நெருப்பின் நிழல் அவன்! 18

அத்தியாயம்: 18

சினிமா பாடலை ஹம் செய்தபடி உற்சாகமாக வந்து சாப்பிட அமர்ந்த ஈஸ்வரனை பார்த்த உமையாளின் சாந்தோசத்தை வார்த்தையால் சொல்ல முடியாது.

மூன்று மாதங்களாக கண்ணில் ஜீவன் இல்லாமல் முகம் முழுவதும் தாடியுடன் அலைந்தவன் இன்று காலையிலேயே சேவ் செய்து, கண்ணில் மின்னலுடன் எதிரில் இருந்த மகனை பார்த்த உமையாள் “உன்னை இப்படி பார்க்க தான் டா ஆசை பட்டேன். மனசுக்கு நிறைவா இருக்கு சக்தி…, ஆனா.. நல்ல மெலிஞ்சிட்ட டா” என்றார் அவன் கண்ணம் வருடி.

“அதுக்கு என்னமா.. உன் மருமகளுக்கு பழமா வாங்கி குடுத்து பளபளனு மாத்துன மாதிரி, என்னையும் மாத்திடுங்க… சிம்பிள்!” என்றவன் உமையாளின் அருகில் நின்று அவனையே குறுதுறுவென்று பார்த்து கொண்டிருந்த சாந்தவியை பார்த்து கண்ணடித்தான்.

அவனை முறைத்த சாந்தவி “கண்ணை நோண்டி விடுவேன்” என்று செய்கை காட்டி இதழ் அசைக்க, அதை கண்டுகொள்ளாதது போல் ரசித்த ஈஸ்வரன் “ஓவரா மெலிச்சிட்டேனா..? என்னை கொஞ்சம் கவனி டி…!” என்றான் சாந்தவியிடம் இரு பொருள் பட,

அவன் பேச்சின் அர்த்தம் உணர்ந்த சாந்தவி தன் கோபத்தை உமையாளை கருத்தில் கொண்டு மறைத்து கொண்டவள் “அவ்வளவு தானே…! கவனிச்சிட்டா போச்சி!!” என்றாள் ஏளனமாக.

அவர்கள் இருவரும் சாதாரணமாக பேசி கொள்வதாக நினைத்த உமையாள் ஈஸ்வரனுக்கு உணவு பரிமாறியபடி “சாந்தவியை கூட்டிட்டு கோவிலுக்கு போய்ட்டு வா சக்தி..” என்றவர் சாந்தவிடம் “நீ போய் கிளம்பு மா..” என்க

சாந்தவி முகம் இறுக “இல்லை அத்தை.. நான் போகவில்லை” என்றாள்.

“ஏன்..?” என்று ஈஸ்வரன் கேட்க, “எனக்கு உங்களோட வர பிடிக்கலை. பஸ்ட் நீங்க யார் எனக்கு..? உங்களோட வரதுக்கு..?” என்று கோபமாக கேட்க,

“ஏன்.. நான் உனக்கு யாருன்னு.. உனக்கு தெரியாதா…!?, மறந்துட்டேன்னா சொல்லு நியாபக படுத்துறேன்…” என்ற ஈஸ்வரன் பேச்சில் அனல் வீசியது.

“தெரியும்…!, நீங்க எனக்கு எந்த உறவும் இல்லை. ஜஸ்ட்… உமையாள் ஆன்டி பையன். அவ்வளவு தான்…!” என்றாள் சாந்தவியும் கோபம் சற்று குறையாமல்.

ஈஸ்வரன், சாந்தவியை திட்ட போக அவனை தடுத்த உமையாள் “நடந்தது நடந்துட்டு.. அதை விடு சாந்தவி. எனக்காக அவனோட கோவில் போய்ட்டு வா…” என்றார்.

அதன் பிறகு சாந்தவி ஏதும் கூறவில்லை.‌ ஈஸ்வரனுடன் கோவில் செல்ல பிடிக்கவில்லை என்றாலும் உமையாள் சொல்லை ஏற்று கிளம்பி வந்தாள்.

ஈஸ்வரனுக்கு சாந்தவி தன்னுடன் ‘வர மாட்டேன்..’ என்று கூறியது கோபத்தை கொடுத்தாலும், அவனின் இந்த மூன்று மாத கவுன்சிலிங்கும் யோகாவும் அவன் கோபத்தை குறைக்க பெரிதும் உதவியது. தன் கோபத்தை கட்டுபடுத்தி கொண்டவனுக்கு சாந்தவியுடன் பைக்கில் செல்ல தோன்றவும் ரொம்ப நாட்களாக எடுக்காமல் நின்ற அவன் பைக்கை தூசி தட்டி எடுத்தவன் சாந்தவியை அழைத்தான்.

அவனை ஏற இறங்க பார்த்த சாந்தவி “பைக்லயா போறோம்…?” என்று கேட்க, “ஆமா…, ஏன்.. உனக்கு பைக்ல வர பயமா…?” என்று ஈஸ்வரன் கேட்க,

அவனை நக்கலாக பார்த்தவள் “பைக்ல வர பயம் இல்லை. உங்களோட பைக்ல வர பிடிக்கலை..” என்று சாந்தவி கூற,

கோபத்தில் பல்லை கடித்த ஈஸ்வரன் “எனக்கு பொறுமை ரொம்ப கம்மினு உனக்கே தெரியும்.. சாந்தவி! என்னை டென்ஷன் பண்ணாம வா…” என்று உள் அடக்கிய கோபத்துடன் கூற

“ஆஹான்… அப்படியா..!!, கோபம் வந்தா சார் என்ன செய்விங்க..?!, முன்னாடி மாதிரி அடிப்பிங்களா..? அச்சோ.. அதுக்கு தான் உங்களுக்கு உரிமை இல்லையே! வேற என்ன செய்விங்க..?” என்று யோசிப்பது போல் பாவனை செய்தவள்

“அன்றைக்கு மாதிரி கூட்டிட்டு போய் ரோட்டுல விட்டுட்டு வருவீங்க அவ்வளவு தானே…” என்று ஆத்திரமாக கேட்டவள் “எனக்கு உங்களோட பைக்ல வர பிடிக்கலை. அப்படி பைக்ல தான் போகனும் னு நீங்க சொன்னா.., நான் உங்களோட வரவில்லை. பக்கத்துல ஏதாவது கோவிலுக்கு நடந்தே போய்ட்டு வரேன்…” என்றாள் அவன் மீதான கோபம் துளியும் குறையாமல்.

சாந்தவியை உறுத்து விழித்த ஈஸ்வரன் ஏதும் கூறாமல் பைக்கை விட்டு விட்டு கார் எடுத்து வந்தான்.

ஈஸ்வரனின் கார் நெருஞ்சாலையில் வெகு தூரம் செல்ல, ‘எங்கே செல்கிறான்!’ என்று புரியாமல் அவனை பார்த்த சாந்தவி “எங்க போறோம்..?, கோவிலுக்கு இவ்வளவு தூரம் போகனுமா..!” என்று கேட்க,

அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்த ஈஸ்வரனின் இதயம் உலைக்களமாக கொதித்தது. “என்னோட பைக்ல வர மாட்டியா..! அவ்வளவு திமிரா உனக்கு..! இருடி நீயே என்னை அட்டை மாதிரி ஒட்டிக்கிட்டு வர வைக்கலை.. என் பெயர் ஈஸ்வரன் இல்லை…!” என்று மனதில் சூளுரைத்து கொண்டான்.

ஈஸ்வரன் பதில் சொல்லாமல் இருக்கவும் அவனை முறைத்த சாந்தவி காரின் மியூசிக் ப்ளேயரை ஆன் செய்ய “எங்கேயும் காதல் விழிகளில் வந்து சட்டென்று மோத..” என்ற பாடல் ஒளித்தது.

ஈஸ்வரனை திரும்பி கடுப்பாக பார்த்தவள் பாடலை மாற்ற, அடுத்தடுத்து காதல் பாடலாகவே ஓளிக்க ஒரு நிலைக்கு மேல் பொறுக்க முடியாமல் பிளேயரை ஆஃப் செய்தவள் “மூஞ்சிக்கும் பாட்டுக்கும் கொஞ்சமாவது சம்மந்தம் இருக்குதா பாரு..!, உர்ராங்கொட்டான்! ரொமன்டிக்கா பார்க்குறது எப்படின்னு கிளஸ் போனாலும் பாஸ் ஆக மாட்டான்..” என்று ஈஸ்வரனுக்கு கேட்கும் படி முணுமுணுத்தவள் வெளிப்பக்கம் திரும்பி கொண்டாள்.

அவள் திட்டிய விதத்தில் ஈஸ்வரன் வாய் விட்டே சிரித்து விட, அவன் மனமோ “அவ உன்னை திட்டுறாடா..” என்று இடித்துரைத்தது.

சாந்தவியின் இந்த ஊடல் பிடித்தது. அதிலும் அவள் ‘ரொமன்டிக் லுக் விட தெரியவில்லை..’ என்று குறை கூறியது சிறிதாக வெட்கத்தை கொடுக்க தலைமுடியை அழுத்த கோதி கொண்டவன் வெளியே வேடிக்கை பார்ப்பது போல் திரும்பி கொண்டான்.

அவன் சிரிப்பை தன்னை மறந்து பார்த்த சாந்தவி கார் தார் சாலையில் இருந்து பிரிந்து காட்டு பாதையில் செல்லவும் “காலையில திட்டுனதுக்கு பலி வாங்க கூட்டிட்டு போறானோ..!” என்று சாந்தவி ஈஸ்வரனை சந்தேகமாக பார்த்தாள். சற்று தூரம் சென்று ஒரு ஆற்றங்கரை ஓரமாக காரை நிறுத்தியவன் “இறங்கு போகலாம்..” என்றான்.

அவனுடன் கீழே இறங்கியவள் “இங்கயா..! இங்க எங்க கோவில் இருக்கு..?” என்று கேட்டு கொண்டே சுற்றி முற்றி பார்க்க, “கோவிலுக்கு ஆற்றை தாண்டி போகனும். நம்ம குலதெய்வ கோவில் இங்க தான் இருக்கு…” என்ற ஈஸ்வரன் ஆற்றில் இறங்க தயாராக வேஷ்டியை மடித்து கட்ட,

“இங்க வழி ஏதும் இல்லையே..!” என்று சாந்தவி மறுபடியும் சந்தேகமாக கேட்கவும், “ஆற்றுக்குள்ள இறங்கி தான் டி போகனும். வா…” என்றான் ஈஸ்வரன் சற்று கோபமாக.

“ஏது… அற்றுக்குள்ள இறங்கனுமா…! என்னால எல்லாம் முடியாது” என்றாள் சாந்தவி கலங்களாக ஓடிய தண்ணீரை பார்த்து பயந்து.

“ஓகே! நீ இங்கேயே இருந்து இங்க வர காட்டு எருமைக்கு எல்லாம் ஹாய் சொல்லிட்டு இரு… நான் கோவில் போய்ட்டு வரேன்…” என்ற ஈஸ்வரன் ஓர கண்ணால் அவளை நோட்டம் விட்டபடி சாந்தவியை அங்கேயே விட்டு விட்டு ஆற்றில் இறங்க,

“காட்டு எருமையா..” என்று பயந்த சாந்தவி “இருங்க நானும் வரேன்!” என்று ஈஸ்வரன் பின்னே நீரில் இறங்க, “பாம்பு இருக்கும் பார்த்து வா…” என்ற ஈஸ்வரன் சாதாரணமாக அடுத்த குண்டை போட்டான்.

அவனை பின் தொடர்ந்து சென்று விடலாம் என்று தைரியத்தை வரவழைத்து கொண்டு ஈஸ்வரன் பின்னே இறங்கிய சாந்தவி “பாம்பா…!” என்று துள்ளி கொண்டு கரைக்கு ஓடியவள் “நான் வர்லை..” என்றாள் பிடிவாதமாக.

“சரி காட்டெருமை.?” என்று மீண்டும் ஈஸ்வரன் தொடங்கவும் “இல்லை.., இல்லை.., நானும் வரேன். எனக்கு தண்ணீல இறங்க பயமா இருக்கு. என்னை தூக்கிட்டு போங்க…” என்றாள் எங்கே அவன் விட்டு சென்று விடுவானோ என்று பயம் கலந்த படபடப்புடன்.

“சில்வண்டு சிக்கிட்டு…” என்று மனதில் குத்தாட்டம் போட்டு கொண்ட ஈஸ்வரன் வெளியே சாந்தவியை தலைமுதல் பாதம் வரை நக்கலாக பார்த்தவன் “நோ சான்ஸ் மா. ரோட் ரோலர் மாதிரி இருக்க உன்னை தூக்கனுமா…!! என்னால முடியாது..” என்றான் அலச்சியமாக,

அவன் ‘ரோட் ரோலர்’ என்றதில் சாந்தவிக்கு கோபம் வர “அத்தை என்னோட சேர்ந்து தான் கோவிலுக்கு போக சொன்னாங்க. சோ நீங்க என்னை தூக்கிட்டு போய்தான் ஆகனும். உங்களுக்கு வேற வழி இல்லை…” என்று கெத்தாக கூறியவள் அவன் கழுத்தை பிடித்து தொங்க

“ஏய்.. ஏய்… என்னடி பண்ற..!, கழுத்தை விடுடி. என்னால உன்னை தூக்க முடியாது…” என்று மறுப்பை தெரிவித்த ஈஸ்வரனின் கைகள் மனைவியை லாவகமாக தூக்கி கொண்டது.

அவன் தூக்கி கொண்டதும் சாந்தவி கெத்தாக முகத்தை திருப்பி கொள்ள, “எல்லாம் என் நேரம் டி..” என்று ஈஸ்வரன் சுகமாக அழுத்து கொண்டான்.

“ஹா.. ஹா.. அனுபவிங்க” என்று நக்கலாக கூறிய சாந்தவி, ஈஸ்வரன் ஆற்றின் குறுக்கே செல்லாமல் நீர்வரத்தை எதிர்த்து செல்லவும் “இப்படியா போகனும்…?, குறுக்க போக வேண்டாமா..?” என்று கேட்டவளுக்கு அவன் பயம் இல்லாமல் நீரில் செல்வது ஆச்சரியமாக இருந்தது.

“ஆமா… நேரா கொஞ்ச தூரம் போன வழி வரும்..” என்ற ஈஸ்வரன் விரல்கள் பாவையின் இடையில் வீணை மீட்டியது.

முதலில் தன்னை தூக்கி வைத்திருப்பதால் அவன் கை படுகிறது என்று நினைத்த சாந்தவிக்கு அவனின் அடுத்த அடுத்த செய்கையில் உண்மை புரிந்து விட பட்டென்று அவன் கையில் அடித்தவள் “என்ன பண்றிங்க..?” என்றாள் கோபமாக.

“ஆ..! ஏன் டி அடிச்ச?, அரிக்குது டி அதான் ஏதும் கடிச்சிட்டோனு தடவி பார்த்தேன்..!” என்று ஈஸ்வரன் அப்பாவியாக கூற, “அரிச்சா உங்களை சொறிங்க! ஏன் என்னை சொறியுறிங்க..?” என்று சாந்தவி காட்டமாக கேட்க,

“ஹோ.. அது உன் இடுப்பா..! சாப்டா இருக்கும் போதே சந்தேகபட்டேன்!” என்று மீண்டும் ஒரு முறை அவள் இடை வருடியவன் சாந்தவி திட்டும் முன் “இறங்கு டி..” என்று அவளை பிடித்திருந்த கையை விட போக

பயந்து அவனை கழுத்தோடு சேர்த்து இன்னும் இருக்கி கொண்டவள் “என்ன பண்றிங்க நான் விழுந்துடுவேன்..” என்று கோபமும் பயமும் கலந்து கூற “அரிக்குது டி. இறங்கு…” என்றான் பொய்யாக.

“நான் மாட்டேன். எனக்கு பயமா இருக்கு..” என்று சாந்தவி பிடிவாதமாக கூற, “ஓகே அப்போ நீயாவது சொறிஞ்சி விடு..” என்று ஈஸ்வரன் கூறவும், “என்னால முடியாது..” என்று அவள் வீம்பு பிடிக்க, “அப்போ இறங்கு…” என்று ஈஸ்வரன் கோபம் போல் அவளை தண்ணீரில் போட போக,

“சரி பண்றேன்…” என்று வெறுப்புடன் கூறிய சாந்தவி அவனுக்கு சொறிந்து விட “நான் பண்ண மாதிரி பண்ணுடி..” என்று அதட்டியவன் மீண்டும் ஒரு முறை பாவையின் இடை வருடி விட, “உன்னை கொன்னுடுவேன். எருமை! அதான்.. செய்யுறேன் இல்ல! அப்பறம் என்ன..!” என்றாள் சாந்தவி சிடுசிடுப்பாக.

“நீ இறங்கு டி. சரியா செய்னு சொன்னது குத்தமா..!” என்று ஈஸ்வரன் அப்பாவியாக கேட்டு அவளை மிரட்ட

“வீட்டுக்கு போனதும் உனக்கு இருக்குடா..!” என்று மனதில் கருவி கொண்ட சாந்தவி அவன் சொன்னது போல் செய்தாள். அடுத்ததாக மூசையை முறுக்கி விடு இல்லை கிழ போட்டுடுவேன் என்று மிரட்ட

அவனின் டார்ச்சரில் “ஏன் நல்லா தானே இருக்கு..!” என்று சாந்தவி கடுப்புடன் கேட்க “அதை நான் சொல்லனும். சொன்னதை செய்…! இல்லை இறங்கு” என்றவன் அடுத்ததாக முடியை முன் பக்கம் சரி செய்து விடு என்றான்.

இப்படி மிரட்டியே சாந்தவியின் அன்றைய ஒட்டு மொத்த கோபத்தையும் ஈஸ்வரன் சம்பாதித்து கொண்டான்.

ஆற்றை தாண்டி கரைக்கு செல்லவும் எதிரில் வந்த ஒருவர் “ஏன்பா அதான் ரோடு இருக்கே..! ஏன் காட்டு பாதைய சுத்தி வர…?” என்று கேட்க, “என் வைஃப் காட்டு பாதையா வரனும்னு ஆசை பட்டா அதான் கூட்டிட்டு வந்தேன்..” என்று கூறிய ஈஸ்வரனின் மேல் சாந்தவிக்கு கொலைவெறியே வந்தது. அவளுக்கு மட்டும் சக்தி இருந்திருந்தாள் ஈஸ்வனனை எரித்திருப்பாள்.

ஈஸ்வரனின் குல தெய்வ கோவில் ஊரை தாண்டி சற்று உள் தள்ளி தான் இருந்தது. ஈஸ்வரன் கோவில் செல்லும் வரையும் சாந்தவியுடன் வம்பு வளர்ந்து கெண்டே வந்தான்‌. இருவரும் கோவில் சென்று சாமி கும்பிட்டுவிட்டு வீடு வர மதியம் ஆகி இருந்தது.

ஈஸ்வரன் சாந்தவியை வீட்டில் விட்டு விட்டு லஞ்ச் முடித்து கொண்டு ஆஃபிஸ் கிளம்பி விட்டான்.

சாந்தவிக்கு அன்று முழுவதும் ஈஸ்வரன் மேல் இருந்த கோபம் போகவில்லை. “திமிரு பிடிச்சவன் முறுக்கி விட்ட மீசையை வெட்டி விட்டுருக்கனும். பெரிய சண்டியர் இவரு…” என்று அவனை திட்டி கொண்டே இருந்தாள்.

இரவு சமையல் செய்ய உமையாள் தயாராகவும், ஈஸ்வரன் காலையில் செய்ததுக்கு அவனுக்கு ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டும் என்று சாந்தவிக்கு தோன்றி கொண்டே இருக்க அவரை தடுத்தவள் “நான் செய்யுறேன் அத்தை. நீங்க இருங்க..” என்றாள்.

அவள் சமைக்க ஆசைபட்டு கேட்பதாக நினைத்த உமையாள் “சக்திக்கு காரம் ஒத்துக்காது. காரம் மட்டும் அதிகம் ஆகாம பார்த்துக்கோ சாந்தவி..” என்று விவரம் அறியாமல் கூறி விட்டு அவர் நகர்ந்து விட சாந்தவியின் கண்கள் சந்தோசத்தில் மின்னியது.

“என்ன காலையில் என்ன பாடு படுத்துன…! கார மிளகாய்க்கு காரம் பிடிக்காத..!!, உனக்கு இன்றைக்கு கார சமையல் தான்..” என்று மனதில் குத்தாட்டாம் போட்டவள், ரத்தினம், உமையாள் இருவருக்கும் தனியாக இட்லி சட்னி செய்து வைத்துவிட்டு, ஈஸ்வரனுக்கு ஸ்பெஷலாக காந்தாரி மிளகாய் சாம்பார், ஜம்போ வத்தல் சட்னி, குடை மிளகாயி கெட்டி சட்னி என மிளகாய் சமையல் செய்தாள்.

உமையாள் ரத்தினம் இருவரும் சாப்பிட்டு அவர்கள் அறைக்கு சென்று விட, சாந்தவி, ஈஸ்வரனுக்காக ஆவலாக காத்திருந்தாள்.

ஈஸ்வரன் இரவு பத்து மணிக்கு வந்தவன் சாந்தவி முகத்தில் இருந்த சந்தோசத்தை பார்த்து “என்ன சில்வண்டு சிரிப்பே சரி இல்லை..!” என்ற யோசனையுடனேயே அறைக்கு சென்று உடை மாற்றி வந்தவன் சாப்பிட அமர சாந்தவி அவனுக்கு சாப்பாடு பரிமாறினாள்.

சமைத்த அனைத்திலும் சற்று அதிகமாகவே ஈஸ்வரனுக்கு சாந்தவி பரிமாற “கொஞ்சமா வை போதும்..! அம்மா எங்க ஆளை காணும்..?” என்று உமையாளை கேட்டான். எப்போதும் சாப்பிடும் போது அருகில் இருப்பவர் இன்று இல்லை என்றதும்.

“அத்தை சாப்பிட்டு அப்பவே படுக்க போய்ட்டாங்க…” என்று சாந்தவி கூற, அப்போது தான் முதல் வாய் சாப்பிட்ட ஈஸ்வரனுக்கு காரம் தாங்காமல் புறை ஏறி விட்டது.

காரத்தில் கண்களில் கண்ணீர் பெருகி நிற்க “ஸ்.. ஆ… என்னடி சட்னி இவ்வளவு காரமா இருக்கு?!!. நீயா சமைச்ச..?” என்று தண்ணீரை எடுத்து பருகி கொண்டே கேட்க

சாந்தவி “ஆமா..” என்றாள்.

“எனக்கு காரம் ஒத்துக்காதுனு அம்மா சொல்லலையா..?” என்று ஈஸ்வரன் கேட்க

காலையில் ஈஸ்வரன் அப்பாவியாக அவளை கொடுமை செய்தது நினைவு வர, அவளும் அப்பாவியாக “இல்லை..” என்று தலையசைத்தாள்.

அவள் சொல்வதை உண்மை என்று நம்பிய ஈஸ்வரன் “சரி விடு. இது ரொம்ப காரமா இருக்கு. இட்லி பொடி இருந்தா எடுத்துட்டு வா…” என்று கூற, “வர மிளகாய் பொடிதான் இருக்கு…, எடுத்துட்டு வரவா…” என்று சாந்தவி நக்கலாக கேட்கவும்

அவளை அதிர்ந்து பார்த்த ஈஸ்வரன் “கொலை காரி எல்லாம் உன் பிளான் தானா…” என்று மனதில் பொறுமி கொண்டு வர மிளகாய் பொடிக்கு சட்னியே பரவாயில்லை என்று லைட்டாக சட்னி தொட்டு சாப்பிட்டான்.

அப்படியும் ஒரு இட்லிக்கு மேல் சாப்பிட முடியவில்லை காரம் உச்சந்தலைக்கு ஏறியது. இதுவரை கோபத்தில் சிவந்த கண்கள் காரத்தில் சிவக்க நாக்கு காந்தியது. தண்ணீர் தீர்ந்து விடவும் சாந்தவி அருகில் இருந்த தண்ணீரை ஈஸ்வரன் எடுக்க போக.., சட்டென்று அதை தன் பக்கம் இழுத்து கொண்ட சாந்தவி, தண்ணீர் அனைத்தையும் குடித்து விட்டு கடைசி வாய் தண்ணீரை இரண்டு பக்க கன்னத்திலும் அதக்கி வைத்து கொண்டு ஈஸ்வரனை வேறுப்பேற்ற

காரம் தாங்க முடியாமல் “ராட்சசி..” என்று சாந்தவியை திட்டி கொண்டே அவளை நெருங்கிய ஈஸ்வரன் அவள் இதழில் அடைத்து வைத்திருந்த நீரை தன் இதழ் கொண்டு அபகரித்து கொண்டான்.

நீர் பருக சென்ற காளையின் இதழ் பாவையின் இதழ் சுவைக்க நினைத்த நொடி, அவன் இதழ் அவன் கட்டுப்பாட்டில் இல்லாமல் அவள் கட்டுப்பாட்டிற்கு சென்று விட, காரத்தால் சிவந்த காளையின் இதழ் வலியில் சிவக்க தொடங்கியது.

அவளிடம் இருந்து இதழை பிரித்து கொள்ளவும் தோன்றாமல் வலி பொறுக்கவும் முடியாமல் ஈஸ்வரன் நிற்க, தன் கோபம் மொத்தத்தையும் இதழ் வழி அவனுக்கு கடத்திய சாந்தவி தன் கோபம் தீர்ந்ததும் அவனை விடுவித்தவள், ஒன்றை விரல் நீட்டி ஈஸ்வரனை எச்சரித்து விட்டு சென்றாள்.

பாவையின் செய்கையில் புன்னகைத்த காளையின் கீழ் இதழில் சாந்தவி கொடுத்த பரிசாய் அவள் முன் பல் நான்கும் அழுத்த பதிந்து ரத்த கசிவுடன் இருந்தது.

இதழில் போர் புரிந்து.. இமையின் கோபத்தை பெற்று கொண்டாயே…

ஏன்… பெண்ணே…!!

இமையின் கோபத்தையும் 

உன் இதழ் முற்றுகையில் தீர்த்து விடு…

அதுவும் உன் மீதான கோபம் மறந்து விடட்டும். 

நிழல் தொடரும்….