நேச தொற்று -10a

“ஆதி அங்கிள் போர் அடிக்குது. ஏதாவது விளையாடலாமா?”

“என்ன விளையாட்டு விளையாடலாம் நிவி” என்று அவன் கேட்டுக் கொண்டு இருந்த நேரம் தர்ஷி உள்ளே நுழைந்தாள். அவள் பின்னாலேயே ஆதவ்வும் நுழைந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்துக் கொண்டனர்.

“ஏன்டா எப்பவும் நான் வர நேரத்துக்கு வர டபரா வாயா?”

“யாரு டி டபார வாயா?”

“நீ தான். இதுல டவுட் வேறயா உனக்கு?”

“அடிங்க நீ தான் டி அண்டா வாய்.”

“நீ குடம் மூக்கன்டா”

“நீ டெவுசா கன்னம் டி.”

“நீ ஜல்லிக்கரண்டி கையன் டா”

“நீ பூரிக்கட்டை கால் டி.”

“ஹே பியூட்டி. கடாய் மிஸ் பண்ணிட்ட பாரு. கடாய் கண்ணா? எப்படி இருக்கு இந்த பேரு” என ஆதி எடுத்துக் கொடுக்க

“வேற லெவல் ஹேண்ட்ஸம் செமயா இருக்கு. சூப்பர்” என்றாள் தர்ஷி கைத்தட்டியபடி.

“என்ன ஆதி. நீங்க தர்ஷியோட சைட்டா, அப்போ எனக்கு துணைக்கு யாருமே இல்லையா? என்று ஆதவ் பரிதாபமாக கேட்க ஆரு அவன் அருகில் வந்து நின்றாள்.

“நான் உங்க பக்கம் தான் ஆதவ்” என்று ஆரு ஆதரவாக வந்து நின்றாள். 

ஆதியோ நக்கலாக “எத்தனையாவது பக்கம் ” என்று கேட்டான்.

“சத்தியாமா சிரிப்பு வரல ஆதி.”

“நீ சிரிக்கவே வேணாம் ஆரு.”

“செம செம ஹேண்ட்ஸம் அப்படி தான் பஞ்ச் டயலாக் பேசி நம்ம எதிரி டீம்மை நாக் அவுட் பண்ணனும்”

“என்ன மிஸ்டர் ஆதி. கொஞ்ச நாளா அடிவாங்கததால குளிர்விட்டுப் போச்சா?”

“இல்லை ஆரு ஏசி போடாம இருக்கிறதாலே தான் குளிர் விட்டு போச்சு. ” என்று அவன் சொல்ல தர்ஷி அவனுக்கு ஹைஃபை கொடுத்தாள்.

அவர்களது இரு அணிகளுக்கும் இடையில் வந்து தர்ஷியும் அபியும் வந்து நின்றனர்.

“ஆதி அங்கிள், நான் தானே விளையாடலாமானு கேட்டேன். ஆனால் நீங்க எங்களை விட்டு விளையாடிட்டுறீங்க. இது நியாயமே இல்லை. எங்களையும் ஆட்டத்துலே சேர்த்துக்கோங்க” என்றாள் உதட்டைப் பிதுக்கி வைத்தபடி. 

“என்னது இங்கே உயிரை கொடுத்து வாய் சண்டை போட்டுக்கிட்டு இருக்கோம். இது உனக்கு பார்த்தா விளையாடுறா மாதிரி தெரியுதா நிவி? சரி சரி விடு. நீ எந்த டீம் ஓட சேர போற? வின்னிங் டீம்லயா இல்லை தோத்தாங்கோலி டீம்லயா?”

“நான் எப்பவும் ஆதி அங்கிள் டீம் தான்.” என்று சொல்லி அவன் பக்கத்தில் வந்து நின்றவள்,

“டேய் அபி. பாரு எதிர் டீம்ல ஆளு குறையுது. நீ அங்கே போய் சேர்த்துக்கோடா.” என்று நிவி சொல்ல இப்போது இரண்டு டீம்மும் சரிக்கு சரியாய் நின்று மோதிக் கொள்ள தயாரானது.

“அங்கிள் நாம முன்னாடி கிச்சன் ஐட்டமை எல்லாம் சொல்லி முடிச்சுட்டோம். இப்போ நாம வேற ஏதாவது டாப்பிக் சொல்லி திட்டலாம்.”

“இது நல்ல ஐடியா நிவி மா. இப்போ நாம வீட்டுல யூஸ் பண்ற பொருட்கள் பேருலாம் சொல்லி திட்டலாம். முதலிலே அந்த எதிர் டீம் ஆரம்பிக்கட்டும்.”

“ஓகே ஆதி அங்கிள். அப்படியே ஆகட்டும்… டும்…டும்… ”

” ஒரு டும் போதும் நிவி மா. இல்லாட்டி இப்பவே ஸ்டார்ட்டிங்க்ல எனர்ஜி வேஸ்ட் ஆக்கிடுவோம். அப்புறம் திட்ட எனர்ஜி பத்தாம நாம டயர்ட் ஆகிடுவோம். ”

“ஓகே அங்கிள். இப்பவே energy conservatiion mode க்கு போறேன்.”

“குட் கேர்ள் நிவி மா நீ.” என்று நிவியிடம் சொல்லிவிட்டு ஆருவின் பக்கம் திரும்பியவன, “ஆரு உங்க டீம் முதலிலே  ஆரம்பிக்கட்டும். டும்… டும்…டும்” என்றான்.

” அங்கிள் எனர்ஜி எனர்ஜி.” என்று நிவி அவன் சொன்னதையே திரும்பி சொல்ல ஆமாம் ஆமாம் என்று சொன்னவன் warm up செய்தபடி நின்று கொண்டு இருந்தான்.

முதலில் ஆரு ஆரம்பித்த ஆரு எடுத்தவுடனே சிக்ஸர் அடித்தாள்.

ஆரு : ” போடா கபோர்ட் கபாளி”

ஆதி : ” நீ ஷோக்கேஸ் ஷோபனா டி”

ஆதவ் : ” நீ ஓடாத கடிகாரம் டி”

தர்ஷி : ” நீ வாஷ் பண்ணாத வாஷிங் மெஷின் டா”

ஆரு: ” நீ எரியாத அடுப்பு டா”

ஆதி :  ” நீ விசில் வராத குக்கர் டி ”

ஆதவ் : ” நீ உடைஞ்ச சேர் டி.”

நிவி : ” நீங்க உடையாத முறுக்கு அங்கிள்”

ஆரு : ” நீ கடையாத தயிர் டா”

நிவி : “நீங்க புளிச்ச மோர் அக்கா” என்று இருவர் பக்கமும் போட்டி பலமாக போக இருவரும் விட்டுக் கொடுக்காமல் போட்டி போட்டு பேச கடைசியில் இரண்டு அணிகளுடைய சக்தியும் சர்ரென்று இறங்கிப் போனது.

நின்று இருந்தவர்கள் முதலில் உட்கார்ந்து பின்பு படுத்து இருந்தனர். பேசும் தெம்பு ஒருவர் இடத்தில் கூட இல்லை.

கடைசியாக நிவி தான் ” எருமை மாடு மண்டையா” என்று சொல்லி தெம்பு இல்லாமல் படுத்துவிட்டாள்.

ஆருவுக்கோ ஆதவ்வுக்கோ பேச நாவே எழவில்லை.

சக்தி எல்லாம் வற்றிப் போய் தோல்வியை ஒத்துக் கொள்ள முயன்ற நேரத்தில் எதிர்பார்க்காத ஒரு குரல் ஒலிக்க எல்லோரும் அதிர்ச்சியாய் நிமிர்ந்துப் பார்த்தனர்.

“பன்னி மூஞ்சு வாயா” என்று அபி சொல்லி இருக்க ஆதி டீம்மோ படுத்தேவிட போட்டியின் இறுதியில் ஆருவின் அணி அபியால் வெற்றிப் பெற்றுவிட்டது.

தரையில் கவிழ்ந்து கிடந்தவர்களை பதற்றமாய் நிற்க வைத்தது அங்கே கேட்ட ஆம்புலன்ஸின் ஒலி.

“யாருக்கு என்ன ஆச்சு?” என்று ஆரு பதறியபடி பால்கனி பக்கம் வந்து  நின்றாள்.

அவளின் பின்னாலேயே  மற்ற ஐவரும் வந்து நிற்க அங்கே மைக்கில் ஒருவர் சொன்ன செய்தியைக் கேட்டு அறுவரும் அப்படியே செயலிழந்து போய் நின்றனர்.