நெருப்பின் நிழல் அவன்! 8

eiC6JL558893-c60ffc55

அத்தியாயம்: 8

மணமகள் அறையில் சாரதா கோபத்தில் முகத்தை தூக்கி வைத்து கொண்டு அமர்ந்து இருக்க.. சாந்தவி தவறு செய்த குழந்தை அன்னை முன்பு பாவமாக மன்னிப்பு வேண்டி அமர்ந்து இருப்பது போல் அமர்ந்து இருந்தாள்.

சக்தீஸ்வரன், சாந்தவி திருமணம் முடிந்ததும் சாரதா கோபமாக அங்கிருந்து சென்று விட, உறவினர்கள் சிலரும் ஊருக்கு கிளம்புவதாக கூறினர். அவர்களை தடுத்த உமையாள் ரத்தினத்திடம் ‘பத்திரிக்கை வைத்து உறவினர்கள் அனைவரையும் அழைத்து விட்டு திருமணம் நின்று விட்டது என்று கூறுவதை விட, நாளை திருமணம் நடக்க இருந்த நேரத்தில் ரிசப்ஷன் வைத்து கொள்ளலாமா!” என்று கேட்க, ரத்தினமும் சம்மதம் கூறி அதற்கு உண்டான வேலையை பார்க்க செல்ல, ஈஸ்வரன் கோபமாக அவன் அறைக்கு சென்று விட்டான்.

சாரதாவும் முன்பே அறைக்கு சென்றிருக்க.. இப்போது ஈஸ்வரனும் அவன் அறைக்கு சென்று விட, ‘அவன் பின்னே செல்ல வேண்டுமா..!!, இல்லை சாரதாவிடம் செல்ல வேண்டுமா’ என புரியாமல் கையை பிசைந்து கொண்டு நின்றிருந்த சாந்தவியை “நீ அக்கா கூட போய் இருமா போ..” என்று உமையாள் கூற.. “விட்டால் போதும்..” என ஓடி வந்து விட்டாள்.

சாந்தவியும் அறைக்கு வந்த நேரத்தில் இருந்து சாரதாவுடன் பேசவும்.., சமாதானம் செய்யவும் முயல்கிறாள் ஆனால் சாரதா அசைந்து கொடுக்காமல் இறுக்கமாக அமர்ந்து இருந்தாள்.

நேரம் நள்ளிரவை எட்டி இருக்க ‘பசிக்குது..’ என்று சொன்னாலாவது தன்னிடம் பேசுவாளா என்று நினைத்த சாந்தவி “சாரு… ரொம்ப பசிக்குது! வாயேன்… போய் சாப்பிட்டுட்டு வருவோம்” என்று அழைக்க..

சுவர் கடிகாரத்தை ஒருமுறை திரும்பி பார்த்த சாரதா.. மீண்டும் முகத்தை திருப்பி கொள்ள.., அவளை தொடர்ந்து சாந்தவியும் பார்க்க சுவர் கடிகாரம் மணி பதினொன்று என்று காட்டியது.

“இந்த நேரத்துக்கு போனா சாப்பாடு மட்டும் இல்லை… சாப்பாடு செய்த பாத்திரம் கூட இருக்காது!, கழுவி கமத்தி இருப்பாங்க..” என்று தனக்கு தானே முணுமுணுத்து கொண்ட சாந்தவி அடுத்து என்ன செய்து சாரதாவை பேச வைக்கலாம் என யோசிக்க அவர்கள் அறை கதவு தட்டப்பட்டது.

“யார்.. இந்த நேரத்துல கதவை தட்டுறாங்க..!” என்று நினைத்து சாரதாவை திரும்பி பார்த்த சாந்தவி அவள் அமைதியாக இருக்கவும் தானே சென்று கதவை திறந்தாள்.

வெளியே மிதுன் நிற்க “வாங்க மாமா..” என்றவள் அவன் உள்ளே வர வழி விட்டு ஒதுங்கி நிற்க, சாரதாவை கண் காட்டிய மிதுன் “மேடமுக்கு இன்னும் கோபம் போகலையா!!” என்று சாந்தவியிடம் சைகையில் கேட்க, சாந்தவியும் “இல்லை..” என்று பாவமாக தலையசைக்க, “சரி இரு.. நான் பேசி பார்க்குறேன்” என்ற மிதுன் சாரதாவிடம் செல்லவும்… அவர்களுக்கு தனிமை கொடுக்க நினைத்த சாந்தவி “ஒரு வாக் போய்ட்டு வரேன்..” என இருவரிடமும் பொதுவாக கூறிவிட்டு வெளியே வந்தாள்.

மாலை நடந்த கலவரத்தில் மண்டபமே அடங்கி இருந்தது. சமையல் செய்யும் இடம் பரபரப்பாக இருக்க வேண்டும்! பாத்திரம் உருட்டும் சத்தம் மட்டும் இரவின் அமைதியில் தெளிவாக கேட்டது.

மண்டபத்தின் உள்ளே சில இடங்களில் மட்டும் லைட் எரிய.. மீதி இடம் இருளில் மூழ்கி இருந்தது. மேடையின் ஒருபக்கம் மணமகன் அறையும் மறுபக்கம் மணமகள் அறையும் இருக்க, இவர்கள் அறையின் அருகிலேயே மாடிக்கு செல்லும் படி இருக்க, இருளில் நிற்காமல் மாடிக்கு செல்ல நினைத்து படி ஏற போன சாந்தவி பின்னால் கேட்ட சொடக்கு சத்தத்தில் திரும்பி பார்த்தாள்.

ஈஸ்வரன் தான்.. மேடை முன்னால் இருந்த சேரில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து போன் நோன்டி கொண்டிருந்தான். “இவங்க இங்க என்ன பண்றாங்க..!, ஐயோ… அப்போ இவங்க தான் கூப்பிட்டதா..!?, இப்போ என்ன செய்ய..!, அவர் கிட்ட போகனுமா..! இல்லை உள்ளயே போய்டுவோமா…!” என்று நின்ற இடத்தில் நின்றே ஆராய்ச்சி செய்தவள் பின்பு ‘உள்ளே செல்வதே நல்லது..’ என்று நினைத்து அறைக்குள் செல்ல போக,

“க்கூம்..” என்ற ஈஸ்வரனின் இருமலில் சாந்தவி திரும்பி அவனை பார்க்க, அவனின் அழுத்தமான பார்வையில் சில நொடிகள் அப்படியே நின்றவள் பின்பு ‘அவனிடம் செல்வது என்றால் நான் நகர மாட்டேன்’ என்று அடம் பிடித்த கால்களை சிரமப்பட்டு நகர்த்தி ஈஸ்வரன் முன் சென்று நின்றாள்.

தன் அருகில் வந்து நின்ற சாந்தவியை புருவம் சுருக்கி பார்த்த ஈஸ்வரன் போனில் கவனமாகி விட “ஹோ.. வெளிய வந்ததுக்கு காரணம் சொல்லனுமா..!” என அவன் பார்வைக்கு அர்த்தம் உணர்ந்து கொண்டவள் “அது… மிதுன் மாமா அக்காவோட பேச வந்தாங்க! அதான்.. அவங்களுக்கு டிஸ்டர்ப்பா இருக்க வேண்டாம் னு வெளிய வந்தேன்..” என்று சற்று திணறலுடன் கூற..

“பாரேன்… உனக்கும் மூளை இருக்கு! நான் அப்படி ஒன்னு உங்கிட்ட இல்லையோனு நினைச்சேன். இப்பவாது சாரதாவுக்கு கல்யாணம் ஆகிட்டுனு உன் புத்திக்கு புரிஞ்சிதே.. அது வரைக்கும் சந்தோஷம்” என்று ஈஸ்வரன் குத்தலாக பேச, சாந்தவி கண்ணில் முணுக்கென கண்ணீர் தேங்கி நின்றது.

“அதானே…! இன்னும் வாட்டர் பால்ஸ் வர்லயேனு பார்த்தேன்.. அழுது அழுது அட்டை மாதிரி ஒட்டிக்க உனக்கு சொல்லியா தரனும்!, ஆனாலும் நீ காரிய வாதி டி. பணக்காரன் கிடைச்சதும் கப்புனு புடிச்சிக்கிட்ட, அது எப்படி வெட்கமே இல்லாம அத்தனை பேர் முன்னாடியும் இவனை தான் கட்டிப்பேன்னு சொல்ற!! அப்படியா உ*** அ****” என பல் இடுக்கில் கடித்து வார்த்தை என்னும் நஞ்சை கொட்ட, சாந்தவி துடித்து போனாள்.

சொல்லில் விஷத்தை தடவி நெஞ்சில் குத்தும் அரக்கனின் வார்த்தைகளை கேட்க முடியாமல் காதை பொத்தி கொண்ட சாந்தவி “ப்ளீஸ் இப்படி எல்லாம் பேசாதிங்க…” என்றாள் மன்றாடளாக.

ஈஸ்வரன் உதிர்த்த வார்த்தைகள் ஒவ்வொன்றும்.. இதயத்தை வெளியே எடுத்து.. அதில் லாவா பிளம்பை ஊற்றியது போல் பாவையின் மனதை ரணம் செய்தது.

அவனின் கொடும் சொற்கள் கேட்டும் சாந்தவி அங்கே இருந்து செல்லாமல் அப்படியே நிற்க, “என்னவோ நான் இல்லாததை சொன்ன‌ மாதிரி நடிக்குற, நான் தான் கேட்டேனே டி.. “இருக்க வீடு இல்லை சாரு.. என்னை விடுனு..” நீ சொன்னதை” என குரல் இறுக கூற

‘அது எல்லாம் வெறும் வெளி காரணம் மட்டுமே.. உள்ளே உன்னை பிடித்தது தான்.. உன்னை திருமணம் செய்ய காரணம்’ என நினைத்து கொண்டவள் பதில் பேசாமல் நின்றாள். ஆம்.. சாந்தவிக்கு சக்தி இவன் தான் என தெரியும் முன்பே அவனை பிடிக்கும்.

அந்த எண்ணெய் கலப்பட விசயத்தில் அவனின் அணுகுமுறை அவளை மிகவும் கவர்ந்து இருந்தது. ஈஸ்வரன் நினைத்து இருந்தால் ‘அடுத்த முறை சரியாக வரும்’ என்று முடித்து கொண்டிருக்கலாம். ஆனால் தன்னால் ஒருவர் கூட நஷ்டப்பட கூடாது என்று அவன் எடுத்த முடிவு சக மனிதனாக அவன் யார் என்று தெரியாமலேயே அவன் மீது நல் மதிப்பையும், பிடிப்பையும் தந்தது.

அந்த பிடித்தம் தான் அவனை பற்றி பேச ஆவல் கொண்டு அண்ணாச்சியிடம் வம்பு பேசுவது போல் பேசி… அவர் அவனை புகழ்வதை ரசித்தாள். ஆனால் ஈஸ்வரனின் இந்த அரக்க பிம்பம் அவளின் அன்பை அடி ஆழத்தில் கொண்டு வீழ்த்தி இருந்தது.

இப்போதும் தன் எண்ணத்தை வெளிப்படுத்தாமல், வெளிப்படுத்த தோன்றாமல் நின்ற சாந்தவி “ஏய்…” என்ற ஈஸ்வரனின் அதட்டலில் அவனை பார்க்க, “டீ குடிக்க வெளிய போறேன் வா..” என்று அதிகாரமாக கூறி விட்டு செல்ல,

“நான் வரவில்லை…” என்று கூறி மறுப்பாக தலை அசைத்த சாந்தவி அறைக்கு செல்ல போக, அவளின் மறுப்பில் அவளை முறைத்தவன் “சரி போ… உன் அக்கா, மாமா முன்னாடி.. என் பொண்டாட்டி என்கூட தனியா இருக்கனுமாம் நீங்க வேற ரூம் போங்கன்னு சொல்லுவேன். வசதி எப்படி..!” என்று நக்கலாக கேட்க,

ஆத்திரத்தில் அவன் சட்டையை பிடித்த சாந்தவி “ஏன்டா இப்படி கொல்லாம கொல்லுற…! வலிக்குது” என்றாள் கேவலுடன்.

“வலிக்கனும்…, உன் அப்பன் எங்களுக்கு தந்ததை விட அதிகம் வலிக்கனும். வலிக்கலைனா வலிக்க வைப்பேன்…” என்று ஈஸ்வரன் வன்மமாக கூற.., அவனை அதிர்ந்து பார்த்த சாந்தவிக்கு, அவனின் ‘உன் அப்பன்..’ என்ற சொல் மனதில் விழ “அப்பாவா…!! என் அப்பாவா..! அவர் உன்னை என்ன பண்ணினார்.?!” என்று கோபமாக கேட்டாள்.

“உன் கேள்விக்கு எல்லாம்.. பதில் சொல்ல முடியாது. போடி” என்று கூறிவிட்டு அவன் வெளியே செல்ல அவனின் செயலுக்கான காரணமும், தன் கேள்விக்கு பதிலும் அவனின் ‘உன் அப்பா..’ என்ற சொல்லில் இருப்பதாக மனது உந்த, ஓடி.. சென்று ஈஸ்வரனின் வழியை மறைத்து நின்ற சாந்தவி “ப்ளீஸ் சொல்லுங்க! என் அப்பா என்ன செஞ்சார்..??” என்று அவன் கைபிடித்து கெஞ்சலுடன் கேட்க,

“ஏய்… சீ..” என்ற ஈஸ்வரன் தீண்டதகாதவளை தொட்டது போல் சந்தவியை உதறி விட, அவனை அடிப்பட்ட பார்வை பார்த்த பாவையின் கண்களில் அவனின் செய்கையில் கண்ணீர் கட்டுப்பாடு இன்றி வடிந்தது.

அவள் துடிப்பை சிறு ஏளன சிரிப்புடன் பார்த்தவன் அவளை மேலும் காயம் செய்ய நினைத்து “இந்த தொட்டு பேசுற வேலையை எல்லாம் வேற எவன் கிட்டையாவது வச்சிக்க..” என்று வார்த்தை என்னும் நெருப்பை கொட்டினான்.

ஈஸ்வரனின் சொல்லில் சாந்தவிக்கும் சுல் என கோபம் தலைக்கு ஏற “நான்.. வேற யாரையும் தொடனும்னா பின்ன என் புருஷன்னு நீ ஏன் இருக்க…” என்று ஆத்திரத்தில் வெடிக்க, அடுத்த நொடி அவள் கன்னம் திபுதிபுவென எரிந்தது.

ஈஸ்வரன் தன்னை அடித்து விட்டது புரிய கையால் கன்னத்தை பற்றி கொண்டு அழுகையும், கோபமுமாக அவனை திரும்பியும் பார்க்காமல் உள்ளே செல்ல “நான் சொன்னா செய்வேன்..” என்ற ஈஸ்வரனின் எகத்தாள குரலில்.. ஒரு நிமிடம் அதிர்ந்து நின்றவள், பின்பு தன் விதியை நொந்து கொண்டு முகத்தில் வழிந்த கண்ணீருடன் அவன் பின்னே சென்றாள்.

ஈஸ்வரனின் கார் ஆள் அவரம் அற்ற ஒரு சாலையில் நின்றது. சுற்றி எங்கிலும் இருட்டு. அது புழக்கத்தில் இல்லாத சாலை போலும் வாகனங்கள் எதுவும் வரவில்லை. ஈஸ்வரன் நெற்றி சுருங்க யோசனையுடன் சாலையில் நடந்து கொண்டிருக்க சாந்தவி காரில் இருந்தபடியே இருளை வெறித்து கொண்டிருக்க, ‘அடுத்து என்ன செய்வானோ..!’ என்று பெண் மனம் பறிதவித்தது‌.

அவனை விட்டு எங்கேயாவது தூரம் ஓடி விட சொல்லி ஒரு மனம் கூற.. ‘இது உனக்கு நீயே பின்னி கொண்ட வலை. இனிமேல் இது தான் உன் விதி ஆயுள் முழுமைக்கும் அனுபவித்து தான் ஆக வேண்டும்’ என்று மறு மனம் கூற விரக்தியில் வெம்பி போய் அமர்ந்து இருந்தாள்.

இருளை வெறித்த சாந்தவியின் பார்வை வட்டத்தில் ஈஸ்வரன் தன்னை நோக்கி வருவது தெரிந்து குழப்பத்தில் நெரிந்த பாவையின் புருவங்கள் அவன் நெருங்கி வரவும் அச்சத்தில் விரிந்து கொண்டது.

அவளின் விழி பார்வையை பார்த்து கொண்டே சாந்தவியை நெருங்கிய ஈஸ்வரன் அவளை அணைத்து தன் நெஞ்சில் சாய்த்து கொண்டான். ஒரு நிமிடம் அவன் என்ன செய்கிறான் என புரியாமல் விழித்த பாவைக்கு, காளையின் ‘உ*** அ****’ என்ற சொல் நினைவு வர.. தீ சுட்டார் போல் அவனை பிடித்து தள்ளி விட்டவள் “என்னை தொடாத டா…” என்றாள் ஆத்திரமாக.

சாந்தவியின் செயலில் ஈஸ்வரனுக்கு அடங்கிய கோபம் மீண்டும் தலைக்கு ஏற “நான் தொட்டா உனக்கு எரியுதாடி..! அப்போ எரியட்டும்..” என்று அவள் முடியை பிடித்து தன் முகத்தருகே இழுத்து அவள் முகம் எங்கும் தன் இதழ் முத்திரையை பதித்தவன், அவள் திமிற திமிற அவள் இதழை தன் இதழுடன் இணைத்து இருந்தான்.

பாவையின் திமிறலை தன் வன்மையால் அடக்கிய காளை, பாவையின் இதழ் சுவைக்க, அந்த அரக்கனின் வன்மம் தாங்காமல் கன்னம் தாண்டி நெஞ்சம் நனைத்து சென்ற கண்ணீரில் பாவையின் இதழ் ரத்தமும் கலந்து சென்றது.

ஈஸ்வரனின் ஒரு கை பாவையின் முடியை பற்றியிருக்க, மறு கை அவளை தன்னுடன் இழுத்து அணைத்து நெருக்கியது. அவனின் செய்கையின் அழுத்தம் தாங்க முடியாமல் துடித்த சாந்தவி தன் ஒட்டு மொத்த பலத்தையும் கூட்டி ஈஸ்வரனை தள்ளி விட்டவள் “வேண்டாம்… சக்தி! இப்படி பண்ணாத… முத்தம் அன்பை காட்டுற அழகான மெல்லிய உணர்வு. அதை உன் செயல் ஆயுளுக்கும் உறுத்த வைக்கும். அதை என்னால தாங்கிக்க முடியாது. அதுக்கு என்னை கொண்ணுடு…” என்று கதறி விட்டாள்.

அந்த இருள் முழுவதிலும் பாவையின் அழுகை குரல் ஒளிக்க, காளையோ முகம் கோபத்தில் இறுக சலனமே இல்லாமல் அவளை பார்த்து நின்றான்.

“நீ நினைக்குற மாதிரி உங்க பணத்துக்காக உங்களை கல்யாணம் பண்ணலை. உங்களை பிடிச்சி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். உன் கோபத்துக்கு பின்னாடி இருக்க காரணம் தெரிஞ்சிக்க நினைச்சேன் தான் ஆனால் அதுக்காக மட்டும் உன்னை கல்யாணம் பண்ணலை. நீ என்னை காயப்படுத்தும் போது எல்லாம் அழுகையும்.., கோபமும்.., வருதே தவிர.. உன் மேல வெறுப்பு வரவேயில்லை! உங்களுக்கு தெரியுமா மனசுக்கு பிடிச்சவங்களோட உதாசீனம் எவ்வளவு வலிக்கும் னு!, அதுவும் காரணமே தெரியாம காயப்படும் போது… இதயத்தை வெளிய எடுத்து தரையில துடிக்க விட்டது போல வலிக்குது” என அழுகையில் கரைந்தபடி கூறியவள்

அவசரமாக எழுந்து அவன் முன்னால் வந்த சாந்தவி “என்னை ஏன் இப்படி வார்த்தையில கொல்லுறனு சொல்லு. இல்ல நான் பேசுனதுக்கு தான் எனக்கு இவ்வளவு பெரிய தண்டனைனா.. என்னை மன்னிச்சிடேன்! உன் வார்த்தை, செயல்.. இரண்டும் குடுக்குற வலியை என்னால தாங்க முடியலை சக்தி…’ என்று அவர் மார்பில் சாய்ந்து அழுது.. அவன் கொடுத்த காயத்திற்கு அவனிடமே ஆறுதல் தேடினாள்.

அவளை தன்னிடம் இருந்து விலக்கி விட்டவன் “பெத்தவங்க செஞ்ச பாவம் பிள்ளைங்களுக்கு. உன் அப்பன் செஞ்ச பாவத்துக்கு தான் நீ அனுபவிக்குற… இப்போ வலிக்குது என்னை விட்டுடுனு கெஞ்சிறியே அப்படி தான் எனக்கு ஐந்து வயசு இருக்கும் போது என்னை காப்பாத்து சக்தினு ஊமையா ஒரு உயிர் பறிதவிச்சது. ஆனால் அதோட துடிப்பு புரியாம காப்பாத்தாம விட்டுட்டேனே டி விட்டுட்டேனே…” என்று ஆக்ரோசமாக கத்தியவன் கோபத்தில் காரில் ஓங்கி குத்த, அவன் குத்திய வேகத்திற்கு காரின் முன் கண்ணாடி கீறல் விழுந்து அப்படியே உதிர்ந்து இருந்தது.

ஈஸ்வரனின் ஆக்ரோசத்தில் பயந்து தானாக பின்னே சென்ற சாந்தவி அவனின் ‘அப்பா..’ என்ற சொல்லில் மண்டபத்தில் வைத்தும் அப்பா என்று தானே சொன்னான் என்று நினைவு எழ “என் அப்பாவ உனக்கு தெரியுமா!?, அவர் என்ன செஞ்சார்..!?” என்ற சாந்தவி தன் தயக்கத்தை உதறி அவன் முன்னே செல்ல, “ஆமாடி உன் அப்பன் அந்த *** ***தான்” என்ற ஈஸ்வரன் பெற்ற பெண் கேட்க கூடாத வார்த்தைகளை கூறி குமரனை திட்ட, அவன் உதிர்த்த வார்த்தைகளை கேட்க முடியாமல் காதை பொத்தி கொண்ட சாந்தவி ஈஸ்வரனை வெறித்து பார்த்தாள்

குமரனை திட்டிய ஈஸ்வரனின் முகம் செந்தனலாக சிவந்து இருக்க, கண்கள் ரத்த நரம்பு ஓடி.., பார்க்கவே பயம் கொள்ள வைக்க சாந்தவியின் உதடுகள் தன்னை அறியாமலேயே கடவுள் நாமத்தை உச்சரித்தது.

“உன் அப்பன் அந்த நாய் துரோகி டி. வளர்த்த கிடா நெஞ்சில் பாயும்.. ஆனா உன் அப்பன் முதுகுல பாஞ்ச பச்சை துரோகி, அந்த பரதேசிய என் கையாலையே கொல்லனும் னு நினைச்சேன்! ஆனா அந்த **** என் கண்ணுல படாமையே செத்து தொலைச்சிட்டான்” என்றான் கோபமும் ஆத்திரமுமாக.

ஈஸ்வரன் தகாத வார்த்தையால் குமரனை பேசுவது சாந்தவிக்கு கோபத்தை கொடுத்தது. அவர்கள் வீட்டுல் அவள் அம்மா தான் கண்டிப்பு குமரன் தட்டி கொடுத்து செல்பவர். சாரதா, சாந்தவி இருவருக்கும் விபரம் தெரிந்து அவர் திட்டியதோ, கடுமை காட்டியதோ கிடையாது. அப்படி பட்டவர் மற்றவருக்கு துரோகம் செய்திருக்க வாய்ப்பு இல்லை.. என்று நினைத்த சாந்தவி “நீங்க தப்பா புரிஞ்சி வச்சிருக்கிங்கனு நினைக்குறேன்..! என் அப்பா அப்படி பட்டவர் கிடையாது..” என்று கூற,

“என்ன ரத்தம் துடிக்குதோ…” என்று எள்ளலாக கேட்க ஈஸ்வரன் “இந்த உலகத்துல யாரை வேணாலும் மறந்துடுவேன் டி. ஆனா.. உன் அப்பன் மூஞ்சை மறக்க மாட்டேன். அந்த முகம் முள் டி…, தினமும் என் நெஞ்சில குத்தி ரத்தம் வர வைக்குற முகம். நீ இப்போ எங்கிட்ட இவ்வளவு பட காரணம் என்ன தெரியுமா..! நீ உன் அப்பன் ஜாடையில் இருக்குறது தான்…” என்றவன்

சட்டையின் முதல் மூன்று பட்டன் தெறித்து விழும் படி கோபத்தில் இழுத்து திறந்தவன் “இதுவும் உன் அப்பனால தான்…” என்று தன் நெஞ்சின் காயத்தை காட்டினான்.

அவன் வெற்று உடலை பார்க்க கூசிய சாந்தவி பார்வையை திருப்பி கொள்ள அவள் தாடையை அழுத்த பற்றி அவள் முகத்தை நிமிர்த்தியவன் “பாரு டி..” என்று உறும, சாந்தவி தயக்கத்துடனே மெல்ல அவனை பார்த்தாள்.

ஈஸ்வரனின் இடது மார்பின் அடியின் இருந்து வலது பக்கமாக நடு இதயம் வரை பெரிய வெட்டு காயம். அதன் தழும்பே காயத்தின் அளவை கூற.. குறைந்தது பதினைந்து தையலாவது போட்டிருக்க வேண்டும் என புரிய, கைகள் நடுங்க அதை தடவியவள் “எப்படி…” என்றாள் இதழ் நடுங்க அவனை பார்த்து.

ஈஸ்வரன் கூறியதை பார்க்கும் போது அவன் சொல்வது பொய் இல்லை என்று புரிந்த போதும்.. அவள் தந்தை அப்படி செய்திருப்பார் என்றும் நம்ப முடியாமல் தவித்தாள். ஈஸ்வரன் நடந்ததை முழுதாக கூறாமல் பழி, பகை, துரோகி, என துண்டு துண்டாக சொல்வது ஒன்றும் புரியாமல் தலை வலியை கொடுக்க “அப்படி என்ன நடந்தது சொல்லுங்களேன்…” என்று சாந்தவி கொஞ்சலாக கேட்க, அவன் எவ்வளவு திட்டியும்.., காயப்படுத்தியும் தன் மேல் வெறுப்பு வரவில்லை என தன் காயத்தை பார்த்து துடித்த தன்னவளை வெறித்தது ஈஸ்வரனின் பார்வை.

நிழல் தொடரும்…