நெருப்பின் நிழல் அவன்! 21 (அ)

அத்தியாயம்: 21 

செல்லும் பாதையை கூட கருத்தில் கொள்ளாமல் காரில் இருந்து இறங்கி.. தேயிலை தோட்டத்தின் பள்ளம் மேடு பார்க்காமல் ஓடி சென்று அவள் வீட்டின் முன்பு மூச்சி வாங்க நின்ற சாந்தவிக்கு கண்ணின் ஓரம் ஒரு துளி நீர் அவள் சந்தோசத்தை பிரதிபலித்து தேங்கி நின்றது.

ஆம்… அவள் வீடு தான். ஈஸ்வரன் வெடி வைத்து தகர்த்து விட்டதாக கூறிய அவள் வீடு. அவளால் நம்பவே முடியவில்லை… ஈஸ்வரன் காதல் சொன்ன போது வரதா சந்தோசம் அவள் பிறந்த வீட்டை பார்த்ததும் வந்தது.

இழந்ததை மீட்பது என்பது முடியாத ஒன்று! அதனால் தான்.. இழந்த பிறகு அதன் அருமை புரியும் என்பார்கள். சாந்தவி இழந்ததாக நினைத்து மருகி நின்றது இன்று அவள் கண் முன்னால் இருப்பதை நம்ப முடியாமல் பார்த்த பாவைக்கு சந்தோசத்தில் குதிக்க வேண்டும் போல் இருந்தது.

சாந்தவி காரை நிறுத்த சொன்ன போது ‘ஏன்..!’ என்று புரியாமல் பார்த்த ஈஸ்வரனுக்கு அவள் வீட்டை நோக்கி ஓடவும் காரணம் புரிந்து விட “அடுத்த சண்டைக்கு ரெடி ஆகிட்டா..!” என்று நினைத்து கொண்டே சாந்தவியை தொடர்ந்து சென்றவன் காரில் சாய்ந்து நின்று அவளை வேடிக்கை பார்த்தான். எதுவாக இருந்தாலும் அவளே முதலில் தொடங்கட்டும் என்று.

ஈஸ்வரனின் பார்வையை உணர்ந்து அவன் பக்கம் திரும்பிய சாந்தவி “பொய் சொன்னிங்களா…?” என்றாள் உதட்டில் சிரிப்பும் முகத்தில் முறைப்புமாக.

ஈஸ்வரன் “ஆம்..” என்று தலையாட்டவும் “ஏன்…” என்று சாந்தவி புரியாமல் கேட்க, “நீ சொல்லுவியே… போக இடம் இல்லாதவன்னு‌! அது உண்மையா ஆகிட கூடாதுன்னு…” என்று ஈஸ்வரன் அமர்தலாக கூற

“ஆனா சொல்ல வச்சிங்களே…!” என்று சாந்தவி முறைப்புடன் கேட்க, “எனக்கு தெரியுமே… அது உண்மை இல்லைன்னு. அன்ட் நீ என்னை‌ விட்டு எங்கயும் போக கூடாது…, போகுற‌ எண்ணமும் வர கூடாதுன்னு. அதான் இது வரைக்கும் சொல்லலை, சொல்ற எண்ணமும் இல்லை…” என்ற ஈஸ்வரன் குரலில் சற்று திமிரும் கலந்தே இருந்தது

“இப்பவும் திமிர் போகுதா பாரேன்…!” என்று முணுமுணுத்த சாந்தவிக்கு சந்தோசமே அதிகமாக இருந்தது.

பாவை அவள் வதனத்தில் இருந்த மகிழ்ச்சி காளையையும் தொற்றி கொள்ள அவளை நோக்கி கை நீட்டியவன் தலையசைத்து “வா..” என்று அழைத்தான்.

“மாட்டேன்…” என்று பாவை மறுப்பாக தலை அசைக்க, அவளை முறைத்த காளைவன் அவளிடம் ஊடல் கொண்டு திரும்பி கொண்டான்.

காளையின் செயல் பாவையின் கண்ணீரையும் காதலாக மாற்றி விட தன் காதலை இதழ் குவித்து முத்தம் ஒன்றை சமாதானத்தை ஏத்தி காற்றில் தூது அனுப்ப, அதை மறுத்த காளையோ அதை அவள் பக்கமாக ஊதி விட்டு விட, “வேண்டாட்டி போங்க..” என்று தோள் அசைந்த சாந்தவி கதவை திறந்து வீட்டிற்குள் சென்றாள்.

சாரதா திருமணத்தின் முன் தினம் அவர்கள் வைத்து விட்டு எடுத்து போட்ட பூ முகற்கொண்டு வீட்டில் எந்த மாற்றமும் இல்லாமல் வீடு அப்படியே இருந்தது. வீட்டை பார்த்துவிட்டு வெளியே வந்த சாந்தவி மனம் முழுவதும் மகிழ்ச்சி பொங்க ஈஸ்வரன் அருகில் வந்து அவன் கை பிடித்து கொண்டவள் “இங்க நாலு நாள் தங்கிட்டு போவோமா..?” என்று கேட்டாள்.

குமரன் வாழ்ந்த வீடு என்பதால் ஈஸ்வரனுக்கு இங்கே தங்க விருப்பம் இல்லை என்றாலும் சாந்தவி ஆசையை மறுக்க தோன்றாமல் “சரி..” என்றான்.

“தேங்க்ஸ்…” என்று சந்தோசத்தில் துள்ளிய சாந்தவி “ஃபைவ் மினிட்ஸ் இருங்க…, வீட்டை சுத்தம் பண்ணிட்டு வரேன்…” என்று விட்டு வேகமாக உள்ளே சென்றவள் பரபரவென்று வீட்டை சுத்தம் செய்தாள்.

சாந்தவிக்காக ‘சரி..’ என்று விட்டாலும் நாலு நாள் அங்கே எப்படி தங்குவது என்று ஈஸ்வரன் யோசனையுடன் நிற்க சாந்தவி வீடு சுத்தம் செய்துவிட்டு வந்து ஈஸ்வரனை அழைத்தாள்.

மனதில் தோன்றிய சிறு உறுத்தலுடனே உள்ளே சென்ற ஈஸ்வரனை அதன் பிறகு சாந்தவி எதுவும் யோசிக்க விடவில்லை. சமையல் செய்ய, மளிகை பொருட்கள் வாங்க வேண்டும் என்று அண்ணாச்சி கடைக்கு அழைத்து சென்றவள் அவருடன் வாயடித்து விட்டு பொருட்கள் வாங்கி வந்து அவனுக்கு பிடித்ததை சமைத்து தருவதாக கூறி அவனையே காய் நறுக்க வைத்து என்று முதல் முறை சாந்தவி அவள் இயல்பு போல் ஈஸ்வரனுடன் இருந்தாள்.

ஈஸ்வரன் சாந்தவியிடம் எதிர் பார்த்ததும் இதை தானே..! அதனால் அவனும் மன நிறைவுடனே இருந்தான். ஈஸ்வரனுடைய விரல் விட்டு எண்ண கூடிய மகிழ்ச்சியாக நாட்களில் அன்றைய நாளும் இடம் பிடித்து இருந்தது.

இரவில் சாந்தவி நிம்மதியாக தூங்கி விட ஈஸ்வரனுக்கு எவ்வளவு முயன்றும் பொட்டு தூக்கம் வரவில்லை. அங்கே இருப்பது மலருக்கு செய்யும் துரோகமாக மனதிற்கு தோன்றி கொண்டே இருந்தது. ஈஸ்வரனின் அசைவில் தூக்கம் கலைந்து எழுந்த சாந்தவி “நீங்க இன்னும் தூங்கலையா…” என்று உறக்கம் படிந்த விழிகளுடன் கேட்க

“தூக்கம் வரலை. மனசுக்கு ஒரு மாதிரி உறுத்தலா இருக்கு…” என்று ஈஸ்வரன் மனதை மறைக்காமல் கூறி விட, கவலையுடன் அவனை பார்த்த சாந்தவி “நம்ம வீட்டுக்கு போவோமா..?” என்றாள். அவளுக்கு புரிந்தது ஈஸ்வரன் இங்கே தங்க ஒத்து கொண்டது அவளுக்காக தான் என்று. அவன் இவ்வளவு இறங்கி வரும் போது தானும் அவனுக்காக இறங்கி போகலாம் என்று நினைத்தாள்.

சாந்தவி ‘கிளம்புவோமா..’ என்று கேட்டதே ஈஸ்வரனுக்கு போதுமானதாக இருக்க இதழ் பிரியாமல் புன்னகையித்தவன் “இந்த ராத்திரியா…?, அதெல்லாம் வேண்டாம். நீ தூங்கு காலையில போலாம்…” என்றான்.

“நீங்க..?” என்று சாந்தவி கேட்க, “எனக்கு தூக்கம் வரவில்லை..” என்று சாந்தவி அருகில் சென்று அமர்ந்து… அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்து கொண்ட ஈஸ்வரன் “கொஞ்ச நாள் போகட்டும். அப்பறமா இங்க வந்து பத்து நாள் கூட ஸ்டே பண்ணலாம் சரியா…?!” என்று கூற, பதில் ஏதும் கூறாமல் அவன் மடியில் தலை வைத்து படுத்து கொண்ட சாந்தவி சற்று நேரத்தில் அப்படியே தூங்கி விட, ஈஸ்வரன் இரவு முழுதும் விழித்திருந்தான்.

ஈஸ்வரன் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து சாந்தவியும் விடிந்ததுமே அவனை அழைத்து கொண்டு மதுரை வந்து விட்டாள்.

இவர்கள் மதுரை வந்து ஒரு வாரத்தில் ரத்தினமும் மதுரை வந்து விட சாந்தவி மீண்டும் மேலே அவர்கள் அறைக்கு சென்றிருந்தாள். உமையைள் இல்லாததால் வீட்டு வேலை தோட்ட வேலை என சாந்தவிக்கும் நேரம் சரியாக இருக்க.., ஈஸ்வரனும் ஆஃபிஸ் வேலையில் பிஸியாக இருந்தான். ஆனால் அவர்கள் வாழ்க்கை ஊடலும் கூடலும் கலந்து மகிழ்ச்சியாகவே சென்றது.

மூன்று மாதத்தில் வருவதாக கூறிய உமையாள் ஐந்து மாதம் கடந்தும் ஊட்டியை விட்டு நகரவில்லை. ரத்தினம் காடு ஆறு மாதம் நாடு ஆறு மாதம் என்பது போல் ஊட்டியில் ஒரு வாரம் மதுரையில் ஒரு வாரம் என்று இருந்தார்.

ஈஸ்வரன் தான் அடிக்கடி சாந்தவியிடம் “இனிமேல் நீ கன்சீவ் ஆனா தான் அம்மா மதுரை வருவாங்க. நமக்கு எப்போ டி பேபி வரும்..?” என்று கேட்டு அவள் இடை வருடி அவளிடம் கொட்டும் வாங்கி கொள்வான்.

அன்று ஈஸ்வரன் ஆஃபிஸ் சென்றிருக்க, ரத்தினமும் ஹாலில் டிவி பார்த்து கொண்டிருந்தார். சமையல் வேலையை முடித்து விட்டு அறைக்கு வந்த சாந்தவி, முன் தினம் ஈஸ்வரன் வாங்கி வந்திருந்த அவனின் புதிய உடை அப்படியே கவருடன் சோஃபாவில் இருப்பதை பார்த்து “வாங்கிட்டு வந்தா.., அதை வைக்க வேண்டிய இடத்துல வைக்க மாட்டார். சொன்னா அதுக்கு விரும்பாண்டியாட்டும் முறைப்பார்…” என்று அவனை திட்டி கொண்டே அவன் பீரோவில் அந்த உடையை வைத்து விட்டு பிரோவை மூட போக…, அவள் வளையல் டிசைன் இழுத்து ஈஸ்வரனின் சட்டை ஒன்று அவள் கையோடு வந்து விட, அதிலிருந்து ஏதோ கீழே விழுந்து உருண்டோடியது.

“என்ன அது…” என்று அதை எடுத்து பார்த்த சாந்தவிக்கு முகம் புன்னகையை பூசி கொண்டது. அது அவள் வளையல். அன்று கோவிலில் வைத்து ஈஸ்வரன் செயினில் மாட்டி கொண்டது என்று சாந்தவியிடம் இருந்து ஈஸ்வரன் பறித்து கொண்ட வளையல்.

இப்போதும் அவன் செயினுடன் இணைக்கப்பட்டு தான் இருந்தது. அதை அவன் பிரிக்காமல் வைத்திருப்பதை கண்கள் விரிய பார்த்தவள்‌ அதை மீண்டும் அப்படியே அந்த சட்டைக்குள் வைத்து ஈஸ்வரன் வைத்திருந்த இடத்தில் வைத்தவள் பார்வையில் அந்த வரிசையில் அவன் சட்டைகளுக்கு கீழ் அவர்கள் முதலிரவு அன்று ஈஸ்வரன் ‘காதலிக்காக வாங்கியது’ என்ற அந்த மஞ்சள் நிற சேலையும் இருந்தது.

அதை பார்த்த சாந்தவிக்கு சட்டென்று கோபம் வந்து விட அந்த சேலையை வெளியே எடுக்க நினைத்து அதை இழுத்து விட தொடர்ந்து இன்னும் சில சேலையும் ஈஸ்வரனின் சட்டையும் சேர்ந்து மொத்தமாக விழுந்து விட்டது.

கலைந்து விழுந்த ஒரு சேலையில் சக்தீஸ்வரன் வேட்ஸ் சாந்தவி 💞 என்ற எழுத்தை பார்த்தவள் கண்களில் ஆச்சரியமும், வியப்பும் போட்டு போட்டது.

மனம் படபடக்க அதை கையில் எடுத்து பார்த்த சாந்தவிக்கு ஈஸ்வரன் அது அவர்கள் திருமணத்திற்கு என்று ஆடர் செய்து வாங்கி இருக்க வேண்டும் என்று புரிய “அப்போ கல்யாணமே ப்ரி ஃப்ளன்னா..!!, அவர் சொன்னா லவ்வர் நான் தானா..!!‌, நான் தான் மக்கா இருந்து இருக்கேனா…? ஆனா லவ் பண்ணற மாதிரி பார்த்தது கூட இல்லையே…?” என்று நினைத்த சாந்தவிக்கு “நீ சேலை காட்டுனா தானே என் கண்ணு உன்னை அங்க இங்க பார்க்கும். இனிமேல் சேலை கட்டாத..” என்று ஈஸ்வரன் திட்டியது நினைவு வர “அட ப்ராடு… பண்ண‌து எல்லாம் கேடி வேலையா…?, வீட்டுக்கு வாங்க பேசிக்குறேன்…” என்று ஈஸ்வரனை திட்டியவளுக்கு மணம் சொல்ல முடியா உணர்வில் சுகமாக பறக்க முகத்தில் தானாய் வெட்க படர்ந்தது.

ஈஸ்வரின் இறுகிய முகமும் அவன் பிரிக்காமல் வைத்திருந்த வளையலும் அவன் காதலை உணர்த்த அடுத்த நிமிடம் சத்தமாக சிரித்து விட்டாள். அந்த விரும்பாண்டிக்குள் இப்படி ஒரு காதல் மன்னனை அவள் கண்டிப்பாக எதிர் பார்க்கவில்லை.

சிரிப்பை அடக்க முடியாமல் வயிறு வலிக்க சிரித்தவள் அவன் வைத்திருந்த சட்டை சேலை இரண்டையும் அவள் கபோர்ட்டுக்கு மாற்றி விட்டு அந்த உடை இருந்த இடத்தில் புது உடைகளை வைத்து பூட்டி விட்டாள்.

மனதில் உதித்த காதலுக்கு
பலி என்னும் பெயர் சூட்டி
கோபம் என்னும் முகமூடி போட்டு
என்னை கைது செய்தவனே… காத்திருக்கிறேன்…
என் மீதான உன் காதலை
உன் கண்களில் காண…

இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ஈஸ்வரனை பார்த்த சாந்தவி கிண்டலாக சிரித்து கொண்டே இருக்க முதலில் ‘ஏன்..’ என புரியாமல் காரணம் கேட்டவன் அவள் காரணம் சொல்லாம் தொடர்ந்து சிரிக்கவும் “போடி…” என்று விட்டு சென்று விட்டான். இன்னும் அவன் பொறுமையின் அளவு அதே நிலையில் தான் இருக்கிறது.

இப்படியே சாந்தவி சிரிப்பதும், ஈஸ்வரன் திட்டி முறைப்பதுமாக இரண்டு நாள் செல்ல, மூன்றாம் நாள் முக்கியமான பைல் ஒன்றை வைக்க பீரோவை திறந்த ஈஸ்வரன் கண்ணில் சாந்தவியின் சேலை இல்லாதது தெரிய அருகில் இருந்த அவன் சட்டையும் இல்லாமல் இருப்பதை பார்த்தவனுக்கு அது சாந்தவி செயல் என்று புரிந்து விட்டது.

அவளின் கிண்டல் சிரிப்புக்கும் அர்த்தம் புரிந்து விட கோபமாக கீழே வந்தவன் சாந்தவி கிச்சனில் இருப்பதை பார்த்து அவளிடம் வந்து அவளை தன் பக்கமாக திருப்பி “என் பீரோவில் இருந்த சேலை எங்க..?” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்

“சேலையா..!, நான் எதுவும் பாக்கலையை…” என்று சாந்தவி நமட்டு சிரிப்புடன் கூற

அவள் சிரிப்பில் இன்னும் எரிச்சல் ஆனவன் “விளையாடாத சாந்தவி. அந்த சேலையை குடு…” என்றான் அதட்டலாக

சாந்தவியும் அதற்கு மேல் மறைக்க முடியாமல் சத்தமாக சிரித்தவள் “அது எனக்கு வாங்குனது தானே..!, அதை வச்சி நீங்க என்ன செய்ய போறிங்க… மிஸ்டர் விரும்பாண்டி?” என்று அவன் மீசையை பிடித்து இழுக்க

கோபமாக அவள் கையை தட்டி விட்ட ஈஸ்வரன் “நான் என்னவோ பன்றேன் உனக்கு என்ன…” என்று கூற, “அதை என்ன செய்ய போறிங்க சொல்லுங்க தரேன்…” என்று சாந்தவியும் வீம்பாக கூற

பட்டென்று அவளை பிடித்து அருகில் இழுத்தவன் அவள் காதில் என்ன செய்ய போகிறான் என்று கூற “ஐயோ சீ. ஏன் இப்படி பேசுறிங்க…,போங்க..” என்று முகம் சிவக்க கூறியவள் “என் கபோர்ட்ல இருக்கு அப்பறமா எடுத்து தரேன்…” என்றாள் அவன் முகம் பார்க்க வெட்கம் கொண்டு

ஆனால் ஈஸ்வரனோ அவளை விடாமல் அப்போதே அழைத்து சென்றவன் அந்த சேலையை வாங்கிய பிறகே விட்டான்.