நேச தொற்று – final

“ஆரு ப்ளீஸ் அழாதே மா. எனக்கு கொரானா எதுவும் இல்லை. ஆனால் உனக்கு ” என்று அடுத்து சொல்ல முடியாமல் கண்களில் நீர்க்கோர்த்தபடி நின்றான்.

அவன் சொல்லிய சொல்லின் முதல் பாதி மட்டும் தான் ஆருவின் மனதினில் பதிந்தது. அதுவரை அழுது கொண்டு இருந்தவள் சட்டென எழுந்து நின்றாள்.

“ஆதி இப்போ தான் எனக்கு உயிரே வந்துச்சு. உனக்கு ஒன்னும் இல்லைல. ஐயோ ஒரு நாளிலே எப்படி பயந்து போயிட்டேன் தெரியுமா?” என்று புன்னகையுடன் சொன்னவளை கண் கலங்கப் பார்த்தான்.

“இப்போ உனக்கு உயிர் வந்துடுச்சு ஆரு. ஆனால் எனக்கு தான் உயிரே போயிடுச்சு” என்றவனை புரியாமல் பார்த்தாள்.

” உனக்கு பாசிட்டிவ் வந்துடுச்சு ஆரு” என்று சொன்னவனின் கண்களில் கண்ணீர்க் கோடுகள்.

ஆனால் அவனுக்கு இருந்த வருத்தத்தில் பாதி கூட ஆருவிற்கு இல்லை.

“அட ஆதி.. இதுக்கு எல்லாமா இப்படி கண்ணீர் வடிப்பாங்க. கொரானா ஒன்னும் அவ்வளவு பெரிய உயிர்க்கொல்லி நோய் இல்லை. treatment எடுத்தா சீக்கிரமா குணமாகிடும். ஒரு வாரத்துல வந்துடுவேன் ஆதி. நீ கவலைப்படாதே. ப்ரிட்ஜ்ல ப்ரெட் இருக்கும். அது காலையிலே breakfast க்கு use பண்ணிக்கோ. மதியத்துக்கும் நைட்டுக்கும் சேர்த்து ஒரே சாப்பாடா செஞ்சிடு. அப்புறம் மறக்காக gas கீழே off பண்ணிடு. நைட்டு தனியா படுக்க பயமா இருந்தா ஆதவ்வை துணைக்கு கூப்பிட்டுக்கோ. ஒரு வாரம் மட்டும் adjust பண்ணிக்கோ நான் சீக்கிரமா வந்துடுவேன். ” என்று மூச்சுவிடாமல் பேசிய அவளையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தவனை நோக்கி கெஞ்சும் முகத்தோடு பார்த்தாள்.

“ஆதி ப்ளீஸ் ப்ரெஷ், சோப்பு , டவல் அப்புறம் கொஞ்சம் importante things லாம் எடுத்து ஒரு கவர்ல போட்டு தரீயா?” என்று சொல்லிவிட்டு கதவருகே நின்று கொண்டு இருந்தவரிடம் திரும்பினாள்.

“ஒரு டென் மினிட்ஸ்ல தேவையான திங்க்ஸ்லாம் கொண்டு வந்துடுறேன். ” என அவள் சொல்ல சரியென தலையாட்டினார் அவர்.

உள்ளே தன் அறைக்கு வந்தவளுக்கு கண்களில் குளம் கட்டியது.

அதுவரை இருந்த தைரியம் எங்கேயோ ஓடிச் சென்று மறைந்து கொண்டது.

அவனைப் பார்க்காமல் எப்படி இந்த ஒரு வாரம் கடத்தப் போகிறேன்?

அவனை மிதிக்காமல் எனக்கு தூக்கம் வேறு வராதே…

அவனுடைய குழந்தைப் பேச்சையும் ஆறுதல் தரும் பார்வையையும் சந்திக்காமல் இந்த ஒரு வாரத்தை கழிக்க வேண்டுமா என்று தலையணையில் தன் தலையைப் புதைந்து கிடந்த நேரம் கதவைத் திறந்து கொண்டு ஆதி வந்தான்.

அழுதுக் கொண்டு இருந்தவள் கதவு கீறிச்சுடும் சப்தம் கேட்டு நிமிர்ந்துப் பார்த்தாள்.

அவளருகே வந்து அமர்ந்தவன் அவள் தலையை எடுத்து தன் மடியில் வைத்து கோதினான்.

“வேண்டாம் ஆதி. என்னை விட்டு தள்ளிப் போ ப்ளீஸ். ” என்று சட்டென எழுந்து அமர்ந்தவள் அவனை விட்டு நகர முயன்றாள்.

அவனோ வேண்டும் என்றே அவளருகில் நெருங்கி அமர்ந்தான்.

அவனை முறைத்தவள் மீண்டும் தள்ளி அமர அவனும் தள்ளி அமர்ந்தான்.

“ஏன்டா இப்படி பண்ற என்னை விட்டு விலகிப் போடா.”

“மாட்டேன் ஆரு. ஏன் போகணும் உன்னை விட்டு?”

“அப்புறம் உனக்கும் உடம்பு சரியில்லாம போயிடும் ஆதி.. என்னை விட்டு தள்ளிப் போ.. “

“ஏன் ஆரு? இத்தனை நாள் நம்ம ரெண்டு பேரும் ஒரே வீட்டுல ஒன்னா இருந்த அப்போ எனக்கு வராத கொரானா இந்த பத்து நிமிஷத்துல வந்துடுமா? அப்படி வந்தாலும் பரவாயில்லை உன்னை விட்டுப் போக மாட்டேன். ” என்ற அவனது வார்த்தைகள் அவள் இதயத்தை தாக்கினாலும் அவனை கொரானா தாக்கிவிடக்கூடாது என்பதற்காக முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டாள்.

அவனால் இறுக்கிப் பிடிக்கப்பட்டு  இருந்த கரங்களை சட்டென அவனிடம் இருந்து விடுவித்துக்  கொண்டாள்.

“ஆதி போதும் பேசுனது. இதோட நிறுத்திக்கோ. ஆமாம் நான் கேட்ட பொருள் எல்லாம் எடுத்து வெச்சுட்டீயா ” என்று அவன் கொண்டு வந்த பையைப் பார்த்தவளது கண்கள் விரிவடைந்தது.

அந்தப் பையில் ஆதியின் துணிகளும் இருந்தது. நிமிர்ந்து அவன் முகத்தை கேள்வியாக நோக்கினாள்.

“நானும் உன் கூட வரப் போறேன்.” என்றவனின் பதிலைக் கேட்டு அவனை கோபமாக முறைத்தாள்.

“இங்கே பாரு ஆதி. நீயும் என் கூட வரலாம்னு ப்ளான் பண்ணாதே. அப்படி என் கூட வந்தே உன்னை தூக்கிப் போட்டு மிதிப்பேன்”

“பரவாயில்லை மிதிச்சாலும் வாங்கிப்பேன் ஆரு. கண்டிப்பா நான் கூட வந்தே தீருவேன்”

“ஆதி சின்னப்புள்ளை மாதிரி அடம்பிடிக்காதே. என்னை விட்டு தள்ளிப் போ. “

“ஏன் ஆரு? நேத்து இதே மாதிரி தானே நானும் பண்ணேன். நீ என்னை விட்டு விலகிப் போனியா?  இல்லை தானே. இன்னைக்கு நான் மட்டும் உன்னை விட்டு விலகிப் போகனும்னு நீ நினைக்கிறது சரியா. உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா? நான் கண்டிப்பா உன் கூட வந்தே தீருவேன் ” என்று உறுதியாய் பேசியவனைக் கண்டு அயர்ந்துப் போனாள்.

இனி என்ன சொன்னாலும்  அவன் கேட்க மாட்டான் என்று புரிந்ததால் எதுவும் பேசாமல் தன் உடைகளை எடுத்துக் கொண்டு வந்தவள் வெளியே நின்று கொண்டு இருந்தவரிடம் போகலாம் என்றாள்.

அவள் பின்னாலேயே பையைத் தூக்கிக் கொண்டு வந்த ஆதியை அவர் கேள்வியாகப் பார்த்தவர், “நீங்க எதுக்கு வரீங்க? அவங்க மட்டும் வந்தா போதும் ” என்று சொல்லி தடுத்தார்.

“ஏங்கே எனக்கும் கொரானா தாங்க.. என்னையும் கூட்டிட்டுப் போங்க.”

“முகத்தைப் பார்த்தா அப்படி தெரியலையே ” என்று ஆதியை அவர் மேலும் கீழுமாக பார்த்தார்.

“அட  நான் வேணா இருமிக் காமிக்கட்டுமா?  நானும் கொரானா பேஷன்ட் தான். நானும் கொரானா பேஷன்ட் தான்.” என சொல்லி பின்னே வந்தவனை தடுக்க வழியற்று அவனையும் கூட சேர்த்து கூட்டிக் கொண்டு சென்றார் கொரானாவால் தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு.

இங்கோ அபியும் நிவியும் அழுதுக் கொண்டு இருந்தனர்.

அவர்களை தர்ஷி தனியொருத்தியாய் நின்று சமாதானம் செய்துக் கொண்டு இருந்தாள்

“நிவி மா அழாதே டா. பாரு நீ அழறதைப் பார்த்து அபியும் எப்படி அழறானு. நீ தானே அக்காவா அவனுக்கு சமாதானம் சொல்லணும். நீயே அழுதா எப்படி? அம்மா அப்பாவுக்கு சீக்கிரமா குணமாகிடும் நிவி மா. இன்னும் கொஞ்ச நாளிலே வீட்டுக்கு வந்துடுவாங்க டா. அதுவரை என் வீட்டுல  ரெண்டு பேரும் சமத்தா இருப்பீங்களாம். ” என தர்ஷி சொல்ல

“இல்லை தர்ஷி அக்கா.எனக்கும் அபிக்கும் வேற இடம் மாறிப் படுத்தா தூக்கம் வராது. அதனாலே நாங்க எங்க வீட்டுலயே இருந்துக்குறோம். “

“நிவி மா எப்படி அந்த வீட்டுல நீங்க ரெண்டு பேரும் தனியா இருப்பீங்க? நானும் வந்து அங்கே தங்க முடியாது. உங்களுக்கே தெரியும்ல பாட்டியால நடக்க முடியாதுனு. தாத்தாவும் இப்போ வீட்டுல இல்லை.சென்னைக்கு வேலை விஷயமா போனவர் அங்கேயே மாட்டிக்கிட்டாரு.. பாட்டியை தனியா  விட்டு என்னாலேயும் அங்கே வர முடியாது. உங்களையும் என்னாலே தனியா விட முடியாதே.” என்று அவள் புலம்பிக் கொண்டு இருந்த நேரம் ஆதவ் அங்கே வந்தான்

“தர்ஷி என்ன ஆச்சு? ஏன் முகமே கலக்கமா இருக்கு?”

“ஆதவ். ஆருவுக்கும், நிவி அப்பா அம்மாவுக்கும் கொரானா பாசிட்டிவ்னு ரிசல்ட் வந்து இருக்கு” என அவள்  சொல்ல அவனது முகமும் அவளது கலக்கத்தை கடன்வாங்கிக் கொண்டது.

“நிவியும் அபியும் இங்கே தான் தூங்குவேனு சொல்லுறாங்க. அங்கே என்னாலே அம்மாவையும் தனியா விட்டுவர முடியாது. அதான் ஒரே யோசனையா இருக்கு”

“அட தர்ஷி நீ கவலைப்படாதே. நான் நிவி கூடவும் அபி கூடவும் தங்கிக்கிறேன். அது என்னோட கடமை. ஆனால் வேலை வேலைக்கு சரியா எங்களுக்கு சோறு போட்டுட்டணும். அது உன் கடமை சரியா?”

“ஆமாம் சோறு போடாம பட்டினி போடுறதுக்கு நான் என்ன ராட்சஷியா? போடா மெட்டல் மண்டையா?” என அவள் திட்டிவிட்டு திரும்பி தன் வீட்டிற்குள் நடந்தாள்.

“என்னடா இது அதிசயமா இன்னைக்கு  பட்டப் பேரு எதுவும் வைக்காம பேரை சொல்லி கூப்பிடுறாளேனு நினைச்சேன் அதுக்குள்ளே மெட்டல் மண்டையன்னு பேரு வெச்சிட்டா ”  என அவன் சொல்ல நடந்து கொண்டு இருந்தவளின்  இதழோரத்தில் லேசாய் புன்னகைக் கீற்று அவளையும் அறியாமல் வெளிப்பட்டுக் கொண்டு இருந்தது.

💐💐💐💐💐💐💐💐

“ஆரு ப்ளீஸ் பேசு.. ஏன் இங்கே வந்ததுல இருந்து இப்படி அமைதியா இருக்கே. வேணும்னா இரண்டு மிதி மிதிச்சு கூட உன் கோபத்தை தீர்த்துக்கோ. ஆனால் பேசாம மட்டும் இருக்காதே” என்று அவன் சொல்ல எதுவும் பேசாமல் கட்டிலில் சாய்ந்தாள்.

அவனும் ஐம்பது முறைக்கு மேல் கெஞ்சிவிட்டதால் வந்த களைப்பில் கீழே உறங்க போர்வையை எடுத்தான்.

எழுந்து அவனைப் பார்த்து முறைத்துவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டாள்.

“என்ன ஆரு இங்கே கூடப் படுக்கக்கூடாதா? சரி அப்போ நான்  வெளியிலே போய் படுத்துக்கிறேன்.” என்று தலையணையும் பெட்ஷீட்டையும் எடுத்து கொண்டு செல்ல முயன்றவனின் சட்டையைப் பற்றி இழுக்க அவன் தடுமாறி கட்டிலில் விழுந்தான்.

“எதுக்கு டா இப்போ வெளியே போற?.”

“நீ தானே நான் கீழேப் படுத்ததுக்கு முறைச்ச…”

“அடேய் ட்யூப் லைட். கீழே படுத்ததுக்கு முறைச்சா மேலே வந்து படுக்கணும்னு கூடவா அறிவு இல்லை” 

“ஓ இப்படி வேற ஒரு அர்த்தம் இருக்கா?” என்றவனின் முகம் சட்டென பிரகாசம் ஆனது.

“ஹே ஆரு நீ என் கிட்டே பேசிட்டா. அப்போ என் மேலே இருந்த கோபம் போயிடுச்சா?”

“நான் எப்போ டா உன் மேலே கோபப்பட்டேன்”

“அப்போ இவ்வளவு நேரம் பேசாம இருந்தீயே.அது கோபத்துனாலே தானே?”

” கோபத்துல இல்லை. வருத்தத்திலே தான் ஆதி, சொல்ல சொல்ல கேட்காம வந்திட்டியேனு. எங்கே உனக்கும் ஏதாவது ஆகிடுமோனு பயம். அந்த வருத்தத்துல தான் பேசாம இருந்தேன்.”

“இப்போ பயம் போயிடுச்சா ஆரு?”

“நீ என் கூட இருக்கிறது ஒரு பக்கம் பயமா இருந்தாலும் இன்னொரு பக்கம் நீ என் கூட இருக்கேன்றது ஆறுதலாவும் இருக்கு” என்று சொல்லி அவனது தோளில் தலை வைத்து நெருங்கிப் படுத்தாள்.

திகைத்துப் போய் அவளது முகத்தை ஆதி பார்க்க உயிரில் குழைத்து தேன் சொட்ட அந்த வார்த்தையை சொன்னாள் அவள்.

“i love u டா என் குஞ்சப்பா.” என்று அவள் சொல்ல சட்டென ஆதி எழுந்து அமர்ந்து அவளை மேலும் கீழுமாகப் பார்த்தான்.

கழுத்திலும் நெற்றியிலும் கை வைத்து உடம்பு சுடுகிறதா என்று பார்த்தான்.

இல்லையே ஜீரம் எதுவும் இல்லையே! பிறகு என்ன ஆயிற்று அவளுக்கு என்று அவன் தலையின் மீது கைவைத்தப்படி யோசித்துக் கொண்டு இருக்க ஆரு எட்டி ஒரு மிதிமிதித்தாள்.

“ஏன்டா எருமை மாடே. நான் எவ்வளவு ஃபீல் பண்ணி என் லவ்வை சொன்னா. நீ நான் ஜீரத்துல உளருறேனானு செக் பண்ணி பார்க்கிற? உனக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்?”

“ஆரு அப்போ உண்மையா தான் நீ என்னை காதலிக்கிறியா?” என்று மீண்டும் அவன் நம்பாமல் கேட்க தலையணையை தூக்கி அவன் மீது அடித்தாள்.

அந்த தலையணையை லாவகமாக கேட்ச் பிடித்தவன் இடுப்பைப் பிடித்து கொண்டு எழுந்து கட்டிலின் மீது அமர்ந்தான்.

ஆரு இந்த மாயம் எப்போ நடந்தது எப்படி நடந்தது? actually it is medical miracle” என்று அவன் சொல்ல அவனை முறைத்தவள்

“என்ன ஆதி இன்னொரு வாட்டி கட்டில்க்கு அடியிலே அங்கப்ரதஷ்ணம் பண்ண ஆசையா இருக்கா?”

“ஐயோ ஆரு மா. ஏற்கனவே மிதிச்ச காயத்தோட வடு ஆறாம கிடக்குது. இன்னொரு மிதி மிதிச்சா நான் தாங்க மாட்டேன் மா. கொஞ்சம் டைம் கொடுத்து என்னை அடி” என்று அவன் சொல்ல வாய்விட்டு சிரித்தவள் சட்டென அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

“டேய் குஞ்சப்பா. உண்மையா ஐ லவ் யூடா.” என்று அவனது கன்னத்தில் முத்தம் தந்தாள்.

அவன் அதிர்ச்சியில் கண்களை இமைக்கவில்லை. அதிர்ச்சியில் கைகளை வாயில் பொத்திக் கொண்டு

“இது எப்போத்துல இருந்து குஞ்சாயி?” என்றான்.

“சாரி குஞ்சப்பா. என்ன டைம்? என்ன செகண்ட்? ராகு காலமா இல்லை நல்ல நேராமானு? லாம் பார்த்து நான் லவ் வந்த டைம்மை குறிச்சு வைக்கலயே ” என்று அவள் சொல்ல

“என்னை கலாய்க்காதே ஆரு மா.” என்று ஆதி கையையும் காலையும் சின்னக்குழந்தையைப் போல ஆட்டி கொண்டு சிணுங்கினான்.

“டேய் காதலை சொன்னா அனுபவிக்காம ஏன் வந்தது எப்போ வந்ததுனா கேள்வி கேட்டா என்னடா அர்த்தம் “

“இல்லை ஆரு.  நான் முன்னாடி என் லவ் சொல்லும் போது காதல்க்கான காரணம் இதுவானு கேட்டு என்னை நீ  மிதிச்சே இல்லை. அப்போ நான் இப்போ காதல்க்கான காரணத்தை கண்டுபிடிச்சுட்டேனா?”

“ம்ம்ம் டா நீ கண்டுபிடிச்சுட்டே. காதல் வர வைக்கிறதுக்கு எந்த காரணம்னு தேவை இல்லை. அது பாட்டுக்கு தானா வளரும்னு நீ கரெக்டா கண்டுபிடிச்சுட்ட ஆதி.”என்று அவள் சொல்ல

“ஓஹோ இதானா காரணம் ” என்று சொன்னவன் சட்டென ஆருவின் பக்கம் திரும்பி சீரியசாக பார்த்து

“ஆரு நான் உன் காதலை ஏத்துக்கிறேன். ஆனால் என்னை ரத்தம் வராம அடிப்பேனு ப்ராமிஸ் பண்ணு மா” என அவன் குழந்தைப் போல கேட்க சட்டென அவனை இழுத்து இதழ்களில் இதழ் பதித்து அவனோடு கரைந்துவிட தான் நினைத்தாள்.

ஆனால் இடையில் கொரானா நியாபகம் வேறு வந்தது.

அவளுக்கு எடுக்கப்பட்ட கொரானா டெஸ்ட் ஸ்டிக்கில் G என்று தான் வந்து இருந்தது.

அப்படி இருந்தால் நோய்த்தொற்று ஏற்பட்டு குணமாகி IGG என்ற ஆன்டிபாடி உருவாகி இருக்கிறது என்று பொருள்.

அதாவது ஆருவிற்கு ஏற்கனவே கொரானா வந்து அவளது நோய்எதிர்ப்பு சக்தி போராடி அதனை வெற்றிப் பெற்றுவிட்டது.

இருந்தாலும் ஒரு வாரம் தனிமைப்படுத்துவதற்காக அவளை அழைத்து வந்து இருந்தனர். ஆதியும் அவளோடு வந்துவிட்டான். இப்போது கொரானா தொற்று இல்லை என்பதால் தான் ஆதியின் அருகே உட்கார்ந்து நெருங்கிப் பேசிக் கொண்டு இருக்கிறாள்.

இருந்தாலும் அவனுக்கு தன்னால் ஏதாவது நேர்ந்துவிடுமோ என்று விலகியும் இருக்கிறாள்.

“ஆமாம் ஆரு.. நான் உன் கிட்டே கேட்கணும்னு நினைச்சேன். நீ தான் கொரானா ஆரம்பிச்சதுல இருந்து வெளியே போகவே இல்லையே. அப்புறம் எப்படி உனக்கு கொரானா வந்தது?”

“அது நீ உப்பு உண்டை வேணும்னு ஆசையா அன்னைக்கு கேட்ட இல்லை “

“ஆமாம் கேட்டேன்.. “

“ஆனால் எனக்கு செய்ய தெரியாதா… அதனாலே நிவி அம்மா கிட்டே போய் செய்முறை கேட்டுட்டு வந்தேன். அவங்களுக்கு கொரானா இருந்து இருக்கும் போல அதான் எனக்கும் வந்துடுச்சு. “

“அடச்சே ஒரு உப்பு உண்டாயாலே கொரானா வந்துடுச்சே.. சோ சேட்.. என்னாலே தான் அப்போ உனக்கு தொற்று வந்ததுல”

” ஆமாம் டா. உன்னாலே தான் எனக்கு தொற்று வந்தது. ஆனால்  கொரானா தொற்று இல்லை. காதல் தொற்று ” என்றவள் அவனை கட்டி அணைத்துக் கொள்ள அவனும் பதிலுக்கு இறுக்கி அணைத்துக் கொண்டான்.

இங்கே ப்ளாட்டில்…

“டேய் ஆதவ் கதவைத் திற டா. என்னாலே இதுக்கு மேலே கதவைத் தட்ட முடியாது. கையே ஒடிஞ்சு கீழே விழுந்துடும் போல. ” என்று அவள் நிவி வீட்டின் கதவைப் பெயர்த்துக் கொண்டு இருக்க சோம்பல் முறித்தபடியே ஆதவ் கதவைத் திறந்தான்.

“ஏன் தர்ஷி இவ்வளவு சீக்கிரமா எழுப்புற?”

“அடிங்க முள்ளங்கி மூக்கா. மணி பதினொன்னு ஆகுது டா. இன்னும் ஒரு மணி நேரம் போனாலும் என் கையிலே இருக்கிற breakfast lunch ஆ மாறிடும். எல்லாரும் வேகமா ப்ரெஷ் பண்ணிட்டு சாப்பிட வாங்க. நிவி அபி hurry up hurry up ” என்று சொல்லி பாத்ரூமுக்குள் தள்ளினாள்.

வெளியே ஒவ்வொரு உணவுப் பொருட்களாய் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தவள் சட்னியை ருசிப் பார்த்தாள். கொஞ்சம் உப்பு குறைவாக இருந்தது.

சமையல் அறைக்கு சென்று உப்பு டப்பாவைத் தேடிக் கொண்டு இருந்தவள் தெரியாமல் மிளகாய் டப்பாவைத் திறந்துவிட்டாள்.

அதன் நெடி மூக்கில் ஏறிவிட இருமிக் கொண்டே உப்பை எடுத்துக் கொண்டு டைனிங் டேபிளுக்கு வந்தாள்.

அதே நேரம் ஆதவ்வும் டைனிங் டேபிளுக்கு வர இருமும் அவளைப் பார்த்தவுடன் பதறிப் போனான்.

“ஹே தர்ஷி என்ன ஆச்சு? ஏன் இப்படி இருமுற? உடம்புக்கு ஏதாவது பண்ணுதா?தொண்டை ஏதாவது வலிக்குதா? ஏன்டி இப்படி எதுவும் பேசாம நின்னுட்டு இருக்கே. சொல்லி தொலை டி. எனக்கு பயமா இருக்கு. ” என்றவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தவள் மெதுவான குரலில் சொன்னாள்.

“அது மிளகாய் நெடியால வந்த இருமல் தான் ஆதவ். ” என்று அவள் சொல்ல நிம்மதியாக பெருமுச்சுவிட்டவன் சாப்பிட அமர்ந்தான்.

“ஏன் ஆதவ் எனக்கு ஒன்னுனதும் இப்படி பதறுன?”

“தெரியல தர்ஷி “

“எனக்கு காரணம் தெரிஞ்சே ஆகணும்.”

“நீ ஏன் தர்ஷி ஆரு என்னை அடிச்சதும் அப்படி துடிச்ச?”

“தெரியல ஆதவ்.. “

“நீ துடிச்சதுக்கு என்ன காரணமோ அதே தான் நான் பதறிப் போனதுக்கும் காரணம்.. ” என்று சொல்லியவன் இட்லியை சாப்பிட துவங்கி இருந்தான்.

இங்கோ தர்ஷியின் மனம் அலைப்பாய்ந்து கொண்டு இருந்தது.

நான் ஒரு கேள்வி கேட்டால் பதிலுக்கு என்னையே ஒரு கேள்வியை கேட்டு வாயை அடைத்துவிட்டானே.

சரியான கோட்டான் கோபலன்.. என்று நினைத்தவளது இதழ்களில் புன்னகை தவழ்ந்தது.

அதைக் கண்ட ஆதவ்வின் இதழ்க்களிலும் புன்னகைத் துளிகள் சிதறலின் துவக்கம்.