நேச தொற்று Epilogue

” ஆரு “

“என்ன டா?”

“கபசூர குடிநீர் குடிக்க வேண்டிய டைம் இது ஆரு.”

“போடா மூணு நாளா அதைக் குடிச்சு குடிச்சு வாயே கசந்து போச்சு. அதான் கொரானாவுக்கான ஆன்டிபாடி தான் என் உடம்புல அதிகம் சுரக்க ஆரம்பிச்சுடுச்சல. இனி எனக்கு கொரானாலாம் வராது. அதனாலே நான் குடிக்க மாட்டேன்”

“ஆரு அடம்பிடிக்காதே. ஒழுங்கா குடி இல்லாட்டி இந்த ஆதியோட கோபத்தை பார்ப்ப. “

“அந்த கோபத்தை பார்க்க தான் நானும் பல நாள் வெயிட்டிங் டா. ப்ளீஸ் ஆதி கோபப்படு.  நான் அதை இன்னைக்கு பார்த்தே தீரணும். ப்ளீஸ் ஆதி. கோபப்படு. கோபப்படு. உன்னாலே முடியும். கோபப்படு ஆதி. கோபப்படு.”

“அட இரு ஆரு. நானும் அதுக்கு தான் ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.” என்று சொல்லியவன் கண்கள் இரண்டையும் உருட்டி முறைத்தபடி ஆருவைப் பார்த்தான். பின்குறிப்பு (கோபப் பார்வை)

“என்ன ஆதி பச்சை மிளகாய் ஏதாவது சாப்பிட்டியா?  ஏன் இப்படி கண்ணு ரெண்டையும் கோலி குண்டு மாதிரி உருட்டிப் பார்க்கிற?”

“ஹே ஆரு இது தான் டி கோபப்பார்வை.” என்று சொல்ல ஆரு திருத்தினாள்.

“இது கோபப்பார்வை இல்லை ஆதி. சிரிப்புப் பார்வை. ஐயோ மறுபடியும் மறுபடியும் இப்படி கண்ணை உருட்டாதே. எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது ஆதி. ” என சொல்லி விழுந்து விழுந்து சிரித்தாள்.

“ஆரு ஏன் நான் கோபமா பார்த்தா, இப்படி சிரிக்கிறே.” என்றான் பரிதாபமான குரலில்.

“நீ கோபமா பார்த்தா நான் பயப்படுவேன்.. இப்படி சிரிப்பு பார்வை பார்த்தா சிரிப்பு தானே வரும். “

“அம்புட்டு சிரிப்பாவா இருக்கு?”

“இதை நான் சொல்லித் தான் உனக்கு தெரியணுமா?” என்று சொல்ல முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு திரும்பி நின்றான் ஆதி.

“அச்சோ என் குஞ்சப்பாக்கு என்ன ஆச்சு?ஏன் முகத்தை இப்படி தூக்கி வைச்சு இருக்க குஞ்சப்பா? உனக்கு கோபப்பட சொல்லித் தரணும் அவ்வளவு தானே சீக்கரமா சொல்லிக் கொடுத்துடலாம்”

“ஆரு ஃபர்ஸ்ட் டைம் நான் உன் கூட சண்டைப் போட்டு கோச்சிக்கிட்டு போனேன் இல்லை. அன்னைக்கு நான் கோபப்பட்டேன் தானே. அப்போ என் முகம் கோவமா தானே இருந்துச்சு?”

“கோவமா லாம் இல்லை. நல்லா கோட்டான் மாதிரி தான் முகம் இருந்துச்சு”

“இன்சல்ட் க்ரேட் இன்சல்ட்”

“இது என்ன உனக்கு புதுசா ஆதி?”

“ஆமாம் நான் ஏன் இப்போ முதல் வாட்டி இன்சல்ட் ஆகுறா மாதிரி ரொம்ப ஓவரா ஃபீல் பண்ணிக்கிட்டு இருக்கேன். ” என்று அவன் கேட்க அவனை ஒரு பார்வை பார்த்துவிட்ட  புன்னகையுடன் ஆரு எழுந்து சென்று ஜன்னலருகேப் போய் நின்றாள்.

அவள் பார்வையும் புன்னகையும் அவனை ஏதோ செய்தது.

அவள் காதல் சொல்லிய பின்பு ஓரிடத்தில் நிற்காத பெண்டுலமாய் அவன் இதயம் ஆடிக் கொண்டு இருந்தது.

கொரானா தொற்று தனக்கும் ஏற்பட்டுவிடுமோ என்று தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டு அவள் படும் பாடு போதாதென்று நானும் அவளை தீண்டி அவள் உணர்ச்சிகளையும்  அவள் பயத்தையும் இன்னும் தீண்டிவிட வேண்டுமா என்று தான் அமைதியாக இருந்தான்.

இதயத்தையும் சூழ்நிலையும் தன் கட்டுக்குள் வைக்க நினைத்தாலும் அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.

வேகமாய் அவள் பின்னால் சென்று நின்றவன் மெதுவாய் அவள் கழுத்தடியில் முகம் புதைத்தான். அவள் சிலிர்த்து நிமிர்ந்தாள்.

“ஐ லல் யூ” என்றான் காதலின் வர்ணத்தை மொழியில் பூசி.

“ஐ லவ் யூ டூ ஆதி ” என்று அப்படியே பின்னால் அவன் மார்பில் சாய்ந்தவள் தன் ஆட்காட்டி விரலை நீட்டி தூரத்தில் எதையோ சுட்டிக் காண்பித்தாள். அவன் புரியாமல் அவளைப் பார்த்தான்.

“அதோ அங்கே தெரியுதுல. அது தான் நான் படிச்ச காலேஜ் ஆதி” என்றாள் ஒரு கல்லூரியைக் காட்டி.

“ஆரு அப்போ நீ படிச்சதே கேரளாவுல தானா? நான் வேலை பார்க்க தான் நீ கேரளா வந்ததா நினைச்சேன்”

“நீ நினைச்சது கரெக்ட் தான்.. நான் வேலைப் பார்க்க தான் கேரளாவுக்கு வந்தேன். என் கேரியர்ல நான் இன்னும் முன்னேறனும்ன்றதுக்காக பார்ட் டைம்ல M.A படிச்சேன்.” என்று அவள் சொல்ல ஆதியோ இறங்கிய குரலில் ” சாரி ” என்றான்.

“எதுக்கு டா சாரி சொல்ற?”

“இல்லை ஆரு உன் கனவுக்காக நீ அத்தனை கஷ்டப்பட்டு ஒரு பாதையை  உருவாக்கி வெச்சு இருக்கும் போது திடீர்னு நான் இடையிலே
வந்து இந்த பாதை உனக்கு வேணாம், நான் சொல்ற  பாதையிலே தான் நீ வரணும்னு  வற்புறுத்துறது எவ்வளவு தப்பு. அந்த தப்பை நான் முன்னாடி பண்ணிட்டேன். ஆனால் இனி பண்ண மாட்டேன். உன் கனவு உன் லட்சியம் எதையும் தடுக்கவும் எனக்கு உரிமை இல்லை. அனுமதிக்கவும் உரிமை இல்லை. நீ உனக்கு பிடிச்சதை பண்ணு ஆரு. நான் உன் பக்கத்துல நின்னு உனக்கு சப்போர்ட் பண்றேன்”

“எனக்கு தெரியும் ஆதி.நீ எனக்கு சப்போர்ட்டா இருப்பேனு. நீ முதலிலே பேசினது அறியாமையிலே. உனக்கு கொஞ்சம் கூட ஈகோ இல்லை தெரியுமா ஆதி. நீ சோ genuine. அதான் எனக்கு உன் கிட்டே ரொம்ப பிடிக்கும். காதல்ன்றது என்ன தெரியுமா ஆதி? நமக்கு பிடிச்சவங்களுக்கு எது எதுலாம் பிடிக்காதோ அது அது எல்லாம் பண்றது. என்ன செஞ்சா கோபப்படுவாங்களோ  அது எல்லாம் செஞ்சு அப்போவும் நீ என்னை காதலிக்கிறியானு பார்க்கிறது. இந்த காதல்ன்றது ஒன்னும் இல்லை. எவ்வளவு அடிச்சாலும் நீ தாங்குவீயா? கோபம் வரமா இருப்பியானு உன்னோட தாங்குதிறனை பரிசோதிக்கிறது தான் காதல். அதுல நீ distinction ல பாஸ் ஆகிட்ட டா. என் குஞ்சப்பா” என்று அவள் சொல்ல அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான் அவன். அவனது அணைப்பின் காதல் வாசம் அவள் உயிரை நிறைத்தது.

💐💐💐💐💐💐💐💐

“டேய் குல்பி மண்டையா. அங்கே என்னடா பண்ணிட்டு இருக்க? சாப்பிட வா”

“இரு தர்ஷி. செத்துட்டு வரேன் “

“செத்துப் போன அப்புறம் எதுக்கு டா உனக்கு சாப்பாடு. என் வென்று. “

“அதான் தர்ஷி தர்ஷி அதே தான். வென்று வென்று தான். நான் வென்று விட்டேன்.. pubg இல் வென்றுவிட்டேன்”

“அடச்சீ வெண்ணெய் வெட்டி.. ஒழுங்கா சாப்பிட வா டா. அபி நிவி எல்லோரும் அந்த pubg ஐ ஆப் பண்ணிட்டு சாப்பிட வாங்க” என சொல்ல எல்லோரும் உணவு உண்ண அமர்ந்தனர்.

எல்லோருக்கும் பரிமாறிவிட்டு தர்ஷியும் உண்டு முடித்தாள். அந்த நேரம் தர்ஷியின் அலைபேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தாள்.

அபி நிவியின் அம்மா அப்பா தான் வீடியோ காலில் அழைத்து இருந்தனர். புன்னகையுடன் அழைப்பை ஏற்று “ஹாய் ” என்றாள்.

“ஹாய் தர்ஷி மா எப்படி இருக்க??… அபி நிவி ரெண்டு பேரும் நல்லா இருக்காங்களா? உன்னை ரொம்ப தொல்லை பண்றாங்களா? இல்லை சமத்தா இருக்காங்களா?”

“அக்கா அபி நிவி ரெண்டு பேரும் ரொம்ப சமத்து. எதுவும் தொல்லையே பண்ணல. நீங்க கவலையேப்படாதீங்க. நான் பத்திரமா அவங்களை பார்த்துக்கிறேன்.” என்று அவள் சொல்ல நிம்மதியாகப் புன்னகைத்தனர் அந்த பெற்றோர்கள்.

அபி தர்ஷியிடம் இருந்து போனை பிடுங்க அவனிடம் இருந்து நிவி போனை பிடுங்கி கொண்டு பால்கனி பக்கம் ஓடினர்.

செல்லும் அவர்களையே சிரித்தபடி பார்த்துக் கொண்டு இருந்த ஆதவ்வை பார்த்தாள் தர்ஷி.

அவன் என்னவென்று புருவம் உயர்த்திக் கேட்க, ” ஏன்டா டேய். ஒரு லவ் ஃபெலியர் ஆகி இருக்கு.  இன்னும் தாடி வளர்க்கல. சோக கீதம் வாசிக்கல. ஃபீல் பண்ணல.
இப்படி கெக்க பெக்கே கெக்க பெக்கேனு சிரிச்சுக்கிட்டு இருக்கே.”

“லவ் ஃபெயிலியர் ஆனா தானே அதை பண்ணனும். எனக்கு தான் லவ் ஃபெயிலியர் ஆகலயே”

“ஏன்டா கோழிக்கூடை தலையா என்னை ஏன்டா இப்படி குழப்புற? அப்போ உன் லவ் இன்னும் ஃபெயிலியர் ஆகல ஆரு கூட நீ சேருவனு இன்னுமா நம்புற? ஏன்டா இப்படி கன்ஃப்யூஸ் பண்றே”

“நான் எங்க தர்ஷி உன்னை கன்ஃப்யூஸ் பன்றேன்.  நீயா தான் ஏதேதோ நினைச்சு கன்ஃப்யூஸ் ஆகிட்டு இருக்க. நான் உண்மையா ஆருவைக் காதலிக்கவே இல்லை தர்ஷி. “

“என்னது ஆருவை நீ காதலிக்கலயா?” என்று தர்ஷி அதிர்ச்சியாய்க் கேட்க அவன் தீர்க்கமாக இல்லை என்று தலையசைத்தான்.