நேச தொற்று-7a

“ஹாய் ஆரு “

“ஹலோ ஆதவ்”

“நான் உள்ளே வரலாமா?” என்றவன் கேட்க அப்போது தான் வழியை மறித்து நின்று கொண்டு இருப்பதை உணர்ந்து வழியை விட்டு விலகி நின்றாள். உள்ளே வந்தவன் சோபாவில் சென்று அமர்ந்துவிட்டு அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

“தேங்க் யூ சோ மச் ஆரு. அபியும் நிவியும் சாப்பாடு கொண்டு வந்து தந்தாங்க…  உண்மையா செம டேஸ்டா இருந்தது. தேங்க்ஸ் எ லாட்” என்றான் மனதார.

“ஐயோ! ஏன் இத்தனை தேங்க்ஸ்? பரவாயில்லைங்க. நோ ப்ராப்ளம். ” என்றவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே கதவைத் திறந்து கொண்டு அபியும் நிவியும் உள்ளே வந்தனர்.

“ஹாய் ஆதவ் அங்கிள். ” என்றாள் நிவி ஆதியின் மடி மேல் ஏறி உட்கார்ந்தபடி.

“ஹாய் நிவி மா.” என்று ஆதவ் சொல்ல நிவி அவன் தலையை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“ஆதவ் அங்கிள் உங்க கிட்டே ஒன்னு கேட்கணும்” என்றாள்.

“கேளுங்க நிவி”

“இல்லை உங்க hair style பார்க்கும் போது அப்படியே பஞ்சு மிட்டாயை கவுத்து தலையிலே வெச்சா மாதிரி இருக்கு. எப்படி அங்கிள் இப்படி பஞ்சு மிட்டாய் தலையை வளர்த்தீங்க. டிப்ஸ் சொன்னா என் தம்பி தலையையும் அதே மாதிரி ஸ்டைலா குருவி கூடு மாதிரி ஆக்கிடுவேன். ” என்றவள் யோசனையாய் கேட்க ஆதவ் பெரியதாய் சிரித்தான்.

“கண்டிப்பா நிவி மா. உன் தம்பி பெரிய பையனா ஆகட்டும். நானே அவனுக்கு இந்த ஹேர் ஸ்டைல் பண்ணி விடுறேன். நான் ஹேர் ஸ்டைலிஸ்ட் தான். இதே மாதிரி ஒரு குருவிக்கூடு தலையை உன் தம்பிக்கும் செட் பண்ணிடலாம்.”

“சூப்பர் ஆதவ் அங்கிள். அப்போ எனக்கும் ஹேர் ஸ்டைல் பண்ணிவிடுங்க “

“கண்டிப்பா பண்ணிடலாம் நிவி மா.” என சொல்ல ஆதி மடியில் இருந்து ஆதவ் மடிக்கு தாவினாள்.

“அங்கிள் இந்த மண்டையிலே ஒரு குருவி கூடவா முட்டை பொறிக்கல. இது ரியல் முடியா? இல்லை விக்கா? “என கேட்டபடியே அவன் தலைமுடியை இழுத்துப் பார்த்த நேரம் கதவைத் திறந்து கொண்டு தர்ஷி உள்ளே வந்தாள்.

“ஓய் நிவி மா…  ரொம்ப இழுக்காதே. கையோட வந்துட போகுது. ” என்று சொல்லிக் கொண்டே சோபாவில் அமர்ந்தாள் தர்ஷி.

“நானும் அதை செக் பண்ண தான் இழுத்து பார்த்தேன் தர்ஷி அக்கா. டோன்ட் வொர்ரி ஒரிஜினல் தான்”

“அடிப்பாவிங்களா இது உண்மையாவே நிஜ முடி தான். எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தேன் தெரியுமா?”

“இப்படி முடி வளர்க்கிறதுக்கு பதிலா செடி வளர்த்து இருந்தா நாடாவது செழிச்சு இருக்கும். இந்த முடியால நோ யூஸ் மிஸ்டர் ஆதவ்”

“தர்ஷி உங்க முடி அப்போ ஏன் உங்க இடுப்புக்கு கீழே இருக்கு? அப்புறம் நீங்க எத்தனை செடி நட்டு வெச்சீங்கனு தெரிஞ்சுக்கலாமா?” என்றான் பதிலுக்கு மடக்கியபடி.

“அச்சோ க்ரேட் இன்சல்ட் தர்ஷி அக்கா… ” என்று நிவி தர்ஷியின் காதுகளை கடிக்க அவள் ஆதவ்வை பார்த்து முறைத்தாள்.

அவனும் பதிலுக்கு கோபமாய் முறைத்தான்.

ஆதியும் ஆருவும் இவர்களை மாறி மாறிப் பார்த்தனர்.

“ஆரு எனக்கு என்னவோ இவங்க ரெண்டு பேரும் பார்க்கிற தீப்பார்வையிலே வீடு பத்தி எறிய போகுதுனு நினைக்கிறேன். நீ வீட்டுக்கு ஏதாவது insurance போட்டு இருக்கியா?” என கேட்க அவள் அவனை தீப்பார்வை பார்த்தாள்.

“அம்மா பரதேவதை ஏற்கனவே இருக்கிற அந்த fire look பத்தாதுனு நீ வேற fire look கொடுக்காதே போதும் போதும். ” என சொல்ல முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டாள்.

“இங்கே என்ன நடக்குது ஏன் எல்லோரும் இப்படி முறைச்சுக்கிட்டு நிக்கிறீங்க “என்று நிவி கேட்க,

எல்லோரும் சேர்ந்து  “அது என்னன்னா” என்று ஒரே சமயத்தில் கத்தினர்.

அந்த சமயம் பார்த்து ஆருவிற்கு போன் வர எல்லோரையும் அமைதியாய் இருக்க சொல்லி செய்கை செய்தாள்.

அனைவரது உதடுகளும் கப்சிப் என்று மூடிக் கொண்டது.

“சொல்லுங்க சார். ஓ சரிங்க சார். கண்டிப்பா இன்னைக்கு அந்த issue  ஆ முடிச்சுடுறேன். எவ்வளவு நேரமானாலும் முடிச்சுடுறேன். i assured.” என்று சொல்லி போனை வைத்தவளது முகத்திலோ பல யோசனை கோடுகள்.

“என்ன ஆச்சு ஆரு மா? ஏன் டென்ஷனா இருக்கே?”

“அது வந்து தர்ஷி… production ல ஒரு issue பெருசா வெடிச்சுடுச்சு. இன்னைக்குள்ளே முடிக்க சொல்லி சொல்லிட்டாங்க. பட் அந்த issue பெருசு. அதான் என்ன பண்றதுனு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கேன். இன்னும் மதியத்துக்கு எதுவும் சமைக்கவே இல்லை. காலையிலே ஒரு வேளைக்கு மட்டும் தான் சமைச்சேன். ” என்றாள் அவளைப் பார்த்து கவலை நிறைந்த குரலில்.

“இவ்வளவு தான் விஷயமா. நீங்க உங்க வேலையை பாருங்க. நான் தர்ஷி ஆதி எல்லாம் சேர்ந்து சாப்பாடு ரெடி பண்றோம். எந்த கவலையும் இல்லாம நீங்க வேலையைப் பாருங்க ஆரு ” என்று  ஆதவ் சொல்லிவிட்டு தர்ஷியிடம் திரும்பி,

“உனக்கு ஓகே தானே?” என்று கேட்டான்..

அவள் சரியென்று தலையாட்ட அடுத்து ஆதியிடம் கேட்பதற்காக திரும்பினான்.

ஆனால் அவன் அங்கு இல்லை!

எங்கு சென்றான் இவன் என்று யோசித்தபடியே “நிவி எங்கே ஆதி ??” என்றுக் கேட்டான்.

“ஆரு அக்காவுக்கு போன் வந்த கொஞ்ச நேரத்திலேயே அங்கிள் கிச்சன்க்குள்ளே போயிட்டாங்க. ” என்று சொல்லிய அடுத்த நொடி கையில் பாத்திரத்தோடு வெளிப்பட்டான் ஆதி.

“ஆரு அரிசி இரண்டரை ஆழாக்கு போட்டா ஓகே வா? நமக்கும் ஆதவ் வீட்டுக்கும் சரியா இருக்குமா?” என்றுக் கேட்க ஆரு பதில் பேசாமல் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“ஏன் ஆரு இப்படி என்னைப் பார்த்துட்டே நிற்குற…சொல்லு சரியா இருக்குமா?” எனக் கேட்க இப்போதும் அவளிடம் பதில் இல்லை.

“ஓ நான் ஏன் கிச்சன்க்குள்ளே  இப்போ போனேனு பார்க்குறீயா? நீ போன் எடுத்து பேசும் போதே புரிஞ்சுக்கிட்டேன் அதிகமான வேலை இருக்கும்னு. காலையிலே சாப்பாடு ஒரு வேலைக்கு தான் இருக்கிறதை பார்த்தேன். அதான் நானே இன்னைக்கு சமைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். நீ நிம்மதியா வொர்க் பாரு மா. ” என்று அவன் சொல்லிக் கொண்டே செல்ல அவனையே மெச்சுதலாகப் பார்த்தாள்.

நான் சொல்லி தான் இவனுக்கு புரிய வேண்டும் என்று இல்லை என் முகபாவனைகளை வைத்தே இவன் என்னை கண்டு கொள்கிறான்.

ஆனால் என்னை கவர்வதற்காக இவன் இதை எல்லாம் செய்யவில்லை.

அவன் இயல்பாக தான் செய்கிறான்.

அந்த இயல்பு தான் என்னை அவனிடம்  கவர்கிறேதே.

சோ ஸ்வீட் ஆதி நீ…

“ஆரு மா என்ன ஆச்சு உனக்கு?” ஏன் இப்படியே நிக்குற? எத்தனை ஆழாக்கு போடனும்னு சொல்லு… ” என்று அவன் அழுத்தி கேட்க அதில் இயல்புக்கு மீண்டாள்.

“இரண்டரை ஆழாக்கு போடு ஆதி. அதுவே சரியா இருக்கும். “

“ஓகே ஆரு மா… ஆதவ் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் என் சமையலை பொறுத்துக்கோங்க. ஆரு மாதிரி டேஸ்ட்டாலாம் சமைக்க வராது. ஆனால் ஏதோ சமைப்பேன். adjust பண்ணி சாப்பிட்டுடுங்க.” என்று சொல்லி உள்ளே நுழைய முயன்றவனை தர்ஷி அழைத்தாள்.

“ஓய் handsome நீ மட்டும் தனியா சமைக்க வேண்டாம். நானும் ஆதவ்வும் ஹெல்ப்புக்கு வரோம். “

“நானும் அபியும் கூட வரோம் அங்கிள் ” என நிவி சொல்ல சிரித்துக் கொண்டே சரி என்ன தலையசைத்தான்.

எல்லோரும் சென்று சமையலறையில் ஐக்கியமாகினர்.

“ஓகே மிஸ்டர் ஆதி chef. இன்னைக்கு நாம என்ன சமைக்க போறோம்? ” நிவி சமையல் திண்டை தட்டியபடி கேட்டாள்.

“தாலிச்ச சாதம் சமைக்க போறோம். தொட்டுக்க ஊறுகாய் ஓகே வா… assistant chef நிவி ” என்று கேட்க எல்லோரும் கொலை வெறியோடு அவனைப் பார்த்தனர்.

“ஏன் எல்லோரும் என்னை இப்படி கொலை வெறியோட பார்க்குறீங்க. நான் என்ன அப்படி தப்பா சொல்லிட்டேன் “

“அங்கிள் இது ரொம்ப மொக்கையான dish. நாம வேற ஏதாவது ட்ரை பண்ணலாம்”

“வேணும்னா நம்ம தயிர் சாதம் பண்ணலாமா?” என்று ஆதி யோசித்துக் கொண்டே கேட்க

“எதுக்கு handsome அவ்வளவு கஷ்டமான dish எல்லாம் நம்ம வேணா தண்ணி சாதம் செஞ்சிடலாம். ” என்றாள்.

“வாவ் இது அருமையான யோசனை பியூட்டி. இதற்கு நான் வழிமொழிகிறேன்.”

“நான் இதுக்கு காறிமொழியுறேன்.. ” என்று தர்ஷி சொல்ல அவன் சிரித்துக் கொண்டே,

” பரவாயில்லை நான் துப்புனா துடைச்சுப்பேன் ” என்றான்.

ஆதவ் சிரித்துக் கொண்டே,” நம்ம வேணும்னா பிஸ்மிலா பாத் பண்ணலாமா ஆதி?” என்றான் கேள்வியாக.

“அதெல்லாம் நான் காலையிலே பாத் பண்ணிட்டேன் ஆதவ். “

“ஐயோ ஆதி பிஸ்மிலாபாத்னா சாம்பார் சாதம்.”

“ஓ அப்படியா! இது எனக்கு தெரியாம போயிடுச்சே ஆதவ்.”

“அதான் இப்போ தெரிஞ்சுடுச்சுல. பிஸ்மிலாபாத் பண்ணலாமா? எல்லாருக்கும் ஓகே வா?” என ஆதவ் கேட்க “தர்ஷி “எனக்கு ஓகே இல்லை” என்றாள்.

“அப்போ இந்த தர்ஷி மேடம்க்கு என்ன ஓகே வாம்?” என்றான் ஆதவ் கேள்வியாக.

“எனக்கு பிஸ்மிலாபாத் பிடிக்காது. சோ அது வேண்டாம். வேற ஏதாவது பண்ணலாம். “

“மேடம் நீங்க மைனாரிட்டியில இருக்கீங்க. சோ உங்களை கணக்குல எடுத்துக்க மாட்டேன். பிஸ்மிலாபாத் தான் பண்ண போறோம். இதுக்கு மேலே நோ discussions. Dot” என்றான் ஆதவ் முடிவாக.

“ஹலோ மிஸ்டர் எனக்கு ஓகே இல்லைனா அபி நிவிக்கும் ஓகே இல்லாத மாதிரி தான். சோ நாங்க தான் மெஜாரிட்டி லிஸ்ட்ல வருவோம். நீங்க வேற டிஷ் செய்யுங்க. ” என அவள் பேசிக் கொண்டு இருக்கும் போதே நிவி குறுக்கிட்டாள்.

“சாரி தர்ஷி மா. நான் ஆதவ் அங்கிள் டீம் தான். பிஸ்மிலாபாத் எனக்கு ரொம்ப பிடிக்கும். ” என சொல்ல தர்ஷி சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டாள்.

“ஓய் பியூட்டி நீ ஃபீல் பண்ணாதே. நான் உன் டீம் தான். அவங்க வேணா பிஸ்மிலாபாத் செய்யட்டும். நாம வேற ஏதாவது டிஷ் செஞ்சுக்கலாம்.” ஆதரவாக ஒலித்தது ஆதியின் குரல்.

“வேற டிஷ்னா என்ன டிஷ் அங்கிள்? தயிர் சாதமா? இல்லை தண்ணி சாதமா?” நிவி கேள்வியாக பார்க்க

“அதை எல்லாம் மிஞ்சிய ஒரு மாஸ் ஆன டிஷ் நிவி மா” என்றான் ஆதி பதிலாக.

“என்ன டிஷ் அங்கிள்?” 

“கஞ்சி ” என்றவன் சொல்ல எல்லோரும் அவனைப் பார்த்து முறைக்க முயன்று பட்டென சிரித்துவிட்டனர்.

ஆதவ் ஆருவின் மனதில் இடம்பிடிப்பதற்காக மும்முரமாக சமைத்துக் கொண்டு இருந்தான்.

ஆனால் ஆதியோ தர்ஷியிடம் “stove ஐ ஆன் பண்ணிட்டு பாத்திரத்தை வைக்கணுமா? இல்லை பாத்திரத்தை வெச்சிட்டு Stove ஐ ஆன் பண்ணனுமா?” என்று கேள்விக் கணை தொடுத்துக் கொண்டு இருந்தான்.

பார்க்கலாம் யார் செய்த உணவை ஆரு சாப்பிடுகிறாள் என்று.

ஆதியா? ஆதவ்வா?