பிருந்தாவனத்தின் மணம் (டீஸர்)

IMG_20211106_193318-a81c5811

பிருந்தாவனத்தின் மணம்

 

டீஸர்

 

*********

 

“விஹா… நீ ஏன் ஒரு பொண்ணை லவ் பண்ண கூடாது… உன் அழகுக்கும் பணத்துக்கும்… உனக்காக எத்தனை பொண்ணுங்க லைன்ல நின்னுட்டு இருக்காங்க… நீ ஏன் லவ்வே பண்ண மாட்டுங்குற…” என்று அவனை உசுப்பி விட்டான் விஹானின் நண்பர்களில் ஒருவனான நிதீஷ்…

 

‘இப்ப நீ அவன் கிட்ட வாங்கி கட்ட போற பாரு…’ என்று கேள்வி கேட்டவனின் காதில் சிசுசிசுத்தான் பவன்…

 

‘ஒருவேளை அடிச்சிடுவானோ…’ என்று எண்ணிய படி பயத்துடனே பார்த்துக் கொண்டு இருந்தான் நிதிஷ்…

 

‘இவனுங்களுக்கு இதெல்லாம் தேவையா… அடுத்தவனுங்க வாழ்க்கையில புகுந்து கும்மி அடிப்பதே இவனுங்களுக்கு வேலையா போச்சு… ஒருத்தன் கிட்ட எது இல்லையே அத பத்தி தான் பேசி எரிச்சல் மூட்டிட்டு இருப்பாங்க… அய்யோ நம்ம விஹா வேற எந்த மூடில் இருக்கான்னு தெரியலையே…’ என்று தனக்குள் நினைத்து கொண்டு இருந்தான் விஹானின் உயிர்த்தோழன் சர்வேஷ்…

 

“எனக்கு லவ் பிடிக்கல…” என்று கூலாக சொல்லி தோளை குலுக்கினான் விஹான் பிரசாத்…

 

நிதீஷோ… வாயை வைத்து கொண்டு சும்மா இல்லாமல்… “லவ் பிடிக்காது ஆனா பொண்ணுங்க மட்டும் பிடிக்குமா…” என்று முழுமையாக கேட்ட பிறகே வாயை பொத்தினான்…

 

விஹானோ அவனை அனலாய் முறைத்து பார்க்க… பவனோ அவனுடைய பைக்கை ஏற்கனவே ஸ்டார்ட் செய்து வைத்திருந்தான்…  

 

“டேய் பவன் எனக்கும் ஒரு வேலை இருக்கு…” என்று கத்தி வண்டியில் ஏறிக் கொள்ள உயிர் பயத்துடன் இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்…

 

அவர்கள் இருவரும் சென்றதும்… விஹான் சர்வாவை பார்க்க… அவனோ அவனை முறைத்து கொண்டு இருந்தான்…

 

“நானும் அதே தான் கேட்க போறேன் விஹா… காதல் வேணாம்… கல்யாணம் வேணாம்… பட் பொண்ணுங்க கூட மட்டும்… ச்சேய் என்ன டா இது… கேள்வி கேட்டா முறைச்சி வச்சி எனக்கு அதெல்லாம் பிடிக்கல னு சொல்வ… என்ன தான் விஹா நினைச்சிட்டு இருக்க… ஆன்டி ரொம்ப பாவம் டா… உன்னை நினைச்சி நினைச்சி ஆன்டி அப்படி இருக்காங்க…” என்று கோபத்துடனும் அதே சமயம் நண்பனின் மேலுள்ள அக்கறையிலும் கத்தினான் சர்வேஷ்…

 

அப்போது டொயங் என்று விஹானின் கைபேசிக்கு மெசேஜ் வர… அதை புன்னகையுடன் பார்த்தவன்… அதை காட்டி ஆட்டியவன்… “ஐட்டம் ரெடி மச்சான்… டாடா… பைபை…” என்று சொல்லி விட்டு… மேலும் அங்கே நிற்காமல் காரை கிளம்பி கொண்டு போனான் விஹான் பிரசாத்…

 

‘ச்சேய்… என்ன டிஸைன் இவன்…’ என்று நண்பனை மனதிற்குள் திட்ட தவறவில்லை சர்வேஷ்…

 

*********

 

“ராணி…..” என்று பெருங்குரல் அவள் உடலை உலுக்கி எடுத்தது…

 

அவளோ அந்த உதறலுடன் அவன் முன்னே போய் நின்றாள்…

 

“என் அம்மாக்கு சேவகம் பண்ண வந்தியா இல்ல நீ மேனாமினுக்கி போல திரிஞ்சிட்டு இருக்க வந்தியா…” என்று வார்த்தைகளை கடித்து துப்பினான் விஹான் பிரசாத்…

 

“மேடமை பார்த்துக்க தான்…” என்று முணுமுணுப்பாக அவள் கூற…

 

“சார் எங்க போச்சு…” என அவன் மீண்டும் குரல் உயர்த்த…

 

“ஹான்…” என்று அவள் புரியாமல் விழிக்க…

 

‘மரமண்டை…’ என்று நினைத்து விட்டு… “என்னை சார் னு தான் கூப்பிடணும்… காட் இட்…” என்று பெண்ணவளிடம் உருமினான்…

 

“ம்ம்…” என தலை அசைத்தாள் ராணி…

 

“என் அம்மாவை நல்லா பார்த்துக்கணும்… அவங்களுக்கு ஏதாவது ஆச்சு… உன் உயிர் உன் கையில இருக்காது…” என்று சொல்லி விட்டு போன விஹானையே பதட்டமாக பார்த்துக் கொண்டு இருந்தாள் ராணி…

 

********