நேச முரண்கள் – 9

நேச முரண்கள் – 9

நேசமுரண்கள் – 9

 
கண்களில் மண(ன)
கனவுகளுடன் நான்…
காதலுடன் அணைப்பாயா?
களவாடி செல்வாயா?
என்னவனே!  
 
மங்கள வாத்தியங்கள் முழங்க, சுற்றத்தாரும் நட்பும் சூழ்ந்திருக்க, மனதை கவரும் வகையில் திருமண  அலங்காரத்தில் அழகே வடிவாய் அமர்ந்திருந்த வினோதாவின் கழுத்தில் மூன்று முடிச்சுக்களை இட்டு தன்னில் சரி பாதியாக மாற்றிக் கொண்டான் விஜயவர்மன்.
 
 
பெற்றவர்களின் கண்களும் மனமும் நிறைந்து போனது, அந்த நிமிடத்தில்!
 
 
தங்கள் பிள்ளைகளின்  வாழ்க்கை பற்றிய வண்ணமயமான கனவுகள் ஒவ்வொன்றாய் நிறைவேறுவது கண்டு பூரித்துப் போய் இருந்தனர் ஈன்றவர்கள்.
 
 
அரவிந்தனும், வருணிகாவும் பம்பரமாய் சுழன்று ஒவ்வோர்  வேலையையும் பார்த்து பார்த்து செய்தனர், தங்கள் வீட்டு இளவரசிக்காக!
 
 
அந்த வயதிற்கே உரிய குறும்பு தலைதூக்க தன் புது மனைவியிடம் யாரும் அறியாத வகையில் சிருங்கார காதல் செய்தான் வர்மன்.
 
 
அவனின் பார்வை, மாலை மறைவில்  அவனின் செல்ல சீண்டல்கள் என்று புதுவித உலகத்தில் சஞ்சரித்து வந்த வினோதாவிற்கு அவளது கணவனை முன்பை விடவும் மிகவும் அதிகமாக பிடித்திருந்தது.
 
 
ஒரு கட்டத்திற்கு மேல் அவனது சேட்டைகளை தாங்கமுடியாமல், “பிளீஸ் விஜய்” என சினுங்க,
 
 
உதடுகள் அழகாக  குவிந்து,  மயக்கம் தரும் அந்த குரல் ஏதோ செய்து ஆண்மகனை!
 
 
உடலில் உள்ள செல்கள் எல்லாம் தறிகெட்டு ஓட, அவளை இப்போதே யாரும் இல்லா இடத்திற்கு கொண்டு செல்ல தூண்டியது.
 
 
உணர்வுகள் கட்டவிழ்க்க புதிய மணமகனுக்கு உரிய அனைத்து அம்சங்களும் துள்ளி விளையாடியது அவனிடம்.
 
 
 
எல்லாம் நல்லபடியாக தான் சென்று கொண்டிருந்தது, மண்டபத்தில் இருந்து, மணப்பெண் தன் புகுந்த வீட்டுக்கு தாய் தந்தையை விட்டு  கிளம்பும் நேரம் வரும் வரை…
 
 
 
நல்ல நேரம் முடிவதற்குள் தங்கள் வீட்டுக்கு சென்று விட நினைத்த அருளாசினி அனைவரையும் கிளப்ப நினைத்து கணவனிடம் சொல்ல, “சரி அருள் நான் ஆதவன் கிட்ட சொல்லுறேன்” என்று அவரிடம் வந்து “மச்சான், பொண்ணு மாப்பிள்ளையை நம்ம வீட்டுக்கு நல்ல நேரம் முடியுறதுக்குள்ள கூப்புட்டுகணும்னு வீட்டம்மா சொல்லுறாங்க” என்றார் புன்னகையுடன்.
 
 
 
விஜயேந்திரனிடம் சம்மதமாக தலையசைத்த ஆதவன். தனது மனைவியுடன்,  மகள், மருமகன் அருகில் வர, அது வரை கூட்டம் குறைந்து வீட்டினர் மட்டும் இருக்க மனைவியின் அருகில் புன்னகையுடன் அவளை மெல்ல களவாடி கொண்டிருந்த வர்மன், அவர்களுக்கு பேச இடம் விட்டு விலகி நின்றவன் அமைதியாக அவர்களை பார்த்தான்.
 
 
 
“உங்க அத்தையும், மாமாவும் கிளம்பிட்டாங்க, நீயும் நல்லவிதமா போயிட்டு வாம்மா… உடம்ப பாத்துக்க” என்ற அன்னையின் குரலில் தனித்து விடப்பட்டது போல உணர்ந்த வினோவின் கண்கள் கலங்க துவங்கியது
 
 
வினோதாவின் கன்னங்களில் கண்ணீர் முத்து முத்தாக கீழே இறங்க, ஆதவன் தோளில் சாய்ந்து கொண்டார் மகளை
 
 
இதுவரை படிக்க சென்ற போது பிரிவை இயல்பாய் ஏற்றுக் கொள்ள முடிந்த ஆதவனால் மகள் வேறு இடத்தின் உரிமையாக  மாற போவதை, தன்னைவிட நெருங்கிய உறவு தன் தேவதையை எடுத்து கொள்ள போவதையும் அவள் புகுந்த வீடு புறப்பட தயாரான அந்த கணத்தில் தான் முழுமையாக புரிந்து கொண்டார்.
 
 
 
அவரால் தாளவே முடியவில்லை, வார்த்தைகள் வற்றி விட, கண்களில் சுரந்த வெள்ளத்தை அணைப்போட முயன்றவரின் கரங்கள் நடுங்கியது.
 
 
 
மகளின் திருமணத்தின் போது ஏற்படும் பிரிவை தாய் அளவு தந்தைகளால் எளிதாக  கடந்து செல்ல முடியாது!
 
 
 
பெண்ணை பெற்றவளுக்கு இந்த பிரிவு அவள் வீட்டில் இருந்து ஆதவனை மணக்கும் போது ஏற்கனவே நடந்த ஒன்று என்பதால் வினோவை பிரியும் இந்த சூழ்நிலை கடினமாக இருந்தாலும் தாங்கிக் கொள்ள முடிந்தது.
 
 
 
ஆனால் ஆண்களுக்கு இந்த வாய்ப்பு எப்பொழுதுமே கிடைப்பது இல்லை!
 
 
 
பிறந்தது முதல் இறக்கும் வரை அவர்களின் வாழ்வில் எந்தவித பெரிய மாற்றமும் திருமணத்தால் நிகழ்ந்து விடுவதில்லை.
 
 
 
எந்த உறவின்  நெருக்கத்தையும் இழக்க வேண்டிய சூழ்நிலையும் அத்தனை எளிதில் அவர்களுக்கு வந்து விடுவதில்லை!
 
 
 
மகளின் பிரிவு என்பது ஒவ்வொரு தந்தைக்கும் கடினமான ஒரு விஷயம் தான். கலங்கிய மகளின் விழிகளை கண்டவரின் உள்ளம், ‘இது என் பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான அடுத்த கட்டம், இது தான் நடைமுறை’ என்று நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள முயன்றபடி மௌனமாய் அழுததுவோ?.
 
 
இதுபோன்ற சூழ்நிலைகளில் முன்பின் பழக்கமில்லாத விஜய்க்கு நடந்து கொண்டிருப்பதைப் பார்ததால் எரிச்சலாக இருந்தது  ‘இந்த  மோனோ டிராமா எப்பதான் முடியும்?’ என்று தான் எண்ணினான்.
 
 
அவனின் பக்குவத்தின் அளவு அவ்வளவு தான்!
 
‘நேற்று நலுங்கு வைத்தது முதல், காலை திருமணம் முடித்து, சென்ற நிமிடம் வரை தனது செல்ல சீண்டல்களை ரசித்துக்கொண்டு, அழகாக வெட்கத்தில் முகம் சிவந்து அவனின் கைப்பாவையாக அவள் இருந்து என்ன? இப்போது என்னமோ காட்டிற்கு அழைத்துச் செல்வது போல் அழுவது என்ன? சுத்தமா முடியலடா சாமி’ என்று நினைத்துக் கொண்டவன் அலுப்பாக “ம்ப்ச்” என்று சலித்துக் கொள்ள, அதை கவனிக்கத் தான் அங்கு யாரும் இல்லை!
 
 
 
அனைவரும் வினோதாவை சுற்றி இருந்தார்கள்.
 
 
அவளின் வீட்டினர் எல்லாம் தாங்கள் தேவதையின் பிரிவை எண்ணி அவளை சூழ்ந்திருக்க… 
 
 
சேர்மக்கனி பொறுப்பான தாயாக மகளுக்கு புகுந்த வீட்டில் நடந்து கொள்ளவேண்டிய முறைகளைப் பற்றி மெதுவாக இன்னுமொருமுறை நாசுக்காக உரைத்துவிட்டு கலங்கிய கண்களை அவள் அறியாதபடி துடைத்துக்கொண்டு நின்றுவிட,
 
 
 
அரவிந்தன் தந்தையின் தோள்களில் தஞ்சமடைந்திருந்த தங்கையின் தலையை ஏதும் பேசாமல் மென்மையாக வருடி விட்டான்.
 
 
ஆயிரம் வார்த்தைகளாலும் சொல்ல முடியாத பாசத்தையும் நேசத்தையும் சொன்னது, தமையனின் அந்த ஒற்றை வருடல்!
 
 
வருணிகா, அப்பத்தாவின் கரங்களை பற்றி அவரின் அருகிலேயே அமர்ந்திருந்தாள்.
 
 
எப்பொழுதும் அவளை கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தாலும் அந்த மூதாட்டியின் மனதிலுள்ள அன்பினை பற்றி அவள் அறிவாளே!
 
 
எப்பொதும் போல் இல்லாமல் பேரனின் மனைவியின் கைகளை பற்றி அமர்ந்திருந்த அப்பத்தாவின் விழிகள் எல்லாம் தன் பேத்தி மீதும் சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த அவளின் கணவன் மீதும் தான் இருந்தது.
 
 
 
மெதுவாக வருணிகாவின் கரம் பிடித்து எழுந்தவர் மெல்ல வர்மனின் அருகே வர, அவனும் அவர் பக்கம் திரும்பவும் சரியாக இருந்தது.
 
 
 
தன் கைகளை கொண்டு அவனின் கரங்களை பிடித்து கொண்டவர் அய்யா,  “எங்க வீட்டு மகாலட்சுமி ராசா அவ, நல்லா பாத்துக்கோ” என்றவரின் தழுதழுத்த குரல் வர்மனை ஏதோ செய்தது.
 
 
அவனையும் அறியாமல் சம்மதமாக ஆடியது வர்மனின் தலை.
 
 
அருளாசினி, விஜயேந்திரனும் சமாதானம் செய்ய, ஆதவன் மகளை விட்டு விலகி நின்று அவளின் முகத்தையே பார்த்து விட்டு அவளின் நெற்றியில் முத்தமிட்டார்!
 
 
சுகமான சோகங்கள் அழகாக அங்கே அரங்கேற, அதில் ஒரு பார்வையாளனாக மட்டும் தள்ளி இருந்தான் விஜய்!
 
 
************************ 
 
 
வீட்டு பாத்திரங்கள் சின்னது முதல், பிரியாணி அண்டா என்று பெரியது வரை அனைத்தும் ஒரு லாரியில் நிறைந்துவிட, மற்றொன்றில் வெள்ளி பாத்திரம் மட்டுமே பாதி வண்டியினை களவாடி விட்டதில் மீதியை நிரப்பியது பலகார பாத்திரங்கள்.
 
 
நகை, சீர்வரியை என்று தங்கைக்கு பார்த்து பார்த்து வாங்கிருந்தான் அரவிந்தன், இது எதையும் கண்டு பொறாமை கொள்ளாமல் தன்பங்குக்கு ஒரு லிஸ்டை கொடுத்து தோழிக்கு சிலது வாங்க செய்திருந்தாள் வருணிகா.
 
 
அத்தனை சீர் வரிசையும் சபையில் பரப்பப்பட  அதனை பார்த்தவர்கள் வாயடைத்து விட்டனர்.
 
 
 
அருளாசினியும்  தான் மட்டும் சளைத்தவர் அல்ல என்பதை போல, தங்கள் வீட்டுக்கு வரும் பெண்ணிற்கு வைரத்தில் பரிசளிக்க அனைவரின் பார்வைக்கும் வினோதா மிகவும் அதிர்ஷ்டக்காரியாகத்தான் தோன்றினாள்.
 
 
வாழ்வின் நிம்மதி என்பது ஒரு அதிர்ஷ்டம், அது பணம், வைரம், தங்கம் போன்றவற்றில் வந்து குடியிருந்து விடுவதில்லையே!
 
 
தன் இணையின் மனதையும் உணர்வுகளையும் அறிந்து, புரிந்து, தெரிந்து உள்ளத்தை ஆட்கொள்ளும், கொள்ள வைக்கும், மனதை ஒத்த துணை அமைவதில் தான் உள்ளது என்று பெருமூச்சு விட்ட விதி அழகாக தன் காய்களை நகர்த்த சமயம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
 
 
 
****************************** 
 
 
சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த இடத்தில் நடுவின் இருந்த அந்த மாளிகை வியப்பை தந்து பார்த்தவுடன் பிடித்துப்போனது வினோதாவிற்கு! அந்த சோர்ந்த மனநிலையில் கூட….
 
 
வெள்ளி தட்டில் நிறந்திருந்த சிவப்பு வண்ண நீரில், வெற்றிலை, காய்ந்த மிளகாய் மிதக்க ஆலத்தி தட்டு ஏந்தி மகன், மருமகள் இருவருக்கும் சுற்றி முடித்தவர் பொட்டு வைத்து தங்கள் வீட்டுக்கு உள்ளே அழைத்து வந்து அமரவைத்து பால்பழம் தரும் வரை கூட வினோதாவின் முகம் வாடியே இருந்தது.
 
 
எல்லாருக்கும் இத்தகைய நிலை வருவது தான், ஆனால் கணவனின் ஆறுதலான செய்கைகளிலும், ‘நான் இருக்கிறேன்’ என்ற ஒற்றை வார்த்தையும் மலையளவு பலத்தை தரும் பெண்களுக்கு.
 
 
பெற்றவர்களை பிரிந்து வண்டியில் ஏறிய நிமிடம் முதல் எதையும் கண்டு கொள்ளாமல் தன் போக்கில் செல்போனில் மூழ்கிய வர்மனிடமிருந்து  எந்த ஆதரவான வார்த்தைகளும் கிடைக்கப் பெறவில்லை அவளுக்கு!
 
 
 
மருமகளின் வாட்டமும் மகனின் விட்டேற்றியான போக்கும் அன்னையின் பார்வையில் பதிய, மெல்லிய கவலை தோன்றியது அவரது மனதில்!
 
 
என்ன தான் தாங்கள் சமாதானம் செய்தாலும், ‘கொண்டவன் துணையை தானே தேடும் பெண் மனம்’ என்பதை அறிந்தவர்,
 
 
“கண்ணா காலையில் சீக்கிரம் எழுந்தது, போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க, இன்னும் சடங்கு கொஞ்சம் பாக்கி இருக்கு” என்று குறிப்பாக உணர்த்தி விட்டு வினோதாவின் கரங்களை பிடித்து…
 
 
“இது உன் வீடு ஆத்தா,  வெசனப்பட கூடாது, அப்பா அம்மாவ பார்க்கணும்னு தோணினா  ஒருமணி நேரத்திற்கு மேல ஆவாது போய் அங்க நிக்க! எதையும் போட்டு கவலைப்படாம, செத்த தூங்கி எழுந்து வாம்மா, நான் ரவைக்கு (இரவுக்கு) போட வேண்டியதை அங்கேயே அலமாரில வச்சிருக்கேன்” என்று சொல்லி மென்மையாக தலையை கோதி விட அது அத்தனை ஆறுதலாய் இருந்தது அவளுக்கு.
 
 
பெற்றவர்களை விட்டு தனியே  டெல்லி வரை சென்று  படிக்கும் போது ஒன்றும் தெரியவில்லை அவளுக்கு, ஆனால் இப்போது புது மனிதர்கள், முற்றிலும் மாறுபட்ட இடம் என்று கலங்கி இருந்தவள் கொஞ்சம் தெளிந்து அவரை பார்த்து புன்னகைக்க, அதன் எதிரொலியாக அருளாசினியின் முகமும் மலர்ந்தது.
 
 
பெரிய அறையில் நடுவில் தேக்கு மரத்திலான கட்டில் வீற்றிருக்க, அறை சுவற்றில் முழுவதும் ஓவியங்கள் வரைந்து முற்றிலும் புதுமையாக இருந்தது வர்மனின் படுக்கையறை.
 
 
தனது அறையில் பழமையில் புதுமையினை புகுத்தி அழகு படுத்திருந்தான் விஜயவர்மன்.
 
 
“சோ டயட்! அலுப்பா இருக்கு வினி, கொஞ்சம் தூங்கலாம் ராத்திரி முக்கியமான வேலை இருக்கு” என்று குறும்பாக கண்களை சிமிட்டி சொன்னவன் விழுந்து படுத்து விட, 
 
 
அவளுக்கு தான் என்ன பேசுவது என்றே புரியவில்லை. அவனின் பேச்சு வேறு ஏதோ செய்ய மெல்ல கட்டிலின் நுனியில் அமர்ந்தவளை  அடுத்த நிமிடம் தன் கைவளைவிற்குள் கொண்டு வந்திருந்தான் அவளது கணவன்.
 
 
 
மெல்லிய நடுக்கம் உடலில் பரவ அவனின் பிடியில் இருந்து விடுபட முற்பட்டவளை, “சும்மா இப்படியே தூங்கு நைட்டு தான் சடங்காம். அதனால இப்ப ஒன்னும் செய்யல, இப்படி அப்படி அசைந்தால் அப்புறம் நடக்குறதுக்கு நான் பொறுப்பு இல்லை” என்று சொல்லி, அவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து உறங்கிவிட,
 
 
வினோதாவிற்கு தான் பொட்டு  தூக்கம் கூட வரவில்லை. இரவை நினைத்து இப்போதே  வயிற்றை கலக்கியது அவளுக்கு. நடக்க போவதை பற்றி எதும் அறியா பெண் இல்லை அவள். அதே சமயம் ‘ஒருவரை ஒருவர் கொஞ்சமாவது அறிந்த பிறகு இதை எல்லாம் ஏற்றுக்கொள்ள சுலபமாக இருக்கும்’ என்று நினைத்தவள், ‘வர்மனின் நடவடிக்கைகளில் ஒன்ற முடியுமா?’ என்று யோசித்தாள்.
 
 
******
 
 
நிலவின் ஒளி சாரளம்  வழியே நுழைந்து அறை முழுவதும் தன் ஆட்சியை நிலைநாட்ட, மலர்களின் காற்று வீசும் போது அதன் மணத்தை கொண்டு அந்த இடம் ரம்யமாக மாற்றியது.
 
 
ஏகாந்த சூழ்நிலை மனதை மயக்கி  அற்புதம் செய்த அதே  நேரத்தில், மேனியில் மெல்லிய நடுக்கம் தோன்ற அந்த அறையில் வந்தவளை தேக்கி நிறுத்தியது,  மனைவியின் மீது படிந்து கதை பேசிய வர்மனின் தாகம் நிறைந்த பார்வை.
 
 
 
‘சிறிது  நேரமாவது அவனிடம் மனம் திறந்து பேச வேண்டும்’ என்று நினைத்தவள், வார்த்தைகளில் அதை சொல்வதற்குள் அவளை தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்திருந்தான் வர்மன்.
 
 
அவளின் முதல் ஏமாற்றம் முதலிரவில் பேச்சு வார்த்தைகள் அற்ற, அவனின் கூடலில் தொடங்கி விட, மனதின் ஓரத்தில் சிறு வருத்தம் தோன்றினாலும் அவனின் செய்கைகளால் ஆவலே வடிவாய் அவளை மாற்றும் வித்தை தனை தெளிவாக தெரிந்து வைத்திருந்தான் அந்தக் கள்வன்!
 
 
 
முதல் முறையாக பெண்மையை அறிந்து கொண்ட வர்மனின் செயல்கள் அனைத்தும் வேகமாய் சற்று அழுத்தமாய் மனைவியின் மீது பதிந்தது, எது அவன் எது அவள் என்று பிரித்து அறிய முடியாத நிலை, மோகம் தலைக்கு ஏற மென்மையாய்  நிகழ வேண்டிய முதல் கூடல்  சற்று வன்மையாக மாறிப்போனது விந்தைதான்.
 
 
கனவெது
 
நினைவெது
 
கேட்கும் பொழுதிது
 
காமப் பசி வர அடங்காது
 
வலம் இது
 
இடம் இது
 
வாட்டும் கதை இது
 
தீண்டும் வரையிலும்  விளங்காது
 
நடுங்கலாம் குளிர் வாடையில்
 
அடங்கலாம் ஒரு ஆடையில்
 
தயங்கலாம் 
இடைவேளையில்
 
உறங்கலாம் அதிகாலையில்
 
கூடலில்
 
ஊடலில்…
 
 
 
காலையில் எழுந்து நிற்க கூட முடியாத அளவுக்கு வயிற்று வலி அதிகமாக இருக்க சுருண்டு கிடந்தாள் வினோதா.
 
விஜய்யின் கைதடங்கள் ஆங்காங்கே சிவந்திருக்க… தானே தொட்டு பார்த்துக் கொள்ள கூசி போகும் இடத்தில் எல்லாம் வன்மையின் ரணங்கள் அவனால்.
 
 
 
இனிமையாக அவன் கை ஜாலத்தில் இல்லறம் தொடங்கிய போதும், உணர்வுகள் உச்சம் எட்டும் போது ஏற்பட்ட வேதனையில் அவள்  துடிக்க…  அவனிற்கோ! உணர்ச்சி வேகத்தில்  அவளின் வேதனையை சுத்தமாக கவனிக்க முடியவில்லை.
 
 
 
இரவின் கூடல் நிகழ்வு முதல்முறையே பெண்ணவளின் மனதில் பயத்தை விதைக்க, கணவனிடம் சொல்ல பயந்து ஒடுங்கி படுக்க முடியாமல் போனது வர்மனின் செயலால்.
 
 
 
தேடல் முடிந்த பின்பும் கூட மோகம்  நிறைந்து நின்றவன் மீண்டும் மீண்டும்  அவளிடம் தேடலை தொடங்க அவளின் மறுப்புகள்  பயனற்று போய் மெல்ல மயங்கி இருந்தாள் வினோதா.
 
 
 
 
துவண்டு சரிந்தவளை கண்டு அதிர்ந்தவன் தண்ணிரை எடுத்து மனைவியின் மீது தெளிக்க, கண் விழித்தவள் கணவனை  பயத்துடன்   பார்த்து போர்வைக்குள் மறைய மனதளவில் அடி வாங்கினான் ஆண்மகனாய்!
 
 
 
 
“வினி நான் தான்டா, என்ன செய்யுதும்மா?” என்று அவளின் அருகில் வர பயதில் தூக்கி போட்டது அவளுக்கு.
 
 
 
 
என்ன செய்ய வேண்டும், பெரியவர்களிடம் சொன்னால் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது என்று நினைத்தவன், சலிப்பாக சென்று சோபாவில்  சரிந்து விட, சிறிது நேரத்தில் உடலின் அயர்வில் உறங்கியும் விட்டான்.
 
 
வினோதாவின் மனதில்  சிறிது குற்ற உணர்வு தலைதூக்க…  அதே சமயத்தில் அவளின் பயம் கணவன் மீதான சிறு கசப்பை விதைத்தது அவளின் உள்ளத்தில். 
 
 
அதிகாலை வரை வினோதாவை பார்க்க வெட்கியவன் அவளின் அருகில் வராமல் இருக்க, ஆசையாக காதல் கொண்டு மணந்தவளுக்கு தன்னை எண்ணியே கடுப்பாக வந்தது.
 
 
‘தனக்கு மட்டும் ஏன் இப்படி?’என்று தன்னிரக்கமும்,  கணவன் மீது கோபமும் சரிசமமாக பெண்ணவளைத் தாக்கியது. பின் தனது இயலாமையை எண்ணிக் கலங்கியவள் அழுது கரைந்ததில் அடுத்த நாளே காய்ச்சலை இழுத்துக்கொண்டு அனைவரையும் கதிகலங்க வைத்தாள்.  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!