அத்தியாயம்: 10 (அ)
சக்தி அழுது கொண்டே பின்னால் வந்தால் மற்றவர் கண்ணில் பட்டு குழந்தையை தூக்கி செல்ல முடியாது.. என பயந்த குமரன் சக்தியை தள்ளி விட்டு விட்டு கதவை அடைத்துவிட்டு சென்று விட்டான். அவன் தள்ளி விட்டதில் சக்தி அருகில் மாத்திரை வைப்பதற்காக வைத்திருந்த இரும்பு டேபிலில் விழ அதன் முனை சக்தியின் நெஞ்சில் ஆழமாக கிழித்து விட்டுவிட வலியில் துடித்து போனான்.
அடி ஆழமாக பட்டு விட.., ரத்தம் அதிகமாக வெளியேறி அழுகையில் துடித்தவன் மூச்சி விட முடியாமல் மயங்கி இருந்தான். மலர் அனுமதிக்கப்பட்டிருந்தது வீஐபி அறை என்பதால் அங்கே நடந்தது எதுவும் வெளியில் தெரியாமல் போய்விட்டது.
வீட்டிற்கு சென்று விட்டு மருத்துவமனை வந்த ரத்தினமும், உமையாளும் பார்த்தது ரத்த வெள்ளத்தில் கிடந்த மகனையும்.., உயிர் அற்ற உடலுமாக.. முகம் கருத்து இருந்த மலரையும் தான். சக்தியின் நிலையை பார்த்து கதறிய உமையாள் கதறில், தங்கை மற்றும் மகனை பார்த்து உறைந்து நின்ற ரத்தினம் சுயம் பெற்று அவசரமாக சக்தியை தூக்கவும்.., மருத்துவர்களும் வந்து விட சக்தி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான்.
தங்கைக்காக அழுவதா..!!, மகனுக்காக அழுவதா..!!, இல்லை.. பச்சிளம் பிள்ளையை தொலைத்ததை நினைத்து அழுவதா..!! என்று தெரியாமல் ரத்தினம் நிலைகுலைந்து போனார். வீட்டில் இருந்த துரையும் விசயம் கேள்வி பட்டு.. துடித்து போய் மருத்துவமனை வந்து சேர்ந்தார்.
சக்திக்கு ரத்தம் அதிகமாக சென்றிருக்க, ரத்தினமும், துரையும் ரத்தம் கொடுத்து மேலும் வெளியில் இருந்தும் ரத்தத்திற்கு ஏற்ப்பாடு செய்து.., உயிருக்கு போராடிய பிள்ளைக்கு, துணைக்கு உமையாளை மருத்துவமனையில் வைத்து விட்டு சக்திக்கு தேவையான அனைத்து மருத்துவ ஏற்ப்பாட்டையும் செய்து விட்டு, மறுநாள் தான் மலருக்கு இறுதி காரியம் செய்ய அவளை வீட்டிற்கு எடுத்து சென்றனர்.
அதுவரை வெளியே தெரியாமல் மறைத்த மலரின் விசயம் கண், காது, மூக்கு, வைத்து பேசப்பட்டது. ஏற்கனவே நொந்து போய் இருந்த துரையின் குடும்பம் மேலும் நொந்து போனது. ஆனால் அதை நினைத்தும் வருந்த நேரம் இல்லாமல் சக்தியின் நிலை இருந்தது. பதினைந்து நாள் வரை பிள்ளை உயிரோடு இருக்கிறானா..! இல்லாயா..! என்று தெரியைமலேயே ஐசியூ வாசலில் கிடந்தனர்.
‘சக்தி நல்லபடியாக வந்து விட வேண்டும்..’ என்பதே மூன்று பேரின் வேண்டுதலாக இருக்க பதினாறாவது நாள் தான் ‘இனி பயம் இல்லை..’ என்ற வார்த்தை மருத்துவரின் வாயில் இருந்து வந்தது.
அடி ஆழமாக பட்டதில் சக்தியின் இதயத்திற்கு செல்லும் சில ரத்த குழாய் சேதம் ஆகியதில் உயிர் பிழைத்ததே கடவுள் செயல்தான். இதில் தங்கையின் இறப்பிற்கு நியாயம் செய்ய நினைத்த ரத்தினம் மருத்துவமனை சீசீடிவியில் தன் குடும்பத்தின் இந்த நிலைக்கு காரணமானவன் யார்..?! என்று தேடி, அது குமரன் என தெரிந்து கொதித்து போனவர் மூன்று வழக்கில் அவன் மேல் போலீஸில் புகார் செய்து அவனை தேட தொடங்கினார்.
குமரனின் குணம் அறிந்த ரத்தினம் அவன் சிட்டியை விட்டு சென்றிருக்க மாட்டான்..! அதுவும் கை குழந்தையுடன் வெளியூர் செல் முடியாது என்று நினைத்து சிட்டியில் அனைத்து இடத்தையும் சல்லடை போட குமரனோ ஊட்டின் மிகவும் பின் தங்கி.., ஓட்டுரிமை கூட இல்லாத கிராமத்திற்கு சென்று இருந்தான்.
சக்தி ஐசியூவில் ஆக்ஸிஜன் உதவியுடன் நாட்களை கடத்த, ரத்தினம் போலீஸ், கேஸ், என குமரனை தேடி அலைய.., உமையாள் ஐசியூ வாசலில் மருத்துவமனையே கதி என கிடந்தார். ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே சக்தியை பார்க்க விட்டனர். அப்போதும் உடம்பு முழுவதும் டீப் பொருத்தப்பட்டு ஆக்ஸிஜன் உதவியுடன் மயக்கத்தில் இருந்த பிள்ளையை பார்த்து குடும்பமே ரத்த கண்ணீர் வடித்தது.
உமையாள் சோறு, தண்ணிர் இல்லாமல் மகன் இருந்த அறையை வெறித்து பார்த்து கொண்டிருப்பதை பார்த்து மனம் துடித்த துரை, போனவர்களை விட இருப்பர்கள் முக்கியம். தன் பேரனாவது மீண்டு விட வேண்டும் என்று நினைத்தவர் ரத்தினத்திடம் குமரனை விட்டு விட்டு சக்தியை பார்க்க சென்னார்.
ஆனால் ரத்தினம் கேட்காமல், சக்தியையும் பார்க்காமல் குமரனை தேடியே அலைய.., அவரை அதட்டி கேஸை வாபஸ் வாங்கிய துரை, பழி வாங்குவதை விட்டு…, விட்டு.. சக்தியை நன்றாக பார்த்து கொள்ளும் படி ரத்தினத்திடம் சத்தியம் வாங்கி கொண்ட துரையின் உயிர் அதற்கு மேல் உடல் தங்கவில்லை.
பேரன் படும் உயிர் அவதியை பார்க்க முடியாமல் உயிரை விட்டிருந்தார். ரத்தினத்தின் அடுத்த இழப்பு. இந்த நேரத்தில் தனக்கு தோள் கொடுக்க வேண்டிய குடும்பத்தின் ஆணிவேரே சாய்ந்து விட்டதில் ரத்தினம் உடைந்து போனவர்…, தந்தை சொன்னது போல் பழி, பகை அனைத்தையும் விட்டொழித்து விட்டு மகன், மனைவியை மட்டும் பார்த்து கொண்டார்.
சக்தியும் அந்த அடியில் இருந்து மீண்டு வர ஐந்து ஆண்டுகள் ஆனது. தண்ணீரை கூட தாகத்திற்கு என அதிகம் குடிக்க முடியாது. மீறி.. குடித்தால் சளி பிடித்து நெஞ்சில் அடைத்து கொள்ளும். தும்மினால் இதயத்தில் வலிக்கும். ஓடி விளையாட முடியாது. வேகமாக நடக்க முடியாது. சில நேரம் மூச்சி விட முடியாமல் மயங்கி விடுவான். காரம் சாப்பிட்டு புரை ஏறினால் மூக்கில் ரத்தம் வரும். அதற்கான என மூன்று ஜர்ஜரி இப்படியே மருத்துவமனை.., வீடு.., என்றே அவன் குழந்தை பருவம் செல்ல, மலரின் கடைசி நிமிடங்கள் உறக்கத்தை பறிக்க தொடங்கியது.
வளர.. வளர.. மலர் அன்று உறங்கவில்லை கொலை செய்யப்பட்டுள்ளாள் என்றும் அந்த கை தன்னை காப்பாற்ற சொல்லி கெஞ்சிய கைகள் என புரிய, அந்த நினைவு நெருப்பாக நெஞ்சில் எரிய சிரிப்பை தொலைத்தவன் தன் இயலாமையை கோபமாக வெளிப்படுத்தினான்.
சில நேரம் கோபத்தை அடக்கி தனக்குள்ளேயே இறுகி கொண்டான். டாக்டர் அவன் சரி ஆகி விட்டான் இனி மருந்துவம் தேவை இல்லை என்று கூறவும் உமையாள் நிம்மதியாகிவிட்டார். இந்த ஐந்தரை வருடத்தில் மகனை தவிர மற்ற எல்லாம் பின்னால் சென்று இருந்தது.
மருந்துவமனை வீடு என்று இருந்ததில் மகன் அமைதியாக இருக்கிறான்! சரி ஆகி விடுவான் என்று உமாயாள் நினைக்க, ரத்தினத்திற்கு மகனின் மாற்றம் புரிந்தது. சிறு வயதில் கண்ட சில கனவுகளையே நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது எண்ணும் போது.. கண் முன் நடந்த கொடூரத்தையும், தன் உயிராய் நினைத்த குழந்தையின் நினைவையும், அவன் பட்ட காயத்தையும் மறப்பது எளிதல்ல என்று புரிய.. கோபத்தையாவது வெளிப்படுத்தி அவனை மீட்டு கொள்ளட்டும் என விட்டு விட்டார். ஆனாலும் பெற்ற மனம் தவிக்கதான் செய்தது.
இடமாற்றமாவது அவனின் மனதை மாற்றாத..! என நினைத்து தான் வெளிநாடு அனுப்பி படிக்க வைத்தார். ஆனால் மகன் போனது போலவே திரும்பி வந்தவன்.. தொழிலில் இறங்க, அவன் விருப்ப படி விட்டவர் தந்தையாக தோள் கொடுக்கவும் மறக்கவில்லை. காலம் அவ்வளவு எளிதில் ஈஸ்வரனின் காயத்தை ஆற்றுவதாக இல்லை. வேலை.. வேலை.. என ஓடியவன் மனதில் அந்த கொடூரம் முள்ளாக மனதில் குத்தும்.
சில நாட்கள் அந்த கொடுர சம்பவம் நினைவு வந்து தூக்கத்தை கெடுக்கும் அப்படி நாட்கள் தான் கோபத்தில் அனைத்தையும் உடைத்து வைப்பான். அப்படி தான் ஒரு நாள் தூக்கம் வராமல் தவித்தவன் மனதை திசை திருப்ப நினைத்து போன் நோன்டியவன் எதேர்ச்சையாக வாட்ஸ் ஆப் போக.., மிதுனும் அப்போது பார்த்து ஸ்டேட்டஸ் வைக்க தன் போக்கில் அதை திறந்த ஈஸ்வரனின் இதழ்கள் “பாப்பா..” என உச்சரித்து.
“என் மனம் கவர்ந்தவள்..” என்ற வாசகத்தின் மேல் இருந்த சாரதாவின் போட்டோவை பார்த்து இன்பமாக அதிர்ந்தான். ரத்தினத்தை உரித்து வைத்திருந்தவளை பார்த்து கண்கள் பணித்தவன், சாரதா போட்டோவை பெரிதாக்க போகவும் போட்டோ மறைந்து இருந்தது. அதற்குள் மிதுன் டெலிட் செய்து இருந்தான். கையில் கிடைத்த பொக்கிஷம் கண் மறையவும் பதறியவன்.. உடனே மிதுனுக்கு அழைத்து அவனுக்கு சந்தேகம் வராத வகையில், சாரதாவை பற்றியும், அவள் அப்பாவின் பெயரும் கேட்டு தெரிந்து கொண்டவன் இரவோடு இரவாக ஊட்டி கிளம்பி சென்றான்.
அங்கே சென்ற பிறகே குமரனுக்கு திருமணம் முடிந்தது ஒரு பெண் குழந்தை இருப்பதும்.., சமீபத்தில் தான் அவனும் அவன் மனைவியும் இறந்தது தெரிய வர, இத்தனை நாள் கொலை பண்ண துடித்த கொடுரனை.. தன் கையால் கொல்ல முடியவில்லையே என்று சோர்ந்து போனான். அதன் பிறகு மிதுனிடம் மேலோட்டமாக அனைத்தையும் சொன்னவன் அவன் மூலம் சாரதாவின் நலன் பார்த்து கொண்டான்.
சாரதா அங்கே எந்த கொடுமையும் படாமல் பாதுகாப்பாகவும் பண்பாகவும் வளர்க்கப்பட்டது தெரிய நடந்த கொடுரம் எதுவும் அவளுக்கு தெரிய வேண்டாம், தெரிந்தால் தன்னை போல் அவளும் ஆயூள் முழுதும் மறுகுவாள் என்று அனைத்தையும் மறைத்து விட்டான். அதனால் தான் தன்னை பற்றியோ.., உறவு.. என்றோ எதுவும் சொல்லாமல் ஒதுங்கி நின்றவன் மிதுனின் நண்பனாக சாரதாவை பார்த்து கொண்டான்.
நடந்த அனைத்தையும் கூறிய சக்தி சாந்தவியை பார்க்க அவள் கண்ணீல் கண்ணீருடன் உணர்வுகள் அற்று அவனை தான் பார்த்து கொண்டிருந்தாள். சாந்தவியால் குமரன் கொலை காரர் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் அவரால் வலிகளை மட்டுமே அனுபவித்தவன் துளியும் குறையா வலியுடன் கண் முன்னால் நிற்கிறான்.
சாந்தவி வெறித்த பார்வையுடன் அமர்ந்து இருக்க “காரணம் கேட்டியே..! தெரிஞ்சிடுச்சா…! இப்போ குளுகுளுனு சாந்தோசமா இருக்குமே உனக்கு!, நான் முதல் முறை ஊட்டி வந்தது உன் அப்பனை துடிக்க துடிக்க கொல்லுனும் னு தான் டி. ஆனா அந்த பரதேசி *** அதுக்கு முன்னாடியே செத்து மேல போய்ட்டான்..” என்று கோபத்தில் வெடித்தவன்
அவள் முடியை பிடித்து மேலே தூக்கியவன் “அடுத்த வீட்டு பொண்ணை துடிக்க வச்சி கொலை பண்ணிட்டு… அவன் பொண்ண மட்டும் பூ மாதிரி வளர்பானா. கடவுள் இருக்கான் டி. அதான் உன்னை என் கண்ணுல காட்டி இருக்கான். அவன் பூ மாதிரி வளர்த்து நீ அழுது துடிச்சா.. உன் அப்பனும் மேல இருந்து பார்த்து துடிப்பான் இல்ல..!” என்றவன் மேலே பார்த்து “பாருடா… உன் பொண்ணு அழறா! இன்னும் அழுவா… அழ மட்டும் தான் செய்வா…” என்றான் கர்ஜனையாக வான் நிலவும் சாந்தவியின் நிலை பார்த்து உறுகி போனதை அறியாமல்.
அதுவரை கோடாக வடித்த கண்ணீர் பெருக்கெடுக்க ஏன் அழுகிறோம்..! எதற்கு அழுகிறோம்..! என்று தெரியாமலேயே சாந்தவி கதறி அழுதாள். அவளை இகழ்ச்சியாக பார்த்த ஈஸ்வரன் “பச்.. ஓவரா கதறாத, கண்ணீரை கொஞ்சம் ஸ்டாக் வச்சிக்கோ.., அடிக்கடி யூஸ் ஆகும். இப்போ வா போவோம்… இன்றைக்காவது எனக்கு தூக்கம் வருதா பார்ப்போம்..” என்று அழைக்க
பட்டென்று தன் அழுகையை நிறுத்தி கண்ணீரை துடைத்து கொண்ட சாந்தவி “நான் ஏன் அழனும்! நான் அழ மாட்டேன். குமரனுக்கு பிறந்த சாரதா கலங்கம் இல்லாதவனா, நான் மட்டும் எப்படி கலங்கம் ஆவேன். அவரை குறை சொல்லிட்டு அவர் செய்த அதே தப்பை தான் நீயும் செய்ற…, சாரதா உன் வீட்டு பொண்ணுன்னு தண்டனை தரலை சரி. அப்போ உன் பொண்டாட்டி நான் யார் வீட்டு பொண்ணு..!? சொல்லு…” என்றாள் கோபமாக.
“அவர் செஞ்ச தப்புக்கு என்னை தண்டிக்க உனக்கு யார் அதிகாரம் தந்தது!. உன்னால முடிஞ்சா… மேல போய் சேர்ந்தவரை போய் நீ சொன்ன மாதிரி வெட்டி வெட்டி கொலை பண்ணு.., நான் இப்போ இந்த சக்தீஸ்வரன் மனைவி, என்னை தண்டிக்க உனக்கு உரிமை இல்லை” என்றவள் துடைக்க துடைக்க விழித்த கண்ணீருடன் அவன் தோள் சாந்து கொண்டாள். கண்ணீரில் அவன் நெஞ்சின் காயம் ஆற்ற முயன்றாளோ…!
சாந்தவியின் செய்கையில் முதலில் அதிர்ந்து, பின்பு உடல் இறுக நின்ற ஈஸ்வயனின் கண் முன்னால் சாந்தவியை முதல் முறை பார்த்த நினைவும் அதை தொடர்ந்து நடந்த சம்பவமும் நினைவு வந்தது. அவன் மட்டுமே அறிந்த அவனவள் மீதான உணர்வு.