பிருந்தாவனத்தின் மணம் 3

eiIVUXD60677-d6645ac8

பிருந்தாவனத்தின் மணம் – 3

 

வெம்மையாய் நீயிருந்தும்

தீமையில்லை!

தண்மையாய் நானிருந்தும்

பயனில்லை!

காலம் நம்மை ஆட்டி வைக்க…

அதை பற்றிய தெளிவில்லாமல்

நாமும் அதற்கேற்றாற்போல் ஆட…

நம்மிருவருக்கும் விதி செய்தது சதி!

அதில் நாமிருவரின் வாழ்வும் 

கேள்விக்குறியாக மாறி…

காதலுக்கும் பகைமைக்கும் 

இடையே சிக்கி விடையறியாது 

நிர்க்கதியாக நிற்கிறது!

 

 

விஹானோ, அன்று இரவு வீட்டுக்கு தாமதமாக தான் வந்தான். மது அருந்தும் வழக்கம் கிடையாது ஆனால் புகைபிடிக்கும் பழக்கம் அதிகமாக இருக்கும். அதுவும் இரவு நேரத்தில் மட்டும் தான். 

 

இவன் வரும் வரை பூங்குழலி உறங்காமலே காத்திருந்தார்.

 

“ம்மா… நீங்க இன்னும் தூங்காம என்ன பண்றீங்க… லேட் ஆகுதுல!” என்று சுவிங்கத்தை மென்றபடி பேசினான் விஹான்.

 

“ஏன் மாறா இவ்வளவு நேரம் உனக்கு… வந்து சாப்பிடு…” எனச் சொல்லி சாப்பாட்டை எடுத்து வைத்தார் பூங்குழலி.

 

“ம்மா இன்னைக்கு சண்டேல அதான் லேட் ஆகிடுச்சு… நான் சாப்டேன் ம்மா… நீங்க சாப்பிட்டாச்சா?” என்று கேட்க…

 

“அதெல்லாம் நான் சாப்பிட்டு முடிச்சிட்டேன்… நீ இப்ப உட்காரு…” என்று கண்டிப்புடன் சொல்லி அவனுடைய தட்டில் இட்லி வைத்து அதற்கு சாம்பாரும் ஊற்றிவிட்டு… அவன் அருகிலேயே அமர்ந்துக் கொள்ள… அவனும் அதனை சாப்பிட தொடங்கினான். 

 

‘நீ யார் கிட்ட வேணாலும் எதையும் ஏமாத்தலாம் மாறா… ஆனா என்கிட்ட உன்னால நடிக்கவே முடியாது…’ என்று நினைத்தபடி அவனை பார்த்துக் கொண்டிருந்தார் பூங்குழலி.

 

“ம்மா அதான் நான் சாப்பிட்டு இருக்கேன்ல நீங்க போய் தூங்குங்க…” என்றான் விஹான்.

 

“ம்மா ம்மா… இருங்க ஒரு நிமிஷம்… உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்!” என்று வேகமாக கூற… 

 

“என்னடா இப்ப…”

 

“நீங்க இப்போ வீட்டில தனியா தானே இருக்கீங்க… அதனால ஒரு கேர் டேக்கரை வைக்கலாம்னு இருக்கேன்…” என்று அவன் சொன்னதும்…

 

“டேய் நானே ஒரு டாக்டர் தானே… எனக்கு எதுக்கு கேர் டேக்கர் எல்லாம்… அதெல்லாம் எதும் வேணாம்… நானே என்னை பார்த்துப்பேன்… வீட்டுக்கு வேலைக்கு பார்வதி இருப்பா… அவளே துணைக்கு போதும்…” என்றார் அவரும்.

 

“பார்வதி எல்லாம் உங்களுக்கு துணையா இருக்க முடியாது… வேலை செய்யவே நேரம் சரியா இருக்கும்… அதேமாதிரி முன்ன போல உங்க ஹெல்த் கண்டிஷன் இல்லம்மா… அடிக்கடி உங்களுக்கு லோ பீபீ ஆகுது… டீஹைட்ரேஷன் (dehydration) வேற இருக்கு… எனக்கென்னவோ உங்கள தனியா விட்டு போறதுல விருப்பம் இல்லம்மா… அதனால் நம்ம ஹாஸ்பிடல்ல இருந்தே ஒருத்தர அப்பாய்ண்ட் பண்றேன்… இதுக்கு நீங்க ஓகே தான் சொல்லணும்… நோ அப்படிங்கிற ஆப்ஷனே இல்ல!” என்று அவன் முடிவில் பிடிவாதமாக இருந்தான் விஹான் ப்ரசாத்.

 

“தான் புடிச்ச முயலுக்கு மூனு காலுன்னே நில்லுடா… நான் சொன்னா கேட்கவே மாட்டீயா நீ… ப்ச்ச்… சரி கேர் டேக்கர் வச்சிக்க… ஆனா நர்ஸ் எல்லாம் வேணாம்… நாம எப்பவும் டொனேஷன் கொடுக்கும் ஆசிரமம் இருக்குல்ல… அங்கேயே எனக்கு தெரிஞ்ச பொண்ணு இருக்கு… அந்த பொண்ணையே இங்க வரச் சொல்லிக்கலாம்…” என்று சலிப்புடன் ஆரம்பித்து தகவலைச் சொன்னார் பூங்குழலி.

 

“ம்மா… அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல… அந்த பொண்ணு எப்படின்னு எல்லாம் நமக்கு தெரியாது…” என்று அவன் மறுத்து பேச…

 

“மாறா… எனக்கு அந்த பொண்ணு நல்ல பழக்கம் பா… அவ தங்கமான பொண்ணு… பாசமா பார்த்துப்பா என்னை! எனக்கு அந்த புள்ளைய ரொம்ப பிடிக்கும்… அந்த பொண்ணே எனக்கு துணையா இருக்கட்டும் மாறா… அவளை நீ வேணாம்னு சொன்னா என்னை பார்த்துக்க யாரும் வர வேணாம்னு நானும் சொல்லுவேன்…” என்று வீம்பாக சொன்னார் அவனுடைய தாயார்.

 

“ம்மா… இப்ப தெரியுதா… என்னோட பிடிவாதம் யார் கிட்ட இருந்து வந்திருக்கு அப்படின்னு!” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் விஹான்.

 

*இப்ப நீ என்ன தான் சொல்ல வர…” என்று சொன்னவருக்கும் புன்னகை மலர்ந்தது.

 

“சரி நீங்க சொன்ன பொண்ணையே ஃபிக்ஸ் பண்ணிடறேன்… ஆர் யூ ஹேப்பி நவ் ம்மா?” என்று அவன் சொல்ல… அவன் தாயும் புன்னகைத்தார்.

 

“சரி..‌. அப்போ அந்த பொண்ணை ஃபோன் பண்ணி வர வச்சிருக்க ம்மா!” என்று சொல்லி கை கழுவினான் அவனும்.

 

“ஏது ஃபோன் பண்ணி வர சொல்லணுமா?”

 

“ஆமா!”

 

“அப்படி எல்லாம் விட மாட்டாங்க மாறா… அங்கே நிறைய ப்ரோசிஜர்ஸ் இருக்கு… அதை எல்லாம் முடிச்ச அப்பறம் தான் ராணி நம்ம வீட்டுக்கு வர முடியும்…” என்று பூங்குழலி சொல்ல…

 

“அது யாரு ராணி?” என்றான் கேள்வியான பார்வையுடன்…

 

“நான் சொன்ன பொண்ணு தான்…” என்று சொன்னார் பூங்குழலி.

 

“ஓஹ்… இருந்துட்டு போகட்டும்… ஆனா ம்மா… அப்படி எல்லாம் என்னால பண்ண முடியாது…”

 

“அப்போ அந்த பொண்ணை இங்க அனுப்பி வைக்க மாட்டாங்களே! நானாச்சி போய் அந்த புள்ளைய அழைச்சிட்டு வரவா?”

 

“நீங்க வெளியே எங்கேயும் போக கூடாதுன்னு சொல்லியிருக்கேன் தானே ம்மா…”

 

“நீயும் அங்க போக மாட்ட! என்னையும் போக விட மாட்ட… அப்பறம் என்ன தான்டா பண்றது…” என்று கடுப்புடன் கேட்டார் பூங்குழலி.

 

“ம்மா நீங்க இருக்கீங்களே! சரி நாளைக்கு நானே அங்கே போய் தொலைக்கிறேன்… உங்க இஷ்டப்படி அந்த பொண்ணையும் கூட்டிட்டு வரேன்… இப்ப போய் நீங்க தூங்குங்க..‌.” என்று கத்திவிட்டு சென்றான் விஹான் ப்ரசாத்.

 

இருவரும் சந்திக்காமல் போயிருந்தால் அவர்களின் வாழ்வாவது மிஞ்சி இருக்கும்… ஆனால் இப்போதோ விதியின் சதியில் சிக்கி சின்னா பின்னமாகி சீர்குலைய போகிறது. இந்த சந்திப்பை தடுக்க யார் உள்ளார்? 

 

மறுநாள் காலை… பூங்குழலியின் வற்புறுத்தலின் பலனாக ராணி இருக்கும் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தான் விஹான்.

 

அது அவர்கள் எப்போதும் நன்கொடை அளிக்கும் ஆசிரமம் என்பதால் அவனை பாதுகாவலர் முத்துவேலுக்கு இவன் பூங்குழலியின் மகன் என்று நன்றாகவே தெரிந்திருந்தது.

 

அவன் ஆசிரமத்தின் வாயிலில் நிற்பதை பார்த்த முத்துவேல் அவனிடம் செல்வதற்குள்…

 

“ஆஆஆ…” என்றபடி தலையை தேய்த்துக் கொண்டிருந்தான் விஹான். அவன் நெற்றியை பதம் பார்த்துவிட்டு அவன் காலருகே உருண்டுக் கொண்டிருந்தது ஒரு பந்து.

 

“ஹெலோ சார் இங்க எதாச்சும் பால் விழுந்துச்சா… அத நீங்க பாத்தீங்களா?” என்று கேட்டபடி வந்தாள் ஒரு இளம் பச்சை தாவணி அணிந்த நங்கை.

 

விஹானோ அவளை முறைத்துக் கொண்டிருக்க… அந்த பெண்ணோ அதை துளியும் கவனிக்காமல் பந்தை தேடிக் கொண்டிருக்க… அவன் கால் அருகே இருந்த பந்தை பார்த்ததும்… “அட! இந்த பந்து இங்க தான் இருக்கா…” என்று சொல்லியபடி அதை எடுத்துக் கொண்டாள்.

 

“ஏய்! ஒரு நிமிஷம் நில்லு…” என்று அழுத்தமான குரலில் சொன்னான் விஹான். அதில் அப்பெண்ணோ கொஞ்சம் பயத்துடனே திரும்பி பார்க்க… 

 

“எதுக்கு என்னை அடிச்ச…” என்று கோபத்துடன் கேட்டான் அவன்.

 

“அய்யோ! இல்ல இல்ல… நான் யாரையும் அடிக்கவே இல்ல…” என்று அச்சத்துடன் கூறினாள் அவள்.

 

“பொய்யா சொல்ற…”

 

“நான் பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்…” 

 

“ஓஹ்… அப்போ என் நெத்திய பாரு… எப்படி வீங்கி போய் இருக்குன்னு…” என்று கூறி அவன் நெற்றியை சுட்டிக் காட்ட… அதுவோ கொஞ்சம் சிவந்து காணப்பட்டது.

 

“என்னங்க ஆச்சு… இப்படி காயப்பட்டு இருக்கு…”

 

“அடிங்க! என்ன நக்கலா? ப்ச்ச்… தேவை இல்லாம என் கோபத்தை கிளராத… உன் பாலை வச்சி என் நெத்திய பிளந்துட்டு பாவமாக கேட்குற போல ஆக்ட் பண்ணிட்டு இருக்கீயா! ஹவ் டேர் யூ?” என்று கோபத்துடனே வந்தன அவனது வார்த்தைகள். அதில் பயந்து போன பெண்ணின் உடல் நடுநடுங்கி போனது.

 

அதற்குள், “ராணி… அங்க என்னம்மா பிரச்சனை…” என்று கேட்டபடி வந்தார் முத்துவேல்.

 

“நான் எதுவுமே பண்ணல ப்பா…” என்றாள் மெல்லிய குரலில்…

 

விஹானோ, ‘இது தான் ராணியா!’ என்று நினைத்தபடி அவளை பார்த்து கொண்டிருந்தான்.

 

“அப்ப எதுக்கு மா அழற…” என்று கேட்க… 

 

“பால் அவங்க மேல தெரியாம பட்டுருச்சி… அதான்…” என்று சொன்னாள் ராணி.

 

“பாவம் தம்பி பிள்ள… ஏதோ சின்ன பசங்க கூட விளையாட்டு இருக்கு… அதுல தெரியாம விழுந்திருக்கும்… நீங்க தப்பா எடுத்துக்காதீங்க…” என்று தன்மையாக கூறினார் முத்து.

 

அதற்கு அவனோ பதில் ஏதும் சொல்லாமல் கைகளை கட்டியபடி நின்றுக் கொண்டிருந்தான்.

 

ராணியோ, “சாரிங்க நான் நிஜமாவே தெரியாம தான் பண்ணேன்…” என்று பேசியது கேட்காத குரலில் சொல்ல…

 

“தெரிஞ்சு தான் பண்ணிட முடியுமா உன்னால!” என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு சொல்லி பல்லை கடித்தான் அவன்.

 

அதன் பிறகு, “தம்பி நீங்க பூங்குழலி அம்மாவோட பையன் தானே…” என்று கேட்டார் முத்துவேல். இதை கேட்டதும் அவனை தலை நிமிர்ந்து பார்த்தாள் ராணி. அவளின் கண்களோ கலங்கி இருந்தது.

 

“ம்ம்… ஆமா…” என்றான் அவனும்.

 

முத்துவேலோ, “ராணி நீ உள்ள போ!…” என்று அவளிடம் சொல்ல… அவளோ விட்டால் போதுமென்று எண்ணி ஓடியே விட்டாள்.

 

“என்ன தம்பி நீங்க வந்திருக்கீங்க… உள்ள வாங்க…” என்றபடி அவனை அழைத்துக் கொண்டு போனார் அவர்.

 

“தம்பி இந்த மாசம் தர வேண்டிய நன்கொடை கூட வந்து சேர்ந்துருச்சே… நீங்க எதுக்கு வந்தீங்கனு நான் தெரிஞ்சிக்கலாமா?” என்று கேட்டார் முத்துவேல்.

 

“என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை… அதனால் அவங்கள பார்த்துக்கவும் பேச்சு துணைக்கும் ஒருத்தர் வேணும்… அதான் இங்க வந்தேன்…”

 

“அப்படிங்களா தம்பி… நல்ல ஆளா பார்த்து நானே அனுப்பி வைக்கிறேன்…”

 

“அம்மாவுக்கு ராணி தான் வேணுமாம்… வேற யாரும் வேணாம்னு சொல்றாங்க… அந்த பொண்ணுக்கு நான் மன்திலி பேமென்ட் கரெக்டா பண்ணிடுவேன்… அந்த பொண்ணுக்கு சேலரி 25,000… அந்த பொண்ணு அம்மாவ நல்லா பாத்துக்கிட்டா இன்னும் கூட ஏத்தி கொடுப்பேன்… நாளையில இருந்து அந்த பொண்ணை வர சொல்லிடுங்க…” என்று அவன் மட்டுமே பேசி அவருக்கு வெறும் தகவலை மட்டும் சொல்லிவிட்டு கிளம்பி சென்றான் விஹான் ப்ரசாத்.

 

இதை எல்லாம் நினைத்துக் கொண்டிருந்த விஹான் எப்போது உறங்கி போனான் என்று அவனுக்கும் தெரியவில்லை!

 

“என் நிம்மதியை கெடுக்க வந்த பிசாசு டி நீ… எதுக்கு டி என் வீட்டுக்குள்ளயும் வாழ்க்கைக்குள்ளயும் நுழைஞ்ச பாவி… உன்ன உயிரோடவே விட்டிருக்க கூடாது டி… அப்பவே உன் கதையை முடிச்சு இருக்கணும்…” என்று தூக்கத்தில் புலம்பிக் கொண்டே இருந்தான் விஹான்.

 

*********

 

மணக்கும் 🥀🥀🥀