நெருப்பின் நிழல் அவன்! 15

அத்தியாயம்: 15

ஈஸ்வரனின் தற்போதைய கோபம் ஏன் என்று புரியாமல் அவன் பின்னே வந்த சாந்தவி அவன் இப்படி நடு தெருவில் விட்டு செல்வான் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை.

மதுரை பேருந்து நிலையமே சுறுசுறுப்பாக இயங்க சாந்தவி எங்கே செல்வது..! என்ன செய்வது..! என்று தெரியாமல் வெறித்த பார்வையுடன் நின்றாள். ஊட்டிக்கே சென்று விடலாம் என்றால் கூட கையில் ஒற்றை ரூபாய் கிடையாது. தன் கையறு நிலையை நினைத்து சாந்தவியின் மனம் நெருப்பில் இட்ட புழுவாக துடித்தது.

இதுவரை ஈஸ்வரன் அடித்து துன்புறுத்திய போது வராத வெறுப்பு, மனைவியாக இல்லாமல் சக மனுசி என்று கூட பார்க்காமல் இரவு நேரத்தில் இப்படி நடு வீதியில் விட்டு சென்றது அவன் மீது மலை அளவு வெறுப்பு வந்தது. ஈஸ்வரனை பார்த்ததில் இருந்து நடந்த ஒவ்வொன்றையும் நினைத்து பார்த்து அவன் மீதான கோபத்திலும் வெறுப்பிலும் நின்ற சாந்தவிக்கு அவளை சுற்றி இருந்த மக்களின் சத்தமோ.., பேருந்தின் இரைச்சலோ…, எதுவும் அவளை கலைக்கவில்லை.

ஏதேதோ சிந்தனையில் சுற்றுபுறம் கருத்தில் பதியாமல் வெறித்த பார்வையுடன் நின்ற சாந்தவியின் பார்வையில்.., தூரத்தில் இருந்த கோவில் கோபுரம் தெரிய, சற்று நேரம் பார்வையை அகற்றாமல் அதை வெறித்தவள் தஞ்சம் என கோவிலை நோக்கி சென்றாள்.

‘திக்கற்றவருக்கு தெய்வமே துணை!’ என்று அந்த தெய்வத்தை நாடி சென்றவளுக்கு அங்கே சென்றதும் உள்ளே செல்ல மனமில்லை. தன் இத்தனை கஷ்டத்தையும் சிரித்த முகமாக பார்த்து கொண்டிருக்கும் அம்மனை பார்க்க அவள் வெறுமை சுமத்த மனம் தடுக்க சன்னதிக்குள் செல்லாமல் வெளியே இருந்த தூணின் அருகில் அமர்ந்து கொண்டாள்.

ஏனோ… எப்போதும் முதல் ஆளாக வந்து நிற்கும் அவள் கண்ணீர் கூட இன்று ஆறுதல் கூற வரவில்லை. எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்து இருந்தாளோ..! அவள் அறியவில்லை. சாந்தவி தோளில் ஒரு கரம் பதிய “யார்..” என்று நிமிர்ந்து பார்க்க உமையாளும் ரத்தினமும் நின்றனர். உமையாள் அழுதிருப்பார் போல் முகம் சிவந்து.. கண்ணின் ஓரம் ஒரு துளி நீர் தேங்கி நின்றது.
#####

சாந்தவி குமரனை பற்றி பேசியதிலேயே கடும் கோபத்தில் இருந்த ஈஸ்வரனுக்கு, சாரதாவின் ஒதுக்கமும், சாந்தவியின் பேச்சி இரண்டும் அவன் கோபத்தை அதிகப்படுத்தி அவனை தன்னிலை இழக்க செய்ய, ஆத்திரத்தில் என்ன செய்கிறோம் என தெரியாமல் சாந்தவியை வீட்டை விட்டு அனுப்புவிட்டு வந்தவனுக்கு இதையத்தை இழந்த உணர்வு.

வீடு செல்லும் தூரம் குறைய.. குறைய.. அவனை வெறுமை தாக்கியது. அவள் இன்றி அவன் வாழ்க்கை இல்லை என்று மனம் துடிக்க, கூடவே பிறந்த வீம்பு அவனை திரும்பி செல்ல விடவில்லை.

சாந்தவியை பார்த்த நாளில் இருந்து அவள் மீதான காதல், மோதல், இரண்டாலும் தன்னிலை இழந்து முழு நேரமும் கோபத்திலேயே இருந்தவனுக்கு.. இப்போது இந்த வெறுமையும் வாழ்வின் மீதான வெறுப்பை தந்தது.

வாழ்க்கை மிகவும் வித்தியாசமானது எதை “வேண்டாம்..’ என்கிறோமோ… அதை கையில் திணித்து வாழ சொல்லும். எது ‘வேண்டும்..’ என்கிறோமோ… அதை அருகிலேயே வைத்து கையில் கிடைக்க விடாமல் கொடுமை செய்யும். ஈஸ்வரனின் நிலையும் அப்படி தான் இருந்தது. குமரனின் துரோகத்தை மறக்கவிடாமல் தடுக்கும் அதே முகம் அவளை அணைப்பில் வைத்து ரசிக்கவும் கூற, இரு தலை எருப்பாகி போனது அவன் நிலை.

புதுமண தம்பதியருக்கு எது.. எதுவோ.. இடைஞ்சலாக இருக்க, இங்கே தன் மனமே தனக்கு தடையாக இருப்பதை நினைத்து தன்னையே நொந்து கொண்டான். பழகிய கைகள் காரை சரியான பாதையில் நிதானமாக செலுத்த நினைவு மொத்தமும் தொலைத்து வந்த வைரத்தில் இருந்தது.

தலை வருடி சென்ற தென்றலும் தன்னவளின் தேகம் தொட்டு வந்திருக்குமா..! என்று எண்ணம் செல்ல, இயற்கையும் தன்னை வச்சிப்பதென்ன நினைத்து மணம் நொந்து போனவன் “என்னால முடியலை‌ டி…” என்று அருகில் இல்லாதவளிடம் முறையிட்டான்.

பெண்ணாய் பிறந்திருந்தால் அழுகையில் ஆறுதல் அடைந்திருப்பான். ஆணாக அழ கூட தகுதி இன்றி போக, அவன் இதயத்தின் வலியும் ஊமையாகி போனது.

“என்ன வாழ்க்கை..!” என்று மனம் வெறுத்து வீடு வந்து அவன் அறைக்கு சென்ற ஈஸ்வரனை “சாந்தவி எங்கடா..?” என்ற உமையாளின் கேள்வி தடை செய்ய, அவரை பார்த்தவன் “விட்டுட்டு வந்துட்டேன்…” என்றான் எங்கோ பார்த்து.

“விட்டுட்டு வந்துட்டியா..!!, எங்க டா..?, ஏன்..?!” என்று உமையாள் புரியாமல் வினவ, அவரின் கேள்வியில் மனதில் சின்னதாக ஒர் ஆசை, அவன் தொலைத்ததை மீட்டிடுவார்களா என்று தோன்ற “மதுரை பஸ் ஸ்டாப் ல…” என்றான்

“எதுக்குன்னு கேட்டதுக்கு பதில் சொல்லுடா.., சும்மா விட்டுட்டு வந்துட்டேனா என்ன அர்த்தம்…!?, அவ என் கோவிலுக்கு நேந்து விட்ட ஆடு, மாடா, உன் இஷ்டத்துக்கு விட்டுட்டு வரதுக்கு..?, அவளை இங்க கூட்டிட்டு வந்தது நான். எங்கிட்ட சொல்ல வேண்டாமா…?” என்று உமையாள் கோபமாக கேட்க,

“நான் கொலைகாரனாம். என் பாவத்தை அவ சுமக்க விரும்பலையாம்.., அதான் “போ..” னு விட்டுட்டு வந்தேன் என்றான் ஈஸ்வரனும் குரலை உயர்த்தி.

“கொலைகாரனா…! இது என்ன பேச்சி!, சாந்தவி ஏன் அப்படி சொன்னா..?, நீ என்னடா செஞ்ச…?, என்ன தான் டா நடக்குது இங்க..?” என்று உமையாள் கண்ணீருடன் கேட்கவும், “உமையா…, கொஞ்சம் பொறுமையா இரு, என்னனு கேட்போம்…, இப்போ எதுக்கு அழுற…?” என்று ரத்தினம் அவரை சமாதானம் செய்ய,

ஆனால் உமையாளின் கோபம் குறைவதற்கு பதில் அதிகரிக்க “இதுக்கு மேல என்ன பொறுமையாக இருக்கனும்..?, வீட்டு பொண்ணை கூட்டிட்டு போய் ரோட்டுல விட்டுட்டு வந்துட்டேனு சொல்றான்… இனிமேலும் பொறுமையா இருக்கனுமா…?, மதியமும் வெளிய கூட்டிட்டு போறேன்னு கூட்டிட்டு போய் எண்ண பண்ணானோ சாந்தவி முகமே சரி இல்லை. இங்க வந்த நாள்ல இருந்து ஒரு நேரம் அவ சிரிச்சி நான் பார்க்கலை. இதுக்கு மேலேயும் அமைதியா இருக்கனுமா…?” என்று ரத்தினத்திடம் வெடித்தவர், “சொல்லுடா என்ன தான் நடக்குது இங்க..?” என்று ஈஸ்வரன் சட்டையை பிடித்தவர் அவனை அறைந்து இருந்தார்.

“உமையா…” என்று ரத்தினம் அதட்ட

“ஆமா மா நான் கொலைகாரன் தான். அந்த வேலை தான் செய்யுறேன்…” என்று இன்று நடந்ததையும் சேர்த்தே கூறியவன் “போதுமா..! நான் அவளை கொடுமை மட்டும் தான் செஞ்சேன். போ… உன் மருமக வேணும்னா போய் கூட்டிட்டு வா… மதுரை பஸ் ஸடாஸ்ல நிற்பா…” என்று கோபத்தில் கத்தியவன் அவன் அறைக்கு சென்று விட, உமையாள் ஸ்தம்பித்து நின்று விட்டார்.

கண்ணீர் முத்தாக தெரித்து விழுந்தது மகன் சொன்னதை கேட்டு. ஈஸ்வரன் இவ்வளவு செய்வான் என்று அவர் எண்ணி கூட பார்த்து இல்லை. மகன் கோபக்காரன் என் நினைத்திருந்தவருக்கு அவன் சொல்லி சென்ற செய்தி இடியாக இருந்தது. உமையாள் அழுவதை பார்த்த ரத்தினம் “அவன் கொலை எல்லாம் செய்யலை உமையா.., அவன் கோபத்துல பேசிட்டு போறான். அவன் செய்யுற எல்லாத்தையாம் நான் கவனிச்சிட்டு தான் இருக்கேன். இதை நாம அப்பறமா பேசுவோம்…, இப்போ சாந்தவியை போய் கூட்டிட்டு வருவோம் வா..” என்ற ரத்தினத்துக்கே மகனை கொலை செய்ய வந்தனர் என்ற செய்தி புதிது தான். யார் னு விசாரிக்கனும் என்று மனதில் குறித்து கொண்டவர் எதையும் வெளிக்காட்டவில்லை.

ஈஸ்வரனின் செய்கை… அனைத்தும் தெரிந்த ரத்தினத்திற்கே இது அதிர்ச்சி என்றாள் உமையாளின் நிலை சொல்லவும் வேண்டுமா…!, “அவனுக்கு எதுவும் ஆகாது இல்லை…?” என்று பரிதவித்து கேட்ட, “அப்படி எதுவும் நடக்காது. அதுக்கு நான் விடவும் மாட்டேன். நீ அழதா வா…” என்று சமாதானாம் செய்து அழைத்து வந்தார்.

இருவரும் சாந்தவியை தேடி பஸ் ஸ்டாப் வந்தவர்கள் சாந்தவி அங்கே இல்லை என்றதும், அவளை தேடி இங்கே வந்தவர்கள் கண்ணில் சாந்தவி பட அவள் முன் வந்து நின்றனர்.

அவர்களை பார்த்த சாந்தவி மகன் செய்த தவறுக்கு பெற்றவரிடம் கோபம் காட்ட தோன்றாமல் அமைதியாக இருக்க, “அம்மாடி வாமா.. வீட்டுக்கு போவோம்…” என்று அழைத்த உமையாளுக்கு வார்த்தைக்கு பதில் கண்ணீரே வந்தது.

“யார் வீட்டுக்கு ஆன்டி…?, எனக்கு இங்க உறவுனு சொல்லிக்க யாரும் இல்லை. அப்பறம் யார் வீட்டுக்கு வரனும்…?” என்று சாந்தவி விரக்தியாக கேட்க,

“ஏன் அப்படி சொல்ற..! நாங்க உன்னை அப்படியா பார்த்துக்கிட்டோம்..?” என்று உமையாள் தேம்பலுடனே கேட்க, “உங்க மகனால தான் நீங்க எனக்கு உறவு. அவரே… “நீ எனக்கு தேவை இல்லைனு..” சக மனுசிய கூட மதிக்காம நடு தெருவுல விட்டுட்டு போய்ட்டார். உங்க பையன் உறவே இல்லைனு ஆனதுக்கு அப்பறம் நீங்க எப்படி எனக்கு உறவு ஆவிங்க…” என்று கேட்டாள். அவர்களிடம் கோபம் காட்ட கூடாது என நினைத்தும் வார்த்தைகள் காட்டமாகவே வந்தன சாந்தவிக்கு

“அவன் கோபத்துல அப்படி செஞ்சிட்டான். நீ இல்லாம அவன் இருக்க மாட்டான். அவனை பெத்தவ நான் சொல்றேன்… நீ… வேணும் னா பாரு அவன் உன்னை தேடி வருவான்…” என்றார் உமையாள் அந்த நிலையிலும் மகனை மருமகளிடம் விட்டு கொடுக்க முடியாமல். உமையாளை கை எடுத்து கும்பிட்ட சாந்தவி “அப்படி மட்டும் உங்க பையன் வந்திடாம ஆன்டி. இனிமேலும் அவர் கொடுமையை தாங்க எனக்கு சக்தி இல்லை. கோபத்துல கை நீட்டி இருந்தா கூட எல்லார் வீட்டுலையும் நடக்குறது தானேனு பொறுமையா இருந்து இருப்பேன். ஆனா… இனிமேல் உங்க பையன் முகத்துல கூட முழிக்க மாட்டேன். அவர் நான் வேணும்னு என்னை தேடி வந்தாலும் அவர் எனக்கு வேண்டாம்…” என்று உறுதியாக கூறியவள் தொடர்ந்து

“அவர் சாரதாவுக்காக கல்யாணம் பண்ணார். இப்போ நீங்களும் சாரதா கிட்ட உண்மையை சொல்லிடுவேனோனு தானே தேடி வந்திருக்கிங்க…!, உங்களை போல எனக்கும் என் அக்கா நிம்மதி முக்கியம் தான். உண்மையை சொல்றேன்னு அவ முன்னாடி போய் நிற்க மாட்டேன்…” என்றாள் கோபமும் ஆதங்கமுமாக.

அதுவரை உமையாளும், சாந்தவியும் பேசுவதை கேட்டு கொண்டிருந்த ரத்தினம் “உனக்கு உண்மை தெரியுமாமா…?” என்று கேட்க, சாந்தவி “ஆமா..” என்று தலையாட்டவும், “எப்போம் சொன்னான்…?” என்றார் அடுத்ததாக.

“எங்க கல்யாணம் நடந்த அன்றைக்கு நைட்…” என்ற சாந்தவிக்கு அன்றைய நிகழ்வு கண் முன்னால் வந்து செல்ல

” “மென் இஸ் ஆல்வேஸ் மென்!” என்குறது அவங்களுக்கு எத்தனை விதத்துல பொருந்துது இல்லை அங்கிள்..!, அவங்க வீட்டு பொண்ணை பூ மாதிரி பார்த்துகிட்டு.. அடுத்த வீட்டு பொண்ணுங்களை டிஸ்யூ மாதிரி தேவை முடிஞ்சதும் கசக்கி குப்பையில வீசிடுறாங்க…, அந்த குமரனும் சரி, இந்த ஈஸ்வரனும் சரி…” என்று கசப்பாக புன்னகைத்தாவள்

“அந்த குமரன் மகளை ராணி மாதிரி பார்த்துகிட்டார். ஆனா… உங்க மகன் சாரதா கிட்டயும் அன்பா இருந்த மாதிரி இல்லையே‌…!” என்று ஏளனமாக கேட்டாள்.

அவள் கேள்விக்கு புன்னகையையே பதிலாக கொடுத்த ரத்தினம் சற்று நேரம் சுற்று புறத்தை வேடிக்கை பார்த்தவர் “அந்த பொண்ணை பாரேன் மா…” என்று சற்று தொலைவில் அமர்ந்து பேசி கொண்டிருந்த ஒரு பெண்ணை கை காட்டினார்.

“யார்…” என்று அவர் கை காட்டிய பெண்ணை பார்த்த சாந்தவி திரும்பி ரத்தினத்தை புரியாமல் பார்க்க, “அந்த பொண்ணுக்கு இரண்டு பிள்ளைங்க.., அந்த பிள்ளைங்க செயலையும், அந்த பொண்ணு செயலையும் பாரு…” என்றார் சற்று விளக்கமாக.

அவர் பேச்சை ஏற்று சாந்தவியும் அந்த பெண்ணை ஊன்றி பார்த்தாள். மூத்த பையன் சற்று தள்ளி அவன் வயது பிள்ளைகளுடன் விளையாட, அந்த பெண் மற்றவரிடம் பேசி கொண்டிருந்தாலும் அடிக்கடி மகன் என்ன செய்கிறான்!, அருகில் இருக்கிறானா.., என்று திரும்பி பார்த்து கொள்ள, இரண்டாவது குழந்தை மடியில் அமர்ந்து.. அந்த பெண்ணின் தாலியை இழுப்பதும், பூவோடு சேர்த்து முடியை இழுப்பதும், சேலை முந்தானையை இழுக்க, என சேட்டை செய்ய, அந்த குழந்தையை முறைத்து, கண்டித்து பார்த்தும் குழந்தை சேட்டையை விடாமல் இருக்க, குழந்தையின் கையில் அடி வைத்து மடியில் இருந்து இறங்கி விட்டாள் அந்த பெண். ஆனால்.. குழந்தை அவள் முகம் பார்த்து அழ “சேட்டை பண்ணாம இருக்கனும்.. இல்லைனா அடிப்பேன்..” என்று அதட்டி மீண்டும் மடியில் அமர்த்தி கொண்டாள்.

அவர்களை வேடிக்கை பார்த்த சாந்தவி முகம் குழப்பத்திலேயே இருக்க அதை பார்த்த ரத்தினம் “அந்த மூத்த குழந்தை மாதிரி தான் சக்திக்கு சாரதா. அவனை விட்டு தள்ளி இருந்தாலும் அவன் கண் பார்வையிலேயே அவ நல்லபடியா இருக்கனும். நெருங்க முடியலைனாலும் அவ மேல ஒரு பார்வை இருந்துட்டே இருக்கும். இரண்டாவது குழந்தை தான் நீ…, திட்டினாலும், முறைசாலும், அடிச்சாலும் உன்னையும் விட்டுட மாட்டான். இரண்டு பேர் மேலயும் ஒரே பாசம் தான். அதை காட்டுற விதம் தான் மாறி போச்சி..” என்று மகனின் எண்ணத்தை கூற,

“நான் என்ன அப்படி சேட்டை பண்ணேன்..!” என்று மனதில் நினைத்து கொண்ட சாந்தவி “நீங்க ஈசியா சொல்லிட்டிங்க அங்கிள். ஆனா காயம் பட்டு அதோட வலிகளை அனுபவிச்சவ நான். எனக்கு தான் என்னோட வலி புரியும்…” என்று ஆதங்கமாக கூற

“ஆமா மா… நீ சொல்றது நூறு சதவீதம் உண்மை. காயம் பட்டவங்களுக்கு தான் அதோட வலி தெரியும். அதை கேக்குறவங்களுக்கும், பாக்குறவங்களுக்கும், அது வெறும் வார்த்தையும்.. காட்சியும்… மட்டும் தான்..” என்று சிறு இடைவெளி விட்டவர் “அப்படி தான் சக்தியோட வலியும். நமக்கு அது வெறும் வார்த்தை மட்டும் தான்.. ஆனா அது அவனோட வலி..” என்றார் முகம் மாறாமல்.

“அங்கிள்…” என்று சாந்தவி அவரை திகைத்து பார்க்க, அவளை பார்த்த ரத்தினம் “கேக்குற நமக்கு சக்தியோட வலி வெறும் வார்த்தைகள் மட்டும் தான். ஆனா.. அவன் இழந்தது அவன் உறவுகளை. ஒரு குடும்பத்துக்கு மூத்த தலைமுறை எவ்வளவு பெரிய பொக்கிஷம் தெரியாமாமா..!, பெற்றவங்களா நாம சொல்ல தயங்குறதை நாசுக்கா சொல்லி.., தட்டி கொடுத்து, நல்லது கெட்டது சொல்லி குடுத்து வளர்ப்பாங்க. ‘பேரன்னு..’ தோள்ல தூக்கி வச்சிப்பாங்க, அப்படி ஒரு பொக்கிஷத்தை இழந்து இருக்கான். “என் மருமகன்னு..” பெருமையா பேசி எல்லா இடத்துலையும் அவனை முன் நிறுத்தற அத்தைங்குற அழகான‌ உறவை இழந்து இருக்கான். எல்லா விசயத்துலையும் அவனோட போட்டி போட்டு, சண்டை போட்டு, கூடவே வளருர ஒரு நல்ல தோழியை ( தங்கை) இழந்து இருக்கான். அழகான குழந்தை பருவத்தை இழந்து இருக்கான். அது நமக்கு வெறும் வார்த்தை தான். ஆனா.. அவனுக்கு வலி இல்லையாமா…” என்று கேட்க
சாந்தவியின் கண்கள் அவள் அறியாமலேயே கண்ணீரை சுரக்க, உமையாளோ தொண்டை குழியை தொண்டி வெளிவந்த கேவலை இருக்கும் இடம் அறிந்து முந்தானையால் வாய் மூடி மறைத்து கொண்டார். அவர்கள் பட்ட வலியின் வடுக்கள் இன்னும் மறையவில்லை.

சாந்தவி கண்ணில் தேங்கிய நீருடன் “உங்களுக்கும் என்னை பிடிக்காதா…?, என் மேல கோபமா…?” என்று கேட்க, “உன் மேல கோபமா இருக்குறவங்க தான்.. அவன் உன்னை விட்டுட்டு வந்துட்டேன்னு சொன்னதும் தேடி ஓடி வந்தோமா..!” என்று உமையாள் கேட்க

ரத்தினம் “நீயும் எங்களுக்கு சாரதா போல தான். சேற்று’ல முளைச்சதால செந்தாமரையோட புனிதம் கெட்டுடாதுமா. உன் அப்பா குடுத்த வலியை நாங்க கடந்துட்டோம். ஆனா சக்திக்குள்ள இன்னும் அணையாத நெருப்பா இருக்கு, அதோட நிழல் வெளிப்பாடு தான் அவனோட கோபம். அதை அணைக்க உன்னால முடியும் னு எனக்கு தோனுது. நீ செய்யதா தப்புக்கு சக்தி உன்னை தண்டிக்கும் போது… அவன் செஞ்ச தப்புக்கு நீயும் அவனை தண்டி. ஆனா அதை வீட்டுல இருந்து செய்..” என்றார் மகனின் நிலையை கூறி சமாதானமாக.

“இல்லை எனக்கு அவரை பார்க்க வேண்டாம். என்னால உங்க மகனை மாற்ற முடியாது…” என்ற சாந்தவி மீண்டும் ஈஸ்வரின் வீட்டுக்கு செல்ல தயங்க, “சரி.. சக்தி மனைவியா இல்லாம, என்னை உன் தாய்மாமா நினைச்சி என் வீட்டுக்கா என் மருமகளா வா..” என்று ரத்தினம் சாந்தவியை எப்படியும் அழைத்து சென்று விட வேண்டும் என்று மறு வழி கூறினார்.

சாந்தவிக்கு ‘தன்னை மதிக்காமல் இருந்த ஈஸ்வரன் பேச்சிற்கு மதிப்பு தந்து வீம்பாக இருப்பதை விட, தன்னை மதித்து கூப்பிடும் ரத்தினம் பேச்சை கேட்டால் என்ன..!’ என்று தோன்ற அதன் சாதக பாதகங்களை யோசித்தவள் “சரி நீங்க சொன்ன மாதிரி உங்க சொந்தமா.., விருந்தாளியா… வரேன். ஆனா நான் உங்க வீட்டுல இருக்குறது உங்க பையனுக்கு தெரிய கூடாது..” என்றாள். உமையாள் கூறியது போல் ஒரு வேலை அவன் தன்னை தேடினால் அவன் நன்றாக அலையட்டும் என்று நினைத்து.

“அது எப்படி மா.. ஓரே வீட்டுல இருந்துட்டு தெரியாம இருக்கும்..?” என்று உமையாள் தயங்க, “நீங்க நினைச்சா முடியும். அப்படி முடியாதுன்னா.. சொல்லிடுங்க, நான் வேற எங்கையாவது போறேன். உங்களோட வரவில்லை..” என்று சாந்தவி பிடிவாதமாக கூற, வேறு வழி இல்லாமல் உமையாள், ரத்தினம் இருவரும் சம்மதித்தனர்.

சாந்தவியும் வீட்டிற்கு வர சம்மதித்து விட, மூவரும் சாமி கும்பிட்டு விட்டு வீட்டிற்கு செல்லலாம் என்று கிளம்ப “சாந்தவி நான் சொன்னேன் இல்ல சக்தி கோபத்துல பண்ணி இருப்பான் ஆனா உன்னை தேடி வருவான்னு..!அங்க பாரு சக்தி வரான்…” என்று உமையாள் மனதில் தோன்றிய சந்தோசத்துடன் கூற, சாந்தவியும் பார்த்தாள்.

ஈஸ்வரன் அப்போது தான் காரில் இருந்து இறங்கி வர, அவனுடன் இன்னும் இரண்டு பேர் வந்தனர். அவர்களிடம் ஏதோ கூறி கொண்டே வந்தவன் கண்கள் தவிப்புடன் சுற்றுப்புறத்தை அலசுவதை பார்த்த சாந்தவிக்கு சற்று மட்டு பட்டிருந்த கோபம் திரும்ப வந்தது.

“கழுத்தை அறுத்து விட்டு.. அதற்கு மருந்திட நினைக்குறான். யாருக்கு வேண்டும் அவன் இரக்கம்..?” என்று ஏளனமாக நினைத்தவள், ரத்தினம் உமையாள் இருவரையும் அழைத்து கொண்டு ஈஸ்வரன் பார்வையில் படாமல் அங்கிருந்து அகன்று விட்டாள்.

உறவை நேசித்தவள் பிரிவை யாசிக்க
பிரிவை நேசித்தவன் உறவை யாசிக்க
இரு துருவமும் எதிர் கோட்டில் பயணிக்க..,
காலம் அது நேர் கோட்டில் சுழல.., மறந்திடுமோ.. காலம் கொடுத்த வடுக்கள்..!
இணைந்திடுமோ.. இரு மனம் ஒன்றாய்…!
காதல் மலர் மலர்ந்திடுமா…!

நிழல் தொடரும்….