நெருப்பின் நிழல் அவன்! 21 (ஆ)

அத்தியாயம்:  21

சாரதாவிற்கு ஆறு மாதம் ஆகி விட உமையாள் இன்னும் மதுரை வந்திருக்கவில்லை அன்று காலையில் ரத்தினம் சற்று சோர்வாக அமர்ந்து இருப்பதை பார்த்த சாந்தவி “என்னாச்சி மாமா ஏன் ஒரு மாதிரிமா இருக்கிங்க..?” என்று கேட்க

“உன் அத்தைய போய் பார்த்துட்டு வருவோமான்னு யோசிச்சிட்டு இருந்தேன்மா வேற ஒன்னும் இல்லை..” என்று ரத்தினம் சிறு புன்னகையுட கூற

“ஹோ… அத்தையை பார்க்கனுமா..! அதுக்கு என்ன போய் பார்த்துட்டு வாங்க…” என்று சாந்தவி சொல்லவும் “வெளிய கொஞ்சம் வேலை இருக்குமா முடிச்சிட்டு கிளம்பனும்…” என்ற ரத்தினம் அன்று மதியமே ஊட்டி கிளம்பி சென்றிருந்தார்.

ஈஸ்வரனும் அன்று காலை சொல்லாமலேயே ஆஃபிஸ் கிளம்பி சென்றவன் மாலை சீக்கிரமே வீடு வந்து விட்டான். கிச்சனில் சமையல் வேலையை முடித்து விட்டு அறைக்கு வந்த சாந்தவி ஈஸ்வரன் சோஃபாவில் கண் மூடி அமர்ந்து இருப்பதை பார்த்து
“இவர் எப்போ வந்தார்…” என்று நினைத்து விட்டு மாற்று உடை எடுத்து கொண்டு குளிக்க சென்றவள் காலில், கீழே கிடந்த மாத்திரை கவர் மிதிபட ‘என்ன மாத்திரை கவர்’ என்று எடுத்து பார்க்க அது தூக்க மாத்திரை கவர்.

அதை பார்த்ததும் சாந்தவிக்கு மனம் “திக்..” என இருக்க வேகமாக ஈஸ்வரன் அருகில் சென்றவள் அவன் நெற்றியில் கை வைக்கவும் ஈஸ்வரனும் முழித்து விட்டான்.

கண் திறந்து சாந்தவியை பார்த்தவன் மீண்டும் கண் மூடி கொள்ள “என்ன ஆச்சி..?, ஏதாவது பிரச்சனையா..?” என்று சாந்தவி சிறு படபடப்புடன் கேட்க,

“இன்றைக்கு மலர் அம்மா நினைவு நாள்…” என்ற ஈஸ்வரன் அவளை இழுத்து இறுக்கி அணைத்து கொண்டான்.

ஈஸ்வரன் சொல்லவும் தான் காலையில் ரத்தினம் சோர்ந்து இருந்ததின் காரணம் சாந்தவிக்கு புரிய, அவளும் ஈஸ்வரனை அணைத்து கொண்டவள் வேறு எதுவும் கேட்கவில்லை.

சற்று நேரம் அங்கே அமைதி நிலவ அந்த அமைதியை கலைத்த ஈஸ்வரன் “நான் பக்கத்து ரூம்ல படுத்துக்குறேன். நீ இங்க படுத்துக்கோ…” என்றான். அவளை மீண்டும் காயப்படுத்தி விடுவோமோ என்று அவனுக்கு பயமாக இருந்தது. அப்படி ஏதேனும் நடந்தால் அவனாலேயே அதை தாங்கி கொள்ள முடியாது. அதனால் தான் சாந்தவி வரும் முன்பே தூக்கி விட வேண்டும் என்று மாத்திரை போட்டு விட்டு படுத்தான். ஆனாலும் தூக்கம் வரவில்லை.சாந்தவியோ ஈஸ்வரனின் கேள்விக்கு பதில் கூறவும் இல்லை அவனை விட்டு விலகவும் இல்லை.

இரவு முழுவதும் பழைய நினைவுகளின் தாக்கத்தில் தூக்கத்தை தொலைத்த ஈஸ்வரன் காலையில் விடித்ததும் வெளியே சென்றிருந்தான்.

காலையில் சற்று தாமதமாக கண் விழித்த சாந்தவி.., ஈஸ்வரன் அருகில் இல்லை என்றதும் கீழே சென்று பார்த்தாள். அவன் அங்கே இல்லை என்றதும் அவன் போனுக்கு அழைக்க அந்த பக்கம் இருந்து “நாட் ரீச்சபில்..” என்று பதில் வர அவன் ‘எங்கே சென்றான்..!’ என்று தெரியாமல் கவலையாக அமர்ந்து இருந்த சாந்தவிக்கு லெசாக தலை சுற்றுவது போல் இருந்தது.

முதலில் தூக்க கலக்கம் என்று நினைத்த சாந்தவிக்கு நேரம் செல்ல செல்ல தலை சுற்றல் அதிகம் ஆகி சாப்பிடாமலேயே வாந்தி வருவது போல் இருக்க “ஏன்…” என்று யோசித்து நாள் கணக்கு பார்த்தவளுக்கு சட்டென்று முகத்தில் ஒரு சந்தோசம் வந்து அமர்ந்தது..

“அப்படி இருக்குமோ…!” என்று சந்தேகமாக இருக்க மனம் சந்தோசம், பயம் என இருண்டும் கலந்து திக் திக் என்று அடித்து கொண்டது. உடனே ஈஸ்வரனிடம் சொல்ல போனை எடுத்தவள் அவனுக்கு அழைக்க மீண்டும் போன் நாட் ரீச்சபில் என்றே பதில் வர சோர்வாக போனை தூக்கி போட்டவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரிவில்லை.

‘சாரதாவிடம் சொல்வோமா..!’ என்று நினைத்து உடனே அந்த முடிவை மாற்றி கொண்டாள் ‘முதலில் ஈஸ்வரனிடம் தான் சொல்ல வேண்டும். எப்போதும் “பேபி எப்போ வரும்..?” என்று கேட்டு இடை வருடுபவன் இன்று என்ன செய்வான்..?” என்று பார்க்க சாந்தவிக்கு ஆவலாக இருந்த போதும் அது‌ குழந்தை தானா இல்லை உடலில் ஏதும் பிரச்சனையா என்ற குழப்பமும் இருந்தது.

கன்பார்ம் செய்து விட்டு ஈஸ்வரனிடம் சொல்ல நினைத்து மெடிக்கல் ஷாப் வந்து பிரக்னன்சி கிட் வாங்கி விட்டு திரும்ப “ஹாய்… சாந்தவி! நீங்க மீசஸ் சக்தீஸ்வரன் தானே..?, சக்தி சார் எப்படி இருக்காங்க…?” என்று ஒரு கொண்டு அவள் முன் ஒரு பெண் வந்து நின்றாள்.

“ஆமா….” என்ற சாந்தவி அந்த பெண் யார் என்று புரியாமல் பார்க்க,

சாந்தவியின் பார்வையின் அர்த்தம் புரிந்த அந்த பெண் “உங்களுக்கு என்னை தெரியாது. பட் எனக்கு உங்களை தெரியும். நான் மதுமிதா! சக்தி சாருக்கு நிச்சயம் பண்ணுன பொண்ணு..” என்று மதுமிதா சிரித்த முகமாக கூற, சாந்தவி என்ன உணர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை

அந்த பெண் “பிடித்தவருடன் செல்வதாக எழுதி வைத்து விட்டு சென்றதாக தானே சொன்னார்கள்!!, ஆனால் இங்கே எப்படி…?” என்று நினைத்த சாந்தவிக்கு, அன்று உமையாள் திருமணம் நின்று விட்டது என்று அழுதது நினைவு வர “கல்யாணம் பிடிக்கலைனா முன்னாடியே சொல்லி இருக்கலாமே..!, ஏன் இப்படி பண்ணிங்க…?” என்று ஆதங்கமாக கேட்டு விட

“நான் ஓடி எல்லாம் போகலைங்க, சக்தி சார் தான் உங்களை கல்யாணம் பண்றதுக்காக என்னை கடத்திட்டாங்க..” என்றாள் அந்த பெண்

“கடத்திட்டாரா…!!” என்று சாந்தவி திகைக்கவும், “ஆமா! ஆனா… அவர் கடத்தலைனாலும் நான் ஓடி இருப்பேன். என் வேலையை அவர் சுலபம் ஆக்கிட்டார்…” என்றாள் மீண்டும் சிரிப்புடன்.

‘ஓடி போகலை ஆனா ஓடி இருப்பாங்களா..!!’ என்ன உலருறாங்க என்று மதுமிதாவை குழப்பமாக பார்த்த சாந்தவி “ஏன்..?” என்று கேட்க

“பஸ்ட் சக்தி சாருக்கு என்னை பிடிக்காதுன் னு எனக்கு தெரியாது. வீட்டுல சம்மதம் பேசவும் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்”.

“கல்யாண நாள் குறிச்ச அப்புறமும் சக்தி சார் போன்ல பேசவோ..! என்னை வந்து பார்க்கவோ! எதுவும் செய்யலை. எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்குற மாதிரி எனக்கும் அவரோட பேச வெளிய போக ஆசை. அவர் தான் போன் பண்ணலை.. சரி நாம பண்ணலாம்னு நான் கால் பண்ணாலும் அவாயிட் பண்ணாங்க. அப்பறமா தான் லேசா புரிய தொடங்கிச்சி அவங்களுக்கு என்னை பிடிக்கலையோனு…!”

“வீட்டுல சொன்னா யாரும் அதை பொருட்டாகவே எடுத்துக்கலை. எப்படி கல்யாணத்தை நிறுத்துறதுன் னு நான் யோசிச்சி நிச்சயத்து அன்னைக்கு லட்டர்‌ எழுதி வச்சிட்டு பார்லர் போறதா சொல்லி ஓடி போக போன‌… பாதிலயே என்னை கடத்திட்டாங்க”

“”இது என்னடா அடுத்த பிரச்சனை…!” யார் கடத்துனா!, ஏன் கடத்தினாங்கனு புரியா இருக்கும் போது தான் சக்தி சார் வந்து சொன்னாங்க, அவங்க உங்களை லவ் பண்றதாவும் உங்களை தான் கல்யாணம் பண்ண போறதாகவும் அதுவரை அவர் கஸ்டடில இருக்கனும் னு. ம்.. சொன்னாங்கன்னு சொல்றதை விட‌ மிரட்டுனாங்க…” என்று சிரிப்புடன் கூறியவள் தொடர்ந்து

“அவர் சொன்னது கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது. ஆனாலும் நானும் கல்யாணத்தை நிறுத்த இருந்த நிலமையில பெருசா பாதிக்கலை. அன்ட் இதுல எனக்கு நன்மையும் இருந்தது”.

“பிடிக்காதவரை கல்யாணம் பண்ண தேவை இல்லை அடுத்து என்னை கடத்திட்டதா சொல்லி வீட்டுலயும் சேர்ந்துக்கலாம். சோ ஓகே சொல்லிட்டேன்”.

“அப்பறமா சக்தி சார் ஓன் வீக்லயே வீட்டுல உண்மைய சொல்லி கொண்டு விட்டுட்டாங்க. அம்மா அப்பாவுக்கு வருத்தம் இனிமேல் என் கல்யாணம் எப்படி நடக்கும்னு. பட் போக போக சகஜம் ஆகிட்டாங்க…” என்று மதுமிதா நடந்ததை கதை போல் கூற

சாந்தவி என்ன சொல்வது என்று புரியாமல் நின்றிருந்தாள். முதலில் சக்தி அவளுக்காக இவ்வளவு பண்ணி இருக்கிறான் என்பதையே நம்ப முடியவில்லை.

சாந்தவி தன் எண்ணத்தின் பிடியில் நிற்க அவளை கலைத்தது மதுமிதாவின் “என்ன மெடிக்கல் ஷாப் பக்கம்..?, ஏதும் உடம்பு முடியலையா..?” என்ற கேள்வி.

சாந்தவி வெட்கத்துடன் அவள் வந்த காரணத்தை கூறவும், “வாவ்… கையை குடுங்க.. செக் பண்ணிடலாம்..” என்ற மதுமிதா சாந்தவி கை பிடித்து பார்த்தவள் “கன்ட்கிராஸ்..” என்றாள் பொது இடத்தை கருத்தில் கொண்டு சாந்தவி மட்டும் உணரும் வகையில்.

அவளின் ஒற்றை சொல் சாந்தவிக்கு உயிர் வரை சென்று தித்திக்க முதுமிதாவை வியப்பாக பார்த்தவள் “நீங்க டாக்டரா..?” என்று கேட்க

“ஆமா பக்கத்துல தான் ஆர்ஜி ஹாஸ்பிடல வோர்க் பண்றேன்..” என்று ‌மதுமிதா கூறவும் “தேங்க்ஸ்..” என்று முகம் சிவக்க புன்னகைத்த சாந்தவி “இனிமேல் இது தேவை இல்லை” என்று கையில் மடித்து வைத்திருந்த கிட்டை காட்ட

உங்க திருப்திக்காக செக் பண்ணிக்கோங்க என்று மதுமிதா கூற “சரி..” என்று தலையாட்டிய சாந்தவிக்கு இப்போதே அதில் இரண்டு சிகப்பு கோடு வந்த உணர்வு.

முகத்தில் சந்தோச சிரிப்புடன் போய்ட்டு வருவதாக மதுவிடம் தலை அசைத்த சாந்தவி கடையை விட்டு வெளியே வந்தவள் ‘வீட்டிற்கு சென்றதும் ஈஸ்வரனை அழைத்து சொல்ல வேண்டும் என்று நினைத்து கொண்டே கையில் இருந்த கிட்டை மீண்டும் ஒரு முறை பார்த்து கொண்டு பாதையில் கவனம்‌ இல்லாமல் ரோட்டை கிராஸ் செய்தவள் அடுத்த நிமிடம் எதிரில் வந்த கார் மோதி தூக்கி விட பட்டிருந்தாள்.

கார் இடித்ததில் தூக்கி வீச பட்ட சாந்தவியின் “அம்மா… ” என்ற அலறலும் ஈஸ்வரனின் “சாந்தவி…” என்ற அலறலும் சேர்ந்து ஒலித்து அங்கே சுற்றி இருந்த அத்தனை உள்ளங்களையும் ஒரு நிமிடம் உறைய வைத்திருந்தது.

வேலை சம்மந்தமாக ஒருவரை பார்த்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த ஈஸ்வரன் சாந்தவி மெடிக்கலில் மதுமிதாவுடன் பேசி கொண்டிருப்பதை பார்த்து, காரை நிறுத்தி இறங்கி வருவதற்குள் இந்த நிகழ்வு நடந்து முடிந்திருக்க காரில் அடிபட்டு தூக்கி வீச பட்ட சாந்தவியை பார்த்து கத்திய ஈஸ்வரனின் உலகம் ஒரு நிமிடம் நின்று சுழன்றது.

“சாந்தவி…” என்ற ஈஸ்வரன் ஓடி வந்து அவளை தூக்க ஈஸ்வரனை அங்கே பார்த்த சாந்தவிக்கு கண்களின் ஓரம் கண்ணீர் உடைப்பெடுத்து ஓடியது.

சாந்தவியின் தலை சாலையில் நடுவே மரம் நடுவதற்காக வைத்திருந்த சிமெண்ட் மேடையில் இடித்திருக்க ரத்தம் பீறிட்டு வெளியேற வலியில் துடித்தவள் அவன் சட்டையை இருக்க பற்றி கொண்டாள்.

சாந்தவியை மடி தாங்கிய ஈஸ்வரன், அவளுக்கு ரத்தம் அதிகமாக வெளியேறுவதை பார்த்து பதறியவன் ஹரி காரை எடு கம்‌ பாஸ்ட் என்று கத்தியவன் “ஏன்டி ஏன் இங்க வந்த..?” என்று குரல் கமர கேட்டு கொண்டே அவளை தூக்க போக

அவனை தடுத்து அவன் சட்டை பிடித்து இழுத்து அவன் பார்வையை தன் பக்கமாக திருப்பிய சாந்தவி “நீ..ங்க சொன் சொன்ன‌ மா…திரியே அப்பா பண்ண பா.. பாவம் பிள்ளைக்கு தான். என்.. என்‌ அப்பா பண்ண பாவத்து..க்கு நீ.. நீங்க சொன்ன மாதிரியே தண்ட…. தண்டனை கிடச்சி…ட்டு….” என்று கூறி அவன் கையை எடுத்து தன் வயிற்றில் வைத்தவளுக்கு விழியோரம் கண்ணீர் வழிந்தபடியே இருந்தது.

அவள் சொல்வதை புரிந்து கொள்ளவே ஈஸ்வரனுக்கு சில நிமிடம் பிடிக்க, புரிந்த நொடி அந்த இடத்திலேயே அவன் உணர்வுகள் மறித்து விட்டது.

அவளை தூக்கிய ஈஸ்வரனின் கைகள் உணர்வு இல்லா ஜடமாக நலுவி செல்ல “மனம் அப்படி ஏதும் நடந்து விட‌ கூடாது..” என்று ஊமையாக கதறியது.

அவள் இன்றி அவன் உலகம் இல்லை என்று உணர்ந்த அவனின் உயிரை பாவையவள் வார்த்தையில் பறித்து இருந்தாள்.

ஈஸ்வரன் அகம், கர்வம், ஆணவம், கோபம் , கொண்டு செய்த அனைத்து செயலுக்கும் ஒரு வார்த்தையில் தண்டனை அளித்திருந்தாள்.

நிழல் தொடருமா???