நெருப்பின் நிழல் அவன்! 14

அத்தியாயம்: 14

ஈஸ்வரனின் தவறை சுட்டி காட்டி அவனுடன் சண்டையிட்டு கொண்டிருந்த சாந்தவி, சாரதாவை எதிர் பார்க்கவில்லை. அவள் அழைப்பில் சாந்தவி, ஈஸ்வரன் இருவரும் திகைத்து நின்றனர்.

அவர்கள் பேசியதன் அர்த்தம் சாரதாவிற்கு புரியவில்லை என்றாலும் தாங்கள் சண்டையிட்டது தெரிந்து வருந்துவாள் என்று சாந்தவி நினைக்க!, ஈஸ்வரன்…, சாரதா தாங்கள் பேசியதை கேட்டிருப்பாளோ..! அதனால் உண்மையை கூற வேண்டியது வருமோ..! என நினைக்க என இருவரும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க, சாரதா மீண்டும் “சாவி..” என்று அழைத்திருந்தாள்.

சாந்தவி உண்மையை கூறி விடுவாளோ..! என்று நினைத்து ஈஸ்வரன் திரும்பி சாந்தவியை பார்க்க, அவன் எண்ணம் புரிந்த சாந்தவி, தன் கழுத்தில் இருந்த ஈஸ்வரன் கையை தட்டி விட்டவள் “உங்க தங்கச்சியை நீங்களே சமாளிக்க…!” என்று விட்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

சாந்தவி குளியலறை சென்றதே அவள் சாரதாவிடம் உண்மையை கூற மாட்டாள்.. என்று நிம்மதியை ஈஸ்வரனுக்கு தர எதுவும் நடக்காதது போல் சென்று கதவை திறந்தவன் “வா… சாரு என்ன..!” என்றான்

“சாவி இல்லையா…!” என்று சாரதா கேட்க, “ரெஸ்ட் ரூம் போய்ருக்கா. நீ உள்ள வாமா..” என்று அழைத்தான்.

“நாங்க ஊருக்கு கிளம்புறோம். அதை சொல்ல தான் வந்தே…” என்ற சாரதா அறை வாசலில் நின்றே கூறினாள்.

“என்ன திடீர்னு கிளம்புறிங்க?, இன்னும் ஒன் வீக் இருப்போம்னு மிதுன் சொன்னானே..! ஏதும் அர்ஜென்ட் வோர்கா மா…?!” என்று ஈஸ்வரன் கேட்க,

“அதெல்லாம் இல்லை. மிதுன் அப்பா கால் பண்ணி வர சொன்னாங்க அதான் கிளம்புறோம்…, சாவி வந்ததும் சொல்லுங்க நான் ஹால்ல இருக்கேன்…” என்று சாரதா பட்டும் படாமல் கூற

“சரிமா… நான் சாந்தவி வந்ததும் சொல்லி கூட்டிட்டு வரேன்..” என்று ஈஸ்வரன் கூறவும் சாரதா சென்று விட, அவளுக்கு தாங்கள் சண்டை போட்டது தெரிந்து விட்டது என்ற யோசனையுடன் சோஃபாவில் வந்து அமர்ந்தான்.

கண்ணாடியில் முகம் பார்த்த சாந்தவிக்கு.., ஈஸ்வரன் அடித்ததில் கன்னத்தில் அவன் விரல் தடம் பதிந்து சிவந்து இருந்ததை பார்த்து கோபம் வந்தது “காட்டுமிராண்டி… குரங்கு..” என்று அவனை திட்டி கொண்டே குளிர்ந்த நீர் வைத்து சோப் போட்டு முகத்தை கழுவியவள் வீக்கம் சற்று குறைந்ததும் முகம் துடைத்த படி வெளியே வர “சாரதா ஊட்டி கிளப்புறாளாம்..” என்றான் ஈஸ்வரன்

“ஹோ.. சரி..” என்று சாந்தவி சாதரணமாக கூற,

“என்னடி சரிங்குற..?, எனக்கு சாரதா ஊட்டி போக கூடாது..! இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு போக சொல்லி நீ பேசு…” என்க

“விருந்தாட வந்த இடத்துல ரொம்ப நாள் இருக்க முடியாதுனு.. அவளுக்கே தெரிஞ்சி கிளம்பறா… இதுல நான் சொல்ல எதுவும் இல்லை..” என்ற சாந்தவி அறையை விட்டு வெளியேறி விட்டாள்.

“யார் டி ஹெஸ்ட்..?” என்ற ஈஸ்வரனின் அதட்டல் காற்றோடு சென்றிருந்தது. கீழே வந்த சாந்தவி “என்ன சாரு.. ஊருக்கு கிளம்பறியாம்..! மணி ஆறு ஆகுது. ஏன் நைட் டைம் டிராவல் பண்ணிகிட்டு நாளைக்கு போ…!” என்று கூறி கொண்டே அவளுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தவள், “என்ன மாமா சார்.. ராத்திரியோட.. ராத்திரியா.. ஊட்டில கோட்டை கட்ட போறிங்களா…!” என்று மிதுனை சீண்ட

“ஆமா…, என் வாயாடி மச்சினிச்சிக்காக ஊட்டி மலையில கோட்டை கட்டி சரித்திரத்துல இடம் பிடிக்க போறேன்…” என்று மிதுனும் பதில் பேச என இருவரும் முன்பு போல் விளையாட்டாக பேசி சிரித்தனர்.

சாந்தவிக்கும் ரொம்ப நாளைக்கு பிறகு அவள் அவளாக இருந்த உணர்வு தோன்ற மனதுக்கு இதமாக இருந்தது.

மிதுன் சாந்தவி இருவரும் வாயாடி கொண்டிருக்க.. ரத்தினம், உமையாள், சாரதா மூவரும் சுவாரசியமாக அவர்களை வேடிக்கை பார்த்தனர்.

சாரதாவை ஊட்டி செல்ல விடாமல் தடுக்க என்ன சொய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்த ஈஸ்வரன் கீழே கேட்ட சாந்தவியின் சிரிப்பு சத்தத்தில் கீழே வந்தவன் இயல்பாக சாந்தவி அருகில் சென்று அமர்வது போல் அமர்ந்தான்.

சாந்தவி அவனை கேள்வியாக பார்க்க, அவள் பார்ப்பதை உணர்ந்தாலும் சாந்தவி புறம் திரும்பாத ஈஸ்வரன் “என்ன டா இப்பவே கிளப்பற..? இன்னும் ஒன் வீக் இருப்பனு எக்ஸ்பேக்ட் பண்ணேன்…!” என்று மிதுனிடம் பேச,

“நானும் அந்த பிளான்ல தான் டா இருந்தேன். சடனா அப்பா கால் பண்ணி வர சொன்னார்.., அவங்க கொஞ்சம் இலகி இருக்காங்க, இப்போ போனா ஈசியா சமாதானம் செய்யலாம் அதான் கிளம்புறேன்..” என்று மிதுன் சொல்லவும்,

“ம்.. ஓகே டா..” என்ற ஈஸ்வரன் “சாந்தவி நம்ம கபோர்ட் உள் ரேக் ல ஒரு பாக்ஸ் வச்சிருக்கேன்.. எடுத்துட்டு வா..” என்க, “என்ன நம்ம கபோர்டா.. இது எப்போ இருந்து..!?” என்று சாந்தவி ஆச்சரியமாக அவனை பார்க்க, அவளை முறைத்த ஈஸ்வரன் “போ..” என்றான்.

மற்றவர் முன்பு எதிர்த்து எதும் பேச முடியாமல் எழுந்து சென்ற சாந்தவி அவன் சொன்ன பாக்ஸை எடுத்து வந்து அவனிடம் தர “என்கிட்ட ஏன் தர..?, சாரு கிட்ட குடு…” என்றான்.

“எடுத்துட்டு வர சொன்ன இவர் கிட்ட தானே தர முடியும்!, எப்போ என்ன பண்றாருனே புரிய மாட்டேங்குது. ரூம்ல அந்த கத்து கத்திட்டு இப்போ ஒன்னுமே நடக்காத மாதிரி இருக்க எப்படி தான் முடியுதோ…!” என்று சாந்தவி உள்ளுக்குள் புலம்பி கொண்டே.. சாரதாவிடம் அந்த பாக்ஸை கொடுக்க,

அதை வாங்கி கொள்ளாத சாரதா “என்ன இது..?” என்று ஈஸ்வரனிடம் கேட்டாள்.

சிறு புன்னகையுடன் எழுந்து சாந்தவி அருகில் வந்த ஈஸ்வரன், அவள் தோளில் கை போட்டு தன்னோடு அணைத்து கொண்டு “எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை துணையை கொடுத்ததுக்கு… சின்ன கிஃப்ட். ஊட்டில உன் பெயர் ல வீடு பதிவு பண்ணி இருக்கேன்…” என்று கூறவும்

“நான் என் தங்கச்சியை உங்களுக்கு விற்றவில்லை…!” என்று சாரதா வெடுக்கென கூறி விட, ஈஸ்வரன் முகம் இறுகி விட்டது.

“சாரு…” என்று மிதுன் அவளை அதட்ட, சாந்தவி முகத்தில் ஈஸ்வரன் மீதான அறுவெறுப்பின் சாயல். மற்றவர் முன் தங்கள் பிரச்சனையை காட்டி கொள்ளாமல் இருக்கவே அவன் தன்னுடன் இயல்பாக இருப்பதாக நினைத்த சாந்தவிக்கு ஈஸ்வரனின் செயலில் காரணம் இப்போது தான் புரிந்தது.

அவன் அன்று சொன்ன ‘சாரதாவிற்கு என் கடமையை செய்வதற்காக மட்டும் தான் உண்மை திருமணம் செய்தது. அது முடிஞ்சதும் உனக்கும்.. எனக்கும்.. எந்த உறவும் இல்லை..’ என்று சொன்னது நினைவு வர, “இவ்வளவு நேரம் ஒட்டி நின்றது இதற்காக தானே..!” என்று அவனை அறுவெறுத்து பார்த்தவள் ஈஸ்வரனை விட்டு விலகி நின்றாள்.

மிதுனின் அதட்டலில் சாரதா அமைதியாகி விட அவளை முறைத்த மிதுன் “அவன் தரதை வாங்க பிடிக்கலை னா வேண்டாம்னு சொல்லு…, அதை விட்டுட்டு இது என்ன பேச்சி சாரு..” என்று சாரதாவை திட்ட

“ஏன் மா.. நாங்க தந்தா வாங்க மாட்டியா?, உனக்கு எதுவும் நாங்க செய்ய கூடாதா..?” என்று உமையாள் வருத்தம் தோய்ந்த குரலில் கேட்க.

“இது தான் ஆண்டி பிரச்சனை. நீங்க ஏன் எனக்கு செய்யனும்?. தெரிஞ்சவங்களுக்கு செய்யுறதுக்குனு ஒரு வரம்பு இருக்கு. நீங்க செய்யுறது அதை தாண்டி இருக்கு…, இதுக்கு முன்னாடி யாருக்கும் இப்படி வீடு வாங்கி குடுத்து இருக்கிங்கலா..?, அப்பறம் எனக்கு மட்டும் ஏன்?” என்று கேட்ட சாரதா, உமையாள் அமைதியாக இருக்கவும்

“ஏன்னு நான் சொல்லட்டா..! நீங்க எல்லாரும் எங்கிட்ட எதையோ மறைக்குறிங்க..!, ஆனா அதோட பலனை எங்கிட்ட மறைமுகமா திணிக்க பாக்குறிங்க…, உங்களோட செய்கைகளை புரிஞ்சிக்க முடியாத அளவு நான் குழந்தை இல்லை ஆண்டி..!” என்றவள்

அருகில் நின்ற ரத்தினத்தை கை காட்டி “அங்கிளை பஸ்ட் டைம் பார்க்கும் போது.. உருவத்தில் என்னை மாதிரி ஏழு பேர்ல இவரும் ஒருத்தர்னு நினைச்சேன்..!, ஆனா உங்களோட செய்கைகள், அப்படி இல்லைனும்.., ஏதோ பந்தம் இருக்குனும் இத்தனை நாள்ல புரிய வச்சிட்டு. அதிலேயும் நேற்று மதியம் அங்கிள் பண்ணதுல, எனக்கு இருந்த கொஞ்ச சந்தேகமும் சுத்தமா போய்ட்டு…” என்றாள்.

நேற்று மதிய சமையல் வேலையில் உமையாளுக்கு உதவிய சாரதாவிற்கு தலை வலிக்கவும் அவரிடம் கூறி விட்டு ஹால் சோஃபாவில் வந்து கண்களை மூடி அமர்ந்தாள். கொஞ்சம் நேரத்தில், வெளியே சென்று விட்டு வந்த ரத்தினம் சாரதா கண்மூடி அமர்ந்து இருப்பதை பார்த்தவர் அவள் தூங்குவதாக நினைத்து ஆதுரமாக அவள் தலையை தடவி கொடுத்து விட்டு செல்ல, முதலில் மிதுன் என்று நினைத்திருந்த சாரதா பின்பு எந்த அசைவும் இல்லை என்றதும் கண் திறந்து பார்க்க… ரத்தினத்தின் முதுகு தான் தெரிந்தது. அதன் பிறகே அவள் தலையை தடவி கொடுத்து ரத்தினம் என்று புரிந்தது. தாய் மாமனிடம் தாயின் அன்பை உணர்ந்தவளுக்கு அது ஆயூள் பந்தம் என்று புரிந்தது.

சுற்றி இருந்த அனைவரும் என்ன சொல்லி சாரதாவை சமாதானம் செய்வது என்று யோசிக்க, உமையாள் ரத்தினத்தை முறைத்து பார்த்தார்.

சூழ்நிலையை உணர்ந்த ஈஸ்வரன் “அவ வேண்டாம்னு சொன்ன அப்படியே பாராத்துட்டு நிற்பியா…?” என்று சாந்தவியை அதட்டியவன் “கீயை சாரு கிட்ட குடு…” என்று பேச்சை மாற்ற

அவனை ஏளனமாக பார்த்த சாந்தவி “எங்க அப்பா பண்ண பாவமே இன்னும் எங்க தலையில தான் இருக்கு. அதையே எங்க போய் கழுவனு தெரியாம இருக்கேன். நீங்க அடுத்தவங்களை கொலை செஞ்சி சம்பாதிச்ச காசுல அவளுக்கு கிஃப்ட் பண்ணி உங்க பாவத்தையும் அவ தலையில ஏத்தாதிங்க…” என்று அவன் மட்டும் கேட்கும் படி கூறி அந்த பாக்ஸை அவனிடமே கொடுத்தவள் “அவ வாங்குனா நீங்களே குடுங்க, உங்களுக்கு இடையில என்னை இழுக்காதிங்க…” என்று மற்றவர் அறிய கூறி விட்டு விலகி சென்று விட்டாள்.

அவன் எதை மறைக்க முயல்கிறானோ..! சாரதா எதை அறிய முமல்கிறாளோ…! அதையே சாந்தவி மறைமுகமாக கூற ஈஸ்வரன் அனைவர் முன்பும் எதுவும் கூற முடியாமல் கை முஷ்டி இறுக நின்றான்.

நிலமை கை மீறுவதை உணர்ந்த மிதுன் “சக்தி எங்களுக்கு இந்த கிஃப்ட் வேண்டாம் டா. என்னால சாரதா வை அன்பா.., எந்த குறையும் இல்லாம பார்த்துக்க முடியும். நீங்க எப்பவும் இதே அன்போட இருந்தா போதும்..” என்றவன்

“லேட் ஆகிட்டு நாங்க கிளம்புறோம்…” என்று உமையாள் ரத்தினத்திடம் கூறியவன், “ஓய்.. வாலு, நான் கோட்டை கட்டிட்டு உனக்கு சொல்றேன். வந்து ஒன் மந்த் ஸ்டே பண்ணு ஓகே, டேக் கேர்! தைரியமா இருக்கனும்.. எப்பவும் எல்லாத்துக்கும் அழ கூடாது…” என்று சொல்ல

சாந்தவி விழி நீர் தேங்க “சரி..” என்கவும், “கிளம்பலாம் சாரு…” என்றான்.

“ம் சரி..” என்ற சாரதா மற்றவரிடம் பொதுவாக தலையசைத்தவள். சாந்தவியிடம் “உன்னை விளையாட்டு பிள்ளை. விவரம் பத்தலைனு தான் இதுவரை நினைச்சேன்..! ஆனா நீ கோலை னு உனக்கு கல்யாணம் ஆன அப்பறம் தான் டி தெறியுது…” என்று வார்த்தையாள் குட்டு வைத்தவள் “பை…” என்று அவளை அணைத்து விடுவித்து ஈஸ்வரனை திரும்பியும் பார்க்காமல் வெளியேறி இருந்தாள்.

அவர்களை வழி அனுப்பி வைத்து விட்டு உள்ளே வந்த ஈஸ்வரன் “உங்களுக்கு எத்தனை டைம் சொன்னேன்…! ‘நார்மலா இருங்க.. சாருக்கு சந்தேகம் வர மாதிரி எதுவும் செய்யாதிங்கனு’ ஏன் இப்படி பண்ணிங்க..?, இப்போ பாருங்க திரும்பி கூட பார்க்காம போறா..! இதுக்கு தான் ஆசை பட்டிங்களா..!?” என்று ரத்தினம், உமையாள் இருவரையும் திட்டியவன்

சாந்தவியை உள் அடக்கிய ஆத்திரத்துடன் பார்த்து “ஒரு இடத்துக்கு போகனும் வா..” என்றான்.

அவள் “எங்க போகனும்..?” என்று கேட்டதையும் பொருட்படுத்தாமல் இழுத்து வந்து காரின் பின்னால் தள்ளிவிட்டு முன்னால் வந்து காரை எடுத்தவன் நேராகா மதுரை பஸ்டாப் வந்தான்.

சாந்தவி ஈஸ்வரன் செய்கைக்கு காரணம் புரியாமல் பார்க்க “இறங்கு…” என்று அவள் கை பிடித்து இழுத்து வெளியே விட்டவன் “சாரதா நான் செய்யுறதை ஏத்துக்குறதுக்காக தான் உன்னை கல்யாணம் பண்ண ஓகே சொன்னேன். பட் இப்போ அது எதுவும் இல்லைனு ஆகிட்டு.. அப்பறம் நீ எதுக்கு என் வீட்டுல இருக்கனும்! தென் யாரும் என் பாவத்தை சுமக்க வேண்டாம்…” என்றவன் அவளை அங்கேயே விட்டு விட்டு திரும்பியும் பார்க்காமல் சென்றிருந்தான்.

நாம் அவசரத்திலும், ஆத்திரத்திலும் எடுக்கும் முடிவு தங்கள் வாழ்க்கையையே அழித்து விடும் என்று ஈஸ்வரன் அறியவில்லை. அறியும் போது… வாழ்க்கையை மீட்டிடுவானோ…!!!

நிழல் தொடரும்…