நெருப்பின் நிழல் அவன்! 16

அத்தியாயம்: 16

சாந்தவியை ஈஸ்வரன் தொலைத்து இன்றோடு மூன்று மாதங்கள் சென்றிருந்தது. இன்னும் அவன் அவளை வெளியே தேடி கொண்டிருக்க சாந்தவி அவன் வீட்டிலேயே உமையாள், ரத்தினம் அறையில் அவர்களுடன் இருந்தாள்.

ஈஸ்வரன் வீட்டில் இருக்கும் நேரம் சாந்தவியின் மூச்சி காற்று கூட அறையில் இருந்து வெளியே வராது. மற்ற நேரம் சிறகு முளைத்த பறவையாய் சுற்றி திரிந்தாள். ஈஸ்வரன் வீட்டில் இருக்கும் நேரமும் குறைவு என்பதால் அவளுக்கு எந்த சிரமமும் இருப்பதில்லை. அவன் காலையில் கிளம்பி சென்றதும் உமையாளுடன் சேர்ந்து பேசி கொண்டே சாப்பிட்டு அவருடன் அவர் காய்கறி தோட்டத்தை பராமரிப்பது என்று நேரம் சென்று விடும்.

இரவு நேரம் மட்டும் சற்று கடினமாக இருக்கும். அவன் வீட்டிற்கு வந்ததும் அறைக்குள் அடைந்து கொள்வதால். ஈஸ்வரன் இன்னும் தன்னை தேடி கொண்டிருக்கிறான் என்று தெரிந்து அவன் மீதான கோபம் சற்று குறைந்த போதும் அவன் முன் செல்லும் எண்ணம் வரவில்லை சாந்தவிக்கு. அவன் கோபத்தை குறைக்க டிரீட்மெண்ட் செல்கிறான் என்று தெரிந்ததும் காதல் மனம் மகிழ தான் செய்தது. தனக்காக செய்கிறான் என்று தோன்றிய சிறு உணர்வையும் உள்ளேயே புதைத்து கொண்டாள்.

உமையாள் காலை சமையல் செய்ய, இங்கே அவர்கள் அறையில் தூக்கம் கலைந்து.. காலை கடன்களை முடித்து விட்டு கட்டிலில் சம்மணங்கால் போட்டு அமர்ந்த சாந்தவி, கையில் பேப்பருடன் உள்ளே வந்த ரத்தினத்திடம் “மாமா.. இன்றைக்கு மார்னிங் டிபன் என்ன..?, எனக்கு செமயா பசிக்குது.., உங்க பையன் கிளம்பிட்டாரா…?” என்று கேட்க,

“பூரி கிழங்கு செய்யுறதா உமையா சொன்னா..! பசிச்சா பழம்‌ ஏதாவது சாப்பிடு..” என்று அவளுக்காக அறைக்குள் வாங்கி வைத்திருந்த மினி ப்ரிட்ஜ்யை திறந்து பார்த்தார். பழங்கள், சாக்லேட் அனைத்தும் முடியும் நிலையில் இருக்க “எல்லாம் முடிஞ்சிட்டா..! இன்றைக்கு வெளிய போனா வாங்கிட்டு வரேன். உன் புருஷன் வேற வேவு பார்க்க ஆள் செட் பண்ணி இருக்கான்…” என்று கூறி கொண்டேன் ஒரு ஆப்பிள் பழம் எடுத்து அவளிடம் கொடுத்தார்.

அதை வாங்கி கொண்ட சாந்தவி “உங்க பையன் கிளம்பிட்டாரா..?” என்று மீண்டும் கேட்க, “இல்லை. இப்போ தான் பேப்பர் படிச்சி முடிச்சிட்டு அவன் ரூம் போனான். இனிமேல் தான் கிளம்புவான்…” என்று ரத்தினம் சொல்ல, “இது தான் உங்க பையன் என்னை தேடுற அழகா..! சீக்கிரமா கிளம்பி போக சொல்லுங்க…” என்று பசியில் அவரை கடிக்க,

“நான் என்னமா செய்ய முடியும்..?!, நீ.. வேணும்னா போய் சொல்லேன்… சீக்கிரமா கிளம்பி போக சொல்லி…” என்று ரத்தினம் கூறவும் முகத்தை சுறுக்கிய சாந்தவி அமைதியாகி விட, அவரும்‌ சிரிப்புடன் பேப்பர் படிக்க தொடங்கி விட்டார்.

சாந்தவி தயக்கத்துடனே அவர்கள் அறையில் தங்கினாளும்‌…, அதில் ரத்தினம், உமையாளுக்கு சந்தோசம் தான். இரவு நேரத்தில் கார்ட்ஸ் விளையாடுவது தாயம் விளையாடுவது என்று ஏதாவது விளையாடுவது, பழங்கதை பேசுவது.., ஒருவரை ஒருவர் அவர்கள் செய்த கலாட்டாக்களை சொல்லி காட்டி சிரிப்பது என வண்ணமயமாகவே சென்றது.

ஈஸ்வரன் சாந்தவியை தேடி சென்று இரவு தாமதமாக வந்தாலோ அல்லது வீட்டிற்கே வராமல் இருந்தாலோ அன்று மூவரும் எதுவும் பேசி கொள்ளாமல் குரங்கு போல் வாசலில் அமர்ந்து இருப்பர். அவன் கார் உள்ளே வரவும் சாந்தவி எழுந்து அறைக்கு சென்று விடுவாள். பிறகு எந்த விளையாட்டும் இல்லாமல் தூங்கி விடுவர்.

ரத்தினம் தினசரி வழக்கமாக இன்றும், இன்றைய பேப்பரில் வந்த செய்திகளை சாந்தவியிடம் கூறி அவளின் கிண்டல் பேச்சை கேட்டு கொண்டே பேப்பர் படித்தார்.

ரத்த சிவப்பு நிற சட்டையும், ஜீன்ஸ் பேட் சகிதம் கையில் ரிப்போட்டுடன் கீழிறங்கி வந்த ஈஸ்வரன் டைனிங் டேபிளில் அமர்ந்து “அம்மா..” என்று உமையாளை அழைத்தான்.

“இதோ.. வரேன் டா..” என்ற உமையாள் உணவை டேபிலில் எடுத்து வைத்தவர் அவன் உடை பார்த்து “செக் அப் போறியா சக்தி..?” என்று கேட்டார்.

“ஆமா மா.., கவுன்சிலிங் வர சொல்லி இருக்காங்க.., போகனும். இன்றைக்கு சென்னை போறேன் மா. வர இரண்டு நாள் ஆகும்…” என்று கூறியவன் முகம் முழுவதும் தாடியுடன் கண்கள் உள்ளே சென்று முகம் கலை இழந்து இருந்தான். ஆனால் முகத்தில் முன்பு இருந்த அழுத்தம் மறைந்து இளகி இருந்தது.

இந்த மூன்று மாதத்தில் வீட்டினரிடம் இயல்பாக பேச பழகி இருந்தான். தேவையான‌ நேரம் கோபப்பட்டாலும் எப்போதும் கோபமாக இருப்பது இல்லை. அதற்கு காரணம் சாரதாவிடம் உண்மையை கூறியது என்றாள் மிகை இல்லை. ஆம் சாரதாவிடம் உண்மையை கூறி விட்டான்.

####

அன்று சாந்தவியை தேடி பஸ் ஸ்டாப், கோவில், என சுற்று உள்ள அனைத்து இடத்திலும் தேடியும் அவள் கிடைக்கவில்லை என்றதும் ‘அவளுக்கு என்ன ஆனதோ..!, எங்கே சென்றிருப்பாள்..! என நினைத்து துடித்த தன் மன தவிப்பை உள்ளேயே வைத்துக் கொண்டு அவளை தேடி அலைந்தான்.

போலீஸிடம் உதவி கேட்டு, பேருந்து நிறுத்தத்தில் இருந்த சீசீ டிவி காட்சிகளை பார்த்து அவள் சென்ற வழி அறிந்து அங்கே கைடைகளில் இருந்த சீசீடிவி காட்சிகள் என அழைத்தும் அவள் கோவில் தெருவில் நுழைந்து வரை பதிவாகி இருந்தது. கோவில் தெருவில் இருந்த கடைகள் சிறியவை என்பதால் சீசீடிவி ஏதும் பொருத்தி இருக்கவில்லை. கோவில் வரும் மற்ற வழிகள் ஊர் என்பதால் வீடுகள் எதிலும் கேமரா பொருத்தப்பட்டிருக்கவில்லை.

அங்கே இருந்த கடைகள், கோவில் அர்ச்சகர், மக்கள் என அனைவரிடம் விசாரித்தும் சாந்தவி பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. ரத்தினம் வீடுகள் இருக்கும் வழியாக வந்து சென்றிருக்க அவர் வந்ததோ… சாந்தவியை அழைத்து சென்றதையோ… அவன் அறியவில்லை.

ஒரு வாரமாக சாந்தவியை தேடி அலைந்தும் அவள் சென்ற திசை அறிய முடியாமல் தவித்தவனுக்கு தான் செய்த தவறின் விளைவு புரிந்தது. குமரன் மீதான கோபத்தில் சாந்தவியை தண்டித்தது தவறு என்று புரிந்த போதும் குமரன் மீதான கோபம் துளியும் குறையவில்லை. சாந்தவி திரும்ப கிடைத்தால் மீண்டும் குமரன் மீதான கோபத்தை சாந்தவி மீது காட்டி விடுவோமோ! அவள்‌ மீண்டும் தோலைந்து விடாவாளோ! என்ற எண்ணம் தோன்ற பயம் மனதை கறையானாக அரிக்க தொடங்கியது.

மீண்டும் இந்த நிலை தொடராமல் இருக்க.. ஒரு முடிவுக்கு வந்தவன் மதுரையில் பிரபலமான மனநல மருத்துவரை சென்று பார்த்தான். மருத்துவமனை சென்றவன் டாக்டர் சங்கர் எம்பிபிஎஸ் எம்டி உலவியில் மருத்துவர் என்ற பெயர் பலகை இருந்த அறை கதவை தட்டி விட்டு உள்ளே செல்ல “வாங்க மிஸ்டர் சக்தீஸ்வரன்…, ப்ளீஸ் பி ஷிட்டட்” என்றார் மருத்துவர் உபசரிப்பாக.

ஈஸ்வரன் அமர்ந்ததும் “சொல்லுங்க மிஸ்டர் சத்தீஸ்வர், என்ன பிராப்ளம்..?” என்று டாக்டர் கேட்க, “என்னோட கடந்த காலத்தை மறக்கனும்…” என்றான் ஈஸ்வரன் அமைதியாக ஆனால் தீர்மானமாக. குமரனை மறத்தால் மட்டுமே அவன் கோபம் குறைவது சாத்தியம் என்று நினைத்தான்.

அவன் பதிலில் குறும்புடன் அவனை பார்த்த டாக்டர் தன் வலது கையை மடக்கி மந்திரம் போடுவது போல் அவன் முகத்தின் முன் கையை சுற்றி “சூ மந்திர காலி, இவரின் கடந்த காலம் மறைந்து போகட்டும்..” என்றார் குறும்புடன்.

அவர் செய்கையில் ஈஸ்வரன் பேய் முழி முழிக்க, அவன் முழியில் சிரித்த மருத்துவர் “ஜோக் அப்பார்ட் மிஸ்டர் சக்தீஸ்வர். கடந்த காலத்தை பாஸ்ட் பார்வேட் பண்ணி வேண்டாத நிகழ்வுகளை அழிச்சி எழுதுற சக்தி கடவுளுக்கே இல்லை. நான் சாதாரண மனுசன் என்னால எப்படி முடியும்..?”,

“ஆனா உங்க கடந்த கால எண்ணங்கள் நிகழ்கால எண்ணத்தில் இருந்து ஒதுக்கி வைக்கவும், அதோட பாதிப்பு லைஃப் பை பாதிக்காம இருக்க கவுன்சிலிங் தரலாம்…” என்றவர் “என்ன பிரச்சினை சொல்லுங்க…” என்றார் மீண்டும்.

என்ன சொல்வது எங்கே இருந்து தொடங்குவது என்று தெரியாமல் தயக்கத்துயனே ஈஸ்வரன் நடந்ததை கூற பொறுமையாக கேட்டு கொண்டவர் அவன் கூறி முடித்ததும் “உங்க பிரச்சினை ஒரு பிரச்சனையே இல்லை எல்லாம் உங்க மன‌ எண்ணம் தான் காரணம். இதுக்கு கவுன்சிலிங் கூட தேவை இல்லை. நீங்க நினைச்சா ஈசியா இதிலிருந்து வெளியே வரலாம். லைஃப்ப ஏன் இவ்வளோ காம்பிளிகேட் பண்றிங்க..?” என்று வினவியவர்

“உங்க பிரச்சினை இரண்டு தான்..! ஒன்றும் அந்த குமரன் மீதான கோபத்தை உங்க மனைவி மேல காட்ட கூடாது. அடுத்தது உங்க சிஸ்டர் சாரதாவுக்கு உண்மை தெரிய கூடாது.. இல்லையா..!” என்று கேட்க,

“எஸ் டாக்டர்..” என்று ஈஸ்வர் கூற

“சிப்பிள்.., பஸ்ட் குமரன் முடிஞ்சி போன அத்தியாயம்னு நினைங்க, அவரே இல்லை என்கிற போது அவர் மீதான கோபத்தை வளர்த்து என்ன செய்ய போறிங்க..?, அப்படி உங்களால முடியாதுனா தொடர்ந்து கவுன்சிலிங் வாங்க, யோகா செய்ங்க, மனசை அமைதியா வச்சிக்க பாருங்க, கண்டிப்பா சரி ஆகும். இரண்டு நீங்க எதை மறச்சி வைக்குறிங்களோ அதை உங்க சிஸ்டர் கிட்ட சொல்லிடுங்க, இது தான் இதுக்கு பெஸ்ட் தீர்வு…” என்று மருத்தவர் கூறவும் ஈஸ்வரன் அதிர்ந்தான்.

“தான் படும் துன்பம் அவள் பட கூடாது என்று நினைக்க, இப்போது அவன் மறக்க நினைப்பதை அவளுக்கு கூற வேண்டுமாம்‌…! என்ன பைத்தியக்கார தனம் இது என்று ஈஸ்வரன் நினைக்க,

அவன் எண்ணம் புரிந்த டாக்டர் “இதுல நீங்க அதிர்ச்சி ஆக எதுவும் இல்லை சக்தீஸ்வர். நீங்க இதை மூடி வைக்க.. வைக்க.. அதோட தாக்கம் உங்களை அறியாமலேயே வெளிப்படும். உங்களை தவிரவும் சிலருக்கு உண்மையை தெரிஞ்சி இருக்கு… அவங்க சொல்லிடுவாங்களோ! இவங்க சொல்லிடுவாங்களோ! என்று சந்தேகம் வரும். அந்த எண்ணம் மற்றவங்களை காய படுத்தும். அது உங்க மனநிலையையும் பாதிக்கும். உங்களை சுற்றி இருக்குறவங்களையும் பாதிக்கும். அதுக்கு உண்மையை அவங்க கிட்ட சொல்லிடுறது பெட்டர் இல்லையா?” என்று கேட்க,

“உண்மையை சொல்ல கூடாது..” என சாந்தவியை அடித்தது ஈஸ்வரனுக்கு நினைவு வர டாக்டர் சொல்வது சரி என்றே தோன்றியது.

“உங்க சிஸ்டர் பீல் பண்ணா சமாதானம் செய்யலாம்… இல்லை சாதாரணமாக கடந்து போய்ட்டா பிரச்சினை சால்வ்ட். ஏன் சொல்றேன்னா நடந்த நிகழ்வு எந்த விதத்துலையும் அவங்களை பாதிக்கலை. சோ இதுக்கு அவங்க வருந்த வாய்ப்பு கம்மி…” என்றார்‌ தன் அனுபவத்தில்.

மருத்துவர் கூறி விட்டாலும் “சாரதாவிடம் எப்படி உண்மையை சொல்வது..” என்ற யோசனையுடனே மறுநாளே‌ ஊட்டி வந்தான். சாரதாவிடம் உண்மையை கூறியும் விட்டான்.

ஆனால் சாரதா சொன்ன பதில் ஈஸ்வரனுக்கு இன்னும் வியப்பையே கொடுக்கும். சிறு பெண்ணுக்கு இருக்கும் தெளிவு தனக்கு ஏன் இல்லை என்றும் தோன்றும்.

ஏற்கெனவே அவர்கள் அனைவரும் தன்னிடம் ஏதோ மறைப்பதாக அவர்கள் மேல் சுனக்கத்தில் இருந்த சாரதாவிற்கு ஈஸ்வரன் பேச வேண்டும் என்று வந்தது அதற்காக தான் என்று புரிந்தது.

அவன் சொல்ல சொல்ல கண்கள் உடைப்பெடுக்க அனைத்தையும் கேட்ட சாரதா உள்ளம் உடைந்து போனது. ஏதோ என்று நினைத்தவளுக்கு ஒரு பெண்ணுக்கு இவ்வளவு பெரிய கொடுமை நடந்திருக்கும் அதுவும் தன்னை பெற்றவருக்கு என்று நினைத்து கூட பார்க்கவில்லை. கதறி அழ வேண்டும் போல் இருந்ததை ஈஸ்வரனை கருத்தில் கொண்டு அடக்கி கொண்டாள்.

ஈஸ்வரனை பார்க்க “என்ன மனிதன் இவன்..!” என்று பிரம்மிப்பாகவே‌ இருந்தது. ஐந்து வயதில் தொலைத்த உறவை அதே பாசத்துடன் இப்போது வரை தேட முடியுமா…! என்று ஆனால் அவன் பட்ட காயமும் அவளை உடைத்து போட்டது. தனக்காக இவ்வளவு பட்டிருக்கிறான் என்று நினைக்கும் போதே அவனின் பாசம் புரிந்தது.

ஆனால் ஈஸ்வரனின் இந்த கோபம் அவனுக்கு நல்லதல்ல என்றும் புரிந்தது. இதில் கோபம், அழுகை, என தன் பிரதிபலிப்பு எதுவாக இருந்தாலும் அது ஈஸ்வரனை பாதிக்கும். நிச்சயம் தனக்காக வருந்துவான் என புரிய தன் உணர்வுகளை உள்ளேயே புதைத்து கொண்டவள் அவனை ஆதரிக்கும் விதமாக பேசாமல் “சோ வாட்…! இதை ஏன் நீங்க என்கிட்ட மறைக்கனும்..?” என்று தான் கேட்டாள்.

கோபப்படுவாள் வேதனையில் அழுவாள் என்று எதிர்பார்த்த ஈஸ்வரனுக்கு, சாரதாவின் இந்த பதில் அதிர்ச்சியாக இருக்க, மிதுனுக்கும் அதிர்ச்சி தான். “இதற்கா இவ்வளவு பயந்தோம்..!” என்றாகி விட்டது. “நீ ஃபீல் பண்ணுவனு தான் செல்லலை..” என்று ஈஸ்வரன் கூற

“ஒரு பொண்ணா மலர் அம்மாவுக்கு நடந்ததை நினைச்சி வருந்துறேன். என் அப்பா மேல கோபம் வருது…, ஆனா இது முடிஞ்சி போன விசயம். செஞ்ச தப்புக்கு தண்டனை குடுக்க என் அப்பாவோ…, மலர் அம்மாவுக்கு நீதி கேட்டு ஆறுதல் சொல்லி தேற்ற அவங்களோ இப்போ இல்லை. இதுல யாரை நோக..!”

“இன்னொரு விதத்துல பாதிக்கப்பட்டது நீங்க. உங்களோட வலி புரியுது ஆனா‌ என்னால என்ன பண்ண முடியும்னு தெரியலை.., என்னோட‌ உறவை எதிர் பார்த்தா இப்பவும் நான் உங்க உறவு தான். அப்பறம் இதுல என்னோட பாதிப்பு துளி கூட இல்லை. விவரம் தெரிஞ்சதுல இருந்து புஷ்பா அம்மா பொண்ணா தான் மற்றவங்க கிட்ட அறிமுகம் ஆனேன், வளர்ந்தேன் இதுக்கு மேல நான் சொல்ல எதுவும் இல்லை என்று தெளிவாக கூற ஈஸ்வரனுக்கு சாரதாவின் பேச்சி சிறிது கோபத்தை கொடுத்தது. மலர் அவளுக்கு ஒன்றும் இல்லை என்றதை பார்த்து ஆனால் அவள் கண்களின் ஓரம் தேங்கி இருந்த நீர் அவள் மனதை கூறியது. ஆனால் சாரதா அவள் எண்ணத்தில் தெளிவாக இருப்பதும் புரிந்தது.

“பிரக்டிகலாக யோசிக்கிறாள். தப்பு செய்தவனும். பாதிக்கப்பட்டவரும் இல்லாத போது கோபம் கொண்டு ஏன் இருக்கும் நிம்மதியை கெடுத்து கொள்ள வேண்டும்” என்று நினைக்கும் போது தான் அவன் முட்டாள் தனம் புரிந்தது. முடிந்து போனதை நினைத்து கொண்டு இன்றைய வாழ்க்கையை சிக்கலாக்கி கொண்டது முகத்தில் அறைந்தது.

மீண்டும் மனம் மனைவியை தேடி சென்று விட ‘சாந்தவி இங்கே வந்திருப்பாளா..! என்று தெரிந்து கொள்ள நினைத்தவன் தயக்கத்துடனே “சாந்தவி இங்க வந்தாளா..?!” என்று கேட்க,

அவன் கேள்வி புரியாமல் அவனை பார்த்த சாரதா “இங்க வந்தாளானா.. என்ன அர்த்தம்!! ஏன் அங்க இல்லையா..?” என்று கேட்க, சற்று தயங்கியவன் அன்று நடந்த சண்டையையும் சாந்தவியை வெளியே அனுப்பியதையும் மட்டும் கூற,

“என்ன திமிர் உங்களுக்கு..!, அவளை பிடிக்கலைனா கல்யாணத்து அப்பவே சொல்லி இருக்கனும்… அதை விட்டுட்டு உங்களுக்கு பலி வாங்க என் தங்கச்சி தான் கிடைச்சாளா…?” என்று கோபமாக திட்டிய சாரதா “எப்போ.. இருந்து காணவில்லை..?, தேடுனிங்களா.. இல்லை எக்கேடோ கெட்டு போட்டும்னு விட்டுட்டிங்களா…?” என்று இகழ்ச்சியாக கேட்க,

“ஏன்டா சக்தி இப்படி பண்ண..? நான் முன்னாடியே சென்னேனே..? அவ சூது வாது தெரியாதவ. அவகிட்ட கோபப்படாதேனு. அவளுக்கு ஏதாவது ஆச்சி நானே உன்னை மன்னிக்க மாட்டேன் டா..” என்றான் மிதுனும் கோபமாக

“ஏதும் ஆகாது டா. பத்து நாள் ஆச்சி தேடிட்டு தான் இருக்கேன். கிடைக்கலை‌..” என்று ஈஸ்வரன் கூறவும்,

“வாட் பத்து நாளா…” என்று அதிர்ந்த சாரதா நினைவில் நேற்று சாந்தவியும் உமையாளும் போனில் பேசியது நினைவு வர, ஏதோ இடிக்க “சரி கிடைச்சதும் சொல்லுங்க..” என்று அதன் பிறகு அதை பற்றி பேசாமல் அவனை உபசரிக்க, அவள் அமைதி ஈஸ்வரனுக்கு உறுத்தியது.

சாந்தவி எங்கே இருக்கிறாள் என்று தெரியாமல் தேடி அலைந்த ஈஸ்வரனுக்கு சாரதாவின் அமைதி சாந்தவி அவன் வீட்டினரின் பாதுகாப்பில் இருப்பது புரிந்தது. அதன் பிறகு வெளியே தேடுவதை குறைத்து விட்டு விட்டினரை தொடர்ந்தான். ‘அவர்கள் நடவடிக்கையில் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா..!” என்று பார்க்க பலன் பூஜ்ஜியம் தான்.

உமையாள் வெளியே எங்கேயும் செல்லவில்லை. கால் செய்தும் பேசவில்லை. சாரதா, மிதுன், எண்ணில் இருந்தும் புது எண்ணிற்கு கால் செல்லவில்லை. ‌உமையாளுக்கு மட்டும் அடிக்கடி கால் வந்தது. அவன் “ஏன்..” என்று கேட்கும் முன்னே, “சாரதா போன் பண்ணா, சாந்தவியை பற்றி கேக்குறா.. என்ன சொல்ல! ஏதோ சொல்லி சமாளிச்சி இருக்கேன்..” என்று உமையாள் ஆதங்கமாக புலம்பும் போது அவருக்கும் அவள் இருக்கும் இடம் தெரியாதோ..! என்று நினைத்து வெளியே தேடி அலைவான்.

டிடெக்டிவ், போலிஸ், என அனைவரும் தேடியும் இதோ… இன்று வரை அவள் கிடைக்கவில்லை. அவளை தேடி எங்கே சென்றாலும் சுவற்றில் முட்டிய பந்தாக இல்லை என்ற பதிலே வந்தது. அனைத்தையும் நினைத்து பார்த்த ஈஸ்வரன் சாப்பிடாமல் அப்படியே அமர்ந்து இருக்க “என்ன டா யோசிச்சிட்டு இருக்க..? சீக்கிரமா சாப்பிட்டு கிளம்பு…!” என்று சொன்ன உமையாள் “இருக்கும் போது விரட்டி விட்டுட்டு.. இப்போ அல்லாட வேண்டியது..” என்று முணுமுணுக்க

சிரிப்புடன் அவரை பார்த்தவன் “என்னமோ… அவ பக்கத்துலயே இருக்க மாதிரி இருக்குது மா. இப்போ கூட பாரு… என்னை அவ முறைச்சி பாக்குற மாதிரி தோணுது..! வெளிய தேட தோன்ற மாட்டங்குது…” என்று கூறி சாப்பிட்டுவிட்டு வெளியே சென்று விட்டான்.

அவன் கார் கேட்டை தாண்டியதை சன்னல் வழியாக பார்த்த சாந்தவி “அத்தை உங்க மகனை சீக்கிரம் அனுப்பி வைக்காம என்ன பேச்சி உங்களுக்கு…?, எனக்கு இங்க பசி உயிர் போகுது…” என்று முகத்தை தூக்கி வைத்து கொண்டு டேபிலில் வந்து அமர்ந்தாள்.

“ஏன்டி என் புள்ளைய‌ பார்த்தா உனக்கு பாவமா இல்லையா..?, சொந்த வீட்டுல உக்கார்ந்து சாப்பிட கூட விட மாட்டங்குற..” என்று உமையாள் கேட்க,

“இப்போ மட்டும் உங்க பிள்ளை நின்னுட்டேவா சாப்பிட்டார். அப்பறம் பாவமா…!! உங்க பிள்ளை மேலயா…! வந்தா சொல்றேன். இன்னைக்கு வேலை என் அதை சொல்லுங்க, ஆகுற கதையை பார்ப்போம்…” என்று கூறி கொண்டே பூரியை எடுத்து வைத்து சாப்பிட்டாள்.

“வெள்ளரி, புடலை எல்லாம் கொடி போட்டுட்டு. அதை எடுத்து விடனும்..” என்று உமையாளும் சாப்பிட அமர, ரத்தினமும் வந்து விட, மூவரும் பேசி கெண்டே சாப்பிட்டு முடித்தனர். பின்பு ரத்தினம் வெளியே சென்று விட உமையாளும் சாந்தவியும் தோட்டத்தை பராமரிக்க சென்றனர்.

நிழல் தொடரும்…