பிருந்தாவனத்தின் மணம் 4

eiIVUXD60677-b3ebbb23

பிருந்தாவனத்தின் மணம் – 4

அடைமழையாய் பொழிந்தாய் நீ!

தூரலாய் தூவினேன் நான்!

துளி துளியாக வந்து என்னுள்

துளிர் விட்டது உன் காதல்…

நின் நேசத்தால் 

நானும் துவண்டு 

நீயும் மருகி

வாழ்வில் முன்னேற முடியாமல்

நீ விட்டுச்சென்ற இடத்திலே

தொலைந்து போன 

குழந்தையாய் தவித்து 

செய்வதறியாமல் விழிக்கிறேன் நான்!

விஹானோ அதிகாலையில் எழுந்து தன்னுடைய உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு… குளிக்க சென்றவன்… தன்னை ஆயத்தமாக்கிக் கொண்டே வெளியே வந்தான்.

அவன் அடுத்ததாக சென்றது என்னவோ செல்ல மகள் தேனிசையின் அறைக்கு தான்.

குழந்தையோ உடலை குறுக்கி… டோரா பொம்மையின் மேலே கையை போட்டபடி தூங்கிக் கொண்டிருந்தாள்.

ஒன்பது மாதக் குழந்தையாக இருந்தாலும் அவள் படுசுட்டி… நாம அவளுக்கு சொல்வதை ஒரளவு புரிந்துக் கொள்வாள்… அதில் அவளுடைய அப்பா சொன்னால் எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக் கொள்வாள். அவளுக்கு விஹான் என்றால் உயிர்! அவனை மட்டும் தான் அதிகம் தேடுவாள். விஹானுக்கும் மகள் அருகே இருந்தால் மட்டும் புன்னகை நிறைந்த முகமாகவே இருப்பான். இவன் சிரிப்பதை பார்த்தே குழந்தையும் சிரித்துக் கொண்டிருக்கும். அவன் சிரிப்பிற்கு அதுவும் ஒரு காரணம்.

அவனுடைய மகளின் முகத்தை பார்க்க பார்க்க… அவளுடைய முகமும் தேவையில்லாமல் வந்து போனது. அந்த நினைப்பை வலுக்கட்டாயமாக பின்னுக்குத் தள்ளினான் விஹான்.

அப்போது அவனுடைய கைபேசி சினுங்க… அதை அட்டென்ட் செய்து காதில் வைக்க… 

“சார் நீங்க சொன்னவங்கள தூக்கிடவா?” என்று கேட்டான் அவனுடைய கையாள்.

“தூங்கிடு…” 

“சரிங்க சார்…”

“ஒரு நிமிஷம்…”

“சொல்லுங்க சார்…”

“மயக்க மருந்தெல்லாம் குடுக்காத… இன்னைக்கு எப்படியும் பெருமாள் கோவிலுக்கு வருவா… என்னோட பொண்ணு பேரை மட்டும் சொல்லு… எதையும் பேசாம அவளே உன் கூட வந்துருவா… ஜாக்கிரதையா கூட்டிட்டு வா!” என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தான் விஹான்.

அவன் முகமோ சிறிதும் மென்மையை காட்டாமல் இறுக்கமாக இருந்தது…

“எனக்கும் என் பொண்ணுக்கும் அவ தேவையே இல்லம்மா… ஆனா நீங்க நான் அவ வேணும்னு பிடிவாதம் பிடிச்சிட்டு இருக்கீங்க! அன்னைக்கும் உங்களால தான் அவளை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்… இன்னைக்கும் உங்களால தான் கூட்டிட்டு வரேன்… அவளால் அப்போ மாறின என் வாழ்க்கை இன்னமும் அப்படியே தான் இருக்கு… இதுல என் பொண்ணு மட்டும் எப்படியோ என்கிட்ட வந்து சேர்ந்துட்டா… என் வாழ்க்கையில இனி இருக்க போறது என்னோட தேனு பாப்பா மட்டும் தான்… வேற யாருக்கும் என் வாழ்க்கைல வர அனுமதி கிடையாது…” என்று மகளை பார்த்தபடி பேசி… அவளுடைய தலையை இதமாய் கோதி விட்டான் குழந்தையின் தந்தை. 

கொஞ்ச நேரத்தில் தேனிசையும் எழுந்து விட… அவளுக்கு குடிக்க பாலை கொடுத்து… அவனே குளிக்கவும் வைத்து… காலை உணவையும் ஊட்டி விட்டு… தானும் உண்டு முடித்து… மகளோடு கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தான் விஹான் ப்ரசாத்.

**********

பூங்குழலி ஃபோன் செய்து ஆசிரமத்தின் பாதுகாவலரான முத்துவேலிடம் தன்மையாக பேச… அதன் பின்னரே அவர் ஒத்துக் கொண்டார்.

இதை பற்றி ராணியிடம் சொல்ல… முதலில் தயங்கியவள்… பின்னர் பூங்குழலி அம்மாவிற்காக அவருடைய வீட்டிற்கு வர சம்மதித்தாள். ஆனால் இரவானதும் தன்னுடைய ஆசிரமத்திற்கே வந்து விடுவேன் என்று சொல்லியே முழுவதுமாக சம்மதித்தாள் பெண். 

பூங்குழலி அடிக்கடி ஆசிரமத்திற்கு சென்று வருவார்… அப்படி பழக்கமானவள் தான் ராணி. நல்ல அமைதியாக பெண், நெருங்கியவர்களிடம் மட்டும் குறும்பாய் பேசுபவள், பெரியவர்களிடம் மிகவும் மரியாதையாகவும் பாசமாகவும் நடந்துக் கொள்வாள். 

ராணி இப்படியான குணம் எல்லாமுமே பூங்குழலியை கவர்ந்திழுத்தது. அதனாலே இவள் தனக்கு துணையாக இருந்துக் கொள்ளட்டும் என்று மகனிடம் வாதம் செய்தார்.

விஹானோ ராணியை கண்டாலே எரிந்து எரிந்து விழுவான்… அவளும் அவனுடைய முகத்தை கூட பார்க்காமல் தலை குனிந்த படியே இருந்துக் கொள்வாள். 

அவன் திட்டினாலும் பதிலுக்கு பேச மாட்டாள்… சரி இல்லை என்ற ஒரு தலையசைப்பு மட்டும் தான் அவளிடமிருந்து பதிலாக வரும்… இதிலேயே இன்னும் எரிச்சல் கொள்வான் விஹான்.

விஹான் வீட்டில் இல்லாத சமயத்தில் எல்லாம் ராணி சிரிப்பு சத்தம் வீடு முழுவதிலும் கேட்டுக் கொண்டிருக்கும்… பூங்குழலியிடம் அவளின் நெருக்கம் மேலும் மேலும் அதிகரித்தது. ஆசிரமத்தில் சில மணி நேரச் சந்திப்பிலேயே அவரிடம் நன்றாக பேசி பழகுபவள், இப்பொழுதோ நாள் முழுவதும் அவரோடு தான் நேரத்தை கழிக்கிறாள்… அதனால் இருவருக்குமே பாசம் அதிகரித்து இருக்க… ராணியின் பேச்சும் சிரிப்பும் பூங்குழலியிடம் இயல்பாகவே வந்து விடும்… அவரும் இவளுக்கு சளைக்காமல் பேசிக் கொண்டிருப்பார்.

அவள் இந்த வீட்டுக்கு வந்து முன்று மாதத்திற்கும் மேலாகி இருந்தது. அதுவரை எல்லாமே சரியாக தான் போய் கொண்டிருந்தது.

அன்று விஹானோ வீட்டிற்கு சீக்கிரமே வந்துவிட… வீடே வெறிச்சோடி இருந்தது. அவனுடைய அன்னையின் அறைக்கு சென்று பார்க்க அவரோ உறங்கிக் கொண்டிருந்தார். அதை பார்த்து விட்டு மீண்டும் வெளியே வந்துவிட்டான்.

அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்தாள் ராணி.

விஹானோ அவளை கண்டதும், “ராணி…..” என்ற பெருங்குரலுடன்‌ அழைக்க… அது அவள் உடலை உலுக்கி எடுத்தது…

அவளோ அந்த உதறலுடன் அவன் முன்னே போய் தலை குனிந்த படியே நின்றாள்…

அதைக் கண்டு, “என் அம்மாக்கு சேவகம் பண்ண வந்தியா இல்ல நீ மேனாமினுக்கி போல திரிஞ்சிட்டு இருக்க வந்தியா!” என்று வார்த்தைகளை கடித்து துப்பினான் விஹான் பிரசாத்…

“மேடமை பார்த்துக்க தான்…” என்று முணுமுணுப்பாக அவள் கூற…

“சார் எங்க போச்சு…” என அவன் மீண்டும் குரல் உயர்த்த…

“ஹான்…” என்று அவள் புரியாமல் விழிக்க…

‘மரமண்டை…’ என்று நினைத்து விட்டு… “என்னை சார் னு தான் கூப்பிடணும்… காட் இட்…” என்று பெண்ணவளிடம் உறுமினான் அவன்…

அதற்கு, “ம்ம்…” என்று மட்டும் தலை அசைத்தாள் ராணி…

“என் அம்மாவை நல்லா பார்த்துக்கணும்… அவங்களுக்கு ஏதாவது ஆச்சு… உன் உயிர் உன் கையில இருக்காது…” என்று கடுப்புடன் சொல்லி விட்டு அவன் அறைக்கு போன விஹானையே பதட்டமாக பார்த்துக் கொண்டு இருந்தாள் ராணி…

‘அவங்க இப்ப நல்லா தானே தூங்கிட்டு இருக்காங்க… இவங்க எதுக்கு இப்ப கத்திட்டு போறாங்க…’ என்று நினைத்து பூங்குழலிக்கு பத்திய உணவை செய்ய சமையலறைக்கு சென்றாள் ராணி.

அன்று வீட்டில் வேலை செய்யும் பார்வதியும் வராமல் இருக்க… ராணியே தான் எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டாள். 

பூங்குழலிக்கும் உடல் அசதியாக இருப்பதாலும்… கொஞ்சம் மயக்கமாகவே இருப்பதாலும் மாத்திரையை போட்டுக் கொண்டு படுத்து விட்டிருந்தார்.

ராணியோ வசீகரா பாடலை முணு முணுத்துக் கொண்டே சமையலை செய்துக் கொண்டிருந்தாள்.

தினமும் நீ குளித்ததும் என்னை தேடி

என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை!!!!!

திருடன் போல் பதுங்கியே திடீரென்று

பின்னாலிருந்து என்னை நீ அணைப்பாயே அது கவிதை!!!!!

அந்த பாடலைக் கேட்டுக் கொண்டே, “குயின் உனக்கு நிஜமாவே குயில் வாய்ஸ் தான்…” என்றபடி வந்தான் விஹான்.

அவனது தீடீர் வரவை… அவனது இந்த மாதிரியான பேச்சையும் எதிர்பாராத ராணியோ, பேந்த பேந்த விழித்தபடி நின்றாள்.

அவள் முன்னே சொடக்கு போட்ட விஹானோ, “ஒய்! அங்க கருகிட போகுது… என் முகத்தையே பாத்துட்டு இருந்தா என்ன அர்த்தம்! வேலையை செய்…” என்று கூறியபடியே அவளின் பக்கத்தில் போய் நின்று கொண்டான்.

“ஹான்…” என்று முதலில் முழித்து பின்னர் அடுப்பை கவனித்துக் கொண்டிருக்க… அவன் பக்கத்தில் வந்து நின்றதுமே இன்னும் வியர்க்க தொடங்கியது.

“நான்… நான் சமைக்கனும்… ப்ளீஸ்!” என்று சொன்னவளின் குரல் அவனை எட்டவில்லை.

“சமை! நான் என்ன வேணாம்னா சொன்னேன்…” என்று சொல்லிக் கொண்டே கேரட்டை எடுத்து கடித்தான் அவன்.

“கொஞ்சம் த… தள்ளி நி… நில்லுங்க…”‌எனறு அவள் சொல்லும் முன்பே…

“வாட்? கேட்கல!” என்றான் நக்கலாக!

“நான் மிக்ஸி அரைக்க போறேன்… மேல தெளிக்க போகுது அதனால் தள்ளி நில்லுங்க ன்னு சொன்னேன் சார்…” என்று திக்கி திணறி சொல்லி முடித்தாள் ராணி.

“ஓஹ்… சரி… ஆமா! நான் உன்ன குயில்னு கூப்பிடுவா! இல்ல குயின்னு கூப்பிடவா! இது ரெண்டுமே நல்லா தான் இருக்கு… எது கூப்பிட்டும் நீயே சொல்லு குயின்…” என்று மென்மையான குரலில் சொல்லிக் கொண்டே சமையல் மேடையில் உட்கார்ந்துக் கொண்டான் ப்ரசாத்.

அவனுடைய பேச்சைக் கேட்டு பயத்தில் எச்சிலை விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் பெரும் அவஸ்தையை அனுபவித்துக் கொண்டிருந்தாள் பெண்.

“உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்… உனக்கு வாய் பேச தெரியும் தானே… அப்போ என்கிட்ட பதில் சொல்ல மட்டும் தெரியாதா? இல்ல எனக்கு பதில் சொல்ல கூடாதுன்னு இருக்கியா? அவ்வளவு ஆகிடுச்சா உனக்கு!” என்று கோபத்துடனே பேசினான் அவன்.

“என்கிட்ட எப்பவும் பேச மாட்டீங்க… ஆனா… ஆனா… இப்ப பேசறீங்க… அதான் எனக்கு பேச வரல… கொ… கொஞ்சம் பயமா இருக்கு…” என்று அவனை பார்க்காமல் சொன்னாள் ராணி.

“குயின்… நீ என்கிட்ட பேசும் போது என் கண்ணை பார்த்து மட்டும் தான் பேசணும்… உன் கண்ணை என்கிட்ட காட்டி தான் பேசணும்… உன் கண்ணு என்னோட முகத்தை பார்த்துட்டே இருக்கணும்… என்னை மட்டும் தான் அந்த கண்ணு எப்பவும் பார்க்கணும்…” என்று கோபமாக ஆரம்பித்து மென்மையாகவே முடித்தான் விஹான் ப்ரசாத்.

இதை கேட்டதும் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள் ராணி. அவளுடைய முகத்தில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் வந்து போனது.

அதை எல்லாம் பொருட் படுத்தாமல், ஒரு சில விநாடியில் அவளிடம் நெருங்கி வந்த விஹான் அவள் அணிந்திருந்த தாவணியோடு சேர்த்து அவளின் இடையை சுற்றி வளைத்தவன்… அவள் கண்களோட தன் கண்களை பிணைத்துக் கொண்டு, “நீ என் கண்ணை பார்த்து பேச மாட்டீயா டி… அவ்வளவு திமிரா உனக்கு! என்னை பார்த்தா என்ன உனக்கு! என் முகத்த பார்க்காமலே எவ்வளவு நாள் இருப்ப… அப்படி நீ பார்க்காமல் இருக்க இருக்க… எனக்கு கோபம் தான் அதிகம் வருது… 

உன்னோட இந்த முட்டை கண்ணும் தேன் குரலும் என்னை ரொம்பவே மெஸ்மரைஸ் பண்ணிடுச்சு குயில்… அத தடுக்க நினைச்சாலும் என்னால தடுத்து நிறுத்த முடியல… என்னை நீ ரொம்பவே இம்சை பண்ற குயில்! எந்த பொண்ணும் எனக்குள்ள வந்தது இல்ல… ஆனா நீ எனக்குள்ள வந்துட்ட… எந்த பொண்ணும் என்னை இவ்வளவு பாதிச்சது இல்ல… ஆனா நீ என்னை ஏதோ பண்ற… பண்ணிட்டு இருக்க… நீ எனக்குள்ள வந்து ரொம்ப நாள் ஆச்சு… 

எந்த பொண்ணுமே என்னை இவ்வளவு அட்ராக்ட் பண்ணது இல்ல… ஆனா உன்னோட பார்வை என்னை ரொம்பவே அட்ராக்ட் பண்ணிடுச்சு… ஆனா அந்த பார்வையை கூட எனக்கு தர மாட்டேங்கிற… நான் உன் பக்கத்தில இருந்தாலே என்னை பார்க்காம தரையில முகத்தை புதைச்சி வச்ச போல நின்னுக்குற… அப்பல்லாம் அப்படியே ஒன்னு குடுக்கணும் போல தோணும்… ஹ்ம்ம்… பயப்படாத குயில்… நான் குடுக்க போறேன்னு சொன்னது என் கையால இல்ல! என்னோட உதட்டால! அத வாங்க போறது உன் கன்னம் இல்ல… உன்னோட குட்டி லிப்ஸ் தான்!…” என்று சொல்லி அவளை மென் சிரிப்புடன் பார்த்தான் அவன்.

அவளின் கண்களோ அதிர்ச்சியை தாங்கியபடி நின்றிருந்தது. இந்த பேச்செல்லாம் அவளை கொஞ்சமும் அடையவில்லை. அவளின் மேல்மாடி சிறிதும் வேலை செய்யாமல் இருக்க… சிலையாக அவன் கைகளுக்கு நின்றிருந்தாள் பேதை.

அவனோ, அவளுடைய நீல நிற விழிகளை பார்த்துக் கொண்டே, “நீ, உன்னோட பார்வை, உன்னோட குரல் இதெல்லாம் எப்பவுமே இந்த விஹான் ப்ரசாத்துக்கு மட்டும் தான் சொந்தம்… எனக்கே எனக்கு மட்டும் தான்… உனக்கு உரிமை பட்டவன் நானா மட்டும் தான் இருக்கணும் குயின்… நீ என்னோட செல்லக்குயில் குயின்… ஐ லவ் யூ குயில்!” என்று சொல்லிய அடுத்த கணமே அவளுடைய இதழை சிறை பிடித்தான் அந்த மன்மதன்.

***********

மணக்கும் 🥀🥀🥀