நெருப்பின் நிழல் அவன்! 3

அத்தியாயம்: 3

உச்சி வெயிலின் உக்கிர பார்வை முகத்தில் “சுள்…” என பட காற்றில் ஓலைகளின் சரசரப்பு சத்தம் எங்கோ….. தொலைவில் கேட்பது போல் கேட்க, சாந்தவிக்கு கொஞ்சம், கொஞ்சமாக…. மயக்கம் தெளிய தொடங்கியது.

வாடி கிடந்த உடலின் சோர்வை விரட்டி, முயன்று…. இமைகளை திறந்து பார்த்த பாவையின் கண்களை சூரிய ஒளி கூச செய்ய, பிறந்த குழந்தை என இமைகளை மூடி…. திறந்த சாந்தவி, கைகளை கொண்டு கண்களை தேய்த்து கொள்ள நினைத்து கையை உயர்த்த, அது… அவள் கட்டளைக்கு இணங்க முடியாமல் பின்னால் இருந்த தூணில் கட்ட பட்டிருந்தது.

‘தன் கைகள் ஏன்…! கட்ட பட்டிருக்கின்றன?’ என புரியாமல் பார்த்தவள், அந்த இடத்தை சுற்றிலும் தன் கண்களால் ஆராய…, அது அவள் வீடு இல்லை என்று புரிந்தது. “வேற என்ன இடம் இது?” என்று சுற்றி முற்றி பார்க்க… அந்த அறையின் கதவு, ஜன்னல் அனைத்தும் அடைத்து வைக்கப்பட்டிருக்க, அவளையும், ஒரு நாற்காலியையும் தவிர அந்த அறையில் வேறு ஏதுவும் இல்லை.

அந்த வீடு முழுவதும் ஒட்டடையாகவும்…, தூசியாகவும்.., இருக்க “நான் எப்படி இங்க வந்தேன்!!” என்று யோசித்த சாந்தவிக்கு… நேற்று நடந்தது மங்கலாக நினைவு வர, அவள் உணர்வுகளும் மீள தொடங்க, மூளையும் விழிப்படைய, அதன் பிறகே… சாந்தவிக்கு தான் கடத்த பட்டிருப்பது புரிந்தது.

தான் கடத்த பட்டிருப்பதை உணர்ந்த சாந்தவியின் மனம் பதற, பயத்தில் உடல் ஒரு முறை உதறி அடங்கியது. அவளை சுற்றி ஆள் நடமாட்டம் எதுவும் இருந்தது போல் தெரியவில்லை. காற்றில் ஆடும் மரங்களின் சரசரப்பு சத்தம் மட்டுமே… கேட்க, தன்னை சுற்றிலும் காடு என்று புரிந்து கொண்டவள் பயத்தில் முகம் வேர்க்க, கால்கள் நடுங்க, அழுகையில் உதடு துடிக்க… அங்கிருந்து சென்று விட நினைத்து தன் கைகட்டை விடுவிக்க போராடி கொண்டே… ‘யாராவது தன்னை காப்பாற்றுவார்களா!!’ என்று “காப்பாத்துங்க…. ப்ளீஸ்…. “என்று கத்தினாள்.

கத்தி.., கத்தி.., தொண்டை வரண்டு போனதே தவிர… உதவிக்கு யாரும் வரவில்லை. வெகு நேரம் தன்னை விடுவித்து கொள்ள போராடிய சாந்தவி அதற்கு மேல் போராட முடியாமல் சோர்ந்து போனாள்.

உடல்.., மனம்.., இரண்டும் சோர்ந்து விட, அதற்கு மேல் போராட தெம்பு இல்லாமல் அப்படியே… அமர்ந்தவளுக்கு கழிவிரக்கத்தில் அழுகை வெடிக்க “ஏன்…?” என்று கேட்பார் யாரும் இன்றி அழுது கரைந்தாள்.

தன்னை ‘ஏன் கடத்தினார்…?!’ என்று புரியாமல் ஒவ்வொன்றாக யோசித்து பார்த்த சாந்தவிக்கு தன்னை கடத்த எந்த காரணமும் இல்லை என்றே தோன்றியது.

“ஒரு வேளை பணத்துக்காக இருக்குமோ…!!?” என்று சாந்தவியின் எண்ணம் செல்லும் போதே.., “ஆமா.. நீ அம்பானி பேத்தி…, உன் சொத்தை ஆட்டைய போட கடத்திருப்பாங்க, போவியா…” என்று மூளை எள்ளி நகையாட, “அதானே… நான் அம்பானி பேத்தியும் இல்லையே…!” என்று தன் இயல்பு போல் தன்னை தானே நக்கல் செய்து கொண்டாள்.

அந்த வீட்டின் உள்ளே அவள் உணர்ந்த சீதோஷண நிலை, அவள் ஊட்டியில் இல்லை என்று உணர்த்த அது இன்னும் பயத்தை கொடுத்தது. அப்படியே அவளின் சிந்தனையுடனும், தன்னை விடுவித்து கொள்ள போராடி என, அப்படியே… நேரம் செல்ல பின் மாலை பொழுதில் அந்த அறை கதவு திறக்கப்பட்டது.

கதவு திறக்கும் சத்தத்தில் சாந்தவி தவிப்புடன் வாசலை பார்க்க.., எழுபது வயது மதிக்க தக்க ஒரு ஆள் வந்து உணவு பார்சலை அவள் முன்னால் வைத்தார்.

“அப்போ என்னை கடத்துனது ஆன்டி ஹீரோ இல்லையா…!!?, ஆங்கிளா…!!!” என்று தன் இயல்பு போல் எண்ணி கொண்டவள், “தாத்தா என்னை ஏன் கடத்துனிங்க?, ப்ளிஸ்… என்னை வெளிய விடுங்க” என்று கெஞ்ச, அவரோ அவளை பாவமாக பார்த்து விட்டு, சாந்தவி சாப்பிட கை கட்டை அவிழ்த்து கூட விடாமல்.., மீண்டும் கதவை அடைத்து விட்டு சென்று விட, சாந்தவிக்கு “ஐயோ…” என்றானது.

கத்தி.., கத்தி.., சோர்ந்து போன சாந்தவிக்கு நேரம் செல்ல… செல்ல… மனதை அச்சம் சூழ்ந்து கொண்டது. ‘நான் எங்கே இருக்கேன்? யார் கடத்தினார்கள்? எதுக்கு கடத்தினார்கள்?’ என்று ஒன்றும் புரியாமல் கண்டதையும் நினைத்து வருந்தினாள். ஒரு நொடியில் உலகையே சுற்றி வரும் வல்லமை கொண்ட மனமோ..! டிவியில் பார்த்தவை.., பேப்பரில் படித்தவை.., என பல… காட்சி போல் கண் முன்னால் வந்து செல்ல.., முகம் அச்சத்தில் வெளிர.., சட்டென்று தன்னை குனிந்து பார்த்து கொண்டவள், தன் மேலாடை விலகி கிடப்பதை பார்த்து… மனம் பதை பதைக்க, தன் ஆடையை சரி செய்ய கையை உறுவி கொள்ள பார்க்க.., கை இன்னும் இறுகி வலி உயிர் போனதே தவிர கட்டு அவிழவில்லை.

தன் நிலையை எண்ணி அழுகையில் கரைந்த சாந்தவி கட்டப்படாத நிலையில் இருந்த கால்களை முடிந்த அளவு மடக்கி குத்துக்காலிட்டு நெஞ்சோடு இறுக்கி கொண்டு… அதிலேயே முகம் புதைத்து அமர்ந்து கொண்டாள்.

கைகள் கட்டப்பட்ட நிலையில் அதிக நேரம் அவளால் அதே நிலையில் இருக்கவும் முடியவில்லை. கீழே விழுந்து அடி பட்டதும், பசியினால் வந்த உடல் சோர்வும் சேர்த்து அவளை மிகவும் வாட்டியது. இப்படியே பசியின் கொடுமை.., ஒரே நிலையில் அமர்ந்த சோர்வு…, உதவிக்காக கத்தி தன்னை விடுவித்து கொள்ள போராடியது.. என இரண்டு நாட்கள் இரண்டு யுகமாக கடந்து செல்ல… நரகம் எப்படி இருக்கும் என்று பூமியில் அறிந்ததாக சாந்தவி உணர்ந்தாள்.

மூன்றாம் நாள் பசி மற்றும் உடல் சோர்வில் சாந்தவி மயக்கத்தில் தன் சுயம் இழக்க தொடங்கிய நேரம் அந்த அறையின் கதவுகள் திறக்கப்பட்டது. ‘அந்த தாத்தாவாக இருக்கும்..’ என்று நினைத்து, தண்ணீர் கேட்க நினைத்து மயக்கத்தில் கண்கள் சொருகிய நிலையில் இருந்த சாந்தவி கஷ்ட பட்டு கண்களை திறந்து பார்க்க, ஆறு அடி உயரத்தில், கட்டிளம் காளை என தன் முன்னே நின்ற ஈஸ்வரனை ஏறிட்டு புரியாத பார்வை பார்த்தாள். கண்கள் பசி மயக்கத்தில் தெளிவில்லாமல் தெரிய காளையின் முகத்தை கூர்ந்து பார்த்தாள்.

“இவனை இதற்கு முன் எங்கேயும் பார்த்திருக்கிறோமா…!?” என்று சாந்தவி தன் நினைவில் தேடி பார்க்க, பாவையின் நினைவுகள் அவனை எங்கேயும் பார்த்ததாக நினைவு கூறவில்லை. “பிறகு ஏன்.. அவன் தன்னை கடத்த வேண்டும்?” என்று நினைத்த சாந்தவி “நீ.. யாரு..?, என்னை ஏன்… கடத்திட்டு வந்த?” என்று சோர்ந்த குரலில் கேட்க,

பதில் சொல்லாமல் காளையவன் பாவையை நெருங்க…., அவன் மீது இருந்து வந்த மதுவின் வாடையும், சிகரெட் நெடியும்… அறை மயக்கத்தில் இருந்த பாவைக்கு மூச்சி திணறலை கொடுக்க…., நாசியில் அடைத்த நெடியை உள் வாங்காமல் இதயம் போராட்டம் நடத்த, போதிய.. ஆக்ஸிஜன் கிடைக்காமல்.. மேல் மூச்சி கீழ் மூச்சி வாங்கிய சாந்தவியின் கண்கள் நிலை இல்லாமல் தவித்தது.

பாவையின் துடிப்பையும்…, அவள் வேதனையையும்…, பார்த்து அணு… அணுவாக… ரசித்த ஈஸ்வரன், சாந்தவியின் அருகே குத்துக்காலிட்டு அமர்ந்து, சிகரெட் புகையை நன்றாக உள் இழுத்து பாவையின் முகத்தில் ஊத…, சாந்தவிக்கு அந்த புகை பிடிக்காமல் இன்னும் அதிகமாக மூச்சி திணர, கண்களில் கண்ணீர் கட்டுப்பாடின்றி வழிந்தது. அவள் படும் வேதனையை பார்த்து கொண்டே இன்னும் புகையை நன்றாக அவள் முகத்தில் ஊதி சாந்தவியை திணறடித்தான்.

இப்படியே சில நிமிடங்கள் புள்ளி மான் உயிருக்கு போராடுவதும், சிங்கம் அதை சீண்டுவதுமாக இருக்க… அங்கே ‘கத்தி இன்றி.. ரத்தம் இன்றி.. ஒரு யுத்தம் நடக்க’ பாவையின் விழிகள் சொருகி வான் நோக்கி செல்ல… ஒரு நிமிடம் அவளை ஆழ்ந்து பார்த்த ஈஸ்வரன் நிதானமாக சென்று அறையின் கதவு, ஜன்னல்களை திறந்து விட…. சிகரெட்டின் நெடி விலகி சுத்தமான‌ காற்று அறையின் உள் நுழைய… கொஞ்சம் கொஞ்சமாக பாவையின் சுவாசம் சீராக அவளின் ஒளி இழந்த கண்கள் அவனை வெறித்தது.

பேச கூட தெம்பு இல்லாமல் முற்றிலும் வலு இழந்திருந்த சாந்தவியின் அசைவினை கவனித்து கொண்டிருந்த ஈஸ்வரன் அவள் சற்று தெளிந்ததும், அழுத்தமான காலடிகளுடன் அவளிடம் வந்தவன் போதையில் சிவந்த கண்கள் கோபத்தில் சிவக்க…, அவள் அருகில் மீண்டும் குத்துக்காலிட்டு அமர்ந்து அவள் கன்னத்தை அழுத்த பற்றியவன் “எங்க இப்போ சொல்லுடி பார்ப்போம்….” என்றான் திமிராக.

இவ்வளவு நேரம் உயிர் போராட்டத்தில் மிகவும் துவண்டிருந்த சாந்தவி பேச தெம்பு இல்லாமல்… ஈஸ்வரனின் பேச்சின் சாரம் புரியாமல்… அவனை புரியாத பார்வை பார்க்க, அவள் பார்வையில் ஆவேசமாக… பாவையின் கழுத்தை நெரித்த ஈஸ்வரன் “இப்படி ஒன்னும் தெரியாத பச்சை குழந்தை போல மூஞ்ச வச்சா விட்டுடுவேணு நினைச்சியா டி..?, அது இந்த ஈஸ்வரன் கிட்ட நடக்காது….!” என்றான் சீற்றமாக.

காளையின் பார்வையில்.. பாவையின் அங்கம் மொத்தத்திலும் பயம் தொற்றி கொள்ள… முகத்தை காலில் புதைத்து கொள்ள போனவளுக்கு, கழுத்தில் பதிந்திருந்த காளையின் கைகள் தடை விதிக்க அச்சம் நிறைந்த கண்களுடன் அவனை ஏறிட்டு பார்த்தாள்.

“பாவனை ரசிக்கும் படி தான் இருக்கு…., ஆனா மயங்க நான் விஸ்வாமித்திரன் இல்லைடி” என்று எள்ளலாக சிரித்த ஈஸ்வரன், “நீ… சொன்னதை ஒரு வார்த்தை மாறாம இப்போ சொல்லுற…, இல்லை… ஸ்ரைட்டா எமலோகத்துக்கு டிக்கெட் தந்து அனுப்பி விட்டுடுவேன்” என்று ஈஸ்வரன் சாந்தவியை மிரட்ட, அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் முழித்த சாந்தவி,

மூன்று நாட்களாக தண்ணீர் கூட அருந்தாமல் வரண்டு போய் இருந்த தொண்டையை எச்சில் விழுங்கி ஈரமாக்கி கொண்டு “என்… என்ன சொல்…லனும்..? நீ… நீ எதை சொல்..றனே எனக்கு தெரியலை…!!, ஏன் என்னை கடத்திட்டு வந்து…ருக்க?, என்னை விட்டுடு ப்ளீஸ்…, நீ நினைக்குற… மாதிரி நான் பெரிய இடத்து பொண்ணு எல்லாம் இல்லை….” என்று பணத்திற்காக தான் தன்னை கடத்தி இருக்கிறான் என்று நினைத்து! தான் சொல்ல நினைத்ததை திக்கி.. திணறி.. முயன்று சற்று கோர்வையாக சொல்லி முடிக்க,

ஈஸ்வரனின் கைகள் இடி என சாந்தவியின் கன்னத்தில் இறங்கி இருந்தது.

ஈஸ்வரன் அடித்ததில்… சாந்தவி, உதடு கிழிந்து… ரத்தம் வழிய… ஒரு பக்கமாக தலை தொங்கி இருக்க, “அதை தான் டி என்னால தாங்க முடியலை…., என் கம்பேனிக்கு வாட்ச்மேன் வேலை பார்க்க கூட தகுதி இல்லாத நீ…. என் கம்பேனியை இழுத்து மூடுவியா…???” என்று ஆங்காரமாக கத்தினான்.

ஈஸ்வரன் அறியவில்லை பணம் ஒருவனின் தகுதியை தீர்மானிப்பதில்லை. நல்ல குணம் தான் தீர்மானிக்கிறது என்று..!

சாந்தவி எதிர்த்து பேச கூட தெம்பின்றி இருக்க… ஈஸ்வரன் தொடர்ந்தான். “எப்படி..! எப்படி…! பேஸ் புக் லைவ் போய்… என் கம்பேனியையே திவால் ஆக்குவியா…?” என்று எள்ளலாக கேட்டவன் “எங்க இப்போ…. இப்போ செய் டி பார்ப்போம்…” என்றான் கர்ஜனையாக.

சாந்தவிக்கு, ஈஸ்வரனின் ‘பேஸ் புக் லைவ்.., கம்பேனி திவால்..’ என்ற வார்த்தை எங்கோ கேட்டது போல் தோன்ற…. எங்கு என்று தன் நினைவடுக்கில் தேடினாள். இந்த இரண்டு நாள் நரக போரட்டத்தில் பல வித எண்ண அலைகளில் சிக்கி தவித்தவள்.., தான் பேசியதையே மறந்திருந்தாள். ஈஸ்வரன் கூறிய வார்த்தைகளை “எங்கே கேட்டோம்..” என்று யோசித்த சாந்தவிக்கு அவள் கீழே விழும் முன் கடைசியாக அண்ணாச்சியிடம் பேசியது நினைவு வர…, விழிகளில் சிறிதாக மின்னல் பூக்க “ச.. சக்தி…” என்று பாவையின் இதழ்கள் அசைய முகத்தில் புன்னகையின் அபினயம்.

இத்தனை நாள் எதற்கு என்று தெரியாமல் கண்டதையும் நினைத்து பரிதவித்தவளுக்கு… காரணம் கிடைத்ததால் வந்த மகிழ்ச்சி. உடல் சோர்ந்து கிடந்தவளுக்கும் உயிர் கொடுக்க, தான் விளையாட்டாக பேசியது தெரிந்தால் விட்டு விடுவான் என்று நினைத்து பாவை மகிழ, காளையோ “நியாபகம் வந்துட்டு போல..!!” என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டவன். “எஸ்…. சக்தி… சக்தீஸ்வரன், சக்தி குருப் ஆஃப் கம்பேனிபோட சேர்மன்” என்று அங்கே இருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர, பாவையின் கண்களுக்கு காளையின் தோரணை எதுவும் பதியவில்லை.

“நான் விளையாட்டாக பேசியது தெரிந்தால் விட்டு விடுவான்! இனிமேல் பிரச்சினை இல்லாமல் சாரதாவுடன் சேர்ந்து மீண்டும் சந்தோசமாக இருக்கலாம்…, அவளை கிண்டல் செய்து விளையாடலாம்…, அவர்கள் கூட்டில் அவளும் அவள் அக்காவும் மட்டுமே… சந்தோசமாக” என நினைத்த சாந்தவிக்கு அப்போது தான் சாரதாவின் நினைவு வந்தது.

“அச்சோ… சாரு என்னை தேடி இருப்பாளே..! எங்க எல்லாம் தேடுனாளோ! பாவம்… தனியா வேற இருப்பா…, இல்லை, மாமா சார் கூட இருப்பாங்க… சாருவ தனியா விட மாட்டாங்க, ஆனா… ராத்திரி சாரு தனியா தான் இருந்திருப்பா! கண்டிப்பா ரொம்ப பயந்திருப்பா..!” என்று தன் நிலை மறந்து தன் தமக்கைக்காக துடித்த சாந்தவி..,

“இவர் கிட்ட உண்மையை எல்லாம் சொல்லிட்டு, சீக்கிரமா…. வீட்டுக்கு போய்டுவோம்” என்று எண்ணி கொண்டு ஈஸ்வரனை பார்த்தவள் “சார்…. நீங்க என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க..! நான் விளையாட்டா தான் அண்ணாச்சி கிட்ட பேசுனேன். நானும்… அண்ணாச்சியும்.. பிரண்ட்ஸ். இப்படி தான் அடிக்கடி விளையாட்டா பேசிப்போம்” என்று அன்று அண்ணாச்சியும் அவளும் விளையாட்டாக பேசிய அனைத்தையும் ஒன்று விடாமல் கூறிவிட்டு, இனிமேல் ஈஸ்வரன் தன்னை விட்டு விடுவான் என்ற நம்பிக்கையுடன் ஆர்வமாக அவன் முகம் பார்க்க,

அவனோ… முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் கதை கேட்கும் பாவனையில் அமர்ந்து இருந்தான்.

அவன் பதில் சொல்லாமல் இருக்கவும் “சார்…” என்று சாந்தவி அழைக்க, ஈஸ்வரன் “அப்போ… நான் இதெல்லாம் தெரியாம தான் உன்னை தூக்கிட்டு வந்தேனு நினைச்சியா?, அச்சோ…. பாவம்..!!” என்று ஏளனமாக உதடு சுழித்து பாவமாக பார்க்க, சாந்தவி அவனை புரியாத பார்வை பார்த்தாள்.

“தெரிந்தும் ஏன் கடத்தினான்?, நான் வேறு எதுவும் தவறு செய்யவில்லையே..!” என்று சிந்தனையில் இருந்த சாந்தவியை, “நீ… விளையாட்டா என் கம்பேனியை மூடுவேனு சொன்னியா..! அதுல எனக்கும் உன் மேல பாசம் ( பகை) வர, உங்கூட விளையாட ஆசைப்பட்டு தூக்கிட்டு வந்துட்டேன்..” என்றான் சாதாரணமாக.

அதிர்ச்சியில் ஈஸ்வரனை வெறித்து பார்த்த சாந்தவிக்கு பயத்தில் நெஞ்சி கூடு சில்லிட, கால்களை மேலும் நெஞ்சோடு இறுக்கி கொண்டாள்.

அவளை அற்ப பார்வை பார்த்த ஈஸ்வரன், ஏதோ… சிந்தனை செய்தவனாக அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க சாந்தவி அவனை பய பார்வை பார்த்தபடி இருந்தாள்.

சில நிமிட யோசனைக்கு பின் மீண்டும் சாந்தவியின் முன் வந்த ஈஸ்வரன் “இப்படி பண்ணுனா என்ன?!!, உன் குடும்பம் மொத்தத்தையும் இங்க கொண்டு வந்து… உன் கண்ணு முன்னாடியே… கொடுமை படுத்தி கொன்னு விளையாடினா என்ன? அதுவும் நல்லா இருக்கும் இல்ல…” என்று போதை ஏறி சிவப்பேறிய கண்களுடன் கேட்க, சாந்தவி அதிர்த்து “வேண்டாம்…. அப்படி ஏதும் செய்யாதிங்க ப்ளிஸ்…” என்றாள் வேண்டுதலாக.

“அவன் மனிதனா? இல்லை மிருகமா? என்று மனதில் நினைத்த சாந்தவிக்கு தெரியவில்லை அவன் அரக்கன் என்று. ஈஸ்வரனின் ‘உன் குடும்பம் மொத்தமும்..’ என்ற சொல்லில் தன் குடும்பத்தை பற்றி அவனுக்கு எதுவும் தெரியாது என்று நினைத்து சற்று நிம்மதியான சாந்தவி, அவனுக்கு தெரியும் முன்பு… சாரதாவை அவன் கண்ணில் படாமல் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினாள்.

“இவன் மனிதனே இல்லை தவறு செய்தவர் செய்யாதவர் என்று பாராமல் அனைவரையும் வேட்டையாடும் மிருகம். அறியாமல் விளையாட்டாக பேசியதற்கு… தனக்கு அவன் தந்த தண்டனையை அதிகம். இதில்… எந்த தவறும் செய்யாத சாரதாவுமா…!” என்று நினைத்த சாந்தவி மனம் “தன்னை காத்துக்கொள்ள முடியவில்லை என்றாலும்… தன் அக்காவை எப்படியும் காத்து விட வேண்டும்” என்று நினைத்து அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க தொடங்கினாள்.

முடியாது என்று முடங்கி இருக்கும் போது தான் எதிரில் இருக்கும் பாதை கூட முட்கள் நிறைந்த காடாக தெரியும்…, முடியும்… என்று முயன்றால், முட்கள் நிறைந்த காடு கூட வழிகளாக தெரியும். சாந்தவியும் சாரதாவை காக்க வேண்டும் என்று துணிந்து விட, ஈஸ்வரனை எதிர்த்து இங்கிருந்து எப்படி செல்ல வேண்டும் என்ற வழி புலப்பட நிமிர்ந்து அமர்ந்து ஈஸ்வரனை எள்ளலாக பார்த்தாள்.

சாந்தவி பார்வையின் வேறுபாட்டை உணர்ந்த ஈஸ்வரன் புருவம் நெறிய சாந்தவியை உறுத்து பார்க்க “ஆம்பளை சிங்கம்…, ஆறு அடில உடம்பை நல்லா வளர்த்து வச்சிருக்க…! மதுரை மண்ணோட இளம் காங்கேயன் காளை…. ஒரு சின்ன பொண்ண கட்டி போட்டு வீராப்பு பேசுற என்ன ஒரு வீரம்….!” என்று அதிசயித்தவள் “வெட்கமா இல்லையா…???” என்றாள் பயத்தில் உயர் அழுத்தத்தில் துடித்த இதயத்தின் லயத்தை வெளி காட்டாமல் அமைதியான அழுத்தத்துடன்.

“ஏய்….” என்ற சீற்றத்துடன் பாவையை நெருங்கிய காளையின் கைகள் ஒரு நிமிடம் நிதானித்து பின்பு இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து பாவையின் கை கட்டை அறுத்து விட்டவன் “ம்… கட்டை அவிழ்த்தாச்சி, இப்போ… என்னடி பண்ண முடியும் உன்னால?” என்று இளக்காரமாக கேட்க,

“உன் கம்பேனியை இழுத்து மூட முடியும்” என்றாள் பாவையும் அமைதியாக… மூன்று நாட்களாக கட்டப்பட்டு… ரத்த ஓட்டம் இல்லாமல் வெளுத்து போய் வலித்த கையை தடவி விட்டு கொண்டே…,

“வாரே… வா… நீ அல்லவோ எதிரி! முதல் முறை நேருக்கு நேர் நிக்குற எதிரியை பாக்குறேன். இதுவும் நல்லாதான் டி இருக்கு…” என்று மீசையை மூறுக்கி விட்ட ஈஸ்வரன் “செம…” என்று தொடை தட்டி ஆர்ப்பரித்து கொண்டவன் “எங்க…? முடிஞ்சா செய் டி பார்ப்போம்…!” என்றான் கர்ஜனையாக.

“முடியாதுனு‌ நினைக்குறியா? எண்ணி பத்தே நாள் உன் கம்பேனியை முட வச்சி காட்டுறேன் டா…” என்றாள் சாந்தவியும் அழுத்தமாக.

“பாருடா தில்ல…! சும்மாவா சொன்னாங்க… ‘வீர தமிழச்சினு’ இந்த மண்ணோட வேர் உனக்கும் இருக்கும் தானே..!, ஆனா… பாரு நடக்காத ஒரு விசயத்துக்கு பத்து நாள் ரொம்ப அதிகம்! அதனால‌ உனக்கும் இல்லாம, எனக்கும் இல்லாம, ஒரு.. வாரம் டைம் சரியா?” என்றான் ஈஸ்வரனும் திமிராக.

இதை விட்டால் இங்கிருந்து வெளியே செல்லவும்.., சாரதாவை ஈஸ்வரன் கண்ணில் படாமல் வைக்கவும் வேறு வழி இல்லை என்பதால்.. தன் அக்காவிற்காக தன்னையே பலி கொடுக்க நினைத்து இந்த வாய்ப்பை பற்றி கொள்ள நினைத்த சாந்தவி “சரி…” என்று தன் சம்மதம் தெரிவித்தாள். எடுத்த உறுதியில் இன்னும் வலுவாக.

“ஓகே… சவால் னு வந்துட்டா ஜெயிச்சவங்களுக்கு பரிசு வேண்டாமா? அதனால.. உன்னால இந்த சக்தி சாம்ராஜ்ஜியத்தை அசைக்க முடியலைனா…. நான் என்ன சொன்னாலும் நீ செய்யனும், கேட்கனும், எனக்கு தேவைனா என்னோட பிஸிக்கல் நீட்சையும் தீர்த்து வைக்கனும்… என்ன சரியா?” என்று குரூரமாக கேட்க,

அவன் பேச்சில் ஒரு நொடி அதிர்ந்த சாந்தவி அடுத்த நொடியே தன்னை தானே திட படுத்தி கொண்டு “சரி… ஆனா… நான் உன் கம்பேனியை மூடிட்டா.., நீ என் குடும்பத்தை விட்டுடனும். நீயும் நான் சொல்றதை கேட்கனும்..” என்று கூறி ஈஸ்வரனின் கண்களை பார்த்தவள்‌ “கடைசியாக நீ சொன்னதுக்கு பதில்..!” என காளை சத்தமாக கூறியதற்கு மறு மொழி அவன் மட்டும் கேட்கும் படி கூறி இருந்தாள் கண்களில் கோப கனலை தாங்கி.

இந்த ஒரு வார்த்தை தான் அவளின் வாழ்க்கையையே புரட்டி போட போகிறது என்று தெரிந்திருந்தால் கூறி இருக்க மாட்டாளோ! விதி வலியது என்று யார் அறிவார்?.

சாந்தவியின் பேச்சில் கண்கள் இரண்டும் ரத்தம் என சிவக்க “ஏய்…” என்று சிங்கம் என்று உறுமிய ஈஸ்வரன் சாந்தவியின் கழுத்தை நெரிக்க, முகத்தில் துளி பயம் இல்லாமல் பசியில் ஒளி இழந்த கண்கள் இரண்டும் கோபத்தில் மின்ன ஈஸ்வரனை பதில் பார்வை பார்த்தாள் சாந்தவி.

கற்பு நிலையானது என்றால் அது ஆண் பெண் இருவருக்கும் போதுமானவை என்று கூறிய பாரதியின் வரிகளை படித்தவள்…

தன்… மானத்தை சீண்டிய ஈஸ்வரனின் தன்மானத்தையும் சீண்டி இருந்தாள். ஆண்கள் எப்போதும் பெண்களை இந்த வார்த்தையால் தானே நோகடிக்கின்றனர் அதன் வலி அவனும் உணரட்டும் என்று…

உணர்ந்திடுவோனோ அவனுக்கும் கற்பு உண்டென்று!!.

போரில் வென்றிடுவார் யாரோ…!

தொடரும்…