நெருப்பின் நிழல் அவன்! 4

eiLIRWS29238-84c78c03

அத்தியாயம்: 4

குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவு அமைதியாக இருந்தது அந்த அறை. காளையின் கண்கள் பழி வெறியில் மின்ன…, கைகள் பாவை கழுத்தை நெரிக்க.., பாவையும் கண்ணில் துளி பயம் இல்லாமல்..! கனலை தாங்கி… காளையை பார்க்க, பாவையை உறுத்து விழித்த காளை அடுத்த நொடி அவளை உதறி இருந்தான்.

அவன் உதறுவான் என்று எதிர் பார்க்காத சாந்தவி, நிலை தடுமாறி கீழே விழுந்தவள் “அனுபவிப்ப டா…! உன்னோட இந்த கோபம், தான்… தான் எல்லாம் என்கிற ஆணவம், எல்லாத்துக்கும் அனுபவிப்ப…!” என்றாள் கோபமாக. பாவையின் பேச்சிற்கு ஏளனமாக சிரித்த ஈஸ்வரன் “உங்களால நான் அனுபவிச்சதே இன்னும் நெருப்பா நெஞ்சில‌ எரியுது டி…, இன்னுமா…?!!, அப்படி நடந்தா, அது நடக்கும் போது பார்க்கலாம். ஆனா…! நீ இந்த ஈஸ்வரனால நிறைய அனுபவிப்ப….!” என்று கூறி பாவையை நெருங்கியவன் “கோபமா பாக்குற உன்னோட இந்த கண்ணுல வலியை பார்க்கனும்..!” என்றான் அடக்கப்பட்ட சீற்றத்துடன்.

இன்னும்… ஒரு அடி அடித்தாலும் அவள் உயிர் ஊஞ்சலாடும் நிலைக்கு சென்று விடுவாள். அவனுக்கு அவள் அணு… அணுவாக.. துடிக்க வேண்டும். அதிலும், போட்டி என்று வந்த பிறகு அவன் அடித்து, அவள் ஓரே… அடியாக சென்று விட்டால்..!, அது தன் தன்மானத்துக்கு இழுக்கு என்று நினைத்தவன் கோபம், ஆத்திரம், அனைத்தையும் அடக்கி கொண்டான்.

ஈஸ்வரனின் வார்த்தையில் பாவையின் முகத்தில் வலி நிறைந்த புன்னகை ஒன்று தோன்ற… தன் சுய நினைவை இழந்து இருந்தாள். காளையின் “உங்களால் நான் அனுபவிச்சதே நெஞ்சுல நெருப்பா எரியுது டி” என்ற வார்த்தையையும் கவனிக்காமல். அவள் கவனிக்காதது விதியின் விந்தையோ…!

வேர் அறுந்த கொடி என.., முகம் வெளுத்து.., தரையில் சுருண்டிருந்த சாந்தவியை பார்த்து பரிதாபம் வருவதற்கு பதில் ஈஸ்வரனுக்கு கோபமே வந்தது. “இந்த தொல்லை வேறயா..?!!, என்ன‌ தைரியத்துல இவ சவால் விட்டா…?” என்று எரிச்சலாக மொழிந்து விட்டு, துண்டை தோளில் போடுவது போல் பாவையை தூக்கி தோளில் போட்டு கொண்டு வெளியே வந்து.., ஜீப்பின் முன் இருக்கையில் அமர்த்தி அவளுக்கு சீட் பெல்ட்டை போட்டு விட்டவன் ஜீப்பை மருத்துவமனைக்கு செலுத்தினான்.

மனதில் பாவை மீதான கோபம் எரிமலை என பொங்கி கொண்டிருந்தது. அவள் முகத்தை பார்த்தாளே கோபம் தலைக்கு ஏறியது. ஆண்களே… தன் எதிரில் நின்று பேச தயங்க.., பிள்ளை பூச்சி போல் இருந்து கொண்டு சவால் விடுகிறாள். அதுவும்… அவள் கடைசியாக கூறிய அந்த வார்த்தைக்காகவே அவளை கொள்ள தோன்றியது காளைக்கு.

கோபத்துடனே திரும்பி பாவையை பார்த்தவன் கண்ணில் பாவை மீதான சிறு இறக்கம் தோன்றியதோ…!, அடுத்த நிமிடம் பார்வையை சாலைக்கு திருப்பி விட்டவன் கண்கள் எந்த உணர்வையும் பிரதிபலிக்கவில்லை. சாந்தவியை மருத்துவமனைக்கு அழைத்து வந்து, அவளுக்கு தேவையான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தான். பாவைக்கு இரண்டு கையிலும் டிரிப் ஏற அவள் கண் விழிக்கும் வரை அவளை விட்டு நகரவில்லை.

“இன்னும்… ஏழு நாள் தான் டி உனக்கு டைம். அப்பறம் நீ என் கையில…” என்று எண்ணி கொண்டவன் விழிகள் பாவை மீதான வன்மத்தை வெளிப்படுத்தியது. சாந்தவி மயக்கம் தெளிந்து எழுப்பவும், டிரிப்ஸ் ஏறி முடிக்கவும் சரியாக இருக்க…, உடனே மருத்துவமனையில் பில் கட்டி அழைத்து வந்து விட்டான்.

ஈஸ்வரனின் கையில் ஜீப் ஊட்டியை நோக்கி மிதமான வேகத்தில் செல்ல பாவை அமைதியாக அமர்ந்து இருந்தாள். முகம் நிர்மலாக இருக்க மனதில் ஆழி பேரலை என பல எண்ணங்கள் சுழன்றடித்தது. அதிலும் கடைசியாக ஈஸ்வரனிடம் அவள் கூறிய வார்த்தை ‘சாக்கடை என தெரிந்தும்…, அதை தானே.. தன் மேல் அள்ளி பூசி கொண்டது போல் அறுவெறுத்து போனாள்’. அந்த வார்த்தை அவள் காதில் ஒளிக்க உடல் கூசியது. “நானா பேசியது…!?” என்று தன்னை தானே நிந்தித்து கொண்டாள்.

ஈஸ்வரன் பேசியதற்கு பதில் பேசாமல் இருந்து இருந்தால் அவன் இன்னும் அதிகமாக அசிக்கப்படுத்துவான்‌ என்று தான் அவளும் பேசினால். அதிலும் அந்த வார்த்தை எப்படி வலிக்கும் என்று அவனும் உணர வேண்டும் என்றே பேசி விட்டு இப்போது தன்னையே.. வெறுத்து அமர்ந்து இருந்தாள்.

சக்தி சாம்ராஜ்ஜியத்தை அசைத்து காட்டுகிறேன் என்று வீம்பாக பேசி விட்டு, இப்போது என்ன செய்வது என்று தெரியாமல், அதை எப்படி செய்வது என்று சிந்தனையும் மனதில் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருந்தது.

இருப்பது வெறும்… ஏழு நாட்கள். “முடியுமா…?!” என்ற கேள்வி கண் முன்னால் மலை போல் எழுந்து நிற்க, பாசம் கொண்ட மனம் “முடியும்…” என்றது. இப்படி பல சிந்தனைகளில் வந்தவள், ஜீப் திருப்பூர் பேருந்து நிலையத்தை தாண்டவும் “நான் இங்க இறங்கிக்குறேன்..” என்றாள் காளையின் முகம் பார்க்காமல்.

அவளை திரும்பி பார்த்த ஈஸ்வரன், தோளை குலுக்கி கொண்டு காரை ஒரமாக நிறுத்த, ஜீப்பில் இருந்து இறங்கி கொண்ட சாந்தவி “தேங்க்ஸ்! என்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனதுக்கு..” என்றாள்.

ஈஸ்வரன் ஏதோ…! சொல்ல வர, அவனை கை நீட்டி தடுத்த சாந்தவி “நீங்க… மனிதாபிமான அடிப்படையிலயோ! இல்லை, தன்னால தான் இப்படின்னு… குற்ற உணர்வுலையோ! என்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலனு எனக்கு தெரியும். விட்ட சவாலுக்கு விடை தெரிஞ்சிக்க தான்… கூட்டிட்டு போனிங்கனும் தெரியும்..!, போட்டியில எதிரியும் வலுவா இருக்கனும்னு நினைச்சி கூட்டிட்டு போன‌…! ஆனா…, ஏதோ.. ஒரு காரணம் என் உயிரை காப்பாத்தி இருக்கு. அதுக்கு தான் இந்த தேங்க்ஸ்”.

“அப்பறம், சின்ன அட்வைஸ்… “உடம்புல வலு இருக்குனு தலை கணத்துல ஆடுற…! சூழ்நிலை மாறும் போது உன் தலை துண்டிக்கப்படும் மறந்துடாத..!, நான் இங்க இருந்து பஸ்ல போட்டுவேன். ஏழு நாளுக்கு அப்பறம்… நீ தோற்றா என்னை தேடி இதே பஸ்டாப் வா. நான் தோற்றா நான் வரேன்..” என்ற சாந்தவி திரும்பி செல்ல,

“ஒரு நிமிஷம் மிஸ், வீர மங்கை…” என்று சாந்தவியை நக்கலாக அழைத்த ஈஸ்வரன், அவள் திரும்பி அவனை பார்த்ததும் “அல் தி பெஸ்ட்! விட்ட சவால்ல கேவலமா தோத்து… என் முன்னாடி வந்து நிக்குறதுக்கு. அப்பறம்… மிஸ், வீர மங்கை, நீ… ஒன்றை மறந்துட்ட…! வீராப்பா இறங்கி போறியே…, பஸ்ஸுக்கு காசு உன் அப்பன் குமரன் வானத்துல இருந்து போடுவானா…??!” என்று நக்கலாக கேட்டவன் “பிச்சை எடுத்து ஊர் போய் சேரு….” என்று வார்த்தையில் நஞ்சை கொட்டியவன் ஜீப்பை நொடித்து திருப்பி கொண்டு சென்று விட, முகம் கசங்க கண்ணில் நீர் தேங்க அவன் சென்ற வழியை வெறித்து பார்த்தாள். சிங்கத்திடம் இருந்து தன் குட்டியை காப்பாற்ற தன்னை ஒப்படைத்த பசுவின் நிலையில் இருந்தாள்.

தன் குடும்பத்தை பற்றி அவனுக்கு தெரியாது…! என்று நினைத்தவளுக்கு, தன் தந்தையின் பெயரும்…, அவர் இறந்து விட்டார் என்பதும் எப்படி தெரிந்தது…!! என்று யோசித்திருந்தால் ஈஸ்வரனின் செய்கைக்கான காரணம் தெரிய வந்திருக்குமோ..!! விதியின் விளையாட்டை யார் அறிவார்…!! விதித்தவனை தவிற….!

ஈஸ்வரன் சென்ற திசையை வெறித்த சாந்தவி கண்களை அழுத்த துடைத்து கொண்டவள், கோவையில் இருந்து ஊட்டி வந்து சேர்ந்தாள்.

####

சாரதா அழுது கொண்டே மிதுன் தோளில் சாய்ந்து இருக்க அவள் மனம் சாந்தவி நன்றாக இருக்கிறாளா என்று நினைத்து தவித்து கொண்டிருந்தது. மூன்று நாட்கள் ஆகி விட்டது… அவளை பார்த்து, எப்போதும் ஏதாவது பேசி கொண்டு… தன்னையே சுற்றி கொண்டிருப்பவள் இன்று இல்லாதது… வீடே… இருள் சூழ்ந்து இருப்பது போல் தோன்றியது.

அன்று சாந்தவி கடைக்கு சென்று எட்டு மணி வரை வீடு வராமல் இருக்கவும் “வாயாடி… எங்க வம்பு வளர்த்துட்டு இருக்காளோ..! கொஞ்சம் கூட பயமே இல்லை. காலையில வாங்கிக்கலாம் னு சொன்னா… கேக்குறாளா..!?” என்று சாந்தவியை திட்டி கொண்டே அவள் வருகிறாளா என்று வாசலை பார்த்து கொண்டிருந்தாள் சாரதா.

நேரம் செல்ல, செல்ல சாந்தவி வராமல் போக சாரதாவுக்கு பயம் அதிகரிக்க…, மணி ஒன்பது தாண்டவும்… அதற்கு மேல் பொருமை காக்காமல் மிதுனுக்கு அழைத்து விட்டாள். சாந்தவி மாதிரி அசட்டு தைரியம் சாரதாவிடம் கிடையாது. ஒரு முறைக்கு… இரு முறை.. யோசித்து செய்பவள். இந்த இரவு நேரத்தில் தானும் தனியாக செல்வது நல்லது இல்லை என்று உடனே மிதுனுக்கு அழைத்தாள்.

மிதுனும் அப்போது தான் வேலை முடிந்து வீட்டிற்குள் நுழைந்தவன், சாரதாவிடம் இருந்து அழைப்பு வரவும் அழைப்பை ஏற்ற “சொல்லு… சாரு” என்க, “மிதுன்… சாவியை காணும்” என்றாள் சாரதா படபடப்புடன் எங்கே சென்றாள் என்று எதையும் கூறாமல் மொட்டையாக.

“காணுமா…! இந்த நேரம் எங்க போக போறா..! பக்கத்து வீட்டுல வாயடிச்சிட்டு இருப்பா…” என்றான் மிதுன் இந்த பக்கம் ஸுவை கழட்டி கொண்டே சாதாரனமாக. “இல்லை பா.. சாய்ந்திரம் ஆறு மணிக்கு அண்ணாச்சி கடைக்கு மளிகை பொருள் வாங்க போனா, இன்னும்… வர்லை. பயமா இருக்கு… நீங்க வாங்களேன்..” என்று கூறும் போதே அவளுக்கு அழுகை வந்து விட,

சாரதாவின் பேச்சிலேயே அவள் மிகவும் பதட்டமாக இருப்பதை புரிந்து கொண்ட மிதுன் “சரி… நான் வரேன். நீ டென்ஷன் ஆகாத…, அண்ணாச்சி கடை தானே..!?, அங்க அவர்கிட்ட தான் பேசிட்டு இருப்பா… நான் கூட்டிட்டு வரேன் நீ பயப்படாம இரு…” என்று கூறி மீண்டும் ஸுவை அணிந்து கொண்டு சாந்தவியை தேடி கிளம்பி விட்டான்.

மிதுன் சாரதா அளவிற்கு பதட்டமாகவில்லை. சாந்தவி நிச்சயம் யாரிடமாவது நேரம் போவது தெரியாமல்.. பேசி கொண்டிருப்பாள். “இனிமேல்.. இப்படி இரவு நேரம் வெளியே செல்லக்கூடாது… என்று கூறி அழைத்து செல்ல வேண்டும்” என்று எண்ணி கொண்டே வந்தவன் அண்ணாச்சி கடைக்கு வந்து “சாந்தவி எங்கே..?” என்று விசாரிக்க, அவர் “சாந்தவி பொருள் வாங்கி விட்டு ஏழு மணிக்கே சென்று விட்டதாக கூற…”

“அப்போ… போனவளா!! இன்னும் வீட்டுக்கு போகலை…!” என்று நினைத்தவனுக்கு அதன் பிறகே நிலைமையின் தீவிரம் புரிய, தன் எஸ்டேட்டில் வேலை செய்யும் சிலரை வர சொல்லி… கூறி விட்டு சாந்தவி சென்ற வழியை அண்ணாச்சியிடம் கேட்டு, அந்த பாதையை ஆராய்ந்தபடி சென்றான்.

காட்டு பாதையில் இறங்கி சற்று தூரம் நடந்ததும்… சாந்தவி தவற விட்டிருந்த மீல்க் சேக் பாதி கொட்டியும், கொட்டாமலும்… இருக்க, அதை தொடர்ந்து பார்வையை செலுத்திய மிதுனுக்கு திக் என்று இருந்தது….
அருகில் இருந்த பள்ளத்தில் சிதறி கிடந்த பொருட்களையும்… அதை சுற்றி காட்டு விலங்கு குழி பறித்து வைத்திருப்பதையும் பார்த்து.

காட்டு விலங்கின் கால் தடத்தை பார்த்து திகைத்தவன் “சாந்தவி…” என்று கத்தி கொண்டே அந்த பல்லத்தில் இறங்கி தேட, சற்று நேரத்தில் அவன் அழைத்த ஆட்களும் வந்து விட, அவர்களும் மிதுனுடன் சேர்ந்து தேட என் இரவு முழுவதும் தேடி பார்த்தும் சாந்தவி கிடைக்கவில்லை.

இடையில் மிதுனுக்கு சாரதாவிடம் இருந்து அழைப்பு வந்து கொண்டே இருக்க… ஒரு நிலைக்கு மேல் அதை தவிர்க்க முடியாமல் அழைப்பை ஏற்றுவன், நிலமையை கூற… அவள் போனிலேயே உடைந்து அழ, இங்கே இவளை தேடுவதா…! அவளை தேற்றுவதா…! என தெரியாமல் முழித்த மிதுன்… பின்பு, இப்போது சாந்தவியை தேடுவது தான் முக்கியம் என்று உணர்ந்து..! சாரதாவிடன் சமாதானமாக இரண்டு வார்த்தை கூறி விட்டு போனை அனைத்து வைத்து விட்டான்.

காட்டு விலங்கு அடித்து இழுத்து சென்றிருந்தால்..! ரத்தம் அல்லது இழுத்து சென்ற தடம் அல்லது அவள் உடையின் பாகங்கள் ஏதாவது கிடைத்திருக்கும்!!. அப்படி ஏதும் இல்லை என்றதும், இது ஆள் கடத்தல் என்று புரிந்து மிதுன் போலிஸ் கம்பிளைன்ட் கொடுத்து விட, அவர்களும் வெளியே தேடி பார்த்து சாந்தவியை சார்ந்த எந்த தடையமும் கிடைக்கவில்லை. இன்னமும் தொடர்ந்து தேடி கொண்டு தான்‌ இருக்கின்றனர்.

சாரதா, சாந்தவியை நினைத்து அழுது கொண்டிருக்க… அவள் முகத்தை கையில் ஏந்திய மிதுன் “எவ்வளவு… நேரம் டா இப்படி அழுதுட்டே இருப்ப..?!, சாந்தவிக்கு எதுவும் ஆகி இருக்காது. நம்புடி… அவ குழந்தை மாதிரி… அவளை திட்ட கூட யாருக்கும் மனசு வராது…! தெரியாம ஆள் மாத்தி கடத்தி இருப்பாங்க, நீ வேணும்னா பாரேன்… அவ நல்லபடியா வந்து… “அக்கா அங்க அப்படி நடந்துது. நான் பேசியே அவங்களை ஒரு வழி பண்ணிட்டேன். அப்பறம் என்னை விட்டுட்டாங்கனு…” கதையா பேச போறா…, நீ… மிதும் இவளை பேசாம இருக்க சொல்லுங்கனு எங்கிட்ட சொல்லுவ பாரேன்…” என்று அவளை தேற்ற,

“வந்துடுவா தானேபா…!!” என்று உயிரை உருக்கும் குரலில் கேட்ட சாரதா.. “அவளை விட்டா.. எனக்கு யாரும் இல்லை..” என்று தேம்பி அழ, அவளை நெஞ்சோடு அனைத்து கொண்டு “அப்படிலாம் பேச கூடாது. சாந்தவி நல்லபடியா வந்துடுவா..” என்று சாரதாவை சமாதான படுத்திய மிதுனுக்கும் பயம் இருக்க தான் செய்தது,

ஆனால்… அவன் அதை வெளி காட்டி கொண்டால் எதிரில் இருப்பவள் இன்னும் உடைந்து போவாள் என்று மறைத்து கொண்டான். ஆள் மாற்றி கடத்தி இருந்தால் சாந்தவி இன்னேரம் வந்திருப்பாள் என்ற எண்ணத்தை மனதோடு மறைத்து கொண்டவன், சாரதாவை சமாதானம் செய்து சாப்பிட வைத்த பிறகே சென்றான்.

மிதுன் செல்லும் வரை தன் அழுகையை அடக்கி கொண்டு அமர்ந்து இருந்த சாரதா, அவன் சென்றதும் கதவடைத்து விட்டு, நேராக… சாமி அறை நோக்கி வந்தவள் “தன் தங்கை நல்லபடியாக திரும்பி வந்து விட வேண்டும்…” என்று மனம் உறுகி கடவுளை வேண்டி கொண்டாள்.

சாந்தவியின் நினையில் அழுகையில் கரைந்த சாரதாவின் உதடுகள் கடவுளை துதிக்க, எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்து இருந்தாளோ..!! கதவு தட்டப்படும் சத்தத்தில் சட்டென்று பயந்தவள் கண்களை அழுத்தமாக மூடி கொண்டாள்.

தனிமையில் பயம் மிகவும் கொடுமை. இந்த மூன்று நாட்களாக சாரதா அதை அனுபவித்தாள். இரவு நேரத்தில் காகம் கறைந்தால் கூட‌ மனம் அதிர்ந்து அடங்கும். இப்போதும் பயத்தில் கண்களை மூடி கொண்டவளுக்கு “சாரு…” என்ற சாந்தவியின் சத்தம் காதில் விழ, ஐம்புலன்களும் விழிப்படைய முகம் சந்தோசத்தில் மின்ன “சாவி…” என்று எழுந்து செல்லாமல் சத்தமாக அழைத்தாள்.

“சாரு… நான்‌ சாவி டி. கதவை திற..” என்று சாந்தவியும் கத்த, அடுத்த நொடி சாரதா ஓடி சென்று கதவை திறக்க, பாய்ந்து வந்து சாரதாவை கட்டி கொண்ட சாந்தவி வெடித்து அழுதாள். அரக்கனிடம் இருந்து தப்பித்து அம்மா மடி சேர்ந்த குழந்தை என சாரதா வை கட்டி கொண்டு சாந்தவி கதற, சாரதாவும் அவளை அனைத்து தன் தனிமையை போக்கி கொண்டாள்.

அக்கா, தங்கை, இருவரும் தங்கள் மன‌ வேதனையை அழுகையில் தீர்த்து கொள்ள, முதலில் தெளிந்த சாரதா “இனிமேல் ஆறு மணிக்கு மேல வீட்டை விட்டு வெளிய போ.., அப்பறம் பேசிக்குறேன் உன்னை” என்று திட்ட, சாந்தவி அவளை கொஞ்சி சமாதானம் செய்ய என அக்கா, தங்கச்சி இருவரின் பேச்சும் அப்படியே தொடர்ந்தது.

பேச்சு‌.. அங்கே சுற்றி, இங்கே சுற்றி.. கடைசியாக சாந்தவி எப்படி கடத்தப்பட்டாள்! என்பதில் வந்து நிற்க, ஒரு நிமிடம் திகைத்த சாந்தவி “யார்… சொன்னா உனக்கு..? என்னை கடத்தினாங்கனு…!!” என்று சாரதாவிடம் கேட்ட சாந்தவி “அன்றைக்கு பொருள் வாங்கிட்டு வரும் போது… ஒரு நாய் துரத்தி பல்லத்துல விழுந்துட்டேன். அப்போ ஒரு ஆள் வந்து என்னை காப்பாத்தி ஹாஸ்பிடல் ல சேர்த்தார். பயத்துல மயங்குன‌ நான் இன்னைக்கு காலையில தான் கண்ணு முழிச்சேன். அப்பறம் அவர் கிட்ட ஹெல்ப் கேட்டுதான் வீட்டுக்கு வந்தேன்..” என்றவள் தவறியும் தான் கடத்தப்பட்டதை கூறவில்லை.

கடத்தியதை சொல்ல நேர்ந்தால் அங்கே நடந்த அனைத்தையும் சொல்ல வேண்டும். அவள் பேசியது தெரிந்தால் சாரதா கோப படுவதோடு மிதுனிடம் கூறி சக்தி மேல் போலீஸ் கம்பிளைன்ட் கொடுத்து விட்டால்.., சாரதா வை பற்றி சக்தி அறிந்து கொள்ள நேரிடும் என்று நினைத்தவள்‌ உண்மையை மறைத்து விட்டாள்.

சாரதா கையை எடுத்து தன் கைக்குள் வைத்து பொத்தி கொண்ட சாந்தவி “நீ.. மிதுன் சாரை கல்யாணம் பண்ணிக்கோ சாரு.., நான் மாமா சார் கிட்ட பேசுறேன். சீக்கிரமா உங்க கல்யாணத்தை வைச்சிடலாம்” என்று கூற, “வேண்டாம். இந்த மூனு நாள்.. நான் தனியா தவிச்சது எனக்கு மட்டும் தான் தெரியும். உன்னையும் அப்படி தனியா தவிக்க விட மாட்டேன். உனக்கு கல்யாணம் ஆன அப்பறம் தான் என் கல்யாணம்” என்று சாரதா உறுதியாக சொல்ல…,

“நான் தனியா இருக்க போறது இல்லை. நான் வேலைக்கு போக போறேன். என்னை காப்பாத்தினவர் எனக்கு வேலை தரேன்னு சொல்லி இருக்கார்” என்று சாந்தவி கூறவும், அவளை அதிர்ந்து பார்த்த சாந்தவி “அதெல்லாம்… வேண்டாம். நான் உன்னை எங்கையும் போக விட மாட்டேன்” என்றாள் சாந்தவி கையை இருக்கி பிடித்து கொண்டு.

சாரதாவின் தவிப்பு சாந்தவிக்கும் புரிய தான் செய்தது. ஆனால்.. அவளுக்கு வேறு வழி இருக்கவில்லை. ஈஸ்வரனின் விட்ட சவாலில் ஜெயிக்கிறாளோ..! தோற்கிறாளோ…! அதற்கு முன் சாரதாவை சேப் ஆனா இடத்தில் சேர்த்து விட நினைத்தே இந்த முடிவு எடுத்தாள்.

எனவே.. “சாரு என்னை புரிஞ்சிக்க.. ப்ளீஸ்!!, நான் வரேனு சொல்லிட்டேன் அவங்க கிட்ட. கண்டிப்பா… போகனும். நாம எத்தனை நாள் இப்படியே பிரியாம இருக்க முடியும்…! நாளைக்கு நான் அங்க போய் கம்பேனி எப்படி? தங்க ஹாஸ்டல் எல்லாம் எப்படின்னு பார்க்க போகனும்…” என்றாள்.

சாரதா…, சாந்தவியை முறைக்க, அவளை அனைத்து கொண்ட சாந்தவி, அவளை சமாதானம் செய்து திருமணத்திற்கும் ஒத்து கொள்ள வைத்தாள்.

சாந்தவி இரவு முழுவதும் சாரதாவுடன் பேசி கொண்டே இருந்தாள். இனிமேல் இப்படி ஒரு நாள் அவள் நினைத்தாலும் கிடைக்காது என்று…, காலையில் மிதுனும் சாரதா மூலம்…, சாந்தவி வந்திருப்பது தெரிந்து வர, அவனிடமும், சாரதாவிடம் சொன்ன காரணத்தையே கூறி அவனிடமும் திருமணத்திற்கு சம்மதம் வாங்கி, அன்றில் இருந்து ஏழாம் நாள் அவர்கள் திருமணத்திற்கு நாள் முடிவு செய்து விட்டு, திருமணத்திற்கு முன் தினம் வந்து விடுவதாக கூறி விட்டு.., ஈஸ்வரனிடம் விட்ட சபதத்தை நிறைவேற்ற சென்றாள்.

சொன்னது போல்… சாரதாவின் திருமணத்தின் முதல் நாள் வீட்டிற்கு வந்த சாந்தவி, குளித்து விட்டு வந்து ஹாலில் அமர்ந்து டிவியில் நியூஸ் வைக்க… “பிரேக்கிங் நியூஸ்…” என்ற தலைப்பில் “மதுரையில் உள்ள பிரபல எண்ணெய் கம்பேனியான சக்தி எண்ணெய் ஆலையில்… சட்ட விரோதமான… நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, மாசு கட்டுப்பாட்டு வாரியமும்… காவல் துறையினரும் சேர்ந்து நடத்திய சோதனையின் முடிவில் சுமார்… மூன்று கிலோ வெடி மருந்தும் சில நாட்டி வெடி குண்டுகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளது”.

“இன்நிலையில் மேலும்… தொடர்ந்து சோதனை செய்ய வேண்டும் என்பதால்..! ஆலைக்கு சீல் வைக்க கூறிய மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பெயரில் ஆலைக்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட ஆலைக்கு சீல்‌ வைக்கும் முன்… ஆலையின் நிறுவனர் ‘மிஸ்டர் சக்தீஸ்வரன்’ அது தன்னை பலி வாங்க எதிரி செய்த சதி என்று ஆதாரத்துடன் நிறுபித்ததார். அவர் அளித்த ஆதாரத்தை பார்த்ததில் அவருக்கும் இதற்க்கும் சம்மந்தம் இல்லை என்று தெரிய வர, கடைசி நிமிடத்தில் சில் வைக்க கூறிய உத்தரவு ரத்தாகி ஆலை மீண்டும் இயங்க உத்தரவிட்டனர்” என்று நியுஸ் ஓட சாந்தவி அதை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.

நிழல் தொடரும்….