான் உனக்கு ஜுஸ் எடுத்துட்டு வரேன்..” என்று செல்ல போக அவன் கை பிடித்து தடுத்த சாரதா

“அதெல்லாம் வேண்டாம் நீங்க இருக்க என்று அவனை அமர வைத்தவள் சாவி இன்னும் கிளம்பலையா என்று கேட்க.

“கிளம்பி இருப்பா.. இரு கூட்டிட்டு வரேன்..” என்று தன்வியை சாரதாவிடம் கொடுத்தவன் “ராட்சசி இன்னும் கிளம்பாமல் என்ன பண்றா. அப்பவே குளிச்சிட்டு வந்துட்டாளே..” என்று நினைத்து கொண்டே அவர்கள் அறைக்கு செல்ல

அங்கே சாந்தவியும் அவள் மகன் ருத்ரனும் சண்டையிட்டு கொண்டிருந்தனர்.

ருத்ரன், அப்படியே ஈஸ்வரன் குணம். அவனுக்கு சற்றும் குறையாத கோபம் ருத்ரனிடம் உள்ளது. இப்போதே அவன் என்ன நினைக்குறானோ அதை மட்டுமே சாதித்து கொள்வான். யாரும் கட்டாயப்படுத்தி எதையும் செய்ய வைக்க முடியாது.

சாந்தவி அவனுக்கு தேர்வு செய்த உடை அவனுக்கு பிடிக்கவில்லை போலும் அதை போட விடாமல் அவன் அடம் பிடிக்க சாந்தவியோ அதை தான் போட வேண்டும் என்று கட்டாயப்படுத்த என அம்மா பையன் இருவரும் முட்டி கொண்டு நின்றிருந்தனர்.

மகன் பிடிவாதத்தை நினைத்து வந்த சிரிப்பை ஈஸ்வரன் இதழ் அடியில் மறைக்கவும் சாந்தவி இவனை பார்த்து முறைக்கவும் சரியாக இருந்தது.

அப்போது தான் அவளை நன்றாக பார்த்தான். ஈஸ்வரன் அவர்கள் திருமணத்திற்கு என்று சாந்தவிக்கு வாங்கிய புடவையை உடுத்தி இருந்தாள். புடவையை பார்த்து மாறிய அவன் பார்வை ருத்ரனுக்கு உடை மாற்ற சற்று குனிந்து நின்ற சாந்தவியின் எழில் அங்கங்கள் அவன் கண்களுக்கு விருந்தாக அவளை விழுங்கி விடுவது போல் பார்த்தான்.

அவன் பார்வையின் பொருள் உணர்ந்த சாந்தவி பட்டென்று நிமிர்ந்து நின்று சேலையை இழுத்து விட்டு கொண்டவள் ருத்ரனை கண் காட்டினாள்.

“அவன் கிடக்குறான் பொடியன்..” என்று கூறி அவளை நெருங்கி சென்றவன் அவளை அணைத்து பிடிக்க அவன் கையை தட்டி விட்ட சாந்தவி “கோவில் போறோம் மாமா.. இப்படி பண்ணாதிங்க..” என்றாள் கன்னம் சிவக்க

“கோவிலுக்கு போகனுமா டி?” என கேட்டு செம்மை படர்ந்த அவள் கன்னத்தை மயில் இறகால் வருடுவது போல் வருடி விட்டவன் “என் முயல் குட்டி..” என்றான் மென்மையிலும் மென்மையாக ஆசையும் தாபமும் பேட்டி போட

அவள் மொழியிலும், விழி பார்வையுலும் தன்னை மறந்து நின்ற சாந்தவி சட்டென நினைவு வந்தவளாக அவன் கையை விழக்கி விட்டவள் ஈஸ்வரன் எதிர் பார்க்காத நேரம் அவன் இதழில் பட்டென ஒரு மென் முத்தம் பதித்தவள் அடுத்த நொடி “நான் கீழ போறேன்…” என்று விட்டு ஓடி விட

அவன் முத்தத்தில் ஒரு நிமிடம் கண் மூடி நின்றவன் பின்பு அழுத்தமாக தலை கோதி தன்னை நிதானபடுத்தி கொண்டு புன்னகையுடனே திருப்ப அங்கே அவன் மகனோ சாந்தவி போட்டு விட்ட சட்டையை கலட்டி கொண்டிருந்தான்.

ஈஸ்வரனை விட ருத்ரன் சாந்தவியை அதிகம் படுத்தி விட்டான். அவன் மகனால் வரும் கோபத்தை முழுவதும் சாந்தவி ஈஸ்வரன் தலையில் தான் இறக்கி வைப்பாள்.

சாந்தவி மருத்துவமனையில் இருந்து வீடு வந்து ஒரு வாரம் மட்டுமே அமைதியாக இருந்தாள்‌ இதன் பிறகு அவள் நிலை அவளை அமைதியாக இருக்க விடவில்லை. அறையிலேயே இருந்தது அதிக மன அழுத்தத்தை கொடுக்க எது பேசினாலும் எரிச்சலான முகச்சுழிப்பே அவள் பதிலாக இருக்கும்.

ஈஸ்வரன் செய்த கொடுமையை எல்லாம் அப்போது பொறுக்கவும் மன்னிக்கவும் செய்தவள் மன அழுத்தத்தில் அது ஒவ்வொன்றையும் குத்தி காட்டி அவள் கோபத்தை கொட்டுவாள்.

அவளுக்கு குளிக்க உடை மாற்ற உதவி செய்ய போனால் அவனை நிறாகரிப்பவள் “சேலை கட்ட கூடாது னு தானே மேலே சகதி அடிச்ச!! இப்போ மட்டும் ஏன் அதை தூக்கிட்டு வர…” என்று சேலையை பிடிக்கி அவன் முகத்தில் தூக்கி வீசி விடுவாள்.

அதிலும் ஈஸ்வரன் சாரதா சென்றதால் சாந்தவியை வீட்டை விட்டு அனுப்பியது அவளை மிகவும் பாதித்து இருக்க வேண்டும். அதிக பட்ச அவள் கோபத்தின் வெளிப்பாடாக “வேண்டாம் என்று தூக்கி போட்டுட்டு வந்தவர் தானே… இப்போ என்ன அக்கறை..!??” என்று குத்தலாக வந்து விழும் வார்த்தைகள்.

உணவு எடுத்து சென்றால் “வேண்டாம்.. எடுத்துட்டு போ..” என்று கோபத்தில் வெடிப்பவள் பால் எடுத்து சென்றால் ஈஸ்வரனுக்கு அபிசேகம் பண்ணி விடுவாள். எந்த நிலையிலும் ஈஸ்வரனை நெருங்க விடாமல் படுத்தி எடுத்தாள்.

அதிலும் கை, காலில் எலும்புகள் ஒன்று சேரும் நேரம் அந்த இடத்தில் புது ரத்தம் சென்று கால் ஊரல் எடுக்க ஆரம்பிக்க அவளால் சொரிந்து கொள்ள முடியாத நிலையும் சேர்ந்து அவளை மிகவும் மூர்க்கம் ஆக்கி இருந்தது.

ஈஸ்வரன் அருகில் சென்றாளே எரிந்து விழுந்து வைப்பவள் அவன் ஒதுங்கி சென்றால் கடித்து குதறி விடுவாள். “உனக்கு நான் வேண்டாம். அதான் இப்படி விட்டுட்டு போற.. எனக்கும் நீ வேண்டாம். என்னை என் வீட்டுல கொண்டு விடு…” என்று ஆடி தீர்த்து விடுவாள்.

அவள் மனநிலை மாற வெளியே சென்று வருவோமா என்று கேட்டால் “என்னை எல்லாரும் பாவமா பார்த்து உன்னை நல்லவன்னு சொல்லனும் அதானே..” என்று அதற்கு குதர்க்கம் பேசி வைப்பாள்‌.

அவளின் நிலை புரிந்து ஈஸ்வரனும் அவள் கோபத்தை பெரிது செய்யாமல் குழந்தையை கை ஆளுவது போல் ஒவ்வொன்றையும் பொறுமையாக செய்வான். அந்த நேரம் அவனை நினைத்து அவனுக்கே வியப்பாக இருக்கும். “தனக்கு இவ்வளவு பொறுமை எல்லாம் உண்டா!!” என நினைத்து சிரித்தும் கொள்வான்.

டாக்டர் கால் ஊன்றி நடந்து பழகலாம் என்று சொன்ன பிறகு சாந்தவி நடக்க ஆரம்பித்த நேரம் மாதம் ஏழு கடந்து இருக்க அவன் மகன் உள்ளேயே போர் புரிய அதில் இன்னும் ஈஸ்வரனை படுத்தி எடுப்பாள்.

பிரசவகால உடல் மாற்றமும் மன மாற்றமும் அவளை புது மனுசியாகவே மாற்றி இருந்தது.

இரவில் கால் வீக்கம் கண்டு தூக்கத்தில் அவள் அனத்தும் ( முனங்குதல்) போது ஈஸ்வரன் தான் துடித்து போவான் அவள் படும் நிலை பார்த்து.

அவள் படும் கஷ்டம் பொறுக்காமல் அவளை மடி தாங்கி கொள்பவன் இரவில் கால் பிடித்து விட்டு அவள் தூக்கிய பிறகே அவன் தூங்குவான் ஆனால் அடுத்த ஐந்து நிமிடத்தில் எழுத்து கொள்பவள் ஈஸ்வரனின் இரவு தூக்கத்தை தனதாக்கி கொள்வாள்.

சில நேரம் அவள் செயலை அவளாலேயே பொறுக்க முடியாமல் அழுகையுடன் அவன் மார்பில் சாய்ந்து கொள்வாள். அப்படி நேரம் எல்லாம் ஈஸ்வரனுமே உடைந்து போவான்.

ருத்ரனின் பிறப்பில் சாந்தவி மறு பிறப்பு எடுத்தாளோ இல்லையோ ஈஸ்வரனுக்கு மறு பிறப்பு தான் அத்தனை பட்டிருந்தான் அந்த ஒரு வருடத்தில்.

குழந்தை பிறந்து சற்று இயல்புக்கு திரும்பியவளை ரூத்ரன் செய்கை முழுவதும் மாற விடவில்லை. அவன் செய்யும் கலாட்டாவில் பாதி நேரம் கொதி நிலையில் தான் இருப்பாள். ஆனால் முன்பு போல் அவள் கோபம் ஈஸ்வரன் மேல் திரும்புவது இல்லை.

இப்போது போல் மகனை அவனிடமே ஒப்படைத்து “அப்பாவும்… மகனும்… எனனவோ செய்ங்க…” என்று சென்று விடுவாள்.

தன்னாலும் தன் மகனாலும் சாந்தவி பட்ட கஷ்டத்தை நினைத்து கொண்டே மகனை நெருங்கியவன் “ஏன்டா என் பொண்டாட்டிய இப்படி படுத்தி எடுக்குற..?” என்று கேட்டு கொண்டே மகனை தூக்கினான்.

ருத்ரன் இன்னும் சாந்தவி போட்ட உடையை கலைவதில் மும்மரமாக இருக்க ஈஸ்வரன் பேச்சை கவனிக்கவில்லை.

அவனை தூக்கி கொண்டு கபோர்ட் முன் சென்று நின்ற ஈஸ்வரன், ஒரு உடையை தேர்வு செய்து பிறகு “இது வேண்டாம். இதே கலர்ல தான் தன்வி குட்டி டிரெஸ் போட்டிருக்கா..” என்று அதை உள்ளே வைக்க போகவும் அவனை கை பிடித்து தடுத்த ருத்ரன் “இந்த தெஸ் தா வேதும்….” என்றான் தன் மழலை குரலில்.

மகனை நன்கறிந்த ஈஸ்வரனோ உள்ளுக்கு தனக்கு தானே பாராட்டி கொண்டவன் அந்த உடையையே போட்டு கீழே அழைத்து வந்தான்.

அவன் வரும் போது அனைவரும் கிளம்பி ரெடியாக இருக்க பைரவ் இவனை பார்த்து கோபமாக குரைத்துது “உனக்கு வர இவ்வளவு நேரமாடா..!” என்னும் விதமாக.

அவன் கோபம் புரிந்த ஈஸ்வரன் “நான் அப்பவே ரெடி ஆகிட்டேன் டா‌. இவன் தான் லேட்..” என்று மகனை காட்ட, “இவனா…” என்று கண்ணை உருட்டி திருட்டு முழி முழித்த பைரவ் அமைதியாக திரும்பி சென்றான்.

பைரவ் செயலில் வீட்டில் உள்ள அனைவரும் சிரிக்க, அவர்களை முறைத்த உமையாள் “என் பிள்ளைய பார்த்தா உங்களுக்கு கிண்டலா இருக்கா..??” என்றார் வந்த சிரிப்பை இதழுக்கடியில் மறைத்து கொண்டு.

“அத்தை நீங்க சிரிக்குறிங்க தானே..!!” என்று சாந்தவி குறும்பாக கேட்க

“இல்லையை.., நான் ஏன்டி சிரிக்க போறேன்!!, என் பிள்ளை யாரு அவனை போய் கிண்டல் பண்ண‌ முடியுமா..?, இல்லை சக்தி பண்ண தான் விடுவானா..!! பார்வையிலேயே பொசுக்கிட மாட்டான்..” என்று ஈஸ்வரன் காலை சிரிக்காமல் வாரி விட்டார்.

“அம்மா போதும் என்னை டேமேஜ் பண்ணது. லேட் ஆகிட்டு கிளப்புவோமா..” என்று ஈஸ்வரன் கோபமாக அதட்டல் போட

அனைவரும் கப் சிப் என மறு வார்த்தை பேசாமல் சென்று காரில் அமர்ந்தனர்.

கார் மதுரையை தாண்டி சற்று தொலைவில் இருக்கும் அவர்கள் குல தெய்வ கோவிலை நோக்கி சென்றது. ஈஸ்வரன் தன்விகாவிற்கு வைத்த வேண்டுதல் நிறைவேற்றி தன்விகாவிற்கும் முடி இறக்கி காது குத்த செல்கின்றனர்.

மிதுன் பெற்றோர் இன்னும் சாரதாவை ஏற்று கொள்ளவில்லை. ரத்தினம் சொத்தை பிரித்து தந்து அவர்களிடம் பேசுவதாக சாரதாவிடம் கூற

“சொத்தை பார்த்து அவர்கள் தன்னை ஏற்று கொள்ள வேண்டாம். தனக்கு தேவையான நேரம் தானே சொத்தை கேட்டு வாங்கி கொள்வதாக அழுத்தமாக கூறி விட..” அதன் பிறகு அதை பற்றி யாரும் பேசவில்லை.

மிதுன் பெற்றோர் வராமல் மற்ற சொந்தத்தை அழைக்க விரும்பாமல் அவர்கள் மட்டும் வேண்டுதல் நிறைவேற்ற செல்கின்றனர்.

கோவிலில் பூஜைக்கு தேவையான ஏர்பாடுகள் செய்து வைத்திருக்க கோவில் சென்றதும் ஈஸ்வரனுக்கும் தன்விக்கும் முடி இறக்கி காது குத்தினர்.

குழந்தை வலியில் அழ அவள் அவளுவதை பார்த்த ரூத்ரனும் அழுது விட்டான். கடைசியில் தன்விகா தன் அழுகையை நிறுத்தி விட்டு ருத்ரனை சமாதானம் செய்த பிறகே அவன் அழுகையை நிறுத்தினான்.

அவர்கள் ஒற்றுமையை பார்த்த சாரதா ஈஸ்வரனை தான் பார்த்தாள். அவன் எதிர் பார்த்ததும் இந்த அன்பை தானே..! ஆனால் அனுபவித்து வலிகள் மட்டுமே.

கண்களில் கண்ணீர் தேங்க அவன் அருகில் சென்று அவன் தோள் சாய்ந்து கொண்டாள். திடிரென வந்து தோள் சாய்ந்த சாரதாவை வியப்பாக பார்த்து தோள் அனைத்து கொண்ட ஈஸ்வரன் “என்ன மா…?” என்றான் ஆதுரமாக.

“லைஃப் ல நிறைய மிஸ் பண்ணிட்டேன் இல்லை?!” என்றாள் அவனை ஏக்கமாக பார்த்து.

அதற்கு ஈஸ்வரன் சிறு புன்னகையை மட்டுமே பதிலாக கொடுக்க

“மலர் அம்மாவையும் இழந்துட்டோம்..” என்ற சாரதா தன் போல் கூறி கொண்டாள்.

ஈஸ்வரன் முதன் முதலில் மலர் பற்றி கூறும் போது ஒரு பெண்ணாக மட்டுமே அவளுக்காக கலங்கினாள். அம்மா என்று நினைத்து இல்லை. ஆனால் அதன் பிறகு வந்த நாட்கள் அவரை அம்மாவாக உணர்ந்து அவருக்காக கண்ணீர் சிந்துவாள் ஆனால் அவள் கண்ணீர் விட்டாள் மற்றவரும் வருந்துவதால் அது மிதுனை தவிர மற்றவர்கள் அறியாமல் பார்த்து கொள்வாள்.

குமரனை நினைத்து வரும் கோபத்தை ஏதோ ஒர் விதத்தில் கடவுள் என்றேனும் அவரை தண்டிப்பான் என்று நினைத்து தேற்றி கொள்வாள்.

சாரதா மலரை பற்றி பேசவும் ஈஸ்வரன் உடல் இறுகி போனது. அவனால் மீட்க முடியாத ஒரு உறவு மலர்… கண் முன்னால் இழந்து விட்டு காண முடியாமல் தவிக்குறான்.

அவன் உடல் மாற்றத்தை உணர்ந்த சாரதா கண்களை துடைத்து கொண்டவள் என்றும் போல் இன்றும் மலருக்கான தன் கண்ணீரை உள்ளேயே மறைத்து கொண்டவள் “தன்வியை கூட்டிட்டு போய் குளிச்சிட்டு வாங்கணா. மொட்டை போட்டு நேரம் ஆகிட்டு…” என்றாள்.

அவன் குளித்து வரவும் சாரதாவும் சாந்தவியும் பொங்கல் வைக்க ரத்தினம் சாமிக்கு படையில் போட்டு பூஜை தொடங்கியது. உமையாள் ஈஸ்வரன் இதே சந்தோசத்துடன் என்று இருக்க வேண்டும் என்று மனதார வேண்டி கொண்டார்.

####

ஈஸ்வரனின் கார் ஊட்டியை நோக்கி சென்றது. ஈஸ்வரன் டிரைவ் செய்ய அவனுக்கு எதிர் இருக்கையில் சாந்தவி அமர்ந்து இருக்க பின்னால் சாரதாவும் மிதுனும் அமர்ந்து இருந்தனர்.

முன்னால் அமரந்து இருந்த சாந்தவி ஈஸ்வரன் இருவர் கண்களும் வேறு கதை பேசி கொண்டிருக்க அவர்களை கவனித்த மிதுன் “வர வர லவ் பண்ணி கல்யாணம் பண்ணது நாமா.. இல்லை அவங்களானே… எனக்கு சந்தேகமா இருக்குடி…” என்று சாரதாவிடம் கூற

“உங்களுக்கு அவங்களை பார்த்து எதையாவது உலறுததே வேலையா போச்சி…” என்று சாரதா அவனை இடிக்க

“பின்ன என்னடி..! காதலிச்சி கல்யாணம் பண்ணுன நான் ஒன்னுத்துக்கும் வழி இல்லாம இருக்கேன். ஆனா கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணுன அவனை பாரு அடுத்த ஹனி மூன் எப்போ போலாம்னு கண்ணாலயே டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கான்….” என்றான்.

“ஏன் நீங்களும் டிஸ்கஸ் பண்ண வேண்டுயது தானே… நானா வேண்டாம்னு சொல்றேன்..” என்ற சாரதா அவன் கண்ணோடு கண் பார்த்து கேட்க

“ஹேய்…. சாரு நிஜமாவா டி!!!” என்று அவள் அவளை நெருங்கி அமர “க்கும்…” என்று ஈஸ்வரன் இரும அதானே “உடனே மூக்கு வேர்த்திடுமே உனக்கு. எங்களை கவனிக்காம ரோட்டை பார்த்து டிரைவ் பண்ணுடா..” என்று மிதுன் சாரதானை தோளோடு அணைத்து கொண்டான்.
###

இரவு நிலவின் ஒளி கதிர் பூமி எங்கும் மின்மினியின் ஓளியாய் தன் ஒளியை பரவ செய்து கொண்டிருந்தது. உடலை ஊசியாக துளைக்கும் குளிரும் ஈஸ்வரனுக்கு கதகதப்பை கொடுத்து கொண்டிருந்தது. அவன் நெஞ்சில் நாடி பதித்து அவனுடன் பாதி ஒன்றிய நிலையில் தன் சின்ன வயது நிகழ்வுகளை வாய் ஓயாமல் பேசி கொண்டிருந்த சாந்தவியின் செயலில்.

அவள் நடந்த அனைத்தில் இருந்தும் மீண்டு விட்டாள் என்பது அவளின் இயல்பில் தெரிய, கதை பேசிய அவள் இதழையும் பாவனை செய்த இமைகளையும் வருடி விட்டபடி அவளின் பேச்சே கேட்டு கொண்டிருந்தவன் “முயல் குட்டி..” என்றான் தாபம் கலந்த முனங்கலாக

அவன் அழைப்பில் பேச்சை நிறுத்தி விட்டு அவனை ஆழ்ந்து பார்த்த சாந்தவி “என்ன..?” என்று ஈஸ்வரனை போல் ஒற்றை புருவம் ஏற்றி கேட்க

அவள் மூக்கை பிடித்து ஆட்டி.. அதை மென்மையாக வருடி விட்டவன் அவளை முழுவதுமாக தன் மேல் இழுத்து போட்டு இவள் இதழில் மென் முத்தம் பதித்தவன் “லவ்‌ யூ…” என்றான் தன் உள் மன காதலை மலரும் இதழ்போல் மென்மையாக.

சிறு புன்னகையுடன் அவன் கழுத்தை கட்டு கொண்ட சாந்தவி ஈஸ்வரனின் செவிமடலில் அவள் இதழ் தீண்ட “நான் இந்த சாது சக்தீஸ்வரனை லவ் பண்ணலை. டெரரா எப்பவும் முறைச்சிட்டே… கூடலில் கூட வன்மையை மென்மையோட சரி பாதி கலந்து என்னை ஆளுர அந்த சக்தீஸ்வரனை தான் லவ் பண்றேன். அவனை தான் எனக்கு பிடிக்கும். அவன் தான் என் முதல் காதல். அவன் தான் என் எல்லாம்…” என்றாள்

ஈஸ்வரன் கன்னகதுப்பு அவன் மனைவியின் செயலில் சிவந்து போக அவள் இடை வளைத்திருந்த அவன் விரல்கள் மனைவியின் கூற்று புரிந்து வன்மையாக முன்னேற, சாந்தவி இதழோ அவளவன் இதழ்களை ஈஸ்வரனை விட அதிக வன்மையாக முற்றுகையிட்டிருந்தது.

அவள் கூடலை பார்த்த நிலவு மேககூட்டத்தில் ஒளிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான குளிமையை பூமிக்கு செலுத்தி நிலவின் மன்னவனான ஆதவனின் வருகை எதிர்பார்த்து பயணிக்க நாமும் விடை பெற்று செல்வோம் பட்டுஸ் 🥰🙈❤️.

 

சுபம்❤️

 

அன்புடன்

 

அனாமிகா 21 🥰❤️