நெருப்பின் நிழல் அவன்! 22

அத்தியாயம்: 22

சாந்தவியின் வார்த்தை ‘குறி வைத்த அம்பு’ என ஈஸ்வரனின் இதயத்தை சென்று தாக்க மனதில் வெறுமை பரவ கையில் சாந்தவியுடன்‌ துவண்டு கீழே அமர்ந்து விட்டான். அவன் சொன்ன சொல் திருப்பி அவனை எதிர்த்து தாக்குகிறது. அவள் கேள்விக்கு “அப்படி இல்லை டி” என்று பதில் கூட சொல்ல முடியாமல் நின்றவன் “ஏன்டி..?” என்றான் குரல் உடைய தன் ஒட்டு மொத்த ஆதங்கத்தையும் தேக்கி.

சாந்தவி மீண்டும் ஏதோ சொல்ல வர, அதற்குள் சுற்றி இருந்த மக்கள் கூட்டம் கூடி விட்டது. மதுமிதாவும் வந்தவள் சாந்தவியை பார்த்து அதிர்ந்து விட்டாள். ‘இப்போது தானே நன்றாக பேசி விட்டு வந்தாள்..!’ என்று நினைத்து கொண்டே ரத்த வெள்ளத்தில் இருந்த சாந்தவியை பார்த்த மதுமிதாவிற்கு நிலைமையின் தீவிரம் புரிய அவள் வேலை செய்யும் ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து விவரம் சொன்னவள் சாந்தவியிடம் விரைந்தாள்.

இதே நிலை நீடித்தால் சாந்தவியின்‌ நிலை இன்னும் மோசம் ஆகும் என்று புரிய “சார் அவங்களுக்கு ஒன்றும் இல்லை. டென்ஷன் ஆகாதிங்க…, நீங்க பயந்தா அவங்களும் பயப்படுவாங்க. அவங்க ஏதோ பேச வராங்க என்னனு கேளுங்க…” என்று ஈஸ்வரனிடம் கூறிய மது

“சாந்தவி கண்ணை மூடாதிங்க…, உங்களுக்கு சக்தி சார் கிட்ட என்ன பேசனும் பேசுங்க..” என்று சாந்தவியிடம் கூறி அவள் கவனத்தை ஈஸ்வரன் பக்கம் திருப்பிய மது அவள் துப்பட்டாவை எடுத்து இரண்டாக கிழித்து ஒன்றை சாந்தவி தலையில் அடிபட்ட இடத்தில் இரத்தம் வெளியேர விடாமல் வைத்து அழுத்தி பிடித்து மற்றொன்றை வைத்து இருக்க கட்டினாள்.

மதுமிதா அழுத்தி கட்டியதில் வலியில் துடித்த சாந்தவி “சக்தி… வலிக்குது” என்றாள் ஈனஸ்வரத்தில். அவள் அடிப்பட்ட நேரத்தில் இருந்தே சாந்தவியின் கண்களில் கண்ணீர் வற்றாமல் வடிந்து கொண்டே இருந்தது.

அவள் முக சுளிப்பை கூட தாங்க முடியாமல் தவித்த ஈஸ்வரன் அவள் கண்ணீரை துடைத்து விட்டு கொண்டே “மெதுவா கட்டு..” என்று மதுமிதாவிடம் கத்த

“இந்த நேரம் வலியை பார்த்தா ஆபத்து அவங்களுக்கு தான் சார். சீக்கிரமா காரை எடுக்க சொல்லுங்க… ஹாஸ்பிடல் கொண்டு போகலாம் ரத்தம் அதிகமா போகுது…” என்று ஈஸ்வரனிடம் கூறிய மது சாந்தவிக்கு வேறு எங்கும் அடி பட்டிருக்கா என்று பார்த்தாள்.

நெற்றி, கை, என‌ நிறைய இடங்களில் உறசி இருக்க, கை, காலை அசைத்து பார்த்ததிலேயே சாந்தவிக்கு ஃபிராக்சர் ஆகி இருப்பது மதுமிதாவிற்கு தெரிந்து விட, இப்போது சொன்னால் ஈஸ்வர் இன்னும் வருந்துவான் என்று மறைத்து விட்டவள் ஈஸ்வரனை துரிதப்படுத்தினாள்.

மதுமிதா சாந்தவிக்கு பஸ்ட் ஏய்ட் பண்ணவும் ஹரியும் கார் எடுத்து வந்து விட “சார்… தூக்குங்க ஹாஸ்பிட்டல் போகலாம்!” என்று ஈஸ்வரனிடம் கூற, ஈஸ்வரனும் கைகள் நடுங்க சாந்தவியை தூக்கி கொண்டான்.

சாந்தவிக்கு மதுமிதா பேசியது எங்கோ தொலைவில் கேட்பது போல் இருக்க, ஈஸ்வரன் முகம் பார்வையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கலங்கலாக தெரிய, எங்கே தனக்கு எதுவும் ஆகி விடுமோ..! ஈஸ்வரனை விட்டு சென்று விடுவோமோ..! என்று பயத்து ஈஸ்வரனின் சட்டையை இறுக்கி பிடித்த சாந்தவி “சக்தி… என..க்கு எதுவும் ஆ…காது… தானே??, பயமா.. இருக்கு…” என்றாள் ஏக்கம் நிறைந்த விழிகளுடன்.

கத்தி இல்லாமலேயே ஈஸ்வரனின் இதயத்தில் சாந்தவியின் வார்த்தை ரத்தம் வர வைக்க, உள்ளே சுருக்.. சுருக்.. என்று குத்திய வலியுடன் அவளை பார்த்த ஈஸ்வரன் “ஒன்னும் ஆகாது டி. இதோ இப்போ ஹாஸ்பிடல் போயிடலாம்…” என்று அவளை தேற்றும் விதமாக கூறியவன் அவளை மார்போடு அணைத்து கொண்டான்.

ஈஸ்வரனின் மனமோ அவளுக்கு எதுவும் ஆகி விட கூடாது என்று மருகி கொண்டிருந்தது.

ஐந்து வயதில் தொலைத்த உயிரையே ஆண்டுகள் பல கடந்தும் ஏற்று கொள்ள முடியாமல் தவித்தவன்.., உயிராய் நினைப்பவள் விட்டு சென்றால்…! நினைத்து பார்க்கவே ஈஸ்வரனுக்கு பயமாக இருக்க அவளை விடவே மாட்டேன் என்பது போல் இறுக்கி அணைத்து கொண்டான்.

சாந்தவி ஹாஸ்பிட்டல் வரும் வரை வலியில் ஏதேதோ அனத்தி கொண்டே இருந்தவள் ஹாஸ்பிடல் வந்து காரில் இருந்து ஷ்டச்சருக்கு மாற்றும் போது சுய நினைவை இழந்து இருந்தாள்.

ஏற்கனவே மதுமிதா மருத்துவமனைக்கு அழைத்து சாந்தவி டிரிட்மென்ட்க்கு முன் ஏற்பாடு செய்திருக்க சாந்தவி உடனடியாக எமர்ஜென்சி வார்டில் அனுமதிக்கப்பட, ஈஸ்வரன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வெளியே நின்று விட்டான்.

ஐசியூ வாசலில் அடிபட்ட குழந்தை என தவித்து நின்றவனுக்கு சாந்தவி கூறிய “அப்பா செய்த தவறின் தண்டனை..” என்றே சொல்லே மனம் எங்கும் வியாபித்து இருக்க, அந்த எண்ணமே நெருஞ்சி முள்ளாக மனதை அழுத்தியது.

எந்த வார்த்தையை சொல்லி.. அவளை காயம் செய்தானோ..! அந்த வார்த்தை இன்று அவனை வதைத்தது.

சாந்தவியின் பேச்சை தொடர்ந்து மலரின் நினைவும், அவன் அடிபட்ட நினைவும் ஒன்றன் மீது ஒன்றாக நினைவில் வந்து வதைக்க, சாந்தவியின் நிலை ஒரு பக்கமும், ‘அவளுக்கு ஏதும் ஆகி விடுமோ..!’ என்ற எண்ணம் ஒரு பக்கமும் சேர்ந்து வதைக்க தலையை குனிந்து அமர்ந்து இருந்தவனுக்கு மன பாரம் தாங்க முடியாமல் வீழி நீர் தேங்கி நின்றது.

அவன் பட்ட ரணங்கள் யாவும் சேர்ந்து அழுத்த.., மூச்சி விட முடியா அளவு மனம் கனக்க…, விழி நீர் தேங்க அமர்ந்து இருந்தவனின் உள் மனம் மட்டும் ‘சாந்தவிக்கு எதுவும் ஆகி விட கூடாது…’ என்று அத்தனை தெய்வத்திடமும் வேண்டுதல் விடுத்து கொண்டிருந்தது.

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்து இருந்தானோ..! யாரோ..! தலை கோதும் ‌உணர்வில் ஈஸ்வரன் நிமிர்ந்து பார்க்க, ஒரு சின்ன பெண் அவன் அருகில் இருந்த சேரில் அமர்ந்து அவனை பார்த்து சிரித்தது.

ஈஸ்வரன் பதிலுக்கு புன்னகைக்காமல் குழந்தையை வெறித்து பார்க்க “சதியா போய்தும். அவுவாத சதியா…, பாபாகு வதி இல்ல. அப்பாக்கு தான்‌ வதி…, இபோ‌ சதியா போச்சி..” என்றது தன் மழலை குரலில்

குழந்தை என்ன சொல்கிறது என்று புரியாமல் ஈஸ்வரன் குழந்தையை பார்க்க அதுவோ அவனை பார்த்து சிரித்து விட்டு, அவன் தொடையில் ஊன்றி இருந்த கையை எடுத்துவிட்டு விட்டு அவன் மடியில் அமர்ந்து அவன் கண்ணை துடைத்து விட்டது.

ஈஸ்வரன் அந்த குழந்தையின் செயலை அதிசயத்து பார்க்கவும், ஒரு பெண் வந்தவர் “சக்தி… இங்க ஏன் வந்த..?” என்று குழந்தையை அதட்டியவர் குழந்தையை தூக்க,

“பேபி நேம் சக்தியா..?” என்று ஈஸ்வரன் கேட்க,

“ஆமா… சத்ய கீர்த்தனா” வீட்ல சக்தினு கூப்பிடுவோம்…” என்ற அந்த பெண் கூற

“குழந்தை ஏதோ சொல்றா…!” என்று ஈஸ்வரன் தயக்கமாக கேட்க

“என்ன‌‌ சொன்னா..?” என்று அவனிடமே திருப்பி கேட்ட அப் பெண் குழந்தையிடம் “சக்தி ஆங்கிள் கிட்ட என்ன டா சொன்ன?” என்று கேட்டாள்.

அதற்கு குழந்தையோ “பாபாகு ஒன்னும் இல்ல. அப்பா தான் ஊசி சொன்னேன்‌..” என்று சொல்ல

“அவங்க அப்பா பைக்ல போகும் போது கீழ விழுந்துட்டாங்கனு ஹாஸ்பிடல் வந்தோம். அதுக்கு அவளுக்கு தான் ஊசி போட வரோம் னு ஓரே அழுகை. அதான் சக்தி பாப்பாவுக்கு ஒன்னும் இல்லை! அப்பாவுக்கு தான் ஊசி போட போறோம்னு சொன்னேன். அதை தான் சொல்றா சார்…” என்று குழந்தை கூறியதை ஈஸ்வரனிடம் கூறிய அப்பெண்

“சக்தி ஆங்கிளுக்கு பாய் சொல்லு… வீட்டுக்கு போவோம்…” என்று குழந்தையிடம் கூற

ஈஸ்வரனுக்கு டாட்டா காட்டி முத்தம் கொடுத்த குழந்தை அவள் அன்னையுடன் சென்றது.

ஈஸ்வரன் அந்த குழந்தை சென்ற திசையையே பார்த்து கொண்டிருக்க, மதுமிதா ஐசியூவில் இருந்து வெளியே வரவும் எழுந்து அவளிடம் சென்றவன் “சாந்தவி எப்படி‌ இருக்கா..?” என்றான் பதட்டத்துடன்.

“ஷீ இஸ் பைன் சார். பட்..” என்று மதுமிதா தயங்க

“பேபிக்கு ஏதும்..!” என்ற ஈஸ்வரன் தவித்து தயங்கி நிற்க

“பேபி பைன் சார்…” என்று மதுமிதா கூறவும் ஈஸ்வரனுக்கு போன உயிர் திரும்பி வர

“அப்பறம் என்ன?” என்றான் சிறிது அச்சத்துடன்

“சாந்தவி மேடத்துக்கு தலையில காயம் ஆழம் இல்லை சோ பயம் இல்லை ஆனாலும் ஒன் வீக் கழிச்சி ஒரு ஸ்கேன் எடுத்து பார்க்குறது நல்லது. கை, கால்ல பிராக்சர் டிரிட்மெண்ட் பண்ணியாச்சி. சிக்ஸ் மந்த்க்கு எழுந்து நடக்க முடியாது…”

“பேபிய கருத்துல வச்சி ரத்தம், ஹெவி டோஸ் டேப்லெட் எதுவும் குடுக்கலை…, ஆனா இரண்டு நாளுக்குளள மேம் கண் முழிக்கலைனா அப்பறம் மயக்கம் தெளிய ஹெவி டோஸ் குடுத்திடுவோன்…, ரொம்ப வீக்கா இருக்காங்க சோ.. அது குழந்தையை பாதிக்க வாய்ப்பு இருக்கு…” என்று மதுமிதா கூற

“ஹோ…” என்ற ஈஸ்வரன் மீண்டும் துவண்டு போய் அமர்ந்து விட்டான்.

“இரண்டு நாளுக்குள்ள கண் முழிச்சிட்டாங்கன்னா பிரச்சனை இல்லை. கேர் எடுத்து பார்த்துகிட்டா ஒன் மந்த் ல சரி ஆகிடுவாங்க…, பார்க்கலாம்..” என்று விட்டு மது சென்று விட்டாள்

சற்று நேரத்தில் மிதுன், சாரதா, உமையாள், ரத்தினம் அனைவரும் வந்து விட்டிருந்தனர். நிறை மாத வயிருடன் சாரதா அழுது கொண்டே வர, உமையாளோ சக்தி என்று ஓடி வந்து ஈஸ்வரன் கையை பற்றி கொண்டார்.

அவருக்கும் ஈஸ்வரனுக்கு எப்படி ஆறுதல் சொல்ல என்று தெரியவில்லை. ஒரு முறை ‌என்றாள் பரவாயில்லை…, எப்போது இப்படி என்றால்..!, அவரால் மகன் வாழ்க்கையை நினைத்து அழ‌ மட்டுமே முடிந்தது.

“டாக்டர் என்ன சொல்றாங்க சக்தி? எப்படி டா இப்படி ஆச்சி…?” என்று மிதுன் கேட்க

நடந்ததை கூறிய ஈஸ்வரன் அழுது கொண்டிருந்த சாரதாவை பார்த்தவன் “நீ இங்க இருக்காத போய்டு…” என்றான் முகம் இறுக

“ஏன்டா அவளை போக சொல்ற..” என்று உமையாள் அழுகையின் ஊடே கேட்க

இவ.. அப்பறம் அதோ உள்ள இருக்காளே… அவ, யாருமே நமக்கு வேண்டாம்மா. கடைசி வரை நாம இப்படியே இருந்துடலாம். உன் பிள்ளை ராசி இல்லாதவன் மா..! இதோ இவளை என் கூடவே வச்சி பார்த்துக்க நினைச்சேன் எல்லாம் போச்சி. இப்போ..‌..” என்றவனுக்கு தொண்டை அடைக்க விழி நீர் ஒரு துளி திரண்டு விழ தொடர்ந்தவன் “இப்போ… இவளோட வாழ ஆசைப்பட்டு..!, அவ கூட வாழ நினைக்குறப்போ… இதோ வந்து படுத்துகிட்டா மா.., என்னை மொத்தம்மா கொன்னுட்டு வந்து படுத்துட்டா…, நான்‌ உணர்சி இல்லாத ஜடமா பிறந்து இருக்கனும்மா…, என்னால முடியலை மா…” என்று தொண்டை அடைக்க ஈஸ்வரன் கூறி முடிக்கவும் உமையாளும் சாரதாவும் சத்தமாக அழுது விட, மிதுன் கரை தாண்டிய‌ கண்ணீரை சுவர் பக்கமாக திரும்பி மறைத்து கொள்ள, ரத்தினம் அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் அந்த இடத்தை விட்டே நகர்ந்து விட்டார்.

அவன்‌ ரணப் பட்டு துடித்த நிமிடங்களை உணர்ந்தவர் ஆகிட்டே.., சாந்தவியுடன் சந்தோசமாக இருந்ததை பார்த்து இனிமேலாவது நிம்மதியாக இருப்பான் என்று நினைத்தார் ஆனால் அது இல்லை என்னும் போது அவன் சொல்வது போல் யாரும் தேவை இல்லை என்றே தோன்றியது‌.

தொடர்ந்த ஈஸ்வரன் “ஐஞ்சி வயசுல இவ அப்பன் ஆசை படாதனு கழுத்தை அறுத்து கத்து கொடுத்தான் மா.., இப்போ‌.. இருபத்தி மூன்று வருசம் கழிச்சி மக கத்து குடுக்க வந்திருக்கா போல மா..!, ஏன் மா எனக்கு மட்டும் இப்படி..?” என்றவன் குழந்தையாட்டு உமையாள் வயிற்றை கட்டி கொண்டு படுத்து விட அந்த தாய் மனதளவில் மறித்து தான் போனார். மகன் படும் துன்பம் காண முடியாமல்.

யார்.. யாரை தேற்ற என்று தெரியாமல் கழிந்த நிமிடங்கள் அவை. அனைவர் கண்ணிலும் நீர் வற்றவில்லை. சாரதாவை வீட்டிற்கு போக சொல்ல அவளும் மறுத்து விட்டாள்.

அவர்கள் அனைவரின் கண்ணீரும் கடவுளை கரைத்து விட்டது போலும். இரண்டு நாள் அனைவரையும் துடிக்க விட்ட சாந்தவி இரண்டாம் நாள் மாலை கண் விழித்து விட்டாள்

சாந்தவி கண் விழிக்கும் வரை.., சோறு தண்ணி இல்லாமல், அவளின் ரத்தம் படிந்த உடையுடன் ஜசியூ வாசலில் அமர்ந்து இருந்த ஈஸ்வரன், அவள் கண் விழித்து விட்டாள். இனி சாந்தவி உயிருக்கு ஆபத்து இல்லை என்றதும் “அம்மா நான் வீட்டுக்கு போறேன்.., நீங்க இருந்து பார்த்து ஊட்டிக்கு அனுப்பி வச்சிட்டு வாங்கமா…” என்றான் உமையாளிடம்.

“சக்தி..” என்று உமையாள் அதிர‌ “நான் சொன்னேனே மா! யாரும் நமக்கு வேண்டாம். நல்லா இருக்கட்டும் மா விட்டுடலாம்..” என்றவன் வீட்டிற்கு கிளம்ப

“அண்ணா என்னையும் வீட்டுக்கு கூட்டிட்டு போறிங்களா..?” என்றபடி மெதுவாக எழுந்து வந்த சாரதா ஈஸ்வரன் கை பற்ற

அவளை வெறித்து பார்த்தவன் “நீ உன் வீட்டுக்கு போ..” என்று சற்று கோபமாக கூறிய ஈஸ்வரன் திரும்பி செல்ல போக “என் வீட்டுக்கு தான் வரேன். நான் பிறந்த வீட்டுக்கு. என் அம்மா வீட்டுக்கு…” என்று சாரதா அழுத்தி கூற

அவளை முறைத்த ஈஸ்வரன் “உனக்கு இங்க அப்படி யாரும் இல்லை..” என்று சொல்ல

“அதை நீங்க சொல்ல கூடாது…” என பட்டென்று கூறிய சாரதா

“நீங்க சொல்றதுனால எல்லாம் மாறிட போறது இல்லை. என்ன எல்லாம் போய்ட்டு னு சொல்றிங்க..! யாரும் போகலை.., கடவுள் உங்களுக்கு நிறைய குடுத்துருக்காங்க…. அதை புரிஞ்சிக்கோங்க..” என்றவள்

“என்னை இழந்ததுனால எல்லாம் போய்ட்டு னு சொல்றிங்க..! ஆனா நீங்க ஆசைப்பட அதே உறவ இதோ இருபது வருசத்துக்கு அப்பறம் உங்ககிட்ட கொண்டு வந்து சேர்த்து இருக்கார் அதை நினைச்சி சந்தோச‌ போடலாமே!” என்றவள் “ஒரு வேலை இப்போ என்னை பிடிக்கலையோ..?” சந்தேகத்துடன் கேட்க

அவளை முறைத்த ஈஸ்வரன் “ஆமா பிடிக்கவில்லை. அதான் நல்லா இருக்கட்டும்னு‌ நினைக்குறேன்..” என்று வலி நிறைந்த குரலில் கூற

அவன் பேச்சை கண்டு கொள்ளாத சாரதா “அப்பறம் சாந்தவி! அவளோட அருமை உங்களுக்கு புரியலை. அதான் கடவுள் புரிய வச்சிருக்கார்..”

“பொண்ணுனா உங்களுக்கு அவ்வளவு சாதாரணமா போய்ட்டுங்களா!. அவங்க உங்க வம்சத்தையே தழைக்க வைக்கிறவங்க.. ஆனா உங்கள நம்பி வந்துட்டாங்க என்கிற ஓரே காரணத்துக்கான‌ அவங்களை என்ன எல்லாம் பண்ண முடியுமோ எல்லாம் பண்றிங்க. பழி வாங்குறேனு கல்யாணம் பண்ணி அவளை எவ்வளவு டார்ச்சர் பண்ணிக்க..! அவ்வளவு சாதாரணமா அவ வேண்டாம்னு நடு ரோட்டுல விட்டுட்டு வந்திங்க…, அதான் கடவுள் உங்களுக்கு உணர்த்த நினைச்சி இருக்கார். அவ பொண்ணு மட்டும் இல்லை… அவ தான் உங்களோட தூண் அவ இல்லனா நீங்க ஒன்னுமே இல்லைனு….”

“இருபது வருசம் கழிச்சி என்னை உங்க கிட்ட சேர்த்த மாதிரி…, இருபது நாள்ள அவளையும் உங்க கிட்ட கொண்டு வந்து சேர்ப்பார்…, அவளே வருவா வாங்க நாம வீட்டுக்கு போவோம். என் பிள்ளை பாவம் பசில உள்ளேயே புட் பால் விளையாடுறான்..” என்க

சாரதா பேசியதை கேட்டு ஈஸ்வரன் அவளை வியந்து பார்க்க, “இனிமேல் எல்லாம் நல்லதாகவே நடக்கும். வாங்க போவோம் போற வழியிலயே சாப்பாடு வாங்கி தந்தாலும் எனக்கு ஓகே தான்..” என்று அவன் கை பிடித்து இழுத்து செல்ல

ஈஸ்வரனும் அவள் இழுப்புக்கு ஏற்ற படி சாரதா பின்னே சென்றான்.

அன்பு தொடரும்…