நெருப்பின் நிழல் அவன்! 9 (ஆ)

அத்தியாயம்: 9

மலர் கர்பமாக இருக்கும் விசயம் தெரிந்து பதறிய உமையாள் துரை மற்றும் ரத்தினத்திடம் விசயத்தை கூற முதலில் நம்பாமல் உமையாளை திட்டியவர்கள்.. உண்மையை அறிந்த பிறகு உடைந்து போயினர். இத்தனை நாள் சுய அலசலில் ‘சுய நினைவு இல்லாமல் இருந்தாலும் குமரனை அன்றி தன்னை யாரும் தொட்டிருக்க முடியாது..’ என்று மலர் புரிந்து இருந்தாள்.

ஆனால் “குழந்தைக்கு தந்தை யார்..?” என உமையாள் எவ்வளவு கேட்டும் சொல்ல மறுத்து விட்டாள். தன் தந்தை போய் கேட்டால் அவரையும் “உன் மகள் எவனிடம் பிள்ளை வாங்கி வந்தாளோ..” என்று அவரையும் அசிங்கப்படுத்துவான் என்று உண்மையை கூறாமல் தனக்குள்ளாகவே புதைத்து விட்டாள்.

குமரன் வீட்டிற்கு வராமல் இருப்பது சமீப காலமாக அவனின் செயல்.., மலரின் நிலமை இரண்டையும் கணக்கிட்ட துரைக்கு ஒன்றும் ஒன்றும் இரண்டு என புரிந்து போனது. தன் மகளுக்காக குமரனை தேடி சென்ற அவரை பூட்டிய வீடுதான் வரவேற்றது. அதன் பிறகே அவன் வீட்டை விட்டு மட்டும் அல்ல ஊரை விட்டும் சென்றது தெரிந்து திரும்பி வந்துவிட்டார்.

“வேண்டாம்..” என ஓடியவனை மகளுக்கு கட்டி வைக்க பிடிக்கவில்லை. செல்வம் போல் பாதுகாத்த தன் மகளை மற்றவர் முன் அவமானப்பட விட பெற்ற மனம் இடம் தரவில்லை. காலங்கள் எவ்வளவோ அட்வான்ஸாக மாறி இருக்க இந்த குழந்தையை கலைத்து விட்டு மகளுக்கு மறுமணம்( திருமணம்) செய்ய முடிவெடுத்தார்.

நாம் முடிவு எடுத்தால் போதுமா..! கடவுள் எடுக்க வேண்டுமே!!. இந்த உலகத்தில் அடி எடுத்து வைப்பவர் யார் என்ற தீர்ப்பு அவரிடம் அல்லா உள்ளது அதை மனிதன் மாற்றி விட முடியுமா..!!. குழந்தையை கலைக்க மருத்துவமனை செல்ல ஐந்து மாதம் நிறைவடைந்து விட்டதால் முடியாது என்று மருத்துவர் கை விரித்து விட்டார். தந்தை பேச்சை மீறி பழக்கம் இல்லாதம் மலர் துரையின் அத்தனை செயலுக்கும் கட்டுப்பட்டாள்.

மலர் நிலையை எண்ணி துடித்த ரத்தினம் குழந்தையை தான் வளர்த்து கொள்வதாகவும், குழந்தை பிறந்த பிறகு மலருக்கு திருமணம் செய்யலாம் என்று துரையிடம் கூறியவர் உமையாளிடம் சம்மதம் கேட்டார்.

உமையாளும் சம்மதித்து விட பெரியவர்களின் மன சுமையில் விளையாட ஆள் இல்லாமல் அம்மா சேலையை பிடித்து சுற்றி வந்த சக்திக்கு.., மலரின் வயிற்றில் இருப்பது ஆணா! பெண்ணா! என தெரியாமலேயே சக்தியிடம் ” அவனுக்கு குட்டி பாப்பா வர போகிறாள். அது அவன் குட்டி தங்கை” என தெரிவிக்கப்பட்டது.

இதில் குமரன் நினைத்தது தான் நடக்கவில்லை. மலரின் விசயம் கடுகு அளவும் வெளியே வராமல் துரையும், ரத்தினமும் பார்த்து கொண்டனர். ஆனால் துரை மகளை நினைத்து கவலையில் அரசியலை விட்டு விலகி கொண்டார்.

சக்தியிடம் குழந்தையை காட்டிய பிறகு அதுவரை உமையாள் பின்னால் சுற்றியவன் மலரின் பின்னால் சுற்ற தொடங்கினான். சக்தியின் அதிகபட்ச பேச்சு “பாப்பா எப்போ வரும்??, வந்ததும் என்னோட விளையாடுமா?!” என்று குழந்தையை பற்றியே இருந்தது. அவனுக்கு எது வாங்கினாலும் “என் பாபாக்கு..” என பிறக்காத அவன் பாப்பாக்கும் சேர்த்து வாங்குவான். சாப்பிடும் போதும் “பாபா சோறு சாப்பிடு..” என குழந்தைக்கு என‌ மலருக்கு கொடுத்து சாப்பிடுவான். தன் பிள்ளைகாக என சக்தி ஊட்டும் ஒரு வாய் சாப்பாட்டில் மலரின் மனம் நிறைந்து போகும்.

குழந்தையின் அசைவை கூட வீட்டில் மற்றவரிடம் சொல்லி சந்தோஷப்பட முடியாமல் துடித்த மலரும் கள்ளம் அறியா பிள்ளையிடம் பகிர்ந்து கொண்டாள். “சக்தி.. பாப்பா அசையுறா பாரு! உன்னை தான் கூப்பிடுறா..!, பாப்பாக்கு முத்தம் கொடு..” என்று குழந்தையின் சிறு அசைவையும் சக்திக்கு கூறி, அவன் உணர்வை பிள்ளைக்கு உணர்த்தினாள்.

குழந்தைக்கு காரணமானவன் உறவு இல்லை என்றாலும் தன் பிள்ளை என்ற பாசம் மலரும் அதிகமாகவே இருந்தது. குழந்தை வரவை சக்தியும், மலரும் ஆவலுடனே எதிர் பார்த்தனர். நாட்கள் அதன் பாட்டிற்கு கடந்து செல்ல, பத்து மாதம் நிறைவடைந்த நிலையில் மலருக்கு பிரசவ வலி வர.. இரவோடு இரவாக யாரும் அறியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

பத்து மணி நேர பிரசவ வலிக்கு பிறகு சுக பிரசவத்தில் மண்ணுலகில் தன் வருகையை பதிவு செய்தாள் மலரின் மகள் சாரதா. வீட்டில் அனைவருக்கும் சிறு நிம்மதி பெண் குழந்தை பிறந்ததில். ரத்தினமும், உமையாளும் குழந்தையை தங்கள் பிள்ளையான கண்ணில் நிறைத்து கொண்டனர். சக்தியோ ‘தனக்கு விளையாட பாப்பா வந்து விட்டது..’ என்றும் ‘அவள் அவன் பாப்பா…’ என்றும் கூறி மகிழ்ந்தான்.

“தாத்தா விளையாட பாபா வந்துட்டா.., அப்பா… பாபா எனக்கு தான்!!, அம்மா.. நீ பாபாவ எடுக்க கூடாது…. நான் மட்டும் தான் எடுப்பேன்..” என‌ சந்தோஷத்தில் குதித்தான். அனைவரிடம் தன் குட்டி தங்கையை காட்டியவன் யாரையும் தொட விடாமல் பார்த்து கொண்டான். மலர் கண்விழித்த பிறகு மகளையும் பேத்தியையும் பார்த்து… அவர்கள் நலம் தெரிந்து கொண்டு துரை வீட்டிற்கு சென்றுவிட்டார்.

மலருக்கு தேவையாக உடை மற்றும் மருத்துவ கால உணவு சமைக்க என்று உமையாள், ரத்தினம் இருவரும் செவிலியிரிடம் மலரை பார்த்து கொள்ள கூறிவிட்டு வீட்டிற்கு செல்ல சக்தியை அழைக்க அவன் குழந்தையை விட்டு நகர மாட்டேன் என்று விட்டான்.

மலரும் விழித்து இருக்கவே.. அவளை சக்தியை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு சென்றனர். முதலில் துரையும் அடுத்து ரத்தினம், உமையாள் இருவரும் செல்வதை அங்கு வார்ட் பாயாக வேலை செய்த குமரன் பார்த்து தெரிந்தவரிடம் விசாரிக்க மலருக்கு குழந்தை பிறந்தது தெரிந்து உடனே பார்க்க வந்தான்.

பழி வாங்க என்றாலும் குழந்தையை மலரிடம் விடும் எண்ணம் முன்பே குமரனுக்கு இல்லை. இப்போது குழந்தை பிறந்தது தெரியவும் சந்தோஷபட்டவன் தன் மகளை பார்க்க ரத்தம் துடித்தது. அப்போதும் மலர் மேல் துளி பாசம் வரவில்லை. அவனுக்கு தேவை அவன் பிள்ளை மட்டுமே. யார் கண்ணிலும் படாமல் மலர் இருந்த அறைக்கு வந்தவன் அவளை நலம் விசாரிக்க கூட செய்யாமல் பிள்ளை வேண்டும் என்று கேட்டான். “எவனுக்கோ.. பிறந்த குழந்தையை நீ ஏன் கேக்குற?” என்று மலர் தன் இத்தனை நாள் கோபத்தையும் கொட்ட .

“அது என் பிள்ளை! எனக்கு வேணும்!” என்று குமரன் கூற, “நீ தான் ஆண்பிள்ளை இல்லயே பின்ன எப்படி உனக்கு பிள்ளை பிறக்கும்..” என்றாள் மலரும் விடாமல். அன்று தன்னை அசிங்கப்படுத்திவிட்டு இன்றும் தன்னை மனிதாபிமானத்தில் கூட நலம் விசாரிக்காமல் பிள்ளை வேண்டும் என்று கேட்பவனின் மேல் கோபத்தில்.

மலரின் வார்த்தை குமரனை தாங்க பச்சை உடம்புகாரி என்றும் பாராமல் அவளை அடித்து இருந்தான். அவன் அடித்த கோபத்தில் மலர் குமரனை பேச குமரனும் துரையின் செயல் அதனால் அவன் அவளை இந்த நிலைக்கு ஆளாக்கியது அனைத்தையும் கூற… ஆத்திரத்தில் மலர் பேச என இருவருக்கும் வாய் சண்டை முற்றியது.

குமரனின் பேச்சு மனதில் பதிந்தாலும் அர்த்தம் புரியாமல் பார்த்து நின்றான் சக்தி. இருவரும் வாய் சண்டையிட அவர்கள் பேசி கொண்டிருப்பதாக நினைத்த சக்தி குழந்தையிடம் கவனமாகி விட்டான்.

குமரன் குழந்தையை கொடுக்க சொல்ல மலர் முடியாது என்க இருவருக்கும் சண்டை பெரிதாக…, மலரை கொல்லும் ஆத்திரத்தில் தலையணையை எடுத்து மலர் முகத்தில் அழுத்தினான் குமரன்.

மலர் மூச்சிக்கு போராடி சக்தியை நோக்கி கை அசைக்க.., அவள் கூப்பிடுவதாக நினைத்து அருகில் வந்த சக்தி.. மலர் கையை பிடித்து கொண்டு “மாமா.. மலர்மா கூப்பிடுதா.. தலவானி எடு..” என்று குமரனிடம் கூறி அவனும் தலையணையை இழுக்க குமரனின் வலிமை முன்னால் நான்கு வயது சிறுவனான சக்தியால் தலையணையை நகர்த்த முடியாமல் போக, ஒரு பக்கமாக அதை தூக்கிய சக்தி குனிந்து மலர் முகம் பார்க்க மலரின் துடிப்பு நின்று உயிர் பிரிந்து இருந்தது.

குமரனும் அவள் உயிர் பிரிந்ததை புரிந்து தலையணையை இருந்த மாதிரியே வைத்து விட்டு குழந்தையை தூக்க சென்றான். அதன் பிறகே.. மலரின் முகம் பார்த்த சக்தி அவள் கண்கள் மூடி இருப்பதை பார்த்து “மலர்மா தூங்கிட்டா! ஏன் கூப்பிட்டா தெரியலை.! போ.. மாமா நீ பேட்” என்று விட்டு குழந்தையிடம் வரவும், குமரன் குழந்தையை தூக்குவதை பார்த்தவன் “மாமா பாபா தூக்காத… என் பாபா நான் மட்டும் தான் தூக்குவேன்…” என்றான் கோபமாக.

சக்தியின் பேச்சை காதில் வாங்காத குமரன் குழந்தையை தூக்க “மாமா அது என் பாபா தொடாத..” என்று குமரனை குழந்தையை எடுக்க விடாமல் தடுத்தவன் அழுகைக்கு தாயார் ஆனான்.

சக்தி “என் பாப்பா எடுக்க கூடாது..” என்றவன் குமரன் குழந்தையை தூக்கி கொண்டு வெளியே செல்லவும், “என் பாபா எடுக்காத… தா… நீ எடுக்காத..” என்று கத்தி அழுதவன் கோபத்தில் குமரனை அடிக்க, அதில் அவன் அழுது காட்டிக்கொடுத்து விடுவான் என்று பயந்த குமரன் கோபத்தில் சக்தியை தள்ளி விட்டு… விட்டு குழந்தையை தூக்கி சென்று விட்டான்.

நிழல் தொடரும்…