நெருப்பின் நிழல் அவன்! 13

அத்தியாயம்: 13

ஈஸ்வரனின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடிக்க.., தன் எதிரே இருந்த மனைவியின் நிலையை அறிய நினைத்து சிறு பயத்துடனே சாந்தவியின் பக்கம் பார்வையை திருப்பியவனின் கண்கள், சாந்தவி இருந்த நிலையை பார்த்து சிறிது பதறினாலும்.., அவளுக்கு ஒன்றும் இல்லை என்றதும் நிம்மதியானவன் சற்று ஆசுவாசமாக மூச்செடுத்து கொண்டான்.

அவளுக்கு ஏதும் ஒன்றென்றால் தன்னை அறியாமலேயே கலங்கும் மனதை எப்போதும் போல் நொந்தபடி எழுந்து சென்று, சாப்பாட்டின் மேலேயே மயங்கி விழுந்திருந்த சாந்தவியை தூக்கி நேராக அமர வைத்து அவளை தோள் சாய்ந்து கொண்ட ஈஸ்வரன் “கத்தி.. பேசுனாலே மயக்கம் போடுறவ முன்னாடி எவன்டா கன்’னை காட்டுனது..!!” என்று மீண்டும் அந்த இடத்தை சுற்றிலும் தன் பார்வையை செலுத்தினான்.

ஈஸ்வரனை கொலை செய்ய வந்தவன் திட்டமிட்டே வந்திருக்க சுலபமாக மக்களோடு கலந்து சென்றிருந்தான். அவன் உபயோகித்த துப்பாக்கியில் சைலன்சர் பொருத்தி இருந்ததால் சத்தம் வெளியே கேட்டிருக்கவில்லை. சாந்தவியை போல் துப்பாக்கி வைத்திருந்தவனை பார்த்தவர்கள் மட்டும் பயந்து விலகி சென்றிருக்க, மற்றவர்கள் எந்த சலசலப்பும் இல்லாமல் அவர்கள் வந்த வேலையை பார்த்து கொண்டிருந்தனர். சுற்றுப்புறத்தை ஆராய்ந்த ஈஸ்வரனின் கண்களுக்கு சந்தேகப்படும்படி யாரும் தென்படவில்லை என்றதும் போனை எடுத்து அவன் பீஏ ஹரி அழைத்தான்.

அந்த பக்கம் அழைப்பு எடுக்கப்பட்டதும் நடந்ததை கூறியவன் “ஆள் யார்னு பார்த்து தூக்கிட்டு கால் பண்ணு ஹரி..” என்ற ஈஸ்வரனின் குரல் சாதாரணமாக இருந்தாலும் கண்கள் வன்மத்தை வெளிப்படுத்தியது.

“ஓகே… சார்.. பட் உங்க மேலேயே கை வைக்க பார்த்து இருக்கான் ஆளை போட்டுறவா சார்..?” என்று ஹரி கேட்க, “முதுகுக்கு பின்னாடி நின்று சுட்டவன் நாம தேடுறோம்னு தெரிஞ்சாலே… ஊரை விட்டு ஓட பார்ப்பான்!, அவனை கொல்றதை அப்பறம் பார்ப்போம். இப்போ தூக்கிட்டு வந்து தோப்பு வீட்டுல போடு.. அவனை பார்க்கனும்…” என்றான் உள் அடக்கிய சீற்றத்துடன்.

“ஓகே சார்..! வேலையை முடிச்சிட்டு கால் பண்றேன்.. என்ற ஹரி “சார்… “என்று ஏதோ சொல்ல தயங்க, “சொல்லு ஹரி ஏதாவது பிரச்சனையா..?” என்று ஈஸ்வரன் கேட்கவும் “அதெல்லாம் இல்லை சார். அருண் ஈரோடு எச் ஆர் எஸ் ஹாஸ்பிடல் ல அட்மிட் ஆகிருக்குறதா தகவல் வந்தது சார். டாக்டர் உயிருக்கு ஆபத்து இல்லைனு சொல்லிட்டாங்களாம்..” என்று ஹரி சொல்லவும்,

“ஹாஸ்பிடல் பில் எவ்வளவுனு விசாரிச்சி செட்டில் பண்ணிடு பட் நாமதான் பண்ணோனு தெரிய வேண்டாம்…” என்று கூறி அழைப்பை துண்டித்த ஈஸ்வரன், டிஸுவை எடுத்து நீரில் நனைத்து சாந்தவியின் முகத்தில் இருந்த சாப்பாட்டை துடைத்து விட்டு விட்டு “சாந்தவி..” என்று அவள் கன்னம் தட்ட மங்கைக்கு மயக்கம் தெளியவில்லை.

“என்னை போட்டு தள்ளட்டும்னு வேடிக்கை பார்த்துட்டு.. நீ சேஃப்டியா மயங்கிட்ட… பிராடு டி முயல்குட்டி நீ..” என்று இதழ் தாண்டா சிறு புன்னகையுடன் நன்றாக முகம் துடைத்து விட்டவன், மீண்டும் அவள் கன்னம் தட்ட, சாந்தவி மயக்கம் தெளியாமலேயே இருக்கவும், பேரரை அழைத்து ஆர்டர் செய்த உணவிற்கு பில் கொடுத்துவிட்டு சாந்தவியை கையில் ஏந்து கொண்டவன் மருத்துவமனை அழைத்து சென்றான்.

அதிர்ச்சி மயக்கம் தான் என்பதால் மயக்கம் தெளிய இன்ஜக்ஷன் போட்டு வீட்டிற்கு அழைத்து வந்தான். மயக்கம் தெளிந்த சாந்தவிக்கு தலை பாரமாக இருக்கவும் தலையை தடவியபடி வர, கார் ஓட்டி கொண்டே பக்கவாட்டில் அவளை பார்த்த ஈஸ்வரன் “என்ன பண்ணுது..?” என்று கேட்க, “ஒன்றும் இல்லை..!” என்று மறுப்பாக தலையசைத்த சாந்தவி வெளியே வேடிக்கை பார்த்தாள்.

ஆனால்.. மனதில் பல கேள்விகள் எழுந்து குழப்பத்தையும், பயத்தையும் கொடுத்தது ‘பொது மக்கள் வந்து போற இடத்தில் ஒருவன் கொலை செய்ய முயல்கிறான் என்றால்… அவன் எதற்கும் துணிந்தவனாக இருக்க வேண்டும். அப்படி பட்டவன் ஏன்..? இவரை கொலை பண்ண வரனும்..??, இவர் ஏதும் அவனை பண்ணிருப்பாரோ..!!, ஆனாலும் கொலை செய்ய நினைக்குற அளவு என்ன பண்ணிருப்பார்..??, ஒரு வேலை இவர் தொழிலே அடிதடி தானோ…!!” என்று நினைத்த சாந்தவிக்கு அவள் எண்ணத்தின் போக்கு தலை வலியை இன்னும் அதிகமாக்கியது.

“ஸ்ஆ…” என்று சாந்தவி மீண்டும் தலையை பிடிக்க, “என்ன டி செய்து..?, ஹாஸ்பிடல் போவோமா..?!” என்று ஈஸ்வரன் அதட்டலாக கேட்க, “வேண்டாம். லைட்டா.. தலை வலிக்குது. ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடும்..!” என்றவள் அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.

அவள் பயந்து இருப்பதை புரிந்து கொண்ட ஈஸ்வரன்.. “இதெல்லாம் ஒன்னுமே இல்லடி. இதுக்கெல்லாம் ஓவர் ரியாக்ட் பண்ணாதே…!!” என்று கூற அதற்கு சாந்தவியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. வீட்டிற்கு வந்ததும் ஈஸ்வரன் அறைக்கு சென்று விட சாந்தவி சற்று நேரம் சாரதாவுடன் அமர்ந்து பேசி விட்டு அறைக்கு வந்தாள்.

மாலில் நடந்ததை நினைத்து கொண்டே வந்த சாந்தவி, ஈஸ்வரன் ஆஃபிஸ் பைல் பார்த்து கொண்டிருக்கவும் அவன் அருகே சென்றவள் “நீங்க.. என்ன வேலை பாக்குறிங்க.?” என்று கேட்டாள். அவளுக்கு ஈஸ்வரன் ஏதோ தப்பான வேலை செய்வதாக மனதில் தோன்றி கொண்டே இருந்தது.

சாந்தவி கேள்வியின் அர்த்தம் உணராத ஈஸ்வரன் “ஆஃபிஸ் பைல் பார்த்துட்டு இருக்கேன்…” என்றான் ஃபைலில் கவனமாக.

“நான் இதை கேட்கலை பப்ளிக் ப்ளேஸ்’ல, அத்தனை ஆட்கள் இருக்க.. உங்களை ஒருத்தன் கொலை பண்ண வர அளவுக்கு என்ன வேலை பாக்குறிங்கனு கேட்டேன்…” என்று கேட்ட சாந்தவியின் குரலில் கடுமை இருக்க, அவளை புருவம் சுருக்கி பார்த்த ஈஸ்வரன் பதில் சொல்லாமல் இருக்க,

“அப்போ நீங்க ஏதோ.. தப்பு பண்றிங்க தானே..!?, அது என்ன எனக்கு தெரியனும்…” என்று சாந்தவி கோபமாக கேட்க, “நான் என்ன செய்யுறேன் என்கிறது உனக்கு தேவை இல்லாத விசயம். உன் வேலை எதுவோ அதை மட்டும் நீ யாரு.., தேவை இல்லாம என் விசயத்துல தலையிடாதே..” என்றான் ஈஸ்வரன் அழுத்தமாக.

ஆனால் எப்போதும் ஈஸ்வரனின் இந்த அழுத்தத்தில் அடங்கி போகும் சாந்தவிக்கு இன்று கோபம் வர “அப்போ… நான் நினைச்சது சரிதான். நீங்க நிஜமாகவே… தப்பான வேலை எதுவோ செய்றிங்க.. அப்படி தானே..!!” என்று கேட்க,

சாந்தவியின் கோபத்தை கண்டுகொள்ளாத ஈஸ்வரன் “நான் அப்படி சொன்னதா எனக்கு தெரியலை…” என்று அலட்டல் இல்லாமல் கூற, “அப்பறம்.. நீங்க சொன்ன பதிலுக்கு என்ன அர்த்தம்…?, நீங்க என்ன தொழில் வேணும் என்றாலும் செய்விங்க நான் கண்டுக்காம இருக்கனுமா..?!, என்னால அப்படி இருக்க முடியாது…” என்று சாந்தவி அழுத்தமாக கூற,

அவளை முறைத்த ஈஸ்வரன் “என்ன டி வாய் ஓவரா நீளுது…!?” என்றான் புருவம் சுருக்கி. அவன் முறைப்பை அலட்சியமாக புறம் தள்ளிய சாந்தவி “எனக்கு என் கேள்விக்கு பதில் வேணும்…” என்றாள் பிடிவாதமாக, சாந்தவியின் பிடிவாதம் ஈஸ்வரனுக்கு எரிச்சலையும், கோபத்தையும் கொடுக்க “பதில் சொல்லலைனா என்ன செய்யுறதா உத்தேசம்…!” என்ற ஈஸ்வரனின் குரலில் நக்கலுடன் சேர்ந்து கோபமும் ஏறி இருந்தது.

“நீங்க சொல்லலை என்றால்.., நீங்க தான் உலகம்னு இருக்குற உங்க அம்மா, அப்பா கிட்ட இன்றைக்கு நடந்ததை சொல்லுவேன். பப்ளிக் பிளேஸ்ல வச்சி உங்க பையனை ஒருத்தன் கொலை பண்ண வர அளவுக்கு உங்க பிள்ளை அப்படி என்ன தொழில் பண்றார்னு கேளுங்கனு சொல்லுவேன். அவங்க கேட்கும் போது பதில் சொல்லி தானே ஆகனும்…!” என்று சாந்தவியும் தைரியமாக பதில் பேச,

கோபத்தில் அவள் தாடையை அழுத்த பற்றிய ஈஸ்வரன் “என்னடி… மிரட்டி பாக்குறியா…!!, உன் மிரட்டலுக்கு பயப்பட நான் ஆல் இல்லை…, உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ..” என்று சீற, அவனின் அதட்டலுக்கே அஞ்சும் சாந்தவி இப்போது கண்ணில் துளி பயம் இல்லாமல் ஈஸ்வரனை ஏறிட்டு பார்த்தவள் “நீங்க பதில் சொல்லலைனா நான் கண்டிப்பா அத்தை, மாமா கிட்ட உண்மையை சொல்லுவேன். அதை நீங்க மிரட்டலாவே எடுத்துக்கிட்டாலும் எனக்கு கவலை இல்லை..!” என்றவள்,

“உயிர் பயமும் இல்லை. அடுத்தவங்க உணர்வுகளை புரிஞ்சிக்கும் எண்ணமும் இல்லை. அடுத்தவங்க பக்கம் இருக்குற நியாயமும் புரியாது.. எப்படி.. இப்படி உயிர் உள்ள ஜடமா இருக்கிங்க..??” என்று ஆற்றாமையில் வெடித்த சாந்தவிக்கு மாலில் நடந்த நிகழ்வு கண் முன்னால் வந்து கண்களில் கண்ணீரை பெருக செய்தது.

சாந்தவியை உறுத்து விழித்த ஈஸ்வரன் அவள் முகம் பார்க்காமல் திரும்பி கொண்டு “யாராவது ஹெல்ப் கேட்டா செய்வேன்…” என்றான் வேண்டா வெறுப்பாக. “ஹெல்ப்னா…!! என்ன மாதிரி…?” என்று சாந்தவி புரியாமல் கேட்கவும், கோபத்தில் பல்லை கடித்தவன் “அடிதடி, ஆள் மிரட்டல், சம் டைம் கொலை…” என்றான் சாதாரணமாக. ஈஸ்வரன் இது வரை கொலை செய்திருக்கிறானா என்று கேட்டால் பதில் “இல்லை..” தான். ஆனால் சாந்தியின் கேள்வி அவனை அப்படி கூற வைத்திருந்தது.

ஈஸ்வரனின் பதிலில் அதிர்ந்த சாந்தவி அவன் சொன்ன கொலையை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. அதிலும் அவன் குரலில் இருந்த இயல்பு அவன் அதன் வீரியம் உணரவில்லை என்று புரிந்தது. சாந்தவியின் எண்ணம் முழுவதும் தொழில் முறை போட்டிகளில் ‘தன்னை கடத்தியது போல்… மற்றவர்களையும் கடத்தி வைத்து கொடுமை செய்வானோ…!, அந்த கோபத்தில் தான் கொலை செய்ய துணிந்தார்களோ..!” என்று தான் நினைத்தாள். ஆனால் அவன் கொலை செய்வான் என்று ஒரு நொடி கூட நினைக்கவில்லை.

ஈஸ்வரனின் பேச்சில் அவனை கோபத்தில் வெறித்து பார்த்த சாந்தவி “இதை சொல்ல வெட்கமா இல்லை..!!, எவ்வளவு சாதாரணமா சொல்றிங்க…! “சம் டைம் கொலை செய்வேன் னு”, உங்களை எல்லாம் போலீஸ் எப்படி விட்டு வைக்குறாங்க..??!” என்று கோபத்தில் அவன் சட்டையை பிடித்தவள் “அடுத்தவரை கொலை பண்ற உங்களுக்கு.. என் அப்பா பண்ண தப்புக்கு என்னை தண்டிக்க உரிமையை யார் தந்தது…?” என்றாள் ஆத்திரமாக.

அதுவரை சாந்தவி மட்டுமே கருத்தில் இருக்க அவள் பேச்சை பொறுத்து கொண்டிருந்த ஈஸ்வரனுக்கு அவளின் அப்பா என்ற சொல் குமரனை நினைவு படுத்த அதுவரை அடக்கப்பட்ட கோபமும், ஆத்திரமும், தலைக்கு ஏற சாந்தவி கழுத்தை நெரித்து சுவற்றில் சாய்த்தவன் “என்னடி திடிர்னு கொடுக்கு முளைச்சிட்டோ..? ஓவரா பேசுற..! இனிமேல் அவனை பற்றி என் முன்னாடி பேசுன.. நான் என்ன செய்வேனு எனக்கே தெரியாது..!” என்று உறுமியவன் சாந்தவி மூச்சி விட முடியாமல் தவிப்பதை பார்த்து, உள்ளுக்குள் தவித்த நெஞ்சின் தவிப்பை அடக்க முடியாமல், சினத்துடன் அவளை உதறி விட்டான்.

ஈஸ்வரனின் உதறலில் கீழே விழாமல் தன்னை நிலை படுத்தி கொண்ட சாந்தவி “கொடுக்கு திடீர்னு முளைக்குறது இல்லை. அது பிறக்கும் போதே இருக்குறது தான்.., தேவையான நேரத்துல இயல்பாகவே முன்வந்து கொட்டும். உங்க கொடுமையை பொறுத்துக்கிட்டு அமைதியா இருந்ததுனால எனக்கு கோபப்படுவே தெரியாதுன்னு நினைச்சா… அது உங்க முட்டாள்தனம். என் கோபமோ.., விளையாட்டு தனமோ.., வெளிப்படுறது என் முன்னாடி நிக்குறவங்களை பொறுத்தது….” என்று சாந்தவி அலச்சியமாக கூற,

அவளை அடிக்க துடித்த கையை அடக்கி கொண்ட ஈஸ்வரன் “அப்படி என்னடி பெருசா வித்தியாசத்தை பார்த்துட்ட, நான் எப்பவும் ஒரே மாதிரி தான். யாருக்காகவும் என்னை மாத்திக்க மாட்டேன்..” என்றான் ஈஸ்வரன்

“நீங்க மாறலை…, நான் தான் முட்டாளா இருந்து இருக்கேன். உங்களை சாதாரண மனுசனா நினைச்சேன். மற்றவங்களால கஷ்டத்தை மட்டும் அனுபவிச்ச ஈஸ்வரன்னு தப்பா நினைச்சிட்டேன். ஆனா… இப்போ தானே தெரியுது… நீங்க கொலை செய்யவும் அஞ்சாத அரகன் ஈஸ்வரன்னு”.

“கல்யாணத்துக்கு முன்னாடி நான் என்னை அறியாமையே உங்களை காயப்படுத்திட்டேனோனு நினைச்சி அமைதியா போனேன். கல்யாணத்துக்கு அப்பறம் உண்மை தெரிஞ்சி என் அப்பாவால கஷ்டத்தை மட்டும் அனுபவிச்சி.., அதோட வலிகளோடவே என் முன்னாடி நின்ற உங்க வலியை என் வலியா உணர்ந்தேன். அதான்… என்னை காயப்படுத்துனா உங்க காயம் ஆறும்னா அப்படியாவது என் அப்பா செஞ்ச பாவம் கரையட்டும்னு அமைதியா எல்லாத்தையும் தாங்கிக்கிட்டேன்…”

“ஆனா… நீங்க நான் நினைச்ச சாதாரண மனுசன் இல்லை. அரக்கன்..! மற்றவங்களையும் தன்னை போல உணர்வுகள் உள்ள மனுசனா நினைக்காத அரக்கன்…” என்று சாந்தவி கோபத்திலும் ஆற்றாமையிலும் சீற

“சாந்தவி ஜஸ்ட் இனாஃப்! யூ ஆர் கிராசிங் யூவர் லிமிட்… ஜஸ்ட் ஸ்டாப் அன்ட் லீவ்…, ஆர் எல்ஸ் யூ வில் பேஸ் த கோன்சீயூன். நான் எப்பவும் பொறுமையா பேசிட்டு இருக்க மாட்டேன்” என்று அடி குரலில் சீற, “நீங்க உங்க லிமிட்டை கிராஸ் பண்ணுனதுனால தான் இப்போ நான் பேசுறேன். ஈவு.., இரக்கம் இல்லாம மற்றவங்களை அடிச்சி கொடுமை படுத்துற உங்களுக்கு என் அப்பா பண்ண தப்புக்கு எனக்கு தண்டனை தர என்ன தகுதி இருக்கு…?! பதில் சொல்லுங்க?” என்றாள் சாந்தவியும் சீற்றமாக.

“அப்பா…! அப்பா…!” என்று கோபத்தில் கத்திய ஈஸ்வரன் “அவனை உன் அப்பான்னு சொல்லாத டி. நீ என்னை என்ன வேணா பேசு…, ஆனா அந்த துரோகியை என்கூட சேர்த்து பேசாத. இனிமேல் உனக்கு எல்லாம் நான் மட்டும் தான். புரிஞ்சிதா..!” என்று கேபமாக சீற

“ஏன்.. சொல்ல கூடாது?, நான் சொல்வேன். உங்க குடும்பத்துக்கு என் அப்பா துரோகம் பண்ணாலும் எங்களை தேவதை மாதிரி தான் பார்த்துகிட்டாங்க. அவரை அப்பான்னு சொல்ல கூடாது. ஆனா.. என்னை பார்த்த நிமிஷத்துல இருந்து, என்னை கொடுமை மட்டுமே செஞ்ச உங்களை தான் ஹஸ்பன்ட் னு வெளிய சொல்லனுமா…!?, நாட்டுக்கே துரோகியா இருந்தாலும் அந்த குமரன் தான் என் அப்பா.. அதை யாராலையும் மாற்ற முடியாது..” என்று சாந்தவியும் ஈஸ்வரனுக்கு இணையாக கோபம் காட்ட, ஈஸ்வரனின் கை சாந்தியின் கன்னத்தை பதம் பார்த்திருந்தது.

ஈஸ்வரனால் சாந்தவி குமரனுக்கு சாதகமாக பேசியதை எற்றுகொள்ள முடியவில்லை. கோபம் கனல் என பெருகியது. அதிலும் குமரனை விட தன்னை குறைவாக பேசியது உள்ளுக்குள் வலியை கொடுக்க ஆத்திரம் அடங்காமல் டிரஸ்சிங் டேபிலில் குந்தியவன் “ஆமா… டி. நீ அப்படி தான் சொல்லனும். இந்த ஈஸ்வரன் மட்டும் தான் இனி உனக்கு எல்லாம்” என்றான் கட்டளையாக.

ஈஸ்வரன் அடித்ததிலேயே துவண்டிருந்த சாந்தவிக்கு, அவனின் செந்தனலாக சிவந்த முகம் உள்ளுக்குள் உதறல் எடுக்க, தன் பயத்தை வெளிக்காட்டாமல் நின்றவள் “அப்போ… இந்த அடிதடிய விட்டுடுங்க. நான் நீங்க சொன்ன மாதிரி இந்த ஈஸ்வரன் தான் “என் எல்லாம்னு..” சொல்றேன். என்ன.. விட்டுடுறிங்களா…?” என்று நக்கலாக கேட்க,

“ஜஸ்ட் ஸ்டாப் இட், அன்ட் கெட் அவ்ட் ஆஃப் மை சைட் இடியட்..” என்று ஈஸ்வரன் கோபத்தை அடக்க முடியாமல் வெடிக்க

“ஏன் பேச கூடாது..?, நீங்க என்ன நியாயவாதியா நீங்க சொன்னதும் கேக்குறதுக்கு. இன்னைக்கு சுட வந்தவன்.., நாளைக்கு என்ன செய்வானோனு..! இங்க நான் தான் செத்து பிழைக்கனும். உங்களுக்கு என்ன நீங்க பாட்டுக்கு ஊர் பகையை இழுத்துட்டு வருவிங்க” என்று கூறிய சாந்தவிக்கு அதுவரை இருந்த திடம் மறைந்து அழுகை வர, “ப்ளீஸ்.. இதெல்லாம் வேண்டாமே..! விட்டுடுங்களேன்..” என்று கூறியவள் சமாதானமாக ஈஸ்வரன் கை பற்றினாள்.

தன் கை பற்றிய சாந்தவியை உதறிய ஈஸ்வரன் “நான் என்ன செய்றேனோ அதோட விளைவுகள் புரிஞ்சி தான் செய்றேன். எனக்கு எதுவும் ஆனா கவலை பட என் அப்பா, அம்மா இருக்காங்க…, இந்த குமரன் மகள் எனக்காக கவலை பட வேண்டிய அவசியம் இல்லை” என்றவன் அறையில் இருந்து வெளியேற போக

தனக்கு ஒன்றென்னால் தன் பெற்றவர்கள் என்ன ஆவார்கள் என்ற எந்த வருத்தமும் இல்லாமல் தான் செய்வது தான் சரி என, கடிவாளம் போட்ட குதிரை என பேசிய ஈஸ்வரன் மேல் சற்று தனிந்திருந்த கோபம் சாந்திக்கு தலை தூக்க

“இனிமேல் நீங்க இந்த வேலையை செய்ய கூடாது. மீறி செஞ்சா…” என்று சாந்தவி கூறும் போதே, திரும்பி வந்த ஈஸ்வரன் “செஞ்சா என்னடி செய்வ? ம்… என்ன செய்வ…??” என்று திமிராக கேட்க

“செய்ய கூடாது. மீறி செஞ்சா எல்லா உண்மையையும் அத்தை, மாமா, சாரதா எல்லார் முன்னாடியும் சொல்லிட்டு, எங்க அப்பா உங்களுக்கு செஞ்சதையும் சொல்லிட்டு சாருவை கூட்டிட்டு இந்த விட்டை விட்டு போய்டுவேன். நீங்க என்னை கொடுமை படுத்துனது முதற்கொண்டு எல்லாம் சொல்லுவேன். என் அப்பாவை வெறுத்தாலும் கண்டிப்பா உங்களையோ உங்க குடும்பத்தையோ சாரு ஏத்துக்க மாட்டா. ஏன்னா அவ என் அக்கா. சின்ன வயசுல தொலைச்சி இத்தனை வருசம் கழிச்சி நீங்க கிடைச்சதா நினைச்ச உங்க சொந்தம் இனிமேலும் இல்லாம போகும்…” என்று சாந்தவி கூறி முடிக்கவும், அவளை ஓங்கி அறைந்த ஈஸ்வரன் அவள் கழுத்தை நெரித்து “என்னடி மிரட்டி பாக்குறியா..?” என்றான் ஆங்காரமாக…,

ஈஸ்வரனின் கேள்விக்கு சாந்தவி பதில் பேசும் முன் “சாவி..!” என்று சாரதா கதவை தட்டும் சத்தம் கேட்க சாந்தவி, ஈஸ்வரன் இருவர் அதிர்ந்து நின்றனர்.

நிழல் தொடரும்…